Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் கண்ட கணமே-பாகம் 8

Advertisement

பிரேமாமகள்

Well-known member
Member


பாகம்- 8


இடம்: பொதுவா லண்டன்னு வைத்துக்கொள்வோம்

நேரம்: கிருஸ்மஸ் கொண்டாட்ட காலம்.


அர்ஜூன் என் வீட்டிலிருந்து கிளம்பிச் சென்றபின், நாங்கள் இருவரும், போன் செய்து பேசிக்கொள்ளவில்லை. ஆனால் அடிக்கடி வாட்ஸப்பில் செய்தி அனுப்பிக் கொள்வோம்.

முதலில், ‘காலுக்குப் பயிற்சி செய்கிறாயா? சாப்பிட்டாயா?’ என்று ஆரம்பித்து, பிடிச்சது பிடிக்காதது, அவனுடைய நண்பர்கள், சந்திக்கும் நோயாளிகள், ஊரில் செஞ்ச குறும்புகள் என எல்லாவற்றையும் பகிர்ந்துகொண்டான். ஒரு நல்ல நண்பனாக மாறுவதற்கு எல்லா முயற்சிகளும் அவன் முன்னெக்கிறான் என்று புரிந்தது.

அவனாக கேட்கும் போது, என் கல்யாண கதையைச் சொல்லலாம். அதுவரைக்கும் அவனை மாதிரியே நட்போடு பழகுவோம் என முடிவெடுத்ததால், என் மனதிலிருந்த ஏக்கங்களும் மாற ஆரம்பித்தன.

எதாவது ஒரு வகையில் அவன் அன்பும் அக்கறையும் எனக்கு கிடைத்தால் போதும் என்றிருந்தது.

கிறிஸ்துமஸ் நேரம் என்பதால், கடைக்கு வாடிக்கையாளர்கள் வந்தவண்ணம் இருந்தனர். சில நாட்கள் வீடு வர இரவு 9 ஆகிவிடும். கடையில் வேலைப் பார்ப்பவர்கள் தாண்டி எனக்கு பழக்கமானவர்கள் யாரும் இல்லை. வாரத்தில் ஏழு நாளும் கடை இருப்பதால் லண்டனுக்குள் பெரிதாக ஊர்சுற்றும் வாய்ப்பு கிடைத்ததில்லை. இதை அர்ஜூனிடமும் பகிர்ந்திருந்தேன்.

அன்று பிரதோஷ நாள்.

காலையில் இருந்து அர்ஜூனின் நியாபகமாகவே இருந்தது. அவன் போன் செய்யாவிட்டாலும் நானாவது சகஜமாக அழைத்து பேசியிருக்கலாம். இப்போது போன் செய்தால் என்ன நினைப்பான்?

யோசித்து யோசித்து மூளை சூடாகி, தாங்கமுடியாமல் போனில் அழைத்தேன். முதல் முறை எடுக்கவில்லை. ஹாஸ்பிட்டலில் நோயாளிகளைப் பார்த்துக்கொண்டிருப்பான் என என்னை நானே சமாதானம் செய்து கொண்டு, ஒரு மணி நேரம் கழித்து மறுபடியும் அழைத்தேன். இம்முறையும் எடுக்கவில்லை.

சரி அவனே திரும்பி அழைப்பான், என்று விட்டுவிட்டாலும், நொடிக்கொரு தரம் போனை எடுத்துப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

மதியம் 2 மணிக்கு, வழக்கம் போல, ‘சாப்பிட்டாயா?’ என்ற கேள்வியை ஏந்தியபடி வாட்ஸப் செய்தி அனுப்பியிருந்தான்.

‘அதென்ன திமிரு, ஒருத்தி 2 தடவை போன் செய்திருக்கிறாள், திருப்பி அழைப்பு விடுக்கலாம். இல்லாவிட்டால் ஏதும் முக்கியமான விசயமான்னு வாட்ஸப் அனுப்பலாம். அதைவிட்டு என்ன சாப்பிட்டியான்னு கேள்வி?

ஏன் இவரு கேட்காட்டி நாங்க சாப்பிட்ட சோறு செரிக்காதாக்கும்? ‘

கோபத்தில் மறுபடியும் போன் செய்தேன்.

‘’ஹலோ, அர்ஜூன் ஹியர்’’ என்றான்.

‘’பிளிஸ், யார்ன்னு தெரியாத நெம்பருக்கு போன் பண்ற அளவுக்கு நான் ஒன்னும் முட்டாள் இல்லைங்க’’ என்று பொரிந்தேன்.

‘’அப்படி உனக்கு நெம்பர் தெரியும்ன்னா, இத்தனை ஒருநாளில் ஒரு முறை கூட அழைத்ததில்லையே?’’

……………………………………………….

‘’ ஒருத்தங்க நமக்கு வாட்ஸப் பண்ணினால், நாமும் வாட்ஸப்லதான் செய்யனும்ன்னு இல்லை அமுதினி. அவங்களை அழைத்தும் பேசலாம்.’’ என்றான் நிதானமாக.

‘’சாரி, உங்க வேலை நேரத்தில் தொந்தரவு செய்ய வேண்டாம்ன்னு தான் கூப்பிடவில்லை’’. என்றேன்.

‘’ஆஹான்’… சரி, என்ன பண்ற?’’

‘’பிரதோஷத்துக்கு, கோயிலுக்குப் போறேன். நீங்களும் வருவீங்களா? என்று கேட்டேன்.

‘’வேணாஞ்சாமி. அன்னிக்கு கோயிலுக்குப் போய் வாங்கிய வரமே போதும். பிஞ்சு மனசை மறுபடியும் பிச்சுப் போடாதீங்கம்மா’’ என்றான் குறும்பு மின்ன.

‘’என்ன சொல்றீங்க?’’

‘’ஒன்னுமே சொல்லல. நீ மட்டும் சாமி கும்பிட்டு நல்லாயிரு. ஆங், முக்கியமா விழுந்து கும்பிடும்போது, யார் கால்லயாவது விழறோமான்னு பார்த்திட்டு விழு. இப்ப என்னைவிடு.’’ என்றான்.

பீறிட்டு எழும்பிய சிரிப்பை அடக்கிக்கொண்டு கோயிலுக்குச் சென்றேன்.

ஒருவழியாக கிறிஸ்மஸ் வந்தது. நம்மூர்ல தீபாவளி பொங்கல்ன்னா, தெருவெல்லாம் ஆட்கள் நடமாட்டமா ஜே ஜேன்னு இருக்கும். இங்க என்னடான்னா, கழுவி காயபோட்ட மாதிரி ஊரே அமைதியா இருக்கிறது. எல்லா கடைகளும் மூடப்பட்டு, மக்கள் சந்தோஷமா குடும்பத்தோடு ஒன்றாக இருக்காங்க.

பஸ் ஏதும் ஓடாததால், மீனாக்கா வீட்டுக்குக் கூட போக முடியாமல், தேம்மேன்னு இருந்தேன்.

‘இன்னிக்கு அர்ஜூனுக்கும் லீவ் தான? என்ன செய்றான்? கேட்டுப் பார்க்கலாமா? இல்லை போன் பண்ணியே பேசலாம். அன்னிக்கே குத்திக் காட்டி பேசினான்’ என முடிவு செய்தபடி, போனில் அழைத்தேன்.

‘’ஹலோ… அமுதினி மேடம், என்ன காத்து என் பக்கம் அடிக்குது? ‘’என்றான்.

‘’சும்மா கிண்டல் பண்ணாதீங்க, நீங்க என்ன பண்றீங்க?’’ என்றேன்.

‘’இன்னிக்கு ரோட்டில் டிராபிக்கே இருக்காது. லாங் டிரைவ் போறதுக்கு நல்லா இருக்கும். அதான் கிளம்பிட்டு இருக்கேன்’’. என பதில் சொன்னான்.

‘எனக்கும் லாங் டிரைவ் போறதுன்னா ரொம்ப பிடிக்கும். லீவ் விட்டால் போதும், எங்கப்பா கார்லேயே எல்லா ஊர்களுக்கும் கூட்டிப் போவார். ஆனா இவனாக கூப்பிட்டால் ஓ.கே. நானாக வர்றேன்னு சொன்னால் என்ன நினைப்பான்?’ என யோசித்தேன்.

‘’என்ன அமுதினி… தூங்கிட்டியா?’’

‘’இல்லங்க… அது வந்து’’

‘’ம்ம், வந்து’’

‘’பிளிஸ்…. நீங்க தப்பா நினைக்கலைன்னா நானும் உங்க கூட வரவா’’ ஒருவழியாகக் கேட்டுவிட்டேன்.

‘’இல்ல தப்பாத்தான் நினைப்பேன்’’ என்றான்.

……………………………..

‘’உனக்கு வரனும்ன்னு தோணிச்சின்னா வா. உரிமையா நானும் வரேன்னு சொல்லு. அதைவிட்டு, ஏன் இழுக்கற, ஒன்னு செய், எதாவது சமைச்சு வை. பேக் பண்ணி எடுத்துகிட்டு போவோம்’’என்றான்.

உற்சாகம் மின்ன, இறால் பிரியாணி சமைத்து தொட்டுக்க முட்டை கறியும் பச்சடியும் செய்து வைத்தேன். ‘அய்யோ கடவுளே நான் சமைச்சது அவனுக்குப் புடிக்கனும்’ன்னு மனசு வேண்டிக்கொண்டது.

11 மணிவாக்கில் இருவரும் கிளம்பி சவுத்தாம்ப்டண்/ Southampton பீச் நோக்கி பயணித்தோம். நெருக்கடி இல்லாத மோட்டர்வே ல, இளையராஜா பாட்டு கேட்டுக்கிட்டே பயணம் போறது ‘திவ்யானந்தம்’.

கடற்கரைன்னா மெரினா தான்னு மனசு அடிச்சு சொன்னாலும், இந்த பீச்சும் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. சினிமால பார்க்கிற மாதிரி பளபளான்னு தெளிவான நீரோடு அவ்வளவு அழகு.

ஒருவேளை அர்ஜூனோடு வந்ததால், இந்த இடம் எனக்கு ரம்மியமாகத் தெரிகிறதா?

அந்த குளிரிலும் ஒரு கல்யாண ஜோடி போட்டோ ஷீட் நடத்திட்டு இருந்தாங்க. ஹாலிவுட் படம் பார்க்கிற மாதிரி அவ்வளவு ரொமான்ட்டிக்கா இருந்தது. ‘என்னா முத்தம் என்னா முத்தம்’, அந்த சத்தம் இங்க வரைக்கும் கேட்குது.

அர்ஜூன் என்ன செய்றான்னு பார்த்தால், ரொம்ப தீவிரமாக இயற்கைக் காட்சிகளை கேமராவில் நிரப்பிக்கொண்டிருந்தான்.



‘இங்கங்கு ஊஞ்சலாக நான் போகிறேன்

அங்கங்கு ஆசை தீயில் நாம் வேகிறேன்

உன் ராக மோகனம் என் காதல் வாகனம்’



காரில் கேட்ட பாடலை நான் முணுமுணுத்துக்கொண்டிருந்த போது, என்னை விசிலடித்து சாப்பிடக் கூப்பிட்டான் அர்ஜூன்.

சாப்பிடும் போது, ‘’நல்லாயிருக்கா? என்று கேட்டேன்.

‘’ம்ம்ம்… சீக்கிரம் சாப்பிடு, கிளம்பலாம், நேரம் ஆனா ரொம்ப குளிரும்’’ என்றான்.

‘’இந்த ஆம்பளைங்களே இப்படித்தானா? வக்கனையா சாப்பிடுவாங்க. ஆனா நல்லாயிருக்குன்னு ஒரு வார்த்தை வராது. நாமளா கேட்டாலும் கடமைக்கு மண்டையை மட்டும் ஆட்டறது? அடேய். உன்னை’’ என்று பொங்கியது மனசு.

எங்கப்பா கூட என்னை எல்லா விசயத்திலும், ‘எங்க பாப்பா மாதிரி வருமா’ன்னு பாராட்டுவாரு. ஆனா எதாவது புதுசா சமைச்சு, ‘டேஸ்ட் பாருங்கப்பா’ன்னு சொன்னா, ’ம்ம்’ன்னு இதே மண்டையாட்டல்தான். என் அண்ணன் இருக்கானே, அவன் இன்னும் மோசம். கருத்து சொல்றேங்கிற பேரில் கழுவிக் கழுவி ஊத்துவான். சாப்பாட்டை பாராட்டற விசயத்தில் எல்லா ஆம்பிளைங்களும், வாயில்லா பூனைகள்தான்.

இரவு நெருங்கும் முன் வீடு வந்து சேர்ந்தோம்.

‘’ரொம்ப நன்றி, இந்த பயணத்தை ஆயுளுக்கும் மறக்க மாட்டேன். எனக்கு மிகப்பிடித்த நாட்களும் இதுவும் ஒன்று’’ என்று அர்ஜூனிடம் நன்றி சொன்னேன்.

‘’அது என் பாக்கியம்’’ என்று அவன் சொல்லும் போது,

சரியான என் போன் அடித்தது. சீட்டுக்கு கீழே விழுந்திருந்த போனை அர்ஜூன் தேடி எடுத்துப் பார்த்து விட்டு, என்னிடம் தந்தான்.

போனில் மின்னிய பெயர் ‘புருஷர்’’

காதல் வளரும்
 
hiii premaa...

paayasam enaku ilaiyaa....

intha ud ah nalla kulappiruchu ennai... aanaa heroin arjun kuda irukum poothu nalla feel pannuraa aana aankita ethaiyoo maraikuraa.. kandupidikureen

super ud premaa i am waiting nxt ud...

போகப் போகப் புரியும். அமுதினியின் மனசு தெரியும்..

பாயாசம் குடிக்க லண்டன் வரவும்
 
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
பிரேமா மகள் டியர்
 
Last edited:
Top