Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சசிதீராவின் இருளில் தேடும் ஒளியாய் நீ !!!--1

Advertisement

SasiDeera

Well-known member
Member
ஒளி 1 :-

முதல்
முதல் வந்த காதல் மயக்கம்!
மூச்சுக் குழல்களின் வாசல் அடைக்கும்!
கைகள் தீண்டுமா...கண்கள் காணுமா...காதல் தோன்றுமா!
என் சுவாசக் காற்றே ! சுவாசக் காற்றே நீயடி!
இதயத்தைத் திருடிக் கொண்டேன்!
என்னுயிரினைத் தொலைத்துவிட்டேன்!
தொலைந்ததை அடையவே மறுமுறை
காண்பேனா!!!!

அலாரம் அடிக்க ஆரம்பிக்கும் போதே உறக்கம் கலைந்தாலும் எழத்தோன்றாமல் அந்த பாடலின் இனிமையை உள்வாங்கியபடியே படுத்திருந்தாள். அடிக்கடி அவள் மாற்றி வைக்கும் அலாரம் ஒலி தான் , கூடவே அலைபேசி அழைப்பு வரும் போதும் ஏதவாது ஒரு பாடல் மாற்றி மாற்றி ஒலித்துக் கொண்டே இருக்கும்.

தன் மனதை எதிர்பார்க்கும் ஒருவருக்கு தெரியப்படுத்தவா அல்லது தானே தன் மனதை உணரவா என்று தெரியாது, ஒவ்வொரு விடியலில் தொடங்கி இரவின் துயிலிலும் அவளின் ஊனாகி உயிராகி போனது என்னவோ இந்த இசை தான் .

இன்று அவள் தலைமையில் முக்கியமான கலந்தாய்வு கூட்டம் உள்ளது, தலைமை செயலகத்தில் பெண்கள் சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்ட துறையின் முதன்மை அரசு அலுவலராக பொறுப்பேற்று நடைபெறும் முதல் கூட்டம்.

சிவில் சர்வீஸில் இதற்கான தேர்வெழுதி ஒரு வருடத்தில் பதவி உயர்வு பெற்று இந்த இள வயதில் தேர்வானாள். இயல்பிலே அறிவான திறமைசாலியான பெண் என்பதால் குறுகிய கால இடைவெளியிலே இந்த வளர்ச்சி.

இரவு வெகுநேரம் விழித்திருந்து கூட்டத்திற்கு தேவையான குறிப்புகளை சரி பார்த்து தாமதமாகவே உறங்கினாலும் எப்பொழுதும் எழும் நேரமே விழிப்பு தட்டியது கூடவே அவளின் இசையும் !!

அலாரம் இரண்டு முறை அடித்து ஓய்ந்ததும் தான் எழுந்து,
சிறிது நேரம் அவளுக்கு பிடித்த பில்டர் காபியோடு பால்கனியில் நின்று சூரியனின் உதயத்தையும் சில்லென்ற காற்றையும் ரசித்து கொண்டு இருந்தாள். அதன் பின் குளித்து தயாராகி வெளியே வரவும் அலைபேசி அழைக்கவும் சரியாக இருந்தது,

ஒரு
புன்னகை தானே வீசி சென்றாய்!
அது நடந்து நடந்து நடந்து நடை பாதை முழுக்க கடந்து!
அது அலைந்து அலைந்து அலைந்து!
சில தூர எல்லை திரிந்து!
அது என்னை சேர்ந்தது தாமதமாக!
உன் காதல் வந்தது சம்மதமாக!


இதழ்கள் சிரித்தனவா என அறிய முடியாத அளவிற்கு சிறு கீற்றுப் புன்னகையோடு பாடலை ரசித்தபடியே அழைப்பை ஏற்றாள்.

“ஹலோ!”

“எஸ்! ரதிக்குந்தவை ஸ்பீக்கிங்” !

“குட் மார்னிங் மேம்! மீட்டிங்கிற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் முடிந்தது. இன்னும் சிறிது நேரத்தில் எல்லோரும் வந்து விடுவார்கள்”.

“குட்! நான் லிஸ்டில் சொன்ன பொது மக்களையும் அழைத்தீர்களா “?

“எஸ்! மேம் ! அவர்களையும் அழைத்து அவர்களின் வருகையும் உறுதி செய்து விட்டேன்”.

“குட் ! நான் இன்னும் 20 நிமிடத்தில் அங்க இருப்பேன்” .

“ஓகே மேம் !”

அழைப்பைத் துண்டித்து அலுவலக வண்டியில் கிளம்பி, கலந்தாய்வு கூட்டம் நடைபெறும் இடத்தை அடைந்தாள்.
அறைக்குள் நுழைந்ததும் மரியாதை நிமித்தமாக எல்லோரும் எழுந்து நிற்க ஒரு தலையசைப்போடு ஏற்று அவள் இருக்கையில் அமர்ந்தாள். அந்த மரியாதை அவள் பதவிக்கு கிடைத்த ஒன்று ,வயது வித்யாசம் பார்க்காமல் இப்படி ஒரு விஷயம் செய்வதில் அவளுக்கு விருப்பம் இல்லையானாலும் இடம் பொருள் ஏவலால் அதை தவிர்க்க முடியவில்லை.

அவள் அமர்ந்ததும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பார்வையோடு அவளை ஆராய்ந்தனர். ஒரு சிலர் இவ்வளவு சின்ன வயதில் இவ்வளவு உயரிய பதவியா ?அதுவும் இவ்வளவு கம்பீரத்தோடு என ஆச்சர்யமும் , ஒரு சிலர் இச்சிறு பெண்ணின் கீழே வேலை செய்ய வேண்டுமா என பொறாமையோடும் நோக்கினர். இது எதையும் அவள் சட்டை செய்யாமல் எல்லோரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு வரவேற்புரையை கவனித்தாள்.

இந்த பதவி பொறுப்பேற்ற பின் முதல் கூட்டம் என்பதால் அவளுக்கான வரவேற்புரை முடிந்தததும், அவள் பேசுவதற்கான அழைப்பு வந்தது.

வெளிர் பச்சை நிற காட்டன் சேலையில் அழகாக மடிப்பு வைத்து முழங்கை அளவுக்கு கரு நீல மேற் சட்டையும் ,ஒரு கையில் பச்சை நிற கண்ணாடி வளையலும் ஒரு கையில் வாட்சும் ,நெற்றியில் சந்தன கீற்றோடு , தளர பின்னிய கூந்தலில் சிறிதளவு மல்லிகைப் பூ வைத்து இருந்தாள்.

கூட்டத்தின் நடுவே தலைமையின் கம்பீரத்தோடு அவள் நிற்கும் போது எல்லோரும் அசந்து தான் போயினர். அவள் அழகு மட்டுமல்ல அவள் பேச்சும் கூட எல்லோரையும் ஈர்த்தது.

“எல்லோருக்கும் வணக்கம் ! என் பெயர் ரதி குந்தவை ! சமூக நலம் மற்றும் சத்துணவுத் துறையின் முதன்மை அரசு செயலராக நியமிக்கப்பட்டிருக்கேன். பெண்கள் மற்றும் குழந்தைகள் நல பிரிவான இதில் தேர்வானதிலும் உங்களுடன் பணி புரிய போவதிலும் எனக்கு மிக்க மகிழ்ச்சி. நமது பிரிவின் நிறை குறைகளை ஆலோசித்து அதை சரி செய்வதற்கான கருத்துக்களையும் மேற்கொண்டு ஆராய்ந்து இந்த துறையின் வளர்ச்சியை மேம்படுத்தவுமே இந்த கூட்டம்”.

“இந்த துறையின் முந்தைய அறிக்கைகளை ஆராய்ந்து அதில் ஒரு சில மாற்றம் செய்து சில புதிய விதிமுறைகளையும் அமல் செய்யப் போகிறோம்”.

“அதன் முதற்கட்டமாக நமது துறையின் அனைத்து அலுவகங்களிலும் கடைநிலை ஊழியர் முதல் உயர் அதிகாரி வரை அனைவரும் நேரம் தவறாமை கடைபிடிக்க வேண்டும்”.

“உங்களின் தனிப்பட்ட சுதந்தரத்திற்கு எந்த இடையூறும் இல்லாமல் அனைவரின் வேலையும் வேலையின் தரமும் ஆராயப்படும்”.

“குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிந்த மற்றும் முடியாத வேலைகள் என பிரிக்கப்பட்டு அதற்கேற்றவாறு புள்ளிகள் வழங்கப்படும். இது அனைவருக்கும் பொருந்தும்”.

“புள்ளிகளின் மதிப்பு பொறுத்து அவர்களின் திறமை கௌரவிக்கப்படும். இது தனிப்பட்ட நபரின் தீர்மானம் அல்ல. அவர்கள் வேலையை முடிக்கும் கால நேரம் மற்றும் மக்களால் அவர்களின் வேலை தரத்திற்கு தரப்படும் மதிப்பு என கணக்கிடப்படும்”.

“இதே போன்று மக்களுக்காக சில ஏற்பாடுகள் செய்துள்ளோம். மக்கள் விண்ணப்பிக்க வரும் திட்டங்களின் விரிவான தகவல்கள் , சமர்ப்பிக்க வேண்டிய நகல்களின் விவரங்கள் என அனைத்தும் அந்த அந்த பிரிவில் ஹெல்ப் டெஸ்க்காக அமைக்கப்படும்”.

“மக்களாகிய நீங்கள் விண்ணப்பித்த திட்டத்தின் நன்மையை பெறும் வரை அதற்கு சம்பத்தப்பட்ட ஒவ்வொரு அலுவலரின் அணுகுமுறை , வேலையின் திறம் மற்றும் தரத்தை மதிப்பீடு செய்ய வேண்டும்”.

“அதிகாரிகளும் சரி அரசியல்வாதிகளும் சரி இவர்கள் அனைவரும் மக்களுக்காகவே அதனால் தான் இந்த முயற்சி”.
இறுதியாக ஒன்றை தெரியப்படுத்துகிறேன் ,” ஊழல் லஞ்சம் கமிஷன் என வார்த்தைகள் தான் வேறு ஆனால் பொருள் ஒன்று தான், அது "தனிமனித நேர்மையின்மை". இதை மட்டும் அனைவரும் கவனத்தில் வைத்து கொள்ளுங்கள்”.

“இந்த கூட்டத்தின் விவரங்கள் சுற்றறிக்கையாக அனைத்து மாவட்டங்களுக்கும் நாளை வந்து சேரும். அழைப்பை ஏற்று வந்த அதிகாரிகளுக்கும் பொது மக்களுக்கும் என் நன்றி! வணக்கம்!”

அவள் பேசி முடித்ததும் அங்கு பெரும் அமைதி , அறிவிப்புகளை ஏற்பவர் பலர் எதிர்ப்பவர் பலர். ஆனால் அதை வெளிப்படுத்துவர் தான் யாருமிலர்.

மேடையை விட்டு இறங்கி வெளியேறும் வரை இருந்த அமைதி அதன்பின் இல்லை . அதை அவள் கண்டுகொள்ளாமல் அன்றைய அலுவல்களை முடித்து வீடு வந்து சேர இரவு ஏழு மணியானது, முகம் கழுவி சிறிது நேரம் ஓய்வு எடுத்தபடியே நியூஸ் பார்த்து விட்டு சமையலில் இறங்கினாள்.

ஆயக்கலை என்பதை விட அவசியமான கலை என அவள் அனைத்தையும் கற்றறிந்து இருந்தாள். பாடல்களை கேட்டுக் கொண்டே வேலை செய்வது அவளுக்கு பிடித்த ஒன்று, கூடவே பாடலின் முணுமுணுப்போடு !!

இப்போதும் அப்படி பின்னணியில் இசை ஒலிக்க சாப்பிட்டு முடித்து எல்லாம் ஒதுக்கி வைக்கும் போது அவள் அலைபேசி அழைத்தது! அழைக்கும் பாட்டிலே தெரிந்தது அழைப்பது யார் என்று!!






கம்பீரம் கொடுக்கும் அழகு!

பதவி கொடுக்கும் அழகு!

நேர்மை கொடுக்கும் அழகு!

எல்லாம் விட காதல் கொடுப்பது பேரழகு தானோ !
 
உங்களுடைய "இருளில் தேடும்
ஒளியாய் நீ"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
சசிதீரா டியர்
 
Last edited:
Top