Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கடல் நீ கரையும் நீ -44

Advertisement

Geetha Boopesh

Well-known member
Member
அத்தியாயம் - 44

இரவு முழுதும் படுக்கையில் புரண்டுகொண்டிருந்த அம்ரு ..ஒரு வழியாக விடியலில் உறக்கத்துக்குள் விழ.. காலை எழுந்து பார்க்கையில் மணி ஏழு.

வீட்டில் யாரும் இருப்பதற்கான தடமே இன்றி அமைதியாக இருந்தது வீடு.
எல்லோரும் ப்ரித்வி அழைத்ததன் பொருட்டு சென்றிருப்பார்கள் என்று தோன்ற .. எட்டு மணிக்கு விசேஷம் என்று சொன்னானே.. தான் போவதற்குள் தட்டு மாற்றி விடுவார்களோ.

வேறு பெண்ணிற்கு ரஞ்சித் உறுதியளித்துவிடுவானோ.. என்றெல்லாம் மனம் பதற ..கைக்கு கிடைத்த உடையை மாற்றிக் கொண்டவள் .. சம்யுவின் ஸ்கூட்டியை எடுத்து கிளம்பினாள்.

ரஞ்சித் இரவெல்லாம் யோசித்தவனுக்கு தான் விட்டுக் கொடுக்க ஏன் இவ்வளவு யோசித்தோம்? அப்படியே விட்டு கொடுத்தால் குறைந்தா போய்விடுவோம். காதலை விட உறவைவிட .. தானென்ற நினைப்பும் பிடிவாதமும் பெரிதா?

அவள் என்னை விட திறமையானவள் என்பதை ஏற்றுக் கொள்ள ஏன் இத்தனை தயக்கம்.. அதில் அவள் தவறு ஒன்றுமில்லையே.. கடவுள் அளித்த அறிவு, அவளாக வளர்த்து கொண்ட திறமைகள்.. இதெல்லாம் ஒரு பெண் தன் கணவனுக்காக விட்டு கொடுத்து விட வேண்டுமா.. அவனுக்கு கீழ் தான் தான் என்று இருக்க வேண்டுமா ? இருவரும் ஒரு நிறை சமானமாக இருக்க முடியாதா? இப்படி கேள்விகள் அவனை சுற்றி சுழட்டியடிக்க ..அம்ரிதா தன்னை விட்டு போய்விடுவாள்..இனி கிடைக்கவே மாட்டாள் என்ற எண்ணம் தோன்றிட ஒரு பெரும் பதட்டம் உருவாகிட்டது.

அவளை விட்டு கொடுக்கவே முடியாது என்ற எண்ணம் மேலும் மேலும் வலுவாக .. தன் தயக்கங்கள் பிடிவாதங்கள் எல்லாம் உதறியிருந்தவனாய் ..தன் காரை எடுத்துக் கொண்டு விமான நிலையம் நோக்கி கிளம்பினான் ரஞ்சித்..

வேகமாக செல்லும் மகனை பார்த்த சத்யா " ரஞ்சித் கண்ணா .. இந்நேரம் எங்க கிளம்புற ? எட்டு மணிக்கு ஃபங்க்ஷன் " எனவும் ..நிற்காமல் "அதுக்குள்ள வந்திடறேன்மா " என்றபடி கிளம்பிவிட்டான்.

விமான நிலையம் வந்தவன் .. யு கே செல்லும் பிளைட் எப்போது என்று பார்க்க .. இன்னும் அரை மணி நேரம் தான் இருந்தது.

வேகமாக போர்டிங் அருகே செல்ல காயத்ரி நின்றிருந்தாள்.

காயத்ரி யாருக்கோ கையசைப்பதை பார்த்து .. சோர்ந்து போய் நின்றுவிட்டான் ரஞ்சித். சித்துவும் அவள் அருகே நிற்க... வேகமாக ஓடி வந்த நண்பனை புன்னகையோடு காயத்ரியிடம் சுட்டிக்காட்ட .. அவள் முகத்திலும் புன்னகை மலர்ந்தது.

இருவரும் மலர்ந்த முகத்தோடு தன்னருகே வருவதை பார்த்தவனுக்கு கோபம் வர.."நானே அவளை மிஸ் பண்ணிட்டேன்னு வருத்தத்தில் வந்தால் ..ரெண்டு பேருக்கும் என்னடா சிரிப்பு ? பிளைட் கிளம்பிடுச்சா ? சொல்லுடா "

பதிலேதும் சொல்லாமல் சித்து தலையசைக்க ..ஒரு கணம் சோர்ந்தவன் " பிளைட் கிளம்பினா என்ன ? உலகத்தோடு எந்த மூலைக்கு அவள் போனால்தான் என்ன ? நான் அவள் பின்னாலேயே போவேண்டா " என்றான் ஆவேசமாய்.

"அப்படியா ? அப்போ இங்கே என்னடா பண்றே ? உன் வீட்டு பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கு போடா .. அவள் அங்கதான் போயிருக்கா " எனவும் புரியாதவனாய் பார்த்தான் ரஞ்சித் .

"அப்போ அவள் யு கே போகலையா ? நீங்க எதுக்கு நிக்கிறீங்க இங்கே ?"

" நாங்க காயுவோட அத்தையை பிளைட் ஏத்திவிட வந்தோம்.." என்றான் சிரிப்பை மென்றபடி.

"அப்போ அவ மூணு வருஷ ஒப்பந்தத்துல போறான்னு சொன்னதெல்லாம்.. ?"

"இன்னுமாடா அது புருடானு உனக்கு புரியலை.. எப்போதிருந்துடா இவ்வளவு பெரிய டியூப் லைட்டா மாறினே " என்று விடாமல் ரஞ்சித்தை கலாய்க்க .. மனதின் பாரம் மொத்தமும் இறங்கியவனாய் ..திரும்பி வெளியே நடந்தான்..

"இருடா ..நாங்களும் வர்றோம் " என்று அவனோடு காரில் தொற்றிக் கொண்டனர் இருவரும்.

ப்ரித்வி சொன்ன கோவிலுக்கு அம்ரு வர .. ஒருபுறமிருந்த மண்டபத்தில் அனைவரும் அமர்ந்திருப்பது கண்ணில் பட அங்கே ஓடினாள்.

வேகமாக மூச்சிரைக்க ஓடியவள், அனைவரும் சுற்றி நிற்க.. மணமக்கள் நடுவே நிற்பது தெரிய.. அந்த இடம் நோக்கி சென்றாள்.

அந்நேரம் அம்ரிதாவுக்கு ரஞ்சித்தின் சட்டையை பிடித்து உலுக்கும் ஆவேசம் ஏற்பட்டது.. எப்படி இன்னொரு பெண்ணுடன் நிச்சயம் என்று?

அதுவும் கடவுளின் சன்னிதானத்தில் எப்படி அவனால் நிற்க முடிந்தது ? இத்தனை நாட்கள் தன் மேல் கொண்ட காதலுக்கான அர்த்தம் எதுவுமே இல்லையா ? அவனை கேள்வி கேட்கும் ஆவேசம் பொங்க .. அங்கே சென்றவள்.. திகைத்து நின்றுவிட்டாள்.

மிதமான அலங்காரத்தில் நின்றிருந்தாலும் அன்றைய நாயகியாக பளிச்சென்று தெரிந்த உமையின் தோற்றமும்.. அவளது கை பிடித்து மோதிரம் அணிவித்து கொண்டிருந்த ஆடவனின் முகமும் தெளிவாய் தெரிய.. சற்று நேரம் அவள் மனம் ஸ்தம்பித்தது..

அவள் மனம் அப்படியே 'பிளாங்க்' ஆகிவிட ..மலங்க மலங்க விழித்தபடி நின்றிருந்தாள் அம்ரிதா.

கண்களில் நீர் வழிய நின்றவள், மனதுக்குள் அவ்வளவு நேரம் இருந்த போராட்டங்கள் விடைபெற .. அதீத மன உளைச்சல் முடிவுற, அதனை தாங்க மாட்டாதவளாய் மயங்கி சரிய..தன்னவளை தாங்கி பிடித்தன ரஞ்சித்தின் கரங்கள்.

முகத்தில் விழுந்த குளிர் நீரில் ..மெல்ல விழிகளை மலர்த்தியவள்..தன் முன் தெரிந்த ரஞ்சித்தின் முகத்தை கண்டதும் மீண்டும் கண்ணீர் வடிக்க்க... "ஹேய் அம்ரு அழாதே " என்று அவன் தேற்றினாலும் அவளது கண்ணீர் கட்டுக்கடங்காமல் பொழிய.. சுற்றி நின்று பார்த்து கொண்டிருந்த மற்றவர்களுக்கும் பதட்டம் கூடியது.

" என்னை விட்டு வேற ஒருத்தியை கல்யாணம் பண்ணிப்பியா ?" என்று சிறு பிள்ளையாய் தேம்பியபடி அவள் கேட்க.. "நீ என்னை விட்டு மறுபடியும் தூரமா போய்டுவியா? " என்றான் அவன் பதிலுக்கு.

"நோ.. " என்றனர் இருவரும் கோரஸாக.

"சாரி ரஞ்சி... நான் உன்கிட்ட இனி சண்டையே போடமாட்டேன்.. எனக்கு வேற எதுவுமே வேண்டாம்..நீ மட்டும் போதும்" என்று அவனிடம் செல்லம் கொஞ்ச..

" உனக்கு என்ன வேணும்னாலும் செய் .. எங்க வேண்ணாலும் போய் வேலை பாரு..ஆனால் என் மனைவியா தான் போகணும் சரியா ?" என்றான் அவன்.

"சாரி ரித்து.. ஐயம் வெரி சாரி "

"இல்லை ரஞ்சி நான் தான் உன்கிட்ட சாரி சொல்லணும்.. மத்தவங்க சொன்னதை வச்சி நான் உன்கிட்ட நெறைய தப்பா பேசிட்டேன்"

"இல்லை ரித்து ..நான் தான் தேவையில்லாமல் காம்ப்ளெக்ஸ வளர்த்துக்கிட்டு என்னையும் கஷ்டப்படுத்தி உன்னையும் கஷ்டப்படுத்திட்டேன்"

"யார் என்ன சொன்னாலும்.. நீ இன்னொரு பொண்ணை கல்யாணம் பண்ணுவேன்னு நான் நம்பியிருக்க கூடாது ரஞ்சி"

"நீ இன்னொரு பையன் கூட பேசுவதை பார்த்தவுடனே நானும் உன்னை தப்பா நெனைச்சிருக்க கூடாது ரித்து"

"உங்கம்மா என்ன பேசியிருந்தாலும் நான் உனக்காக பொறுத்து போய்க்குவேன் ரஞ்சி"

“எங்கம்மா மட்டுமில்லை யாருமே உன்னை ஒரு வார்த்தை கூட பேச விடமாட்டேன் ரித்து"

"சாரிடா "

"நீயென் சாரி சொல்றே? நாந்தான் உன்னை புரிஞ்சிக்கலை.. ஐயம் வெரி சாரி "

என்று இருவரும் செல்ல சண்டையை ஆரம்பிக்க .. .. சுற்றிலும் நின்று பார்த்து கொண்டிருந்த மற்றவர்களுக்கு ..இருவரும் தெளிந்து விட்டனர் என்று புரிய ...இதுகளை திருத்தவே முடியாது என்று விலகி சென்று விட்டனர்.
 
Top