Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலதிகாரம் இரண்டு - 23 (2) Final

Advertisement

காதல் தம்பதியின்
காலம் மாற்றமும்
கனவு தடுமாற்றமும்
காதலும் நம்பிக்கையும்
கைகொடுக்கும்
குடும்பத்தின் தைரியமும்
காலம் கடந்தாலும்
கனவை நனவாக்கலாம்
கணவன் துணை கொண்டு...
👏🏻👏🏻💕💕👍🏻👍🏻💐🤩🤩🤩❤️❤️😀😀😘😘
தந்தையின் ஆசையை
தாயின் உணர்வுகளை
அண்ணனின் ஆதரவும்
அண்ணியின் தோழமையும்
மாமனார் மாமியாரின்
உடல்நிலையும்
உறவுகளை சரிசமமாக நடத்தும் பண்பும்
கணவனுக்கு துணையாக
பிள்ளைகளின் வளர்ப்பு
அனைத்துமாக
வானதி......அருமை....
பெண்ணின் பரிணாமம்
பெருமையே.....
பாடமாக சொல்லித்தரும்
கதை..... அற்புதம்.....
நன்றிகளும் வாழ்த்துக்களும் 👏🏻👏🏻👏🏻💐💐💐🤩🤩🤩🤩
அருமையா வார்த்தைகள கோர்த்துருக்கீங்க sis. 🥳💐
 
அருமையான கதை
வானதி புருசன் மீது அளப்பறிய
காதல்
ஆனா அதையும் தாண்டி
குடும்ப சவால்களினால்
உண்டாகும் பிரச்சனைகள்
அதை எப்படி சமாளிக்கிறானு
சொல்லியிருந்தது
ஒவ்வொரு பெண்ணுக்கும்
தேவையான அறிவுரைனு தோனுது

அம்மா பாக்கியம் இவர்
மாதிரி அம்மா மாமியார்
எல்லாம் கிடைச்சா
குடும்பத்துல பிரச்சினையே இல்லை
அண்ணன் மாதவன் துணை
வானதி யின் இன்னொரு பலம்
அண்ணி அர்ச்சனாவின் குணம்
ரொம்ப பொறாமை பிடிச்சவளோனு
நினைக்க வச்சு அப்படியில்லை
நல்ல தோழி போல தான்
காமிக்கிறா
ரெண்டு பேரும் பேசும்
விசயங்கள் வானதியின்
பதில்கள்
அருமை

மாமியார் தாமரைமருமகளை
பிடிக்காம பழகி நமக்கு.
எரிச்சல் குடுத்து
தீடிருனு நம்ப முடியாத மாற்றம்
தருவாங்க பாருங்க
வானதி அதிர்ச்சி ஆனாலோ
என்னமோ எனக்கு நம்பவே முடியல

மாமனார் தெளிவா
சொத்து பிரிச்சது நல்லா இருக்கு
மதியழகி கொஞ்சம் நாத்தனார்
குணம் இருந்தாலும்
பரவாயில்லை நல்லவனு சொல்லலாம்

குழந்தைகள் நேத்ரன் எத்தனை
பக்குவம் புரிதல் பிள்ளை
மனச அள்ளிட்டான்
ஹரிணி நட்ச்சத்திராவும் அழகு

வானதி அப்பா பெருமைபட்டு இருப்பார் எங்க இருந்தாலும்
மகள் சாதனையை பார்த்து

இளங்கோ ஒரு மூத்த மகனா
சகோதரனா‍ மச்சினனா
தகப்பனா மருமகனா
எல்லா இடங்களிலும் பொறுப்பா
பொறுமையா போனது அருமை

மனைவி விசயத்தில் அவள்
மனச புரிஞ்சு காதலையும்
கண்டிப்பையும்
அவள் கனவுக்கு உறுதுணையாக
இருந்து சாதிக்க வச்ச
காதல் துணைவன்

வானதி இளங்கோ சிஏ
ரொம்ப அருமை 😍 💐👍
 
அருமையான கதை 💖 💖 💖 💖 💖.
ஒரு பொண்ணோட கண்ணால வாழ்க்கைல ஏற்படற மனம் உடல் நிலை பாதிப்பு அதனால வர்ற ஏற்றதாழ்வுகளை அருமையா சொன்னீங்க ஜீ.
இந்த காலகட்டத்தை கடந்து வருவதற்கு எத்தனை குடும்பத்துல பொண்ணுங்களுக்கு ஆதரவுக்கரம் குடுக்கறாங்க உறவுகள்.
அன்றாட வாழ்வில் நடைபெறும் பிரச்சினை களை எதார்த்தத்தோட அருமையா தந்தீர்கள் ரைட்டர் ஜீ.
 
தம்பதிகளுக்கிடையே நடுத்தர வயதில் வரும் செகண்ட் இன்னிங்ஸ காதல் ஆழமானது...பொறுப்புகளும் கடமைகளும் சூழ்ந்து ஓடிக் கொண்டே இருக்கும் சூழலில் பெண்கள் தங்களோட கனவுகள் என்னனு கிட்டத்தட்ட மறந்தே போய்டுது...வானதி தன்னோட கனவான, அப்பா அம்மா கணவன் எல்லோரோட ஆசையுமான சிஏவை கஷ்டப்பட்டு முடிக்கும் போது நாமளே ஜெயிச்ச ஃபீல்...அதுக்கு உறுதுணையாக அத்தனை பேரும் இருந்ததாலே சாத்தியமாகிற்று....ரிசல்ட் வரமுன்னயே முயற்சி எடுத்து எழுதியற்கு பார்ட்டி வைத்து கொண்டாடியது மனதைத் தொட்டது...நாம் கனவுகளுக்காக எவ்வளவு பறந்து திரிந்தாலும் இளைப்பாறும் இடம் குடும்பம் தான்...இப்படிப்பட்ட குடும்பம் அமைந்தால் நம் கனவுகள் எளிதாக நிறைவேறும்...

அருமையான கதை தேவி மா...வாழ்த்துகள்❤
 
Rimbave azhagana kadhai karu sis. Uravugalin arthathayum azhaga sollirukeenga. Sandai,adithadi,thittu ellam irukum aana idhu en kudumbam - I liked it sis. Thamaraiya villi kanbika aarambichu positive aaganum kaatiteenga. Uravu,veedu,work ellathayum balance panradhu avlo easy illa. Adhai konjam sulabamaakiyiruku ivanga kaadhal adhigaram 2.
 
Top