Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கடல் நீ கரையும் நீ - 2

Advertisement

Geetha Boopesh

Well-known member
Member
அத்தியாயம் - 2


மணியாவதை உணர்ந்து அனைவரும் சாமி கும்பிட்டு கிளம்ப ..தன் அன்னை தந்தையின் கைபிடித்து ஸ்ரீ முன்னால் உள்ள காரில் ஏறிவிட .. அவள் கணவன் குடும்பத்தினர் நேராக மண்டபத்திற்கு வந்துவிடுவதாக சொல்லியிருந்தனர்.

சகோதரர்கள் இருவரும் உமையுடன் பின்நின்றிருந்த அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஏறிக்கொண்டனர்..

அதுவரை இருந்த சங்கடமான மனநிலை ரஞ்சித்தின் முகத்தில் சோக சாயலை பூச .. அதை கண்ணால் சுட்டிக் காட்டிய உமைக்கு .. ப்ரித்வியிடம் ஒரு தோள் குலுக்கல் மட்டுமே பதிலாக வந்தது ப்ரித்வியிடமிருந்து.

புருவம் சுருக்கி அவனை முறைத்தவள் ..."உங்கண்ணன் தானே ..ஏதாவது சொல்லி உற்சாகப்படுத்த மாட்டியா ?" என கிசுகிசுக்க ..
"இந்த கருமம்லாம் வேணான்னுதானே நான் கல்யாணமே வேண்டான்னு சொல்றேன் .. இவன் தானா போய் சிக்குறான் ..இன்னும் தொடங்கவே இல்லை ..அதுக்குள்ள இப்படி" என்று மேலும் ஏதோ கூற வர .."போதும்டா! ஷட்டப் பண்ணிக்கோ" என்று அவனுக்கு ரொம்ப பிடித்த ஓவியாவை போல் சொல்லி " அவன் மூட மாத்துடான்னு சொன்னா மொத்தமா கவுத்துருவ போல .." என்று அங்கலாய்த்தாள்.

"நீ மட்டும் இப்போ இல்லன்னா ‘மொத்தமா’ அவன் மூட மாத்திடுவேன். .. அப்புறம் கல்யாணம் வரைக்கும் வெய்ட் பண்ண மாட்டான் .. " என்று மறுபடியும் அவளை வம்பிழுக்க "ஓகே ..ஓகே மொத்தமா ஷட்டப் பண்ணிக்கோங்க " என்று வாய் மேல் கை வைத்து காட்டியவள் " ரஞ்சித் அத்தான் .. உங்காளு பயங்கர அழகோ ?" என்று ஆரம்பிக்க நினைத்தாற்போல் ஸ்விட்ச் போட்டது போல் அவன் முகம் மலர்ந்தது.

அவளது நினைவே உள்ளுக்குள் இனிக்க புளகாங்கிதம் அடைந்தவனாய் "ஷி இஸ் அன் ஏஞ்சல் உமை! " என்றதும் காரை ஓட்டியபடி பக்கென்று சிரித்தான் ப்ரித்வி "றெக்கையெல்லாம் இருக்குமான்னு கேளு உமை ."
பட்டென்று அவன் முதுகில் இரண்டு அடி விழ.. ரஞ்சித் உமை இருவருமே அவனை அடித்திருந்தனர்.

"அடப்பாவிகளா ஒரு சின்ன பையனை இப்படி போட்டு அடிக்கிறீங்களே "என்று பொய்யாய் சலித்துக் கொள்ள "அவங்க உனக்கு அண்ணிடா " என்றனர் இருவரும் கோரஸ் வாய்ஸில் ..

"அதுக்காகல்லாம் கலாய்க்காம இருக்க முடியாது பா என்னால "

"அவ முன்னாலயாவது கலாய்க்காம இருடா " என்றான் தன் தம்பியை அறிந்தவனாய்.

" டேய் இனிமே நீ வாயே தொறக்கக்கூடாது புரியுதா ?" என்று ப்ரித்வியை அரட்டிய உமை "நீங்க சொல்லுங்க அத்தான் ..உங்க லவ் ஸ்டோரியை! நான் பைனல் இயர் வந்ததிலிருந்து அடிக்கடி ஊருக்கு வர முடியலை ..அதுக்குள்ள பெரிய காதல் கதையே நடந்து நிச்சயம் வரை வந்திடுச்சு.சொல்லுங்க எங்க முதல் முதல்ல மீட் பண்ணீங்க ?” உமையின் கேள்வி ரஞ்சித்தை கடந்த காலத்துக்கு கொண்டு செல்ல ..சற்று நேரம் காருக்குள் அமைதி நிலவ மனமோ ஒரு இனிய இன்பத்தில் ஆழ்ந்தது.


நகரின் புகழ்பெற்ற நகைக்கடை அது .
சத்யபாமா வாடிக்கையாக நகைகள் வாங்குவது இங்குதான். இப்போதும் ஒரு விழாவுக்காக வாங்க வந்திருந்தார்.

" அம்மா ..உங்ககிட்ட இருக்க நகையே எவ்வளவோ இருக்கு. இப்போ நாளைக்கு நடக்கபோறது ஒரு சின்ன விழாதான் ..இதுக்கும் புதுசா நகை வாங்கணுமா ? " என்று சலித்தபடியே வந்தான் ரஞ்சித்.

இதற்காக இன்று ப்ராஜக்ட் விஷயமாக அலைந்து கொண்டிருந்தவனை பிடித்து அழைத்து வந்திருந்தார் சத்யா.

"போட்ட நகையே திரும்ப திரும்ப போட்டா என் கௌரவம் என்ன ஆகறதுடா கண்ணா? அது மட்டுமில்லை.. இட்ஸ் எ குட் இன்வெஸ்ட்மென்ட் இல்லையா ?"

"இதை சொல்லியே எல்லா பொண்ணுங்களும் நகை வாங்குறீங்க. உங்க ஆசைக்கு வாங்குறீங்க ..அதை சொல்ல வேண்டியதுதானே."

"அதுக்காகவும்தான் ..அதில என்னடா தப்பு. காசே இல்லாதவங்க கூட ஒரு சின்ன குந்துமணி தங்கமாவது இருக்கணும்னு ஆசைப்படுவாங்க. அதில தப்பில்லையே !"

"நீங்க சொன்னா மறுக்க முடியுமா? அதுக்காக படிச்சிட்டிருந்த பிள்ளையை இழுத்துட்டு வந்திருக்கீங்க பாருங்க அதுதான் தப்பு"

" எல்லா ட்ரைவரையும் நாளைக்கு ஃபங்க்ஷன் வேலைக்கு அப்பா அனுப்பிட்டார். அதுதான் உன்னை கூப்பிட்டேன் கண்ணா. ஒரு ஒரு மணிநேரம் அம்மாவுக்காக ஸ்பேர் பண்ண முடியாதா? "
தாய் கெஞ்சலாய் கேட்டதும் அவனுக்கு மனம் உருகிவிட்டது.

"உங்களுக்காக எவ்வளவு நேரம் வேண்ணாலும் ஒதுக்குவேன் மா . ஏன் இப்படியெல்லாம் கேக்குறீங்க? " என்று தாயை சமாதானப்படுத்தியவன் .."சரி நீங்க பாருங்க " என்றுவிட்டு ஒரு இருக்கையில் அமர்ந்து மொபைலை நோண்ட தொடங்கினான்.

அந்த அமைதியான கடையில் திடீரென யாரோ சிரிக்கும் சப்தம் கேட்க .. மொபைலில் இருந்து தலை நிமிர்த்தி பார்க்க .. இவனுக்கு முதுகு காட்டி இரு பெண்கள் அமர்ந்திருந்தனர்.

இருவரும் அடிக்கடி வரும் பழக்கமா அல்லது எல்லாரிடமும் இப்படிதானா என்று தெரியவில்லை.. கடையின் ஊழியன் அவர்களை விழுந்து விழுந்து கவனித்துக் கொண்டிருந்தான்.

"மேம் ..இதை ட்ரை பண்ணுங்க.. இது உங்களுக்கு நல்லா இருக்கும் " என்று வகை வகையாக எடுத்து காண்பிக்க.. அவர்களும் சலிக்காமல் அணிந்து பார்த்து குதூகலித்து சிரித்துக் கொண்டிருந்தனர்.

அதிலும் குறிப்பாக ஒரு பெண்ணின் குரல் அமுதமாய் இவன் காதில் பாய்ந்தது. அவ்வளவு இனிமையான குரலை அவன் இதுவரை கேட்டதில்லை. தேனில் தோய்த்த இனிமையோடு மென்மையும் கலந்து அப்பெண் பேசுவது கேட்கையில் தாலாட்டு கேட்பதுபோல் இதமாக இருக்க .. அவள் முகத்தை பார்க்க முயன்றாலோ முடியவில்லை.

ஒவ்வொரு கழுத்தணியையும் அவள் அணிந்து பார்க்கையில் அவள் கூந்தலை ஒதுக்கும் போதெல்லாம் அவள் பின்கழுத்தில் இருந்த பிறைவடிவ மச்சம் ஒன்று எட்டி பார்க்க ..இவன் விழிகளோ அதையே மொய்த்தது.
அவர்களையே நோட்டம் விட்டுக் கொண்டிருந்தவன் அவர்கள் பில் போட்டு கிளம்ப .. திடீரென்றோரு உத்வேகம் பொங்க .. மொபைலில் பேசுவது போலவே பின்னால் சென்றான்.

'என்னடா இது ஒரு பெண்ணை தொடர்ந்து போகிறாய் ..இது நல்லாவே இல்லை' என்று குரல் கொடுத்த மனசாட்சியை அடக்கியபடி இவன் செல்ல.. அவர்களோ வேகமாக படிகளில் இறங்கி சாலை அருகே சென்றுவிட்டனர்.

அந்நேரம் ஒரு சிறுவன் வந்து ஒரு முழம் பூவை நீட்டி "அக்கா அக்கா கொஞ்சம் வாங்கிக்கோங்கக்கா . கடைசி முழம்கா . வாங்கிக்கிட்டா நான் வீட்டுக்கு போய்டுவேன்கா " என்று கெஞ்ச .."சரி கொடு" என்றபடி ஒரு ஐம்பது ரூபாயை நீட்டினாள் அவள்.

அவளது தோழியோ .."ஏய் எதுக்குடி இப்போ இதை வாங்குற ..இவன் இதே பொய்யை சொல்லி தான் எல்லா பூவையும் விற்பான் . நீ ஏமாறப்போறியா?" என்றாள்.

" உள்ளே இருந்த நகைக்கடை ஊழியன் கூட இப்படி தான் சொன்னான். இது உங்களுக்கு நல்லா இருக்கும்..இதைப்போட்டா உங்கள தான் எல்லாரும் பாப்பாங்க .அப்படி இப்படின்னு ..அதை என்ன சொல்வீங்க? வியாபார தந்திரம்னு சொல்வீங்க. அதையேதான் இந்த பையனும் செய்யறான். இவன் ஏமாத்தறதாவே இருக்கட்டும் ..அதை இந்த வயசில செய்ய அவனுக்கு வயிற்றுப்பாடு ஒன்னு தானே காரணம். பரவாயில்லை.. என்னை ஏமாத்தின சந்தோஷத்தோட அவன் இருக்கட்டும். ஒரு சின்ன பையனுக்கு ஒரு வேளை சாப்பாடு என்னாலே கெடைச்சிதுன்னு நான் சந்தோஷப்பட்டுகறேன். இதில ஆராய்ச்சி பண்ணி எதுக்கு மனச குழப்பிக்கணும். அடுத்து அதோ அந்த ஹோட்டல்ல போய் சாப்பிட போறோம் ..அங்க டிப்ஸ் இதுக்கு மேல வைப்போம் ..ஆனா இந்த ஐம்பதுக்கு எதுக்கு கணக்கு பாக்கணும்.விடு காயு " என்றவள் சாலையை கடந்து செல்ல.. அவளது இளகிய மனம் அவனுக்குள் ஒரு இதம் பரப்ப .. அவளது முகத்தை சரியாக பார்க்க முடியாத வருத்தத்தோடு கடைக்குள் திரும்பினான் ரஞ்சித்.


இதற்குள் சத்யபாமா நகை வாங்கி பணம் கொடுத்துக் கொண்டிருக்க .. அருகில் வந்த மகனை "எங்கே போயிட்ட கண்ணா ?" எனவும் "ஒண்ணுமில்லைமா . ஒரு கால் பேச வேண்டியிருந்தது’’ என்றபடி அவர் கையில் இருந்த நகை பெட்டியை வாங்கி கொண்டவன் காரை நோக்கி நடக்க ..மனமோ அக்காரிகையையே பின் தொடர்ந்துசென்றது.

எப்படியாவது அவள் முகம் பார்த்துவிட மாட்டோமா என்று மனம் தவிக்க .. காரில் ஏறியவன் அருகில் அமர்ந்த அன்னையை பார்த்து " அம்மா .. உங்களுக்கு பசிக்குமே! அங்க ஏதாவது சாப்பிடுவோமா?" என்று எதிரே இருந்த உணவகத்தை காட்டி கேட்க ..

மகனின் உள்குத்து அறியாதவராய்.. "எனக்கு பசிக்கலை ரஞ்சி கண்ணா.. ஏழு மணி தானே ஆகுது. வீட்டிலேயே போய் சாப்பிட்டிடலாம் " எனவும் " இல்லைம்மா ஒரு ஜூஸாவது குடிங்க .. தாகமா இல்லையா உங்களுக்கு? "

" என்னவோ படிப்பு விஷயமா நெறைய வேலை இருக்கு. என்னை கூட்டிட்டு வந்திட்டீங்களேன்னு புலம்பினாய் . இப்போ என்ன ஆச்சு? " என்று அன்னை ஆராய்ச்சியாய் நோக்க.. "அதெல்லாம் ஒண்ணுமில்லைமா . உங்களுக்கு டயர்டாக இருக்குமேன்னுதான் " என்று அசடு வழிந்தபடி காரை கிளப்பினான் ரஞ்சித்.

அதன் பின்னர் வெகு நாட்கள் கழித்து தான் அவன் அவளை மறுமுறை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.



 
ப்ரித்வி கல்யாணமே வேண்டாம் என்று கெத்தா சுத்திக்கிட்டு இருக்கான் 😆😝😝😝 எத்தனை நாளோ 🧐🧐🧐🧐

உமை ரொம்ப பக்குவமான பொண்ணா இருக்கா 🥰🥰🥰🥰

ரஞ்சித் இப்போ தான் ஆரம்பம் ஆகி இருக்கு 😋😋😋 இதுக்கே சோர்ந்து போனால் எப்படி 🤩🤩🤩🤩 இன்னும் கல்யாணத்துக்கு பிறகு தான் மெயின் பிச்சரே இருக்கு 🤣🤗🤣🤣🤣


ரஞ்சித் எவ்வளவு முயற்சி செஞ்சும் முகத்தை பார்க்க முடியலையே 🤓🤓🤓 அந்த மச்சத்தை வச்சு தான் கண்டு பிடிக்கணும் போல 🤔🤔🤔🤔
 
அடேயப்பா அம்மா மேல இன்னா பாசம் பிள்ளைக்கு. இந்த அம்மாவும்தான் ஒரு ஜூஸ குடிச்சிட்டு போனாதான் என்ன 🤷‍♀️
சரி பிள்ளை நம்ம கேட்கிறான் பதிலுக்கு நாமும் கேட்போமே தோனாதா. அவனுக்கு தாகமாக இருக்கும்னு யோசித்து இருக்கலாம் 🤔🤔🤔🤔
 
Top