Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் கண்ட கணமே- பாகம் 6

Advertisement

பிரேமாமகள்

Well-known member
Member
பாகம் - 6

இடம்: அமுதினியின் வீடு

நேரம்: தனிமையில் தவிக்கும் தருணம்


இப்போது கால் வலி கொஞ்சம் பரவாயில்லை. அதிகதூரம் நடக்காமல் ஓரளவு சமாளிக்கிறேன். அடிபட்டதுக்கு அடுத்த 3 நாட்கள் மீனாக்கா வந்து சமைச்சு தந்தாங்க. அவங்களுக்கும் குடும்பம் இருக்கு. கடை திறக்கவும் போகனும். அதனால் நானே சமாளித்துக் கொள்கிறேன் என்று அவங்ககிட்ட சொல்லிட்டேன்.

கடைக்கு லோடு வர்றப்பவோ, தேவை இருந்தாலோ கேப் பிடித்துச் சென்று, உட்கார்ந்த இடத்திலிருந்தே சில மணி நேரங்கள் வேலை பார்ப்பேன். மத்தபடி வீட்டில்தான். ஊர்ல எப்பவும் வீடு நிறைய ஆட்களோடு இருந்துவிட்டு, இந்த தனிமை கொடுரமா இருக்கு. அதுவும் அர்ஜூன் அமர்ந்த சோபாவை பார்க்கும்போதெல்லாம் அழுகை பீறிட்டு வரத்துடிக்கும்.

அன்னிக்கு அவன் கதவை அறைந்து சாத்தியது இன்னும் என் காதுக்குள் கேட்டுக்கொண்டிருக்கு. அவசரப்படாமல் ஒரு நிமிசம் நின்னு, நான் என்ன சொன்னேன், எப்படிச் சொன்னேன் என்று அவன் கவனிச்சிருக்கலாம்.

அர்ஜூனைப்பற்றி நல்லா தெரிந்த பிறகு, அவன் அன்பில் திளைத்தபிறகு, இனி அது கிடைக்குமா கிடைக்காதாங்கிற தவிப்பு, நெருப்புக்குச் சமமானது.

ஷிட்..ஷிட்…@@@@@@@@ (கெட்ட வார்த்தை). என்னை நானே திட்டிக்கிறேன், அவ்வளவு வாயடித்துவிட்டு, மொபைல் நெம்பர் வாங்காமல் விட்டுவிட்டேன். கொஞ்சம் கூட நெம்பர் வாங்கனும்ன்னு நியாபகமே வரல. ‘முட்டாள், .முட்டாள்… நீயெல்லாம் எப்படி உருப்படப்போற?’ன்னு என்னை நானே கழுவி ஊத்திக்கிறேன்.

ஹாஸ்பிட்டலுக்கு போன் செய்தாலும் அவனைப் புடிக்க முடியல. வேலை நேரத்தில் தனிப்பட்ட தொலைப்பேசி அழைப்புகளைத் தரமாட்டாங்களாம். மறுபடியும் கீழ விழுந்து காலை உடைச்சாத்தான் அவனை பார்க்க முடியுமா? ஐய்யோ... நான் ஏன் இப்படி யோசிக்கிறேன்?.

அன்னிக்கு எனக்கு நேரம் சரியில்லை. என்ன பேசறதுக்கு தெரியாமல் உளறிட்டேன். பைல்ல என் வீட்டு முகவரி பார்த்த மாதிரி, என் போன் நெம்பரும் பார்த்திருந்திருப்பானா? அப்படின்னா ஏன் எனக்கு போன் பண்ணல? கல்யாணம் ஆனதா சொன்னவகிட்ட எதுக்கு பேசனும்ன்னு நினைச்சிட்டானா?

அர்ஜூன் பிளிஸ்… உன்னைப் பார்க்கனும். அதுக்கு நான் என்ன பண்ணனும்?நான் என்ன சொன்னேன்னு, உனக்கு புரியவைக்கனும். பிளிஸ், ஒரே ஒரு சந்தர்ப்பம் குடு.

சாப்பிடத் தோன்றாமல், தூங்க முடியாமல், பைத்தியம் பிடிச்ச மாதிரி இருந்தது. என்ன செய்றேன்னு எனக்கே தெரியல.

அன்னிக்கு புது எண்ணிலிருந்து ஒரு அழைப்பு. எடுத்து ‘ஹலோ’ சொன்னேன். யாரும் பேசல. மறுபடியும் 5 நிமிசம் கழிச்சி அதே எண்ணிலிருந்து அழைப்பு.

‘ஹலோ’

……........

‘’ஹலோ…… எனிபடி இன் த லைன்’’

……………………..

‘’ஹலோ… கேன் யூ ஹியர் மீ’’

……………………………

சட்டென்ன மின்னல் வெட்டியது என்னுள்.

‘அர்ஜூன்’’

…………………….

‘’நீங்களா? நீங்கதான். எனக்கு நல்லா தெரியும். பேசுங்க பிளிஸ்’’

‘’கால்வலி எப்படி இருக்கு?’’

‘’தேங்க் காட்…. நீங்க எப்படி இருக்கீங்க? ஏன் போன் பண்ணிட்டு பேசல?.

‘’கால்வலி எப்படி இருக்குன்னு கேட்டேன்?’’ என்று குரலில் விறைப்பைக் காட்டினான்.

‘’பரவாயில்லை, நடக்க முடியுது. ஆனா கொஞ்ச நேரம் கூட நிக்க முடியலை’’.

‘’ம்ம், காலுக்கு பயிற்சி ஒழுங்கா செய்றியா?’’.

‘’உஹிம்… செய்யல’’ என்றேன்.

…………………….மெளனம். ( இதன் அர்த்தம், நான் சொன்னதை நீ கேட்கமாட்டியா? என்பதாகும்)

‘ஏங்க, லைன்ல இருக்கீங்களா?’ என்றேன்.

……………………

‘’பிளிஸ், எதாவது பேசுங்க, எனக்கு உங்களைப் பார்க்கனும் போலிருக்கு’’ என்றபடி

கட்டுப்படுத்தமுடியாமல் அழுகிறேன்.

‘’ஏய், அழாத… கதவைத் திற. வெளியில்தான் நிற்கிறேன்’’ என்றான்.

காதல் வளரும்​
 
Last edited:
super premaa...

unmaiya heroinuku mrg akirucha? illai avankita poi sonnala.?

avanai parkka mudiyama thavikkuraa.. apo athu love thana?

mee waiting nxt ud prema chellakutty :love:

கல்யாணம் ஆகிடுச்சா, இல்லையான்னு சொன்னா, கதை படிக்கிற சுவாரஸ்யமே போய்டும். வெயிட் மை டார்லி
 
Top