Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சட்டென மாறுது வானிலை-18

Advertisement

praveenraj

Well-known member
Member
தருணிடம் பேசியபின் கதிரவனுக்குச் சொல்லமுடியாத ஒரு உணர்வு ஆட்கொண்டது. அவன் இதயம் மிகவும் வேகமாய்த் துடித்துகொண்டு இருக்க,'இதெல்லாம் இவன் எப்படிக் கண்டுபிடிச்சான்? நானும் அசோக் சௌனியும் நேர்ல கூடச் சந்திக்கறதில்ல? இதுல நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து அனுப்பின ஆள் வர இவனுக்கு எப்படித் தெரியும்? அண்ட் இன்னொன்னும் சொன்னானே அன்னைக்கு இன்னொரு கேங் வந்ததாமே? அது யாராக இருக்கும்? இந்திரன் அட்டகட்டியில் இருக்கும் விஷயமே வெகு சிலரைத் தவிர யாருக்கும் தெரியாத பட்சத்தில் இது யாரு புது ஆளு? அதும் கல்கத்தாவுல இருந்து எப்படி அசைன் மென்ட் போச்சு? யாரது?' என்று எதுவுமே புரியாமல் இருந்தவனுக்கு,'ஒருவேளை அந்த அசோக் சௌனியே எனக்குத் தெரியாம இன்னோரு கேங்கை அனுப்பியிருப்பானோ? இல்ல இமையவர்மன் சந்தேகப்படுற மாதிரி சந்திரவர்மன் அனுப்பியிருப்பாரோ?' என்று அனைத்து பெர்முடேசன் அண்ட் காம்பினேஷனையு௭ம் யோசிக்க அவனுக்கு ஏனோ மனமே சரியில்லை. எதிர்பார்த்தபடி ஒரு திட்டம் வகுத்து அதைச் செயல்படுத்திக்கொண்டு இருக்கும் போது சம்மந்தமே இல்லாமல் குறுக்கே வருவது யார்? எதற்கு? இந்திரன் அட்டகட்டியில் இருந்தது அவர்களுக்கு எப்படித் தெரியும்? என்று குழம்பினான்.

'இந்தக் குழப்பம் ஒருபுறம் இருக்க இதில் இந்த தருண் வேறு தான் எதிர்பார்த்தத்தைக் காட்டிலும் ஓவர் ஸ்மார்ட்டாக இருக்கிறானே? இவனுக்கு வேறு எல்லாமும் தெரிந்துவிட்டதே. இவனாலும் ஏதேனும் ஆபத்து வருமா? ஒருவேளை இவன் எதாவது டபிள் கேம் விளையாடி விட்டால்?'

'இதற்கு நடுவில் இந்த தாமோதரன் எதற்கு தயாளனை மீட் பண்ணாரு? அந்தக் கிழட்டு புலி(தாமு) வேற என்ன பிளான் பண்ணுது? அந்த ஆள் ஏதாவது தில்லுமுல்லு செய்றாரோ? ஐயோ எனக்கு இப்போ மண்டையைப் பிச்சிக்கலாம்னு இருக்கே?' என்று நினைத்தவன் மனதில் ஆயிரம் குழப்பங்கள் வந்து சேர அவனும் அடுத்த இரண்டு நாளில் நடைபெறும் விழாவிற்குத் தயாரானான். இதற்கு நடுவில் அன்று சகுந்தலா வேறு அவனிடம் சொன்னது அரைகுறையாக நினைவுக்கு வர,'என்ன கனவு ஏன் இப்போ?' என்று யோசித்தான். அவன் என்ன தான் அன்று சாதரணமாக சகுந்தலாவிடம்,"இந்தக் காலத்தில் போய் கனவு அது இதுனு நம்புறீங்களே அம்மா?" என்று கிண்டல் சொன்னாலும் கனவுக்கான உண்மையான காரணத்தை இன்னும் அறிவியல் ஆராய்ச்சிகளே தெளிவுபடுத்த முடியவில்லையே? ஆனால் ஒன்று உண்மையில் தொன்றுத்தொட்டே இந்தியப் பண்பாட்டில் கனவுக்கென்று ஒரு இடம் இருக்கத்தான் செய்கிறது.. நல்லது பலிக்கிறதோ இல்லையோ தீயவை நிச்சயம் நடக்கிறது. புத்தரின் வாழ்வைப் பற்றி அவர் அன்னைக்கு ஏற்பட்டதாகச் சொல்லுப்படும் கனவு, சீசரின் மனைவிக்கு வந்த கனவு, சிலப்பதிகாரம் கண்ணகி கண்ட கனவு என்று கனவுக்கென்று ஒரு தனி பயமும் மரியாதையும் இவ்வுலகில் அனைத்து சமூகத்திலும் இருக்கிறது தான்.

இங்க சில விஷயங்கள் மனிதனின் சக்திகளுக்கும் ஞானத்திற்கும் அறிவுக்கும் கண்டுபிடிப்புக்கும் அப்பால் தான். அதை இயற்கை அடிக்கடி நினைவூட்டி அதைப் பறைச்சாற்றிக்கொண்டு தான் இருக்கிறது. கதிரவனின் அன்னையிடமிருந்து தான் அழைப்பு வந்தது. கொஞ்சம் பேசியவன் அமைதியாக யோசித்தான்.

இன்று, இந்திரனின் பதவியேற்பு விழா:

சரியாக விழா தொடங்குவதாக அறிவிக்கப்பட்ட நேரத்திற்கு சற்று முன் இந்திரன் இமையவர்மன், சகுந்தலா, கமலேஷ், கதிரவன் எல்லோரும் வர அவர்களுடனே மாதுளையும் வந்தாள். புதிதாக அந்தக் குடும்பத்தோடு ஒரு பெண் வருவதைக்கண்ட சந்திரவர்மன் யாராக இருக்கும் என்று புரியாமல் பார்க்க அவரையும் கோகிலாவையும் எப்படி எதிர்கொள்வதனென்று புரியாமல் விழித்த சகுந்தலா ஏதும் பேசாமல் செல்ல பின்னாலே வந்த கமலேஷ் அவர்களைப் பார்த்து மெலிதாகச் சிரிக்க அவரும் சிரித்து வைத்தார். அதன் பின் வந்த இந்திரன் எல்லோரையும் பார்த்துக்கொண்டு வர அப்போது தன் சித்தி சித்தப்பாவைப் பார்த்தவன் அவர்களை நோக்கிச் செல்ல அவன் வருவதைக் கண்ட சந்திரவர்மன் கோகிலா இருவரும் அவனிடம் சென்றனர். இருவருக்கும் நடுவில் நின்று அவர்களோடு பேசிக்கொண்டிருந்த இந்திரனை இப்போது அங்குக் கூடியிருந்த எல்லோரும் வியப்பாகவே பார்க்க ஏனோ இதைப் பார்த்த இமையவர்மனுக்கு அதீத கோவம் வந்தது. இருந்தும் எதையும் காட்டாமல் சென்று மேடையில் அமர்ந்தார். அப்போது இந்திரனின் 'டை' (tie) சரியாக இல்லாமல் இருக்க அதைச் சரிசெய்த சந்திரவர்மன்,"போ இந்திரா. எல்லோரும் உனக்காகத் தான் வெயிட்டிங்..." என்றார்.

"அது வந்து... சாரி சித்தப்பா. எனக்கு..." என்று அவன் சொல்லத் தொடங்கும் முன்,"பிசினஸ் வேற பேமிலி வேற. போ..." என்று அவர் சொல்ல அங்கே மாதுளை மட்டும் தான் அவர்களை விந்தையாகப் பார்த்துக்கொண்டு இருந்தாள். பின்னே இமையவர்மன் சந்திரவர்மன் இருவரும் பார்க்க ஒன்றுபோலவே இருக்க அவளுக்கு முதலில் ஒன்றுமே புரியவில்லை. அதற்குள் அவள் சென்று அங்கிருந்த இருக்கையில் அமர அவளின் குழப்பதைப் பார்த்த சகுந்தலா தான்,"என்ன பாக்கற? இந்திரனோட அப்பாவும் சித்தப்பாவும் ட்வின்ஸ். இருவது நிமிட இடைவேளையில் பிறந்தவர்கள்..." என்று சொல்ல, தன்னைத்தவிர யாரும் ஆச்சரிப்படவில்லை என்பதை அப்போது தான் கவனிக்கிறாள். ஒருவேளை பிசினெஸ் மேக்ஸைன்ஸ் படிப்பவளாக இருந்தால் அவளுக்கு இதெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பிருந்திருக்கும்.

அந்த விழா மேடையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருந்தனர். இமையவர்மனோ சந்திரவர்மனுக்கு சரியான பதிலடி கொடுத்ததை நினைத்து சந்தோசம் கூடவே வேதனை இரண்டும் கலந்த மனநிலையில் இருக்க, சகுந்தலாவோ இப்படி தன் கணவர் இதுவரை வீம்பு பிடிவாதம் ஏதும் பிடிக்காதவர் இன்று இந்த எல்லைக்கு வந்துவிட்டாரே எண்ணி வருந்தினார். இந்திரனோ போன முறை தான் இந்த குழுமத்தின் ceo பதவியை ஏற்கும் போது தனக்காக எதிரில் இருந்து கைத்தட்டி வாழ்த்துக்கூறிய சிந்து மற்றும் ஸ்ரீ இருவரையும் காணாது அந்த நாளின் நினைவு வந்து தாக்க அதனூடே இதில் இப்படி தன் சித்தப்பாவின் குடும்பத்தோடே மோதும் நிலைக்கு தன் தந்தை இறங்கிவிட்டாரே என்று தோன்ற, இவ்வளவு கிரேண்டான விழாவை இதுவரை கண்டிடாத மாதுளை அதன் பிரமாண்டத்தில் உறைந்து இருக்க, மாலை வந்ததிலிருந்து தன்னையே ஒரு மாதிரி பார்த்துக்கொண்டு இருக்கும் தாமோதரனின் பார்வையைச் சமாளிக்க முடியாமல் இருந்தான் கதிரவன்.

எல்லோரிடமும் உரையாடிவிட்டு டின்னர் ஏற்பாடு செய்திருக்க அவர்கள் அனைவரும் சாப்பிடச் சென்றனர். அங்கே வந்திருந்த எல்லோரையும் பார்த்துக்கொண்டு இருந்தாள் அவள். அவளின் பார்வையைப் பார்த்த சகுந்தலா,"என்ன பார்க்குற மாதுளை? நீ இந்த மாதிரி எல்லாம் விழாவுக்கு வந்ததில்லையா?"

பதிலுக்கு அவள் எதையோ சொல்ல புரியாமல் தவித்த சகுந்தலாவிற்கு ஆபத்பாந்தவனாக வந்தான் கதிரவன்.

"அது ஒன்னுமில்ல அம்மா இந்த மாதிரி பெரிய பெரிய இடத்திற்கு எல்லாம் வந்ததில்லையாம் அவங்க. அதைத் தானே சொல்றீங்க?" என்று கேட்டான் கதிரவன்.

ஆம் ஆம் என்று தலையை ஆட்டினாள் மாதுளை.

"ஆமா நீங்க எங்க ஊரு? ஐ மீன் உங்க அப்பா அம்மா எந்த ஊரு?" என்று கதிர் அவளைக் கேட்க சட்டென அவளின் முகம் மாறியதும் கதிரவனை முறைத்தார் சகுந்தலா.

"இல்லம்மா சும்மா தான் கேட்டேன்..." என்று சொல்ல, அவளோ அமைதியாகச் சாப்பிடும் வேளையில்,

"பெங்களூர்ல படிச்சிருக்கீங்க! ஆனா mba பாதியிலே டிஷ்கண்டினு பண்ணியுருக்கீங்க ஏன்?" என்றதும் அவளுக்கு அதிர்ச்சியில் புரையேறியது.

"என்ன கதிரா சொல்ற? இந்தப் பொண்ணு mba படிச்சிருக்கா?"

"எதுவுமே தெரியாதா அம்மா உங்களுக்கு? அதெப்படி யாரு என்னனு கேட்காமலே கூடச் சேர்த்துக்கிட்டிங்க? நீங்க எல்லோரையும் ரொம்ப தான் நம்புறீங்க..." என்று மாதுளையைப் பார்த்தபடியே அவன் சொல்ல,

அப்போது வந்த தாமோ,"ஆமா மேடம் நீங்க எல்லோரையும் ரொம்ப நம்புறீங்க. நீங்க மட்டுமில்ல ஐயாவும் தான் யாரை யாரையெல்லாம் நம்பனும்னு ஒரு விதிமுறை இருக்கு..." என்றவர்,"என்ன கதிரவன் நான் சொல்றது சரிதானே?" என்று கேட்க,

"ஆமா... இல்ல சார்..." என்று அவன் திணற,"கதிரா இங்க வா" என்று இந்திரன் அழைத்ததும் உடனே அந்த இடத்தைவிட்டுச் சென்றான்.

"அண்ணா அந்தப் பொண்ணு படிச்சிருக்கா?" என்று மாதுளையைப் பற்றி சகுந்தலா தாமுவிடம் கேட்டார்.

"ஆமா மேடம். பேரு மாதுளை. ஆக்சிடெண்ட்ல அவ அம்மா அப்பா ரெண்டு பேரும் செத்துப்போயிருக்காங்க. அம்மா ஹவுஸ் வைப்பா இருந்திருக்காங்க. அப்பா ஒரு ஆட்டோமொபைல் நிறுவனத்துல வேலை செஞ்சிருக்கார். ஒத்தபுள்ள. வேறெதுவும் தெரியில..."

"அவளால பொறந்ததுல இருந்தே வாய் பேசமுடியாதா?"

"தெரியில மேடம். சொந்தக்காரங்கனு யாருமில்ல. இறந்த சித்தன் இந்தப் பொண்ணுக்கு பாட்டன் முறை ஆகணும். அதைத்தவிர ஒன்னுமே கிடைக்கல. விசாரிக்கச் சொல்லியிருக்கேன்..." என்று தாமோ சொல்ல,

"எப்படி தாமோ அண்ணா இவ்வளவு விஷயம் கண்டுபிடிச்சிருக்கீங்க?"

சிரித்தவர்,"யாரு என்னனு தெரியாம எப்படி நம்ம கூடச் சேர்க்கிறது? அதுதான் மேலோட்டமா விசாரிக்கச் சொன்னேன்..."

"ஓ அப்போ உங்க எல்லோருக்கும் இந்தப் பெண்ணைப் பத்தி தெரிஞ்சிருக்கு. அதனால தான் நான் கூட்டிட்டு வந்ததுக்கு யாருமே எதையும் சொல்லலனு சொல்லுங்க..." என் தன்னுடைய ஆற்றாமையை சகுந்தலா சொல்ல,

மீண்டும் சிரித்தார் தாமு.

"அப்றோம் தாமோ அண்ணா, இதெல்லாம் தேவையா? எதுக்கு வீணா பங்காளிங்க கூடச் சண்டை போடணும்? இதெல்லாம் நீங்க உங்க ஐயாவுக்குச் சொல்ல மாட்டிங்களா?"

"அப்படியில்ல மேடம். என்ன தான் நான் சொன்னாலும் முடிவு எடுக்கறது அவரு தானே? அவரு சொன்னா நான் செய்யணும். எதிர்த்துப் பேச முடியாதே? அது முறையும் இல்லையே?"

"தப்பில்லை தான். ஆனா எது நல்லது எது கெட்டதுனு ஒரு வரைமுறை இருக்கு இல்ல? நான் இழந்த வரை எல்லாம் போதும்..." என்று சொல்லி ஒருநிமிடம் அமைதியான சகுந்தலா,"இனியும் நான் சண்டை போடவோ பகையை வளர்க்கவோ எல்லாம் தயாரா இல்ல..."

"புரியுது மேடம். ஆனா இந்த விஷயத்துல அவரு ரொம்ப தீவிரமா இருக்காரு. பொதுவா எதைப்பற்றி முடிவெடுக்கறதுனாலும்,"என்ன தாமோ இது சரிவருமா? நாம செய்யலாமானு?" தான் கேட்பாரு. ஆனா இந்த விஷயத்துல மட்டும் என்னைக் கூப்பிட்டு இதெல்லாம் செய்யணும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம்னு சொன்னாரு..."

"எப்போ?"

"ஒரு மூணு மாசம் முன்னாடி..." என்று சொன்ன தாமோவையே தீர்க்கமாகப் பார்த்தார் சகுந்தலா.

"அப்போ மூணு மாசமா இதற்கான வேலைகள் எல்லாம் நடந்து முடிந்து தான் எங்களுக்கே இதைப்பற்றிச் சொல்லணும்னு தோணுச்சு இல்ல அண்ணா உங்களுக்கு?"

"மன்னிச்சிடுங்க மேடம். சில உத்தரவுகளை என்னால மீற முடியாது..."

"அதுதான் தெரியுதே? அந்தப் பொண்ணைப் பத்தி விசாரிக்க வேணாம்னு சொல்லியும் எல்லாம் நடந்திருக்கே?"

அவர் சிரிக்க எதேர்சையாக அங்கே கதிரவனும் இந்திரனும் சிரித்துக்கொண்டும் பேசிக்கொண்டும் இருப்பதைப் பார்த்தவர்,"எப்படியாவது இவன் வாழ்க்கை மாறுனா சரி. எனக்கு ரொம்ப பயமா இருக்கு அண்ணா..." என்று வருந்தினார் சகுந்தலா.

"அதெல்லாம் ஒன்னும் கவலையே வேணாம். இந்திரன் தம்பியைப் பத்தி எனக்குத் தெரியும். சீக்கிரம் எல்லாவற்றிலும் இருந்து வெளிய வந்திடும் பாருங்க. இப்போதான் சிரிக்க ஆரமித்து இருக்காரு போக போக எல்லாம் நடக்கும். கவலையை விடுங்க..." என்று அவரைத் தேற்ற முயன்றார் தாமோ,

வெற்றுப்புன்னகையை உதிர்த்த சகுந்தலா,"அவன் உண்மையிலே சிரிக்கிறானு நீங்க நெனைக்கறீங்களா அண்ணா?" என்று சொல்லிவிட்டு அவர் சென்றுவிட இப்போதும் மீண்டும் இந்திரனை உற்றுப் பார்த்தவர் ஒன்றும் புரியாதவராய் சகுந்தலாவைத் தேடிச் செல்ல,

"என்ன அண்ணா?"

"ஏம்மா அப்படிச் சொன்ன?" என்று ஒரு அண்ணனாகவே வினவினார்.

"மனசார சந்தோசமா சிரிப்பதற்கும் வெறும் உதட்டுல சிரிப்பைக் காட்டுறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்குண்ணா. அவன் என் பையன். அவனைப் பிறந்துல இருந்து எனக்குத் தெரியும்..."

"அப்போ தம்பி?"

"எனக்காக நடிக்கிறான். நான் கேட்ட சத்தியத்துக்காகச் சிரிக்கிறான். அவன் உண்மையிலே இப்போதான் ரொம்பவும் கஷ்டப்படுறான். உள்ள ஒரு மாதிரியும் வெளிய எனக்காகவும் ரொம்ப நடிக்கிறான். அவன் இந்த நாலு நாளா ரொம்ப பாவம். அவன் வேற ஏதோ திட்டம் போட்டுட்டான். அது என்னனு எனக்குப் புரியில. முடிஞ்சா கொஞ்சம் எனக்காக அதைக் கண்டுபிடிங்க . கதிரவனைக் கேட்டா தெரிய வாய்ப்பிருக்கு..." என்று சொல்லிவிட்டு அவர் செல்ல தாமோ மீண்டும் சீரியஸ் மோடிற்கு சென்றார்.

அவருக்கு இந்திரன், சகுந்தலா கவலையைக் காட்டிலும் இவர்கள் எல்லோரும் இந்தக் கதிரவனை இவ்வளவு நம்புகிறார்களே என்று ஆத்திரம் கொண்டார். மேலும் தயாளனுக்கு ஆக்சிடென்ட் ஆனதைப் பற்றி தாமுக்குத் தெரிந்தது. கூடவே கதிரவனும் தன்னைப் பின்தொடர ஆளை வைத்துள்ளான் என்றும் அது தருண் என்றும் தெரிவந்தது. சொல்லப்போனால் தன்னைக்காட்டிலும் அதிவேகமாக இயங்கும் கதிரவனை நினைத்து பயமும் வந்தது. அவனைக் கையும் களவுமாகப் பிடிக்க சரியான ஆதாரங்களுக்காகக் காத்துக்கொண்டு இருக்கிறார் தாமோதரன்.

இங்கே ஒருவர் இன்னொருவருக்குத் தெரியாமல் பல வலைகளைப் பின்னியுள்ளார்கள். பின்னிக்கொண்டும் இருக்கிறார்கள். யார் வலையில் யார் மாட்டுவார்களோ? பார்ப்போம்...

****************

அந்த நாளுக்குப் பிறகு ஸ்ரீயும் இந்திரனும் இன்னும் நெருக்கமாகி இருந்தனர். முன்பைப் போல இந்திரனைப் பார்க்கவோ இல்லை அவனிடம் பேசவோ எல்லாம் அவள் துளியும் அஞ்சவில்லை. வெகு சாதாரணமாக இருவரும் உரையாடிக் கொண்டனர். உரையாடல் மட்டுமின்றி ஒரு காதலர்களாகவே அவ்வீட்டில் உலா வந்தனர். ஒவ்வொரு விஷயத்திலும் ஸ்ரீ இந்திரன் மேலுள்ள காதலை உணர்த்த அதற்கு ஈடாக அவனும் அவன் காதலை உணர்த்திக்கொண்டு இருந்தான். அவர்களின் தொடுதல் அதிகமாகியிருந்தது. அடிக்கடி அவளை முத்தமிட்டு அவளை நிலைக் குழைய செய்துவிடுவான் அவன். எவ்வளவோ மறுத்தும் அவனுக்காக எல்லாமும் அவள் தான் செய்வாள். அதன் பின் அவன் எழுந்து நடக்கவே ஒரு மாதம் ஆகும் என்று சொன்னதால் அவனுக்கு தினமும் காலையும் மாலையும் வந்து அவனுக்கானப் பணிவிடைகளை அவளே செய்வாள் . பகலில் கல்லூரிக்குச் சென்றாலும் இரவும் இங்கேயே தங்கிக் கொள்வாள். இது சிந்து மட்டுமின்றி சகுந்தலா இமையவர்மன் ஏன் ஸ்ரீயின் தந்தைக்கும் கூடத் தெரிந்தது. மேலும் இவர்களின் காதலும் அவர்களின் நடவடிக்கைகளில் நன்கு புரிந்தது. ஒருநாள் இந்திரனே ஸ்ரீயிடம்,"லேக்கு பேபி அது ஏன் மத்த நேரமெல்லாம் நார்மலா இருக்க எனக்கு ட்ரெஸ்ஸிங் பண்ணும் போது மட்டும் மூஞ்சி தொங்கிப் போயிடுது? கண்ணுல நீர் கோர்த்துக்குது?" என்று கேட்டு விட்டான். அவன் இதுநாள் வரை அவளிடம் கண்டவற்றை கேள்வியாகவே கேட்டுவிட பொலபொல வென கண்களில் இருந்த கண்ணீர் வெளியேற அவளை அருகில் அழைத்து அவன் கைவளைவுக்குள் வைத்துக் கொள்ளவும் அவள் விசும்பி,"என்னால தானே உங்களுக்கு இப்படி ஆச்சு?" என்று குழந்தையாய்ச் சொல்ல அவளுக்கு இன்னும் குற்றயுணர்ச்சி தீரவில்லை என்று புரிந்தவன்,"நான் லூசு மாதிரி பைக்கை ஓட்டிட்டுப் போய் விழுந்தா அதுக்கு நீ எப்படி லேக்கு பொறுப்பாவ?" என்றவன் அவளைச் சமாதானப்படுத்த முயன்றான்.

"அன்னைக்கு நான் உங்களை ரொம்பவும் ஹர்ட் பண்ணிட்டேன்..." என்று சொல்லி முடிக்கும் முன்னே அவள் இதழ்கள் பூட்டப்பட்டிருந்தது. சில வினாடிகளில் அதை விடுவித்தவன்,"அப்படிப் பார்த்தா என்னால தானே நீ ரொம்ப ஹர்ட் ஆகியிருக்க லேக்கு... அதுக்கு நான் தானே காரணம்?" என்று சொல்ல,

"இல்ல நான் தான்..." என்று அவள் சொல்ல அவளை இன்னும் நெருங்கி அமர்ந்தவன்,"ஸ்ரீ என்னைப் பாரு..." என்று அவள் முகத்தைக் கையில் ஏந்தி,"எல்லாமே நல்லதுக்கு தான்னு சொல்லுவாங்க இல்ல? இதுவும் நல்லதுக்கு தான். அதனால் தான் என்னால் உன் காதலைப் புரிஞ்சிக்க முடிஞ்சது. எனக்காக ஒவ்வொன்னும் நீ பார்த்து பார்த்து செய்யுறதுல அவ்வளவு காதல் இருக்க லேக்கு. அதை நான் கண்கூடப் பார்க்கிறேன். இல்லை உணருறேன். இப்போ சொல்லு, அப்படிப்பார்த்தா இது நல்லது தானே? நீ என்கூடப் பேசுவியானது நான் எதிர்ப்பார்த்த நாள் போய் இப்போ நீ எனக்கு இவ்வளவு கிட்ட இருக்கறது நினைக்கையில் மனசு எல்லாம் சிலிர்க்குது ஸ்ரீ. ஆமா நீயேன் இப்போல்லாம் டேன்ஸ் க்ளாஸ் கூடப் போறதில்லை?"

"போல..." என்று சுரத்தையே இல்லாமல் அவள் பதிலுரைக்க,

"அது தான் தெரியுதே நீ போலன்னு... ஏன்?"

"நான் போனா யாரு உங்களைப் பார்த்துக்கறது?"

"இருந்தாலும் அது தானே உனக்கு விருப்பம் சந்தோசம் எல்லாம்?"

"நான் ஸ்டுடென்ட் இல்ல டீச்சர். உங்களுக்கு அது ஞாபமிருக்கா மிஸ்டர் இஜித்?" என்று கேலியாக விரலை நீட்டி வினவ,

அவள் விரலைச் செல்லமாகக் கடித்தவன்,"அது தெரியும். அதுனால தான் கேட்கறேன்? கிளாசுக்கு ஸ்டுடென்ட் வரலைனா பெரிய விஷயம் இல்ல ஆனா டீச்சரே வரலன்னா தப்பா இருக்காதா?" என்று புருவம் உயர்த்தினான்.

"நான் ஏன் க்ளாஸ்க்கு போறதில்லை சொல்லுங்க?" என்று வினவினாள் ஸ்ரீ.

"ஏன்னா நீ என்னைக் கவனிச்சிக்குற... அதுனால"

"இல்லை..." என்று அவள் மறுக்க,

"ஏன்? ஆன்செர் இது இல்லையா?"ஏ என்று அதிர்ந்தான்.

"நான் ஏன் எனக்குப் பிடிச்ச டேன்ஸ் க்ளாஸ் எடுக்கப் போறதில்லைனா எனக்கு ரொம்ப பிடிச்ச என் இஜித் கூட டைம் ஸ்பென்ட் பண்ண தான்... எனக்கு டேன்ஸ் சொல்லித்தரும் போது இருக்கும் சந்தோஷத்தைக் காட்டிலும் இப்போ நான் உங்க கூட இப்படி..." என்று அவர்கள் அமர்ந்திருக்கும் தோரணையைச் சுட்டியவள்,"உங்க கூட இப்படி இருக்கறது தான் ரொம்ப பிடிச்சிருக்கு..." என்று சொல்லி கண் சிமிட்ட,

நெருங்கியவன் அவள் மூக்கோடு அவன் மூக்கை உரசி, அவன் முன் நெற்றியால் அவள் நெற்றியைச் செல்லமாக முட்டிவிட்டு,"இப்படியே லைப் புல்லா இருந்தா எப்படி இருக்கும்?" என்று அவன் சொல்ல,

"ரொம்ப கேவலமா இருக்கும்..." என்று ஸ்ரீ வாயைத் திறக்கும் முன்னால் கவுண்ட்டர் வந்தது. இருவரும் யாரென்று பார்த்தால் அவளே தான் வந்திருந்தாள். அவள் சிந்துஜா.

உடனே அவனிடமிருந்து விலக முற்பட்டவளை இறுக்கிப் பிடித்தவன்,"இப்படித் தான் மேனர்ஸ் இல்லாம ஒரு கபிள்ஸ் ரூம்குள்ள நுழைவியா குட்டிம்மா?"

"டேய் டேய் டேய் அடங்குடா... கால் ரெண்டு பிரெக்ஸர் ஆகி இருக்கும் போதே இப்படி ஒட்டிக்கிட்டு இருக்கீங்கன்னா உன் கால் மட்டும் நல்லா இருந்திருந்தா இந்நேரம் என்னவெல்லாம் பண்ணியிருப்ப? மகனே இன்னும் உங்க சமாசாரம் வீட்டுல யாருக்கும் தெரியாது பார்த்துக்கோ?" என்று சொல்ல ஸ்ரீ முகம் உண்மையில் கலவரமடைந்தது.

"நீயேன்டி பதறுற? உன்னைத் தான் இந்த வீடே நல்ல பொண்ணுன்னு நம்புதே! இதுல இந்த அம்மா வேற ஆவுனா ஸ்ரீ மாதிரி இருக்க கத்துக்கோனும் 'எப்படி உங்க அண்ணனுக்கு எல்லாம் பார்த்து பார்த்து செய்யுறானு' அட்வைஸ் வேற? உங்க கதை தெரியட்டும் அப்றோம் இருக்கு..." என்று இருபொருள் படவே சொல்லிவிட்டு,"இவ்வளவு பேசுறேன் இன்னும் ஒட்டிக்கிட்டே இருக்கீங்க ரெண்டு பேரும்? ஏ சீ எட்டிப்போங்க..." என்று அவர்களை விலக்கினாள். அப்போது ஸ்ரீயின் முகத்தை அவள் கவனிக்கவும் தவறவில்லை. அவள் வருத்தத்துடன் கீழே சென்றுவிட இந்திரன் தான் சிந்துவிடம்,"ஏன் இப்படிப் பண்ண சிந்து? பாரு அவ முகமே சுருங்கிடுச்சி..." என்று கடிந்து கொண்டான்.

"ஏன் பேசமாட்ட? அம்மாக்கு இன்னும் இந்த விஷயம் தெரியாது. ஒருவேளை அம்மாக்குத் தெரிஞ்சா உனக்கு ஒன்னுமில்லை... ஆனா ஸ்ரீயைப் பத்தி நெனச்சியா? அவளுக்கு அம்மாவை ஹர்ட் பண்ணறது சுத்தமா பிடிக்காது..."

"அம்மா ஏன் ஹர்ட் ஆகணும்? நாங்க தான் லவ் பண்றோமே?"

"அதை முதல வீட்டுல சொல்லுற வழியைப் பாரு ப்ரோ. ஒருவேளை அப்பாவோ இல்ல வீட்டுல வேலை செய்யுற யாரோ உங்களைப் பார்த்தா? அதுக்குத் தான் சொல்றேன்.
.." என்று அவள் சொன்னதன் காரணம் இந்திரனுக்குப் புரிந்தது. (வானிலை மாறும்!)
 
தம்பி மட்டும் தான் எதிரி என்று நினைத்துக் கொண்டிருக்கும்
இமயவர்மனுக்கு, தங்களை சுற்றி நிறைய எதிரிகள்
இருப்பது தெரியாதோ...?
தாமுவிற்கும் தெரியாதோ...?
 
Top