Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலால் காதலாய் 3

Advertisement

"எதுக்கு ண்ணா கூப்பிட்ட?" என வந்து நின்றான் சூர்யா.

"சொல்றேன் டா வெயிட் பண்ணு!" என்று தலையை கோதி கண்ணாடியைப் பார்த்துக் கொண்டிருந்தான் ஜெய்.

"அழகாத் தான் இருக்க.. போதும் போதும்!" சூர்யா கிண்டல் செய்ய,

"பொறாமை டா உனக்கு.." என்றவன்,

"கொஞ்சம் வா அவுட்டிங் போய்ட்டு வரலாம்" என்று தோள்களில் கைப்போட,

"எதே?" என்று தட்டி விட்டான் அவன் கைகளை சூர்யா.

"வா டா!" என்று அறையில் இருந்து வெளியே வரவும் எதிரில் வந்தார் மல்லிகா.

"ம்மா! போய்ட்டு வர்றேன்.. மிஸ்டர் பால நாதன்க்கு இன்ஃபார்ம் பண்ணிடு.. இவனும் என்னோட தான் வர்றான்.. அதை சொல்றதும் சொல்லாததும் உன் இஷ்டம்" என்று கூற,

"எங்கே போறீங்க?" என்றார் மல்லிகா.

"இதென்ன கேள்வி க்கா! அதான் நேத்து மாமா அந்த குதி குதிச்சாரே! அஞ்சலியைப் பார்க்கவா தான் இருக்கும்.. ஆனா சூர்யா எதுக்கு டா? மாமா திட்ட போறாரு!" என்றார் பிரேமா.

"சித்தி! சொன்ன சொல் மாற மாட்டான் இந்த கோட்டை சாமி! நேத்து என்ன சொன்னேன்.. போறேன்னு சொன்னேன்.. சோ கிளம்பிட்டேன்.. இவன் வரணுமா வேண்டாமான்றது எல்லாம் நேத்தைய மீட்டிங்ல இல்ல.." என்று ஜெய் கூற,

"தலை கீழாக தான் குதிப்பேன்ற! இல்லடா அண்ணா?" என்றான் சூர்யா.

"எக்ஸாக்ட்லி மேன்! இல்லைனா இந்த வீட்டுல வாழ முடியுமா?" என்று நகர,

"இரு ஜெய்!" என்றார் மல்லிகா.

"இன்னும் என்னவாம்? நீங்களும் வர்றிங்களா?" என்று கேட்க,

"நீ போக வேண்டாம்!" என்றார்.

"அக்கா! என்ன சொல்றிங்க?" பிரேமா கேட்க,

"அந்தாளு கூட சேராதீங்கன்னா கேட்குறீங்களா?" என அதற்கும் கிண்டல் செய்தான் ஜெய்.

"நிஜமா தான் டா சொல்றேன்.. நீ போக வேண்டாம்" என உறுதியாய் கூறினார் மல்லிகா.

"என்னவாம் மல்லிக்கு? திடீர் ஞானோதயம்?" என்று ஜெய் கேட்க,

"எனக்கு என் புள்ள வாழ்க்கை தான் முக்கியம்.. நான் அவர்கிட்ட சொல்லிக்குறேன்..நீ போக வேண்டாம்!" என்றார் மீண்டுமாய்.

"அட போ ம்மா! நீ சொன்னதும் அந்தாளு கேட்டுட போறாரு! நேத்து இதை சொல்லி இருந்தா கலவரம் வெடிச்சு நிலவரம் மாற சான்ஸ் இருந்திருக்கும்.. இன்னைக்கு போய் சொன்னா மனுசன் நெஞ்சப் புடிச்சிட்டு உனக்கே ஆட்டம் காட்டிடுவாரு.. விடு விடு பார்த்துக்கலாம்" என்று ஜெய் கூற,

"இல்ல ஜெய்! அம்மா சொல்றேன்ல.. பார்த்துக்கலாம்.. போக வேண்டாம்!" என்றார் தெளிவாகவே.

"என்னம்மா அப்பாவை எதிர்க்க ரெடி ஆகிட்டீங்க போல?"

"இல்ல! என் பையனுக்கு வேண்டாம்ன்றதை திணிக்க எனக்கு பிடிக்கல.. அதனால தான் சொல்றேன்".

"ரெண்டும் ஒன்னு தான் ம்மா.. நீங்க ஒன்னு சப்போர்ட் பண்ணினா இன்னொன்னு உங்களை துரத்தும்" என்றான்.

"ண்ணா! அதான் மல்லிகா ம்மா சொல்றாங்க இல்ல" என சூர்யாவும் கூற,

"என்ன சொல்றாங்க இல்ல? கொல்றாங்க இல்ல? நிச்சயதார்த்தம் முடிச்சி வச்சுட்டு சொல்வாங்களாமா?" என்றான்.

"ஜெய்!" என்று மல்லிகா அழைக்க,

"அட விடுங்க ம்மா.. நடக்குறது நடந்து போச்சு.. போய்ட்டு வந்து நான் கிளினிக் வேற ஓபன் பண்ணனும்.. நான் வர்றேன்" என்றவன் சூர்யாவை இழுத்து சென்றான்.

"என்ன டா வீட்டோட கேட்'டே சந்திரமுகி படத்துல வர்ற கேட் மாதிரி இருக்கு?" ஜெய் சூர்யாவிடம் கேட்க,

"உங்களுக்கு எப்பவுமே விளையாட்டு தான் ண்ணா.. என்னை வேற இழுத்துட்டு வந்துட்டீங்க.. பெரியப்பாக்கு தெரிஞ்சா அவ்வளவு தான்" என்றான் சூர்யா.

"அந்தாளுக்கு ஏன் டா இவ்வளவு பயம்.. நான் தான் கூட்டிட்டு போனேன்னு சொல்லிடு.. ஈஸி!" என்றபடி கேட்டை கடந்து உள்ளே வந்திருக்க, வாசலில் பார்த்துவிட்டார் காஞ்சனா.

"வாங்க வாங்க தம்பி! உள்ள வாங்க" என்று வரவேற்றவர்,

"அஞ்சலி யார் வந்திருக்காங்க பாரு!" என்று அஞ்சலி அறையைப் பார்த்து குரல் கொடுத்தார்.

"ஹாய் ஆண்ட்டி! எப்படி இருக்கீங்க? அங்கிள் எப்படி இருக்காங்க?" என்று சூர்யா கேட்க, வீட்டை சுற்றிப் பார்த்தான் ஒரே இடத்தில் நின்று ஜெய்.

"நல்லா இருக்கோம் பா.. இப்ப தான் வெளில கிளம்பினாங்க அஞ்சலி அப்பா.. வீட்டுல எல்லாரும் எப்படி இருக்காங்க?" என்ற காஞ்சனா குடிக்க எதாவது எடுத்து வருவதாக சொல்ல,

"உன் பெரியப்பா நல்லா புளியங்கொம்பா தான் டா புடிச்சிருக்காரு.. வீட்டைப் பார்த்ததுமே சம்திங் ஒரு டவுட் வருதே!" என்றான் ஜெய்.

"ண்ணா சும்மா இருங்க ண்ணா!" என்று சூர்யா ஜெய் காதை கடிக்க,

"நீங்க தானா?" என்ற அலட்சியக் குரலோடு வந்தாள் அஞ்சலி.

"உன் பெரியப்பாவோட பீமேல் வெர்சன் மாதிரியே இருக்குல்ல? அதான் என்னை காவு கொடுத்துருக்காரு" ஜெய் இருந்த கடுப்பில் ஒவ்வொன்றாய் சொல்லிக் கொண்டே இருக்க, எதுவுமே சரியாய் இல்லாமல் யாரைக் குறை கூறுவது என்றும் தெரியாமல் விழித்தான் சூர்யா.

"கார்டு செலக்ட் பண்ண போலாம்னு அண்ணா தான் கூட்டிட்டு வந்தாங்க" சூர்யாவே கூற,

"ஏன்! என் கூட தனியா வர உன் அண்ணாக்கு அவ்வளவு பயமா?" அஞ்சலி கேட்க,

"நிச்சயதார்த்தம் அண்ணா இல்லாமல் தானே நடந்தது.. வீடு தெரியல.. அதான் நானும் கூட வந்தேன்" கோபமாய் எங்கோ பார்த்து நக்கல் குரலில் சூர்யா கூற,

"பார்றா! அண்ணனை சொன்னா சிட்டிக்கு கோபம் எல்லாம் வருது" என தம்பியையும் ஜெய் கலாய்க்க, சூர்யாவை முறைத்தாள் அஞ்சலி.

"இந்தாங்க தம்பி!" என காஞ்சனா கொண்டு வந்து கொடுத்ததை சூர்யா வாங்கிக் கொள்ள, ஜெய் "இருக்கட்டும்!" என்றுவிட்டான்.

ஜெய்யின் நடவடிக்கைகளை கவனித்த காஞ்சனாவிற்கு வருத்தமாய் இருந்தது.

மகளும் ஏனோதானோ என்று இருக்க, இப்படி ஜெய்யும் பட்டுக் கொள்ளா தன்மையுடன் இருந்தால் மகள் வாழ்வு? எனும் கேள்வி அவரைத் தாக்கியது.

"நீ போய் காரை ஸ்டார்ட் பண்ணு! நான் வர்றேன்!" என சூர்யாவிடம் அஞ்சலி கூற, சுர்ரென ஏறியது ஜெய்யிற்கு.

சூர்யாவுமே இன்று தான் அஞ்சலியின் குணத்தை கண்களால் காண்கிறான். அதிர்ச்சியுடன் அண்ணனை நினைத்து கவலையும் பிறந்தது சூர்யாவிற்கு.

"வா சூர்யா! மேடம்க்கு கார் ஸ்டார்ட் பண்ணி வைக்கலாம்" ஜெய் அழைக்க,

"நான் அவனை தானே சொன்னேன்?" என்று அஞ்சலி கேட்க,

"போதும் அஞ்சலி! விட்டா ரொம்ப பேசுற! அவரு ஜெய்யோட தம்பி! உன் இஷ்டத்துக்கு பேசிட்டு இருக்குற?" காஞ்சனா அதட்ட,

"எப்பவோ செய்ய வேண்டியதை இப்ப செய்யுறிங்க.. டைம் வேஸ்ட்" என்ற ஜெய் அசால்ட்டாய் தோள் குலுக்கி தம்பியுடன் காருக்கு சென்றான்.

"அஞ்சலி ரொம்ப தப்பு பண்ற! உன் வாழ்க்கையை நீயே கெடுத்துக்க பாக்குற!" காஞ்சனா கூற,

"ம்மா! உங்க வேலையை மட்டும் பாருங்க.. அவனுக்கு எவ்வளவு திமிரு பார்த்திங்களா? கொஞ்சமாச்சும் என்னை மதிச்சானா? திரும்பியாச்சும் பார்த்தானா?" அஞ்சலி கேட்க,

"அதை நீ செஞ்சியா முதல்ல?" என்றார் அன்னை.

"எனக்கு இப்ப கார்டு செலக்ட் பண்ற மூடே இல்ல.. அவனை போக சொல்லுங்க" அஞ்சலி சொல்ல,

"திமிர் உனக்கு தான் டி.. அப்பாவும் மகளும் என்ன நினைச்சுட்டு இருக்கீங்க? இப்ப நீ போகலை இந்த கல்யாணத்தை நிறுத்த சொல்லி நானே ஜெய் வீட்டுக்கு போன் பண்ணிடுவேன்" என்றார் காஞ்சனா.

அன்னையை முறைத்து சத்தமே இல்லாமல் எழுந்து சென்றாள் அஞ்சலி.

"சூர்யா காரை இயக்க, அருகில் அமர்ந்திருந்தான் ஜெய். பின்னால் அமர்ந்திருந்த அஞ்சலி புறம் திரும்பிய ஜெய் "எங்கே போகணும் மேம்?" என்று கேட்டு வைக்க, அஞ்சலிக்கு எரிச்சலான எரிச்சல்.

"நாம கல்யாணம் பண்ணிக்க போறோம்? டூ யூ ரிமைண் இட்?" அஞ்சலி கேட்க,

"ஓஹ்! உங்களுக்கு அது நியாபகம் வந்துடுச்சா?" என்றான் ஜெய்யும்.

"ஓகே! லீவ் இட்! இது நம்ம மேரேஜ்.. நாம தான் பார்த்து பார்த்து ஒவ்வொண்னும் செய்யணும்" அஞ்சலி இறங்கி வர,

"ஓஹ் சூர்! செய்யலாமே!" என்றான் ஜெய்யும்.

"ஹ்ம்! குட்!" என்றவள் அவளே கடையை தேர்வு செய்து கார்டையும் தேர்வு செய்ய,

"எங்கே செல்லும் இந்த பாதை!" என்று பாடிய படி சூர்யா அருகே நின்றிருந்தான் ஜெய்.

"ண்ணா! போய் செலக்ட் பண்ணு ண்ணா!" சூர்யா கூற,

"ம்ம்க்கும்! அப்படியே மேடம் நான் சொல்றதை எடுத்துடுவாங்க" என்றவன்,

"சாம்பிள் காட்றேன் பாரு" என்று அவளருகே சென்றான்.

"இந்த கார்டு பாரேன்.. நல்லாருக்கு இல்ல?" என்று ஒன்றை தேர்வு செய்து அவளிடம் நீட்ட,

"கலரே சரி இல்ல.. இந்த மூணு கார்டு இருக்கட்டும்" என்றாள் அவனிடம். தலையில் அடித்துக் கொண்டான் சூர்யா.

"வேற எங்கேயும் போகணுமா?" சூர்யா கேட்க,

"அசல் டிரைவராவெ மாறிட்ட டா நீ!" என்றான் ஜெய்.

"ப்ச் ஒன்னும் வேணாம்! உன் அண்ணனுக்கு தான் எதுலயும் இன்ட்ரெஸ்ட் இருக்குற மாதிரி தெரியலையே!" அஞ்சலி கூற,

"இன்னைக்கு தான் தெரிஞ்சதா உங்களுக்கு?" என்றான் சூர்யாவும்.

"வந்ததுல இருந்து பார்த்துட்டு தான் இருக்கேன்.. ரெண்டு பேரும் ரொம்ப ரொம்ப பண்றிங்க.. என்ன நினைச்சுட்டு இருக்கீங்க? ஜெய் தான் கூப்பிட்டான்னா உனக்கு எங்க போச்சு? எங்களுக்கு நடுவுல நீ யாரு?" என்று அஞ்சலி கேட்க,

"அவனை கேட்க ஃபர்ஸ்ட் நீ யாரு?" என்றான் ஜெய் பொறுமையாய்.

"ஜெய்! ஐம் யுவர் பியான்ஸே!" பற்களை கடித்து அஞ்சலி கூற,

"ஜஸ்ட் அ பியான்ஸே! நாட் அ வைஃப்! ஈவேன் மை வைஃப் ஹாஸ் நோ ரைட்ஸ் டு டூ தட்..காட் இட்" என்றான் பொறுமையாய் என்றாலும் அழுத்தமாய்.

"ஓஹ் காட்!" என்ற அஞ்சலி காரில் ஏறி அமர்ந்துவிட்டாள்.

வீட்டில் இறக்கிவிட்ட பின் திரும்பியும் பாராமல் காரை திருப்பிவிட்டான் ஜெய்.

"ண்ணா! சீரியஸ்லி என்ன சொல்றதுன்னே எனக்கு தெரியல.. இது எதுவும் சரியா வருமான்னும் தெரியல" சூர்யா கூற,

"என்கிட்ட சொல்லாத! முடிஞ்சா உன் பெரியப்பாகிட்ட சொல்லு" என்றான் ஜெய்.

"வேண்டாம் ண்ணா! உனக்கு என்ன தோணுதோ அதை செய்.. நிச்சயமா நான் உனக்கு சப்போர்ட்டா இருப்பேன்" சூர்யா கூற, ஜெய் புறம் அமைதி.

படித்து பட்டம் வாங்கியவன், தந்தை கூறிய ஒற்றை சொல்லிற்காக அவரிடம் இருந்து படிப்பிற்கான பணம் வாங்காமல் வங்கியில் கடன் பெற்று அவனே அதை அடைக்கவும் செய்தவன்.

மனம் முழுதும் சிந்தனையில் இருக்க, அடுத்து என்ற கேள்விக்கான விடையை காலத்தின் கைகளில் விட்டிருந்தான்.

தொடரும்..
Unmaya ithu Pola life iruntha first ah venamnu sollidanum illa adutha stage kandippa divorce than ithu life waste of time
 
அம்மாக்கு இப்போ தான் தைரியம் வந்துருக்கு.. ஜெய் சூப்பர்.. அசால்ட்டா அவளை வெறுப்பேத்துறான்..
 
எல்லாம் சரியாக பண்ணிட்டு லெப்பை கோட்டை விட்டுடாதீங்க? ஜெய்.
இனி வர போற லைப் தான் முக்கியம். எதனலும் யோசிக்க பண்ணு. இதனால் பாதிக்கப்பட்ட போறது நீ மட்டுமில்லாம உன் தங்கச்சி அம்மா உன் தம்பி எல்லாரும்
 
அடங்காத அஞ்சலியை
அண்ணன் தம்பி இருவரும்
அவளை வச்சு செய்றாங்க
அருமையோ அருமை????
 
Top