Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கைதி -8

Advertisement

?கைதி -8 ?

"ஸ்ரீ பேபி, சொல்லாதே. சொன்னா, உன் கூட டூ விட்டுடுவேன்", என்றாள் மிருணா முறைப்புடன்.

"நீ சொல்லல, நோ அவுட்டிங்", என்றான் ராகவ் வேகமாக. ஸ்ரீ, யார் சொல்வதை கேட்பது என்று தெரியாமல் முழித்தாள்.

"அப்பப்பா! வீட்டுக்குள்ள நுழையும் போதே, அப்படியே வாசன ஆள தூக்குதே!", என்று சக்கரவர்த்தியும் சோமுவும் உள்ளே வந்தனர்.

"வாங்க! வாங்க! சாப்பிடலாம்", என்றார் மீனாட்சி.

"அதுக்கு முன்னாடி, நம்ம வீட்டுக்கு ஒருத்தர் வந்து இருக்காரு, அவரை பார்க்க வேண்டாமா?", என்றார் சக்கரவர்த்தி புதிராக.

"யாருப்பா?", என்றாள் ஸ்ரீ.

"வேற யாரு? நம்ம தம்பி தானே பா?", என்றான் விக்ரம், சிரித்துக்கொண்டே. சக்கரவர்த்தியும் சோம மூர்த்தியும் அவனைப் பார்த்து சிரித்தனர்.

'யாரு வந்திருக்கா? இவனுங்க தம்பியா? புதுசா இன்னொருத்தனா? அவனும் என்னைய தெரிஞ்சவனா இருந்து, இவங்கள மாதிரி அவனையும் கழுவி ஊத்திருந்தா என் நிலமை?' என்று மனதுக்குள்ளேயே புலம்பினாள்.

விக்ரம் மற்றும் ராகவன் கையை கழுவினர். வீட்டினர் அனைவரும் வெளியே வந்தனர். "ஜாக்கி!", என்று சிறியவர்கள் மூவரும் பக்கத்தில் சென்றனர். ஜாக்கி, தன் சொந்தத்தை பார்த்த சந்தோசத்தில் குறைத்துக் கொண்டே அவர்கள் காலை நக்கியது. மூவரும் உட்கார்ந்து ஜாக்கியை வருடினர்.

"அப்பா! இவன இப்பதான் அழைச்சிட்டு வர தோணுச்சா? இவன் இல்லாம எவ்ளோ கஷ்டப்பட்டேன்னு தெரியுமா?", என்றாள் ஸ்ரீ பொய்யான கோபத்துடன் எழுந்து அவரிடம் சென்று.

"இல்லடா எஸ்டேட்டுல்ல காவலுக்கு தேவைப்பட்டது, அதான் அங்க இருந்தான், மிருணா வந்ததுக்கு அப்புறம், இவன நீ தேடுன மாதிரி தெரியலையே!", என்றார் கிண்டலாக.

ஸ்ரீ தலையை சொரிந்து கொண்டே, "ஈஈஈஈ", என்று இளித்தாள்.

"காலையிலயே நாங்க கிளம்புறப்ப, ஜாக்கிய அழைச்சிட்டு வர, உன் அண்ணனுங்க சொல்லிட்டாங்க டா. அதான் அழைச்சுட்டு வந்துட்டோம். இனிமே இங்கதான் இருப்பான்", என்றார் சோமு.

"அப்பா! எஸ்டேட்டுக்கு வேற நாய் சொல்லி இருக்கேன், நாளைக்கு வந்துடும். அத வச்சுக்கோங்க", என்றான் ராகவ் எழுந்து.

விக்ரம், ஜாக்கியை அணைத்து முத்தமிட்டான். அவன் பாச மழையில் நனைந்து, கண்ணை மூடியது. மிருணா ஆர்வமாக ஜாக்கியை பார்த்துக்கொண்டே பக்கத்தில் வந்தாள். ஜாக்கி புதிய வாசனை வரவும், முழித்து புதியவளை பார்த்தது. கோபமாக மிருணாவை குரைத்துக்கொண்டே, அவள் நெஞ்சில் இரு கால்களையும் வைத்து, கடிக்கவா? என்பது போல் பல்லைக் காட்டியது.

மிருணா பயத்தில் நடுங்கினாள். "ஜாக்கி நகரு", என்று கோவமாக எழுந்து, இழுத்து விட்டான் விக்ரம். மீண்டும் மிருணாவின் பக்கத்தில் குரைத்துக் கொண்டு வந்தது. மிருணா பயத்தில் விக்ரமை அணைத்துக்கொண்டாள்.

அவள் அணைத்ததில் அதிர்ந்தவன், பிறகு வந்த சிரிப்பை மறைத்துக் கொண்டு, "ஜாக்கி இவ நம்ம வீட்டு பொண்ணு டோன் ஷெளட்", என்று பொய்யான கோபத்துடன் மிரட்டிக் கொண்டே, மிருணாவின் முதுகை சமாதானமாக தட்டினான்.

மிருணாவின் நடுக்கம் குறையாமல், அப்படியே நடுங்கிக் கொண்டே இருந்தாள். குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சியுடன் பார்த்தனர். "ஒன்னும் இல்ல டா ரிலாக்ஸ்", என்று காதில் கிசுகிசுத்தான்.

அதில் சுய உணர்வுக்கு வந்தவள், வேகமாக விலகி, "சாரி ", என்று சொல்லிவிட்டு உள்ளே ஓடிவிட்டாள்.

"மிருணா ரொம்ப பயந்துட்டா அவள சமாதானம் பண்ணி, சாப்பிட அழச்சிட்டு வா ஸ்ரீ " என்று மீனாட்சி அனுப்பினார். ஸ்ரீ உள்ளே சென்றாள்.

"சாப்பிட வாங்க!" என்று அழைத்து சென்றார் வாணி.

ராகவும் விக்ரமும், ஜாக்கியின் இருபக்கத்திலும் சென்று உட்கார்ந்தனர். 'இவங்க ரெண்டு பேரும் எதுக்கு என் பக்கத்தில் உட்காருறானுங்க?' என்பது போல் இருவரையும் மாறி மாறி பார்த்தது. "டேய் ஜாக்கி! அவ உன் அண்ணி டா. அவள போய் இப்படி பயப்பட வச்சுட்ட, ரொம்ப பயந்துட்டா டா, இனிமே இப்படி பண்ணாத", என்றான் அதன் தலையை வருடியபடி.

"ஆமாடா ஜாக்கி! சின்ன அண்ணி பயத்துல, இவன வேற கட்டிபுடிச்சிட்டா. இனிமே நான் சின்ன அண்ணி பக்கத்துல இருக்குறப்ப, உன் சாகசத்த காட்டு. அப்பாதான் என்னைய கட்டிப்புடிப்பா", என்று கண்ணடித்தான் ராகவ்.

"டேய்! அவ உனக்கு அண்ணி டா", என்று கத்தினான்.

"நானும் அதான் டா விக்கி சொல்லுறேன், சின்ன அண்ணீன்னு", என்றான் கிண்டலாக.

"டேய் ஜாக்கி! அவ உன் பெரிய அண்ணி டா ", என்றான் வேகமாக.

"இல்ல, சின்ன அண்ணி டா", என்றான் இவனும்.

"இல்ல பெரிய அண்ணி".

"இல்ல சின்ன அண்ணி ", என்று இருவரும் மாறி மாறி எழுந்து சண்டை போட்டனர். ஜாக்கி இருவரையும் பார்த்து குரைக்க ஆரம்பித்தது. இருவரும் அதனை கண்டுகொள்ளாமல் சண்டை போட்டனர்.

"டேய் நாய்களா! நாய் கூட சேர்ந்து, நாய் மாதிரி குரைச்சுட்டு இருக்கீங்க, எதுக்குடா குரைக்கிறீங்க?", என்று வேகமாக இவர்களிடம் ஸ்ரீ வந்தாள். இருவரும் அவளை முறைத்தனர்.

ஜாக்கி ஸ்ரீயை பார்த்து குரைத்தது. "புரியுது புரியுது ஜாக்கி, உனக்கு போட்டியா இவங்களால எப்போதுமே வர முடியாதுடா, நானும் வர விட மாட்டேன்", என்றாள் கிண்டலாக இருவரையும் பார்த்து.

"ஓய்! என்னடி? எங்கள நாயின்னு சொல்லுறியா?", என்றான் முறைத்தப்படி.

"அச்சோ! ராகி நான் அப்படி சொல்வேனா ம்ம். அப்படிதாண்டா சொல்லுவேன், நாய்க்கு போட்டியா சண்ட போடுறீங்க", என்றாள் கிண்டலாக.

"ஏய்! முதல்ல ராகின்னு கூப்பிடாத. ராகி, கோதுமை, கம்புனுட்டு", என்றான் எரிச்சலுடன். ஸ்ரீ கிண்டலாக சிரித்தாள்.

"நாங்க நாய்னா? அப்ப நீயும் நாய் தான், இரு ரெண்டு நாயும் உன்னைய இப்ப கடிக்க போகுது", என்று நெருங்கினான் விக்ரம். ஸ்ரீ ஓடினாள். இருவரும் அவளை துரத்தினர். இவர்கள் இங்கு விளையாடட்டும், நாம் இவர்களை பற்றி பார்க்கலாம்.

(ஹரிகிருஷ்ணன்-அழகம்மாள் தம்பதியினருக்கு இரண்டு மகன்கள். பெரியவர் சக்கரவர்த்தி, இளையவர் சோமு மூர்த்தி. இருவரும் தன் அப்பாவின் பெயரை தன் பிள்ளைகளுக்கு வைத்தனர்.

கிருஷ்ணன் செல்வத்திலும் சரி, பாசத்திலும் சரி, உச்சத்தில் இருப்பவர். தன்னிடம் உதவி கேட்டு வருபவர்களுக்கு, வாரி வாரி வழங்கும் வள்ளல். திறமையான வியாபாரி. அழகம்மாள், பெயருக்கு ஏற்றது போலவே அழகானவர். அழகு மட்டும் இல்லை கிருஷ்ணருக்கு போட்டியாக, அனைவரிடமும் அன்பாகவும் இருப்பார்.

சக்கரவர்த்தி மற்றும் சோமு மூர்த்தி, ராமன் லட்சுமணனை போல் பாசமானவர்கள். தாய், தந்தையின் குணத்தை கொண்டவர்கள். சக்கரவர்த்தி எதுவாக இருந்தாலும் யோசித்து செய்பவர் .சோமு யோசிக்காமல் அவசரத்தில் சில முடிவுகள் எடுப்பார். அதனால் சக்கரவர்த்தியிடம் ஆலோசனை செய்தே!! மற்ற வேலைகளை செய்வார்.

சக்கரவர்த்திக்கு தன் தூரத்து சொந்தமான மீனாட்சியை மணமுடித்தார். சக்கரவர்த்தி மற்றும் மீனாட்சி திருமணம் முடிந்து, ஒரு வருடம் கழித்து தான் மீனாட்சி கருவுற்றார். தன் கடமையை முடிக்க நினைத்த அழகம்மாள், மீனாட்சியின் சொந்தத்து பெண்ணான வாணியை, இளைய மகனுக்கு மணமுடித்தார்.

சோமு-வாணிக்கு திருமணம் ஆகும்போது, மீனாட்சிக்கு எட்டு மாதம். வாணி திருமணமான அடுத்த மாதமே கருவுற்றார். மீனாட்சி வளைகாப்புக்கு, ஊட்டியே அசரும்படி பேரப் பிள்ளைகள் இரண்டும் வருவதை, திருவிழா போல் கொண்டாடினர். மீனாட்சி பிரசவத்திற்காக கோபிக்கு அழைத்துச்சென்றனர். வாணியை அழகம்மாள் கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொண்டார்.

தன் ஆட்டத்தை தொடர, அனைவரையும் பதறவைத்து தன் தாயை ஒரு வழி செய்து, கருவறையில் இருந்து பூமிக்கு வந்தான் ஹரி விக்ரமன்.

தாத்தா பாட்டிக்கு தலைகால் புரியாமல், பேரனை மடியை விட்டு இறக்காமல் சந்தோஷமாக அவனையே சுற்றி வந்தனர். பேரனை விட்டு பிரிய முடியாமல், ஒன்றை மாதத்திலேயே மீனாட்சியை தானே பார்த்துக் கொள்வதாக சொல்லி, ஊட்டிக்கு அழைத்து வந்துவிட்டார் அழகம்மாள்.

வாணி, விக்ரம் சாதாரணமாக தும்மல் போட்டாலும் துடித்துப் போய் தூக்கி கொள்வார். அவன் மேல் அளவுகடந்த பாசமாக இருப்பார். எப்பொழுதுமே சிரித்துக் கொண்டே இருக்கும் குழந்தையை, யாருக்குதான் பிடிக்காது. அவன் சிரிப்பில் மயங்கி வீட்டினர் எப்பொழுதுமே அவனையே சுற்றி இருந்தனர்.

வாணிக்கு கோலாகலமாக வளைகாப்பு செய்தனர். சோமு மற்றும் வாணியின் தவப்புதல்வன், தாயை எந்த கஷ்டமும் படுத்தாமல் பூமி வந்தான் ஹரி ராகவன்.

அழகம்மாள் வாணியையும் ஒன்றரை மாதத்திலேயே அழைத்து வந்துவிட்டார். கிருஷ்ணன் தொழில்கள் அனைத்தையும் பையன்களிடம் விட்டுவிட்டு, இரு பேரப்பிள்ளைகளையும் தூக்கிக்கொண்டு சுற்றுவதுதான், அவரின் முதல் வேலையே! நான்கு வருடம் கழித்து, சக்கரவர்த்தி மீனாட்சி தம்பதியருக்கு பிறந்த மகள்தான் ஸ்ரீ ஹரிணி. அவள் அந்த வீட்டின் மகாலட்சுமி. இரு ஆண் பிள்ளைகளும், தங்கச்சி தங்கச்சின்னு அவளையே சுற்றி வந்தனர். இவர்கள் மூவரும் வளரவளர குறும்புத்தனமும் சேர்ந்தே வளர்ந்தது. இவர்கள் பள்ளிக் காலத்திலேயே பாட்டிக்கு பின் தாத்தா இறைவனடி சேர்ந்தனர்.

ஹரி விக்ரமன், ஆறரை அடி உயரமும், மாநிறமும், கூர்மையாய் வசீகரிக்கும் கண்களும், கூர்மையான நாசியும், அழகாக வெட்டப்பட்ட மீசையும், எந்த வித தீய பழக்கம் எதுவும் இல்லை என்பதுபோல் உணர்த்தும் உதடுகளும், தினமும் ஜிம்முக்கு சென்று செய்யும் உடற்பயிற்சினால், பரந்த மார்பும் கூடிய கட்டுக்கடங்காத உடலை கொண்டவன். தன் சிறிய சிரிப்பிலயே, வசீகரிக்க கூடியவன். தன் சொந்தங்களுடன் இருக்கும் போது, கண்களில் எப்பொழுதுமே குறும்புடன்‌ எதாவது குறும்பு செய்து, அனைவரையும் சிரிக்க வைக்கும் மாயக்காரன். பார்த்தவுடனே அனைவரையும் எடை போடக்கூடிய விந்தையை கற்றவன். நிதானமாக தன் சதுரங்க வேட்டையை கையாலும் சாகசக்காரன்.

ஹரி ராகவன், இவன் விக்ரமை போல் உருவம் தான். விக்ரமை விட உயரம் சிறிது குறைவு. அதனால்தான், அவனுக்கு தென்னைமரம் என பெயர் வைத்தாள் நம் நாயகி. தன் பேச்சால் அனைவரையும் வசீகரிக்கக் கூடியவன். அவன் தன் அப்பா போல் கொஞ்சம் அவசர புத்தி காரன், நிதானமாக முடிவு எடுக்க மாட்டான்.

ஸ்ரீ ஹரினி, அழகிய பதுமை பெண். தன் அண்ணனுங்களை போல், சிரிப்பாலும் பேச்சாலும் அனைவரையும் வசீகரிக்க கூடியவள்.

தன் இரு மகன்களும் இருக்கும் சொத்தை பார்க்காமல், நாட்டிற்காக தன் சேவையை செய்ய போகிறோம் என சொன்னதும் குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் அவர்கள் கனவை நிறைவேற்றினர். விக்ரமை பின்பற்றும் ராகவன், அவன் செய்வதையே தானும் செய்தான். இப்போதைக்கு இது போதும். இவர்களைப்பற்றி போகப் போக தெரிந்து கொள்ளுங்கள்.)

இருவரும் பேசிப்பேசியே மிருணா சொன்ன அனைத்தையும், ஸ்ரீயிடம் இருந்து கறந்தனர். இவர்கள் மூவரும் உள்ளே வரும் போது, மிருணா சாப்பிட்டு முடித்து வாஷ்பேஷனில் கை கழுவிக் கொண்டு இருந்தாள். விக்ரமும் ராகவும் இரு பக்கத்தில் போய் நின்றனர்.

"என்னாச்சு? கை கழுவனுமா?", என்றாள் புரியாமல் லேசாக விலகி.

"அட இரும்மா! இந்த ரெண்டு மரத்துக்கு நடுவுல, நீ எந்த மரம்னு கண்டுபிடிக்காணும்", என்றான் ராகவ் கிண்டலாக.

மிருணா முழித்துக்கொண்டே, "என்ன மரம்?", என்று தயங்கியபடி நகர்ந்து செல்ல போனாள்.

விக்ரம் அவள் கையை பிடித்து இழுத்து, சுவற்றில் சாய்த்து நிற்க வைத்தான். மிருணா அதிர்ச்சியுடன் பார்த்தாள். "எங்கள பார்த்தா மரம் மாதிரி தெரிதா? நல்லா பார்த்து சொல்லு", என்று புருவம் உயர்த்தி கூர்மையாக, அவள் கண்களைப் பார்த்தான்.

தலையை இல்லை என்பது போல் ஆட்டி விட்டு, வேகமாக அவனை தள்ளி விட்டு, "தள்ளியே நில்லுங்க இல்லனா", என்று விரல் நீட்டி மிரட்டிக்கொண்டு இருக்கும் போதே,

"இல்லனா?", என்றான் கூர்மையான பார்வையுடன் நெருங்கி.

மிருணா சுவரில் முட்டி நின்று, அவனை பார்த்தாள். ஒரு பக்கம் கை வைத்து சிறை செய்தான். மிருணா வேகமாக மறுபக்கம் போகவும் மறுபக்கமும் சிறை செய்து. அவள் முகத்தை நோக்கி குனிந்தான். மிருணா பயத்துடன் கண்களை மூடி அவன் சட்டையை கைவைத்து தள்ள பார்த்தாள். நகர்த்த முடியவில்லை அவளால்.

விக்ரம் அவள் முகத்தில் இருக்கும் முடியை ஊதி, "மிரு! என்னைய பார்த்து எதுக்குடி இப்படி பயப்படுற?", என்றான் மென்மையாக.

மிருணா வேகமாக முழித்து, "உன்ன கொல்ல போறேன் பாரு டா, நகரு முதல்ல. எங்க அந்த அரவேக்காடு?", என்றாள் கோவமாக சுற்றிப் பார்த்தபடி.

"அவன் எப்பயோ போயிட்டான், நீ பார்க்கலையா? ம்ம். என் தாத்தாவ பார்த்தியா, இப்படி வாஷ்பேஷன டைனிங் ஹாலுல இருந்து தள்ளி, தடுப்பு சுவரோட யாரும் பார்க்காத மாதிரி வச்சிருக்காரு, எனக்கு எது வசதியோ, அதையே பண்ணிருக்காரு. சோ ஸ்வீட்ல. தேங்க்ஸ் கிருஷ்", என்று வானத்தை பார்த்து, பறக்கும் முத்தத்தை கொடுத்தான்.

மிருணா முறைத்துக் கொண்டே, "நீ பேசுறது நடந்துகுறது எதுவுமே சரியில்ல. வழிய விடு நான் போகணும், நகரல அத்தைய கூப்பிடுவேன்", என்று விரல் நீட்டி எச்சரித்தாள்.

"கூப்பிடு கூப்பிடு. உன் வாய எப்படி மூடனும்னு எனக்கு தெரியும்", என்று குறும்புடன் அவள் உதட்டைப் பார்த்தான்.

மிருணா கோவமாக அவனை தள்ளி விட்டு நகர்ந்து வெளியே வந்தாள். வெளியில் ராகவன் நின்று கொண்டு இருந்தான் "நீங்க எப்ப அங்க இருந்து இங்க வந்தீங்க?", என்றாள் கோபமாக.

"போன் வந்தது பேசிட்டு இருந்தேன் டா. என்னைய காணோம்னு தேடுனியா? நான் உன்ன விட்டு எங்கடா போக போறேன்", என்றான் கொஞ்சலாக.

"போன் பேசுற மூஞ்ச பாரு", என்றாள் கோபமாக.

"இதுக்காக வேற முஞ்சைய வாங்க முடியும்?", என்றான் கிண்டலாக.

விக்ரம் சிரிப்புடன் பக்கத்தில் வந்தான். "போன் பேசுறியா? பேசுற சத்தமும் கேக்கல, போன் அடிக்குற சத்தமும் கேக்கல, நீ நடிக்கிறன்னு எவனாச்சும் போன் பண்ணி, உன்னைய மாட்டிவிடுவான்ல அப்ப பார்த்துக்குறேன் உன்ன", என்று விக்ரம் மேல் உள்ள கோபத்தை, இவன் மேல் கொட்டி தீர்த்தாள்.

"இல்லமா அப்படி எல்லாம் மாட்ட மாட்டேன், கவலப்படாத. ஏர் மோட் போட்டு தான் பேசுவேன்", என்று உளறினான்.

"அத்த.....", என்று கத்தினாள்.

"டேய்! அவள ஏன் டா வம்பு பண்ணுறீங்க?? வாங்கடா இந்தப்பக்கம்", என்று சத்தம் போட்டார்.

"மீனும்மா, இவ என் புத்திசாலித்தனத்த சொல்ல தான் உங்கள கூப்பிடுறா", என்றான் ராகவ் கிண்டலாக.

விக்ரம் சத்தமாக சிரித்தான். மிருணா கோவமாக, "நீ எதுக்கு சிரிக்கிற?? இங்க பாருங்க, ரெண்டு பேரும் ரொம்ப ஓவர பண்ணுறீங்க. எனக்கு வர கோவத்துக்கு எங்க? எங்க?", என்று பக்கத்தில் தேடினாள்.

"என்ன மிரு குட்டி தேடுற? என் கிட்ட சொன்னா எடுத்து தருவேன்ல", என்றான் விக்ரம் கிண்டலாக.

"உன்ன கொல்ல கத்திய தேடுறேன்", என்றாள் கோபமாக.

"என்னது கொலையா? அதுவும் என் முன்னாடியே இரு. இரு. உன்ன ஜெயில்ல தூக்கி போடுறேன்", என்றான் ராகவ் கிண்டலாக.

"டேய்! அண்ணாஸ், எதுக்குடா வம்பு பண்றீங்க? வா பேபி போலாம்", என்று ஸ்ரீ இழுத்து சென்றாள். இருவரும் சத்தமாக சிரித்து, ஹைஃபை அடித்துக் கொண்டு டைனிங் ஹாலுக்கு வந்தனர்.

"ஏன்டா அவள வம்பு பண்றீங்க? அவ கோவமா ரூமுக்கு போயிட்டா பாரு", என்றார் வாணி.

"அம்மா அவள வம்பு பண்றது, எங்களுக்கு ரொம்ப ஜாலியா இருக்கு", என்றான் ராகவ் சிரிப்புடன்.

"விக்கி, அவளுக்கு அம்னீசியா சரியாகுற வரைக்கும் கொஞ்சம் பொறுடா, அதுக்கு முன்னாடி அவள நீ இப்படி வம்பு பண்றது எல்லாம் வேணாம்", என்றார் மீனாட்சி பொறுமையாக.

"அது எப்ப சரியாகுறது மினும்மா? அதான் அவனே அவளுக்கு ஞாபகப்படுத்த முயற்சி பண்ணுறான், அவளுக்கு ஞாபகம் வர கூடாதுன்னு, ஐம்பது பர்சன்ட் எனக்காக வேண்டுகிறேன் விக்கி, அதுக்கு நீ ஒன்னும் சொல்ல கூடாது", என்று கிண்டலாக சொல்லிவிட்டு ஓடினான்.

"டேய்! அவ உன் அண்ணி டா ", என்று துரத்தினான்.

"அவ உனக்கு தம்பி பொண்டாட்டி டா", என்று கிண்டலாக இவனும் ஓடினான். இப்படியே சிரிப்பும், பேச்சும், விளையாட்டுமாக அந்த நாள் சென்றது. மிருணா இவர்கள் தொல்லையிலிருந்து தப்பிக்க, ரூமை விட்டு வெளியே வரவில்லை. ஸ்ரீ அவளை கட்டாயப்படுத்தி சாப்பிட வைத்து தூங்க வைத்தாள்.

மறுநாள், பேச்சும் சிரிப்புமாக சத்தம் கேட்டது. ஸ்ரீ மிருணாவை கீழே அழைத்து வந்தாள். அமர் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தான். ஸ்ரீ அவனைப் பார்த்ததும், மிருணாவின் கையை விட்டு விட்டு அவனிடம் ஓடினாள். அமர் சிரிப்புடன் எழுந்து நின்றான். ஸ்ரீ வேகமாக வந்து, அவனை அணைத்து அழுதாள்.

"ஹேய்! ஹனி எதுக்குடி அழுகுற? நான்தான் வந்துட்டேனே!", என்று சமாதானம் செய்தான்.

"போடா! உன் கிட்ட நான் பேச மாட்டேன், எனக்கு ஒரு மெசேஜ் கூட பண்ணலல்ல. நான் உன்னைய எவ்ளோ மிஸ் பண்ணுனேன் தெரியுமா?", என்றாள் அழுகையுடன் விலக்கி அவன் முகத்தை பார்த்து.

"அழாதடா. அங்க இருக்க பிரச்சனைதான், உன் அண்ணா சொல்லியிருப்பானே!", என்று கண்ணீரைத் துடைத்தான். அனைவரும் சிரிப்புடன் பார்த்தனர். மிருணா அழுகையுடன் படிக்கட்டின் கம்பியை பிடித்துக் கொண்டு பார்த்தாள்.

"நான் அழக்கூடாதுனா, ரெண்டு மூணு நாள் இங்க தான் இருக்கணும் சரியா", என்று பேரம் பேசினாள்.

"கண்டிப்பா ஹனி", என்று கன்னத்தை தட்டி விட்டு, மிருணாவைப் பார்த்தான். மற்றவர்களும் அவளை திரும்பி பார்த்தனர்.

அமர் ஸ்ரீயை விலக்கி விட்டு நகர்ந்து, "வாடா", என்று கை விரித்தான். மிருணா அழுகையுடன் ஓடிவந்து அவனை அணைத்து, தேம்பித் தேம்பி அழுதாள்.

"என் செல்லம்ல. என் தங்கச்சிக்கு அழுக தெரியாதே. என்ன புதுசா அழுக வருது?", என்று விலகி கண்ணீரைத் துடைத்தான். அனைவரும் கவலையாக அவர்களை சுற்றி நின்றனர்.

"அண்ணா..அண்ணா.", என்று தேம்பினாள்.

"என்னடா? அமர் எப்ப அண்ணாவானா? இங்க வந்ததும், எந்த மாரியாத்தா உன்மேல ஏறி, மரியாதை எல்லாம் குடுத்து பேச வச்சது. ஒருவேள இது என் தங்கச்சி இல்லையோ?", என்றான் கிண்டலாக.

"அண்ணா நீ எப்படி வந்த?", என்றாள் அழுகையுடன்.

"அத ஏன் கேக்குற. சென்னையிலிருந்து மும்பை, மும்பையில் இருந்து ராஜஸ்தான், ராஜஸ்தானிலிருந்து கேரளா போய், அப்புறமா இங்க வரேன். ராஜஸ்தான் வரைக்கும் பின்னாடியே வந்தானுங்க. நான் ஊரு ஊரா வேலை விஷயமா சுத்துறேன்னு நம்பிட்டானுங்க, அப்புறம் எதுக்கும் கேரளா போயிட்டு வரலாம்னு, அங்க சின்ன வேலை இருந்தது. அதையும் முடிச்சிட்டு இங்க வரேன் டா", என்றான் சிரிப்புடன்.

"என்னால உனக்கு எவ்ளோ கஷ்டம்", என்றாள் அழுகையுடன்.

"என் தங்கச்சிக்காக இது கூட பண்ண மாட்டேனா? அழக்கூடாது பாப்பா", என்று கண்ணீரை துடைத்து, அணைத்து விடுவித்தான்.

"எப்பா! வீடு முழுக்க ஒரே தண்ணியா இருக்கு, காலக் கீழ வைக்கவே முடியலப்பா", என்றான் விக்ரம் கிண்டலாக.

"ஆமாடா, அம்மா உடனே மாப்பு போட்டு துடைக்க சொல்லுமா, வழுக்கி விழுந்துற போறோம்", என்றான் ராகவ் கிண்டலாக.

மிருணா இருவரையும் முறைத்துக்கொண்டே கண்ணீரை துடைத்துவிட்டு, "அண்ணா செல்வா அப்பாவும் அம்மாவும் எப்படி இருக்காங்க?".

"நல்லா இருக்காங்க. நீ எப்படி இருக்கன்னு தான் அவங்க கவலையே டா", என்றான் தலைமுடி கோதி.

"எனக்கென்ன? நான் சூப்பரா இருக்கேன். அத்த, மாமா, ஸ்ரீ என்னைய ரொம்ப நல்லா பார்த்துக்கிட்டாங்க", என்றாள் லேசான சிரிப்புடன்.

"எனக்கு தெரியும்டா. உன்னைய நல்லா பார்த்துப்பாங்கன்னு", என்றான் சிரிப்புடன்.

"அண்ணா! அங்க வேற யாருக்கும் பிரச்சனை இல்லையே?", என்றாள் சந்தேகமாக.

அமர் விக்ரம் மற்றும் ராகவனை பார்த்தான். விக்ரம் கண்களால் எச்சரித்தான். "அண்ணா இவங்கள ஏன் பார்க்குற சொல்லு. முகிலbஅழச்சுட்டு வந்துருக்கலாம்ல".

"அவனுக்கு அதுக்குள்ள வேற வேல வந்துருச்சுடா, நெக்ஸ்ட் டைம் வரப்ப வருவான்", என்று முதல் கேள்வியை தவிர்த்துவிட்டு இரண்டாவது கேள்விக்கு பதில் சொன்னான்.

"பேசுனதெல்லாம் போதும் முதல்ல சாப்பிட வாங்க" என அழைத்தார் வாணி. பெரியவர்கள் அனைவரும் முன்னால் சென்றனர். மிருணா, அமர் கையை பிடித்து தடுத்து, "நீ ரொம்ப ஸ்மார்ட்னு நினைச்சியா? யாருக்கு என்ன பிரச்சன?", என்றாள் அழுத்தமாக.

"பாப்பா அப்படிலாம் இல்ல டா", என்றான் சமாதானமாக.

"அமர்" என்றாள், கூர்மையான பார்வையுடன்.

"அமர், நீ போய் சாப்பிடு. மிரு அவன விடு, அவனே இப்பதான் வந்து இருக்கான்", என்றான் விக்ரம் எரிச்சலாக.

"என் அண்ணாக்கும் எனக்கும் நடுவுல நீ வராத", என்றாள் கோபமாக.

"பேபி, ஏதாச்சும் இருந்தா அமர் வந்ததுமே சொல்லியிருப்பானே. எதுவுமே சொல்லலையே. நீ தேவையில்லாம யோசிக்கிற. நீ இன்னும் எதுவும் சாப்பிடல வா சாப்பிடலாம். நாம வேற அவுட்டிங் போகணும், அதுக்கு ரெடியாகனும். வா வா சீக்கிரம் சாப்பிட்டு கிளம்பலாம்", என்று ஸ்ரீ திசைதிருப்பி அழைத்துச் சென்றாள்.

போகும்போது திரும்பி விக்ரமிடம், கட்டை விரலை தூக்கி காட்டினாள். விக்ரமும் சிரிப்புடனும் கட்டை விரலை தூக்கி காட்டினான்.

யாருக்கு என்ன ஆபத்து? அமர் எதை மறைக்கிறான்? இவர்கள் வெளியே செல்வதால் வரப்போகும் ஆபத்தை அறிவார்களா? என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.


கைதியின் சிறை தொடரும்..........
Super ka
 

Advertisement

Top