Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கண்ணாமூச்சி ஏனடா..! -3

Advertisement

Banupriya "பா.ரியா"

Well-known member
Member
அத்தியாயம் -3

மித்ரா இன்னமும் அவனையே இமைக்காமல் பார்த்துக்கொண்டு இருந்தாள்.

' நமக்கு தெரியாம ஒரு அண்ணணை தத்து எடுத்துட்டாங்களா என்ன? இப்பிடி ஒரு ஆளை சந்தியா மென்ஷன் பண்ணதே இல்லையே..' என்று கதாநாயகி யோசனையில் ஆழ்ந்தாள்.

"ஸாரிம்மா. கொஞ்சம் வர்க் பிஸி.. ஹேப்பி பர்த்டே... "என்று கரம் நீட்டி வாழ்த்து சொல்லி கூடவே தூக்கிக்கொண்டு வந்த தன் பரிசை கொடுத்தான். பரிசுப் பொருள் என்னவோ சின்னதாகத்தான் இருந்தது. ஆனால் அதற்குள் இருக்கும் நெக்லஸ்க்கு மதிப்பு அதிகம் என்று அதற்கு பில் போட்ட அந்த நகைக்கடைகாரருக்கு தெரியும். 'இவனால் இதுபோல் நிறைய வியாபாரம் ஆகனும் கடவுளே..' என்று அவர் அப்போதே வேண்டிக்கொண்டார்.

"கிப்ட் தந்ததால தப்பிச்சிங்க.. அண்ணா.." என்று கையை நீட்டி எச்சரித்தாள் சந்தியா.

"பாருங்க மதி! என்னையே இந்த மிரட்டு மிரட்டுறா.. உங்களை என்ன பண்ணப் போறாளோ.. உங்க கதி அதோ கதிதான்.." என்று அவனையும் வேடிக்கை பேச்சில் இணைத்தான்.

"அதுதான் தெரியல... கடவுள் தான் காப்பாற்றனும்.." என்று அவனும் காலை வார அங்கு சிரிப்பு பரவியது. மித்ரா இருப்பதையே மறந்தவர்களாக அவர்கள் பேசிக்கொண்டிருந்தது மித்ராவுக்கு சற்று சங்கடமாக இருந்தது. பேசாமல் நழுவி விடலாமா என்று அவள் யோசித்துக்கொண்டு ஓசையின்றி ஒரு எட்டு எடுத்து வைக்கப்போக, சந்தியாவின் கரம் மித்ராவை இறுகப் பற்றியது. தோழியை பற்றி அவளுக்கு தானே தெரியும்.

"அண்ணா! இது மித்ரா. என் பெஸ்ட் ப்ரெண்ட்.... என்னோட எல்லாமும் இவதான்..." என்று ஒருவழியாக அறிமுகம் செய்து வைத்தாள் சந்தியா.

" அப்ப நான்..?" என்று மதிவாணன் கேட்க, அவனை கண்ணாலேயே சமாளித்தாள் சந்தியா.

"தெரியுமே.." என்றான் நம்ம ஹீரோ.

"என்னது தெரியுமா..?" என்று சந்தியா அதிர்ந்தாள்.

"அவங்களைத் தெரியும்.. ஆனா அவங்க பேர் இப்பதான் தெரியும்..." என்றான்.

" ஒன்னுமே புரியலயே .." என்று சந்தியா அண்ணணைப் பார்த்தாள்.

"அது ஒன்னுமில்லை. காலையில ஒரு சின்ன மோதல்.." தங்கை கேள்வியாக பார்க்கவும் அவனே தொடர்ந்தான்.

"ரொம்ப யோசிக்காத. மோதல் எங்களுக்கில்லை. எங்க வண்டிக்கு.... ஆனா யாருக்கும் எந்த அடியும் இல்லை."
என்றான்.

"ஓ.. நீ ஏன் சொல்லல மித்து.."

அவள் விழித்தாள்.

' எப்படிச்சொல்வது வன்வே கதையை..' என்று மித்ரா அசடு வழிய நின்றாள்.

" உனக்கு இதே வேலையா போச்சுல.. எவன்டீ உனக்கு லைசென்ஸ் கொடுத்தது.. அவன் மட்டும் என் கைல கிடைச்சா செத்தான்.." என்று சொன்னாள் சந்தியா.

அப்படிச் சொல்ல மற்ற ஆண்கள் இருவரும் அவளைப் பார்த்தார்கள். மித்ரா சந்தியாவின் மீது முழங்கையால் இடித்தாள்.

" அவளோட ஆக்சிடன்ட் கதை எக்கச்சக்கமா இருக்கு.. ஒவ்வொன்னா சொல்ல ஆரம்பிச்சா விடிஞ்சிரும்.." என்று மீண்டும் தோழியை பக்கத்தில் நிற்க வைத்தே பங்கம் செய்தாள். இந்த முறை முழங்கை இடி பலமாய் வந்தது.

ஆண்கள் லேசாய் சிரிக்க ஆரம்பித்தார்கள்.

"சரி.. அண்ணாவை உனக்கு இன்ட்டடியூஸ் பண்ணல பாரு. இது என் ஒன்றுவிட்ட பெரியப்பா பையன். 'யூ எஸ்' ல இருந்தார். இப்ப இங்க வந்து பெரியப்பாவோட பிசினஸை பார்த்துக்கிறார். "

மித்ரா ஒரு புன்னகையை புன்னகைத்து வைத்து " ஹலோ .." சொன்னாள். பதிலுக்கு அவனும் " ஹாய்.." சொன்னான்.

' இவர் பெயர் என்னனு தெரியலையே.. இந்த இத்து போன சந்தியா அதை சொல்லலையே.. இவங்களும் பெயர் சொல்லி கூப்பிட்டுகிட்ட மாதிரி இல்லையே..' என்று மித்ரா யோசனையில் ஆழ்ந்த போது அந்த குரல் அவர்களை இடைமறித்தது.

" சின்ன பாப்பா.. ஐயா உங்களையும் தம்பியையும் தேடுறாரு.." அவர்கள் வீட்டு வேலைக்கார ஆள்.

" அண்ணா.. மித்து கூட பேசிக்கிட்டு இருங்க.. வந்துடுறோம்.." என்று அவள் மதிவாணன் கையைப் பிடித்து கொண்டு நகர்ந்துவிட அந்த இடத்தில் அவனும் மித்ராவும் மட்டும் மிச்சமாய். எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று இருவரும் யோசிக்கையில் அவனே ஆரம்பித்தான்.

"என்னங்க.. க்ளைம் அப்ளை பண்ணிட்டிங்களா..? எந்த டீடெய்ல்ஸ்க்காவும் எனக்கு போனே பண்ணல..." என்றான் அவன்.

" இல்லங்க... சின்னதா தானே அடி பட்டிருக்கு. அதுக்கு எதுக்கு க்ளைம். அதெல்லாம் பழகிப்போச்சு.. நானே அதை சரி பண்ணிக்கிறேன். அதோட அதுக்காக ஆயிரம் தடவை அலைய வேண்டி இருக்கும்..."

"அட இதுக்கா யோசிச்சிங்க. நீங்க எதுல இன்சூர் பண்ணியிருக்கிங்க..."

மறுக்க முடியாமல் சொன்னாள். உடனே இரண்டு கோல் செய்தான்.

"நாளைக்கு சுந்தர்னு ஒருத்தர் வருவார். அவர் எல்லாம் பார்த்துக்குவார். ஃபோட்டோஸ் எடுத்திங்கல.. "

" ஆமா..ரெண்டு படம் எடுத்தேன்."

" அது போதும்..உங்க அட்ரஸை மட்டும் அவர்க்கு மெசேஜ் பண்ணி விடுங்க. இல்ல.. நீங்க பண்ணிவிட மாட்டிங்க. உங்க அட்ரஸை சொல்லுங்க..." அவன் விடாப்பிடியாக நின்றான்.

அவன் அவ்வளவு இதமாக கேட்கவும் அவளால் மறுக்கமுடியாமல் அட்ரஸையும் போன் நம்பரையும் சொல்ல, அவன் கையோடு இன்சூரன்ஸ் சுந்தருக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு தன் மனதிற்குள் வீட்டு முகவரியை குறித்துக்கொண்டான். செல்போனில் அவள் இலக்கத்தை ' தேவதை' என்று சேவ் செய்தான்.

அவனுக்கு இருக்கும் செல்வாக்கு அப்போது தான் அவளுக்கு புரிந்தது. பெரிய இடம் போல என்று யோசித்துக்கொண்டாள். உண்மையில் அவள் ஃபோட்டோ எடுத்தது வேறு டிபார்ட்மெண்ட். எப்போதெல்லாம் யாரை இடிக்கிறாளோ அப்போதெல்லாம் புகைப்படம் எடுத்து வைத்துக் கொள்வாள். மெமரியாம்.

அங்கு லேசான அமைதி நிலவியது.

'பேசாமல் அவனிடமே அவனது பெயரை கேட்டுவிடலாமா ?' என்று அவள் யோசித்துக்கொண்டு இருக்கும் போது அவன் மீண்டும் ஆரம்பித்தான்.

" என்ன மித்ரா .. ஏதோ யோசனையா இருக்கிங்க.. எனி ப்ராப்ளம்?"

யோசிக்காமல் கேட்டாள்.

" உங்க பெயரை சந்தியா சொல்லவே இல்ல.. அதான்.."

"ஓ.. என்னோட பெயர் நவிலன். வயசு... ம். சொல்லகூடாது.." என்று சிரித்தான்.

" பொண்ணுங்ககிட்ட தான் வயசு கேட்க கூடாதுனு சொல்வாங்க.. ஆண்கள் சொல்லலாம்.." என்று அவளும் கலகலப்பாக இணையத்தொடங்கினாள்.

" ஓ.. அப்படியா.. இப்போதான் போன ஜூன் தான் வயசு இருபத்தெட்டு ஆச்சு."

" நான் சும்மா சொன்னேன்.. உடனே வயசை சொல்லிட்டிங்க.."

" என்ன பண்ண.. நான் ரொம்ப நல்லவனா அதான் சொல்லிட்டேன்.."

" ஓ.. ரொம்ப நல்லவர் தான்.. காலையில் பார்த்தேனே.. தப்பு என் மேலயா இருந்தாலும் மன்னிச்சு விட்டிங்க..தேங்க்ஸ்.."

" அட இதுல என்ன இருக்கு .. எல்லாம் நட்பின் அடையாளம் தான் மித்ரா.."

அவள் சிநேகமாக சிரித்தாள்.

" மித்ரா.. அழகான பெயர்.." என்று தன்னையும் மீறி உளறித்தள்ளிவிட்டான் நவிலன்.

" என்னோட பெயர் அது இல்லையே.." என்று குறும்பாய் சிரித்தாள் அவள். அவளை அதிர்ச்சியோடு பார்த்தான் நவிலன்.

"சங்கமித்ரா . அதான் என் முழு பெயர்.." என்றாள்.

" வாவ்.. அழகான பெயர்..."

" நன்றி.. உங்க பெயரும் தான்.."

" நான் நல்லா இருக்குனு சொல்லவும் என் மனசை கஷ்டப்படுத்த கூடாதுனு சொல்றிங்க.. அப்படி தானே.." என்றான் நவிலன்.

" அட.. இல்லைங்க.. நிஜமாவே.. நவிலன்.. அழகான பெயர்.." அவள் 'வி' என்ற எழுத்தை உச்சரிக்கையில் அவளது சிவந்த உதட்டை தொட்ட வெண்பற்களை ரசித்தான் நவிலன்.

"நான்.. வந்துருக்க ரிலேடிவ்ஸை பார்த்துட்டு வாரேன்.." என்று தயங்கினான்.

" ஓ.. ஷ்யூர்.. " என்று அவனுக்கு விடையளித்தாள். அந்த இடத்தில் இருந்து விருப்பமேயின்றி நகர்ந்த அவன் கண்களுக்குள் சங்கமித்ரா சிம்மாசனமிட்டு அமர்ந்து கொண்டாள்.

தூரத்தே இருந்து அவளை தேடின நவிலனுடைய கண்கள். அவன் கண்களில் அவள் தேவதையாகவே தென்பட்டாள். உண்மையில் அவள் தேவதை தான்.

வில்லாய் வளைந்த புருவங்கள், செதுக்கி வைத்தது போல சின்ன மூக்கு, அதில் ஒரு ஒற்றைக்கல் மூக்குத்தி, லிப்ஸ்டிக் பூசத்தேவையில்லாத இயல்பாகவே சிவந்திருந்த உதடுகள். நல்ல நீண்ட சில்க் கூந்தல். மெல்லிய உடல்வாகு. பிரம்மன் அவளை செதுக்கும் போது அதிக நேரம் எடுத்திருந்தால் அதில் தவறேயில்லை. அவ்வப்போது லேசாக ப்ரியா பவானிசங்கரை நினைவு படுத்தினாள். சங்கமித்ரா இறக்கையில்லாத தேவதை.

' பர்த்டே பார்ட்டி ' சிறப்பாகவே ஒழுங்கு செய்யப்பட்டு இருந்தது. இரவு உணவு அசத்தலாக இருந்தது. சந்தியாவோடு இப்போது மதிவாணனும் இணைந்து இருந்ததால் மித்ரா சற்று ஒதுங்கியே இருந்தாள். அவ்வப்போது கௌதமிக்கு உதவிக்கொண்டு இருந்தாள். ஆட்டம் பாட்டம் என்று ஒருவழியாக பார்ட்டி முடிந்து கெஸ்ட் அனைவரும் கிளம்பிக்கொண்டிருந்தனர். அப்போதே நேரம் பத்து முப்பதை நெருங்கிக் கொண்டு இருந்தது.

" என்னம்மா.. இன்னும் வரல.." என்று பாமா இரண்டு தரம் போன் செய்து விட்டிருந்தார்.

" இதோ.. கிளம்பிட்டேன்ம்மா.." என்று இவளும் இரண்டு தரம் பொய் சொல்லியிருந்தாள். அவளுடைய ஸ்கூட்டி அடிபட்டதோ மெக்கானிக் ஷாப்பில் கிடப்பதோ அந்த தாய்க்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவள் ஸ்கூட்டியில் பறந்து பாதுகாப்பாக வந்துவிடுவாள் என்று அங்கு காத்திருந்தார் பாமா.

விருந்தினர்கள் சிலர் இன்னும் விஜயகாந்தோடு சரக்கு பகிர்தலில் பிஸியாக இருந்தார்கள்.

"மித்ரா... நீ கிளம்பும்மா.. லேட்டாச்சு.. பாமா டென்ஷன் ஆகிடுவா.. இதை வீட்டுக்கு கொண்டு போ. வருண்க்கு கொடு.. "

"என்ன ஆண்ட்டி இது..." என்று அதை பார்த்தாள்.

"ஸ்வீட்ஸும், கேக்கும்.. அவனுக்கு ரொம்ப பிடிக்குமே..." என்று அவளிடம் தந்தார் கௌதமி. அவர் பாசமாக தந்ததை மறுக்கமுடியாமல் வாங்கிக்கொண்டாள்.

"மித்து எப்படி போகப்போற.. ஸ்கூட்டி வேற இல்லாம... இரு.. நான் டிரைவரை டிராப் பண்ண சொல்றேன்.." என்ற சந்தியா டிரைவரை கூப்பிட போனாள்.

"வேண்டாம் வேண்டாம். சும்மா எதுக்கு.. இந்த டைம்ல... நான் டாக்ஸி புக் பண்ணிக்கிறேன்.." என்று செல்போனை எடுத்தாள்.

" ஏன் ஸ்கூட்டிக்கு என்னாச்சு.. ? " என்றார் கௌதமி.

" அது வழக்கம் போலத்தான்.. " என்று சொல்லிவிட்டு டிரைவரை தேடி போனாள் சந்தியா. அவரை வேறு ஒருத்தரை டிராப் செய்ய அனுப்பியிருந்தார் விஜயகாந்த். அது தெரியாமல் அவள் டிரைவரை தேடிக்கொண்டு இருந்தாள்.

"சித்தி! நான் கிளம்புறேன்.. " என்றவாறு நவிலன் அங்கு வந்தான். அவனைக் கண்டதும் கௌதமிக்கு அந்த யோசனை வந்தது.

"நவிலா! நீ அந்தப்பக்கம் தானே போற... மித்ராவோட வீடு பார்க் ஸ்ட்ரீட்ல தான் இருக்கு. மூணாவது ப்ளாட். கொஞ்சம் அவளை டிராப் பண்ணிடுறியா.. இந்த டைம் அவளை தனியா அனுப்ப ஒருமாதிரி இருக்குப்பா. இப்ப காலமே சரியில்ல. "

அவன் அவளை பார்த்தான். அவள் தயங்கினாள்.

"சரி சித்தி. வர சொல்லுங்க...நான் ட்ராப் பண்ணிடுறேன்.." என்று முன்னே நடந்தான்.

" ம்மா.. அப்பா டிரைவரை எங்கயோ அனுப்பிட்டார். நான் வேணும்னா போய் விட்டுட்டு வரட்டுமா..?" என்றவாறு திரும்பி வந்தாள் சந்தியா.

" அதெல்லாம் வேணாம்.. இந்த நேரத்துல.. அப்புறம் நீ தனியா வரனும்..நவிலன் அப்படியே தானே போறான். அவனை டிராப் பண்ண சொன்னேன். அவன் என் பையன் மாதிரி தான்ம்மா. பயப்படாம போ... போயிட்டு கால் பண்ணும்மா.." என்று கௌதமி அவளை வழியனுப்பி வைத்தனர்.

" அண்ணா.. என் மித்துவை கவனமா கொண்டு போய் விட்டுடுவிங்க தானே.." என்று காரின் கதவை திறந்து முன் இருக்கையில் மித்ராவை தள்ளிக்கொண்டே கேட்டாள் சந்தியா. மித்ராவுக்கோ அவன் அருகில் அமர சங்கடமாக இருந்தது. இருந்தும் மறுக்க முடியாமல் அமர்ந்து கொண்டாள்.

" அம்மா தாயே.. உன் ஃப்ரெண்டை கடத்திட்டு போக மாட்டேன். பயப்படாத.." என்றான் அவன்.

" அப்படினா சரி.. போயிட்டு மெசேஜ் பண்ணு மித்து.." என்று வழியனுப்பினாள் சந்தியா.

" சரி சந்தியா.. பாய்.." என்று அவளும் அவனோடு கிளம்பினாள்.

அந்த அறையில் கடிகாரத்தின் 'டிக் டிக்' ஓசை மட்டுமே கேட்டுக்கொண்டு இருந்தது.

மித்ரா உறங்காமல் அன்று நடந்ததைப் பற்றி யோசித்துப் பார்த்தாள்.

அவன் அவளைப் பற்றி தனிப்பட்டமுறையில் எதுவுமே கேட்காமல் பொதுப்படையாகவே பேசிக்கொண்டு வந்தான். அதுவே அவளுக்கு பிடித்திருந்தது.

"அந்த ஃப்ளாட் முன்னாடி நிறுத்திடுங்க சார்.."

"என்னை சார்னு கூப்பிடாதிங்க. ஒருமாதிரி இருக்கு.. நவிலன்னு கூப்பிடலாம்."

அவள் தயங்தினாள். எப்படியும் அவன் அவளைவிட வயதில் மூத்தவன். அவனைப் போய் எப்படி பெயர் சொல்லி அழைப்பது என்று யோசித்தாள்.

"என்னை உங்க ப்ரெண்டா நினைச்சா கூப்பிடுங்க..." என்று ஃப்ளாட் முன் காரை நிறுத்தினான்.

என்ன நினைக்தாளோ இயல்பாய் "ஓக்கே.. தேங்க் யூ நவிலன்.." என்றாள்.

" தட்ஸ் குட்.. குட் நைட்.. கவனமா போங்க.. மறக்காம உங்க தோழிக்கு பத்திரமா கொண்டு வந்து விட்டுடேனு சொல்லிடுங்க.." என்று புன்னகையோடு காரை கிளப்பினான்.

" கண்டிப்பா.. குட் நைட்.. தேங்க்ஸ்.." என்று அவளும் கையசைத்து விடை கொடுத்தாள். ஏனோ அவளுக்கு அந்த நாள் மிகவும் நிறைவாக இருந்தது.

" என்னடீ.. ஏன் இவ்வளவு லேட்.. ஆமா எங்க உன் ஸ்கூட்டி..?" பாமா உள்ளே நுழைந்ததுமே கேள்வி கணைகளை தொடுத்தார்.

" சொல்றேன்ம்மா.. ரொம்ப டயர்டா இருக்கு.. ஃப்ரெஷ் ஆகிட்டு வாரேன்.." என்று உள்ளே போகப்போன போது " அது யார் ? கார்ல வந்து விட்டுட்டு போறது..?" என்ற கேள்வியோடு ஐராவதம் வந்து நின்றார்.

"அதுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லைனு சொல்லுங்கம்மா.. குட் நைட்.." என்றவாறு அறைக்குள் நுழைந்து கதவை படாரென அறைந்து சாத்தினாள்.

வெளியே கொஞ்ச நேரம் பேச்சுக்குரல் காரமாய் கேட்டதை அவள் காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை. சொன்னபடியே லேட்டாக வந்தாயிற்று என்று உள்ளுக்குள் வன்மமாய் சிரித்துக் கொண்டாள் சங்கமித்ரா.

சுகமான குளியலை முடித்துவிட்டு படுக்கையில் விழுந்து கண் மூடியவளுக்கு ஏனோ அதிசயமாய் அவன் நினைவு வந்தது . அதை ஒதுக்கிவிட்டு வேறு ஏதோ யோசிக்க ஆரம்பித்தாள்.
அங்கு சுற்றி இங்கு சுற்றி கடைசியில் அவள் நினைவுகள் நவிலனைப் பற்றியே வந்தன. அவன் நினைவுகளை சிரமப்பட்டு துரத்திவிட்டு கண்களை மூடிக்கொண்டாள். வெகுவிரைவில் அவள் உறக்கத்தை அவன் பறிக்கப்போவது தெரியாமல்.

விசிலடித்தவாறே வீட்டிற்குள் நுழைந்த மகனைக் கண்டதும் தாய் ரோகிணி அவனை அதிசயமாய்ப் பார்த்தார்.

"என்னப்பா.. பார்ட்டி நல்லா இருந்திச்சா...? "

"ஆமாம்மா.... நீங்கதான் வர முடியாதுனு சொல்லிட்டிங்க.."

" சரியான தலைவலிப்பா.. அதான் வரல.. என்ன.. ரொம்ப சந்தோஷமா இருக்க மாதிரி இருக்கு..."என்றார் தாய்.

"அப்படியா.." என்று சிரித்தான். அப்படி சிரிக்கும் போது தலையை கோதிக்கொண்டான்.

" அம்மாகிட்ட எதையும் மறைக்க முடியாது கண்ணா.." என்றார் ரோகிணி.

"எனக்கு..தூ..தூக்கம் வருதும்மா.." என்று தாயை தவிர்த்துவிட்டு மாடிப்படிகளில் துள்ளலோடு ஏறினான். ரோகிணி மனசுக்குள் சிரித்துக்கொண்டார்.

குளித்துவிட்டு படுக்கையில் விழுந்தவன் கண்களில் அவள் தெரிந்தாள்.

காலையில் ஜீன்ஸும் டாப்புமாய் சண்டைக்கு இறங்கிய இளந்தென்றல், மாலையில் இளம் ஆரஞ்சு வண்ண காட்டன் சேலையை ஃப்ரீ ஷால் விட்டு, காதுகளில் மட்டும் பெரிய ஜிமிக்கி அணிந்து கருகரு கண்களால் கவர்ந்திழுத்து அந்த கூட்டத்திலேயே வித்தியாசமாய் அத்தனை அழகாய் தெரிந்தாள். நவிலன் பார்ட்டியில் அவள் மீது பதிந்த தன் பார்வையை விலக்க மிகவும் சிரமப்பட்டான்.

உறக்கம் வருவதாக சொல்லிவிட்டு வந்தவன், உறங்காமல் நிலவுக்குள் அவளைப் பார்த்து அவளைப் பற்றிய நினைவுகளோடு உறங்காமல் தவித்தான்.

அவளோடு காரில் வரும் போது ஓரக்கண்ணால் அவளை பார்த்ததோ, அவளை அடைந்தே ஆக வேண்டுமென்று அவனுக்குள் உறுதிபூண்டதோ அவளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.அவன் ஒரு முடிவோடு தான் இருந்தான்.

ஆட்டம் தொடரும் ❤️?
 
Last edited:

Nirmala vandhachu ???
 
Nice epi dear.
Authore, sonnathum gaapnu pidichu long epi kodukureego, samathu pillai.
Yedi Sangi, instant ah annan ah Amazon la order pottu ah vaanga mudiyum ?? Foreign, return, cousin ippadi yethavathu than irrukum.
Simaasanam podura alavu kanna?? thaazha veezhathu careful ah irriku molae.
Konduvantha sweet ah thambikku kodukala ye ma.
Ayra sir, pullara nambungo allama ippadi than respect poogum,yarukku theriyum ningalu varum pol lift off seythu ungala sweat la kulikka kooda seyalaam.
Monae Navi, driver jolly seriya seythu,good... innu maathra thana..... Scooty vera repair ku poi... athukonda doubt.
 
Wow.. wonderful review. Thank you Leenu.. ?❤️
Sweets ஐ அவ தனியா சாப்பிடிருப்பா.. ?
 
Top