Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

குடியிருந்த கோயில்

Advertisement

Vasantham

New member
Member
குடியிருந்த கோயில்

"குமார்! அப்பா உன்னை அழைக்கிறார் "அம்மாவின் குரல் கேட்டு அவன் வேத முத்துவின் அறைக்குள் நுழைந்தான்.
குமார் வேத முத்துவின் இரண்டாவது மகன். திருமணம் முடிந்த பின்னும் அம்மா அப்பாவோடு ஒரே வீட்டில் வாழ்பவன். வீட்டின் பின்னால் இருந்த தோட்டத்து வீட்டில் மூத்த மகன் வசித்து வந்தான். தோட்டத்தின் அருகில் இருப்பதால் அது அவ்வாறு அழைக்கப்பட்டது. அவனுக்கு மூன்று குழந்தைகள் உண்டு. வீட்டிற்கு முன்னால் குமாருக்கு ஒரு வீடு கட்டப்பட்டிருந்தது. அதன் கிரகப் பிரவேசத்தை பற்றி பேசத்தான் அப்பா அழைத்திருப்பார் என்று எண்ணிய குமார் ‘’என்னப்பா?’’ என்று வினவினான்.
‘’ குமார், புதுவீடு உனக்காகத் தான் கட்டப்பட்டது. ஆனால் அது பெரிதாக இருப்பதால் அண்ணன் மூன்று குழந்தைகளோடு அதில் வாழட்டும். நீங்கள் இருவரும் தோட்டத்து வீட்டில் இருங்கள்.
‘’ முடியாது! நான் தான் புது வீட்டில் இருப்பேன். அண்ணன் அந்த பழைய வீட்டில் இருக்கட்டும். அது பழைய வீடு ஒன்றும் அல்ல, அதில் அவன் குடியேறி 9 மாதங்கள் தான் ஆகின்றன.’’
‘’ பரவாயில்லை அவன் அதிலேயே வசிக்கட்டும் அவன் 9 மாத காலமாக வாழ்ந்த அந்த பழைய வீட்டிற்கு நான் போகமாட்டேன். தோட்டத்து வீட்டில் இன்னும் மூன்று அறைகள் கட்டினால் வீடு பெரியதாகும்.’’
‘’ நிறுத்துடா! இப்போது மூன்று அறைகள் கட்ட பணம் வேண்டும். அதை நீ யோசித்தாயா?
இதுவரை மௌனமாக நின்ற ராஜன் வாய் திறந்து பேசினான். ‘தம்பி! நான் ஒன்பது மாதங்கள் வாழ்ந்த வீடு உனக்கு பழைய வீடு. அதனால் அங்கு நீ குடி போக மாட்டாய். அப்படித்தானே! நான் ஒன்பது மாதமாக குடியிருந்த கோயில்- நம் அம்மாவின் வயிற்றில்,- அதாவது நான் வாழ்ந்த பழைய வீட்டில் நீ எப்படியப்பா 9 மாதங்கள் வாழ்ந்தாய்?’
குமார் வாயடைத்து நின்றான்.
 

Advertisement

Top