Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோட்டுக்குள்ளே நின்றதில்லை காதல் 38 ❤️‍🔥

Advertisement

ஐ eagle eyes

Well-known member
Member
காதல் 38 ❤️‍🔥

"தீரா உயிர் வலியின்
உச்சம் காதலா அன்பே......!?"



ரேணுவும், ரிதமும் தோழிக்கு அரணாக நின்று கொண்டு 'இருமுனை கத்தி' போல் மாறி மாப்பிள்ளை வீட்டாரை வார்த்தையால் விலாச.

மாப்பிள்ளையின் தந்தை," எதுவானாலும் நமக்குள் பேசித் தீர்த்து கல்யாணத்தை நடத்தலாம்!" சாமர்த்தியமாக பேசிட முனைய.

"உன் அலங்கார வார்த்தைகளுக்கு மயங்கும் ஆட்களா நாங்கள்!?" என எண்ணிய ரிதம்

"எப்படி உங்க மூத்த மருமகளை நாலு செவத்துக்குள்ள வச்சு கொலை பண்ணின மாதிரியா!?"

அவளின் வெடுக்கென்ற கேள்வியில்....
வியர்வை வழிய அதை புறங்கையால் துடைத்து கொண்டு 'வீண் வாதம்' ஏற்றார் மாப்பிள்ளையின் தாய்.


"ஏம்மா நீ ஒரு போலீஸ்காரனை பத்தி பேசிட்டு இருக்கம்மா.என் பிள்ளையை நான் எப்படி வளர்த்தேன் தெரியுமா!?" அவர் பிள்ளை வளர்த்த விதத்தை புராணம் படிக்க..

அந்நேரம் ஓடியது மாப்பிள்ளை முதல் மனைவியை கொல்வதற்கு துணை நின்ற தாய் தந்தையின் சுயரூப தரிசனம்.

மணமக்களை பார்ப்பதற்காக பொருத்தப்பட்டிருந்த திரையில் தான் இந்த காட்சி ஒளிபரப்பு செய்யப்பட.

அதை கண்ட பெரியம்மாவோ அல்லுவிட நின்றிருந்தார்.

"பாவிகளா! இவனையா நான் நியாயவாதின்னு நினைச்சேன்.ஆத்தி காசுன்னு போய் நின்றுந்தா நம்ம கதியும் இதுதானடி!"

தனக்குள் சிந்தித்தவர் அரண்டு நின்றிருக்க.

மாப்பிள்ளையின் தாயோ,"என்னம்மா? பொய்யா ஒரு வீடியோ தயார் பண்ணி எங்களை அசிங்கபடுத்த பார்க்குறியா?" நியாயவாதி போல் பேச.

இந்த வீடியோ 'உண்மையா?' 'பொய்யா?' 'நாங்க உங்களை பத்தி வதந்தியை பரப்புறோமா?' இதெல்லாம் அங்க நிக்கிறாங்க இல்ல அவங்க கண்டுபிடிப்பாங்க.


மாப்பிள்ளையோ,"எவிடென்ஸ்ஸ ஃபேபிரிகேட் பண்ணினா என்ன தண்டனை தெரியுமா!?"

நல்ல பிள்ளை போல் பாடம் எடுக்க துவங்க.


"அதெல்லாம் நீ முதல்ல கத்துக்கோ. இப்போ குடும்பமா கிளம்புங்க அவங்க கூட!" என ரேணு கூற.

அவள் காண்பித்த திசையில் காவல் துறை அதிகாரிகள் குழுவாக நின்றிருக்க இக்னேஷின் கண் அசைவில் வந்து அந்த மூவரையும் இழுத்து செல்ல.


மாப்பிள்ளை மதிவாணனின் தாய் அனைவரையும் சாபத்தால் வாகையிட,
பெண்கள் மூவரையும் கடந்து சென்ற மாப்பிள்ளை மதிவாணன் கண்களில் தான் ரிதமைக் கண்டு எத்தனை வன்மம்.


அங்கிருந்து நழுவ பார்த்த வாப்பட்டி பெரியம்மாவை 'கிடுக்கு பிடியிட்டு பிடித்தாள்!'ரிதம்.

"என்ன பெரியத்த நீங்க தானே இந்த மாப்பிள்ளைக்கு நிவேதா பத்தி சொன்னது!?"

இப்பொழுது அவரின் முன் வந்து நிற்க.

அவருக்கே அந்த மாப்பிள்ளை மதியின் முதல் மனைவியின் கொலையை கண்முன் காணும் போது ஒரு நிமிடம் 'உயிரே உறைந்தது!' என்பதால் தங்கை மகள் முன் வந்தவர்.

"என்னை மன்னிச்சிடு நிவேதா.காசுக்கு பங்கு கிடைக்கும்னு தான் நினைச்சேன். அப்படியே உன்னை கொஞ்சம் திட்டிக்களாம்னு யோசிச்சேன் ஆனா உன்னை கொலை செய்ற அளவுக்கு நான் யோசிக்கலைமா!" என்றார் கண்ணில் நீர் வடிய.

அவரிடம் என்ன பதில் சொல்வது என்பதை அறியாது வெறும் தலையை மட்டும் அவள் அசைக்க.அதற்கு மேல் அங்கே நிற்க முடியாது வெளியேறினார் அவர்.

இப்பொழுது கூடி நின்ற மாப்பிள்ளை வீட்டு மகா ஜனங்கள் ஜாகையை கலைக்க.

பெண்வீட்டார் ஒரு சிலர்,"அதுதான் பெத்தவ இருந்து பண்ணி இருந்தா இப்படி விட்டிருப்பாளா!?" என்றும்;

"இந்த பிள்ளைக்கு ராசி அவ்வளவு தான் போல பாரு மேடைக்கு வந்து நடக்காம போய்டுச்சு கல்யாணம்!" என்றும்;

"அதுக்கு வாய் கொஞ்சமா பேசணும் வயசு வித்தியாசம் இல்லாம பெரியவங்க எல்லாரையும் எதிர்த்து பேசினா! அப்பறம் இப்படி நிற்கதியா நிற்கவேண்டியது தான்!" தங்களுக்குள் வாய்க்கு வந்தபடி பேசியவாரு கலையத் தொடங்கினர்.

"எங்கே தங்கள் தலையில் பொறுப்பை விட்டுவிடுவாரோ!?" என்று அனைவரும் துண்டை உதறிக்கொண்டு செல்வது போல பொறுப்பை உதறிக் கொண்டு பின்னங்கால் பிடரியில் பட ஓட்டம் பிடித்தனர்.

அந்நேரம் ஏகன் கண்களில் விழுந்தார் நெஞ்சை பிடித்துக் கொண்டு வியர்வை வடிய மூச்சிற்கு ஏங்கிய நிவேதாவின் மாமா.


தன் பாதுகாவலன் ஒருவனை அழைத்து அவரை மருத்துவமனை அழைத்து கொண்டு செல்லுமாறு கூறிட...உடனே அவரை மருத்துவமனை அழைத்து சென்றனர்.

நிவேதாவின் அத்தையோ தன் நிலையை எண்ணி தலையில் அடித்து அழுது கொண்டே கணவனை பின்தொடர்ந்தார்.

"இந்த பொண்ணு உண்மையா ராசி கெட்டவ தான் போலவே.பாருங்க நல்லது செய்ய வந்த அந்த மனுசனும் இப்போ ஆஸ்பத்திரிக்கு போற நிலைமைக்கு கொண்டு வந்து நிறுத்தி இருக்குன்னா அப்போ எவ்வளவு நல்ல ராசி பாருங்க இந்த பொண்ணுக்கு!?"

அதுவரை வாய்க்குள் முணங்கிய மூடர் கூடம் இப்பொழுது சத்தமாகவே பேசியது.


"தாயில்லா பெண்ணின் திருமணம் பாதியில் நின்றதே!"

உண்மையாக கவலை கொண்ட நல்ல உள்ளங்கள் மட்டுமே அங்கே மீதம் இருக்க.
ரிதம் நிவேதா முகம் பார்த்தாள்.கண்களில் தான் கண்ணீர் ஆறாய் பெருகி ஓடியது.

அடுத்தவருக்கு ஒன்று என்றால் முன்னால் சென்று நிற்கும் பெண் புலியின் மனதிலும் 'முள் தைத்ததோ!?' கண்கள் கண்ணீரை சொரிந்தது.

ரேணு ஒருபுறம் அணைக்க, ரிதம் மறுபுறம் அணைக்க நடுவே நின்று அவர்களின் தோளில் முகம் புதைத்து அழுதாள் நிவேதா.


நல்ல வேளை வேல் தாத்தாவையும், அகரனையும் பாலுவும் லதாவும் தங்கள் காரில் அழைத்து சென்றுவிட்டனர்.

'இல்லை' எனில் இங்கிருக்கும் சூழலில் பிள்ளையும் பயந்திருப்பான்.தாத்தாவின் உடல் நலனிலும் பின்னிறக்கம் வந்திருக்கும்.


அந்த நிலைக்கு ஆளாக்காது ஏகன் முன்பே அனைத்தையும் கணித்து செயல்பட்டிருந்தான்.


ஏகன் கூறிய தகவலின் படி வெளியே சென்ற பாலு,லதா இருவரும் தாத்தா அகரன் சகிதம் கோவிலின் உள்ளே நுழைய வேகமாய் வந்த லதா அழுது வடிந்த முகத்தோடு நின்ற நிவேதாவைக் கண்டு

"ஏம்மா அந்த மாப்பிள்ளையை அடிப்பேன் மிதிப்பேன்னு வசனம் பேசுன...எங்ககிட்ட அந்த குதி குதிச்ச...இப்போ என்னவோ சின்ன பிள்ளை மாதிரி அழுதுட்டு இருக்க!" என்க

அதில் ரோசம் வரபெற்றவள்,"யாரு அழுதது!? நான் ஒன்னும் அழுகலையே இவளுங்களுக்கு நான் ஆறுதல் சொல்லிட்டு இருந்தேன்!" என்றாள்.

"அதெல்லாம் இருக்கட்டும் நீ எனக்கு ஒரு வாக்கு கொடுத்த இல்லையா.அதை இப்போ கேட்டா செய்வியா? இல்ல அழுகலைன்னு பொய் சொன்ன மாதிரி வாக்கு கொடுக்கலைன்னு சொல்லுவியா?" பூடகமாய் கேட்க


எங்கே மறுத்தால் தன் கெத்து 'இறங்கி விடுமோ!?' என்று யோசிக்காது "செய்றேன்!" என்று மீண்டும் வாக்கு கொடுத்தாள் நிவேதா.

"அப்போ இங்க இன்னைக்கு இப்போவே உனக்கு கல்யாணம் நடக்கணும்.போய் மணமேடைல உட்காரும்மா!" என்றார் ஆதூரமாய்.

மறுக்கத்தான் நிவேதா நினைத்தாள் ஆனால் அவரின் ஆதூர குரல் அவள் அன்னையின் குரலாய் ஒலிக்க. மறுவார்த்தை பேசாது சென்று அமர.

மந்திர கட்டுக்குள் கட்டுண்டதை போல லதாவின் குரலுக்கு செவி மடுக்கும் நிவேதா புதிய அவதாரம் தான் தோழியருக்கு..

தாத்தா ஒன்றும் புரியாது பாலுவை பார்க்க அவரோ "மாமா.." என்று தொடங்கி நடந்த அனைத்தையும் பொறுமையாக விளக்க.

பெரும் கண்டத்தில் இருந்து பேத்தியாய் வளர்த்த பிள்ளையை காத்ததற்கு அந்த வளர் ஒளிநாதர் கோபுரத்தை நோக்கி பெரும் கும்பிடு ஒன்றை போட்டிருந்தார் வேல் தாத்தா.


இப்போது அவரும் கூட்டத்தில் நுழைந்து கொள்ள ஏகன் ஒரு நாற்காலி அகரன் ஒரு நாற்காலி என்று இருவரும் ஒரே போல் அமர்ந்து நடப்பதை வேடிக்கை பார்த்திருந்தனர்.


"மாப்பிள்ளை யார்!?"

கேள்வி அங்கே பெரிய குழப்பத்தை ஏற்படுத்த...லதா நேரே இக்னேஷ் முன் சென்று நின்றார்.

ஏகனுக்கு முன்பே,'அன்னையின் முடிவு இதுவாக தான் இருக்கும்' என்று தெரியுமாதலால் அமைதியாக நடப்பதை கவனித்திருந்தான்.


தன் முன் வந்து நிற்கும் லதாவை பார்த்து திருதிருத்தான் இக்னேஷ்.

"மேடம் என்ன வேணும்!?" என்க

"எனக்கு ஒரு பொண்ணு இருந்து அவளை உனக்கு நான் கட்டுவச்சா கட்டிப்ப இல்லையா இகி!?"என்றார் அன்பாய்.

'ஆம்!'

அவருக்கு மூன்றாம் மகன் அல்ல;அவனும் நவநியும் ஒட்டிப்பிறந்த ரெட்டை பிள்ளைகள் போல.

பெற்றால் தான் பிள்ளையா லதாவின் பிள்ளைகள் கொடுக்காத உரிமையை கொடுத்த அவர் பெறாத செல்வங்கள் இருவரும்.

உரிமையாக அவர் கேட்டு நிற்க நிவேதாவை கண்டவன் மனம் இப்பொழுது
ஆழ்கடல் அமைதி கொண்டது.

"புரிந்து கொண்டான் தான் கொண்ட நோய்; பெயரில்லா, வடிவில்லா, வாசனை இல்லா,கண் இல்லா,காதும் இல்லா, உலகெங்கும் பரவி கிடந்து மனிதர்களால் பெயரிடப்பட்ட 'காதல்' எனும் கொடும் நோய்! என்று.


புரிந்த நொடி லதாவிடம் 'சரி' என்று தலை அசைத்தவன் திரும்பி ஏகன் முகம் பார்க்க அவனோ 'உன் வாழ்க்கை! உன் முடிவு!!' என்று விடாது;

தன் அனுமதி வேண்டி நிற்கும் இளையவனுக்கு 'சரி!' என்பதாய் சிரித்த முகத்துடன் தலை அசைத்தான்.

அதில் உற்சாகம் வரபெற்றவன் வேல் தாத்தா முன் சென்று நின்றான்

"தாத்தா உங்க பேத்தி நிவேதாவை எனக்கு கல்யாணம் பண்ணி தருவீங்களா!?"

அவரிடம் அனுமதி கேட்டவன் கூடவே நின்ற இரண்டு தோழிகளையும் பார்த்து,

"ரிதம், ரேணு எனக்கு உங்க பிரெண்டை பிடிச்சிருக்கு கல்யாணம் பண்ணிக்கலாமா!?" என அனுமதி வேண்டி நின்றான்.

அதில் தான்,"நிவேதா முதல் முறையாக அவனிடம் சருக்கினாள்!" எனலாம்.


இருவரும் விரித்த முகம் அழகு சிரித்த முகமாக "கண்டிப்பா!" என்று ஒரே குரலில் ஒப்புதல் கூறிட

ஏகன் மற்றும் ரேணுவின் கணவன் இருவரையும் பார்த்து உங்களுக்கு "ஓகே தானே!?" என்றான்.

ரேணுவின் கணவன் "எனக்கு டபிள் ஓகே இக்னேஷ்" என்க.

வெற்றிக்கு அறிகுறியாம் 'கட்டை விரலை' உயர்த்தி காட்டினான் ஏகன்.


பாலு தான் இடை புகுந்தார்,"மை டியர் பாய் என்கிட்ட கேட்கவே இல்லையே கண்ணா நீ!?"

சிவாஜி கணேசனாய் நாடக பாணியில் கேட்க

"சரி சொல்லுங்க உங்களுக்கு நான் நிவேதாவை கல்யாணம் பண்ணிக்க விருப்பமா!?" எனக் கேட்க

"இந்த சின்ன வயசுல உன்ன குடும்ப சிறைக்குள்ள அடைக்கரதை நினைச்சா கவலையா இருக்கு... ஆனா சங்கத்துக்கு ஒரு புது ஆளு வர்றத நினைச்சா ஒரே குஷி!"

என அவர் விளையாட்டாய் மொழிய.

முன்பே லதா இந்த யோசனையில் தான் இருந்திருப்பார் போல வெளியில் சென்ற போதே லதா இக்னேஷிற்கு உடையும் மாங்கல்யமும் வாங்கி வந்திருந்தார் என்பதால் அதனை கொடுத்து அவனை அனுப்ப.

"பத்தே நிமிடம் தான் மாப்பிள்ளை தயார்!"

இதோ நிவேதா மீது நல்ல எண்ணம் கொண்டவர்களும், இக்னேஷ் மீது அன்பு கொண்டவர்களும் சூழ காதல் தோன்றிய கணமே மங்களம் பொங்கும் மணவாழ்வில் இணைவதை எண்ணி 'மூடாத வாய்' உடன் நிவேதாவின் கழுத்தில் மாங்கல்யம் சூடினான் இக்னேஷ்.

"தான் கொண்ட வலியின் பெயர் காதல் தான்! என்று உணர்ந்த நொடியே காதல் கைகூடி காதலி மனைவியாகவும் மாறும் பாக்யம் எத்தனை பேருக்கு கிட்டும்!?"

"உறவுகள் இன்றி வாழ்ந்த ஆண்மகன் அவனுக்கு காதல் உணர்ந்த நொடியே காதலியே மனைவி எனும் உறவாயும் வந்து அமைந்த பாக்கியம் பெற்றான்!" இக்னேஷ்.


"இப்போ எதுக்கு இந்த குடுமி பல்ல பல்ல காட்டிட்டு இருக்கான் ஐயர் என்ன பல் டாக்டரா!?"

ஆராய்ச்சியின் இடையே ஐயரை பார்த்துவிட்டு நிவேதா அவளின் குடுமியை பார்த்த நேரம்

"கெட்டிமேளம்..கெட்டிமேளம்.." என்று ஐயர்வாள் கூற மங்கள வாத்தியம் ஒலிக்க தன்னுள் உறைந்த தளிர் மலரை தன்னவளாக்கி மனம் நிறைந்தான் இக்னேஷ்.

அதன் பின்னான எந்த சடங்கிலும் குறைவைக்கவில்லை தோழியர் இருவரும்.

மாலை நேரம் புதுமண தம்பதியை ரேணு மற்றும் பிரபாகரன் பொறுப்பில் விட்டுவிட்டு லதா மற்றும் பாலு உடன் மருத்துவமனை சென்றுவிட்டாள் ரிதம்.
நிவேதாவின் மாமா உடல் நிலை அறிய.

மகனுடன் தனக்கு சொந்தமான வீட்டிற்கு சென்ற ஏகனுக்கு வியப்பு தான்.


"யாரும் அறியா ஊருக்கு தோழி என்று ரேணுவை நம்பி வந்த ரிதமாகட்டும்!"


"ரிதம் தனக்கு திருமணம் என்று காரணங்கள் கூறி இருந்தாலும்; அவளை தனியே விடாது தன் உயரம் அறிந்தும் முட்டிமோதி தன்னை காண அனுமதிக் பெற்று தேடி வந்து தோழிக்காக பேசிய நிவேதா, ரேணுவாகட்டும்!"

இப்பொழுது ,"தோழிக்காக கூடி நிற்கும் சபையில் வேங்கையாய் மாறி பாய்ந்து கொண்டிருக்கும் இருவராகட்டும்!"

மூவரின் நட்பில் இருந்த 'எதுவோ!?' ஒன்று அவனை வியக்க வைத்தது.

அவர்களின் நட்பிற்கு பரிசு கொடுக்க அவன் உள்ளம் துள்ளியது.

'ஆனால்!'


'இப்பொழுது இருக்கும் நிலையில் என்ன கொடுப்பது!?'


அறையில் அமர்ந்து யோசனையில் ஆழ்ந்தான் ஏகன்.

"வாழிய...! வாழியவே...!!"
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
ஒரு வழியா மாப்பிள்ளையா வந்தவனுக்கு பெரிய ஆப்பா வச்சாச்சு. ஆனா அவன் ரிதமை வன்மமா பாத்துகிட்டு போறானே🙄🙄🙄🙄.
பார்ரா இந்த குடுமிக்கு நிவேவா புடிச்சிருக்காம். எல்லார்கிட்டையும் மாங்குமாங்குன்னு சம்மதம் வாங்கறானே 😉 😉 😉 😉. ஏப்பா குடுமி சம்மதத்தை சம்பந்த பட்ட ஆளு கிட்ட கேக்காம இருக்கியே ப்பா.🤭🤭🤭🤭🤭. அப்ப உனக்கு கண்டிப்பா பூசை உண்டு மறுபடியும் 😆😆😆😆😆😆
 
எல்லார்கிட்டயும் சம்மதம் கேட்ட இக்னேஷ் முக்கியமான ஆள் கிட்ட சம்மதம் கேட்காம விட்டுட்டியே அவள் இதுக்காக ஒரு நாள் உன்னை வச்சி செய்யப் போறா🤣🤣🤣🤣🤣🤣🤣 ஒரு வழியா கல்யாணம் முடிஞ்சிடுச்சு...... இவங்க மூணு பேருடன் நட்பு அருமை 💞💞💞💞💞💞💞💞
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
ஒரு வழியா மாப்பிள்ளையா வந்தவனுக்கு பெரிய ஆப்பா வச்சாச்சு. ஆனா அவன் ரிதமை வன்மமா பாத்துகிட்டு போறானே🙄🙄🙄🙄.
பார்ரா இந்த குடுமிக்கு நிவேவா புடிச்சிருக்காம். எல்லார்கிட்டையும் மாங்குமாங்குன்னு சம்மதம் வாங்கறானே 😉 😉 😉 😉. ஏப்பா குடுமி சம்மதத்தை சம்பந்த பட்ட ஆளு கிட்ட கேக்காம இருக்கியே ப்பா.🤭🤭🤭🤭🤭. அப்ப உனக்கு கண்டிப்பா பூசை உண்டு மறுபடியும் 😆😆😆😆😆😆
சும்மா விடுமா குடுமி ஆளு தாக்கு தாக்குவா பாருங்க மக்கா😂😂😂
 
எல்லார்கிட்டயும் சம்மதம் கேட்ட இக்னேஷ் முக்கியமான ஆள் கிட்ட சம்மதம் கேட்காம விட்டுட்டியே அவள் இதுக்காக ஒரு நாள் உன்னை வச்சி செய்யப் போறா🤣🤣🤣🤣🤣🤣🤣 ஒரு வழியா கல்யாணம் முடிஞ்சிடுச்சு...... இவங்க மூணு பேருடன் நட்பு அருமை 💞💞💞💞💞💞💞💞
அதெல்லாம் அட்ரட்ரா நாக்குமுக்க தான்🤣🤣🤣🤣🤣
 
"இந்த சின்ன வயசுல உன்ன குடும்ப சிறைக்குள்ள அடைக்கரதை நினைச்சா கவலையா இருக்கு... ஆனா சங்கத்துக்கு ஒரு புது ஆளு வர்றத நினைச்சா ஒரே குஷி!"

இவ்ளோ jovial லான இந்த அப்பாவுக்கு எப்படி ஒரு சிடுசிடுப்பு ஏகன் பொறந்தான்னுதான் ஒரே யோசனை எனக்கு.... :cool::cool::cool::cool::cool::cool::cool::cool:
 
Last edited:
Top