Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சம் கொஞ்சம் நெருங்கி வா 16

Advertisement

Admin

Admin
Member


அத்தியாயம்----16

ஷாலினியை அவள் வீட்டில் விட்டு பிரதாப்பும்,அசோக்கும் ,நேராக வாசுவின் வீட்டிற்க்கு சென்றனர்.நாளை வாசுவின் தந்தை மயில்வாகனத்தையும் கூட அழைத்து சென்றால் நல்லது என்று கருதியதால் நாளை செல்வதாக இருந்த மயிவாகனம் வீட்டிற்கு இன்றே பேசிவிடலாம் என்று கருதியதால் உடனே செயல் பட எண்ணி அவர் வீட்டிற்கு சென்றனர்.

கேட்டில் இருந்த வாச்மேன் இவர்களின் பென்ஸ் காரை பார்த்ததும் தன் எஜமானனை கூட கேட்காமல் கேட்டை உடனே திறந்து விட்டான்.அவர்கள் நல்ல நேரம் இவர்கள் போனபோது மயிவாகனமே லன்ச்சுக்கு வந்திருந்தார்.இவர்களை பார்த்த மயில்வாகனம் தான் சாப்பிடுவதை விட்டு எழுந்து வந்தார்.

“வா...பிரதாப் வா எப்படி இருக்கே …?அசோக்கையும் பார்த்து “ வாப்பா”என்று இருவரையும் அமரவைத்தார். அவர் சாப்பிடுவதை நிறுத்தி விட்டு வந்ததை பார்த்த பிரதாப்… “அங்கிள் முதல்லே சாப்பிட்டு வாங்க பின் பொறுமையா நாம் பேசலாம்.”என்றதற்கு…..

“ அப்போ நீங்களும் என் கூட சாப்பிட வாங்க” என்று அழைத்தார்.

“இல்லே அங்கிள் நீங்க சாப்பிடுங்க இப்போதான் நான் சாப்பிட்டு வந்தேன்.”என்றதற்கு…

“ஒன்றும் சொல்லாமல் அவர் சாப்பிட சென்றார்….அவருக்கு தெரியும். பிரதாப் மற்ற வீட்டில் அவ்வளவாக சாப்பிட மாட்டான் என்று…..

அதனால் சட்டென்று சாப்பிட்டு விட்டு வந்தார். அவர் வந்ததும் சர்வன்ட் கொண்டு வந்த ஜூஸை கொடுத்து “இதையாவது கண்டிப்பாக குடிக்க வேண்டும்” என்று கூறியதை தட்ட முடியாமல் குடித்து முடித்தான்.

பிரதாப் குடித்து முடித்ததும்…. ”சொல்லு பிரதாப் தம்பி ஏதோ என் உதவி தேவை என்று வாசுவிடம் சொன்னதாக சொன்னான்.நீங்களும் நாளை வருவதாக சொல்லி இன்றே வந்து இருக்கிறீர்கள் என்றால் முக்கியமான விஷயமாகதான் இருக்க வேண்டும்.சொல்லு பிரதாப் எந்த உதவி தேவை என்றாலும் சொல்லுப்பா செய்ய நான் கடமைப்பட்டிருக்கிறேன்.”என்று கூறினார்.

பிரதாப் சுற்றி வளைக்காமல் நேரிடையாகவே… “என் பெற்றோருக்கு நான் ஒரே பையன் என்று தானே…. உங்களுக்கு தெரியும்.உங்களுக்கு என்ன பெரும்பாலோர் அப்படி தான் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் எனக்கு முன் ஒரு அக்கா இருந்தார்கள்...”என்ற பிரதாப்பின் பேச்சை இடைநிறுத்தி …..

“இருந்தார்கள் என்றால் இப்போது….” என்று இழுத்தவாறு நிறுத்தினார்.

“ஆமாம் இப்போது இல்லை.அதுவும் அவர்கள் இறந்து பதினைந்து வருடம் சென்று விட்டது.ஆனால் எங்களுக்கு ஒரு வாரம் முன் தான் தெரியும்.என்ற பிரதாப்பின் பேச்சில் குழம்பி விட்டார்.ஆமாம் அவரும் தீனதயாளனுக்கு ஒரே மகன் என்று தான் நினைத்திருந்தார்.

இப்போது பிரதாப்பின் பேச்சில் குழம்பி போய்விட்டார். “என்ன…?பிரதாப் சொல்றே….உங்களுக்கு ஒரு அக்கா இருந்தாங்களா….அதுவும் அவர்கள் இறந்த விஷயம் பதினைந்து வருடம் கழித்து தான் தெரியுமா…..?எனக்கு ஒன்னும் புரியலையே பிரதாப்” என்ற மயில்வாகனம் கேள்வியில்….

தன் கடந்த காலத்தை சொல்லி முடித்து. “சமீபத்தில் ஒரு டிவி நிகழ்ச்சியில் தான் கேசவமூர்த்தியின் குடும்பம் சென்னையில் இருப்பதும்… என் அக்கா செத்து பதினைந்து வருடம் கடந்து விட்டது என்றும் தெரிய வந்தது.என் அப்பாவிடம் பொய் சொல்லி ஏமாற்றி அக்காவை மணந்து என் அப்பா,அம்மாவிடம் இருந்து பிரித்தது போல் அவருக்கும் செய்ய நினைத்து நான் ஒரு சில பொய் சொல்லி கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறேன்.அதற்கு உங்களின் உதவி வேண்டும்.”என்று கூறினான்.

“கண்டிப்பா என்ன உதவி தேவை என்றாலும் செய்கிறேன் பிரதாப். உங்கள் குடும்பத்துக்கே நான் கடமை பட்டு இருக்கிறேன்.உன் தந்தை மட்டும் அன்று டெல்லியில் எனக்கு உதவி செய்யாவிட்டால் நான் என் குடும்பத்தோடு தற்கொலை தான் செய்து இருப்பேன்.நான் என்ன செய்யவேண்டும்.”என்று கேட்டார்.

பிரதாப் தன் திட்டத்தை கூறினான்.”இந்த ஜோசிய விஷயம் தான் என்ன செய்யவேண்டும் என்று புரியவில்லை”என்றதற்கு….

“எந்த ஜோசியக்காரர் பிரதாப்” என்ற மயிவாகனம் கேள்விக்கு….. பிரதாப் சொன்ன ஜோசியரின் பெயரை கேட்டவுடன்.. “கவலையை விடுங்க பிரதாப் இந்த ஜோசிய விஷயத்தை நான் பார்த்துக் கொள்கிறேன்.என்ன…. நம்ப முடியவில்லையா….அந்த ஜோசியரை எனக்கு நன்றாக தெரியும்.நீங்கள் நாளை கேசவமூர்த்தி வருவதற்குள் உங்கள் திட்டப்படி நடக்க ஏற்பாடு செய்கிறேன்.” என்ற உறுதி அளித்தார்.

அவர் கொடுத்த நம்பிக்கையில் பிரதாப்பும்,அசோக்கும், தன் பங்களாவுக்கு வந்தடைந்தனர்.வீட்டிற்க்கு வந்ததும் பிரதாப் அசோக்கிடம் ”நாளை எல்லாம் நல்ல விதமாக முடியவேண்டும்.அந்த ஜோசியரை மயிவாகனம் அங்கிள் பார்த்து கொள்வதாக சொல்லியிருக்கிறார்.எல்லாம் நல்லவிதமாக முடியவேண்டும்.”என்று கூறி ஒரு வித டென்ஷனில், கண் மூடி ஷோபாவில் தலை மேல் நோக்கி சீலிங்கை பார்த்தவாறு தன் முடி கோதி தன்னை அமைதி படுத்த முயற்ச்சித்துக் கொண்டிருந்தான்.

அசோக் அவன் பக்கத்தில் அமர்ந்து “பிரதாப் எல்லாம் நல்ல விதமாக நடக்கும் நீ கவலை பட வேண்டாம்.அது தான் மயிவாகனம் பார்த்து கொள்வதாக சொல்லி இருக்கிறாரே… பின் ஏன்…?கவலைப்படுகிறாய் போய் ரெஸ்ட்டு எடு. காலையில் இருந்தே ரொம்ப அலைச்சல். எனக்கும் ரொம்ப டையர்டா இருக்கு…. இப்போ கொஞ்சம் ரெஸ்ட்டு எடுத்தால் தான் காலையில் நாம் நேரத்தோடு கேசவமூர்த்தியை பார்க்க முடியும்.”என்று கூறினான்.”

“ நான் பத்மினி கழுத்தில் எப்போது தாலியை கட்டுகிறனோ….அப்போது தான் எனக்கு ஒய்வே…. அதுவரை, நீ என்ன சொன்னாலும் எனக்கு டென்ஷன் தான்.”என்று கூறிக் கொண்டே மாடி ஏறினான்.

பிரதாப் காலையில் இருந்தே மயில்வாகனத்துக்கு மூன்று முறை போனில் அழைத்து விட்டான்.அவர் நல்ல விதமாக முடித்து விடுவேன் என்று கூறி கூட அவன் ஒருவித பதட்டதுடனே காணப்பட்டான்.

அசோக்கும் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருந்து விட்டான்.அவனுக்கு தெரியும் இனி மயில்வாகனத்திடம் இருந்து நல்ல விதமாக செய்தி வந்தால் தான் .அவன் அமைதி ஆவான் என்று.

பிரதாப்பின் பதட்டத்தை குறைக்க விரைவிலேயே மயில்வாகனம் நல்ல செய்தியை சொன்னார்.ஆம் பிரதாப் நினைத்த மாதிரி தனக்கும் பத்மினிக்கும் கூடியவிரைவில் திருமணம் செய்வதற்க்கு உண்டான அனைத்து வேலையும் முடித்து இருந்தார்.

பின் பிரதாப் கேசவமூர்த்தி சொன்ன மாதிரி சரியாக பத்து மணிக்கு அவர் சொன்ன இடத்துக்கு சந்தானம்,மயில்வாகனம்,அசோக்கோடு போய் சேர்ந்தான்.அவர்கள் போய் சேரும் முன்பே கேசவமூர்த்தி அவர்களுக்காக காத்துக் கொண்டிருந்தார்.

அவர்களை பார்த்த கேசவமூர்த்தி “வாங்க நம்ம ஜோசியர் வந்து விட்டார். நமக்காக தான் காத்துக் கொண்டிருக்கிறார்.”என்று கூறினார்.

பிரதாப் மயிவாகனம் அவர்களை “இவர் ******ஓட்டலின் ஒனர் இவரின் ஓட்டலை தான் நான் விலை பேசிக் கொண்டிருக்கிறேன்.”என்று அறிமுகம் படுத்தினான்.

மயில்வாகனம் கேசவமூர்த்திடம் “உங்களை சந்திச்சதுல எனக்கு ரொம்ப சந்தோஷம்.எனக்கு பிரதாப் தம்பியையும் அவர் குடும்பத்தையும் நல்லா தெரியும். ஓட்டல் தொழிலில் இருப்பவர்கள் அவர்களை தெரியாதவர்களே டெல்லியில் இருக்க மாட்டார்கள். அதுவும் தம்பி தொழிலுக்கு வந்தவுடன் இன்னும் அசுர வளர்ச்சிதான்.”என்று பிரதாப்பின் குடும்பத்தை பற்றியும்,பிரதாப்பை பற்றியும்,புகழ்ந்து கூறினார்.

மயில்வாகனத்தின் பேச்சைக் கேட்ட கேசவமூர்த்திக்கு பெருமை பிடிபட வில்லை. “பின் கேசவமூர்த்தி வாங்க போகலாம் அவர் நமக்காக ரொம்ப நேரம் காத்துக் கொண்டு இருக்கிறார்”.என்று அவர்களை அழைத்துக் கொண்டு சென்றார்.

அவர் அழைத்ததும் அவரை பின் தொடர்ந்தவாறு பிரதாப் மயிவாகனத்தை பார்த்தான்.மயில்வாகனம் ஒரு புன்னகையுடன் தலை அசைத்து கேசவமூர்த்தியுடன் பேசியவாறு சென்றார்.

அங்கு இவர்களுக்காக காத்திருந்த ஜோசியர் சேஷாத்திரி இவர்களை பார்த்ததும் “வாங்க உங்களுக்காக தான் காத்துக் கொண்டு இருக்கிறேன்.”அவர்களிடம் இருந்த பத்மினி ஜாதகத்தையும், பிரதாப் ஜாதகத்தையும் பெற்றுக் கொண்டார்.

பின் அதனை பிரித்து வைத்துக் கொண்டு தன் விரலை மடக்கியும், விறித்தும், அவருக்குள்ளாகவே ஏதோ மனதுக்குள் கணக்கை போட்டவார் ஒரு அரை மணி நேரம் இவ்வாறு செய்துக் கொண்டிருந்தார்.

இந்த அரை மணி நேரத்தில் பிரதாப்போடு கேசவமூர்த்தி தான் தவித்து போனார்.பிரதாப் பற்றி அனைவரும் சொல்ல கேட்ட கேசவமூர்த்தி எந்த காரணம் கொண்டும் இந்த இடம் தவற விடுவதில் அவருக்கு விருப்பம் இல்லை.

இவர்களின் தவிப்புக்கு முடிவு கட்டும் விதமாக ஜோசியர் சேஷாத்திரி “மாப்பிள்ளை ஜாதகமும் பொண்ணோட ஜாதகமும் அமோகமா பொருந்தி இருக்கு.இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைத்தாள் சுபிக்க்ஷமா இருப்பாங்க….” ஆனால் என்று இழுத்தவாறு நிறுத்தினார்.

உடனே கேசவமூர்த்தி… “என்ன ஆனால் ஏதாவது பிரச்சினையா….”என்று பதட்டத்துடன் வினவினார்.

ஜோசியர் “பிரச்சினை எல்லாம் ஒன்றும் இல்லை.இந்த பெண் ஜாதகப்படி இன்னும் ஆறு நாளுக்குள் திருமணம் வைத்தாக வேண்டும்.இல்லை என்றால் எட்டு ஆண்டுக்கு பிறகு தான் திருமணம் நடக்கும்.அதுவும் வாழ்க்கையில் பல சிக்கல்களை எதிர் கொள்ள நேரும்” என்று ஜோசியர் இன்று காலை மயில்வாகனம் வந்து சொல்ல சொன்னதை அப்படியே சொன்னார்.

ஜோசியர் சொன்னதை கேட்ட கேசவமூர்த்திக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.அவருக்கு ஜாதகத்தில் எல்லாம் நம்பிக்கை இல்லை தான். ஆனால் நாம் பார்க்காமல் இருந்தால் அது வேறு விஷயம். ஆனால் ஜாதகத்தை பார்த்து விட்டு மறுத்து நடப்பதற்க்கு தயக்கமாக இருந்தது.

அதுவும் தன் ஒரே பெண் விஷயத்தில் எந்த ரிஸ்க்கும் எடுக்க விரும்பவில்லை.இந்த எண்ண ஓட்டத்தோடு பிரதாப்பை பார்த்தார்.பிரதாப்பின் முகத்தை வைத்து அவரால் எதையும் அறிய முடியவில்லை.

பின் அவரே பிரதாப்பை பார்த்து “இப்போ என்ன செய்யலாம் பிரதாப் எனக்கு என்னவோ….ஜோசியர் சொல்வதை கேட்பது தான் சரி என்று படுகிறது.”என்று கூறினார்.

பிரதாப்பும் இதை தானே எதிர் பார்த்தது “நீங்கள் சொல்வது சரி தான் .ஆனால் ஆறு நாட்களுக்குள் எப்படி திருமண ஏற்பாட்டை செய்வது.அதுவும் என் பெற்றோர்கள் இன்னும் ஐந்து நாட்கள் கழித்து தான் இந்தியாவுக்கே வருகிறார்கள்.அதுவும் அவர்கள் டெல்லியில் தான் வந்து இறங்குவார்கள் அங்கு இருந்து சென்னை வருவதென்றால் அவர்கள் திருமண நாள் அன்று தான் அவர்களால் வரமுடியும்.” என்று இருத்தவாறு நிறுத்தினான்.

பிரதாப்பின் பேச்சை கேட்ட கேசவமூர்த்திக்கு பிரதாப் எதிர் பார்த்த மாதிரியே “திருமண வேலையை பற்றி நீங்கள் கவலை பாடதீர்கள் எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன்.உங்கள் பெற்றவர்களிடமும் நானே போனில் பேசுகிறேன்.அவர்கள் திருமணத்துக்கு வந்தால் போதும். பின்பு நீங்கள் டெல்லியில் பெரிய அளவில் ரிசப்ஷன் வைத்துக் கொள்ளலாம்”என்று கூறி உதவிக்கு சந்தானம், மயில்வாகனம் முகத்தை பார்த்தார்.

அவர் எதிர் பார்த்த படியே சந்தானமும்,மயில்வாகனமும், “பின் என்ன பிரதாப் அது தான் அவர் அவ்வளவு சொல்கிறாரே….எல்லாம் நல்ல படியாகவே நடக்கும் சரி என்று சொல்லுங்கள்”.கூடுதலாக மயில்வாகனம் “நான் உன் தந்தையுடன் பேசுகிறேன். அவர் ஒன்று சொல்லமாட்டார்.உன் திருமணத்தை ஆவளுடன் எதிர்பார்ப்பவர் ஆயிற்றே….”என்று பிரதாப்பை பார்த்து கண் அடித்தவாறு கூறி முடித்தார்.

மயிவாகனத்தின் கண் சமிஞ்சயிலேயே உடனே ஒத்துக்கொள் என்ற செய்தி இருப்பதை புரிந்துக் கொண்ட பிரதாப் “சரி நீங்கள் மூன்று பெரும் பெரியவர்கள் இவ்வளவு சொல்வதால் சரி” என்று தன் சம்மதத்தை கூறினான்.

பிரதாப் சம்மதம் சொன்னவுடன் அசோக் மகிழ்ச்சியுடன் அவனை அணைத்துக் கொண்டான்.

அவன் எதிர்பார்த்த மாதிரியே எல்லாம் சரியாக நடந்தது.அன்றே திருமணத்தை அன்றிலிருந்து ஆறு நாட்களில் நடத்த முடிவு செய்தனர்.கேசவமூர்த்தி பிரதாப் சம்மதம் கிடைத்தவுடன் தனக்கு தெரிந்த சத்திரத்தை புக் செய்ய மகிழ்ச்சியோடு விரைந்தார்.இந்த மகிழ்ச்சி எல்லாம் இன்னும் ஆறு நாட்கள் தான் என்று பாவம் அந்த தந்தைக்கு தெரியவில்லை.
 
:love: :love: :love:

பிரதாப் நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் நான் நான் னு ஆயிரம் பொய் சொல்லி எல்லாத்தையும் முடிச்சாச்சு...... தாலி கட்டுறது தான் பாக்கி.......
உங்கம்மா அப்பா பார்த்ததும் பத்மினி அப்படியே இருப்பாளா உங்கிட்ட???
நீ ஏமாற்றி கல்யாணம் பண்ணினத்துக்கு வச்சு செய்யமாட்டா???
 
Last edited:
இப்போ உனக்கு இருக்கிற மாதிரிதானே அன்னிக்கு தீனதயாளனுக்கும் இருந்திருக்கும், கேசவமூர்த்தி
 
Last edited:
Top