Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சுந்தர பூவரசனின் சுந்தரி-01

Advertisement

lakshu

Well-known member
Member
சுந்தர பூவரசனின் சுந்தரி-01

”அப்பு போன் போட்டு சொல்லிட்டியா நம்ம பூவரசு தம்பியை வெரசா வரசொல்லு எவ்வளவு நேரமா இந்த பட்டினத்து பசங்களை பிடிச்சி வைக்கிறது ,பஞ்சாயத்து கூட்டுனும் இல்ல.”

”ஐயா போன் போட்டு சொல்லிபூட்டேன் , ஆங் இதோ வந்துட்டாங்க பாருங்க. ”

சேலம் மாவட்டம் ,இயற்கை வளமிகுந்த கிராமம் தாங்க இந்த வேப்பபூண்டி, எங்கு பச்சைபசேல் வயல்கள், தோப்புகள் நிறைந்தது. நம்ம கதையோட ஹூரோ சுந்தர பூவரசன் என்கின்ற பூவரசன்.

நம்ம பூவரசன் , 30 வயசு ,மலையாள படத்து ஹீரோ மாதிரி ஹைட்டு ,வைட்டா இருப்பாரு கலையான முகம்.

வெள்ளை வேட்டி சட்டையில் , கழுத்தில் ஐந்து பவுன் செயின் ,கையில் பிரெஸ்லேட், இந்த ஊர் பண்னையார் மகன் . ராயல் என்பில்டை ஓட்டி வந்திட்டுருக்கார். அவருக்கு பின்னாடி ஆல் இன் ஆல் லோகு, பூவரசனுக்கு பி.ஏ.

வண்டியை நிறுத்திவிட்டு எல்லோரும் வணக்கம் சொல்லி போட்டிருந்த நாற்காலியில் அமர்ந்தான். “ மாமோய் என்ன பஞ்சாய்த்து”.

”தம்பி என்ற பொண்ணு மலர இந்த பட்டணத்து பசங்க வம்பு செஞ்சி இதோ நடுவுல நிக்குதே நீலச்சட்டை கையை புடிச்சி இழுத்து அத்துமீற பார்த்திருக்கான்”. ஊரு ஆட்கள் ஐந்து பேர் மற்றும் மலர் அந்தப்பக்கம் நிற்க, எதிர்ப்பக்கம் சிட்டியில் இருந்த வந்த நான்கு ஆண்கள் நின்று இருந்தார்கள்.

”நாங்க அந்த பிள்ளைக்கிட்ட அட்ரஸ் கேட்டோம் , அதுக்கு இந்த பொண்ணு ஊர கூட்டி விட்டுச்சு, நாங்க யாரு வீட்டுக்கு வந்திருக்கோம் தெரியுமா இந்த ஊரே பயப்படுற சண்முகவேலு ஐயா வீட்டுக்கு, ”

”யாராட வீட்டு வந்திருக்க ”சொல்லி ஓரே உதை விட்டான், சொல்லுடா யாரு வீட்டுக்கு, அவன் புத்திதான் உனக்கு வரும் சொல்லிக்கொண்டே அடித்தான், மற்ற மூவரும் தாக்க வர அனைவரையும் பிண்ணிக் கொண்டிருந்தான்.

கூட்டத்தில் ஓருவன் சண்முகவேலு பேரு சொல்லாதயிருந்தா விட்டியிருப்பான்,இப்ப பஞ்சாயத்தே களேபரம் ஆயிடுச்சு. தூரத்தில் மூவர் ஏய் நம்ம ஐயா வீட்டுக்கு வந்த பசங்களை அடிக்கிறான் வாங்கடா கூப்பிட்டு, அதில் ஒருவன் கத்தியை வைத்து பூவரசனின் கையை கிழிக்க, யாருடா இவன் தீடீர் கத்திய தூக்கினது பிடித்து சாராமரியா அடித்து துவைத்தான் பூவரசன்.

”அண்ணே அந்த கயல் புள்ள பார்த்துடுச்சு அண்ணே லோகு சொல்ல” சண்டையை நிறுத்தி ”என்னடா சொல்லுறே” , ஒரு ஆளை கூப்பிட்டு இவனுக்களை ஆஸ்பிட்டல் சேர்த்திடு சொல்லிட்டு ”டேய் லோகு அந்த பிள்ளையை பிடிடா விடாத, சீக்கரம் வண்டிய எடு”. சரிண்ணே

வண்டிய நிறுத்திவிட்டு , ”என்னம்மா கயல் இந்தப்பக்கம்”,

”சும்மாதான வந்தேன், கொஞ்சம் காலாற நடந்தேன். நீங்க என்ன இந்தப்பக்கம். ”

”ஒரு சோலியா வந்தேன்,ஏம்மா நீ பள்ளிக்கூடம் போகலியா”,

”போண்ணே நான் படிப்ப விட்டு இரண்டு வருஷம் ஆயிடுச்சு. ”

”எனக்கு தெரியாதே, அப்புறம் உன் கூட்டாளி எப்படியிருக்கா பேசுவியா”

”யார சுந்தரியக்காவ கேக்கிறீங்க,நான் பார்த்தே ஒரு வருஷம் ஆச்சிண்ணே.நீங்க வேற. ”

லோகு பூவரசினிடம் மெதுவாக, ”போன மாசம் நம்ம அரசப்பட்டுல நடந்த சண்டையை போட்டுக் குடுத்ததே இவதான் எப்படி வாய் கூசாது பொய் சொல்லுது பாருண்ணே. ”

ச்சூ அமைதியா இருடா,அப்ப நாங்க வரோம்மா. சரியண்ணே.

விடியற்காலை 5.00 பஸ் ஸ்டான்டில் நின்றிருந்தார்கள் சுந்தரியும், அவள் தோழி சங்கரியும்.

”ஏன்டி சுந்தரி நேற்று நைட் போன் வந்தது இருந்து இப்படி இருக்க உங்க மாமா என்ன சின்ன குழந்தையா அங்கயே ஏதாவது ஹாஸ்பிட்டல காண்பிச்சிருப்பாரு. இவ்வளவு சீக்கரம் போகணுமா சொல்லு. ”

” உனக்கு என் பூவா பத்தி என்ன தெரியும், நான் டாக்டர் படிக்கிறதே அவனுக்காக தான். சரி பஸ் கிளம்புது நான் போய் சேர்ந்தவுடன் போன் பண்ணறேன்”.

”ஏய் வந்தவுடன் உன் மாமனை பத்தி சொல்லுடி. பாய்”

காலை 8.30 மணிக்கு ஸ்கூட்டியை எடுத்திட்டு கேரியரை முன்னாடி வைத்து வேப்பபூண்டி கிராமத்தில் வண்டியை ஓட்டிக்கொண்டு தன் மாமனை காண சென்றாள் நம்ம சுந்தரி. மஞ்சள் , பச்சை கலந்த சுடிதார் , உச்சியில் கிளிப் போட்டு கண்களை மையையிட்டு சிறிய பொட்டு வைத்திருந்தாள்.

வயலில் வேலை செய்த பெண்மனி , ”என்ன சுந்தரி இம்பூட்டு தூரம்” .

வண்டியை நிறுத்தி ”மாமன பார்க்க போறேன்க்கா. ”

”நீ கொடுத்த மருந்த சாப்பிட்டவுடனே இப்ப இரும்பல் இல்ல டாக்டரம்மா”.

”அடுத்த முறை வர சொல்ல ஓரு செக்கப் பண்ணிக்கோக்கா சொல்லி வண்டியை ஓட்டினாள்”.

”ஏய், அமுதா யாரு இந்த பொண்ணு, சும்மா சினிமா ஸ்டார் மாதிரி இருக்கு என பக்கத்தில் வயல் வேலை செய்யும் பெண் கேட்க. ”

”ஓ உனக்கு தெரியாதுயில்ல , நீ இப்பதான ஊருக்கு வந்திருக்க. ”

”நம்ம பூவரசன் தம்பியோட அக்கா மக சுந்தரி. நம்ம பூவரசனுக்கு பரிசம் போட்ட பொண்ணு. ”

”ஆனா இந்த தம்பிக்கு கல்யாணம் நின்னு போச்சு கேள்விப்பட்டேன். ”

”அதற்கு அப்புறம் தான் பரிசமே போட்டது அவ அக்கா ஆனந்தவல்லி. ”

”ஆனா கொடுத்த வச்ச தம்பி இந்த பொண்ணு எம்பூட்டு ஆழகாக இருக்கு, டாக்டர் வேற, தம்பி என்ன படிச்சிருக்கு”

”பத்தாப்பு படிச்சிருக்கு இல்ல”.

ஆத்தாடி வாய் பொளந்து நின்றாள்.

----------

ஊரின் பெரிய வீடு பண்ணையார் வீடுதான், இந்த கிராம்மத்திலே பெரிய வீடு, ராயலை வெளியே விட்டு உள்ளே நுழைந்தான் பூவரசன்.

”அக்கா அக்கா”

”வாடா பூவரசு”

”பசிக்குது சாப்பாடு போடு, எங்க நம்ம அம்மாவே காணோம்”

”பக்கத்து வீட்டுக்கு போயிருக்கு, என்ன கூப்பிட்டாவே வர மாட்டியே துரை இன்னிக்கு இவ்வளவு சீக்கிரமா. ஓண்ணு விளங்கலையே. ”

”டிபனை போடு வாய் பேச்ச நிப்பாட்டு” சாப்பாட்டு மேசையில் உட்கார்ந்தான்.

இட்டலியில் சிக்கன் குழம்பை தோட்டு சாப்பிட்டு ”என்ன உன் பொண்ணு எப்ப வந்தா. ”

”எப்படிடா கண்டுபிடிச்ச, ”

”சுந்தரி வைச்ச சிக்கன் குழம்புதான இது, உனக்கு அவ்வளவா வராது. ”

”டேய் ரொம்பதான்டா,காலையில பஸ்ட்டு பஸ்ஸ புடிச்சி வந்திருக்கா”,

மேசேஜ் லேட்டா போயிருக்கு என்று யோசித்தான்.

உள்ளே நுழைந்த பவளத்தாயி , நம்ம பூவரசனோட அம்மாங்க, இரண்டாம் தாரமாக கட்டிக்கொண்டார் பூவரசனின் அப்பா சிங்காரவேலு.முதல் தாரத்துக்கு பொறந்தது ஆனந்தவல்லி.

”ஏய் பூவரசு உன்ன பார்க்க அந்த சிறுக்கி கோவமா மில்லுக்கு போயிருக்கா நீ இங்க உட்கார்ந்திருக்க. ”

”எல்லா எனக்கு தெரியும் , நான் மேலே என் ரூமுல இருக்கேன்”.

------சுந்தரனும் சுந்தரியும்------
 
உங்களுடைய "சுந்தர பூவரசனின்
சுந்தரி"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
லக்ஷு அருணாச்சலம் டியர்
 
மிகவும் அருமையான பதிவு,
லக்ஷு அருணாச்சலம் டியர்

ஹா ஹா ஹா
ஆரம்பமே பஞ்சாயத்து அடிதடி ரகளையா?
சூப்பர் லக்ஷு டியர்
என்னாஆஆஆஆஆஆஆஆது?
பத்தாப்பு மட்டும் படிச்சிருக்கிற ஹீரோவுக்கு டாக்டர் ஹீரோயினாஆஆஆஆஆஆஆஆ?
அடேய் பூவரசன் இதெல்லாம் நொம்பவே ஓவர்டா
ஹா ஹா ஹா
உன் மகளுக்கு வைக்கத் தெரிஞ்ச கோழிக் குழம்பை உனக்கு வைக்கத் தெரியலையா, ஆஆஆஆஆஆஆஆனந்தவல்லியக்கா?
வெரி பேடு வெரி பேடு
எவன்டா அவன் சண்முகவேலு?
வில்லனா?
இல்லை வில்லனின் அப்பனா?
அவன் பேரைச் சொன்னவுடனே இன்னும் எச்சா சரமாரியா அடி விழுதே
ஹா ஹா ஹா
மாமனுக்கு கத்திக்குத்து பட்டிருச்சுன்னு தெரிஞ்சவுடனே சுந்தரி புள்ளை கோழிக் குழம்பை டிப்பன் கேரியர்ல போட்டு அங்கன மில்லுக்கு எடுத்தாந்திருக்கு
ஆனால் இந்த பூவரசன் மில்லுக்கு போவாம வூட்டுக்குள்ளேயே உட்கார்ந்துட்டானே
ஹா ஹா ஹா
உனக்கு உண்டுடி மாப்பி கச்சேரி
 
Last edited:
பத்தாப்பு படிச்ச புள்ளைக்கு டாக்டர் பொண்ணா. ரொம்ப ஜாஸ்தி இல்லை. ஆரம்பமே களை கட்டுதது. அடுத்து என்ன ஆகுதுன்னு பார்போம்.
 

Advertisement

Top