Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் நதியிலே - 1

Advertisement

Lavi bala

Member
Member
அத்தியாயம் -1

கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனை..

பரப்பாக இயங்கி கொண்டிருந்தது... அதில் தனது பணியினை முடித்துவிட்டு வீடு திரும்ப ஆயத்தமாகி கொண்டிருந்தான் விவேக்...

விவேக் - மருத்துவம் பயின்று விட்டு தனியார் மருத்துவமனையில் பணிபுரிகிறான்..

அப்பொழுது அவனது போன் இசைத்து தன் இருப்பை காட்டியது... ராம் தான் அழைத்திருந்தான்...

ராம் - கோவையில் பெரிய பிசினஸ்மேன்... 26 வயதே ஆகிறது.. ஆனாலும் என்ஜினீரிங் முடித்துவிட்டு தந்தையின் பிசினெஸ்ஸை எடுத்து திறம்பட நடத்தி கொண்டிருப்பவன். அழகும் கம்பீரமும் நிறைந்தவன்... சிரித்தால் வலது கன்னத்தில் விழும் குழிக்காகவே அவனை ரசிப்போர் ஏராளம்... விவேக்கின் தோழியின் காதலன்... பின் அவனுக்கும் தோழனாகினான்.....

அழைப்பை ஏற்றான்..
"ஹலோ! சொல்லுடா மச்சி " - விவேக்

"எங்க இருக்க"

"Duty முடிஞ்சிடுச்சுடா வீட்டுக்கு கிளம்பிட்டிருக்கேன் "- விவேக்

"சரி, அப்படியே அவ வீட்டுக்கு வா "

"சரிடா "- விவேக்

அவன் அவள் வீட்டை அடைந்து காரை பார்க் செய்துவிட்டு வந்தான்...
அங்கு வாசலில் நின்று கொண்டிருந்தான் ராம்... அவன் கையில் ஒரு பார்சல் உணவு ...

"ஏன்டா "- விவேக்

"இதுல டிபன் இருக்கு... அழுதுட்டு இருப்பா.. எப்படியாச்சு சாப்பிட வை.. "

"இன்னுமாடா நீ அவகிட்ட பேசல. "- விவேக்

.............

என்னடா ராம் என்று நண்பனை பார்த்தான்.. அவன் கண்கள் லேசாக கலங்கி இருந்தது... 14 வருடமாக அவளைத் தெரியும்.. 7 வருட காதல்.. முதல் முறையாக அவளிடம் பேசாமல் இருக்கிறான்.. அவனுக்கும் கஷ்டமாக தான் இருக்கிறது.. ஆனால் அதற்கு மேல் கோவமும் உள்ளது..

விவேக்கிடம் எதுவும் சொல்லாமல் "சாப்பிட மட்டும் வச்சிடுடா ப்ளீஸ்.. அவ சாப்பிட்டப்புறம் போன் பண்ணு " என்று கூறி தன் காரை எடுத்து சென்றுவிட்டான்......
..............................................

அவன் சென்றதும் வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினான்.. தெய்வா வந்து கதவை திறந்தாள்...

தெய்வா - ராமின் தூரத்து உறவு.. கோவையில் தங்கி pg படித்து கொண்டிருக்கிறாள்..

கதவை திறந்தவளிடம் விவேக் "லக்க்ஷி எங்க? " என்றான்.. அவள் ரூமை கைகாட்டி "அழுதுட்டே இருக்காங்க .. ராம் அண்ணா வந்தாங்க.. ஆனா அவங்ககிட்ட எதும் பேசல.. அப்போ உள்ள போனவங்க தான்.. சாப்பிட கூப்பிட்டேன்.. வேண்டாம்னு சொல்லிட்டாங்க என்றாள்...சரி இரு நான் போய் பார்க்கிறேன் என்று கூறி லக்க்ஷி யின் ரூமிற்குள் நுழைந்தான் விவேக்..

லக்க்ஷனா - அவள் ஒரு மருத்துவர்... ஈரோட்டில் இருந்து வந்து கோவையில் தங்கி ஒரு மருத்துவமனையில் பணிபுரிகிறாள்.. ராம் இருக்கும் ஊரில் இருக்கவேண்டும் என்பதற்காக..

உள்ளே நுழைந்த விவேக் கண்டது அங்கே சேரில் அமர்ந்து டேபிளில் தலை கவிழ்ந்து அழுது கொண்டிருந்தவளைத்தான்..

விவேக் அவளருகில் சென்று "லக்க்ஷிமா" என்று அழைத்தான்.. விவேக்கின் குரல் கேட்டு நிமிர்ந்தவளைக் கண்டு அதிர்ந்தான் விவேக்.. அழுதழுது முகம் முழுக்க வீங்கியிருந்தது..

எதுக்கு இப்போ இப்படி அழுதுட்டு இருக்க என்று அவள் கண்ணைத் துடைத்துவிட்டு வா சாப்பிடு முதல்ல என்றான்... எதுவும் பேசாமல் நண்பனின் தோள் சாய்ந்தாள். ஆதரவாக அவள் தலைகோதி சாப்பிடு என்றான்..

அவளுக்குத் தெரியும் ராம் தான் அவனை அனுப்பி இருப்பான் என்று. சரியாக அதே நேரம் அவளது போனில் மெசேஜ் வந்ததற்கான ஒலி கேட்டது.. எடுத்து பார்த்தாள்.. ராம் தான் அனுப்பியிருந்தான் "ஒழுங்கா சாப்பிடு" என்று..அவள் இதழில்
சிறுபுன்னகை.. அவனது அக்கறையை நினைக்கும் போதே இவளுக்குத் தான் அன்று அவனிடம் பேசியது அதிகப்படி என்றே தோன்றியது.. ஆனாலும் அவன் தன்னிடம் பேசவில்லையே என்று வருந்தினாள்..

பார்ஸலைப் பிரித்துப் பார்த்தாள்.. அவளுக்கு மிகவும் பிடித்த பூரி மசாலா வாங்கியிருந்தான்.. எடுத்து உண்ணத்தொடங்கினாள்.. அவளையே பார்த்துக்கொண்டிருந்தான் விவேக். இவர்களைப் பற்றி தெரியும். இருந்தாலும் தன் தோழி அழுவதை முதல்முறை பார்க்கிறான்..

லக்க்ஷனா தைரியமான பெண்..
அவ்வளவு சீக்கிரம் அழமாட்டாள்.. ஆனால் ராம் விஷயத்தில் அவள் நேர்எதிர்.. அவனது சிறு முக திருப்பலையும் தாங்க மாட்டாள்.........


படிச்சிட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க பிரிண்ட்ஸ்
 
Top