Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கனவுப் பூக்கள்….அத்தியாயம் 3.

Advertisement

Srija Venkatesh

Well-known member
Member
ஆனந்த் சொன்ன பள்ளியில் அகிலாவுக்கு வேலை கிடைத்து விட்டது. நல்ல சம்பளம். அதோடு வீட்டுக்குப் பக்கம் என்பதால் நடந்தே போய் விடலாம். அம்மா ராதாவுக்கு அப்போது தான் ஆறுதலாக இருந்தது. அகிலா பள்ளி விட்டு வரும் நேரமும் ஆனந்த் அலுவலகம் விட்டு வரும் நேரமும் வேறு வேறு. அதனால் அவனைப் பார்ப்பதே அரிதானது. அன்று ஞாயிற்றுக்கிழமை எண்ணெய் தேய்த்துக் குளித்து விட்டு ஓய்வாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர் அம்மாவும் மகளும்.

"அம்மா! இன்னிக்கு எங்க பள்ளி முதல்வர் என்னைக் கூப்பிட்டு அனுப்பினாரு. எனக்கு ஒரே பயமாப் போச்சு! நடுங்கிக்கிட்டே போனேன்"

"என்ன சொன்னாரு?"

"நீங்க பாடம் நடத்தற விதம் நல்லா இருக்கு. ஆனா உங்களை +1 +2 எடுக்கச் சொல்ல முடியாத நிலையில நான் இருக்கேன் அப்டீன்னாரு?"

"+1 +2 எடுத்தா சம்பளம் இன்னும் கூடும். பெர்மனெண்ட் பண்ணுவாங்க இல்ல? ஏன் உன்னை எடுக்கச் சொல்ல மாட்டேங்கறாரு?"

"அதையும் அவரே சொன்னாரும்மா. நான் வெறும் எம் எஸ் சி தான் படிச்சுருக்கேன். பெரிய கிளாசுக்கு எடுக்கணும்னா அரசாங்க ஆணைப்படி கண்டிப்பா பி எட் படிச்சிருக்கணுமாம். சொன்னாரு"

"ஓ! ஆமாம் ஆமாம்! நான் மறந்தே போயிட்டேன். ஏன் இப்பக் கூட நீ பி எட் படிக்கலாமே?" என்றாள் அம்மா.

அப்போது "என்ன? நான் உள்ளே வரலாமா? ரொம்ப முக்கியமான விஷயமாப் பேசிக்கிட்டு இருக்கீங்களா?" என்று கேட்டவாறு உள்ளே நுழைந்தான் ஆனந்த். அவனைப் பார்த்ததும் முகம் பூவாக மலர்ந்தது அகிலாவுக்கு.

"வாங்க சார்! உள்ள வாங்க! இப்பத்தான் உங்களைப் பத்தி நெனச்சேன். நீங்களே வந்துட்டீங்க! ஆயுசு நூறு!" என்றாள்.

அகிலா தன்னை நினைத்தாள் என்றதும் கூடைப் பூக்களை அவன் மேல் கொட்டியது போல சிலிர்த்துப் போனான்.

"என்ன நெனச்சீங்க? சொல்லுங்க!"

அம்மா முந்திக் கொண்டாள்.

"அகிலா வேலை பாக்கற பள்ளியில இவ பெரிய கிளாஸ் எடுக்கணும்னா பி எட் கண்டிப்பா படிக்கணும்னு சொல்லிட்டாங்களாம். அதைப் பத்தித்தான் பேசிக்கிட்டிருந்தோம் நீங்களே வந்துட்டீங்க!"

"பி எட் படிக்கணுமா? யார் சொன்னாங்க?"

"பள்ளி முதல்வர் தான். அது தான் அரசாங்க ஆணைன்னு சொன்னாரு!"

"நீங்க என்ன யோசிச்சுருக்கீங்க?"

"ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்துல கரஸ்பாண்டன்ஸ்ல படிக்கலாம்னு இருக்கேன். அதுக்கு நீங்க தான் உதவி பண்ணணும்"

"கண்டிப்பாக! இது கூடச் செய்யலைன்னா எப்படி? எனக்குத் தெரிஞ்ச பேராசிரியர் இருக்காரு அவர்ட்ட கேட்டு சொல்றேன். அவரு சரியா வழி காட்டுவாரு" என்றான்.

"அப்ப இப்பவே பேசுங்க!" என்று அவசரப்படுத்தினாள் அகிலா. அவனும் சரி என்று ஃபோன் போட்டான் உள்ளே சிக்னல் சரியில்லை என்று வெளியில் போய் பேசி விட்டு வந்தான். அவனை ஆவலுடன் நோக்கின நான்கு விழிகள்.

"என்ன சொன்னாரு தம்பி?"

"ஆண்ட்டி! இப்ப பி எட் பல இடங்கள்ல இருக்காம். ஆனா நமக்கு கரஸ்பாண்டன்ஸ் தான் வேணும்கிறதால இந்திராகாந்தி திறந்த நிலைப் பல்கலைக் கழகம் நல்லா இருக்கும். அங்க போயி விசாரி அப்டீனாரு"

"அது எங்க இருக்கு?"

"இங்கருந்து கொஞ்சம் தூரம் தான். ஆனா பஸ் இருக்கு. நீங்க பஸ் பிடிச்சு போயி கேட்டுட்டு வந்துடலாம். இன்னைக்குப் போகாதீங்க லீவு. நாளைக்குப் போங்க" என்றான்.

"தம்பி இவ ஊருக்குப் புதுசு! நீங்களும் கூடப் போயி எல்லாம் விசாரிச்சுக்கிட்டு வந்துடுங்களேன். உங்களுக்கு தான் சிரமம் குடுக்க வேண்டியிருக்கு"

இதை எதிர்பார்த்துத் தானே அவன் காத்திருந்தான்.

"இதுல சிரமம் ஒண்ணுமே இல்ல ஆண்ட்டி! நாளைக்கு உங்களுக்கு பள்ளி எப்ப விடும்?"

"மாலை நாலு மணிக்கு"

"அப்ப நான் சரியா நாலு மணிக்கு பெர்மிஷன் போட்டுட்டு வந்துடறேன். சேர்ந்தே போயி விசாரிச்சுக்கலாம். சரியா?" என்றான். அவளும் சம்மதித்தாள்.

மேலும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டுக் கிளம்பினான்.

திங்கட் கிழமை சரியாக நாலு மணிக்கு வந்து விட்டாள் அகிலா. தயாராக இருந்த அவனுடன் பைக்கில் அமர்ந்து பயணித்தாள். அவனுடன் சேர்ந்து அமர்வது அவளுக்கு சொல்லத்தெரியாத உணர்வுகளைக் கொடுத்தது. தன் மனம் மெல்ல அவன் பால் சாய்வதை புரிந்து கொண்டாள் அவள்.

முக்கால் மணி நேரப் பயணத்தில் பல்கலைக் கழகத்திற்கு வந்து விவரங்கள் சேகரித்தார்கள். விண்ணப்பம் ஒன்றையும் வாங்கிக் கொண்டு வெளியில் வந்தார்கள்.

"அகிலா! நான் நெனச்சதை விட வேலை சீக்கிரம் முடிஞ்சிடிச்சு! அதோ தெரியுதே அந்த ஹோட்டல்ல போயி ஏதாவது சாப்பிட்டுட்டுப் போகலாமா?" என்றான்.

ஆனால் அவன் மனம் போட்ட திட்டமே வேறு. இன்றைக்கு விட்டால் அப்புறம் அவளைப் படிக்கவே முடியாது என்று அறிந்திருந்தான் அவன். அதனால் அகிலாவை அழைத்துக் கொண்டு போய் தன் மனதை வெளிப்படுத்தி விட வேண்டும் என்பது அவன் நினைப்பு.

"இல்லை! எனக்குப் பசிக்கல்ல! நீங்க போயி சாப்பிட்டுட்டு வாங்க! இந்த பென்சுல நான் உக்காந்திருக்கேன்" என்று சொன்ன அகிலாவின் காதைப் பிடித்துத் திருகலாமா என்று ஆத்திரப்பட்டான்.

"கொஞ்சமாவது புரியுதா பாரு! மனுஷன் இங்க நரக வேதனைப் படறான்! அது ஒண்ணுமே தெரியாத மாதிரி முழிக்கறா பாரு" என்று நினைத்துக் கொண்டான்.

"எனக்குப் பசிக்குது ! வாங்க! உங்களை விட்டுட்டு நான் போக மாட்டேன். நான் பசியோட இருக்கறது உங்களுக்கு சம்மதம்னா நீங்க வர வேண்டாம்" என்றான் சாமர்த்தியமாக.

"ஐயையோ! அப்ப வாங்க!" என்றவள் எழுந்து நடந்தாள்.

அது ஒரு பெரிய ஹோட்டல். கூட்டம் மிகக் குறைவாக இருந்தது. நல்ல இடமாகப் பார்த்து அவள் எதிரில் அமர்ந்தான். மனம் "அப்படி அவளிடம் விஷயத்தைச் சொல்லுவது என யோசித்தது.

"என்ன ஆனந்த் சார்! உக்காந்துக்கிட்டே கனவா? ஏன் இப்படி வேர்த்து வழியறீங்க?" என்றாள்.

"அகிலா! நீங்க என்னை ஏன் சார் சார்னு கூப்பிட்டு அன்னியமாக்கறீங்க? ஆனந்துன்னே கூப்பிடுங்க!" என்று ஒரு கல்லை விட்டெறிந்து பார்த்தான். அவள் ஒன்றும் பேசாமல் தலை குனிந்தாள்.

சர்வர் வந்து ஆர்டர் கேட்க "எனக்கு பப்பாளி ஜூஸ்! உங்களுக்கு என்ன வேணும் ?" என வினவ அவள் அதிகம் அலட்டிக் கொள்ளாமல் "எனக்கும் பப்பாளி ஜூஸ் தான்" என்று சொல்லி விட்டாள்.

சர்வர் போய் விட்டான்.

"அகிலா! வந்து ..நீங்க..வந்து.."

"நான் உங்களை சார் கூப்பிடக் கூடாதுன்னா நீங்க என்னை வாங்க போங்கன்னு பேசறதை நிறுத்தணும். சரியா?" என்றாள். அவளை உற்றுப் பார்த்தான்.

"அகிலா! நான் சின்ன வயசுலருந்து தனியா வளந்தவன். ஒரு பொண்ணு கிட்ட எப்படிப் பேசணும்? பேசக் கூடாது இது எதுவுமே எனக்குத் தெரியாது! அதனால் நான் பேசறது தப்புன்னா என்னை மன்னிச்சிடுங்க! கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணி என்னைக் கேவலப் படுத்திடாதீங்க என்ன?"

"என்ன பீடிகை எல்லாம் பலமா இருக்கு? என்ன கேக்கணுமோ கேளுங்க!"

"பளிச்சின்னு சொல்லிடறேனே! உன்னைப் பார்த்த நாள் முதலா நீ என் மனசுக்குள்ள வந்துட்ட! இது வெறும் புற அழகைப் பாத்து மட்டும் வந்த காதல் இல்ல! உன்னோட பொறுப்புணர்ச்சி , உங்கம்மா மேல நீ காட்டற அக்கறை , போராடியாவது வாழ்க்கையில ஜெயிக்கத் துடிக்கற உன்னோட தன்னம்பிக்கை இதைப் பாத்து தான் காதல் வந்தது. என்னால இனி உன்னைத் தவிர வேற பொண்ணை நினைச்சுக்கூடப் பாக்க முடியாது! என் மனசுல நீ இருக்க! உன் மனசுல நான் இருக்கேனா?" என்றான் நீளமாக.

பேசாமல் உட்கார்ந்திருந்தாள் அகிலா. அவள் மனதில் சிந்தனைகள் பல வண்ணச் சிதறல்களாக ஓடின. அவளுக்கும் ஆனந்தைப் பிடித்திருந்தது. ஆனால் அவன் சொல்வது போல பார்த்த முதல் பார்வையிலேயே வந்த காதல் அல்ல! அவனது குணம் , மனப்போக்கு எல்லாம் தெரிந்து ஏற்பட்ட முதிர்ந்த காதல்.

"என்ன பேசாம தலையைக் குனிஞ்சிக்கிட்ட? என் மேல கோபமா? அப்படி நான் என்ன தப்பாக் கேட்டுட்டேன்?"

இனியும் பேசாமல் இருந்தால் நன்றாக இருக்காது என்றெண்ணி அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.

"ஆனந்த்! உங்களை மாதிரி எனக்குக் கண்டதும் காதல் வர்ல! நான் ஏன் இதைச் சொல்றேன்னா நீங்க என்னைத் தப்பாப் புரிஞ்சிக்கக் கூடாதுங்கறதுக்காகத்தான். நீங்க நல்லாப் படிச்சிருக்கீங்க! நல்ல வேலையில இருக்கீங்க! எல்லாத்துக்கும் மேல மத்தவங்களுக்கு உதவி செய்யற நல்ல மனசு இருக்கு. உங்களைப் பிடிக்காதுன்னு எந்தப் பொண்ணும் சொல்ல மாட்டா"

"பிளீஸ்! சுத்தி வளைக்காத! உனக்கு என்னைப் பிடிச்சிருக்கா இல்லியா?"

"பிடிச்சிருக்கு! உங்களைக் கணவனா அடைய நான் குடுத்து வெச்சிருக்கணும். ஆனா எங்கம்மா சம்மதிச்சா மட்டும் தான் நம்ம கல்யாணம் நடக்கும். சரியா?"

"இது போதும்! உனக்கு என்னைப் பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டேல்ல? இதைத்தான் நான் ஆசையோட எதிர் பாத்தேன். நீ நினைக்கறா மாதிரி ஊர் சுத்தவோ உன் கூட ஜாலியா இருக்கவோ நான் உன்னைக் காதலிக்கல்ல! நீ சரின்னு சொன்னா நான் நாளைக்கே உங்கம்மா கிட்ட உன்னைப் பொண்ணு கேட்டு வரேன். என்ன சொல்ற?"

சிரித்தாள் அகிலா.

"ரொம்பத்தான் அவசரம் உங்களுக்கு. என் பி எட் படிப்பு முடியட்டும் அப்புறமா எங்கம்மா கிட்ட சொல்லிக்கலாம்."

"ஏன் அப்படி? கல்யாணம் பண்ணிக்கிட்டு நீ படியேன்? இப்ப எனக்கு 27 வயசு. இப்பக் கல்யாணம் நடந்தாத்தான் நாம ஜாலியா கொஞ்ச நாள் சுத்திட்டு குழந்தை பெத்துக்க சரியா இருக்கும். இன்னும் லேட்டானா நான் ரிடயர் ஆகும் போது என் பிள்ளை +1 படிக்கும். " என்றான்.

கண்களில் நீர் வர சிரித்தாள் அகிலா.

"ஆனாலும் உங்களுக்கு வேகம் ரொம்ப ஜாஸ்தி தான். இன்னும் கல்யாணப் பேச்சே எடுக்கல்ல! அதுக்குள்ள பிள்ளை குட்டிங்களுக்குப் போயிட்டீங்க? "

"இல்லை அகிலா! எனக்கு இது பல ஆண்டுக் கனவு. எனக்குன்னு ஒரு குடும்பம் , என்னைக் காதலிக்கற மனைவி , அழகா கவிதையா குழந்தைன்னு வாழ்ந்து பார்க்க ஆசையா இருக்கு. உன்னைப் பார்த்ததும் அது வெறியாவே மாறிடிச்சி! இனியும் காலம் கடத்த வேண்டாம். நான் ஒரு நல்ல நாள் பாத்து சாந்தா மாமியையும் , பத்மா மாமியையும் கூட்டிக்கிட்டு உங்க வீட்டுக்கு வரேன்" என்றான்.

"சரி! எங்கம்மா இதுக்கு எதிர்ப்பு ஒண்ணும் சொல்ல மாட்டாங்கன்னு நினைக்கிறேன்! ஏன்னா உங்களை அவங்களுக்கு ரொம்பப் பிடிக்கும்" என்று கூறியபடியே வெளியில் வந்தார்கள்.

பைக்கில் இம்முறை உரிமையுடன் ஏறிக் கொண்டாள்.

அம்மா ராதா வாசலிலேயே நின்றிருந்தாள். இவர்கள் பைக்கிலிருந்து இறங்குவதையும் ஆனந்த் அகிலாவின் கையைப் பிடித்து குலுக்குவதையும் , பறக்கும் முத்தம் ஒன்று தருவதையும் பார்த்து விட்டாள்.

அவளுக்குள் பல எண்ணங்கள் குழப்பமாக ஓடின. தலை வெண்ணென்று தெறித்து நெற்றிப் பொட்டு துடித்தது. கண்களை ஆத்திரம் மறைக்க ஆவேசத்தோடு நின்றிருந்தாள். இருவரும் அவளை நெருங்கி வந்தனர்.

"அத்தை.." என்று ஏதோ சொல்ல ஆரம்பித்த ஆனந்தின் கன்னத்தை ராதாவின் விரல்கள் பதம் பார்த்தன.

"அனாதை நாயே! என் பொண்ணுகிட்ட உனக்கு என்ன ரகசியப் பேச்சு? அவ கையைப் பிடிக்கற?உனக்கு என்ன தைரியம்?" என்று கத்தினாள். கோபத்தில் மூச்சிறைத்தது.

நடந்தது கற்பனையா? அல்லது நிஜமா? என்ற அதிர்ச்சியில் கன்னத்தைப் பிடித்துக் கொண்டு அப்படியே நின்று விட்டான் ஆனந்த்,. அவனுக்கு தான் என்ன தவறு செய்தோம் என்றே புரியவில்லை.

அகிலா தான் பாய்ந்து வந்தாள்.

"அம்மா! உனக்கென்ன பைத்தியமா? எதுக்கு இப்ப அவரை அடிச்ச?" என்றாள்.

கோபம் கொஞ்சமும் குறையாமல் அவளையும் அறைந்தாள் அம்மா.

"அவரு என்னடி அவரு? அவன் யாரு உனக்கு? அவனை அடிச்சா உனக்கேன் பொத்துக்கிட்டு வருது?" என்று கூச்சல் போட்டாள்.

ராதா போட்ட கூச்சலில் இல்லத்திலிருந்து சிலர் வெளியில் வந்து எட்டிப் பார்க்க ஆரம்பித்தனர்.

"அம்மா நான் அவரைக் காதலிக்கறேன்! அவரைத்தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்" என்று அகிலா சொன்னதும் கை கால்கள் நடுங்க ஆரம்பித்தன ராதாவுக்கு. வார்த்தைகள் வராமல் திக்கினாள். ரத்தம் மூளைக்கு வேகமாகப் பாய்ந்ததில் மூக்கிலிருந்து ரத்தம் வெளி வரத் தொடங்கியது.

வியர்வை ஆறாகப் பெருக அப்படியே மயங்கி விழுந்தாள் ராதா.
 
Nirmala vandhachu ???
 
:love: :love: :love:
ராதாவிற்கு தன் வாழ்க்கை போல் மகளுக்கும் என ஏதோ பயம் அதனால் கோபமா
ஆனா இவங்க இருவருமே பாவம்
 
Top