Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சுந்தர பூவரசனின் சுந்தரி-20

Advertisement

lakshu

Well-known member
Member
சுந்தர பூவரசனின் சுந்தரி-20



ஓவ்வொரு நாளும் ஒரு இடம் என்று சுற்றினார்கள். இவள் பேசுவதை கேட்டுக் கொண்டே இருப்பான் பூவரசு. தோப்பு ஓனரை கல்யாணம் பண்ணது தப்பா போயிடுச்சு.

மாமரத்துக்கடியில் கயிறு கட்டில் போட்டு,சுந்தரி மடியில் படுத்துக்கொண்டே கேட்டான். ஏன்டி அப்படி கேட்கிறவ.

பின்ன நேத்து தென்னை தோப்பு,இன்னிக்கு மாந்தோப்பு, நான் என்ன அமெரிக்காவல படிச்சுட்டு வந்தேன் , சுத்தி காண்பிக்க, சின்ன வயசில இங்க விளையாடின இடதான.

ஏய் யாரும் வர மாட்டாங்கடி நம்ம தோப்பு, தொந்தரவு இருக்காது,அப்பறம் இங்க ஒரு மரத்தில மாங்காய் சூப்பர் டெஸ்டா இருக்கும்.

ச்சீ பே.

சரி உனக்கு மாமாகூடதான இருக்குனுமா, இல்ல ஊர சுத்தனும்மா.

மாமா கூட இருக்குனும் என்று சுந்தரி சொல்ல,அவள் கைவிரலை நீவிய படியே பேசினான். நேரம் சென்றவுடன்,சரி டைமாயிடுச்சு வீட்டுக்கு போகலாம்.

மதியம் மேசையில் உட்கார்ந்து உணவு சாப்பிட்டு முடித்தான் பூவரசு.ஆனந்தவல்லி சோபாவில் அமர்ந்திருந்தாள்,

பூவரசு , நம்ம தோப்புல ஏதோ பேய் இருக்காம்டா.

என்னக்கா உளறா,ஆமான்டா ஊரே பேசுது ஏதோ லவ்வர்ஸ் பேயாம், அடிக்கடி சிரிப்பு சத்தம் கேட்குதாம்.

சாப்பிட்டுக்கொண்டிருந்த சுந்தரிக்கு புரை ஏறியது.

உங்க அம்மா தான் தீட்டிருப்பாங்க சுந்தரி பார்த்து சாப்பிடு, பவளத்தாய் சொல்ல.

யாருக்கா சொன்னது, டேய் நானே கண்ணால பார்த்தேன்.

எங்கே,எப்போ,எப்படி என்று ஆச்சரியமா கேட்க, எல்லாம் உன்னாலதான்டா சுந்தரி பூவரசனை பார்த்து முறைக்க.

காலையில பத்து மணிக்கு மேல பேய்ங்க வருதுடா. சரி நமக்கு எதுக்கு ஊர் பிரச்சனை..நம்ம வீட்டு பிரச்சனைக்கு வருவோம்.

என்ன பிரச்சனை பூவரசன் கேட்க,

சுந்தரி என்கிட்டியும், அம்மாகிட்டயும் சண்டைய போடறா, பேசாத அவள பண்னைவீட்டுக்கு கூட்டிட்டு போயிடு பூவரசு.

அய்ய்யோ எங்கோ கேட்ட மாதிரி இருக்கு, நான் இன்னிக்கு சாப்பிட்டு முடித்த மாதிரி தான்-சுந்தரி.

அம்மா நான் எங்க சண்டைய போட்டேன்.

நாங்க சும்மா வேல செய்யாத இருக்கோம்ல சுந்தரி , பாட்டிக்கு வேல கொடுக்க நீ பேர பிள்ளைய பெத்துக்கொடு.

இரண்டும் முழிக்க,பார்த்தியா ம்மா, இந்த பச்சமண்ணும், உன் பையனும் செய்யற காரியம், எப்படிடா இருந்தது ஏற்காடு.

அக்கா எல்லாத்துக்கும் காரணம் பொம்மிக்கா, எனக்கு ஒண்ணும் தெரியாது, ஆமாம் உனக்கு ஒண்ணுமே தெரியாது பண்ணிரெண்டு மணிக்கு சுவர் ஏறி குதிச்சு வர தெரியும்.

அக்கா என்று பூவரசன் ஆனந்தவல்லி பக்கத்தில் அமற, கையால் அனைத்துக்கொண்டாள். என் தம்பி சந்தோஷமா இருக்கனும் நான் வேண்டாத கடவுள் இல்ல. பச்ச மண்ணு உன்னைய போயி சொன்னேன் பாரு போடி அந்த பக்கம் சுந்தரியை விரட்ட ,.

சாரிம்மா என்று கட்டிக்கொண்டாள், டேய் பூவரசு நீ இங்கேயே தங்கிக்க, இதுக்குமேல என்ன இருக்கு.

தேங்க்ஸ் என் செல்ல அக்கா.,போடா நல்லா எங்களை ஏமாத்திட்டு, கோயில் திருவிழா நாளைக்கு ஆரம்பம் ஆகபோது, உனக்கு பரிவட்டம் கட்டுவாங்க , இன்னிக்கு கொஞ்சம் சீக்கிரமா வந்துடு, சரிக்கா.

திவா வீட்டில், வா துரைப்பாண்டி ,

நம்ம மோசம் போயிட்டோம் திவா, அந்த செந்தில் பையன் பூவரசுக்கு நிலத்தை எழுதிக் கொடுத்திட்டான்.

என்னடா சொல்லுற, நமக்குத்தான கொடுக்கிறதா சொன்னான் , விலையும் அதிகமாவே தரோம் சொன்னோமே.

ஆமாம்ப்பா, ஆனா என்ன பேசனான் தெரியில்ல, நேரே சேலத்துக்கே போயி செந்தில்கிட்ட பேசியிருக்கான். இன்னிக்கு ரேஜிஸ்டேரஷ்ன் முடிச்சிடுச்சு. இப்ப அவனுது தான் நிலம் அதிகமா இருக்கு.

அதவிட அந்த பாரின் பார்ட்டி அவன்கிட்ட போய் பேசியிருக்காணுங்க,

என்ன சொன்னா பூவரசன்

இந்த பாக்டரிய உன் ஊருல நான் கட்டலாம் ஆசை படுறேன், உன்னால பரிமிஸன் வாங்க முடியுமான்னு கேட்டான் ஓடியே வந்துட்டாங்க.

இந்த திருவிழாவுல பார்த்துக்கலாம். நாளைக்கு அவனுக்கு பரிவட்டம்தானே.

இரவு மணி 8.00, மாமா சாப்பிட்டு போங்க, இப்ப வேணாம் , மேலே கொண்டு வந்துடு. இருவருக்கும் சாப்பாடு எடுத்துக்கொண்டு மேலே வந்தாள்.

பெட்டில் குப்புற படுத்திருந்தான். என்ன பூவா இது, சாப்பிட்டு தூங்கு,

டயர்டா இருக்குடி, விடு நான் தூங்குறேன்.

மாமா பவி ,அருண் வந்திருங்காங்க, அப்படியா .

மாமா எழுந்து உட்காரு, வாய திற சொல்லி சாப்பாத்தியை ஊட்டினாள், நீ சாப்பிட்டியா

இல்ல, எத்தனை தடவ சொல்லறது சீக்கீரம் சாப்பிடு பொம்மி எனக்காக வையிட் பண்ணாத.

லைட்டை ஆப் பண்ணிட்டு பூவரசன் பக்கத்தில் படுத்தாள் சுந்தரி. அவளை அனைத்துக்கொண்டான். கொஞ்ச கொஞ்சமாக அவன் கை வேலை செய்ய,

டையர்டு சொன்னே இப்ப என்ன செய்யற பூவா.

இது புருஷனோட கடமை, டைம்முக்கு செய்யனும், நோ டையர்டு.

கோவிலில் பூவரசனுக்கு பரிவட்டம் கட்டி முதல் மரியாதை செய்ய பக்கத்தில் சிகப்பு பட்டு உடுத்தி அழகாக நின்றிருந்தாள் பெண்ணவள். இன்று குடும்பமாக பூவரசன் நிற்பதை கண்ணால் கண்டு பூரிப்படைந்தான் சண்முகவேலு.

அந்த இடத்தில் திவாகர் வர, ஏன் பரிவட்டம் அவனுக்கு மட்டும்தான் கட்டனும், நானும் பணக்காரன் தான் அந்த மரியாதையை எனக்கும் செய்ய சொல்லுங்க என்று ஊர் பெரியவங்கிட்ட கேட்க.

நீ மொத்தல்ல எங்க ஊர் ஆளில்ல, இந்த மரியாதை பரம்பரை பரம்பரையா பண்ணையார் குடும்ப ஆளுங்கதான் செய்வோம் இது எங்க ஊர் வழக்கம் ,பிரஸிடண்ட் கூறினார். நானே உங்கள பார்த்து பேசனோம் நினைச்சேன் நாளைக்கு வந்து பேசறோம். திருவிழா கலை கட்டியது இரவில் கரக்காட்டம், வானவேடிக்கை, கடைகள் போட்டு அமர்களப்படுத்திருந்தன.

இரண்டு நாள் பின்பு, பிரஸிடண்ட் ,பூவரசை கூட்டிக்கொண்டு திவாகரின் ரைஸ் மில்லுக்கு சென்றார்.

வாங்க பூவரசு,பிரஸிடண்ட் ஐயா,

வாங்க என்று துரைப்பாண்டி கூப்பிட்டான் ,

தம்பி , உங்க பேக்டரி விஷியமா பேச வந்தோம், இந்த பேக்டரி பெரிய அளவுல இருக்கு தொழிற்சாலை தான் வச்சுக்குங்க, ஆனா எங்க மக்களுக்கும், நிலத்துக்குமே கேடு, இத விட்டுட்டுங்க சொல்ல வந்தோம்.

முடியாது, இங்கதான் ஆரம்பிக்கதான் போறோம் என்ன பண்ணுவிங்க நிமிர்ந்து நின்று பேசினான் திவா.

இவங்கிட்ட என்ன பேச்சு , நாம்ம கேஸ் போடுவோம் -பூவரசன்.

அப்பறம் உங்க இஷ்டம் தம்பி, வாப்பா பூவரசு நாம்ம கிளம்புவோம் சொல்லி வெளியே சென்றார்

திரும்பி பூவரசு, டேய் துரை, உங்க மாமா எவ்வளவு நம்பிக்கை வைச்சிருக்காரு உன்மேல, இவன்கூட ஜாயின்ட் அடிச்சி. அவருக்கு துரோகம் பண்ணுற.

உன் பொண்டாட்டிதான்டா உனக்கு நம்பிக்கை துரோகம் செஞ்சா.

டேய் என்னடா சொன்ன, நாக்கு இருக்காது அவன் சட்டையை பிடிக்க.

கையை எடுடா, பவிக்கு கல்யாணம் செஞ்சி வச்சது யாரு தெரியுமாடா, உன் மாமா இல்ல, உன் பொண்டாட்டி சுந்தரி.

என்னடா சொல்லுற, அவன் சட்டையிலிருந்து கையை எடுத்தான்.

போய் கேளுடா, பொய் நான் சொன்னேன்னா வந்து என்னையை வெட்டி போடு.

பெரிய வீட்டில், பவி அருணுக்கு சாப்பாடு ஊட்டிக்கொண்டிருந்தாள், ஆனந்தவல்லி ,பவளத்தாயும்,டிவி பார்த்திருந்தார்கள், பொம்மி என்று கத்தினான் பூவரசன்.

என்னடா என்னாச்சு, எங்கம்மா பொம்மி, சுந்தரி ரூமிலிருந்து பூவரசனின் குரலை கேட்டு வெளியே வர.

மாமா, அவன் கண்கள் கோவத்தில் சிவந்திருக்க, ஏதோ பிரச்சனை என்று மனதில் நினைத்தாள்.

பொம்மி, அந்த திருட்டு பையன் சொல்லுறான், ஆனா நான் நம்பல, நீ பவிய கூட்டிட்டு போய் கல்யாணம் பண்ணி வச்சே, இல்ல சொல்லு பொம்மி என்று அவள் தோளை குலுக்கி கேட்டான்

மாமாகிட்ட மாட்டிட்டோம், கோவமா இருக்காரு நாம்ம அமைதியா இருக்குனும். பூவரசன் அவள் கண்ணை பார்த்து, சொல்லுடி.

மாமா, சுந்தரிதான் எனக்கு கல்யாணம் பண்ணிவச்சா-பவி,

பூவரசன் சுந்தரியை முறைத்து பார்க்க, சொல்லுடி

பவியை முறைத்துக் கொண்டே ,ஆமாஎன, சுந்தரி சொல்ல பளாரு கண்ணத்தில் அடி வைத்தான்.

டேய் பூவரசு அடிக்காதாடா அவள பச்ச மண்ணுடா உன்னை ரொம்ப புடிக்கும்டா ,அதான் தப்பு பண்ணிருப்பா.

அக்கா இவளா இன்னுமா நம்பற. கண்ணத்தில் கையை வைத்து அப்படியே சுவரில் சாய்ந்து நின்றாள்.

.அப்பவே நான் சொன்னேன் மாமாகிட்ட சொல்லிடலாம். ஆனா இவ நீ போனா தான் மாமா என்னைய கட்டிக்குவார்ன்னு கெஞ்சினா என்று பவி ஏத்திவிட.

மாமா உங்கிட்டியே நான் கெஞ்சல அவக்கிட்டவா கெஞ்ச போறேன்.

சரி நீ கெஞ்சல, அன்னிக்கு நைட் நான் வந்தேனே அப்ப ஏன் சொல்லல.அதைவிடு கல்யாண ஆன நைட் கேட்டேனே உன் அப்பாகூட ஏன் பேசேற .சொன்னியா இல்லதான, எல்லாம் பொய், என்னைய ஏமாத்தி டிராமா பண்ணி கல்யாணம் கட்டுண,

சுந்தரி தலை குனிய, அவள் முகத்தை நிமர்த்தி , இந்த ஊருல பொடிசுல இருந்து பெரிசு வரை என்னைய எப்படி கேவலமா பேசனாங்க, சொல்லுடி,

கடைசில நீயே தன் கண்ணை மூடி,என் முதுகுல குத்திட்ட இல்ல.

மாமா அப்படி பேசாதே, உள்ள வா மாமா நான் உன்கிட்ட பேசனோம்.

என்கிட்ட பேச என்ன இருக்கு , இன்னும் என்ன பொய் சொல்லி இந்த இளிச்ச வாயன ஏமாத்தலாம் ப்ளான் போடிறீயோ. அவள் காதருகில் மெதுவாக பேசினான், நீச்சல் தெரியாது பொய்யா நடிச்சுதான நீ என்கூட.சேர்ந்த,

"மாமா", கண்களில் கண்ணீர் நிற்காமல் வழிய, பொய்யில தான வாழ்க்கையே ஆரம்பிச்சே, எல்லாம் நடப்பாடி.

அவனை தள்ளிவிட்டு ரூமின் கதவை தாளிட்டாள், ஏய் கதவ திறடி, நான் பேசிட்டு இருக்கேன்ல்ல, பூவரசன் கோவத்தில் கதவை உடைக்க, கதவ திறடி ஏய் நீயெல்லாம் டாக்டராடி, கோவத்தின் உச்சியில் வர்த்தையை விட்டான். அந்த வார்த்தை என்ற அம்பு சுந்தரியை பாதிக்கும் என்று தெரியாமல்.

ஏய் கேளுடி, இனிமே உன் முகத்தில நான் முழிக்க மாட்டேன். உன்கிட்ட பேச மாட்டேன்டி கதவை உதைத்தான்.

ஆனந்தவல்லி அங்கே அழதுக்கொண்டிருந்தாள்,ஆனா பவி சந்தோஷமா இருந்தாள், கோவில் திருவிழாவில் முதல் மரியாதை தன் கணவனுக்கு கிடைக்கவில்லை என்ற பொறாமையில் இருந்தவள் இந்த சந்தர்ப்பத்தை உபயோகித்துக் கொண்டாள்.

அக்கா அவ இருக்க சொல்ல என்னைய கூப்பிடாத ,

டேய் பூவரசு அவள மன்னிச்சுடுடா, நீ இல்லாத அவளால இருக்க முடியாது.

டாக்டரால இருக்க முடியும் அக்கா. இங்க பாருங்க அவ என் பொண்டாட்டிதான் எங்களுக்குள்ள தான் பிரச்சனை. இது அவ வீடு, யாராவது ஏதாவது பேசினிங்க நான் சும்மா விட மாட்டேன் பவியை பார்த்துக் கொண்டே பொதுவாக கூறினான்.

பத்து நாள் கடந்து சென்றது, பரதாவும், பூவரசனும் காரில் ஓமலூரில் அருகே வந்துக்கொண்டிருக்க,மாமா யார் அது, வண்டிய ஓரம் கட்டு,

பிங்க் சுடிதார அணிந்த பெண்ணை சுற்றி நான்கு வாலிப பையன்கள் பின்னாடியே வம்பிழுத்துக்கொண்டே வர, வண்டியை பார்த்தவுடன் , டேய் பூவரசு அண்ணன்டா ஓடுங்க,

மாமா யாரு பார்த்து வச்சியா தனியா பார்த்து பேசலாம் அந்த பசங்ககிட்ட.

சரி மாப்பிள.

ரொம்ப தாங்கஸ் சார். ஐம் சார்மி, ஊரு ஐதராபாத்.

நான் பூவரசன்,இவரு பரதா பக்கத்து ஊர்,நீங்க புதுசா, சரி கார்ல ஏறுங்க, காரில் ஏறினாள் ;சார்மி,

இது ஓமத்தூர் ஸ்டாப் இல்ல இன்னும் கொஞ்சம் போனோம். நீங்க யார் வீட்டுக்கு வந்திருக்கீங்க,

நான் கோதண்ட சித்தப்பா வீட்டுக்கு வந்திருக்கேன். ஏங்க வண்டிய அந்த ஸ்டாப்ல நிறுத்துங்க என் பிரண்ட் நிற்கிறாங்க அவ கூட போயிடுவேன்.

யாருங்க உங்க பிரண்ட்டு பரதா கேட்க, அதோ ஆக்டிவா வச்சிட்டு நிக்கறா பாருங்க ,சுந்தரி.

மாப்பிள்ள, பொம்மிடா என்று மெதுவா பரதா பேச.























































 
மிகவும் அருமையான பதிவு,
லக்ஷு அருணாச்சலம் டியர்
 
Last edited:
Top