Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சம் கொஞ்சம் நெருங்கி வா 13 1

Advertisement

Admin

Admin
Member
அத்தியாயம்-----13

பத்மினி வலித்தது அதனால் தான் தன் தந்தையை அழைத்தேன் என்று உரைத்தவுடன்.அதை கேட்ட பிரதாப்புக்கு கோபம் எல்லையைய் கடந்தது.ஆக்ரோஷத்துடன் முகத்தை வைத்துக் கொண்டு “எங்களை எல்லாம் பார்த்தால் உனக்கு மனுஷங்களா தெரியவில்லையா…..” மனதுக்குள் உன் தந்தை மட்டும் தான் மனித ஜென்மமா… தெரியறனா… என்று நினைத்துக் கொண்டான்.

பிரதாப் மட்டும் தன் மனதில் நினைத்ததை வெளியில் சொல்லி இருந்தால் ….அவனின் திருமணப் பேச்சு பேச்சோடு நின்று இருக்கும்.பிரதாப் இந்த கோபத்திலும் அவளின் வலிக்கிறது என்ற சொல் அவனை விரைந்து செயல் படவைத்தது. டிரைவர் சீட்டில் அமர்ந்தவாறு ஷாலினியையும் அசோக்கையும் அமரும் படி அவசரப்படுத்தினான்.

இருவரும் அமர்ந்ததும் காரை விரட்டினான்….. பிரதாப்பின் அருகில் அமர்ந்து இருந்த பத்மினி பயந்து போய் கண்ணை மூடிக்கொண்டாள்.பத்மினியே தன் ஸ்கூட்டியை வேகமாக தான் ஒட்டுவாள். ஆனால் பிரதாப்பின் இந்த வேகம் அவள் பயந்து தன் கண்ணை மூடிக் கொள்ள.

பிரதாப் பத்மினி கண்ணை மூடியதும் வலியில் தான் கண் மூடி கொள்கிறாள் என்று கருதி இன்னும் தன் வேகத்தை கூட்டினான்.இருபத்தி ஐந்து நிமிடத்தில் கடக்க வேண்டிய இடத்தை பத்து நிமிடத்தில் வந்தடைந்தான்.

பின் பிரதாப்பின் அவசரத்தினாலும் அவன் எப்போதும் பயன்படுத்தும் தன் பண பலத்தாலும் அதிக நேரம் காக்க வைக்காமல் பத்மினிக்கும், ஷாலினிக்கும் சிகிச்சை நடந்தது.

சிகிச்சைக்கு பிறகு பத்மினிக்கு எரிச்சல் கொஞ்சம் குறைந்தது.மேலும் பிரதாப் ஹாஸ்பெட்டல் வந்ததும் தன் சிகிச்சைக்காக அவன் செயல் பட்ட விதத்திலும், காரையும் தனக்காக தான் அவ்வளவு அவசரமாக செலுத்தினான் என்று சற்று முன் அசோக்கிடம் சொல்லியதை கேட்டதாலும் அவள் மனநிலை சகஜ நிலைக்கு மாறியது.

ஆம் பத்மினிக்கு அவள் மீது கொஞ்சம் அக்கரை செலுத்தினாலே போதும் அவள் சகஜ நிலைக்கு மாற… இவற்றை பிரதாப் புரிந்துக் கொள்வானா….?

பிரதாப் பத்மினியின் அருகில் வந்து “இப்போது எப்படி இருக்கிறது” என்று மிக மென்மையாக வினாவினான்.பத்மினிக்கு சற்று முன் தன்னிடம் சத்தம் போட்டவாரா… என்று சந்தேகம் கொள்ளும் அளவுக்கு...அவன் முகத்தில் அவ்வளவு மென்மை,குரலில் அவ்வளவு குழைவு.

பிரதாப்பின் இந்த அணுகு முறையே பத்மினியை வீழ்த்துவதற்கு போதுமானதாக இருந்தது.மெல்ல சிரித்துக் கொண்டே “கொஞ்சம் பராவாயில்லை”என்று கூறிக் கொண்டே அவனை பார்த்தாள்.அப்போது பிரதாப்பும் அவளைதான் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவன் பார்ப்பதை அறிந்துக் கொண்ட பத்மினி சட்டென்று தலை குனிந்தாள்.அவனின் பார்வையில் கன்னம் மட்டும் சிவக்காமல் தன் உடல் முழுவதும் சிவந்தது.ஆம் அவன் பார்வை தன் முகத்தில் மட்டும் இல்லாமல் தன் உடல் முழுவதும் வலம் வந்ததே அதற்கு காரணம்.

பத்மினியின் மாற்றத்தை அறிந்துக் கொண்ட “பிரதாப் என்னை பார் மினி”என்று கூறி அவள் முகத்தை தன் கைய் தொட்டு நிமிர்த்தினான்.

அந்த தொடுகை இருவருக்குள்ளும் இருந்த நீருப்பூத்த நெருப்பு போல் இருந்த அவர்களின் உணர்ச்சியை விசிறியால் விசிறிவிட்டது போல் ஆனாது.

பிரதாப் பத்மினியின் மிக அருகில் நகர்ந்து அமர்ந்துக் கொண்டான்.பத்னிமியின் காயத்தை மெல்ல தடவியவாறு “ வலிக்கிறதா….”என்று கேட்டவாறு பதில் சொல்லும் அவள் உதட்டையே பார்த்திருந்தான்.

அவன் பார்வையில் மேலும் சிவந்தது தான் மிச்சம்.பிரதாப் சிரித்துக் கொண்டே “இப்போது புரிகிறதா...ஷாலினிக்கு முகம் ஏன் சிவந்தது என்று”கூறி கண் சிமிட்டி சிரித்தான்.

பத்மினி அப்போதும் புரியாமல் பிரதாப்பை பார்த்து “அவளுக்கு ஏன் சிவக்க வேண்டும் அவளுக்கு தான் இன்னும் திருமணத்தை பற்றியே இன்னும் பேச வில்லையே…”என்று ஒரு அறிவு பூர்வமான கேள்வி எழுப்பினாள்.

பத்மினியின் இந்த பதில்… பிரதாப்பின் நெஞ்சில் தென்றல்,புயல் இரண்டும் ஒரு சேர வீசியது. கன்னம் சிவக்க திருமணம் தேவையில்லை என்று புரியாதவளாக இருக்கிற அவள் கள்ளம் கபட மற்ற மனது அவனிக்கு மகிழ்ச்சியை அளித்தது.

ஆனால் அதற்கு தான் தகுதி உடையவனா..?என்ற கேள்வி தன் மனதில் வந்து செல்வதை தடுக்க முடிய வில்லை.பின் தன் மனநிலையை மாற்ற எண்ணினான்.பத்மினியுடன் இருக்கும் பொழுதை மகிழ்ச்சியுடன் செலவிடவே அவன் விரும்பினான்.

பத்மினியை சிரிப்புடன் பார்த்தவாரே… அவள் கையை தன் கைக்குள் சிறையிட்டு கொண்டான்.அந்த தொடுகை பத்மினிக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியது.அவன் கையில் இருந்து தன் கையை எடுக்க முயன்றவாறு ப்ளீஸ் கைய் விடுங்க அவங்க வந்துட போறாங்க…..”என்று கூறிக் கொண்டே தன் கையை இன்னும் பலமாக இழுத்தாள்.

அப்போதும் விடாமல்” இந்த கையைவிடவா….” என்று கூறி புருவத்தை ஏற்றி இறக்கி கண் சிமிட்டினான்.மனதில் உன் கையைய் விடவா நான் இவ்வளவு காரியம் செய்கிறேன் என்று கூறிக் கொண்டான்.

பத்மினி பிரதாப்பின் கண் சிமிட்டலில் நெளிந்தவாரே….”ப்ளீஸ் பிரதாப்”என்று கூறினாள்.

“ஏய்...இப்போ என்ன சொன்ன…?பத்மினியிம் வாயில் இருந்து தன் பெயர் ஒலித்ததில் தன் பெயருக்கே ஒரு அழகு வந்து விட்டதாக கருதினான்.ஆனால் மனதுக்குள் நீ என் பெயரை சொல்வதை விட மாமா என்ற அழைப்பிற்காக தான் நான் ஏங்கிக் கொண்டிருக்கிறேன் என்று நினைத்துக் கொண்டான்.

பத்மினியோ நாம் இப்போது என்ன சொன்னோம் இப்படி பதட்டமாக கேட்கிறார்.தவறாக கூறி இருப்போமா…?அப்படி என்ன கூட முடியவில்லை.ஏன் என்றால் அவர் முகத்தில் கோபத்துக்கான சாயல் சிறிதும் இல்லை.

அவளுக்கு புரியாமல் அவன் முகத்தையே பார்த்துக் கொண்டே…. இருந்ததில் அதில் தெரிந்த குழந்தை தனத்தில் தன்னை முற்றிலுமாக இழந்தான்.அவர்கள் இருந்த இடம் கூட நினைவிக்கு வரவில்லை.தன் கையில் இருக்கும் அவள் கையை எடுத்து தன் கன்னத்தில் வைத்து அழுத்திக் கொண்டான். அவள் கையின் ஸ்பரிஸத்தை கண் மூடி அனுபவித்தான்.

பின் கண் திறந்து பார்த்ததில் அவள் முகத்தில் பதட்டத்தை பார்த்து அப்போது தான்…. இருக்கும் இடமும் ,பின் அவளின் நிலையும் புரிந்து சட்டென்று அவள் கையை விட்டு விட்டான்.

பிரதாப் கையை விட்டவுடன் சட்டென்று அவனை விட்டு நகர்ந்து அமர்ந்தாள்.அவளுக்கு அவன் முகத்தை கண் கொண்டு பார்க்க முடியவில்லை. இது போல் ஒரு உணர்வு அவள் வாழ்நாளில் உணர்ந்தது கிடையாது.

பிரதாப்புக்கும் இது ஒரு புது அனுபவமே…...பெண்களின் ஸ்பரிசம் அவனுக்கு புதியது கிடையாது.அவன் பழகிய பெண்களுக்கு வெட்கம் என்றால் என்ன வென்று தெரியாது.மேலும் அதில் காமம் மட்டுமே இருக்கும்.

பத்மினியின் தளிர் கரத்தில் தன் கைப்பட்டவுடன் அதில் அவள் மேனியில் எழுந்த சிலிர்ப்பை அவனால் நன்கு உணரமுடிந்தது.அதுவும் அவள் மேனியில் இருந்து வரும் வாசனை… எந்த வாசனை திரவியமும் இல்லாமல் அவள் மேனியில் இருந்து வரும் இயற்கையான வாசனை அவனை பித்தனாக ஆக்கியது.

பிரதாப்பும் பத்மினியும் ஒன்றும் பேசாமல் அவர் அவர் நினைவலையில் மூழ்கி இருந்தனர்.இவர்களின் மௌனத்தை கலைக்க மாத்திரை வாங்க சென்று இருந்த ஷாலினியும் அசோக்கும் அப்போது தான் வந்திருந்தனர்.

ஷாலினி பத்மினியின் அருகில் சென்று அவள் கையை தொட்டு “என்ன பத்மினி ஏன் அசையாமல் இருக்கிறாய் என்று பதட்டதுடன் விசாரித்த வாரே….”அசோக்கை முறைத்தாள்.

அவளுக்கு தான் சென்றவுடன் திரும்பவும் பிரதாப் ஏதாவது பத்மினியை திட்டி இருப்பானா…? என்று சந்தேகம். அதனால், தான் அசோக்கை பார்த்து முறைத்தாள்.அசோக் ஒன்றும் புரியாமல் முழித்தான். இப்போது கூட மருந்தகத்தில் நன்றாக தானே அவளுக்கும் தனக்குமான உறவு முறை சென்று கொண்டிருந்தது.

மருந்தகத்தில் ஷாலினி கொடுத்த பணத்தை வாங்கி போட்டு கொண்டு கொடுக்கவில்லை என்று வாதாடி கொண்டிருந்த அந்த கேஷியரை…. ஷாலினி பிடி பிடி என்று பிடித்துக் கொண்டிருந்தாள். கார் பார்கிங்கில் பிரதாப் அவசரமாக நோ பார்கிங்கிங் ஏரியாவில் நிறுத்தி விட்டு வந்ததால் வாச்மேன் வந்து இவர்களை காரை எடுக்குமாறு கூறினான்.

அதனால் அசோக் பிரதாப்பிடம் இருந்து சாவியை பெற்றுக் கொண்டு காரை பார்க் செய்து வருவதற்குள் இங்கு ஷாலினி அந்த கேஷியரை ஒரு வழி பண்ணிக் கொண்டிருந்தாள்.அப்போது அசோக் தான் தலையிட்டு அவர்களிடம் கணக்கை சரிபடுத்தும் போதே தங்களின் கெமிஸ்டிரியையும் சரிபடுத்திக் கொண்டு அவளின் கைய் கோர்த்துக் கொண்டு வரும் நிலைக்கு வந்திருந்தான்.

ஆனால் இங்கு பத்மினியை பார்த்ததும் பழைய நிலைக்கு திரும்பவும் தள்ளப்பட்டான்.பிரதாப் செய்யும் ஒவ்வொறு வேலைக்கும் தனக்கு இங்கு ஆப்பு ரெடியாகிறேதே…. என்று மனதுக்குள் நொந்துப்போனான்.

அந்த கோபத்தில் பிரதாப்பிடம் “ இப்போ என்னதாண்டா உன் பிரச்சனை….?” என்று சளிப்புடன் வினாவினான்.அசோக்கின் கேள்வில் தான் தன் சுயநிலையை அடைந்த பிரதாப்” நீங்க எப்போடா வந்தீங்க…? உனக்கு காரை பார்கிங் பண்ண இவ்வளவு டைமா…?என்று அசோக்கிடம் கேள்வி எழுப்பிக் கொண்டே பத்மினியை பார்த்தான்.
 
Top