Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சம் கொஞ்சம் நெருங்கி வா 22 2

Advertisement

Admin

Admin
Member


மோனாவால் நம்பவே முடியவில்லை.அவனை பற்றி அவளுக்கு அனைத்தும் தெரியும்.அதனால் தான் தன் தூண்டிலை அவனிடம் வீசினாள்.இது வரை மாட்டாமல் இருப்பதற்கு திருமணம் பந்தத்தில் மாட்ட விருப்பம் இல்லை என்றே...கருதியிருந்தாள்.

ஆனால் இப்போது தனக்கு திருமணமே முடிந்து விட்டதாக கூறியதை அவளால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.என்னாவோ திருமணம் செய்துக்கொள்வேன் என்று வாக்கு கொடுத்து ஏமாத்தியது போல் கொதித்து போனாள்.

பின் ஒன்றுமே நடவாது போல் பிரதாப்பிடம் “கங்கிராஜுலேஷன்ஸ்”என்று கூறி விடை பெற்று சென்றாள்.அவள் போவதையே யோசனையுடன் பார்த்தான்.இவள் கொஞ்ச நாளாக தன்னை வரவழைத்து தன்னிடம் அன்பு இருப்பது போலவும் தன் மேல் கரை காணாத காதல் உள்ளது போலவும் நடந்துக் கொள்வதில் இருந்தே அவள் எண்ணப் போக்கை புரிந்துக் கொண்டு முற்றிலும் தவிர்த்தான்.

ஆனால் இப்போது எதுவும் கூறாமல் செல்வதை பார்த்தாள். ஏதோ பிளான் பண்றாளோ…என்று சரியாக யோசித்துக் கொண்டிருக்கும் போதே….பிரதாப்பின் செல் ஒலித்தது. போன் டிஸ்பிளேவில் அசோக்கின் எண்ணை பார்த்து தன் காதில் வைத்தவாறு…

“அசோக் எங்கே இருந்தாலும் தான் இருக்கும் இடத்தை சொல்லி உடனே கிளம்பி வா….”என்று போனை அணைத்தான்.

அசோக் சரியாக பத்து நிமிடத்தில் பிரதாப்பின் எதிரில் நின்றான். “என்ன பிரதாப் நீ இந்நேரத்துக்கு கோவாவில் அல்லவா இருக்கனும்?? என்ன பிரதாப் ஏதாவது பிரச்சினையா…”நண்பனின் முகத்தை பார்த்தே ஏதோ சரி இல்லை என்று ஊகித்து கேட்டான்.

அசோக்கின் கைப்பற்றி “நான் இன்று தான் வந்தேன் அசோக்.அப்பா… அக்கா இறந்ததை இரண்டு நாள் முன்னாடி தான் அம்மாவிடம் சொல்லியிருக்காறு. அதனை கேட்டு அம்மாவுக்கு பிபி ஏறி ஹாஸ்பெட்டலிலே அட்மிட் பண்ணியிருக்கார் அப்பா.என் கிட்டே ஒன்னும் சொல்லலே...வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டு இன்னிக்கு சாவகசமாக எனக்கு போன் பண்றாறுடா… நானும் மினிக்கிட்டே எதுவும் சொல்லாமலேயே நேரா இங்க கூட்டிக்கிட்டு வந்துட்டேன். இங்க வந்து தான் அவளுக்கு நாங்கள் யார் என்ற விஷயமே தெரியும்.

அசோக் அவன் கையை தன் கையால் அழுத்ததை கொடுத்து “உன் கிட்ட சொல்வதை விடு பக்கத்தில் இருக்க என் கிட்டேயே...இந்த அப்பா சொல்லலே...பார்த்தியா…”என்று அவன் ஆதங்கத்தை கொட்டினான்.

“நானும் கேட்டேன்டா அப்பாவை…… என்னை தான் கூப்பிடலே…..அசோக்கையாவது கூப்பிட்டு இருக்கலாமே என்றதுக்கு ஏற்கனவே நீயில்லாமல் அவன் ஒருத்தனா பிஸ்னஸை பார்த்து கொள்கிறான். இதில் நான் வேறு என்னத்துக்கு அவனை டிஸ்டப் பண்ணனும் என்று தான் சொல்லலேன்னு சொல்றாறு. சரி விடு வா பாருக்கு போகலாம்” என்று நண்பனை அழைத்தான்.

பாருக்கு போகலாம் என்ற நண்பனை பார்த்து “என்ன பிரதாப் இப்போ பாருக்கு கூப்பிடற….ஆமாம் பத்மினி உன் அப்பா அம்மா தான் அவள் தாத்தா பாட்டின்னு தெரிஞ்சு எப்படி ரியாக்ட் பண்ணா…?” பத்மினி ஏதாவது பிரச்சினை கொடுக்கிறாளோ அதனால் தான் இந்த டைமில் பாருக்கு நம்மை அழைக்கிறானோ…என்று கேட்டான்.

“இந்த விஷயம் தெரிஞ்சவுடனே என்னை தான் பார்த்து பார்த்து முறச்சா….தாத்தா பாட்டி கிட்டே நல்லா ஈ..ஈயின்னு தான் பேசிட்டு இருக்கா….”என்று சந்தோஷமும் துக்கமும் கலந்து ஒலித்தது அவன் குரல்.

பின் அவனே… “ஆமாம் இன்னிக்கு ஜெர்மன் ஆளுங்க கூட ஒரு டிலீங் இருக்குது தானே…நான் இல்லேன்னு உன்னை மட்டும் கலந்துக்க சொன்னேன்.இப்போதான் நானும் வந்துட்டேன் இல்லே... நாம இரண்டும் பேரும் போகலாம்.எனக்கும் இப்போ வீட்டுக்கு போகிறதுக்கு மூடுமில்லை.”

என்ற பிரதாப்பின் பேச்சை கேட்ட அசோக் “வேண்டாம் பிரதாப் நானே போறேன்.நீ போய் பத்மினியை சமாதானம் படுத்து .”என்று கூறிய நண்பனை பார்த்து.

“நான் என்ன காரணம் இல்லாமலேயா...இப்போ வீட்டுக்கு போக மாட்டேன் என்று சொல்கிறேன்.இப்போதான் என் அப்பாவோ….அம்மாவோ...பழைய கதையெல்லாம் சொல்லி முடிச்சி இருப்பாங்க.அதை பற்றி நல்ல விதமாக யோசிக்க கொஞ்சம் டைம் வேணும் தானே…..?அதுக்கு தான் .இப்போ நான் வீட்டுக்கு போய் என்னை பார்த்த அவள் நல்லவிதமா யோசிக்கா மாட்டா என் மேல் உள்ள கோவத்தில் ஏறுக்கு மாறாத்தான் யோசிப்பா.”என்று மனிதர்களின் குணத்தை நன்றாக புரிந்துக் கொண்டு கூறினான்.

நண்பன் கூறுவதும் அசோக்குக்கு சரி என்று பட “சரி பிரதாப் வா நேரா நாம் நம் மெயின் ஆபிஸ்க்கே போயிடலாம்.மீட்டிங்குக்கு உண்டான அனைத்து டிடையிலும் அங்கு தான் இருக்கு.நீயும் ஒரு தடவை பார்த்துக்கோ.உன்னுடைய டிரஸ் நீ ஒய்வு எடுக்கும் ரூமில் இருக்கும் தானே…..? என்றவாறு நண்பனை அழைத்துக் கொண்டு அவர்கள் ஆபிசுக்கு சென்றனர்.

அங்கு போய் ஒரு அரை மணி நேரம் ஆகியிருக்காது.ஷாலினியிடம் இருந்து அசோக்குக்கு போன் வந்தது.போன் சத்தத்தில் பைலை பார்த்துக் கொண்டிருந்த பிரதாப் நிமிர்ந்து அசோக்கை பார்த்தான்.அச்சோக் ஒரு வித பதட்டத்துடன் போனை காதில் வைத்தவாறு வெளியில் சென்றான்.

அசோக் அப்படி பதட்டம் படும் படி யாரிடம் இருந்து போன் வந்திருக்கும் என்ற யோசனையில் பைலை பார்க்கும் எண்ணம் இல்லாமல் அதனை மூடி வைத்தான்.சிறிது நேரத்திற்க்கெல்லாம் அசோக் வந்து எதுவும் பேசாமல் தன்னிடத்தில் அமர்ந்து.தலையை கையால் தேய்த்துக் கொண்டிருந்தான்.

அவன் முகத்தில் கவலை அப்பட்டமாக தெரிந்தது. “என்ன அசோக் என்ன விஷயம் போனில் யார்…?ஏதாவது பிரச்சினையா…” என்று கேள்வி மேல் கேள்வி கேட்டான்.

அசோக் அமைதியாக இருப்பதை பார்த்து.அவனிடம் இருந்த போனை பரித்து கடைசியாக யாரிடம் இருந்து போன் வந்தது என்று பார்த்தான்.அதில் ஷாலினியின் பெயர் இருக்க “என்ன அசோக் ஷாலினிக்கு என்ன பிரச்சினை இப்போ சொல்ல போறியா...இல்லையா...”என்று கோபத்துடன் கத்தினான்.

சிறு குரலில் “இப்போ டெல்லி பிளைட்டு அவள் ஏறிட்டளாம்.”என்று சுருக்கமாக சொன்னான்.பிரதாப்புக்கு கொஞ்சம் பழக்கத்திலேயே ஷாலினியை பற்றி நன்கு அறிந்து வைத்திருந்தான்.அவள் பேச்சு மட்டும் தான் விளையாட்டு தனமாக இருக்கும்.

ஆனால் மிக பக்குவப்பட்ட பெண் தான்.அவள் திடீர் என்று டெல்லி கிளம்பி வருகிறாள்.என்றால் அவள் வீட்டில் ஏதோ பிரச்சினையாக தான் இருக்கும்.அதுவும் அவள் கல்யாணம் விஷயமாகவோ...இல்லை அசோக்கை பற்றிய விஷயமாக தான் இருக்கும் என்று யூகித்தவனாக அசோக்கிடம் நேரிடையாகவே

“முதலிலேயே ஷாலினி அவள் பிரச்சினையை பற்றி கூறினாளா…?”

“ம்...சொன்னா…. அவங்க அக்காவுக்கு திருமணத்துக்கு பார்த்துட்டு இருக்கிறதா...முதலிலேயே நம்ம கிட்டே சொன்னலே…அவுங்க அக்காவை போன வாரம் பொண்ணு வார்க்க வந்தவங்க அக்காவை மட்டும் பேசி முடிக்காம அவள் தங்கையான ஷாலினியை மாப்பிள்ளையின் தம்பிக்கு கேட்டு இருக்காங்க அந்த பையன் வேறு ஆடிட்டாரா…ஷாலினியின் அப்பா அதிலேயே பிளாட் ஆயிட்டார்.அப்புறம் எப்படி இந்த அனாதைக்கு பெண் கொடுப்பார்.” என்று கூறி தலை குனிந்தான்.

அசோக்கின் பேச்சை கேட்ட பிரதாப் ஆவேசமாக “யார்டா…?அநாதை யார்…?சொன்ன நீ அனாதையின்னு ஷாலியின் அப்பா சொன்னறா...அவர் சொன்னா நீ கம்முன்னு இருப்பியா…? உடன் பிறப்பா நான் இருக்கேண்டா….அப்பா,அம்மாவா….என் பெற்றோர்கள் இருக்காங்க அப்புறம் என்ன. சரி விடு ஷாலினி வரலே நான் பார்த்துக் கொள்கிறேன்.”என்ற நண்பனை திகிலோடு பார்த்தான்.

“ஏய் இப்போ என்னத்துக்கு இந்த முழி முழிக்கிறே….இப்போ வரப்போவது ஷாலினி போ நீ அவளை ரிசீவ் பண்ணு இந்த ஜெர்மனிக்காரனை நான் பார்த்துக் கொள்கிறேன்.” என்று அசோக்கை ஏர்போட்டுக்கு அனுப்பி தான் அந்த மீட்டிங்கும் அதை தொடர்ந்த பார்ட்டி அட்டன் பண்ண சென்றான்.

மீட்டிங் எல்லாம் நல்ல படியாக தான் முடிந்தது.அதன் பின் நடந்த பார்ட்டியில் தான் எல்லாம் தலை கீழாக மாறியது. பிரதாப் அந்த ஜெர்மனியர்களோடு விளம்பரம் சம்பந்தப்பட பிஸ்னஸ் டிலீங்கை ஏற்கனவே ஒன்று முடித்து கொடுத்திருந்தான்.அந்த விளம்பரத்தில் மோனா தான் மாடல்.அதனால் மோனாவுக்கு அந்த ஜெர்மனிக்காரானை தெரியும்.மோனா எப்போதும் பணம் இருப்பவர்களிடம் கொஞ்சம் தாராளத்தோடு தான் பழகுவாள்.

அந்த பழக்கத்தில் ஜெர்மனிக்காரன் மோனாவை பார்ட்டிக்கு அழைத்திருந்தான்.அதனால் மோனாவும் அந்த பார்ட்டியில் கலந்துக் கொண்டாள்.பார்ட்டியில் பிரதாப்பை பார்த்த மோனா தீடீர் என்று திட்டமிட்டாள்.அங்கு வந்திருந்த ஒரு பத்திரிக்கைக்காரன் காதை கடித்து கையில் கொஞ்சம் பணமும் கொடுத்து பிரதாப் அருகில் சென்றாள்.

பிரதாப் அருகில் சென்ற மோனா தன் ஸ்லிப்பர் தடுக்கி விட்டது போல் பிரதாப்பின் மேல் வீழ்ந்தாள்.தன் மேல் யார் வீழ்ந்தார்கள் என்று கூட பாராமல் அவளை தள்ளி நிறுத்தினான்.அது மோனா என்று தெரிந்தவுடன் அவளை சந்தேகத்துடன் பார்த்தவாறு தன் பார்வையை தன்னை சுற்றிலும் சுழலவிட்டான்.

பத்திரிக்கை காரார்கள் இல்லை என்று உறுதி படுத்திக் கொண்டு.மோனாவிடன் “இந்த மாதிரி சில்லியா...இனிமேல் என்னிடம் நடந்துக் கொள்ளாதே” என்று அவளிடம் எரிந்து விழுந்து அந்த இடத்தி விட்டு அகன்றான்.

ஆனால் மனதுக்குள் தன் டிடெக்டிவ் ஏஜென்ஸியிடம் சொல்லி இவளை கவனிக்க வேண்டும்.இவள் சும்மா இருக்கும் டைப் இல்லை. ஏதாவது கண்டிப்பாக செய்வாள்.நாளையே இவளை கவனிக்க ஏற்பாடு செய்யவேண்டும் என்று முடிவு எடுத்து வீட்டிக்கு சென்றான்.

ஆனால் பாவம் அவன் அறியாதது.அவள் வேலையை ஏற்கனவே அராம்பித்து விட்டாள் என்று.மோனா மிக புத்திசாலி… என்ன ஒன்று அந்த புத்திசாலி தனத்தை நல்லதுக்கு பயன்ப்படுத்த மாட்டாள்.

பிரதாப்பை பற்றி நன்கு அறிந்து இருந்த மோனா அந்த பத்திரிக்கை காரானிடம் போட்டா எடுத்தவுடன் சட்டென்று அவ்விடத்தை விட்டு அகன்று விடவேண்டும்.என்று கூறினாள்.அவள் எதிர்பார்த்த மாதிரியே தான் அவன் மேல் விழுந்ததும் தன்னை சுற்றி பார்வையை சுழல விட்ட பிரதாப்பை மெச்சியவாறு பார்த்தாள்.ஆனாலும் என்ன பிரயோசனம் மோனாவின் திட்டப்படி அந்த பத்திரிகைக்காரன் பக்கத்தில் உள்ள லிப்ட் மூலம் சென்று விட்டானே…..
 
:love: :love: :love:

பத்மினிக்கு விஷயம் தெரிய போகுதா???
இதுக்கு வீட்டுக்கே போயிருக்கலாம்.........
சனி இழுத்துட்டு போய் விட்டுடுச்சே.......
சவாலே சமாளி பிரதாப்........
 
Last edited:
தன்னோட வேலையை மோனா ஆரம்பிச்சுட்டாளா?
ஆனால் இதுக்கு பிரதாப்பின் தண்டனையை நீ மறந்துட்டியே
பாவம் மோனா நீயி
 
Last edited:
ஹ்ம்ம்....மோனாவை மட்டும் பிரதாப் சமாளிக்கணுமா? இல்லை பத்திரிக்கைக்காரன் வேற ஏதாவது ஏழரையைக் கூட்டுவானா?
தெரியலையே
 
Last edited:
Top