Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சம் கொஞ்சம் நெருங்கி வா 6 1

Advertisement

Admin

Admin
Member
அத்தியாயம்-----6

பிறகு அந்த சந்தோஷ மனநிலையிலேயே கிளம்பி இருவரும் காரை நோக்கி சென்றனர்.காரில் செல்லும் போது நினைவு வந்தவனாக பிரதாப்பை பார்த்து அசோக் “ஆமாம் !இவ்வளவு டைம் எடுத்து டிரஸ் பண்ணிட்டு போறியே அங்கே பத்மினி இல்லை என்றால்?”என்று கேள்வி எழுப்பினான்.

அசோக் கூறியவுடன் பிரதாப்புக்கு டென்ஷனாகிவிட்டது . ஆமாம் அவள் வீட்டில் இல்லேன்னா என்ன செய்வது. பிறகு அவனுக்குள்ளாகவே நாம் மாலை தானே செல்கிறோம் அவள் காலேஜில் இருந்து வந்திருப்பாள் என்று தனக்குத்தானே ஒரு மனது கூறிக் கொண்டது .மற்றோரு மனதோ அவள் எங்காவது தன் தோழிகளுடன் வெளியில் சென்றிருந்தால்… என்று தானே கேள்வியும் கேட்டு தானே பதிலும் அவனுக்குள்ளாக வினாவிக் கொண்டிருந்தான்.

பிரதாப்பின் முகத்தில் பல்வேறு உணர்ச்சிகளை பார்த்திருந்த அசோக் “பிரதாப் கவலையை விடு கண்டிப்பா பத்மினி இருப்பாங்க அப்படி இல்லா விட்டாலும் பேச்சு வார்த்தை சுமுகமாக முடிந்தப்பின் அவர்கள் எங்கே சென்று இருக்கிறார்கள் என்று தெரிந்துக் கொண்டு நாம் போய் பார்த்து விடலாம்.” என்று யோசனை கூறினான்.

இவ்வாறு பேசிய வாறே சந்தானத்தின் வீட்டிற்கு சென்று அவரையும் அழைத்துக் கொண்டு கேசவமூர்த்தியின் இருப்பிடம் சென்றனர். உள் நுழைவாயிலிலேயே அவர்களை வரவேற்க கேசவமூர்த்தி காத்துக் கொண்டிருந்தார். இவர்களை பார்த்தவுடன் இன் முகத்துடன் வரவேற்று தன் வீட்டினுள் நுழைந்தார்.

“வாங்க உள்ளே அமர்ந்து பேசலாம்”. என்றதற்க்கு சந்தானம் பிரதாப்பை பார்த்தார். அதற்க்கு பிரதாப் “பரவாயில்லை இங்கு தோட்டத்தில் அமர்ந்தவாறு பேசலாம்” என்று கூறினான். அவன் என்ன தான் அவனுக்குள் ஆயிரம் காரணமாக தாய் தந்தை பாசம், பத்மினியை பார்த்தவுடன் பிடித்து விட்டது என்று அவனே அவனுக்குள் கூறிக் கொண்டாலும் .அவனால் கேசவமூர்த்தியை பார்த்து இயல்பாக பேச முடியவில்லை.

ஆனால் சிரித்த முகத்துடன் பேசி தான் ஆகவேண்டும். அவர் எப்படி செய்தாரோ அப்படியே தானும் செய்ய வேண்டும் என்று இங்கு வருவதற்க்கு முன்பே முடிவு செய்திருந்தான். ஆனால் அதை செயல் படுத்துவது தான் மிக கடினமாக இருக்கிறது என்று தனக்குள் நினைத்துக் கொண்டான். ஆனால் செயல் படுத்தி தான் ஆக வேண்டும்.

பின் தன் மனநிலையை அமைதி படுத்த அந்த தோட்டத்தை பார்த்தான். அதற்கு பலனும் இருந்தது. மிக ரம்மியமாக காட்சி தந்தது. பல்வேறு மலர்கள் கொட்டி கிடந்தது. ஆனாலும் அவை நெருக்கமாக இல்லாமல் போதிய இடைவெளி விட்டு பார்ப்பதற்க்கு மனதை குளிர செய்தது. பல்வேறு நிறங்கள் கொண்ட மலர்கள் இருந்தாலும் மிக அதிகமாக வெள்ளை நிறமலர்கள் காணப்பட்டன.

தோட்டத்தில் மலர்கள் மட்டும் இல்லாமல் அந்த பக்கம் நிறைய காய்கறி செடிகளும் காணப்பட்டது. பெரும்பாலும் உயர்தர பங்களாவில் கண்ணுக்கு அழகாக தெரிவதற்கு மட்டுமே செடி வளர்ப்பார்கள். ஏன்? அவன் வீட்டிலும் பெரிய தோட்டம் உள்ளது. அவற்றை பாரமரிக்க தோட்டக்காரணை கூட நியமித்து இருக்கிறான். அவற்றில் வெறும் பல வண்ண மலர்கள் மட்டுமே காட்சியளிக்கும்.

அந்த தோட்டத்தை பார்த்தவாரே இப்படியே பேசாமல் இருந்தால் வேலைக்கு ஆகாது என்று முடிவு செய்து.கேசவமூர்த்தியிடம் முயன்று தன் பேச்சை தொடங்கினான். “தோட்டம் மிக அழகாக இருக்கிறேதே “என்று கூறி சந்தானத்தை பார்த்தார். சந்தானமும் “ஆம் கேசவா தோட்டம் மிக அழகாக இருக்கிறது. நான் நிறைய தடவை வந்து இருக்கேன் நான் கவனிக்கவே இல்லே பார்த்திங்களா? அதுக்கு தான் ரசணை வேண்டும் என்பது பிரதாப்புக்கு நல்ல ரசணை” என்று கூறி பிரதாப்பின் மேல் கேசவமூர்த்திக்கு நல்ல எண்ணம் ஏற்பட கூறினார்.

அதற்க்கு அசோக் இவ்வளவு நேரமும் அமைதியாக இருந்ததே அதிகம் என்பது போல் அடிக்கண்ணால் பிரதாப்பை பார்த்தவாரே “ஆமாம்! ஆமாம்! எங்கள் பிரதாப்புக்கு நல்ல ரசணை தான் என்று ஒத்து ஊதினான்.

அசோக் எந்த ரசனை பற்றி சொல்கிறான் என்று புரிந்த பிரதாப் அவனை முறைத்து பார்த்து அடக்கினான். முன் எப்போதாவது இது போல் விளையாடி இருந்தால் அவனும் ஜாலியாகத்தான் அதை எடுத்திருப்பான். ஆனால் இப்போது எந்த ரிஸ்க்கும் எடுக்க விரும்பவில்லை. இவர்களின் பேச்சு ஒரு வேலை கேசவமூர்த்திக்கு புரிந்து விட்டால் அதனால் தான் அசோக்கை பார்வையால் அடக்கினான்.

மேலும் வந்து இவ்வளவு நேரம் ஆகியும் இன்னும் இந்த சந்தானம் ஒரு பேச்சையும் ஆரம்பிக்க காணும். மேலும் இன்னும் பத்மினி வீட்டில் தான் இருக்கிறாளா இல்லையா என்று தெரியவில்லை அந்த எரிச்சலும் சேர்ந்துக் கொண்டது.

அவனுக்கு எப்போதும் தான் நினைத்ததை நினைத்தவுடன் முடித்து பழக்கப் பட்டவன். இதுப்போல் எல்லாம் அவனால் காத்திருக்க முடியாது. அதுவும் தனக்கு கீழ் இருப்பவரிடம் தான் உதவிக்கு சென்றதே அவனுக்க எரிச்சல் அவன் எப்போதும் ஸ்டேட்டஸ் பார்ப்பவன். அப்படி பட்டவனை இப்படி காக்க வைத்தால் அவன் தான் என்ன செய்வான்.

அந்த எரிச்சல் எல்லாம் சேர்ந்துக் கொண்டு நண்பனை முறைத்தது பின், சந்தானத்திடம் பார்வையை செலுத்தினார். இவர்கள் மூவரையும் வந்ததில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த கேசவமூர்த்தி தன்னிடம் ஏதோ கேட்கத்தான் வந்திருக்கிறார்கள் என்று அறிந்துக் கொண்டார்.

ஆனால் அவர்கள் தன்னிடம் கேட்பதற்க்கு தயங்குவதையும் புரிந்துக் கொண்டார். ஆனால் ஒன்று மட்டும் தான் புரிய வில்லை .பிரதாப் பற்றி அவரும் அறிந்திருந்தார். அவரும் அதே தொழிலில் இருப்பதால் தெரியும். ஆனால் அவரின் பின்பலம் தெரியாது.

டெல்லியில் இளம் தொழில் அதிபருக்கான விருது பிரதாப்புக்கு கிடைக்கும் என்று பரவலாக பேசப்படுகிறது. அப்படி பட்டவருக்கு தன்னிடம் என்ன கேட்க உள்ளது. என்று யோசித்தார், அவருக்கு தன் மகளை பெண் கேட்க வந்திருப்பார்கள் என்று அவர் சிறிதும் யோசிக்கவில்லை.
ஏன் என்றால் எல்லாம் தந்தையை போலவே அவருக்கும் தன் மகள் ஒரு குழந்தையே. அதனால் தன் பெண்ணை கேட்க வருவார்கள் என்று அவர் சிறிதுக் யோசிக்க வில்லை.

அவர்களாகவே தன் பேச்சை தொடங்கப் போவது இல்லை என்று தானே ஆரம்பித்தார். “என்னிடம் ஏதாவது பேச வேண்டுமா?” அவரே பேச்சை தொடங்கியதும் பிரதாப்புக்கு அப்பாடா… என்று இருந்தது.

உடனே சந்தானம் “ஆமாம் கேசவா பிரதாப்பை காண்பித்து இவரைப்பற்றி நான் சொல்ல தேவையில்லை உனக்கே தெரியும். நான் சுத்தி வளைத்து சொல்ல விரும்ப வில்லை நேரிடையா விஷயத்துக்கு வந்துடறேன். நேற்று நம்ம பத்மினியை ஒட்டலில் வைத்து பார்த்தவுடனே இவருக்கு பிடித்து விட்டது.”என்று கூறி கேசவமூர்த்தியை பார்த்தார்.

சந்தானம் பேச ஆரம்பித்தவுடனே அவர்கள் என்ன விஷயத்துக்கு வந்திருக்கிறார்கள் என்று தெரிந்துக் கொண்டார். ஆனால் அதை அவரால் நம்பத்தான் முடிய வில்லை ஒன்று தன் பெண் பத்மினிக்கு திருமணம் வயது வந்துவிட்டது என்பதை!

ஆம் பிரதாப்புக்காக சந்தானம் வந்து பெண் கேட்கும் வரை தன் மகள் குழந்தையாகவே கருதியிருந்தார்.பிரதாப்பின் வசதியைப் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறார்.அவர்கள் வசதிக்கு கண்டிப்பாக அவரின் எண்ணப் போக்கான வீட்டோடு மாப்பிள்ளை என்பதற்க்கு இந்த இடம் வசதிப்படாது.

மேலும் தன் மகள் இன்னும் படிப்புக் கூட முடிக்கவில்லை . அதுவும் கண்டிப்பாக பிரதாப் தொழில் ஏற்று ஏழு வருடமாகி விட்டதாக கேள்விப்பட்டு இருக்கிறாரர். அதன் கணக்கு படி பார்த்தால் எப்படியும் பிரதாப்புக்கு முப்பது வயதை கண்டிப்பாக நெருக்கியிருப்பார்.

தன் மகளுக்கு இப்போது தான் இருபது வயது ஆகிறது.இவ்வளவையும் யோசித்துக் கொண்டியிருக்கும் போது பத்மினியின் பாட்டி சகுந்தலா அங்கு வந்து சேர்ந்தார்.அவர் பேச்சியில் இருந்தே இவர்கள் பேசியதை கேட்டிருக்கிறார் என்பது புரிந்தது.

“வாப்பா….வா! என்ன இங்க வந்து ரொம்ப நாளாகி விட்டது. “என்று சந்தானத்தை பார்த்து கேட்டாலும் எடை போடும் விதமாக பார்வை பிரதாப்பிடேமே இருந்தது.

“இல்லேம்மா வேலை ரொம்ப அதிகமாக இருந்தது அதனால் தான் என்னால் முன் மாதிரி அடிக்கடி வரமுடியவில்லை. அதுவும் இல்லாமல் நான் நிரந்தரமாக அமெரிக்காவில் செட்டில் ஆகிவிடலாம் என்று முடிவு செய்து இருக்கிறேன்.”
 
:love::love::love:

பாட்டி பார்வையிலேயே எடை போடுறாங்களா பிரதாப்பை.......
பாட்டி முடிவெடுத்தால் கேசவனால் எதுவும் பண்ணமுடியாது.......
பாட்டி எண்ணம் அம்மா இல்லை....... நல்லபடியா பொண்ணை செட்டில் பண்ணனும் மாப்பிள்ளை எந்த ஊர் என்றாலும்......
அப்பா பொண்ணு ஒத்துப்பாங்களா???
 
Last edited:
Top