Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சுந்தர பூவரசனின் சுந்தரி-21

Advertisement

lakshu

Well-known member
Member
சுந்தர பூவரசனின் சுந்தரி-21



காரிலிருந்து இறங்கி விண்டோ வழியாக நன்றி சார் சொல்லி கையை நீட்டினாள். பதிலுக்கு கையை கொடுத்து இட்ஸ் ஓகே ,"பெயர் என்ன சொன்னீங்க".

சார்மி,

"ஓ சார்மி பாத்து போங்க".பக்கத்தில் இருக்கும் பொம்மியின் கால் விரல்களை மட்டுமே பார்த்தான்.

"சுந்தரி , உங்க ஊர் ஆள் தான்ப்பா, வாட் எ ஸ்மார்ட் கை".

"யார சொல்லுற சார்மி,"

இதோ கார்ல போறாறே பூவரசன், பாக்க ஆழகா இருக்காரே, நல்ல டைப்

"அப்படியா ",

"ஏய் அவர் உங்க ஊர் ஆளுப்பா, என்னைய கேட்கிற".

"தெரியும்". மத்தவங்களுக்கு எல்லாம் நல்ல ஆளு, ஆனா அவனுக்கு நான் மட்டும் கெட்டவ என்று மனதில் நினைத்தால். சரி டைம் ஆயிடுச்சு கிளம்பு சார்மி.

மாமா, "பொம்மி என்னைய பார்த்தாலா."

"இல்ல, தூரத்தில வர சொல்லவே பார்த்திருக்கும் நம்ம கார."

"எவ்வளவு தீமிர் பாரு பரதா, என்னைய பார்க்கவேயில்ல."

"நீ பார்த்தீயா."

"இல்ல, அப்பறம் பொம்மிய மட்டும் ஏன் சொல்லுற. பூவரசு முறைக்க,"

என்னை முறைக்காதே பார்த்து வண்டியை ஓட்டு-பரதா

"அம்மா , இந்த சுந்தரியை பார்க்கவே முடியில, எப்படி சந்தோஷமா இருப்பா இப்ப ஏதோ இழந்த மாதரியில்ல, சோகமா வைச்சிருக்கா, சரியா சாப்பிட மாட்டாறா. இந்த பையன் வீட்டுக்கு வந்து எத்தன நாளாச்சு."

எல்லா சரியா ஆயிடும் ஆனந்தவல்லி, இன்னிக்கு, நேத்தா சண்டை போடுதுங்க, சின்ன வயசிலே பார்த்திருக்கோம்.

சுந்தரி உள்ளே நுழைய,ஏய் சுந்தரி சாப்பிட்டு போடி

பசியில்லம்மா, கொஞ்ச நேரம் கழிச்சு சாப்பிட வரேன். ம்மா சாய்ந்தரம் பிரண்ட்டு ரிஸசப்ஷன் போனோம். வரச்சொல்ல பரதாவ பிக்கப் பண்ணிக்க சொல்லு.

சரிடி, கல்யாணம் ஆன பொண்ணு , புடவை கட்டி பூ வச்சிக்கோ, சுடிதாருல போகாத, பூவரசன் பாத்தா தீட்டுவான்.

சுந்தரி , ஆனந்தவல்லியை கோவமாக பார்க்க, உன் தம்பி என்னைய பார்க்க தான் ஊருல சுத்திட்டு இருக்கான். கலெக்டருக்கு அடுத்த போஸ்ட்ல இருக்கான் நிக்க கூட நேரமில்லையாம்.

"என்னடி இப்படி பேசற."

"நான் அமைதியாதான இருந்தேன், என்னைய ஏன் டென்ஷன் ஆக்கிருங்க."

சொல்லி அழ ஆரம்பித்தாள்.

ஏய் சுந்தரி ஏன்டி அழற, சுந்தரியை அனைத்தாள் ஆனந்தவல்லி, அம்மா இன்னிக்கு என்னைய பார்க்காமலே போறான், இந்த அக்காவுக்கு என்னம்மா துரோகம் பண்ணே, என்மேல இப்படி பழி போட்டு போறா.

பவளத்தாய் சுந்தரி பக்கத்தில் அமர்ந்து, அவன கேட்க ஆள் இல்லாத்தால இப்படி ஆடுறான், நான் போய் கேட்கிறேன், நீ ஆழாதடா ராசாத்தி. அவன பாட்டி அடிக்கட்டா,

"நீ ஏன் காமெடி பண்ணுறே பாட்டி, அவன் உன்ன பாத்தாலே நீ பயந்துடுவ, விடு பாட்டி எத்தனை நாள் என்னைய பிரிஞ்சி இருக்கானோ இருக்கட்டும்."

"சரி அந்த விஷியத்த அவன்கிட்ட சொன்னியா".

"இல்ல பாட்டி , சொன்னா பூமிக்கும், வானத்துக்கும் குதிப்பான், நடக்கறது நடக்கட்டும்"..

"பரதா நம்ம வீராசாமி பையன் கல்யாணம் எந்த மண்டபம் சரியா பார்க்கல",

சக்திவேல் கல்யாணமண்டபம் பூவரசு, 7.30 ரிஸசப்ஷன்.

கிப்ட் எல்லாம் வாங்கிட்டியா, போனவுடனே திரும்பி வந்திடனும் சொல்லிட்டேன்.

சரி மாப்பிள்ள. வசதியான இடம் என்பதால் ,பெரிய மண்டபம், ஆடம்பரமாண வரவேற்பு.ஹாலில் நுழைந்தார்கள். வீராசாமி அவர்களை வரவேற்க, அவரிடம் பேசிவிட்டு அங்கே போடப்பட்ட சேரில் அமர்ந்தார்கள்.

மாப்பிள்ள , மேடையில் பாரு.

என்ன, சொல்லி ,பார்க்க, மேடையில் தோழியோடு, கல்யாண பெண் பக்கத்தில் நின்றிருந்தாள் சுந்தரி.

எங்கனா ஃபீலிங்க்ஸ் இருக்கா இவளுக்கு, என்ன மேக்கப்ல வந்திருக்கா பாரு, ஆகாய நீலத்தில் டிசைனர் சாரி, வெள்ளை கல் வைத்த ஓர்க், மேட்சா கல் வைத்த நெக்லஸ், மேட்ச் தோடு,கண்ணுல மஸ்காரா போட்டு, லைட்டா ரோஸ் கலர் லிப்ஸ்டிக் டச் பண்ணிருந்தாள்.

ஹப்பா என்ன கீயூட்டா இருக்கா, இப்ப வேற சண்டை போட்டுட்டோம், இல்லைன்னா இன்னிக்கு மாமாவுக்கு வேட்டைதான் பூவரசு நினைக்க ,அவன் மனசாட்சி எப்படிடா சண்டை போட்டுட்டு , பொண்டாட்டிய பார்த்து வழிறீயே, டேய் பூவரசு திரும்புடா, அவளையே பார்த்திட்டு இருக்காதே , வாயுல காக்கா, குருவி போயிட போது.

நீ கொஞ்சம் அமைதியா இரு, எனக்கு அவமேல இருக்குற கோவம் போகல.

யாரோ நம்மள பார்வையால குத்துற மாதிரி இருக்கே நினைத்து சுந்தரி நேரே பார்க்க, பூவரசனை பார்த்துவிட்டாள். கண்ணின் இமை முடவில்லை அவனையே பார்த்தாள். எத்தனை நாளாச்சு இவண பார்த்து, மாமா மெலிச்சு போயிடுச்சு.

சுந்தரியும், சார்மியும் மேடையின் கீழே நிற்க, பூவரசன் கீப்ட் கொடுத்திட்டு கீழே இறங்கினான்.

சுந்தரி பரதாவை பார்த்து, "நீ எப்படி கூட்டிட்டு போவ"

"தெரியல சுந்தரி , நான் பூவரசனிடம் கேட்டு சொல்லுறேன்."

சேரில் உட்கார்ந்து சுந்தரியே பார்ந்தான். அவளின் புடவை ஏர் கூலர் காற்றில் பறக்க, அவளின் இடுப்பு பகுதி ஓரு பக்கம் முழுவது தெரிய, ஐய்யோ ஊருக்கே ஷோ காமிக்கறாளே.

அவள் அருகில் சென்றான், பரதா நம்ம கூடவே வரசொல்லு,

என்ன மாமா நம்ம பக்கத்தில வந்து நிக்கிறான்

வேற பக்கம் திரும்பி பார்த்தபடி சொன்னான். "எல்லாருக்கும் ஷோ காண்பிப்பியா ",பல்ல கடித்த படி பூவரசன் சொல்ல, "அந்த மாடி பக்கமா வாடி", அவன் சொல்லிட்டு நடக்க.

அவன் பின்னே சென்றாள், மறைவான இடத்தில் நின்று, முதுகில் அவிழ்ந்த பிளவுஸ் நாட்டை கட்டினான். அவன் கை முதுகில் உரச தன்னை மறந்தாள் பொம்மி.

"இவன் எப்படியும் வருவான், கட்டி விடுவான், அப்படியே ஜாயின்ட் அடிச்சிடலாம் நினைச்சியோ."

"உன்னைய போட சொன்னேன்னா ,ஓவரா சீன்ன போடாத. வந்துட்டான்."

"ஏய் என்னடி மரியாதை தேய்து," பேசிக்கொண்டே இருக்க சொல்ல இவள் கீழே இறங்கினாள்.

கொழுப்ப பாரு எரும மதிக்குதா, எல்லாம் என்னைய சொல்லுனு இவள கண்டுக்கவே கூடாது.

காரில் நால்வரும் ஏறினார்கள்.

போய் கொண்டேயிருக்கும் போது,உங்க மாமா கார அனுப்புவார் சொன்னே, கடைசியில என் பிரண்ட் தான் நம்மள கூட்டிட்டு போறாரு.

பரதா சார், உங்களுக்கு சுந்தரியோட ஹாஸ்பண்ட் தெரியுமா.

நல்லவே தெரியும், ஏன் ம்மா கேட்கற. ஏய் சும்மா இருடி சுந்தரி அவள் வாயை கையால் அடக்க

சும்மாயிருடி ,நீங்களும் ,சார் போய் அவர பார்த்து கொஞ்சம் பேசறீங்களா

" எங்க சுந்தரிகிட்ட போய் சண்டை போட்டுட்டாரு, அவ எவ்வளவு சாப்ட் டைப் , குழந்தை மனசு."

"யாருக்கு டாக்டருக்கா"-பூவரசு

"ஆமாம் சார், எதிர்த்து பேச தெரியாது."

"சொல்லிக்கணாங்க ஊர்ல, டாக்டர் ஒரு பேபி மாதிரி".

சார்மி பேசாதடி.

ச்சூ, பூவரசன் சார், அவங்க மாமாவ மிரட்டி, பயமுருத்தி, இவகிட்ட பேச சொல்லுக , சரியா சாப்பிடவே மாட்டறா. அப்படி ஒத்து வரலைன்னா, டைவர்ஸ் வாங்கி கொடுங்க.

"என்னது", சடன் பிரேக் அடிக்க., ஊருல உன்னைய மாதிரி ஒரு புள்ள இருந்தா போதும் ,

சார்மி என் மாமாவ பத்தி பேச உனக்கு உரிமையில்ல, சுந்தரி அவளை முறைக்க, அமைதி நிலவியது.

சார்மியும், பரதாவையும் அவர்களின் வீட்டில் இறக்கிவிட்டான்.

இன்னிக்கு நாம்ம செத்தோம் , பேசாத தூங்கற மாதிரி நடிக்க வேண்டியதுதான்.

காரை நிறுத்தி "தூங்கறமாதிரி நடிக்காதடி. முன்னாடி வந்து உட்காரு",

"நான் வரல எனக்கு தூக்கம் வருது.வண்டியை நிறுத்தினான்".

முன் சீட்டில் உட்கார்ந்தாள். உனக்கு டைவர்ஸ் வேணுமா டாக்டரு.

நான் அப்படி சொல்லல,

பின்ன குடும்ப விஷியம் அவளுக்கு எப்படி தெரியும். நான் சொல்லவேயில்ல கூட இருக்கிறவ சொல்லிட்டாங்க.

நான் உன் புருஷன் சொல்ல வேண்டியதான,

அது....

உனக்குதான் எல்லாமே மறைச்சு பழக்கமே.

நான் ஓண்ணும் உன்கிட்ட எதுவுமே மறைச்சது இல்ல, மெதுவாக முனகினாள் பொம்மி.

என்னடி டபுள் மீனிங்கல பேசுற, நான் அப்படியே மயங்குவேன் பார்த்தியா.

தயவு செய்து பேசாத என்கிட்ட,நான் கொஞ்ச நாள் நிம்மதியா இருந்தேன். மறு படியும் தேள் கொட்டற மாதிரி ச்சே.

வீட்டில் கார் நின்னவுடன், போடி சொல்லி வேகமாக காரை ஓட்டினான்.

ரூமுக்குள் சென்று அவ கல்யாண போட்டோவை பார்த்து , ஏண்டா மாமா ,என்னைய பாடாபடுத்தற.பிளவுஸ் நாட்டை கழிற்றினாள். பூவரசனை நினைத்துக்கொண்டே பெட்டில் சரிந்தாள்.

பூவா தோப்புக்கு ஏன் கூட்டிட்டு வந்தே, சும்மாதான்டி அவள் கையை பிடித்து பின் சீட்டில் உட்கார வைத்தான். என்ன மாமா பண்ணுற.

பொம்மி நாம்ம சேர்ந்தே மூணு நாள் பேக் தான,ஸோ , ஐ வாண்ட் யு, அட்லிஸ்ட் ஒரு லாங் கிஸ்.

டேய் கசமுசா பண்ணதான் தோப்புக்கு கூட்டிட்டு வந்தியா. நான் வரல போறேன். போகாதடி அவள் நாட்டை பிடித்து இழுக்க.

மாமா, யாரு போடுவா இத.

நீ கவலையே படாத, உன் வீடியோவை நிஜமாகிறேன்டி சொப்பண சுந்தரி.

முதுகில் முத்தமிட்டான், மெல்ல முன்னேறி காதருகில் தன் முத்தத்தை பதித்தான். கூச்சத்தில் அவன் மார்ப்பில் முகம் புதைத்தாள் சுந்தரி. சுகமான நினைவுகளை நினைத்து தூங்கிபோனாள்.
 
மிகவும் அருமையான பதிவு,
லக்ஷு அருணாச்சலம் டியர்
 
Last edited:

Advertisement

Top