Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கண்ணாமூச்சி ஏனடா..!

Advertisement

Banupriya "பா.ரியா"

Well-known member
Member
அத்தியாயம் -1

ஐராவதம் தன் தொப்பையை துக்க முடியாமல் தூக்கிக் கொண்டு படிகளில் ஏறினார். மூச்சு வாங்கி அவரது மூக்கு இம்சை செய்தது. உதவிக்கு வாயையும் அழைத்துக்கொண்டார். அவரது பிளட் பிரஸர் தான் அவரை இந்த பாடாய் படுத்தியது என்பதே உண்மை. அவர் ஏறியிருந்தது ஒரு மாடிதான். இன்னும் இரண்டு மாடி ஏற வேண்டும். ஆமாம். மூன்றாவது மாடிக்கு இன்னும் இரண்டு மாடிகள் தான் ஏற வேண்டும்.

'எல்லாம் இந்த பாழாய் போன லிப்ட் நின்று போனதால் வந்தது. அடுத்த மீட்டிங்கில் கிழி கிழினு செக்கரட்ரியை கிழிக்கனும். மாசத்தில் பாதிநாள் அது இஷ்டத்துக்கு நின்னு போயிடுது. அதை சரி பண்ண அரைநாள் ஆகிடுது... சும்மா மெயின்டனன்ஸ் பீஸ்னு காசை மட்டும் புடுங்கிடுறாங்க..' என்று முனகிக்கொண்டே அடுத்தடுத்த படிகளில் தன் பாதங்களை பதித்த ஐராவதத்துக்கு வயது அறுபதை நெருங்கிக் கொண்டு இருந்தது. உட்கார்ந்த இடத்திலிருந்தே பணத்தோடு புரளும் வங்கி வேலை.

கதவைத்திறந்த பாமா வியர்ந்து வழிந்து வந்து நிற்கும் கணவனை ஒரு தடவை பார்த்தார்.

"என்னங்க இப்படி தெப்பமாய் நனைஞ்சி போய் வந்திருக்கிங்க...?"

"ம்... வெளிய மழை பெய்யுது பாரு. அதான்.. இப்படி வாசலிலேயே வைச்சு தான் உன் விசாரணையெல்லாம் பண்ணுவியா.. இல்ல உள்ள விடுவியா..?" கரடியாய் கத்திய கணவனிடம் எதிர்ப்பைக் காட்டாமல் உள்ளேச் சென்றார் பாமா.

சோஃபாவில் அமர்ந்து போது மின்விசிறியை போடாமல் அமர்ந்ததுக்கு தன்னை ஒரு தரம் கடிந்துகொண்டார். அது தெரிந்தோ என்னவோ பாமாவே வந்து சுவிட்சை தட்டிவிட்டு பதில் பேசாமல் சமையலறைக்குள் புகுந்து அடுப்பை போட்டார். ஃப்ரிட்ஜை திறந்து பால் பாக்கெட்டை எடுத்து கத்திரிகோலை தேடினார். அது வழக்கமாக வைக்கும் இடத்தில் இல்லை. மகனை மனசுக்குள் திட்டிவிட்டு கத்தியில் அதன் ஓரத்தை கிழித்துவிட்டு ஊற்றினார்.

காபியை கலக்கும் போது கணவனை நினைத்து அழுவதா அல்லது சிரிப்பதா என்று யோசித்து முகத்தை சுழித்துக்கொண்டார்.

'ஆமா.. இவரு என்னைக்குத் தான் நல்லா பேசியிருக்காரு.. இன்னைக்கு பேச...'

காபி கப்பை மேஜையில் ஓசைப்படாமல் வைத்துவிட்டு நகர்ந்தார் பாமா. பிறகு அதற்கும் திட்டு விழும்.

' ஏய்.. ஒரு காபி கப்பை சத்தம் போடாம வைக்க தெரியாதா..' என்ற வசையை கேட்க நேரிடும்.

ஐராவதத்தின் பார்வை வீட்டை அலசியது. வீடே அமைதியாக இருந்தது. மகள் இன்னும் வந்திருக்கவில்லையென்பது நன்றாகத் தெரிந்தது. அவள் வீட்டில் இருந்தால் ஒரு பக்கம் டீவி ஓடும். இன்னொரு பக்கம் வானொலியில் பாட்டு சத்தம் கேட்கும். அடுத்த வீட்டு பூனை அவள் கட்டிலில் கிடக்கும். எதிர் வீட்டு குழந்தை தன் பொம்மையோடு இங்கு தவழும்.

"இன்னும் உன் பொண்ணு வரலயா..?" காபி அவர் நாக்கை லேசாக சுட்டது.

"இல்ல...." பதில் மொட்டையாக வந்தது.

"எங்க உன் பையன்...?" அடுத்த கேள்வி.

பாமா மௌனமாக இருந்தார். இதற்கு என்ன பதிலை செல்வது. சொன்னால் ஐராவதம் காபியையா குடிப்பார். பாமாவின் ரத்தத்தை அல்லவா குடிப்பார்.

"என்ன நான் கேட்டுக்கிட்டே இருக்கேன்.. நீ பதிலே சொல்லாம..." அவர் முடிக்கும் முன் அவரது செல்போன் அலற அதை எடுத்து காதுக்கு கொடுத்தவாறே நகர்ந்தார் ஐராவதம். பாமாவுக்கு அப்போது தான் போன உயிர் திரும்பி வந்தது. இவரிடம் அகப்பட்டுக்கொள்ள கூடாது என்று அடுத்த வீட்டு அலமு பாட்டி கேட்ட நீலகிரி தைலத்தை எடுத்துக்கொண்டு அந்த வீட்டுக்குள் போய் பதுங்கி கொண்டார்.

வருண் ஆடி அசைந்து ஏழுமணி வாக்கில் வந்தான். தன் அறையிலிருந்த ஐராவதம் கண்ணில் படாமல் தன்னுடைய அறைக்குள் நுழைந்து குளித்து கிழித்து படிக்க அமர்ந்தான்.

இரவு உணவின் போது தந்தையிடம் மாட்டிக்கொண்டான்.

" ஸ்கூல் முடிந்து வந்ததும் எங்கடா போன..?"

அவன் பூரியை வாயில் அடைத்துக்கொண்டு பேசமுடியாமல் தவித்தான். பேசும் எண்ணத்தில் அவனும் இருக்கவில்லை.

"தெரியும். நேரா கிரிக்கெட் விளையாட போயிருப்ப.. படிக்கிற எண்ணம் எல்லாம் இல்லையா...?எப்ப பாரு கிரிக்கெட்.. கிரிக்கெட்.. அதுவா உனக்கு சோறு போடும்...? "என்று உறுமித்தள்ளினார்.

இது வழக்கமான அர்ச்சனை தானே என்று அவன் பதில் பேசாமல் கேட்டுக்கொண்டிருந்தது விட்டு பூரிகளை லபக் லபக்கென்று சாப்பிட்டுவிட்டு இடத்தை காலி செய்தான்.

"பதில் பேசுறானா பாரு.. பதினைஞ்சு வயசுலயே எவ்வளவு கொழுப்பு அவனுக்குனு.. எல்லாம் நீ கொடுக்கிற செல்லம்.... " என்று மனைவியை குதற ஆரம்பித்தார். பாமா அதையெல்லாம் காதிலேயே போட்டுக்கொள்ளாமல் தன் வேலையைத் தொடர்ந்தார். தட்டில் பூரியையும் கிழங்கையும் வைத்து மூடி மகளின் அறைக்கு கொண்டுச் சென்றார். மகள் எப்போதும் தந்தையுடன் உணவருந்த மாட்டாள். அவ்வளவு ஏன்.. அவரோடு பேசியே நெடுநாட்கள். மன்னிக்கவும் சில வருடங்களாயிற்று.

மித்ரா. இருபத்து மூன்று வயதுக்கு பொருத்தமான உடல்வாகு. கண் பார்வையில் மின்சாரம் டண் டண்ணாய் வழிந்து எதிரிலிருப்பவரை ஒருகணம் ஷாக் அடிக்க வைக்கும். அம்மாவை உரித்து வைத்த முகசாடையும் எலுமிச்சை நிறமும் அவளுக்கு கூடுதல் அழகு. படிப்பு முடிந்த கையோடு ஒரு விளம்பர கம்பனியில் சேர்ந்து பணியாற்றுகிறாள். வெகுவிரைவிலேயே க்ரியேடிவ் டீமின் ஹெட்டாக பதவி உயர்வும் கிடைத்தது. அவளது கற்பனை திறனுக்கும், வித்தியாசமான சிந்தனைக்கும் அங்கு நல்ல இடம் உண்டு. அவளும் அதை சரியாக உபயோகப்படுத்திக்கொண்டு சுயமாக முன்னேரிக்கொண்டு வருகிறாள். என்ன வீட்டில் தான் அவள் உலகம் வேறாக இருந்தது.

காலையில் கடிகாரம் நேரம் ஏழு முப்பது என்று காட்டியது.

"அம்மா! இன்னைக்கு நான் வர கொஞ்சம் லேட் ஆகும். சந்தியாக்கு பர்த்டே. அவ வீட்ல பார்ட்டி. " ஹேன்பாக்கில் தண்ணீர் பாட்டிலை திணித்துக்கொண்டே சொன்னாள். அப்படியே வாசலை திறந்ததும் எதிர்படும் அந்த கண்ணாடியில் தன்னுடைய ஜிமிக்கிகள் அழகாக இருக்கின்றனவா என ஒருதரம் செக் செய்தாள்.

"சரிம்மா. ரொம்ப லேட் ஆக்கிடாம கவனமா வா என்ன..."

"சரிம்மா.."
" அப்புறம் உங்க அப்பா திட்டுவாரு.." பாமா அப்படி சொன்னதும் அம்மாவை முறைத்தாள் மித்ரா.
" நான் லேட்டா தான் வருவேன்.. வேணும்னா போய் உங்க புருஷன் கிட்ட சொல்லுங்க.." என்று சொல்லிவிட்டு கோபமாக வெளியேறினாள்.
" இதெல்லாம் எப்ப தான் மாறுமோ.." என்று வாய்விட்டே சொன்ன பாமா திரும்பி அந்த படத்தை பார்த்தார். அவரது மனம் கல்லாகி கண்ணீர் துளிகள் துளிர்த்தது.

மித்ரா கோபத்தில் தன் ஸ்கூட்டியை உதைத்து கிளப்பினாள். ஏனோ திடீரென ஒரு கோபம் அவளுக்குள் உருவெடுத்தது.
' நான் என்ன அவருக்கு அடிமையா..? நான் எனக்கு பிடிச்ச மாதிரி தான் இருப்பேன்.. லேட்டா வந்தா ஏதாவது சொல்வாராம்.. அவரு என்ன சொல்ல இருக்கு..? இன்னைக்கு லேட்டா தான் வீட்டுக்கு வரனும்.. ' உள்ளுக்குள் பேசிக்கொண்டு அடுத்து வந்த வளைவில் அவள் ஸ்கூட்டியை திருப்பவும், எதிரே வந்த கார்காரன் தன் கட்டுப்பாட்டை இழக்கவும், டமால் என மோதவும் சரியாக இருந்தது. கோபமாக வண்டியை விட்டு மித்ராவை திட்ட இறங்கியவன், அவளைக் கண்டு ஒருகணம் அப்படியே நின்றுவிட்டான்.

"ஹலோ மிஸ்டர்.. பார்த்து வரமாட்டிங்களா.. கார்ல வந்தா கண்ணு தெரியாதா? பாருங்க... என் ஸ்கூட்டி என்னாச்சுனு..." என்று கத்தினாள் நம் நாயகி.

அவனுக்கு சிரிப்பு வந்தது. அது வன் வே. தவறாக வந்தது அவள் தான். அவளது ஸ்கூட்டியை கண்டு தன் வேகத்தை கட்டுக்குள் கொண்டு வர அவன் முயற்சித்தும் முடியாமல் போய் முட்டிவிட்டது. அவன் மீது தப்பில்லை. ஆனால் பழியோ வேறிடத்தில். அவன் ஒன்றும் பேசாமல் அமைதியாக தன் கைகளை கட்டிக்கொண்டு இருந்தான். அவன் பார்வையில் ஒரு நையாண்டி இருந்தது. அவன் கண்கள் மட்டும் தனியே சிரித்தன.

அவள் அதை கண்டுகொன்டாள். கூடவே அவன் கைநீட்டி காட்டிய போர்டை பார்த்தாள். அப்போது தான் அவள் சரியாக கவனித்தாள். அதிர்ந்தாள்.

'நேற்று இது வன் வே இல்லையே.. ஆண்டவா.. இப்படி தினம் தினம் மாற்றி வைச்சா நாங்களாம் எப்படி போறது.. இந்த மனுஷனை வேற திட்டியிருக்கனே...' என்று எண்ணிக்கொண்டு "ஸாரி மிஸ்டர்.. நான் கவனிக்கல.. நேற்று இது வன்வேயா இருக்கல.. திடீர்னு எப்படி.. ஐ ஆம் ரியலி ஸாரி.. என்ன டாமேஜ்னு சொன்னா.. ஐ வில் பே....." என்று எச்சிலை விழுங்கினாள். எங்கே அவன் வம்புக்கு வந்து விடுவானோ என்று பயந்தாள்.

அப்போது அவன் ஓரெட்டு முன்னே கால் வைத்து அருகில் வந்தான். அவள் அதிர்ந்தாள். சுற்றிலும் அந்த தெருவில் அவர்களைத் தவிர யாருமே இல்லை என்பது அப்போது தான் அவளுக்கு உரைத்தது. மித்ரா கத்த ஆயத்தமானாள்.

ஆட்டம் தொடரும் ❤️?
 
Last edited:

Nirmala vandhachu ???
 
Top