Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 7

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 7 (1)

ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 7 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
:love::love::love:

எதுக்குய்யா இவ்ளோ பேர்...... இதுவும் இந்த மூதேவி உத்ரா :mad::mad::mad:
அக்கானாலும் அளவோட வச்சுக்கணும்.......
அவன் பொண்டாட்டி கிட்ட இறங்குனா என்ன ஏறினா என்ன.......
மூடிக்கிட்டு போடி தான்........

கேளுங்கடா மருமகளும் மருமகனும் நல்லா நாக்கு புடுங்குற மாதிரி.......
பொண்ணோ பையனோ தப்பு செஞ்சா மருமகன் மருமகள் முன்னாடி தப்பு னு சொன்னால் இந்தம்மாக்கு என்ன கௌரவம் குறைஞ்சுடுமா???
ஊரே சிரிக்கிறதுக்கு வீட்டுக்குள்ளேயே பேசுறது பெட்டெர் தானே.......

நல்லா வளர்த்துவிட்டிருக்காங்க உங்க வீட்டுல :p:p:p
மருமகன்கள் சொன்னால் தான் வாயை பொத்திகிட்டு நிப்பாங்க.......
இதே வார்த்தையை மருமகள் சொல்லட்டும் ஆடி அலங்கோலம் பண்ணிடுவாங்க.......

யோவ் ருக்மணி அப்படியே கிளம்பி போம்மா.......
உன்னை மாதிரி அம்மாக்களாலேயே புள்ளைங்க கெட்டு போய்டும்.......
வாழ வந்த பொண்ணை தொரத்திவிட்டுட்டு பெரிய மானம் மருவாதி.......

சரி தான் கண்ணன் முடிவு.........
பூவி நல்லா யோசிச்சு முடிவெடுக்கட்டும்.........
இன்னொரு முறை வந்தால் உங்க கிட்ட வரமாட்டேன்னு சொல்ற அளவுக்கு மனசொடிஞ்சு போய்ட்டா........
அவளை அவள் வழியில் விடுங்க.......
மன்னிப்பு கேட்ட வீட்டுக்காரர் கிட்ட அவளே போவா.........

இந்த மூதேவி இனி வந்தால் :mad::mad::mad:
 
Last edited:
அடிப்பாவி...உத்ரா என்ன வார்த்தை சொல்லியிருக்கா????.உத்ரா,இதயாவ சொல்லக்கூடாத வார்த்தைய சொல்லியிருக்கா,அதை கேட்டும் ரெண்டுஅறை விடாம இந்த ருக்மணி பேசாம இருந்திருக்கு,மகளுக்காக மகன் கிட்டயும் நடந்ததை சொல்லலை என்ன ஜென்மமோ???.

வேலவன் அவ்வளவு சொல்லி கூப்பிட்டு வந்தும் உத்ரா இதயா வீட்டுக்கு வந்ததும் தன்னோட ஆட்டத்தை ஆரம்பிக்கறா????.அம்மாவும் தான் சொன்னத சொல்ல மாட்டாங்க,இதயாவும் இதுவரை எதுவும் சொல்லலைனு அலட்சியமா வந்தவளுக்கு,இதயா அவகிட்ட கேட்டதுக்கு பதில் சொல்லாம பேச்சை மாத்த,உண்மை தெரிந்த வேலவன் கொடுத்த அறையெல்லாம் பத்தாது???.

மாமியார்னாலே எல்லாம் அப்படித்தான்னு வேலவன் சரியா சொன்னார்.மகள் செய்யற தப்பை மறைக்கறது,மருமகள் செய்யறதா பெருசாக காட்டறது ருக்மணியும் அப்படி தான்???.மருமகன்
கேள்வி கேட்கவும் பதில் சொல்ல முடியாம வாயடைச்சிருச்சு....

இவ்வளவு நடந்தும் எங்க ரெண்டு பேருக்குள்ள சண்டைய கொண்டு வந்துட்டேன்னு சொல்லுதே உத்ரா,இதால இவங்க பிரிஞ்சிருப்பது தெரியலையா??."நல்லா வளத்திருக்காங்க உங்க வீட்ல"
வேலவன் இனி தன் ஆட்டம் ஆரம்பம்னு சொல்லிட்டார்.உத்ராவின் நிலை????.

சிவசுந்தரம்,வேலவன் இருவரும் தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டு விட்டனர்.ருக்மணி நடந்தது தெரிந்தும் இதயாவுக்கு ஆதரவாக பேசாமல் மகளுக்காக மௌனமாக இருக்கார்...மகன் பேச வேண்டிய நேரத்துல பேசலைனு திட்டிய ருக்மணி,சொல்ல வேண்டியதை மறைத்ததால்
கண்ணன்,இதயாவின் நம்பிக்கையை இன்று இழந்து விட்டான்???.
 
Last edited:
ரொம்பவே நெஞ்சம் கனமான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

அவங்க இஷ்டத்துக்கு மாப்பிள்ளை வீட்டில் கல்யாணத்தை நிறுத்தினால் சரிதான் ராஜான்னு பெண் வீட்டினர் அவ்வளவு ஏற்பாடுகளையும் நிறுத்தணுமா?
எவன் அப்பன் வீட்டுப் பணம் வேஸ்ட்டாகுறது?

பணத்தை விடுங்க
நிச்சயம் செய்த கல்யாணம் நின்று போனால் அந்த பெண்ணுக்கு எவ்வளவு அவமானம்?
நாக்கில் நரம்பில்லாமல் எத்தனை கேள்விகள் கேட்பாங்க?

இதையெல்லாம் சகிக்க முடியாமல் எந்த தப்பும் செய்யாத அந்த பெண் மாப்பிள்ளையின் வீடேறி வந்து நியாயம் கேட்டு அவனையே கல்யாணம் பண்ணினால் இப்படி அவளை அவமானப்படுத்துவாங்களா?

என்ன சமாதானம் சொன்னாலும் தம்பியைக் கல்யாணம் செஞ்சு வீட்டுக்கு வாழ வந்த பெண்ணிடம் அக்கா உத்ரா இப்படி பேசியது ரொம்ப ரொம்ப தப்பு
இன்னும் வேற என்னமோ இருக்கும் போலிருக்கே

மகள் பேசியதுக்கு சப்போர்ட் செஞ்சு பேசாமலிருந்த ருக்மணி அன்னிக்கு மறந்த மகனின் வாழ்க்கையை இப்போ மட்டும் எதுக்கு நினைக்கிறாள்?

ஒருவேளை பொண்ணுக்காரி சொன்ன மாதிரி பூவிதயா மகனை டைவர்ஸ் பண்ணிடுவாள்ன்னு எதிர்பார்த்திருந்தாளோ?
ருக்மணியும் மாமியார் வேலையைக் காட்டிட்டாள்

மொத்தத்தில் கண்ணனின் நிலைமைதான் பாவம்ன்னு சொல்ல மாட்டேன்
இவனுக்கு இன்னிக்கு வந்த வீரம் அன்னிக்கே என்ன நடந்தது ஏதுன்னு கேட்டு பைசல் பண்ணியிருக்கணும்

இனி அடுத்து என்ன?
இதையெல்லாம் கேட்டு அய்யாசாமிக்கு இன்னும் உடம்புக்கு வந்து விடுமோ?

இதுக்குத்தான் ஒரு கல்யாணத்தை நிச்சயம் செஞ்சால் ரொம்ப கேப் விடாமல் எப்படியாவது சட்டுபுட்டுன்னு கல்யாணம் செஞ்சிடணும்

இதே கல்யாணம் ஆன பின்னாலே கண்ணபிரான் கலெக்டரா செலக்ட் ஆகியிருந்தால் பூவிதயா வந்த ராசின்னு கொண்டாடியிருப்பாங்க
 
Last edited:
ரொம்பவும் கனமான பதிவு....
மகள்,மருமகள் ரெண்டு பேரில் மகள் உசத்தி தான்...
ஆனால் மருமகள் அழுதாள் மகனை பாதிக்கும் என்று ஏன் ருக்மணி அம்மா நினைக்கவில்லை.....
கண்ணன் நிலை.....பூவி :unsure: :cry::cry:
 
Last edited:
Top