Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோட்டுக்குள்ளே நின்றதில்லை காதல் 15 ❤️‍🔥

Advertisement

ஐ eagle eyes

Well-known member
Member
காதல் 15 ❤️‍🔥

"குறிஞ்சி நிலம் காணா
குன்று தோன்றும்
குறிஞ்சி இவளோ!?"


"ஹாஹாஹா.... என்னடி சொல்றீங்க உண்மையாவா!?"

"அட ஆமாம்டி செம கலாய்!" என்றாள் நிவேதா.

ரேணு,நிவே,பிரபா மூவரும் நவநீ மற்றும் இக்னேஷிற்கு அழைப்பு விடுத்து ஒருவழியாக்கியதை நிவேதா ரிதமிற்கு அழைத்து தெரிவிக்க.

நடந்த கதையை கேட்டவளுக்கோ சிரிப்பை அடக்குவது தான் பெரும்பாடாகி போனது.

"ஏன்டி இந்த வேலை பார்த்த!?" ரிதம் சிரிப்பின் ஊடே கேட்க

"பின்ன என்னடி பண்றது சொல்லு.நான் வீட்டுக்கு வந்ததும் இந்த ரேணு அவனுங்க பத்தி தகவல் இருக்க ஃபைலை நீட்டுனா.
பார்த்த உடனே கலாய்க்கற மாதிரி மூஞ்சிய வச்சுட்டு இருக்கானுங்க முட்டாளுங்க!" என்றாள் நிவே.

"அடியேய் அவனுங்க உன்ன கண்டுபிடிச்சா என்னடி பண்ணுவ!?"
ஒருவித திகில் பரவ ரிதம் வினவ.

"அவ்வளவு அறிவு இருந்தா இந்நேரம் கண்டுபிடிச்சு இருப்பாணுங்கடி பகடா வாயனுங்க!" என்றாள் நிவே.

"நீ மாட்றப்போ எங்களுக்கும் சேர்த்து இருக்குடி!" ரேணு கூற

"அதுவும் உண்மை தான்டி நிவே!"
ரிதம்,ரேணுவை வழி மொழிய.

ரேணு வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது.. யார் இந்நேரம் தங்கள் இல்லம் வந்திருப்பது என்பதைக் காண வெளியில் சென்றாள் ரேணு.

"ஐயோ போச்சு மாட்டிகிட்டோம்!" அலறினாள் கதவை திறக்க சென்ற ரேணு.

கதவை திறக்க சென்றவள் இவ்வாறு கத்தவும் 'என்ன?' 'ஏது?' என்று பார்க்க வந்த நிவேதா

'சத்தியமாக கருகரு முடியை சிறு ரப்பர் பேண்டிற்குள் அடக்கிய அழகிய ஆண்மகனாய் திராவிட நிறத்து திரவியனாய் நின்ற இக்னேஷை எதிர்பார்க்கவில்லை!' என்பது அவளின் விரிந்த கண்களில் தெரிந்தது.

"ஏய் யாருடி வந்தது.நம்ம உண்மையா மாட்டிகிட்டோமா!? எதையாவது சொல்லுங்கடி!" என்று ரிதம் அங்கிருந்து அலற.

"அதெல்லாம் ஒன்னும் இல்ல நான் அப்பறம் கூப்பிடுறேன. நீ இப்போ வைடி அந்த குடுமி வந்திருக்கான்!" என்று வெடியை கொழுத்தி ரிதம் மூளையில் வீசிவிட்டே வைத்தாள் நிவேதா.

"அடிப்பாவி! இப்போ நான் என்ன செய்வேன்? இவன் சும்மாவே என்ன மதிக்கமாட்டான் இதுல இவளுங்க பண்ணின திருகு வேலை மட்டும் தெரிஞ்சிது அவ்வளவு தான் என் சோலி முடிஞ்சுது!"

தனக்குள் நினைத்துக் கொண்டு, வெளியில் எப்பொழுதும் போல நடமாடினாள் ரிதம்.


தோழியர் இருவரும் திரும்பி அழைக்கும் வரை இந்த பதட்டம் நீடிக்கும்.'எப்பொழுது வரும் அழைப்பு!?' என்று கைபேசியை காவல்காத்துக்கொண்டு காத்திருந்தாள் ரிதம்.

வாசலில் வந்து நின்ற இக்னேஷ் "கொஞ்சம் உங்ககிட்ட பேசணும் அதுக்கு தாங்க வந்தேன்!" என்றான்

ரேணு அவனை,'நாம் மாட்டிக் கொண்டோமோ!?' என்று பயந்து ஆராய்ச்சியாக பார்க்க

"ஏங்க கொஞ்சம் கதவை திறங்க!" என்றபடி வந்தான் இக்னேஷ்

"அதெல்லாம் தெரியாத யாருக்கும் கதவை திறக்காதடி ரேணு!" என்றவாறு நிவேதா வர.

உருண்டு திரண்ட 'வெண்ணெய் ஜாடி' போல் தன் முன் நின்ற பெண்ணைக் கண்டு காதுகள் கூட விரிய நின்றான் இக்னேஷ்.

'யாருடா இவ புதுசா இருக்கா!?ஆனா ஆளு பார்க்க நல்லாத்தாண்டா இருக்கா!'
மனதிற்குள் நினைக்க.

ரேணுவை பின்தள்ளி முன்னால் வந்தவள் ரேணு திறந்து வைத்த பாதி கதவையும் அடைக்க தொடங்க

"ஏய் விடுடி அவரு வரட்டும்!"ரேணு பதற

"நீ இருடி ரேணு நான் பார்த்துக்கிறேன்!" நிவேதா வீராப்பாய் உரைக்க.

"ஏங்க நீங்க யாருங்க புதுசா இருக்கீங்க!?"
அவளை அறிய முயன்றான் தூண்டி முள் கண்ணழகன்.

"யோவ் நீ யாருயா என்ன பார்த்து கண்ணால கதை பாடுற!?"

அவன் பறக்கவிட முயன்ற காத்தாடியின் நூலை அறுத்து அவன் கையிலே திணித்தாள் பெண்ணெணும் பேழை.

"இல்லைங்க புதுசா இருக்கீங்களேன்னு கேட்டேன்!" இக்னேஷ் விளக்க

"யோவ் நீதான் இந்த இடத்துக்கு புதுசு நாங்க கிடையாது!" அவன் அடிக்கும் பந்துகள் எல்லாம் விக்கெட்டாக மாற.

'போதும்!' என்று நினைத்தானோ இப்போது மீண்டும் ரேணு புறம் திரும்பினான்.

"ஏங்க சொல்ல வேண்டியதை நான் இப்படியே சொல்லிட்டு போய்டுறேங்க!" இதற்குமேல் நிவேதாவிடம் பேச அவனுக்கு திராணி இல்லை என்பது தான் உண்மை.

யாருகிட்ட கண்ணாலே மியாவ் மியாவ் பாடுறடா பணங்கா மண்டையா மனதிற்குள் தன் அணிந்திருந்த சுடிதாரின் கைகளை பெருமையாய் மடக்கிக் கொண்டாள் நிவே.


இக்னேஷ் அவ்வாறு நிற்பதை பார்த்தவாறு வந்த பிரபாவோ மனைவியை ஒரு முறை, நிவேதாவை கொடூரமாக ஒரு முறை முறைத்தான்.

"நீங்க உள்ள வாங்க இக்னேஷ்!"என்றான் வெளியில் நின்றவனை பார்த்து.

ரேணு கணவன் கோபத்தில் அரண்டுவிட்டாள்.இந்த இரண்டு ஆண்டுகளில் தவறு செய்தாலும் சொல்லி புரிய வைப்பவன் இன்று கோபமாக முறைப்பதை கண்டு

"நான் பார்த்துக்கிறேன்!" என்று ஊக்கம் கொடுத்த நிவேதாவை திரும்பி பார்க்க;

அவளோ பிரபாவிற்கும் இக்னேஷிற்கும் தண்ணீர் கொடுத்து கொண்டிருந்தாள்

"பாவி! என்னை மாட்டிவிட்டுட்டு இவ என்ன வேலை பார்த்துட்டு இருக்கா பாரு!?"

மனதில் வறுத்து எடுத்து அம்மியில் போட்டு அரைத்துக் கொண்டிருந்தாள் தோழியை.


அவளோ," யாரு அண்ணா இவரு உன் ப்ரெண்டா!? இந்த ரேணு எனக்கு சொல்லவே இல்ல!" என்க

அவளின் நாடகம் புரிந்த பிரபா சிறு புன்னகை பூத்தான் நேற்றுதான் அவன் முகத்தை பார்த்து அந்த வாரு வாரினாள்.
இன்று பார்த்துவிட்டு 'உன் நண்பனா!?' என்கிறாள்.அவளின் விளையாட்டு புரிந்தாலும் அவளின் மீதான கோபம் குறையவில்லை.

'அது எப்படி வீட்டிற்கு வந்தவர்களை வாசலோடு அனுப்புலாம்!?' என்ற கோபம் அவனுக்கு.

அதனால் வந்த சிரிப்பை வெளிக்காட்டாது உள்ளுக்குள் நிறுத்திக் கொண்டு
"சொல்லுங்க இக்னேஷ் நான் கேட்டது என்ன ஆச்சு!?" என்றான் பிரபா.

"அது வந்து சார்.. பாஸ் ஓகே
சொல்லிட்டாரு.அதை சொல்ல சிஸ்டர்கு
கால் பண்ணேன் நம்பர் பிசின்னு வந்தது.
அதுதான் உங்களுக்கு கால் பண்ணேன்.
நீங்க வீட்ல வைட் பண்ண சொன்னீங்கன்னு வந்தேன் ஆனா உங்க சிஸ்டர் உள்ள விடலைங்க சார்!" என்றான் நல்ல பிள்ளையாக.

'டேய் குடுமி கோர்த்தா விடுற உனக்கு இருக்குடி!' என்று மனதில் லட்சார்ச்சனை நடத்தியவள்..வெளியில்,"உங்களுக்கு டீயா இல்லைன்னா!? காபியா!?" பணிவாக கேட்டு நிற்க.

அவளின் தலைகீழ் மாற்றம் இக்னேஷ் மனதில் புளியை கரைக்க,
"இல்லங்க எனக்கு எதுவும் வேண்டாம்!" என்றவன் தண்ணீரை மட்டும் குடித்துவிட்டு
கிளம்புவதாக கூற.

"இருங்க இக்னேஷ் இருந்து சாப்பிட்டு போகலாம்!" பிரபா உபசரிக்க

"இல்லங்க சார்!" நாசுக்காக மறுக்க

"சார் எல்லாம் வேண்டாம் இக்னேஷ்.சும்மா பிரபான்னே கூப்பிடுங்க" என்றான்.

"அப்போ ஓகே பிரபா நான் கிளம்பறேன்!" விடாப்பிடியாக நிற்க.

"ரேணு சமையல் நல்லா இருக்கும் சாப்பிடுங்க இக்னேஷ்!" என்றான் பிரபா விடாப்பிடியாக..

பெண்கள் இருவரும் அவனை வெளியே நிறுத்தியதோடு... தண்ணீர் கூட குடிக்காமல் கிளம்புகிறேன் என்று நிற்கும் இக்னேஷை அப்படியே 'சென்றுவா' என்று வழியனுப்ப பிரபாவிற்கு மனம் வரவில்லை.


அதற்கும் மேல் மறுக்க மனமில்லாத இக்னேஷும் அமைதியாக அமர.

"அண்ணா உங்களுக்கு சப்பாத்தி ஓகே வா!? இல்லை பூரியா!?" என்றாள் ரேணு.

"எனக்கு சப்பாத்தி ஓகேம்மா!" என்றான் பதிலாக.


தன்னை கணவனிடம் மாட்டிவிடாது நிவேதாவை மட்டும் அவன் மாட்டிவிட்ட செயல் பிடித்திருக்க 'அண்ணனாக' தத்தெடுத்துக் கொண்டாள் ரேணு.

"ஓஹோ உனக்கு இவன் அண்ணனாடி!?" என்று நிவேதா கண்களால் கேட்க

"நீ மட்டும் பிரபா முன்னாடி பெர்ஃபாமன்ஸ் பண்ணி ஸ்கோர் பண்ண பார்த்த இல்ல. அதுக்குத் தான் பழிக்கு பழி!"

"போடி மித்ர துரோகி"

"நீ போடி குல துரோகி"

இருவரும் கண்களால் மாறி மாறி ஒருவரை ஒருவர் கழுவி ஊற்ற.

"இன்னும் போகலையா!?" என்ற பிரபாவின் அதட்டலில்

"இதோ போய்ட்டோம்!" என்று இருவரும் சமையலறைக்கு ஓடி இருந்தனர்.

புன்னகை உடன் அவர்களை பார்த்திருந்தான் இக்னேஷ்.

"என்ன இக்னேஷ் சிரிக்கிறீங்க!?"
பிரபா அவன் புன்னகை முகம் கண்டு கேட்க

"இல்லங்க பிரபா!"

"இந்த போங்க வாங்க எல்லாம் வேண்டாமே.. எப்படியும் ஒரே செட்டா தான் இருப்போம் சோ.. நீ போ வான்னே கூப்பிடுங்க!"

"சரி பிரபா! அவங்க உங்க சிஸ்டரா.யாரு வீட்லயும் நாத்தனார் இவ்வளவு ஒத்துமையா இருந்து நான் கேள்விப்பட்டது இல்லை அதுதான் பார்க்கறேன்!" என்றான் வியந்து.

"ஹாஹா.... அந்த வாலு என் தங்கச்சி தான் ஆனா கூட பிறக்கலை. ரிதம் மாதிரி இதுவும் ரேணு பிரெண்ட்!" என்றான் அவன்.

"ஹோ! அதுதான் இப்படி ஒரு பாண்டிங்கா?" இக்னேஷ் கூற

பிரபா கேட்டான்,"காலைல உங்களை கால் பண்ணி டிஸ்டர்ப் பண்ணலயே இக்னேஷ்!?"

"ஐயோ! அதெல்லாம் இல்ல பிரபா" விரைந்து பதில் தந்தான்.

சப்பாத்திக்கு மாவை எடுத்து உருட்டிக் கொண்டே பேசத் தொடங்கினாள் ரேணு.

"எதுக்கு பிரபா அவருக்கு கால் பண்ணீங்க!?"
மனைவி கேட்ட கேள்விக்கு

"எல்லாம் அந்த வாலு நேத்து கேட்டுச்சு இல்ல.ஏகன் சாரோட அப்பாயின்மெண்ட்டை கண்டிப்பா நீ வாங்கி தந்தே ஆகனும்னு ஒத்த கால்ல நின்னுச்சே அதனால் தான் இக்னேஷ்க்கு கால் பண்ணேன்!" என்றான் பிரபா.

"ஓ... ஓகே!உங்க பாஸ் என்ன சொன்னாரு அண்ணா!?"

"அவரு ஓகே சொல்லிட்டாரும்மா. நாளைக்கு மதியம் லஞ்ச் டைம் அப்போ வர சொல்லி சொன்னாரு.கரக்ட் டைமுக்கு வந்துடுங்கமா இல்லைன்னா அவருக்கு கோபம் வரும்!" என்று கொளுத்திவிட.

அனுமார் வாலில் பற்றிய நெருப்பு போல நிவேதா மூளை பற்றி எரிந்தது.

'அதன் சாம்பலில் இருந்து என்ன யோசனை வரப்போகிறதோ!? அது நாளை ஏகனை பார்த்து அவள் பேசும் போதுதான் தெரியும்!'

அங்கே இருந்து இரவு உணவை முடித்துக் கொண்டு தான் சென்றான் இக்னேஷ்.
உண்மையாகவே அவளின் உணவு ருசியாக தான் இருந்தது.

அதை அவளிடம் கூறி புகழ்ந்து விட்டே வந்திருந்தான்.

வந்தவன் நேரே சென்றது நவநீயை பார்க்கத்தான்.

"என்னடா சடையா இந்நேரம் கிளினிக் வந்திருக்க என்ன வேணும்!? டியூட்டி டைமல என்னை டிஸ்டர்ப் பண்ணாதடா!" நவநீ விரட்ட

"ஆளே இல்லாத இடத்தில போனி பண்ண முடியாம கஸ்டபடுறியே கொஞ்சம் மனசை தேத்தி தொழிலை சூடு பிடிக்க வைக்கலாம்னு நினைச்சா என்னை விரட்டவா செய்ற பிளடி ராஸ்கல்!"

"டேய் நான் என்ன வட கடையாடா வச்சிருக்கேன் போனி பண்ண!? நான் வச்சிருக்கது சைகாட்ரிக் கிளினிக்!" என்க.

"எதுவோ ஒன்னு ஆளே இல்லாம தானே டீ ஆத்திட்டு இருக்க!" விடாது கேலி செய்ய.

"என்னடா மாடு புடி மாரி மச்சான் ரொம்ப பேசுற!" என்று நிவேதா கலாய்த்த பெயரை கூறி இவனும் கலாய்க்க.

"டேய் சோடா வேண்டாம் நாய் மேய்க்கிற நாயே எதுவும் சொல்லாதடா!" என்று இருவரும் மாறி மாறி அடித்துக் கொண்டனர்.

"இது என்ன பழக்கம் உங்களுக்கு!?"


"வீட்டுக்கு வந்த ஒருத்தவங்கள இப்படித்தான் நடத்துவாங்களா!?"

இக்னேஷ் சென்றபிறகு பெண்கள் இருவருக்கும் பிரபா மண்டகப்படி நடத்தி இருவரையும் தாளிக்க தொடங்க.


அவன் சென்ற உடன் தோழியர் இருவருக்கும் துவங்கிய மண்டகப்படி முடியாது ரிதம் அழைக்கும் வரை நீண்டது.

இக்னேஷ் அவன் இல்லம் செல்வதை தோட்டத்தில் இருந்து கண்டவள் இவர்களுக்கு அழைக்க.

"காப்பாத்திட்டடி தெய்வமே!" என்று இருவரும் தப்பித்தோம், பிழைத்தோம் என்று நழுவினர் கைபேசியுடன்.

"என்னடி ஆச்சு மாட்டிக்கிட்டோமா!?" எடுத்ததும் அவள் இதை கேட்க.

"தப்பிச்சிட்டோம்! ஆனா மாட்டிகிட்டோம்!" என்றாள் நிவேதா

"அது என்னடி தப்பிச்சிட்டோம்!? ஆனா மாட்டிக்கிட்டோம்!?" புரியாது ரிதம் வினவ.

"அந்த குடுமிகிட்ட இருந்து தப்பிச்சிட்டோம்.ஆனா பிரபா அண்ணாகிட்ட மாட்டிக்கிட்டோம்!" நடந்ததை கூற.

அவர்களோடு தான் இல்லாது போன 'ஏக்கம்' ரிதமிடம் நிறைந்தே இருந்தது.
 

அவர்களோடு தான் இல்லாது போன 'ஏக்கம்' ரிதமிடம் நிறைந்தே இருந்தது.

ஹ்ம்ம்.... இது மட்டுமா?


ஏகனை கட்டினதுக்கப்புறம் இன்னும் ஏங்குறதுக்கு நிறைய இருக்கு, ரிதம்....
ரொம்ப வழியாத... 😛😛😛
 
ஹ்ம்ம்.... இது மட்டுமா?

ஏகனை கட்டினதுக்கப்புறம் இன்னும் ஏங்குறதுக்கு நிறைய இருக்கு, ரிதம்....
ரொம்ப வழியாத... 😛😛😛
அது என்னவோ உண்மைதான்🧐🧐🧐
 
Top