Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சுந்தர பூவரசனின் சுந்தரி-23

Advertisement

lakshu

Well-known member
Member
சுந்தர பூவரசனின் சுந்தரி-23



சார் நாங்க மண் சரிவு நடந்த இடத்தை பார்க்கனும், எங்க சொல்லுறீங்களா.

கான்ஸ்டெபிள் இவங்க் கூட போய் அந்த ஸ்பாட்ட காட்டுங்க.

சார் வாங்க , எங்க கார்லே போலாம். பரதன் அழைக்க, கார் புறப்பட்டது அந்த இடத்தை நோக்கி. சிறிது நேரத்தில் , மலையிலிருந்து கால்வாசி தூரத்தில் அந்த இடத்தை அடைந்தனர்.

சார் இந்த மரத்தில்தான் கார் மோதியிருந்தது. அந்த பக்கம் மோதியிருந்தா மலையிருந்து உருண்டு விழுந்திருப்பாங்க.

தேங்கஸ் சார், சீப் டாக்டருக்கு போனை போட்டான் பூவரசன், சார் நான் சுந்தரியோட ஹஸ்பென்ட்,

சொல்லுங்க சார் , சுந்தரி கிடைச்சிட்டாங்களா

இல்ல, நான் இப்பதான் இங்க வந்தேன், சார் இங்க யாரு கேம்ப் ஆரேன்ஜ் பண்ணது.

அது திருமுர்த்தி எஸ்டேட்ஸ் ஓனர் பாஸ்கரன் சார்தான் அரேன்ஜ் பண்ணாரு, அவங்க எஸ்டேட்ஸ் சுத்தி இருக்கிற மலைவாழ் மக்களுக்குக்காக. நல்ல மனுசர் அவங்க கெஸ்ட் ஹவுஸ்ல தான் தங்கனோம்.

சார் நான் கேட்கனும் நினைச்சேன்,சுந்தரியும் மாதவன் சார் மட்டும் ஏன் தனிக்காருல வந்தாங்க.

இவங்க போன இடத்திலிருந்து கிளம்பிட்டோம் சொன்னாங்க, அத நம்பி கிளம்பிட்டோம்.. பின்னாடியே வரேன் சொன்னாங்க கடைசி நேரத்தில ஒரு கேஸ் வந்தது சொன்னார் மாதவன்.நீங்க போயிட்டே இருங்க வந்திறோம் சொன்னார். நாங்க கெஸ்ட் ஹவுஸ் வந்திட்டோம். அதுக்குப் அப்பறம்தான் மண் சரிவு ஆயிடுச்சு.

சார் கூட்டிட்டு போனவங்களை சேப்பா கூட்டி வரனும் தெரியாதா, உங்களுக்கு ரொம்ப மழை பெய்யுது இங்க இப்ப தேவையா இந்த கேம்ப்.

சாரி சார் என் மேல தப்பு இருக்கு, நான் கொஞ்ச நேரம் வையிட் பண்ணிருக்கலாம்.

அந்த எஸ்டேட் ஓனர் பெயர் என்ன சொன்னீங்க

பாஸ்கரன் சார், அவரும் எவ்வளவோ முயற்சி பண்ணாரு சார் சொல்லிக்கொண்டே இருக்கும்போதே போனை கட் செய்தான் பூவரசன் போதும் அவரிடம் பேசுவது என்று நினைத்து.

பூவரசு வா சாப்பிட போலாம், சாப்பிடாம எவ்வளவு நேரமியிருப்ப.

எனக்கு பசியில்ல மாமா, நீங்க போய் சாப்பிட்டு வாங்க.

டேய் பூவரசு, சுந்தரி தேட தெம்பு வேணாமாடா.நீயும் சாப்பிடாம இருந்தா எப்படி.

பரதாவுக்காக ஹோட்டலுக்கு சென்றான் பூவரசன். இரண்டு இட்லி மட்டும் ஆர்டர் செய்தான், மாமா உனக்கு என்ன வேணுமோ சாப்பிடு நைட் முழுக்க கார ஓட்டிட்டு வந்த, அப்பறம் ரூம் எடுக்கனும், நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு.

சாப்பிட பிடிக்கவில்லை பூவரசனுக்கு பொம்மியை தவிர வேறு ஞாபகமில்லை அவனுக்கு. அவள் நினைவே அவனை கொன்றது.இட்லியை பிய்த்து வாயில் வைக்காமலே இருந்தான்.

டேய் பூவரசு இன்னிக்கு வரலட்சுமி நோன்புப்பா, சுந்தரி உனக்காக நோன்பு எடுக்கறா மதியம் வீட்டுக்கு வாப்பா.

அக்கா நோன்பெல்லாம் வேணாம் , அவ பசி தாங்கமாட்டா உனக்கு தெரியாதா.

கல்யாணம் ஆனா எடுக்கணும்ப்பா, நீ சீக்கீரம் வந்திடு.

சரிக்கா.

மதியம் மணி 4.00 ,பூவரசு வீட்டுக்கு வரல என்று ஆணந்தவல்லி போனில் கேட்க.

இல்லக்கா நான் தர்மபுரியில இருக்கேன் வேலை விஷியமா, ஏன்க்கா

பூவரசு நான் சொன்னேனே நோன்பு.

ஓ மறந்திட்டேன் அக்கா, போனை ஸ்பிக்கர்ல போடு, நான் வர லேட்டாகும் , விரதை முடிக்க சொல்லுக்கா.

மாட்டேன் சொல்லும்மா.

அக்கா , அவ டாக்டர்தான, இதேல்லாம் நம்புவாளா, சாப்பிட சொல்லு.

மாட்டேன் நான் இப்படிதான் இருப்பேன் சொல்லி ரூமிற்குள் சென்றாள்.

பூவரசு சீக்கீரம் வாப்பா,அம்மா நான் வரவே நைட் ஆகும். இப்பவே மணி நாலு, நான் என்ன பறந்தா வர முடியும். அவள சாப்பிட வைங்க

டேய் பூவரசு அவ கேட்க மாட்டா, பச்ச தண்ணீ கூட பல்லுல படாம இருக்கா, சீக்கீரம் வாயா.

சரி வைங்க போன என் பேச்சை கேட்க கூடாதுன்னே இருப்பா .

இரவு ஆரம்பித்தது நேரம் சென்றுக்கொண்டே இருந்தது. சுந்தரி தள்ளாடினாள், மயக்க வரும்போல் இருந்தது. பசி காதை அடைத்தது. மாமனை பார்க்காமல் விரதம் முடிக்க கூடாது என்று முடிவாகயிருந்தாள்.

வண்டியை பாஸ்ட்டாக ஓட்டினான், மணி 9 நெருங்கும் நேரத்தில் வீட்டை அடைந்தான் பூவரசன். சுந்தரி மாமன் வந்துட்டான் வெளியே வா.

அவனை பார்க்க ஓடி வந்தாள், அக்கா என்னைய பார்த்துட்டாள் இல்ல சாப்பிட சொல்லு.

அது அவ உன் கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கனும்.

சரி வர சொல்லு, டாக்டருக்கு படிச்ச பொண்ணு மாதிரியா இருக்கு உன் பொண்ணு.அவன் காலில் விழுந்து வணங்கினாள்.பூவரசு ஆசிர்வதிக்க மெல்ல எழுந்தாள்.

நீ சாப்பிட்டாதான் அவ சாப்பிடுவா,

எனக்கு பசியில்ல நான் நாலு மணிக்குத்தான் சாப்பிட்டேன், அவள சாப்பிட சொல்லு நானா விரதமிருக்கேன் சொல்லிக்கொண்டே கையிலிருந்த டைய்ரி மில்க் சாக்லேட்டை பிரித்தி ஒரு வாய் கடித்தான்.

இவ தான் ஆக்டிங்கா கொடுக்கறான்னா, நீ அடிச்சி சாப்பிட வைக்க வேண்டியதுதானே. சரி சாப்பாடு கொடுத்து அனுப்பு நான் பன்னைவீட்டுல சாப்பிட்டுக்குவேன் சொல்லி கிளம்பினான்.

ஏன் இங்க சாப்பிட்டா என்னவாம் பவளத்தாய் புலம்ப,

அம்மா விடுங்க அவன் வந்ததே பெரிய விஷியம். இப்ப இவள பார்க்கனும். ஏய் ஆனந்தவல்லி அங்க பாரு உன் பொண்ண மெதுவாக பவளத்தாய் பேச , திரும்பி பார்த்தாள் அவன் வைத்து சென்ற சாக்லெட்டை சுவைத்துக்கொண்டிருந்தாள்.

இப்ப பாரு அவன் வருவான், அக்கா சாவியை விட்டுட்டு போயிட்டேன்.உள்ளே வந்தான் பூவரசு, சுந்தரி அவனை முறைத்துவிட்டு கிச்சனுக்குள் சென்றாள்.

திமிரு பத்தியா இவளுக்கு, எப்படி முறைச்சிட்டு போறா , நான் எச்சி பண்ணத மட்டும் ஏன் சாப்பிடுறா ம்ம்.

கண்களில் கண்ணீர் வழிய எனக்கு பசிக்கலடி மனதில் நினைத்து எழுந்து கையை கழுவினான்.

ஒரு வழியாக ஹாட்டலில் ரூம் எடுத்து தங்கினார்கள். மாமா கொஞ்சம் நேரம் தூங்கு,பூவரசன் ரூமை விட்டு வெளியே வந்தான். ரிஷப்ஸனிடம் சென்று கேட்டான் ,கைட் யாராவது அரேன்ஜ் செஞ்சித்தர முடியுமா. இந்த ஊர் ஆளா இருக்கனும்.

இருக்காங்க சார் பெயரு செல்லப்பா, பிறந்தது, வளர்ந்த்து இந்த ஊரே. அவரை வர சொல்லவா.

ம்ம், அவர் நம்பர் கொடுங்க, நம்பரை வாங்கி கொஞ்சம் நேரம் கார்டனில் உட்கார்ந்தான். மழை பெய்ய ஆரம்பிக்க ரூமிற்கு வந்தான். உள்ளே நுழையும் போதே செல்போன் அடிக்க, போனை ஆன் செய்து காதில் வைத்தான். ஹலோ சொல்லுங்க இன்ஸ்பெக்டர்,

அது சார் கொஞ்சம் டவுட்டுதான் , ஆனா ஜி.எச் ல ஒரு ஆக்ஸ்டெண்ட் பொண்ணு உங்க ஓய்ப் ஏஜ் தான், செத்துட்டாங்க, பாடியை பார்த்தா.

இல்ல என் பொம்மியில்ல, நான் வர மாட்டேன், என் பொம்மி உயிரோடதான் இருக்கா என்று கத்த, பரதா எழுந்து,

மாப்பிள்ள யாரு போன்ல் இப்படி கொடு பயப்படாத மாப்பிள்ள , போனை கையில் வாங்கினான். இன்ஸ்பெக்டர் விஷியத்த சொல்ல, சார் எங்க சுந்தரியா இருக்காது, சார் தப்பா நினைக்காதீங்க அவன் ஒடிஞ்சி போயிருக்கான் விடியோ ஆன் பண்ணுங்க சார் நாங்க இங்க இருந்தே பார்க்கிறோம்.

இதோ ஆண் பண்ணுறேன் , எங்கிட்ட போட்டோ எதுவுமில்ல அதான் கேட்டேன்.

முகத்தை காண்பிக்க கண்கள் கலங்க கை நடுங்கியது பரதாவுக்கு சார் இது எங்க சுந்தரியில்ல, வேற யாரோ சார். நன்றி கடவுளே.

எந்த நினைவும் இல்லாமல் சுவற்றையே பார்த்துக்கொண்டிருந்தான் பூவரசு.

“டேய் பூவரசு“ அவனை உலுக்கினான்.

சுயநினைவு வந்தவுடன் , மாமா எனக்கு பயமா இருக்கு பரதாவை கட்டிக்கொண்டு அழுதான்.

“மாப்பிள்ள இங்க பாரு, இங்க பாருடா அது நம்ம சுந்தரியில்ல வேற யாரோ பாவம் செத்துடுச்சு. “

“என்ன மாமா சொல்லுற, எனக்கு அப்பவே தெரியும், என் உயிர எடுக்காம என்னைய விட்டு போக மாட்டா. என் பொம்மிக்கு எதுவும் ஆகாது, அவ யாருக்கும் எந்த கெடுதலும் செஞ்சதில்ல. என் பொண்டாட்டி என் உயிரு மாமா அவ. “

“ஏன்டா மாப்பிள்ள அந்த பொண்ணுமேல இப்படி பைத்தியமா இருக்க அப்பறம் ஏன்டா பிரிஞ்சியிருக்க. “

“அது கோவம் மாமா, கொஞ்ச நாள் போனா சரியாடும் “ சொல்லி அவ போட்டோவை எடுத்து முத்தமிட்டான்

“என்ன காதலோ கன்றாவி“, தலையில் அடித்துக்கொண்டான் பரதன்.

இருவரும் சோபாவில் அமர்ந்தார்கள், “மாமா சரக்கு வச்சிருக்கியா“.

“இருக்கு ,இந்த குளிர் தாங்க முடியிலடா பூவரசு அதான் வாங்கியாந்தேன். “

ஒன்றாக குடித்தார்கள்,போதை ஏற அவள் போட்டோவையே பார்த்துக்கொண்டு, “ஏய் எங்கடியிருக்க நீ, என்னைய இப்படி தவிக்கவிடுற பேசாத என்னை கொண்ணுடு நிம்மதியா போறேன். மாமா, மாமா என்னைய கூப்பிட்டு என்னை காலி பண்ணிட்டா பரதா, யு நோ ஐ லவ் மை பொம்மி வெரி மச். “

“என்ன மாப்பிள்ள சரக்கு உள்ளே போனவுடனே பீட்டரா வெளிய வரது. “

கையை நெஞ்சில் வைத்து “அதுதானா வருது மாமா. “

சுவற்றை பார்த்து ஏய் பொம்மி எங்கடி போனே என்னைய விட்டு பூவரசன் கத்த, பரதா பொம்மி, மாமாவ பார்த்து எப்படி சைட் அடிப்பா தெரியுமா.

“எனக்கு தெரியாது மாப்பிள்ள, சொல்லு சொல்லு எப்படி அடிப்பா. “

“ஆங், நான் சொல்ல மாட்டேன், அது என் பர்சனல். “

ஆமாம் பெரிய ரோமியோ ஜூலியட், சின்ன வயசிலே இரண்டு பேரும் எப்படி அடிச்சிமாய்விங்க எனக்கு தெரியாதா. ஆனா எனக்கு உன்ன ரொம்ப புடிக்கும் மாப்பிள்ள சுந்தரி மேல லவ் வந்தவுடனே எங்கிட்ட சொன்னப்பாரு அவ டாக்டருக்கு படிக்கனும் மாமா அதுவரைக்கும் பொம்மியை தொந்தரவு செய்ய கூடாது , அப்புறம் ஆஞ்சிநேயர் பக்தனாக்கனே,

“பரதா என் பேபி அதுக்குதான் உன்ன கழுவி கழுவி ஊத்தும்“ பூவரசு சிரிக்க . “மாமா இங்க என்னைய தவிக்கவிட்டு அவ நல்லா தூங்குவா, ஏய் எழுந்திருடி பொம்மி, என்னால தாங்கமுடியில வாடி எங்கிட்ட ,நல்லா தூங்குவா மாமா, ஏய் எழுந்திருடி கத்த“.

“பூவா “என்று கத்திக்கொண்டே எழுந்தாள். எல்லோரும் வாங்க அந்த அக்கா கண்ணை முழுச்சிடுச்சி சொல்லிக்கொண்டே சிறிய குடிசை வீட்டிலிருந்து வெளியே வந்தாள் அந்த மலைவாசிப் பெண்.

தன் கழுத்திலிருந்த செயின் லாக்கெட்டை ஓபன் செய்தாள் சுந்தரி, அதில் பூவரசன் போட்டாவை பார்த்து“ மாமா“ சொல்லி முத்தமிட்டாள்.

“பரதா, பொம்மி எனக்கு முத்தம் கொடுக்கறா பாரேன், ஏய் விடுடி என்னை நான் உன்கிட்ட பேச மாட்டேன் போ. “

“மாப்பிள்ள சுந்தரி எங்கயிருக்கு, நீ வேற உளராத , போதை உனக்கு ஏறி போச்சு. “
 
மிகவும் அருமையான பதிவு,
லக்ஷு அருணாச்சலம் டியர்

ஹப்பா
சுந்தரி உயிரோடு சேஃப்பா இருக்கா
இப்போத்தான் நிம்மதியா இருக்கு
இதை சீக்கிரமா பூவரசன்கிட்டே சொல்லுங்கப்பா
பாவம் பையன் பொஞ்சாதியைக் காணாமல் ரொம்ப கஷ்டப்படுறான்
நான் நினைத்த மாதிரியே மலைவாசியினர்தான் சுந்தரியைக் காப்பாற்றியிருக்கிறாங்க
அப்போ சுந்தரியின் குழந்தை......?
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
லக்ஷு அருணாச்சலம் டியர்

ஹப்பா
சுந்தரி உயிரோடு சேஃப்பா இருக்கா
இப்போத்தான் நிம்மதியா இருக்கு
இதை சீக்கிரமா பூவரசன்கிட்டே சொல்லுங்கப்பா
பாவம் பையன் பொஞ்சாதியைக் காணாமல் ரொம்ப கஷ்டப்படுறான்
நான் நினைத்த மாதிரியே மலைவாசியினர்தான் சுந்தரியைக் காப்பாற்றியிருக்கிறாங்க
அப்போ சுந்தரியின் குழந்தை......?
Banu mam sundarikkku no baby pa, banu mam what happen
 
Top