Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சட்டென மாறுது வானிலை!-14

Advertisement

praveenraj

Well-known member
Member
இப்போது சகுந்தலாவைச் சமாதானம் செய்ய சென்றவர் அவரிடம் தான் பேசியதற்கு வருந்த அவரோ இதையே சாக்காய் வைத்து மாதுளையையும் தங்களோடு அழைத்து செல்ல வேண்டினார். இமையவர்மனும் தன் மனைவியின் விருப்பத்திற்கு ஒத்துக்கொண்டார். இருந்தும் இந்திரன் இதற்கு என்ன சொல்வானோ என்றும் பயந்தனர். அவனுக்கு இன்னமும் அந்த குணம் கொஞ்சம் இருக்கிறது. ஆம் புதியவர்களை எப்போதும் தன் வட்டத்திற்குள் அனுமதிக்கவே மாட்டான். அது தான் இமையனை வருத்தமடைய செய்தது. இருந்தும் சமாளிப்போம் என்று எண்ணி உறங்கினார்.
இங்கே கதிரவனுக்கு அந்த நபரிடமிருந்து அழைப்பு வந்தவண்ணம் இருந்தது. யோசித்தவன் அதை ஏற்றான்.
"என்ன கதிரவா போன் எடுக்கலாமா வேணாமான்னு யோசிக்கிறையா?" என்று அவன் மனதை அறிந்தவராய் அவர் உரைக்க,
"ஐயோ அப்படியெல்லாம் இல்ல சார்..." என்று பதறியபடியே மழுப்பினான்.
"எதாவது டபிள் கேம் விளையாட பார்க்கறையா?" என்றவரின் குரல் கடுமையாக,
"சே சே நானே ரொம்ப குழப்பத்துல இருக்கேன்..." என்றான் கதிரவன்.
"அப்படி என்ன குழப்பம்?"
"சரி இந்திரன் இனி கொஞ்சநாளுக்கு இந்தப் பக்கம் பிசினெஸ் அது இதுனு வர மாட்டான். சோ எப்படியாவது எல்லாம் என் கண்ட்ரோல்ல கொண்டு வரலாம் அப்படினு நெனச்சி தான் அன்னைக்கு இமையவர்மன் வீட்டுக்குப் போய் நானாவே மெதுவா பேசிப்பார்த்தேன். அதே மாதிரி கமலேஷுக்கு கூடயிருந்து எல்லாம் சொல்லித் தருமாறு எனக்கு அவரு சம்மதம் சொன்னார். இப்போதான் அந்த பிஸ்கோத் பையன் மெல்ல மெல்ல நம்ம வழிக்கு வரான். தினம் தினம் அண்ணா இதைச் செய்யவா அதைச் செய்யவானு என்னைக் கேட்டு கேட்டு தான் எல்லாம் செய்யுறான். சரி நாமளே இன்னும் கொஞ்சநாளுல நான் அங்க வரவானு கேட்டு மொத்தமும் என் கண்ட்ரோல்ல எடுக்க நெனச்சா இப்படி எல்லாத்துலயும் மண்ணை அள்ளிப்போட்ட மாதிரி திருப்ப அவனே வரானாம். அவன் கிட்ட ஒன்னுமே செய்ய முடியாது. மூச்சு விட்டா கூடக் கண்டுபிடிச்சிடுவான்..." என்று கதிரவன் வருந்த,
"அதே கவலை தான் எனக்கும். போதாக்குறைக்கு இந்த புதிய பிசினெஸ் வேற எனக்கு ரொம்ப குடைச்சல் கொடுத்துகிட்டே இருக்கு..." என்று ஆதங்கப்பட்டார் அவர்.
"எனக்கும் தான். என்ன செய்யுறதுனு புரியில?"
"ஆமா அந்தப் பையன் எப்படி?"
"யாரு?"
"அதான் அந்த கமலேஷ். இமையவர்மனோட ரெண்டாவது பையன்?"
"அவன் அவ்வளவு பொறுப்பெல்லாம் இல்ல. இப்போதான் 25 வயசு ஆகுது..."
"ஓ!"
"சரி இப்போ இந்திரன் திரும்ப வந்தா அவன் நிலைமை?"
"என்ன திரும்ப ஊதாரியா திரிவான் இல்ல ஏதாவது போஸ்ட்ல பேருக்கு உட்காருவான்..."
"எதாவதுனா?"
"இப்போ பெயருக்கு போர்டு மெம்பெறா இருக்கான். அப்றோம் இந்த போர்டு டைரக்டரா ஆகலாம்..."
"அப்போ இந்திரன்?"
"இதென்ன கேள்வி? அவன் தான் வர்மா இண்டஸ்ட்ரீஸ் ceo அண்ட் எக்சிகியூடிவ் டைரக்டர்..."
"இமையவர்மன்?"
"அவரு போர்டு ப்ரெசிடெண்ட். அவ்வளவு தான்..."
"அப்போ அந்தப் பையன் கமலேஷ் தான் நம்ம டிரம்ப் கார்ட்..."
"புரியல?"
"அவனுக்கு ceo ஆசையைத் தூண்டிவிடு..."
"தூண்டிவிட்டா?"
"சிம்பிள் எனக்குத் தெரிந்து இந்திரன் அவன் பதவியையும் பெயரையும் அந்த ஹோல்டயும் (hold-பிடிப்பு) எப்பயும் யாருக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டான்..."
"சரி..."
"அதனால் வீணா அண்ணா தம்பிக்குள்ள அதிகாரா போட்டி வரும். பிறகு எல்லாம் ஆட்டோமேடிக்கா நடக்கும்..." என்று சிரித்தார் அவர்.
"அப்போ இதுல எனக்கு என்ன லாபம்?"
"ஏன் நான் தரது உனக்கு பத்தலையா?"
"எவ்வளவு நாளைக்கு?"
"சரி இந்த வேலையை முதல்ல பத்தவை. மத்ததெல்லாம் ஆட்டோமேட்டிக்கா நடக்கும்..."
"நிச்சயமா?"
"கண்டிப்பா..."
"சரி..."
"பரவாயில்லை இப்போவாவது நீ எல்லாம் புரிந்துகிட்டயே?"
"கண்டிப்பா. நானும் அவனும் சேர்ந்து தான் ஒன்னா ஒரு அட்வென்சர்(ஸ்டார்ட் அப் போன்ற சிறு முதலீட்டில் புதிய நிறுவனம்) ஆரமிச்சோம். அவன் பெரிய ஆள் பையங்கற ஒரே காரணத்துக்கான எல்லாப் புகழும் அந்த சாதனைக்கான க்ரிடிட்ஸ் அவனுக்கே போய்ச் சேர்ந்த்துடுச்சி. அவன் உழைச்சான் தான். நான் அதை மறுக்கவில்லை. ஆனா நானும் ஒன்னும் சும்மா இல்லயே? எனக்கும் அதுல சரிசம பங்கு இருக்கு. ஆனா க்ரெடிட்ஸ் மொத்தமும் அவனுக்கு மட்டும் போய்ச் சேர்ந்துடுச்சி. என்னை என்ன சொம்பைனு நெனச்சிட்டு இருக்கானா?" என்று உச்சசுருதியில் கத்தினான் கதிரவன்.
"இதை தான் நானும் அன்னைக்கு கிளிப்பிள்ளைக்கு சொல்லுற மாதிரி சொன்னேன். நீ தான் என் நண்பன், உயிரு, மயிருனு (மயிர் - தூய தமிழ் வார்த்தை தான் மக்களே) கதையளந்த..."
"மன்னிச்சிடுங்க. இப்போ தான் எல்லாம் புரியுது..."
"அதெல்லாம் ஒன்னும் வேணாம். எப்படியும் நாளைக்கு அந்த மீட்டிங்குக்கு அப்றோம் வர்மா இண்டஸ்ட்ரீஸ் ஷேர் கிடுகிடுன்னு உயர்ந்திடும். ஆனால் அதுவே அந்த வர்மா இண்டஸ்ட்ரீசோடா கடைசி ஏற்றமா இருக்கனும். அதுக்கப்றோம் எல்லாம் ஒரே சரிவு மட்டும் தான்..." என்று சிரித்தவரின் சிரிப்பில் ஒரு வன்மம் இருந்தது.
"கண்டிப்பா..."
"எதுக்கும் கேர்புல்லா இரு. இனிமேல் இந்த நம்பர்ல இருந்து நான் கூப்பிடக் கூட மாட்டேன். வெறும் வாட்ஸ் அப் தான். இந்த இந்திரனுக்கு சரியான கழுகு கண்ணு. கண்டுபிடிச்சாலும் கண்டுபிடிச்சிடுவான்..."
"இல்ல அவன் ஏற்கனவே செத்த பாம்பு. எப்போ அவன் லேகா போனாளோ அப்போவே எல்லாம் முடிஞ்சது..."
"ஹா ஹா ஹா அதும் சரிதான். கடவுளா பார்த்து அவளை மேல அனுப்பிட்டான். அந்த ஆக்சிடென்ட் மட்டும் நடக்காம இருந்திருந்தா நமக்கு ரொம்ப கஷ்டம். கும்பிட போன தெய்வம் குறுக்க வந்த மாதரி... என்ன அவனும் போய்ச் சேர்ந்திருக்கனும். சரி அவனுக்கு ஆயுசு கெட்டி போல? ஹம் இனி மேல் நோ போன் கால்ஸ். கேர்புல்..."
"ஓகே..." என்ற கதிரவன் தீவிர யோசனைகளுள் சென்றான்.
**********************
மறுநாள் காலை பரபரப்பாகவே விடிந்தது. சகுந்தலா இமையவர்மன் இருவரும் காலையிலே விழித்து ஊருக்குப் புறப்படவேண்டி தயார் ஆகினர். இமையவர்மனோ சுமதியம்மாவை அழைத்து தாங்கள் செல்வதாகவும் மேலும் ராசப்பனுக்கும் சில கட்டளைகளைப் பிறப்பித்து அவர்கள் எஸ்டேட் மேனேஜருக்கு சில அறிவுரைகளை வழங்கிவிட்டு வர இங்கே சகுந்தலாவோ ஒரு பக்கம் மாதுளையை எழுப்பி அவளை தயாராகச் சொல்லிவிட்டு மீண்டும் மேலே சென்று இந்திரனைப் பார்க்க அவனும் தயாராகிக் கொண்டிருந்தான்.
ரெடி ஆகி வந்த மாதுளை ஒருமுறை இங்கு இருக்கும் பசங்களை எல்லாம் பார்த்துவிட்டு வருவதாகச் சொல்ல அதற்கு அவசியமே இல்லை என்பது போல் மொத்த ஊரும் அவளை வழியனுப்ப வந்தது. தன்னுடைய கூட்டாளிகளை (சின்ன சின்ன பசங்க) அழைத்து எல்லோரையும் நன்றாகப் படிக்கச் சொல்லிவிட்டு அவள் இருக்க இந்திரனும் கீழே வந்தான். வந்தவன் முதலில் சுமதியம்மாவைப் பார்த்து கொஞ்சம் பேசிவிட்டு வெளியே வந்தவன் அந்தப் பூர்வக்குடி தலைவரைப் பார்க்க ஏனோ அவருக்கு இந்திரனைப் பார்க்கவே தயக்கமாக இருந்தது. பின்னே தான் மட்டும் அன்று அந்தத் திருமணத்திற்கு அழைக்காமல் இருந்திருந்தால் இந்த விபரீதம் நடந்திருக்காதே என்று யோசிக்க அந்த மணமக்களை அழைத்தவன் அவர்களுக்கு இவன் வாங்கியிருந்த பரிசை கொடுத்துவிட்டு அங்கிருந்து திருப்பூருக்கு காரில் சென்று பிறகு தங்களுக்கு சொந்தமான பிரைவேட் ஜெட்டில் மும்பைக்கு பயணப்பட தயாராகினர்.
எல்லோரையும் விட்டுப் பிரிய மாதுளைக்கு அழுகை வர இந்திரனும் ராஜிந்திரனையும் அவளின் தாத்தா பாட்டியையும் நினைத்து வருந்தினான். ஏர்போர்ட் சென்றுவிட,"நீ பிளைட்ல ட்ராவல் பண்ணியிருக்கியா?" என்று சகுந்தலா மாதுளையிடம் வினவினார். அவளோ இல்லை என்று மிரட்சியுடன் பார்க்க,"பயப்படாத. ஒன்னும் ஆகாது..." என்று சொல்லிவிட்டு அமர ஏனோ இந்திரனுக்கு இந்தக் கேள்வியை அன்று லேகாவிடம் தான் கேட்டதை நினைவுபடுத்த அதன்பின் நடந்ததை நினைக்கையில் கண்ணீர் வந்தது. தன் அன்னைக்குத் தெரியக்கூடாது என்று நினைத்து மறைத்துக்கொண்டான்.
இதுவரை டெல்லியில் இருந்த கமலேஷ் இன்று மும்பை வந்திருந்தான். ஆக்சுவல்லி இமையவர்மனால் வரவழைக்கப் பட்டிருந்தான். அவனுக்கோ மாலை நடக்கபோவதை நினைக்கையில் ஏனோ ஒரு இனம் புரியாத நிலை. குழப்பத்துடன் அவன் மும்பை வந்திறங்க நேராக தங்கள் வீட்டிற்குச் சென்றான். போனவன் கதிரவனை உடனே அழைத்தான்.
போனில் கமலேஷ் என்ற எண்ணைப் பார்த்தவன் ஒரு குறுநகையுடன் அதை அட்டென்ட் செய்தான்.
"அண்ணா நான் மும்பை வந்துட்டேன். அப்பா அம்மா எல்லாம் சாயங்காலம் வந்திடுவாங்க அண்ணா..." என்று சொல்ல பேச்சு வாக்கில் அந்தப் பெண்ணையையும் கூட்டிக்கொண்டு வருவதாய்ச் சொன்னான்.
"என்ன சொல்ற கமலேஷ்? எந்தப் பொண்ணு?"
"அதுதான் அண்ணனைக் காப்பாத்தின அந்தப் பெரியவரோட பேத்தியாம்..."
"ஓ!" என்றவன் தீர்க்கமான யோசனைக்குச் சென்றான்.
"சரிடா கமலா நாம சாயுங்காலம் மீட்டிங்கில் பார்ப்போம். ஓகே?"
"சரியண்ணா..." என்று அவன் துண்டிக்க, 'யாரிந்த பெண்? அவள் எதற்கு அவர்களோடு வர வேண்டும்? என்ன காரணமாய் இருக்கும்?' என்று யோசித்தவனுக்கு ஏனோ அந்தப் பெண் வருவது சுத்தமாகவே பிடிக்கவில்லை. ஒருவேளை தன்னுடைய திட்டங்களுக்கு எல்லாம் அவள் பெரிய தடையாக இருப்பாளோ என்று அவன் யோசிக்க, அவள் அவனுக்கு ஒரு புரியாத புதிராய் இருக்கப்போகிறாள் என்று தற்போது அவனுக்குத் தெரியாது!
தன்னோடு வழக்கமாய் போனில் பேசுபவரிடமிருந்து 'இன்றைய அந்நோன்ஸ்மென்டுக்குப் பிறகு நாளை மறுநாளே விழாவாம். (புதிய பிசினெஸ் துவக்கவிழா மேலும் இந்திரன் பதிவியேற்பு விழா) எப்படியும் எனக்கும் அழைப்பு வரும். அங்கே பார்ப்போம்...' என்று அவனுக்கு ஒரு வாட்ஸ் அப் தகவல் வந்தது. கதிரவனுக்கு இது அதிர்ச்சியளித்தது.
'நாளை மறுநாளே துவக்கமா? அப்போ இது எவ்வளவு நாளுக்கு முன்பே போடப்பட்ட திட்டம்?' என்று யோசிக்க அவனுக்கு பதில் கிடைக்காததால் உடனே தன் போன் எடுத்தவன் தாமோவை அழைத்தான்.
"சொல்லுங்க கதிர் தம்பி..."
"அவங்க கிளம்பிட்டாங்களா?"
"ஆம் ஆச்சு..."
"நீங்க மும்பை வரலையா அங்கிள்?"
"எனக்கு வேற வேலை இருக்கு கதிரா. அதுதான் சார் (இமையவர்மன்) என்னை இங்கேயே இருக்கச் சொல்லிட்டாரு..."
"என்ன வேலை அங்கிள்? நீங்க இல்லைனா பெரிய அங்கிள்க்கு (இமையவர்மன்) கையும் ஓடாது காலும் ஓடாது. அப்பேற்பட்ட நீங்க இல்லைன்னா கண்டிப்பா வேற எதுவோ பெரிய வேலை இருக்கும் போலையே? என்னன்னு..." என்று கதிரவன் சிரித்தபடியே விஷயத்தைக் கேட்க,
"கண்டிப்பா தம்பி. எனக்கு ரொம்ப பெரிய வேலையைத் தான் சார் கொடுத்திருக்காரு. நான் வரலைங்கற அப்போவே அது எவ்வளவு சீரியஸ் சீக்ரெட்னு உங்களுக்கே தெரியுதே? சோ இப்போதைக்கு நான் எதுவும் சொல்ல முடியாது..." என்று அவரும் அதே சிரிப்போடு மறுக்க,
அங்கே கதிரோ,"ஐயோ அங்கிள் நான் சும்மா விளையாட்டுக்குத் தான் கேட்டேன்..." என்று வாய் சொன்னாலும் முகம் அளவுகடந்த கோவத்தில் கொப்பளித்தது. அழைப்பை வைத்தவன்,'கிழட்டு நாயே! உன்கிட்ட இருந்து ஒரு விஷயத்தை வாங்க முடியுதா?' என்று தன் இயலாமையை அங்கிருந்த கண்ணாடி டம்ளர் மீது காட்டினான் கதிரவன்.
ஏனோ அவனுக்கு முன்பைக்காட்டிலும் இப்போது சொல்லமுடியாத பயம் ஆட்கொண்டது. பின்னே தாமோ அப்படிப்பட்டவராச்சே! இமைய வர்மன் எள் என்றால் எண்ணையாய் இருப்பார் என்பதைக் காட்டிலும் இமையம் எள் என்பதை நினைக்கும் போதே அவர் எண்ணெய் ஆகிவிடுவார். (பொன்னியின் செல்வன் படித்தவர்களுக்கு, அதிலிருக்கும் அநிருத்தபிரமராயர் (சோழர்களின் முக்கியமந்திரி கேரக்டர். சுந்தர சோழனின் நண்பர் விசுவாசி) போல் தான் இமையவர்மனுக்கு இந்த தாமோதரன்). ஆள் பார்க்க அப்பாவி போல் இருந்தாலும் இவரைப் போல் ஒரு விசுவாசியைப் பார்க்கவே முடியாது. அதுவே கதிரவனுக்கு மேலும் பயத்தைக் கூட்டியது.
குடும்பத்துடன் இமையவர்மன் மும்பை வந்து இறங்கிவிட்டார். தங்களின் பூர்விக வீடு இல்லை என்றாலும் தங்களுக்காக ஒதுக்கப்பட்ட வீடு இது. அங்கே வந்து கொஞ்சம் ஓய்வு எடுக்க பின்னாலே வந்துசேர்ந்தார் தாமு. மறுநாள் மாலை அந்த விழா நடைபெறும் இடத்திற்கு விரைந்தார்.
சகுந்தலா, இந்திரன், கமலேஷ் என்று மூவரும் கீழே அமர்ந்திருக்க மேலே இமையவர்மன் தாமுவுடன் பேசிக்கொண்டு இருந்தார். இன்றைய காலகட்டத்தில் 'சேவை' சார்ந்த தொழில்கள் எவ்வளவு முக்கியம் என்பதைப் பேசி பிறகு தற்போது நடைமுறையில் இந்தியாவில் இருக்கும் சேவை சார்ந்தவை அவர்களின் வேலை உலகத்தரத்தில் இருக்கிறதா? என்றவர் தானாகவே நிச்சயம் இல்லை என்றவர் புதிய தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்றை நிறுவப்போவதாகவும் அதில் டிவி, கேபிள் இன்டர்நெட், மொபைல் நெட்ஒர்க், ஆன்லைன் செயலி (நெட்பிலிக்ஸ், அமேசான் ப்ரைம் போல்) என்று இன்றைய கால கட்டத்தின் அனைத்து தேவைகளையும் உள்ளடக்கிய ஒரு பெரிய நிறுவனமான இருக்கும் என்று பேசினார். மேலும் இந்த சேவை சார்ந்த தொழில்களை உண்மையான சேவை மனதோடு செய்யப்போவதாவும் சொல்ல இங்கே இவர் பேச பேச அங்கே ஸ்டாக் மார்க்கெட்டில் (பங்குச்சந்தை) வர்மா இண்டஸ்ட்ரீஸின் ஷேர் எல்லாம் கிடுகிடுவென உயர இதுவரை சர்விஸ் துறையில் கோலோச்சி இருக்கும் மற்ற நிறுவனங்கள் (சந்திரவர்மனுடையது உட்பட) எல்லாமும் கடும்வீழ்ச்சியைச் சந்தித்தது.
இமைய வர்மனின் வெறும் 25 நிமிட உரையாடல் மற்ற போட்டிநிறுவனங்களின் மொத்த மதிப்பை சுமார் 35 -60% வரை இறக்கியிருந்தது. இவர்களுதோ இதுவரை எந்த ஒரு இந்திய நிறுவனமும் தொடாத உயர்வைத் தொட தன் பேச்சும் அடுத்த நியூஸாக இனி இந்த மொத்த நிறுவனத்தின் ceo ஆக இந்திரன் என்னும் இந்திரஜித் வர்மன் இருப்பான் என்றும் தான் ஒரு போர்டு மெம்பராய் மட்டும் இருப்பேன் என்றும் சொல்ல எல்லோரும் பலத்த கரகோஷங்களை எழுப்பினர்.
பேசியவர் நேராக தங்கள் வீட்டிற்குச் சென்றுவிட கதிரவன், கமலேஷ், ஏன் இந்திரன் சகுந்தலா உட்பட அனைவரும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். பின்னே முதலில் ஏதேனும் ஒரு துறையில் (அதாவது இன்டர்நெட், இல்லை மொபைல், ஏதோ ஒன்றில்தான் கால்பதிப்பார் என்று நினைக்க) மொத்தமாய் இப்படி அகலமாய் காலுண்றுவார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. கூடவே இந்திரன் மீண்டும் வருவது என்று தெரிந்திருந்தாலும் இப்படி தன் கணவர் மொத்தமாய் விலகி எல்லாமும் தன் மகனின் மீதே சுமத்துவார் என்றும் அவர் எதிர்பார்க்கவில்லை.
கதிரவன் இந்த ரணகளத்திலம் பின்னே இந்த அறிவிப்பின் மூலமாய் ஏனோ கமலேஷின் முகத்தில் ஏதேனும் கவலை தெரிகிறதா என்று பார்த்துக்கொண்டிருந்தான். (அப்படி ஏதேனும் இருந்தால் அவன் வேலை மிகச் சுலபம் ஆகுமே?) ஆனால் அவன் முகத்திலிருந்து எதையும் அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றதும் ஏமாற்றத்துடன் அவன் வீடு திரும்பினான்.
அவனுக்கு அழைப்பு வர எடுத்ததும்,"டேய் @#$% என்னடா பண்ணி வெச்சியிருக்கான் அந்த இமையவர்மன்? என்ன நாங்கல்லாம் தொழில் செய்யுறதா இல்லை இப்போவே எல்லாத்தையும் இழுத்து மூடிட்டு போறதா? அவன் தொழில் தொடங்குனது கூட பிரச்சனை இல்ல ஆனா இவ்வளவு கம்மி விலையில எப்படி டா எப்படி? அவன் பேசிட்டு போனதுடைய எபெக்ட் என்ன தெரியுமா? நாளைக்கு ஸ்டாக் ஓபன் ஆனா தெரியும். எப்படியும் சாதாரணமா 8000 - 10000 கோடி போச்சு! என் மார்க்கெட் எல்லாம் காலி..." என்று அவர் வெதும்பினார்.
கதிரவன் மட்டும் என்ன செய்வான்? அவனால் ஒன்றும் செய்யமுடியவில்லை.
"சந்திரவர்மனுடைய பங்கும் எப்படியும் 6000 - 7000 கோடி காலியாகும். இந்த அசோக் சௌனி சாம்ராஜியமே ஆட்டம் கண்டிடுச்சு. என்ன விளையாடுறங்களா? அன்னைக்கு அவன் அப்பன் ஆண்டான் இன்னைக்கு இவன் நாளைக்கு இவன் பையன். நாங்க என்ன மூடிட்டு வேடிக்கை பார்க்கவா? அவனால நான் எவ்வளவு இழந்தேன் தெரியுமா? அதுக்கு தான் எப்படியாவது அவன் தொழிலை முடக்க எவ்வளவு முயற்சி பண்ணறேன். கடைசியில இப்படி? டேய் உண்மையைச் சொல்லு இது இன்னைக்கு நேற்று முடிவு பன்ணணியிருக்க முடியாது. உனக்கு இதைப்பற்றி ஏற்கனவே தெரியும் தானே? என்கிட்டயே டபிள் கேம் விளையாடிட்டே இல்ல? உன்னை... உன்னை..." என்று மேலும் புலம்பினார் அசோக் சௌனி.
"ஐயா சார் கொஞ்சம் ரிலேக்ஸ் ஆகுங்க. எனக்கு இதைப்பற்றி எதுவும் தெரியாது. நானே ரொம்ப அதிர்ச்சியில் இருக்கேன். மேலும் இது அவரைத் தவிர யாருக்குமே தெரியில. ஏன் அவரு பொண்டாட்டி, பிள்ளைங்க உட்பட யாருக்கும்..."
"இதை என்னை நம்ப சொல்றியா?"
"அது தான் உண்மை. இன்னைக்கு நீங்க அவங்க முகத்தையெல்லாம் பார்க்கணுமே? ஐயோ பெரிய அதிர்ச்சி. எனக்குத் தெரிந்து இதைப்பற்றி எல்லாமும் தெரிந்த ஒரே ஆள் அந்த தாமோ தான்..." என்று தாமோ மீது தனக்கிருக்கும் பொறாமையுடன் பதிலளித்தான் கதிரவன்.
"தாமோ?"
"இமையவர்மனோட நண்பன், பர்சனல் செக்ரெட்டரி, விசுவாசி... எல்லாம் அந்த ஆளுதான்..."
"pa? அவனுக்குப் போயா?" என்று அதிர்ந்தார் அசோக் சௌனி.
"சார், அந்த ஆளு வெறும் pa மட்டுமில்ல. அவன்... இமையவர்மனுக்கு எல்லாமும் அவன் தான். இப்போ எனக்கு இதைவிட இன்னோனு பயமா இருக்கு..."
"என்ன சொல்ற? என்ன பயம்?"
"இன்னைக்கு வேற ஏதோ வேலையா அந்த தாமோவை அங்கேயே விட்டுட்டு வந்திருக்காரு இமையவர்மன். சோ எனக்கு என்னமோ டவுட்டா இருக்கு..."
"என்ன டவுட்?"
"அட்டகட்டில இந்திரனை அட்டாக் பண்ண வந்தது யாருனு எதையாவது கண்டுபிடிக்க அனுப்பியிருப்பாரோனு ஒரு சந்தேகம்..." என்று கதிரவன் இழுக்க,
"ஏன்டா இதையெல்லாம் நீ ஏற்கனவே சொல்ல மாட்டியா? சொல்லியிருந்தா அவனை எப்போவே தூக்கியிருப்பேனே?" என்றதும்,
அந்த பதற்றத்தில் கதிரவன் சிரித்தான்.
"என்ன கிண்டலா?"
"இல்லை சார். இமையவர்மனைக் கூட நீ ஈஸியா நெருங்கலாம். ஆனா அந்த தாமோ கிழவனை நெருங்கவே முடியாது. அண்ட் தாமோ ஒரு கேரக்டர் இருப்பதே உங்களுக்கு இப்போ தான் தெரியும்?" என்ற பதிலில் தன்னைத் திட்டிய அசோக் சௌனிக்கு குட்டு வைத்ததாகவே எண்ணினான் கதிரவன்.
"அப்போ அவனை நம்ம வழிக்கு?"
"அது அவன் செத்தாக் கூட நடக்காது. அண்ட் அவனை சாவடிக்கவும் முடியாது. அது அவ்வளவு சுலபம் இல்ல. இந்த வர்மா சாம்ராஜியத்தோட பவர் ஹவுஸ் அந்த ஆளு..."
அங்கே அசோக் சௌனி மிகுந்த கோவத்திலிருந்தார்."டேய் 140 வருஷமா நாங்க இந்தியாவுல தொழில் செய்யுறோம். பிரிட்டிஷ் காரனையே சமாளிச்சு பிசினெஸ் பண்ணவங்கடா என் பரம்பரை. ஆனா இப்போ என்னன்னா நேத்து ஆரமிச்ச அந்த வர்மா குரூப்ஸ் எங்களை நசுக்குறாங்க? முதல அந்த ராஜ வர்மன், பிறகு அந்த சந்திர வர்மன்னு இருக்க இப்போதான் அவனை எல்லாப் பக்கமும் லாக் பண்ணோம். இப்போ திடீர்னு அந்த இமையவர்மன், இந்திரஜித் வர்மன்னு வந்தா நான் என்ன பண்றது? எங்களோட லெகேசி என்னனு உனக்குத் தெரியுமா?" என்று வர்மா குழுமத்தின் மீதுள்ள தன் ஆற்றாமையை வெளிப்படுத்தினார் அசோக் சௌனி.
"கொஞ்சம் பொறுமையா இருங்க, ப்ளீஸ். நான் சீக்கிரம் உள்ள போயிடுறேன். அங்க உள்ள போயிட்டா பொறுமையா எலியைப்போல வர்மா குழுமத்தை குழி தோண்டலாம்..."
அவரோ கோவத்தில் போனை வைக்க, இங்கே கதிரவனுக்கு தருணிடம் இருந்து அழைப்பு வந்தது.
"சொல்லுடா என்ன ஆச்சு கண்டுபிடிச்சியா?"
"பின்னாலே போனோம் கதிரா ஆனா முடியில..."
"நீயெல்லாம் என்ன புடுங்குற? போயும் போயும் உன்னை ரெகமெண்ட் பண்ணான் பாரு அவனைச் சொல்லணும். போய் உன் ஆபிஸை இழுத்து மூடு..." என்று தனக்கிருந்த கோவத்தை எல்லாம் தருண் மீது இறக்கி போனை வைத்தான். (வானிலை மாறும்!)
 
Last edited:
அப்பப்பா ஒரு குடும்பத்தை அழிக்க இத்தனை பேரா....
ஆனால் ,எல்லாம் தெரிந்த தாமோ க்கு , கதிரவன் பற்றி தெரியாதா....
( கதை போக்கில் தெரியும் சொல்விங்க :cool::p:LOL::LOL:)....
 
Last edited:
அப்பப்பா ஒரு குடும்பத்தை அழிக்க இத்தனை பேரா....
ஆனால் ,எல்லாம் தெரிந்த தாமோ க்கு , கதிரவன் பற்றி தெரியாதா....
( கதை போக்கில் தெரியும் சொல்விங்க :cool::p:LOL::LOL:)....
எஸ் இன்னும் கூட இருக்காங்க சொல்றேன்?� கண்டிப்பா மண்டை மேல இருக்க கொண்டையை நான் மறக்கல?� அதுக்கான பதில் கிடைக்கும்... நன்றி??
 
ஒரு வழியா ரெண்டு எலிங்க வெளிய வந்திருச்சு... இன்னும் எத்தன பெருச்சாளிகள் இருக்கோ ???
இதென்ன பெருசு? அதி முக்கியமான ரெண்டு பெருசாளிங்க இருக்கு... ஆனா இப்போதைக்கு அதுங்க வெளிய வராது? நன்றி?
 
இன்னும் வேற இருக்காங்களா...?
யாரா இருக்கும்...?
டாடா..., லட்சுமி மித்தல்,,,? :p :p:p
 
இன்னும் வேற இருக்காங்களா...?
யாரா இருக்கும்...?
டாடா..., லட்சுமி மித்தல்,,,? :p :p:p
ஒருவேளை இது உண்மையிலே அம்பானி கதையா இருந்தா அவங்களும் வரலாம். ஆனா கதை எழுதுவது நானாச்சே? ???�
 
Top