Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

குவியமுடன் ஒரு காதல் 14 2

Advertisement

Admin

Admin
Member
ரித்தியா சிலையாக சமைந்து நிற்க அபிராமி அவளின் தோள் தொட்டு, “யார் கிட்டடி பேசுன?? மாயா எங்க??” என்று வினவினார். “அம்மா மாயு வீட்டை விட்டு போயிட்டாமா….”
அபிராமியால் நம்பவே முடியவில்லை. “என்னடி சொல்ற?? மாயா அப்படி எல்லாம் பண்ண மாட்டாடி… ஒழுங்கா சொல்லு!” ரித்தியா கண்களில் வழியும் நீரை துடைத்துக் கூட செய்யாமல் நடந்தவற்றை விளக்க, அபிராமியின் நெஞ்சம் அதன் பாரம் தாங்காமல் அடைத்துக் கொண்டது.

உண்மையாகவே அவர் நெஞ்சம் அடைத்துக் கொண்டதில் அவருக்கு முதன்முதலில் மையில்ட் ஹார்ட் அட்டாக் வந்தது. சரிந்து விழும் தாயை, அலறியபடி பிடித்து, அவசர அவசரமாக விநாயகத்தை அழைத்தாள். தன் அத்தை எல்லாம் அவள் நினைவில் இல்லை!

சுருக்கமாக அம்மாவிற்கு உடம்பு சரியில்லை என்று மட்டும் கூற, விநாயகம் அடுத்த பத்து நிமிடங்களில் அங்கே அவனின் காருடன் இருந்தான். அபிராமியை துக்கிப் போட்டு மருத்துவமனை செல்லும் போது தன் கைப்பேசியை ரித்தியாவிடம் கொடுத்து, “கார்த்திக்க கூப்பிடுமா. நேரா ஹாஸ்பெட்டலுக்கு வந்துர சொல்லு.” என்று கூறினான் விநாயகம்.

அவன் கூறியபடியே செய்துவிட்டு அம்மாவை எழுப்பும் முயற்சியில் ஈடுப்பட்டாள் இளயவள். இவர்கள் சென்றதுமே அவரச திகிச்சை பிரிவில் அபிராமியை சேர்த்து விட்டனர் மருத்துவர்கள். நர்ஸ் இவளிடம் “ஹார்ட் அட்டாக்கா தான் இருக்கும்மா” என போகிற போக்கில் குண்டை தூக்கிப் போட ரித்தியா அங்கேயே மடிந்து அழ ஆரம்பித்தாள்.

அப்போது தான் கார்த்திக் அங்கே வந்து சேர்ந்தான். சரியாக அதே நேரம் தான் மாயாவை பற்றிக் கேட்டான் விநாயகம். ரித்தியா அழுதுக் கொண்டே, “மாயா வீட்டை விட்டு போயிட்டானா” என கூற, கேட்ட மற்ற இருவருக்கும் நெஞ்சம் ஒரு முறை நின்று பின் துடித்தது.

மீதிக் கதையையும் ரித்தியா அழுதபடியே சொல்லி முடிக்க, கார்த்திக் மனம் எங்கெங்கோ பயணித்தது. எல்லாம் ஒரு மூன்று நிமிடங்கள் தான். அதன்பின் அடுத்து என்ன செய்து, மாயாவை வீட்டுக்கு அழைத்து வருவது என மனம் சிந்தித்ததில் ரித்தியாவிடம் மாயாவின் சிம் கார்ட் எந்த கம்பெனியுடையது என கேட்டான் கார்த்திக்.

ரித்தியா விழிகளை மலர்த்தி பதில் கூறவும், உடனே விநாயகம் கார்த்திக்கிடம் கேட்டான். “யாராவது உனக்கு அந்த கம்பெனி கஸ்டமர் கேர்ல தெரியுமாடா?? அவ எங்க இருக்கானான்னு ட்ரேஸ் பண்ணலாம்.”

“என்னோட ஸ்கூல் பிரெண்டு ஒருத்தன் இருந்தான். பட், இன்னமும் அவன் அந்த கம்பெனில தான் இருக்கானான்னு சரியா தெரியாது. நான் கூப்பிட்டு பார்க்குறேன் அவனுக்கு.” அவன் பிரெண்டு இன்னமும் அதே கம்பெனியில் தான் இருக்க வேண்டும் என்ற வேண்டுதலுடன் கார்த்திக் அவன் பால்ய கால நண்பனை அழைக்க, கடவுள் அவனை கைவிடவில்லை.

அவன் நண்பனிடம் உடனே மாயாவின் நம்பரை கூறி, “ரொம்ப தெரிஞ்ச பொண்ணுடா. சீக்கிரமா பார்த்து சொல்லு!” என்றும் மன்றாடினான். அவன் நண்பன் தானே திரும்ப அழைப்பதாக கூறவும், அபிராமியின் பக்கம் தங்களின் வேண்டுதல்களை திருப்பினர் அனைவரும். சில நிமிடங்களில் வெளியே வந்த டாக்டரும் மைல்ட் ஹார்ட் அட்டாக் தான் என்பதை உறுதிபடுத்த ரித்தியா ஓவென ஒப்பாரி வைக்க ஆரம்பித்தாள்.

விநாயகம் ரித்தியாவை பார்த்துக் கொள்ள, கார்த்திக் தன் நண்பனை மீண்டும் அழைத்தான். “கரக்டா கால் பண்ணிட்டடா. நானே கூப்பிடனும்னு இருந்தேன். அந்த நம்பர் கோயம்பத்தூர்லந்து கிளம்பி ஈரோடு போற ரூட்ல, அவினாசி வரைக்கும் ஒரு மூக்கால் மணி நேரத்துக்கு முன்னாடி போயிருக்கு. அதுக்கு மேல சிக்னல் கிடைக்கலை! போன் ஆப் பண்ணிருப்பாங்க போல. அனேகமா ஈரோடுக்கு தான் போயிருக்கனும்! நான் நம்பரை மானிட்டர் பண்ணிட்டே இருக்கேன்டா. ஏதாவது சிக்னல் தெரிஞ்சா திரும்ப கால் பண்றேன். சரியா??”

“ரொம்ப தாங்க்ஸ்டா! நான் என்னோட போன் கையில தான் வைச்சுருப்பேன். கண்டிப்பா கால் பண்ணு.”

தன் நண்பன் கூறிய விஷயத்தை மற்ற இருவரிடமும் பகிர்ந்துவிட்டு, டாக்டர் உள்ளே போகலாம் கூறியவுடன் மூவரும் உள்ளே விரைந்தனர். ரித்தியா கண்களை துடைத்தபடி, “அம்மா சரியாகிடும். ஒண்ணும் பிரச்சனையில்லமா.” என கூறவும், கார்த்திக் அவரின் இடது கையை வருடி கொடுத்து தைரியம் அளித்தான். சரியாக அதே நேரத்தில் கார்த்திக்கை அவன் அப்பா அழைத்தார்.

சுப்பிரமணியம் இப்போது இருப்பது பெங்களூரில்!
வேலை விஷயமாக அவர் அங்கே சென்றிருந்ததால், அவரின் தொலைப்பேசி அழைப்பை வெளியே சென்று எடுத்து, அனைத்தையும் விளக்கினான் அவரிடம். முடிக்கும் தருவாயில் மீண்டும் உள்ளே வந்து செல்போனை ஸ்பீக்கரில் போட்டு, “எல்லாருக்கும் சேர்த்து சொல்லிக்கறேன். நான் இப்போ மாயாவை தேடி ஈரோடு போறேன். என்னவும் செய்வேன்! ஆனா, வந்தா அவ கூடத் தான் திரும்ப வருவேன். இல்லனா வரவே மாட்டேன்! அப்பா நீ சீக்கிரமா கிளம்பி வா இங்க. பை.” என்று அறிக்கையே வெளியிட்டான்.

அவன் பேசிய ஒவ்வொரு வார்த்தைக்கும் அவ்வளவு அழுத்தம் அவ்வளவு உறுதி தெரிந்தது! விநாயகம் தான் இங்கே பார்த்துக் கொள்வதாக கூற, சரியென மாயா வேட்டையில் கிளம்பினான் கார்த்திக்.

மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தவன் அவினாசி சாலையில் செல்ல ஆரம்பிக்கும் முன், சில பொருட்களை வாங்கினான். அதன்பின் அவன் நிறுத்தவே இல்லை…. ஆனால், பறந்து அவசரகதியில் ஓட்டவும் இல்லை. கதிர் நடத்திய பாடம் அப்படி. மிகவும் பொறுமையாகவும் இல்லாமல் பறக்கவும் செய்யாமல் ஒரு மாதிரி காரை இயக்கினான் கார்த்திக்.

அவன் மனம் அவனிடம் இருக்கவில்லை! எப்படியாவது மாயாவை நல்லபடியாக திரும்ப கோயம்பத்தூரில் கொண்டு சேர்க்க வேண்டும் என்று எல்லா கடவுளிடமும் வேண்டுதல் விடுத்தான்.

அவன் வேண்டுதலின் நாயகியோ, கனிமோழியின் வீட்டின் முன் நின்று பூட்டி இருந்த கேட்டை வெறித்து நோக்கினாள். ஈரோடு பேருந்து நிலையத்தில் இறங்கி, ஒரு ஆட்டோ பிடித்து மாணிக்கபாளையம் ஹவுஸிங் யூனிட்டில் இருக்கும் தன் தோழியின் வீட்டுக்கு வந்து இறங்கியவளை பூட்டிய வீடே வரவேற்றது.

அப்போது தான் அவள் மீண்டும் வேறு வழியில்லாமல், கைப்பேசியை உயிர்பெற வைத்தாள். உயிர்பெற்றதும் பல தவறவிட்ட அழைப்புகளின் குறுஞ்செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தன் தோழியை அழைத்தாள். கஷ்டகாலம்…. இவள் அழைத்ததும் உள்ளே ஒரு போன் அடிப்பது இவளுக்கே கேட்டது!

அது தன் தோழியின் மொபைல் தானா என்று அறிய மீண்டும் இருமுறை அழைத்து உறுதி செய்தாள். மேலும், அழைக்கும் போது தான் கவனித்தாள். வாட்ஸ் ஆப்பில் கனிமொழி அனுப்பியிருந்த மேசேஜை! தன் பாட்டி மிகவும் சீரியஸாக இருப்பதால், அவளின் சொந்த ஊருக்கு செல்வதாக செய்தி தெரிவித்திருந்தாள். இவளை அடுத்த முறை கண்டிப்பாக சந்திப்பதாக வேறு கூறியிருந்தாள்.

மாயா என்ன செய்வது என்று அறியாமல் பேந்த முழித்தபடி இருப்பதை பார்த்து, கனிமொழியின் பக்கத்து வீட்டு ஆசாமி, “என்னமா நீ தான் அந்த கனிமொழிக்கு போன்னுக்கு கூப்பிட்டியா?? அது போன உள்ள வைச்சுட்டு போயிடுச்சு போல. நீ யாரு அதோட பிரெண்டா??” என்று வினவவும், மாயா வெறுமே தலை மட்டும் அசைத்தாள்.

காரணம் கேள்வி கேட்டவன் வாட்ட சாட்டமாக ரௌடி போல காட்சியளிக்கவும், மாயாவிற்கு முதல் முறை தான் வீட்டை விட்டு கிளம்பியது தவறோ என்ற எண்ணம் சூழ்ந்தது. ரொம்ப நேரம் அங்கே இருப்பது நல்லதல்ல என்று நினைத்தவள் திரும்ப ஆட்டோ பிடித்து பஸ் நிலையம் வந்து சேர்ந்தாள்.

மணி பார்த்தால் ஏழாக பத்து நிமிடம் இருந்தது. இப்போது என்ன செய்வது?? மீண்டும் கோயம்பத்தூரே போவோமா?? அல்லது சேலத்தில் இருக்கும் தன் பள்ளி தோழியின் வீட்டிற்கு செல்வோமா???

மாயா மண்டையை பியித்துக் கொண்ட வேளையில் தான் கார்த்திக் அவளை அழைத்தான். முதலில் மாயா அழைப்பை எடுக்கவே இல்லை! ஆனால், கார்த்திக் ‘நீ எங்க இருக்கேன்னு எனக்கு தெரியும். அங்கயே இரு நான் உன்கிட்ட வந்திட்டே இருக்கேன்’ என்று ஒரு மேசேஜை தட்டிவிடவும், அடுத்த அழைப்பை மாயா எடுத்தாள்.

“வேணாம் கார்த்திக். நீ என்னோட லைப்ல விளையாடினது போதும். என்னை விட்டுடு… நான் இங்க இருக்க மாட்டேன். கிளம்பப் போறேன்.”

அவனை பேசவே விடாமல் மாயாவே பேசி வைத்துவிட்டாள். போனையும் வழக்கம் போல் அணைத்தாயிற்று! ‘ச்சேசேசே! லூசு லூசு’ என அவளை திட்டியபடி காரை ஈரோட்டின் பேருந்து நிலையத்தை நோக்கி, செலுத்தினான் கார்த்திக்.

மாயாவின் மொபைல் சிக்னல் கிடைத்ததுமே அவன் நண்பன் இவனை அழைத்து மாயா பயணிக்கும் இடத்தையெல்லாம் சொல்ல ஆரம்பித்தான். அப்படி தான் மாயா பேருந்து நிலையத்தில் இருப்பது தெரிய வந்தது.

ஆனால், கார்த்திக் விரைவில் தான் இருக்கும் இடத்திற்கு வந்துவிடுவான் என தெரிந்ததும் மாயா எங்கே போகிறோம் என அறியாமலே விரைவாக நடக்க ஆரம்பித்தாள். சிறிது நேரம் கழித்து தான் அவளுக்கு தெரிந்தது தான் இதுவரை பேருந்து நிலையத்திற்குள் தான் சுற்றி வந்திருக்கிறோம் என!

ஐய்யோ என்ற உணர்வுடன், மூச்சு இரைக்க நின்றாள் மாயா.

‘இப்படியே போனா கார்த்திக்கே வந்திருவான் போலவே’ என மாயா நினைக்கவும், ஒரு கைக்குட்டை அவளின் முகத்தை மூடி அவளை மயங்கச் செய்யவும் சரியாக இருந்தது!!
 
Top