Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சுட்டும் விழிச் சுடரே, அத்தியாயம்-1

Advertisement

Bhavatharini

Tamil Novel Writer
The Writers Crew
-M2JKgcV_M3uw1cdYvUZex7vE9cYQmPgbD7nLzHkvmqZ0J9iOK0CBeXLiRxA5FK9CbqNLWYSXdscscQXi4wIIvXxxYISRSRz3AHlQWlGzjeApY3hLb8xRCCP-9riN7UfdQiZlM6Q

சுட்டும் விழிச் சுடரே..
அன்புள்ள தோழர்களே
இது என் முதல் பதிப்பு. உங்களது உண்மையான விமர்சனத்தை என்னிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். தவறு இருப்பின், திருத்தி எழுதுவதற்கு அது என்னை ஊக்கப்படுத்தும்.

முன்னுரை:
இது ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்ட கதை. உண்மையாக பழகுபவர்களை ஏமாற்றியதாக நினைத்து, சில உறவுகளை இழக்கிறோம். பொய்யான உறவை உண்மை என்று எண்ணி ஏமாறுகிறோம். கால வெள்ளத்தில் கற்பனை ஓடத்தில் ஏறி என்னுடன் சிறிது நேரம் பிரயாணம் செய்ய வாருங்கள்.

வணக்கம்.
அது ஒரு மாலைப்பொழுது, பூங்காவில் ஒரு பெரிய மரத்தடியில் சூரியனின் இளந்தளிரில் ஒரு மர பெஞ்சில், அகிலன் அமர்ந்திருந்தான். நல்ல உயரம், மாநிறம், நேர்த்தியான முகம். நடைபாதையில் நடக்கும் பெண்கள் இவனது கம்பீரமான தோற்றத்தை ஒரு கணம் பார்த்து விட்டு செல்வார்கள். அகிலன் அமைதியாக எதையோ யோசித்த வண்ணம் அங்கு செல்பவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அதே பூங்காவில் மற்றொரு பெஞ்சில் அமர்ந்திருந்த ஒரு பெரியவர் அவனையே பார்த்துக் கொண்டிருந்தார். மெல்ல எழுந்து வந்து அவன் அருகில் உட்கார்ந்து. “உன்னை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு, எந்த ஊருப்பா நீ?” என்றார்.

யாரென்று தெரியாவிட்டாலும் பெரியவர் என்ற மரியாதைக்காக மறுத்துப் பேசும் எண்ணம் இல்லாமல் “என் ஊர் ஏற்காடு, நான் இங்கு ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்க்கிறேன்” என்றான்.

” ஓ !அதான் பார்த்த மாதிரி இருந்திருக்கு, என் ஊர் சேலத்துக்கு பக்கத்துலதான், நான் இங்க என் மகள்கூட தங்கி இருக்கேன், இப்போதுதான் மாற்றலாகி இங்கு வந்துள்ளோம்” என்று அறிமுகம் செய்து கொண்டிருக்கும்போதே மகளின் தொலைபேசி அழைப்பு வர, “நாளை பார்க்கலாம், நான் போய் பேத்தியை கூட்டிட்டு வீட்டுக்கு போகணும். தினமும் நீ இங்கு வருவியாப்பா? ” என்று கேட்டார் பெரியவர்.

அகிலனும் “நேரம் கிடைத்தால் சில நாட்கள் இங்கு வருவதுண்டு” என்றான்.

பெரியவர் பெயர் முத்துசாமி, அவருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள். முதல் மகன் பெயர் தமிழ்செல்வன், இரண்டாவது மகன் பெயர் கலையரசன். மகளுடன் தற்போது சென்னையில் தங்கி இருக்கிறார். வயதான காரணத்தினால் அவருடைய நிலத்தை, சின்ன மகன் தற்போது விவசாயம் செய்து கொண்டிருக்கிறார். பெரிய மகன் சேலத்திலேயே ஒரு பெயிண்ட் கடை வைத்து நடத்தி வருகிறார். பெரியவரின் மனைவி இரண்டு வருடத்திற்கு முன் ஒரு கார் விபத்தில் காலமாகி விட்டார். அதனால் பெரும்பாலும் மகளுடன் வந்து தங்கி விடுவார். மகளுக்கு அப்பா என்றால் உயிர், அவருக்கும் இரண்டு மகன்களை விட மகள் மீது தனிப் பிரியம்.

அகிலனுக்கு ஒரு அண்ணன் அருள்மொழிவர்மன் .அவருக்கு திருமணமாகி அவர் பெற்றோருடன் வாழ்ந்து வருகிறார். நடுத்தர குடும்பம். அகிலன் கல்லூரி படிக்கும் போது மதிப்பெண் குறைவானதால், சிரமப்பட்டு தான் முதல் வேலைக்குச் சேர்ந்தான். இது இவனுக்கு இரண்டாவது அலுவலகம். வேலையில் சேர்ந்து ஐந்து வருடங்கள் ஆகியிருந்தன. அகிலன் தனக்கு கொடுத்த வேலையை திறம்பட முடிப்பவன். தனியாக ஒரு வீடு எடுத்து தங்கியிருந்தான். அது அலுவலகத்திலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

இன்று, அகிலன் மாலை வேலையை முடித்து விட்டு அவனது அறைக்குச் சென்றான். அவன் இரவு தூக்கத்தை தொலைத்து வெகுகாலம் ஆகியிருந்தது. தினமும் இளையராஜாவின் மெல்லிய இசையை ரசித்தபடி நடுநிசியை தாண்டித்தான் உறங்குவான். சில மறக்க முடியாத பழைய நினைவுகளோடு இன்றும் அவனது இரவு தொடர்ந்தது.

அன்று அகிலனுக்கு கல்லூரி முதல் நாள். அவன் முதுநிலை கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் சேர்த்திருந்தான். இதுவரை ஆண்களுடன் மட்டுமே படித்த அகிலன் முதல் முறையாக இருபாலரும் படிக்கும் கல்லூரியில் சேர்ந்திருந்தான். விருப்பத்துடன் சேர்ந்தாலும் பெண்களை பார்க்கும் துணிவின்றி கடைசி பெஞ்சில் போய் அமர்ந்துக்கொண்டான். அந்த வகுப்பில் மொத்தம் ஐம்பது பேர். அதில் பதிநான்கு பெண்கள், மற்றவர்கள் ஆடவர்கள்.

முதல் வகுப்பில் ஆசிரியை, " உங்க பேரும், ஒவ்வொருவரும் இந்த காலேஜ் சேர்ந்ததுக்கான காரணத்தையும் சொல்லுங்கள்" என்றார்.
அனைவரும் ஏதேதோ காரணத்தைக் கூற அகிலன் மட்டும் “இருபாலரும் படிக்கும் கல்லூரி, அதனால்தான் சேர்ந்தேன்” என்று வெகுளித்தனமாக கூறினான்.

அனைவரும், ஆசிரியரும் உட்பட அவனை வியப்புடன் பார்த்து சிரித்தனர். 'அச்சச்சோ! பொண்ணுங்க இருக்காங்கன்னு யோசிக்காம பேசிவிட்டோமே! எல்லாரும் கலாய்க்க போறாங்க' என்று அசடு வழிந்தான். அத்துனை சிரிப்பிலும் அவன் விழி அந்த அழகிய கருவிழியை காணத் தவறவில்லை.

ஆசிரியை "போதும், நல்ல காரணம். உட்கார் " என்றார் புன்னகையுடன். யாழினியும் இதழோர புன்னகையுடன் திரும்பிக் கொண்டாள்.

யாழினி திகட்டாத அழகு, செந்தாமரை வண்ணம், துடிப்பான பேச்சு. இன்றும் அந்தக் கருவிழியின் அழகை நினைத்துக் கவிதை எழுதியது அகிலனின் மனம்,

'நேரில் வந்த தேவதையே ,

சாகாமல் வாழ்வதற்கு உன் நினைவே துணை,
எல்லாவற்றிலும் உன்னைத் தேடுகிறது மனம்,
கண்மணி உனது நினைவில்

என்னையே நான் ரசிக்கிறேன் ' ...

மறுநாள் காலையில் உதய சூரியனுடைய கிரணங்கள் அகிலனை தட்டி எழுப்பியது. உறக்கம் நீங்கிய பிறகும் சுய உணர்வு வருவதற்கு சிறிது நேரம் பிடித்தது. அவன் மேல் விழுந்தது சூரியனுடைய வெளிச்சமா அல்லது அவள் கண்களின் ஒளியா என்று தோன்றியது. காலையில் எழுந்து சிறிது நேரம் உடற்பயிற்சி செய்து, குளித்து அலுவலகத்திற்கு சென்றான். அலுவலக வேலைகளை முடித்துவிட்டு மாலையில், ஒரு தேநீர் குடித்துவிட்டு அப்படியே பூங்காவிற்கு சென்றான். பெரியவர் இவனுக்கு முன்னாலேயே, அங்கு வந்து அமர்ந்திருந்தார்.

இவனை பார்த்தவுடன்" தம்பி இங்க வாப்பா, இங்கு வந்து உட்கார். கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கலாம் " என்றார்.
அவனும் அவர் அருகில் போய் அமர்ந்தான். அவர் தன்னைப் பற்றி எதுவும் கேட்காமல் பொதுப்படையாக பேச ஆரம்பித்தது அவனுக்கு திருப்த்தியாக இருந்தது.

"என்னப்பா இப்பல்லாம் ஏற்காடு முன்ன மாதிரி குளிர் இல்லன்னு சொல்றாங்க!" என்றார் பெரியவர்.

"ஆமாங்க! இந்த மனுசங்க மலையையும் விட்டுவைக்க இல்லை. அதையும் பிளாட் போட்டு விற்கிறார்கள். மரமும் பதியாகிடுச்சு. அப்புறம் எப்படி மழை பெய்யும், குளிர் அடிக்கிறதுங்க ஐயா" என்றான்.

"ஆமாம்பா, மனுசங்க வாழ்க்கையே சராசரி வெறும் 70 லிருந்து 80 வயது வரைக்கும் தான், அதுக்குள்ள இவங்க ஆடுற ஆட்டம் கொஞ்ச, நஞ்சம் இல்ல. நல்லது செய்யலைன்னாலும், கெட்டது செய்யாமல் இருக்கலாம். இன்னும் ஆமை மாதிரி 400 /500 வருஷம் இருந்தாங்கன்னா அவ்வளவுதான்"

"சரியாக சொன்னீங்க ஐயா, வரும் காலத்தை பற்றி நினைக்காமல், தன்னால் முடிந்தவரை ஒவொருவரும் மண்ணையும், காற்றையும், நீரையும் சேர்த்து கெடுக்கிறோம்". அப்படியே சிறிது நேரம் இருவரும் பல பொதுப்படையான விசயங்களைப் பேசினர்.

" சரிங்க ஐயா, எனக்கு டைம் ஆகிடுச்சு, நாளைக்கு முடிந்தால் பார்க்கலாம்."என்று கூறி கிளம்பினான்.

"சரிப்பா, நீ கெளம்பு. என் பேத்திக்கு கிளாஸ் முடிய கொஞ்ச நேரம் இருக்கு" என்றார் பெரியவர். அவரிடம் பேசியது அவனுக்கும் மாறுதலாக இருந்தது.

அன்று மாலை வேலையை முடித்துவிட்டு வீட்டுக்குப் போகும்போது கொஞ்சம் தோசை மாவும் அசைவமும் வாங்கிச் சென்றான். அவனுக்கு அசைவம் என்றால் மிகவும் பிடிக்கும். கோழி கறியை நன்றாக சுத்தம் செய்து உப்பு மிளகாய்த்தூள் தடவி சிறிது சிக்கன் மசாலா போட்டு, வறுத்து கிரேவி போல செய்து வைத்துக் கொண்டான். குளித்துவிட்டு வந்து தோசையை முறுகலாக எண்ணெய் ஊற்றி சுட்டு அதை தோசையில் வைத்து சாப்பிட ஆரம்பித்தான். அந்தக் கோழிக்கே அதைப் பார்த்தால் சாப்பிடத் தோன்றும், கூடுதலாக கூடவே இளையராஜாவின் இசையும் . அன்று மின்சாரம் இல்லாததால் மொட்டை மாடி சென்று, மேலே வானத்தை பார்த்து பாடலை ரசித்துக் கொண்டு இருந்தான்,


தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
செம்பூ மஞ்சம் விரித்தாலும்
பன்னீரைத் தெளித்தாலும்
ஆனந்தம் எனக்கேது

அன்பே நீ இல்லாது
கூடவே பழைய அவள் நினைவுகளும்…..

அன்று திங்கள்கிழமை, கல்லூரி சேர்ந்து ஒரு மாதம் ஆகியிருந்தது. அதனால் அகிலன் வார விடுமுறைக்கு ஊருக்கு போய்விட்டு திரும்பிக் கொண்டிருந்தான். நல்ல மழை. மலைப்பாதையில், மழையினால் பேருந்தில் குளறுபடி ஏற்பட்டு நேரம் கடந்தது. அகிலன் கல்லூரி வந்து சேர மதியம் ஆனது. காலதாமதம் ஆனதால் கல்லூரிக்கு வேக வேகமாக வந்தான். அது மதிய உணவு வேளை, யாழினி சாப்பிடுவதற்காக வகுப்பிலிருந்து வெளியில் வந்து கொண்டிருந்தாள். வந்த வேகத்தில் அகிலன், யாழினி மீது மோதி நின்றான்.

“ கண்ணு தெரியாது, இப்படியாக வந்து இடிப்ப. எங்க பார்த்துகிட்டு நடக்குற “ என்றாள் வலியில்.

வகுப்பை ஒருமுறை சுற்றி பார்த்த அகிலன் , " நல்லவேளை வகுப்பில் யாரும் இல்லை!" என்றான் . அப்பொழுது வகுப்பில் ஒரு சிலரே இருக்க, மற்றவர்கள் மதிய உணவிற்கு சென்றிருந்தனர்.

கோபம் இன்னும் அதிகமாக “ என்னது யாரும் இல்லையா? என் நெத்திய பாரு , ரத்தம் வற மாதிரி வலிக்குது, “ என்றாள் வலியில் கண்ணில் நீர் துளிர்க்க. .

அப்பொழுதுதான் முதல் முறையாக, அவளை மிக அருகில் பார்த்தான். அழகே வடிவமாக பொழிந்த முகத்தில் அந்த பிரை நெற்றியில், உண்மையில் கன்னித்தான் போய் இருந்தது. மனம் பதற்றமடைய “ மன்னிச்சுக்கோ, வேணும்னு இடிக்கல “ என்றான் வேறு என்ன சொல்லுவெதன்று தெரியாமல்.

" எல்லாம் என் தலையெழுத்து , இன்னைக்கு யாரு மூஞ்சில முழிச்சேனோ” என்று கூறி விட்டு விலகிச் சென்றாள்.
மனது பொறுக்காமல் வந்த வேகத்தில் திரும்பிச் சென்று, அருகில் இருந்த ஒரு மருந்துக் கடையில் வீக்கத்திற்கான மருந்தை வாங்கி வந்தான்.

திரும்பி உள்ளே நுழையும் பொழுது, அனைவரும் வகுப்பில் அமர்ந்து சலசலவென்று பேசிக்கொண்டிருந்தனர். சிறிதும் அரவமின்றி அவள் அருகில் சென்று மருந்தை வைத்து விட்டு அவனுடைய பெஞ்சில் சென்று அமர்ந்துக்கொண்டான்.

'அதுக்குள்ள போய் வாங்கி வந்துட்டானா, மருந்தை போட்டுக்கோ ! என்று சொல்லி கொடுத்தால், குறைந்தா போய்விடுவான்' என்று எண்ணி மருந்தை தொடும் எண்ணமில்லாமல் திரும்பி பார்த்து முறைத்தாள்.

அவள் போடுகிறாராளா, இல்லையா என்று வைத்த கண் விலகாமல் பார்த்துக் கொண்டேயிருந்த அகிலன். அவளது பார்வையின் உஷ்ணத்தை புரிந்து கொண்டு, கெஞ்சும் கண்களுடன் 'போட்டுக்கோ ,ப்ளீஸ்! ' என்பதுபோல் தலையசைத்தான்.

அந்த கண் ஜாடைக்கும், முக பாவனைக்கும் முன்னால் மறுத்து எதுவும் கூற மனம் வராமல் மருந்தை அமைதியாக போட்டுக் கொண்டாள். மருந்தின் எரிச்சலால் யாழினி முகத்தைச் சுழிக்க, அதை பார்த்த அகிலனுக்கு மனம் அவளைவிட அதிகமாக வலித்தது. அந்த வலி அவனுடைய முகத்தில் தெரிய, அதை பார்த்த யாழினி ' இவனுக்கு என்னவோ வலிக்கிற மாதிரி முகம் மாறுது , நல்லாவே நடிக்கறான்' என்று தலை ஆட்டிவிட்டு, கோவம் போய் சிறு புன்னகையுடன் திரும்பிக் கொண்டாள் . அவள் புன்னகையில் அவன் உள்ளம் தடுமாறித்தான் போனது. 'எனக்கானவள் நீதானா? ஒரே புன்னகையில் விழுந்து விட்டேன் என்று சினிமாவில் சொல்வார்களே அது இதுதானோ" என்ற எண்ணம் தோன்றியது.

யாழினி காதலித்தாலா? யாழினி இப்போது என்ன ஆனாள்? அந்த பெரியவருக்கும் கதைக்கும் சம்பந்தம் உண்டா? யார் யாரால் ஏமாற்றப்பட்டார்கள்? பின் வரும் தொடர்களில் ஒவ்வொன்றாக முடிச்சுகளை அவிழ்க்கலாம்.

தொடரும்……
 
Last edited:
உங்களுடைய "சுட்டும்
விழிச் சுடரே"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
மித்ரா @ பவதாரிணி டியர்
 
உங்களுடைய "சுட்டும்
விழிச் சுடரே"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
மித்ரா @ பவதாரிணி டியர்
மிக்க நன்றி.
 
Top