Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

💛❤️💛மிஸஸ் மயிலாஞ்சி 💛❤️💛-விமர்சனம்

Advertisement

View attachment 8470
கதையில் தொடக்கம் முதல் இறுதிவரை மிகவும் சுவாரஸ்யமாகவும், நெகிழ்ச்சியாகவும் கதைக்களம் மனதை வருடிச்சென்றது💞💞💞💞💞💞.
சர்வானந்தன் :☺️☺️
தன் மனதில் இருக்கும் துயரத்தை இறுக்கத்தின் மூலம் வெளிப்படுத்தாமல் தன் உறவுகளில் நலனுக்காக உண்மையான அன்புடன் பாடுபடும் விவேகம் நிறைந்த ஆண்மகன்.

தாய் ஒவ்வொரு குழந்தைக்கும் இன்றியமையாதவள் அந்த தாயின் இடத்தை எவ்வளவு அன்பு கொண்ட உறவுகள் இருந்தும் நிரப்ப இயலாது, அத்தகைய தாயின் பாசத்திற்காக இவன் ஏங்கி நின்றது மனதை ரணமாக்கியது. தந்தை இருந்தும் அவரிடத்தில் முழுமையான அரவணைப்பும் இல்லை😔😔😔😔.

திருமண பந்தத்திலும் விதியின் கொடுமையால் இவன் பட்ட ரணங்களும் அவமானங்களும் சொல்லில் அடங்காதவை🙁.

தன் உதிரத்தில் மலர்ந்த யுவானந்தன் பிடியில் வாழ்க்கையை வெறிக்கொண்டு எதிர்த்து முன்னேற்ற பாதையில் முன்னேறி சென்றது நிம்மதி அளித்தது😊😊😊😊.

நிரஞ்சனி:🥰🥰🥰🥰🥰🥰

தாயின் சிறகில் உலகத்தின் மறுபக்கத்தை அறியாமல் கள்ளம் கபடமற்ற அன்புடன் பட்டாம்பூச்சியாய் வளம் வந்த தேவதை நம் செல்ல அம்லு 🥰🥰.

இவளது இவளது வெகுளித்தனம் மிகவும் அழகு, அதே சமயம் அந்த வெகுளித்தனம் தான் இவளது பிறகை முடித்து இருள் நிறைந்த கருப்பு பக்கத்தில் மூழ்கடிக்க கணவன் வாழ்க்கைத் துணையாக அமைய காரணமாக அமைந்தது😥😥😥😥😥.

கடவுளின் கருணையால் சர்வாவின் மூலம் அந்த கொடிய வாழ்வின் இருந்து விடுபட்டு பாதுகாப்பாக மீளவும் முடிந்தது🙏🙏🙏🙏🙏🙏.

கல்லூரி வாழ்வில் இவளது நட்புக்கள் வரமானவர்களே 😇😇😇😇😇.

சர்வா -அம்லு:🧡💞🧡💕🧡
சர்வா :சர்வாவின் வாழ்வில் இழந்த அன்னை பாசத்தையும், தன் மகனின் ஏக்கத்தையும் போக்கிட பொக்கிஷமாய் வந்த நிரஞ்சனியை பல கட்ட மன போராட்டத்திற்குப் பிறகு கரம் சேர்ந்தது மிகுந்த மகிழ்ச்சி அளித்தது💕💕💕💕.

உண்மையான அன்பும் காதலும் கொண்டு நிரஞ்சியின் கல்வியை மேம்படுத்தியதும், அவளது அறியாமையை களைய செய்து கௌரவத்தை கொடுத்து காதலுடன் மன மகிழ்ச்சியுடன் வாழ்வதை காணும் பொழுது நெகிழ்ச்சியாக உள்ளது🥰🥰🥰.
அம்லு : சர்வாவுடன் திருமண பந்தத்தை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அன்னையாய் கணவனையும், யுவியையும் மடிதாங்கி ஒவ்வொரு நிகழ்விலும் பெருமைப்படுத்தி நெகிழச் செய்தாள்❣️❣️❣️❣️❣️.

யுவியுடனான இவளது தாய்ப்பாசம் பிரம்மிக்க வைக்கிறது...

நிதர்சனம் உணர்ந்து சுற்றியுள்ள நட்புக்கள் உறவுகள் என அனைவரிடத்திலும் என்றும் மாறாத அன்புடன், அனைத்து சுக துக்கங்களையும் ஏற்று என்றும் மாசில்லாத மாணிக்கமாய் ஜொலித்து சர்வாவுடனான வாழ்வை ரம்யமாக்கினாள்🥰🥰🥰.


யுவானந்தன் : தெய்வ கிருபையால் அன்புக்கு ஏங்கிய மழலை இவனுக்கு தெய்வ அன்னையாய் நிரஞ்சனியுடனான பாசப்பினைப்பு மிக மிக அழகு🤎🤎🤎🤎🤎🤎🤎🤎.

யுவதிகா, யுகதிகா :🥰🥰
உண்மையான அன்பிற்கும் காதலுக்கும் கிடைத்த அம்லு - சர்வாவின் சொக்கத்தங்கங்கள்💝💝💝💝💝💝💝💝💝💝

மீனாட்சி அம்மா: கணவரை இழந்து ஒற்றை மகளை அனைத்து துயரிலும், உழைத்து வளர்த்தெடுத்து பாதுகாத்து இருக்கிறார். மகளின் வாழ்வில் புயல் வீசிய பொழுது துவண்டு போனாலும் மீண்டும் அவளது வாழ்வில் ஒளி வீச சர்வாவுடன் நல்லது வாழ்வை அமைத்துக் கொடுத்து அவளது சந்தோஷத்தையும், நிறைவையும் கண்டு இவர் மனம் மகிழ்ந்தது நமக்கும் மகிழ்ச்சியளித்தது💞💞💞.

ராகவேந்திரன்- பிரபாவதி:
ராகு : உழைப்பையும், பொறுப்பையும் கைவிட்டு அலட்சியமாக வாழ்ந்ததோடு மட்டுமல்லாமல் தன் வாழ்க்கைத் துணையாக வந்த நாகஜோதியை இவர் நடத்திய விதம் சர்வாவின் அன்னையை இழக்க செய்தது..
இரண்டாவதாக பிரபாவதி மணந்தாலும் இவரது பொறுப்புக்களை உணராமல் அவர் போக்கில் வாழ்வது எல்லாம் இவர் மீது மதிப்பை குறைத்தது 😒😒😒.


பிரபா: உண்மையான அன்புடன் முதல் தாரத்து மகனாக இருந்தாலும் அனைத்து விதத்திலும் அன்னையாகவே பாவித்த சர்வாவை இவர் நடத்திய விதமும், பேராசையும், பணத்தாசையும் இவர் மீது நல் மதிப்பை வெகுவாக குறைத்து விட்டது.. அண்ணன் மகள் சந்திராவை வலுக்கட்டாயமாக சர்வாவின் வாழ்வில் நுழைத்து அவனுக்கு தீராத வலியை கொடுத்து விட்டார், அப்பொழுதும் மாறாமல் லேகாவையும் சர்வா வாவின் வாழ்வில் பிணைக்க இவர் நடந்து கொண்ட விதங்கள் கோபத்தை உண்டாக்கியது...
ஒரு கட்டத்தில் இவர் பெற்ற மக்களே இவரை ஒதுங்கி செல்லும் போது மனம் மாறி தவறை உணர்ந்து சர்வாவிடம் மன்னிப்பை வேண்டியது நிம்மதி அளித்தது....


கஜேந்திரன்- திலகவதி:🙏🙏🙏
தன் மக்களையும் தன் உடன் பிறந்த தம்பி மக்களையும் ஒரே தராசில் வைத்து தூய்மையான அன்புடன் திகழ்ந்து மனதில் உயர்ந்து விட்டனர் 🙏🙏🙏🙏🙏🙏.

கங்கம்மா பாட்டி: இவரது கண்ணோட்டத்தில் இவர் செய்த செயல்கள் அனைத்தும் நியாயமானவே ஆனால் மகனின் நிலையை மட்டுமே எண்ணி ஒரு தலை பட்சமாக நடந்ததன் விளைவு சர்வாவிற்கு பாதகமாக அமைந்தது.. என்ன செய்ய அவரவர் நியாயங்கள் அவரவருக்கு😒😒😒😒😒😒.

அம்லு உடனான இவரது பாச பிணைப்பு உண்மையில் தூய்மையானவை🥰🥰🥰
🥰.

விமலா- வேலாயுதம்:
வேலாயுதம்: நியாயத்தின் பக்கம் நின்று நிரஞ்சனிக்கு பக்கபலமாக இருந்து துணை நின்றது இவர் மீது மரியாதையை கொடுத்தது🙏🙏🙏.

விமலா: ஒவ்வொரு முறையும் மருமகள் என்று பாராமல் இவர் நிரஞ்சனியை நடத்திய விதமும், கடுஞ்சொற்களால் அவளை வதைத்தது மட்டுமல்லாமல் மீனாட்சி அம்மாவையும் இவர் படுத்திய பாடு கோபத்தை உண்டாக்கியது.. இருப்பினும் ஜெகன் செய்த பாவ செயலை உணர்ந்த பின் நிரஞ்சனியிடம் மன்னிப்பு கோரியது நிம்மதி..

திரவியம்- ரேவதி:
நட்புக்கு இலக்கணம் திரவியம்☺️☺️☺️☺️☺️.
ரேவதி திரவியத்திற்கு ஏற்ற காதல் மனைவி🥰🥰.

யோகா -அஸ்வின்:💞💞💞💞💞💞💞💞💞💞💞💞.

பிருந்தா - பரத் குமார் :💝💝💝💝💝💝💝💝💝
தாய், தந்தையர் எவ்வாறு இருப்பினும் இருவரும் நியாயத்தின் பக்கம் துணை நின்று கண்ணியமாகவும் நடந்து கொண்டனர்☺️☺️☺️☺️.

அன்பானந்தன் -ஹேமா❤️❤️❤️❤️❤️❤️❤️.

சந்திரா -லேகா :இருவரும் தன் தலையில் தானே மண்ணை அள்ளி கொட்டிக் கொண்டனர்..
சந்திரா அவள் செய்த பாவத்தை உணர்ந்தாலும் வினை பயனை அனுபவித்து தானே தீர வேண்டும்...
கோகுல் 🤢🤢🤢🤢🤢🤢🤢🤢கேடுகெட்ட ஜென்மம் 😡😡.

ரசியா -அசோகன் :ஒன்றும் சொல்வதற்கு இல்லை 😏😏😏..

மனதை கவர்ந்த நிகழ்வு:
மயிலாஞ்சி: இனி ஒவ்வொரு முறையும் மருதாணியை பார்த்தால் அம்லுவின் மயிலாஞ்சி தான் நினைவில் வரும்🧡🧡🧡🧡🧡🧡.

ஜிமிக்கி டான்ஸ்: அம்லு சர்வாவின் காதலுக்கு சத்தமில்லாமல் சங்கீதம் இசைத்தது இந்த ஜிமிக்கி தான்❤️❤️❤️❤️❤️❤️❤️..
மயிலாஞ்சி -யுவிப்பா என்றும் இதே நிறைவுடன் மகிழ்வுடன் வாழ வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐.

யுவானந்தன் -அம்மு நிரஞ்சனி வாழ்த்துக்கள் ❤️💞❤️💞❤️.

மறுமணம் பேசும் கதையாக இருந்தாலும் உண்மையான உயிர்நேசத்துடன் இணைந்த சர்வாவும் -அம்லுவும் மட்டுமே முதல் மனம் புரிந்தவர்களாக எனக்கு தோன்றினர்.. முன்னர் நிகழ்ந்த இருவரின் திருமணமும் விதியின் பொம்மலாட்டத்தில் ஆட்டுவிக்கப்பட்ட நாடக பொம்மையாகவே இருவரும் திகழ்ந்ததாக தோன்றியது.

@Sangeetha Raja உண்மையில் மிகவும் நிறைவாக இருந்தது கதையில் நிறைவு💞💞💞💞💞💞.. 140 அத்தியாயங்கள் என்று வியந்து பார்த்தேன் ஆனால் படிக்க, படிக்க இன்னும் நூறு அத்தியாயங்கள் அம்லுவுடன் பயணிக்க சொன்னாலும் பயணிப்பேன்☺️☺️☺️☺️☺️. மிகவும் அருமையான எழுத்து நடை👌👌👌👌👌👌👌👌..


மென்மேலும் பல்வேறு படைப்புகளை சிறப்பாக வழங்க வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐💐💐.
சிஸ்! உங்களோட விமர்சனத்திற்கு வெறும் நன்றி போதாதும்மா...

என்னோட எழுத்து கேரியரில்
❤மிஸஸ் மயிலாஞ்சி❤ எப்படி ஒரு திருப்பு முனையோ, அந்த மாதிரி என்னோட வாசகர்களில் நீங்களும் ஒரு திருப்புமுனையாக விமர்சனம் அளித்தவர்... ❤❤❤❤ இது மனதார சொல்லு நன்றிம்மா...

ரொம்ப தேங்க்ஸ்... ஒவ்வொரு கேரக்டரையும் விவரித்து, அழகா சொல்லி இருக்கீங்க... எனக்கே கதை ரீகால் ஆகியிருக்கு. அந்த ஜெகன் பையனை விட்டுட்டீங்க அவன் போகட்டும் போறான் விடுங்க...

நாகா கேரக்டர் விரும்பி எழுதினேன்... இப்படியும் ஒரு பக்கம் இருக்கு என்று... 👍👍👍

அந்த பாட்டு டாப்புடக்கர்மா... அப்படியே உங்க முகநூல் ஐடி தரீங்களா...

அப்புறம் அந்த மரம்... ஐவருக்குமான இடம்... 😍😍 அல்டிமேட்மா...😍😍😍
 
சிஸ்! உங்களோட விமர்சனத்திற்கு வெறும் நன்றி போதாதும்மா...

என்னோட எழுத்து கேரியரில்
❤மிஸஸ் மயிலாஞ்சி❤ எப்படி ஒரு திருப்பு முனையோ, அந்த மாதிரி என்னோட வாசகர்களில் நீங்களும் ஒரு திருப்புமுனையாக விமர்சனம் அளித்தவர்... ❤❤❤❤ இது மனதார சொல்லு நன்றிம்மா...

ரொம்ப தேங்க்ஸ்... ஒவ்வொரு கேரக்டரையும் விவரித்து, அழகா சொல்லி இருக்கீங்க... எனக்கே கதை ரீகால் ஆகியிருக்கு. அந்த ஜெகன் பையனை விட்டுட்டீங்க அவன் போகட்டும் போறான் விடுங்க...

நாகா கேரக்டர் விரும்பி எழுதினேன்... இப்படியும் ஒரு பக்கம் இருக்கு என்று... 👍👍👍

அந்த பாட்டு டாப்புடக்கர்மா... அப்படியே உங்க முகநூல் ஐடி தரீங்களா...

அப்புறம் அந்த மரம்... ஐவருக்குமான இடம்... 😍😍 அல்டிமேட்மா...😍😍😍
ரொம்ப சந்தோசம் சிஸ்டர் 🥰🥰🥰🥰🥰🥰.

ஜெகன் பற்றி நான் எழுதும் போது அது எதிர்மறையா போய் விட கூடாதுன்னு நினைக்கிறேன்... அதனாலதான் அவனை விட்டுட்டேன்..
நாகஜோதி பற்றி எழுத நெனச்சேன் ஆனால் மிஸ் பண்ணிட்டேன்... இப்போ சேர்த்துடுறேன்... அவசரமா போட்டுட்டு ஓடிட்டேன் இப்போ வந்து பார்க்கும்போது தான் தெரியுது நிறைய இடத்துல ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கு🙈🙈🙈
 
Last edited:
சிஸ்! உங்களோட விமர்சனத்திற்கு வெறும் நன்றி போதாதும்மா...

என்னோட எழுத்து கேரியரில்
❤மிஸஸ் மயிலாஞ்சி❤ எப்படி ஒரு திருப்பு முனையோ, அந்த மாதிரி என்னோட வாசகர்களில் நீங்களும் ஒரு திருப்புமுனையாக விமர்சனம் அளித்தவர்... ❤❤❤❤ இது மனதார சொல்லு நன்றிம்மா...

ரொம்ப தேங்க்ஸ்... ஒவ்வொரு கேரக்டரையும் விவரித்து, அழகா சொல்லி இருக்கீங்க... எனக்கே கதை ரீகால் ஆகியிருக்கு. அந்த ஜெகன் பையனை விட்டுட்டீங்க அவன் போகட்டும் போறான் விடுங்க...

நாகா கேரக்டர் விரும்பி எழுதினேன்... இப்படியும் ஒரு பக்கம் இருக்கு என்று... 👍👍👍

அந்த பாட்டு டாப்புடக்கர்மா... அப்படியே உங்க முகநூல் ஐடி தரீங்களா...

அப்புறம் அந்த மரம்... ஐவருக்குமான இடம்... 😍😍 அல்டிமேட்மா...😍😍😍
நாகா பற்றி என் மனதிற்கு பட்டதை சேர்த்து எழுதி இருக்கேன்..சிஸ்டர்
 
Excellent review ma :love: :love: :love: :love:
ஒவ்வொரு character ரையும் அருமையா சொல்லிட்டீங்க.
இனி மருதாணினா மிஸ்ஸ் மயிலாஞ்சி நியாபகம் தான்.

நாகா பற்றி என் மனதிற்கு பட்டதை சேர்த்து எழுதி இருக்கேன்..சிஸ்டர்
Thanks ma... nice to read ...😍😍😍
 
Top