Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோட்டுக்குள்ளே நின்றதில்லை காதல் 8 ❤️‍🔥

Advertisement

ஐ eagle eyes

Well-known member
Member
காதல் 8❤️‍🔥


"காந்தார கற்பிதம் நீயானால்
கம்பன் நானாவேன்.....!!!"


கருங்கடல் மேனியிலே ஆயிரம் முத்துக்கள் போல் இருண்ட வானில் ஆயிரம் வான்மீன்கள் இமைகொட்ட.

இரவு உணவு முடிய தோட்டத்தில் அமர்ந்தனர் அனைவரும்.


சிதம்பரம் தாத்தாவிற்கு பேரனின் வார்த்தைகளில் நம்பிக்கை பிறக்காது போக.வேலு தாத்தாவிடம் பேச்சை வளர்க்க சில தினங்களுக்கு முன்பு மதுரையில் அவனை பார்த்ததை கூறினார்.

"நீ ஏகனை இதுக்கு முன்ன பார்த்திருக்கியா வேலா..!?

முதல் கேள்வியை முத்தாய்ப்பாய் சிதம்பரம் கேட்க...

"ஆமாம்டா தியாகு போன வாரம் பாப்புமா கூட ஒரு போட்டிக்கு போனேன். அங்க தான் நீன்னு நினச்சு தியாகுன்னு சொல்லி தம்பிகிட்ட பேசினேன்...!"

தான் சொல்லும் பதிலின் வீரியம் உணராது கித்தாய்ப்பாய் பதில் உரைத்தார் வேல் தாத்தா.

'பாவம்!' வேல் தாத்தா தாங்கள் சென்ற ஊர் மதுரை என்பதை அறியாது போனார்.
ஒருவேளை தெரிந்திருந்தால் பேத்தியை தடுத்து இருப்பார்.

பேத்தியை தடுக்கும் சக்தி தன் உயிருக்கு உண்டு என்றால் அதனை கொடுத்தேனும் அவளை தடுத்து இருப்பார்.

'ஆனால்!'

வேல் தாத்தாவின் சிந்தனையில் இருந்தது எல்லாம் 'தியாகு' என்று ஏகனை நெருங்கியது மட்டும் தான்.அதன் பின்னான ஒன்றும் அவருக்கு ஞாபகத்தில் இல்லை.

தேவை அறிந்து அதை மறக்க செய்வதில் தான் காலத்திற்கு எத்தனை இன்பம் 'பாருங்கள்!'

இப்பொழுதும் அவனை மருத்துவமனை வாயிலில் சந்தித்ததை மறந்தவர் தன் பேத்தி காரில் அமர வைத்ததை மனதில் பதித்து

"இப்போ கூட பாருடா பாப்புவை கூப்பிட காரோட வந்து நிக்கிறாரு தியாகு. நான் ஒருத்தன் இப்பவும் நீயுன்னு நினச்சு தம்பிகிட்ட பேசிட்டே வந்தேன்!"

விதி ஆடும் சதிராட்டத்தில் நாம் அனைவரும் பகடைகளானால் ரிதமின் வாழ்வில் தாத்தாவை வைத்து பகடை உருட்டியது விதி.

நண்பனின் சொல்லில் நம்பிக்கை வரபெற்றவர்.

அப்பொழுது தான் ரிதமின் இடையில் அமரத் தெரியாது குரங்கு குட்டி போல் தொற்றி கழுத்தைக் கட்டிக் கொண்டு அமர்ந்திருந்த கொள்ளு பேரனை கண்டவர் மனம் 'ஆண்டவனின் பிணைப்புதான் இந்த உறவு!' என உணர்ந்து.


'பேரன் மனதில் அந்த பெண் இருக்கிறாளோ!? இல்லையோ!? ஒருவேளை பேரன் கூறியது பொய்யே ஆனாலும் அதனை நிகழ்த்தி விடவேண்டும்!'

அகரன் வாழ்வும், ரிதம் வாழ்வும்,ஏன் ஏகன் வாழ்வும் இம்முடிவில் கண்டிப்பாக 'வல்லமை பெரும்' என்ற நம்பிக்கை அவருக்கு நிறைந்தே இருந்தது.

எப்படியாவது ரிதமை சம்மதிக்க வைத்தே ஆக வேண்டும்.அவள் 'மாட்டேன்!' என்றால் வேலு தாத்தா கொடுத்த வாக்கை காரணம் காண்பித்து அவளை ஒப்புக் கொள்ள செய்யவேண்டும்.ஏகன் போல யோசிக்கலானார்.ஆனால் ஏகனை போல் ரிதம் மனதை அவர் நோகடிக்க விரும்பவில்லை.

'கண்டிப்பாக நாளை காலை இதை பற்றி அவளிடம் பேச வேண்டும்!'என்று முடிவோடு கொள்ளுப்பேரன் முகம் பார்த்தவர்.அகரன் முகத்தின் மகிழ்வை கண்டு தன் முகம் விகசிக்க நின்ற ஏகனை நிறைவாய் கண்டார்.

அது அகரனால் வந்த மகிழ்வு தான்.

'ஆனால்!'

சிதம்பரம் தாத்தா புரிந்து கொண்டதோ ரிதம் எனும் பேடைக்குயில் இசைக்கு மயங்கி பேரன் காதல் வயத்தில் மூழ்கியதாக கற்பிதம் கொண்டார்.

"சரி தாத்தா நாங்க கிளம்பறோம்!"
ரிதம் கிளம்ப தயாராக...

"என்னம்மா இப்போ எப்படி கிளம்பறது சொல்லு.இங்க எங்கமா தங்கி இருக்க எதுக்கு ஹாஸ்பிடல் போனீங்க!?" அவர் அக்கறையாக கேட்க..



காரைக்குடியில் இருந்ததாகவும்,
தாத்தாவி்ன் உடல் சில மாதங்களாக சரி இல்லாது போனதும் மருத்துவமனை சென்ற போது கண்டிப்பாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றதும் கூற.

அவரோ, "ஏம்மா குடும்பம் எல்லாரும் காரைக்குடியிலா இருக்காங்க!?" என்க

உண்மையாகவே அவரின் அக்கறை பேச்சில் கண்கள் கலங்கியது அவளுக்கு.

கலங்கிய விழியுடன்,"இல்லங்க தாத்தா! அவங்க எல்லாரும் ஒரு ஆக்சிடென்ட்ல இறந்துட்டாங்க.இப்போ நானும் தாத்தாவும் மட்டும் தான்" என்றதில் அந்த சிறு பெண்ணின் துயரை புரிந்து கொண்டவர்.

மேலும் கேள்விகள் கேட்க மனம்வராது,

"விடுடாம்மா அதுதான் தாத்தா இருக்கோம் இல்ல.ஏகன்,அகரன்னு உனக்காக ஒரு குடும்பமே இருக்கு இல்ல.நீ எதையும் நினச்சு கவலைபடாதம்மா!" அன்பாய் உரைத்தவர் மனதில் ஒரு உறுதி.

இப்படி ஒவ்வொருவரும் தங்கள் மனதில் ஒரு உறுதி ஏற்க காலம் இவர்களின் எந்த உறுதியை நிறைவேற்றும்...


'யார் அறிவார்!?'



"நீ இங்கேயே இருக்கணும் ரிதம் என்ன சொல்ற!? வேலுவை நான் ஒருமுறை தொலச்சுட்டேன் இனியும் அவனை விட எனக்கு மனசில்லம்மா. கடைசி காலத்துல எனக்கு அவன்.. அவனுக்கு நான்னு.. இருதுட்டு போறோமேம்மா!"

எப்படி கூறினால் அவள் ஒப்புக் கொள்வாளோ அந்த வகையில் மனதின் ஆசையை கேட்க.

"தாத்தா நான் என் பிரென்ட் வீட்ல தான் தங்கி இருந்தேன்.நைட்டு நான் போகலைன்னா அவளுக்கு சங்கடம் இல்லையா?" என்க.

அவளின் உணர்வை புரிந்தவர்,"நான் அந்த பொண்ணுகிட்ட பேசுறேன் நீ ஃபோன் பண்ணுமா!" என்றவர்.தானே ரேணு, பிரபாவிடம் பேசி ரிதமை தன் இல்லத்தில் தங்க செய்து நினைத்ததை சாதித்துவிட்டார்.


அவளுக்கு அமைதி வழங்க விரும்பிய தாத்தா தனிமையை கொடுத்து தன் நண்பனுடன் வீட்டிற்குள் சென்றுவிட்டார்.

தனியே நின்ற தளிரின் மனமெல்லாம் ஏகனே நிறைந்திருந்தான்.

அன்பாய் அல்ல; ஆத்திரமாய் அவனை கருக கருக வறுத்து எடுத்தாள் மனதில்.

தனியே சிக்கினான் என்றால் வார்த்தையால் அவனை வஞ்சிப்பால் வஞ்சிக்கொடி அதில் எந்த சந்தேகமும் கிடையாது.

"என்னடா ஜாமுன் என்னை ஏன் அப்படி பாக்குறீங்க!?"
அவன் பார்வையின் பொருள் புரிந்தாலும் வாய்மொழியாக கேட்க சிறுவனை தூண்டினாள் ரிதம்.


"ரசகுல்லா நான் ஜாமுன்னா!?" கண்களை விரித்துக் கொள்ளை கொள்ளும் அழகுடன் கேட்டான் அகரன்.

அந்த அழகில் சொக்கி மார்போடு அணைத்து கரமதை அவன் கேசத்தில் அளவளாவ விட.

அது குட்டிக்கு தாய்மையை உணர்த்தியதோ தன் அன்பை தானும் காட்டிட கழுத்தோடு கரம் சேர்த்தவன் வினவினான்

"என் கூடவே இருக்கீங்களா ரசகுல்லா!?"

அப்போது தான் தோட்டம் வந்த ஏகன் மகன் கேள்வியில் திகைத்து போனான்.அந்த பிள்ளை முகத்தில் தான் எத்தனை ஆர்வம், ஆசை.

இதுவரை,'தான் எடுத்த முடிவு சரிவருமா!?' என்ற கேள்வி பின்னால் சென்று விட.

'இது மட்டுமே சரிவரும்!' எனும் விதையை ஆழமாய் ஆணவன் மனதில் விதைத்தது.

"சரிடா ஜாமுன் நான் இங்க தங்கறேன். அப்போ நீ எனக்கு என்ன தருவ!?" பேரம் பேசினாள் பெருவுடையள்.

"என்ன வேணும் ரசகுல்லா? யூ சே என்னால முடிஞ்சா கண்டிப்பா செய்றேன். இல்லைன்னா அப்பாகிட்ட சொல்லி செய்றேன்!" சிறுவன் கூற.

"உங்க அப்பாகிட்ட எல்லாம் வேண்டாம்!" படக்கென்று கூறிவிட்டு

குட்டியின் குடை காதினுள் எதையோ ஓதிட கேட்டதும் கொடுக்கும் வள்ளலாய் மாறிய பிள்ளைக் கனியமுது ரிதம் கேட்ட ஒற்றை முத்தத்திற்கு முகம் முழுவதும் முத்தத்தால் முக்குளிக்க செய்தான்.


சிறு தொலைவில் இருந்து இங்கே நடப்பதில் கவனம் வைத்திருந்த ஏகன் மனதில் பொறாமை தீ கொழுந்துவிட்டு எரிந்தது.

உள்ளுக்குள் ஏதோ உந்தித் தள்ள நிமிர்ந்த மான் விழியோ மாறன் கண்கள் காட்டிய அக்னி ஜ்வாலையில் அரண்டு போனாள்.

'எதற்காக இவன் என்னை இப்படி தீயாய் முறைக்கிறான்!?' காரணம் புரியாது போக அதன்பின் அகரனிடம் காதுக்குள் ரகசியம் பேசிய ரிதம்

"எங்கே உறங்க செல்வது!?" எனும் கேள்வி உதிக்க

"தான் இவனிடம் போய் கேட்பதா!?" அவளின் சுயமரியாதை தடுக்க அழுத்தமாய் அமர்ந்திருக்க.

மௌனம் சரிவராது என்பது புரிந்து "அகரன் நீ தூங்க போகலையா!?" மகனிடம் வினவியவாரு வந்தான் ஏகன்.

அவளின் முகம் பார்த்தவாறு பிள்ளை அவளையும் கையோடு இழுத்துக் கொண்டு உள்ளே செல்ல.

தயங்கியவாறே சென்றாள் ரிதம். "இதற்கும் இவன் தன்னை என்ன காரணம் கூறி பழி சொல்வானோ!?" என்ற கவலை அவளுக்கு.


உறங்கும் வரையும் அவளை அருகிருத்தி, தூக்கத்திலும் சுடிதார் ஷாலை பற்றிக் கொண்டிருந்த குழந்தையின் மாசில்லா மாருதமாய் கிடைத்த அன்பில் நெகிழ்ந்த நறுமுகை அன்பாய் இட்டாள் ஒற்றை நெற்றி முத்தம்.

அம்முத்தம் என்ன உணர்த்தியதுவோ சிறுவன் உறக்கத்தில் கூட இதழ் விரிக்க அவன் கன்னம் காட்டிய சிறு குழியில் மனதை புதைத்த பூவை தலைமுடி கோதியவாறு உறங்கும் பிள்ளையை ரசிக்க.

"தூங்கற குழந்தையை ரசிக்ககூடாது தெரியாதா ரிதம் மே...டம்ம்...!?"

அதுவரை நடப்பதை அமைதியாய் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்திருந்த ஏகன் ரிதமுடம் கேள்வி கேட்டு இழுவையாய் இழுக்க.

ஆடவன் குரல் அமைதியான அறையில் அதிரடியாக கேட்க

'ஹா...' எனப் பதறி திரும்பியவள் ஏகனை முறையாய் முறைத்துத் தள்ளினாள்.

இரவின் இனிமை இதமாய் கொல்ல, தோட்டத்திற்கு வந்தனர் இருவரும்.

அவன் தான் அழைப்பு விடுத்தான் "கொஞ்சம் பேசணும் தோட்டத்துக்கு போய் பேசலாமா!?" என்று.

தான் மனதில் தொடுத்த கேள்விக் கணைகளை அவனை நோக்கி எய்திடும் முனைப்போடு அவனை பின் தொடர்ந்தாள்.

இருள் கவ்வினாலும் மின்னொளி அதனை விரட்டி அடித்தது.தோட்டத்தை நோட்டமிட்ட ரிதம் நிமிர்ந்து சுற்றும் முற்றும் பார்த்தாள் சற்று கத்தி அழைத்தால் வந்துவிடும் தொலைவில் வாயிற்காவலர் நின்றிருக்க மனம் அமைதியானது.


யாரென்று அறியாத ஆடவனுடன் இரவில், பனியில் தோய்ந்த மலர் போல நடுக்கத்துடன் நின்றிருப்பது இதுவே முதன்முறை.

தாத்தா உடல் நலமோடு இருந்தவரை கடைத்தெருவிற்கு கூட பேத்தியை அனுமதித்தது கிடையாது.

பேத்தியின் வேலை எல்லாம் நன்றாக படிப்பது ,உண்பது, உறங்குவது மட்டுமே.
எந்த இடத்திலும் மனதில் உள்ளதை பேசிடவும்,கேள்வி கேட்க வேண்டிய இடங்களில் கேட்டே ஆகவேண்டும் எனும் போதனைகளை குறைவில்லாது வழங்கி இருந்தார்.

வாய் உதவாத இடங்களில் கைகளால் பதில் சொல்லும் தைரியமும் அவரே கொடுத்திருந்தார்.

"இதுவரை அவளை யாரும் நெருங்கியது இல்லை என்பதை விட; 'பெண்' எனும் பெரும் நெருப்பு தன் அருகில் யாரையும் நெருங்கிவிட்டது இல்லை என்பதே உண்மை!"

அவள் கண்களில் எரியும் ஜ்வாலை எவரையும் இரண்டடி தள்ளியே நிறுத்தும் வல்லமை கொண்டது.

இன்றும் தன் முன் நிற்பவனை கண்கள் பொழியும் பெண்மையின் அழலானது பஸ்பமாக்க முயல.

அவனோ,'அவள் பார்வையில் வெளியில் குளிரும் மனதில் வெம்மையும் தாக்க நின்றிருப்பான்!' என்று நம்பினால்...

அது 'விழல் நீரே!'

நம் கற்பிதங்கள் அனைத்திற்கும் அப்பார்பட்ட ஆருகன் அவன்.

'பெண்களின் நளினங்களில் மயங்கும் மாயவன் அல்ல நான்! நீ அக்னி ஜ்வாலை எனில் நான் எரிமலைக் குழம்பு.உன் கோபம் என்னுள் சிறு துளியே!
எந்த அளவிற்கு உக்கிரம் கொண்டு எரித்தாலும் என் பிளம்பின் முன் நீ ஒன்றும்
இல்லா நீ சிறு அனுவே!'

பதில் பார்வை பார்த்தான் அஞ்சான்.

அவளிடம் பேசும் தேவை தனக்கு இருப்பதால் தான் இந்த பொறுமை. 'இல்லை' என்றால் அவளுக்கு மேல் இவன் குதியாய் குதித்து இருப்பான் கோபத்தில்.
 
பெண்களின் நளினங்களில் மயங்கும் மாயவன் அல்ல நான்! நீ அக்னி ஜ்வாலை எனில் நான் எரிமலைக் குழம்பு.உன் கோபம் என்னுள் சிறு துளியே!
எந்த அளவிற்கு உக்கிரம் கொண்டு எரித்தாலும் என் பிளம்பின் முன் நீ ஒன்றும்
இல்லா நீ சிறு அனுவே!'
டபிள் தமாக்கா லாலீஸ்.... கோட்டுக்குள்ளே நின்றதில்லை
காதல் 8❤️‍🔥 வந்தது💐💐💐
 
நீ தான டா கூட்டிட்டு வந்த🤔ஏதோ அவ தப்புன்ற மாதிரியே பார்க்குற🙄
தலைக்கணம் பிடிச்ச பையன் 😒... உவகை கொள் நன்றிகள்💐
 
Top