Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஒற்றை கால் மண்டபம் EPISODE 18

Advertisement

niranjana subramani

Well-known member
Member
18.



பிரசவத்திற்கு அம்மா வீட்டிற்கு போகமாட்டேன் என்று யோகாம்பிகை பிடிவாதம் பிடிக்க. அதற்கு அனைவரும் ஒத்துக்கொண்டனர். நாட்கள் செல்ல ஒன்பதாவது மாதத்தின் தொடக்கத்தில் இருந்தாள் யோகாம்பிகை. அதனால் வளைகாப்பை விமர்சையாக செய்ய முடிவு செய்து அதற்கான வேலைகளில் மொத்த குடும்பமும் ஈடுபட்டிருந்தது.

வளைகாப்பிற்கு முதல் நாள் நள்ளிரவு உறங்கிக்கொண்டிருந்த யோகாம்பிகை திடீரென “ அம்மா” என கத்த.

அவளின் சத்தத்தில் அருகில் உறங்கிக்கொண்டிருந்த ஆதிலிங்க மூர்த்தியும் நிலவரசனும் எழுந்தனர்.
மீண்டும் யோகாம்பிகை “ அம்மா” என கத்த,

அந்த சத்தத்தில் நிலவரசன் அழ ஆரம்பித்தான். ஆதிலிங்க மூர்த்தி வேகமாக லைட்டை போட்டு யோகாம்பிகையின் அருகில் செல்ல அங்கு படுக்கை முழுவதும் நீர் நிறைந்திருக்க நடுவில் தன் வயிற்றை பிடித்தபடி அழுது கொண்டு இருந்தாள் யோகாம்பிகை.

“ யோகா…. யோகா. என்னமா ஆச்சு” என அவளின் நிலை கண்டு ஒன்னும் புரியாது ஆதிலிங்க மூர்த்தி பதட்டமாக வினவ,

“ மாமா…. மாமா… எனக்கு…. எனக்கு… பனி குடம் உடைஞ்சுருச்சு. அத்தை கூப்பிடுறீங்களா” என தேம்பிக்கொண்டே கூற,

இதோ என விரைந்து வடிவழகியை அழைத்துக்கொண்டு வந்தான் ஆதிலிங்க மூர்த்தி.
யோகாம்பிகையை அந்நிலையில் கண்ட வடிவழகியும் பதட்டமானார். பின் விரைவாக பக்கத்தூரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடிவெடுத்து தங்கள் அம்பாசிடர் காரில் கிளம்பினர்.

காரை மாடசாமி ஓட்ட முன்னிருக்கையில் அழுதுகொண்டிருந்த நிலவரசனை வைத்துக்கொண்டு குலசேகரன் அமர்ந்திருந்தார். பின் இருக்கையில் ஆதிலிங்க மூர்த்தி வடிவழகி இருவருக்கும் இடையில் யோகாம்பிகை அமர்ந்திருந்தாள்.

“ யோகம் வலி எதுவும் இல்லையாம்மா????” என வடிவழகி வினவ

“ இல்ல அத்தை வலி எல்லாம் இல்ல. ஆனா குழந்தை பிறக்கபோறமாதிரி தோணுது” என தேம்பிக்கொண்டே கூற

“ அச்சச்சோ ஆதி குழந்தை பிறக்க போகுது போல. நாம இப்போ ஆஸ்பத்திரிக்கு போறது கஷ்டம். அதனால” என வடிவழகி வெளியே பார்த்துக்கொண்டே வேகமாக கூறிக்கொண்டிருந்தவர் கண்ணில் ஒற்றை கால் மண்டபம் தென்பட,

“ ஹான்…. இதோ இந்த ஒத்த காலு மண்டபத்துல நாம இறங்கிப்போம். நீ போய் மருத்துவச்சி பக்கத்துல இருப்பா கூட்டிடுவா”
என கூற,

உடனடியாக வண்டியை நிறுத்திவிட்டு யோகாம்பிகையை கைத்தாங்களா அழைத்து வந்து ஒற்றை கால் மண்டபத்தில் விட்டுவிட்டு மருத்துவச்சியை அழைத்துவர ஆதிலிங்க மூர்த்தி எத்தனிக்கையில்,

“ மாமா என் கூடவே இருங்க. எனக்கு பயமா இருக்கு” என தேம்பிக்கொண்டே யோகாம்பிகை கூற, ஆதிலிங்க மூர்த்தி மறுத்து எதோ கூற வரையில்

“ ஆமா ஆதி நீ இங்க இரு. மாடசாமி நீ போய் மருத்துவச்சி செல்வியை சீக்கிரம் கூட்டிட்டுவா” என குலசேகரன் கூற

அதன்படி செல்வியை அழைக்க மாடசாமி சென்ற பின்,

“ மாமா எனக்கு ஒன்னு ஆகதுல???” என கண்ணில் பயத்துடன் யோகாம்பிகை கேட்க

“ உனக்கு ஒன்னும் ஆகாதுடா. நீ…. நீ…. பயப்புடாத”

“ மாமா நான் சின்ன வயசுல இருந்தே நினைச்ச, ஆசைப்பட்ட எல்லா விஷயங்களும் கிடைச்சுட்டுச்சு. நான் எதுலயும் தோத்துப்போறது எனக்கு பிடிக்காது. நான் உங்களை விரும்புனேன் நீங்க எனக்கு கிடைக்க என்னோட அக்காவையே ஒதுக்கிவச்சேன்.

இப்படி நான் ஆசை பட்ட எல்லா நடக்கும் போது குழந்தை இல்லன்றது எனக்கு இத்தனை வருசமா மன அழுத்தத்தை குடுத்துச்சு.
ஆனா இப்போ நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன் மாமா நான் எதுலயும் தோக்கல” என கூறிக்கொண்டிருக்கையில் மருத்துவச்சி வருவதற்கும் பிரசவ வலி வருவதற்கும் சரியாக இருந்தது.

வாழ்க்கையில் எதற்கும் தோற்பது பிடிக்காது என கூறிய யோகாம்பிகை காலத்திடம் தோற்றிருந்தாள். ஆம் பிரசவத்தில் இரு பெண் குழந்தைகளை பெற்றேடுத்துவிட்டு இறந்துவிட்டாள்.

ஒரு மாதத்திற்கு முன்பாகவே குழந்தைகள் பிறந்திருந்ததால் குழந்தைகள் இருவருக்கும் மூச்சு திணறல் ஏற்பட அதனை அனைவரிடமும் கூறி உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல சொன்னாள் மருத்துவச்சி செல்வி.

“ ஆதி குழந்தைகளை ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகணும்” என சில நிமிடங்கள் முன் வரை தன்னுடன் பேசிக்கொண்டிருந்த யோகாம்பிகையின் உயிரற்ற உடலை வெறித்துக்கொண்டு அமர்ந்து இருந்த ஆதிலிங்க மூர்த்தியிடம் வடிவழகி அழுதுகொண்டே கூற

“ எங்கவேணும்ன்னாலும் கூட்டிட்டுப்போங்க. ஆனா எனக்கு இந்த குழந்தைகள் வேணாம்.
இந்த குழந்தைகளால் தான் என் யோகா என்னையவிட்டு போயிட்டா அம்மா” என அழுகையுடன் கோவமாக அதிலிங்க மூர்த்தி கூற

“ என்னடா உளறுற???” என வடிவழகியும் கோவமாக கத்த

“ என்ன உளறுறேனா!!!! இந்த பிள்ளைங்க என் யோகா குழந்தை வேணும்ம்ன்னு அழுதுகிட்டே இருந்தாலே அப்பவே வந்துருந்தா
அவளோட உடல்நிலை கெட்டுருக்காது. இல்ல பிறக்காமலே இருந்துருந்தா நாங்க எங்க பையன் நிலவரசனோட சந்தோசமா இருந்திருப்போம். ஆனா இப்போ….”

“ டேய் நீ பைத்தியக்காரன் மாதிரி பேசாதே” என வடிவழகி கூறிக்கொண்டிருக்கையில்

“ வடிவு நிறுத்து. இப்போ நீங்க வாக்குவாதம் பண்ற நேரம் இல்ல. ரெண்டு உசுரு போராடிட்டு இருக்கு. ஆதி வரலைன்னா பரவால்ல விடு” என குலசேகரன் வடிவழகியிடம் கூறிவிட்டு ஆதிலிங்க மூர்த்தியை ஒரு பார்வை பார்த்துவிட்டு

“ மாடசாமி” என உரக்க அழைத்தார்

“ ஐயா”

“ நீ போய் சதாசிவத்துக்கிட்ட இங்க நடந்ததைச்சொல்லி மேற்கொண்டு இங்க நடக்கவேண்டியதை பார்க்கசொல்ல்லு” என கட்டளையாக கூறிவிட்டு,

“ வடிவு நீயும் செல்வியும் ஆளுக்கொரு குழந்தைய வச்சுக்கோங்க. நான் காரை ஓட்டுறேன்” என கூறி குலசேகரன் காரில் ஓட்டுநர் இருக்கையில் ஏறி அமர்ந்தார்.

அவரை தொடர்ந்து வடிவழகியும் செல்வியும் ஆளுக்கொரு குழந்தையை தூக்கி கொண்டு காரில் ஏறி மருத்துவமனைக்கு சென்றனர்.

குழந்தைகளை மருத்துவமனையில் சேர்த்து ஒருவாரம் கடந்த நிலையில்,

“ வடிவு பெரிய டாக்டர் இன்னைக்கு பிள்ளைகளை கூட்டிட்டு வீட்டுக்கு போகலாம்னு சொல்லிட்டாரு. நீ போயி எல்லாத்தையும் எடுத்துவை. நான் போய் வண்டிய எடுத்துட்டு வர சொல்றேன்”
என குலசேகரன் கூற

அதனை கவனிக்காது வடிவழகி எங்கோ வெறித்துகொண்டு சிந்த்தனையில் இருந்தார். தான் கூறியதை கவனிக்காது சிந்தனையில் இருந்த வடிவழகியிடம்,

“ என்ன வடிவு நான்பாட்டுக்கு பேசிகிட்டு இருக்கேன். நீ எதோ சிந்தனையில் இருக்குறாப்புல இருக்கு” என வடிவழகியின் தோளில் லேசாக தட்டி குலசேகரன் வினவ,

“ ஹான்……. என்னங்க….. சொன்னிங்க….????”

“ சரியா போச்சு!!!... டாக்டர் பிள்ளைகளை கூட்டிட்டு வீட்டுக்கு போலாம்ன்னு சொல்லிட்டாரு. இப்போ நீ என்ன யோசிச்சுகிட்டு இருக்க???”

“ இல்லங்க வீட்டுக்கு போனவுடன் ஆதி என்ன சொல்லப்போறான்னு ஒரே யோசனையா இருக்கு”

“ எதுக்கு????”

“ இல்ல நாம குழந்தைகளை இங்க விட்டுட்டு யோகத்தோத்தோட ஈம காரிகத்துக்கு போனப்ப, ஆதி ஒன்னும் பேசல. நேத்து சதாசிவம் வந்தப்பவும் சொன்னான். இந்த ஒரு வாரமா யாரோடையும் பேசாம அவன் எதோ யோசனையில சுத்துறான்.

பத்தாததுக்கு சொர்ணம் வேற வந்து என் தங்கச்சிய நீதான் கொன்னுட்ட அப்படின்னு சொல்லி பிரச்சனை பண்ணிட்டு போயிருக்கா. அப்பவும் எதுவும் பேசாம எனக்கென்னன்னு போய்ட்டானாம்”
என கலங்கிய விழிகளுடன் வடிவழகி கூற

“ இங்க பாரு வடிவு ஆணா இருந்தாலும் சரி பெண்ணா இருந்தாலும் சரி வாழ்க்கை துணையை இழக்குறது தன்னோட வாழ்க்கையையே இழக்குறதுக்கு சமம்.

அந்த பெரிய இழப்புல இருந்து மீண்டு வருவது ரொம்ப கஷ்டம்.அவனுக்கு கொஞ்ச காலம் ஆகும் வடிவு. எதார்த்தத்தை புரிஞ்சுகிட்டு பிள்ளைகளை கொஞ்சுறதுக்கு.

அதனால நீ ரொம்ப கவலை பட்டு உன் உடம்ப கெடுத்துக்காத. இப்போதான் நமக்கு பொறுப்பும் கடமையும் அதிகம் இருக்கு .ஆமா கேட்கணும்ன்னு நினைச்சே அரசன் இன்னும் சதாசிவம் வீட்டுலதான் இருக்கானா????”

“ ஆமாங்க அங்க தான் இருக்கான் சதாசிவம் பிள்ளைகள் சரத்தும் மஞ்சரியும் இருக்குறதால அவுகளோட விளையாடிகிட்டு கொஞ்சம் பரவா இல்லையாம். நாம போறப்போ அவனையும் கூட்டிகிட்டு போகணும்ங்க வீட்டுக்கு.”

“ சரி வடிவு. நீ போய் எல்லாத்தையும் எடுத்து………” என குலசேகரன் வடிவழகியிடம் பேசிக்கொண்டிருக்கையில்

“ ஐயா!!!!....” என ஒருவர் குலசேகரனை அழைக்க

அந்த சத்தத்தில் வடிவழகியும் குலசேகரனும் திரும்பி பார்த்தனர்.

அங்கு முப்பது வயது இறுதியில் உள்ள ஒரு ஆணும் முப்பது வயது தொடக்கத்தில் உள்ள ஒரு பெண்ணும் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் யாரென குலசேகரன் புருவம் சுருக்கி கூர்ந்து கவனிக்க,

“ ஐயா நீங்க ஆதிலிங்க மூர்த்தியின் அப்பாத்தானுங்களே???” என அந்த ஆண் வினவ

“ ஆமா நீங்க யாரு தம்பி???.
எங்கையோ உங்கள பார்த்த மாதிரி இருக்கு. ஆனா சட்டுன்னு நினைவுக்கு வரமாட்டேங்குது” என குலசேகரன் யோசனையுடன் வினவினார்

“ ஐயா நான் தான் வீரேந்திரன். ஆதிலிங்கமூர்த்தியோட நண்பன். நாம பார்த்து ஒரு ஏழு வருஷம் இருக்கும். அதான் உங்களுக்கு மறந்திருக்கும்” என வீரேந்திரன் கூற

“ அடடே வீரா !! நீயாப்பா?? ஆளே அடையாளம் தெரியலை. சரி நல்லா இருக்கியா?? வீட்டில எல்லாரும் சௌக்கியமா ????” என குலசேகரன் நலம் விசாரிக்க

“ எல்லாரும் நலம்ங்கய்யா. இதோ இவ தான் என் மனைவி கலாவதி” என தன்னருகில் இருந்த பெண்ணை அறிமுகப்படுத்தினான் வீரேந்திரன்.

“ அப்படியா ரொம்ப சந்தோசம்ப்பா. வடிவு இது யாருன்னு தெரியுதா நம்ம சதாசிவம் மனைவி ஜெகதீஸ்வரி இருக்குல்ல. அந்த பெண்ணோட தங்கச்சி. இதோ இவன்தான் வீரேந்திரன். ஆதியோட நண்பன். இந்த திருச்செந்துரில கூட……..” என குலசேகரன் கூறிக்கொண்டிருக்கையில்

“ போதும்ங்க நான் யாருன்னு தெரிஞ்சுகிட்டேன்” என வடிவழகி குலசேகரனிடம் கூறிவிட்டு,

“ தம்பி நீ எப்படிப்பா இருக்க????. உன்னைப்பத்தி ஆதி அடிகடி பேசுவான். அப்புறம் கலா, ஜெகதீஸ்வரி எப்போ பார்த்தாலும் உன் புகழ்தான் பாடுவா”
என சிறு புன்னகையுடன் வடிவழகி கூறினார்.

“ நாங்க நல்லா இருக்கோம்மா. இப்போதான் அரங்கநாதபுரத்துல போய் ஆதியை பார்த்துட்டுவரோம். மனசுக்கு ரெம்ப கஷ்டமா இருக்குமா.

ம்ப்ச் அதியோட நல்ல மனசுக்கு ஆண்டவன் இப்படி அவனை கஷ்டப்படுத்த கூடாது. நான் பேச முயற்சி பண்ணப்பகூட ஒரு வார்த்தை பேசலை. என்னைய ஒரு பார்வை பார்த்துட்டு ஒரு தலை அசைபோடு அவன் அறைக்குள் போய்ட்டான்” என வீரேந்திரன் வருத்தத்துடன் கூற

“ என்னத்த செய்ய நாங்க வாங்கிட்டு வந்த வரம் அப்படி” என வடிவழகி பெருமூச்செறிந்தார்.

“ சதாசிவம் தான் நீங்க இங்க இருக்கறதையும், ரெண்டு குழந்தைகளையும் பத்தி சொன்னான்” என வீரேந்திரன் கூற,

“ சதவா!!!!. அவன் மட்டும் இல்லைன்னா இந்த நிலையில ரொம்ப கஷ்டப்பட்டிருப்போம். அவன்தான் எங்களுக்கு இன்னொரு மகன் மாதிரி இருந்து எல்லாத்தையும் செய்றான். அவனுக்கு நாங்க ரொம்ப கடமை பட்டிருக்கோம்” என குலசேகரன் கூறினார்.

சிறு அமைதிக்கு பின்னர்,

“ அப்புறம் ஐயா நாங்க உங்ககிட்ட ஒரு உதவி கேட்டு வந்துருக்கோம். நீங்க….” என வீரேந்திரன் இழுக்க

“ என்னப்பா என்ன வேணும் தயங்காம சொல்லு. என்னால முடிஞ்சா நான் கண்டிப்பா செய்றேன்” என குலசேகரன் உறுதியாக கூற.

“ ஐயா அது…. வந்து…. அது….. ஆதியோட ரெண்டு குழந்தைகளில ஒரு குழந்தையை எங்களுக்கு தத்துக்குடுத்திடுறீங்களா?????” என தயங்கிக்கொண்டே வீரேந்திரன் கேட்க,

“ என்ன தம்பி என்ன பேசுறீங்க????” என வடிவழகி சற்று அதிர்ச்சியுடன் கோவமாக கேட்க,

குலசேகரன் முதலில் சற்று அதிர்ந்தவர், பின் சற்று தெளிந்து வேறொரு யோசனையில் இருக்க அவரிடம், “ பார்த்தீங்களாங்க நம்ப பேத்தியை தத்து கேட்குறாங்க. நீங்க எதுவும் பேசமா இருக்கீங்க???” என வடிவழகி அவரிடம் பொரிய,

“ நீ கொஞ்சம் அமைதியா இரு” என வடிவழகியிடம் கூறிவிட்டு வீரேந்திரனிடம் “ தம்பி நீங்க சொல்லுங்க” என கூர்பார்வையுடன் வினவினார்.

“ ஐயா எங்களுக்கு கல்யாணமாகி பத்து வருஷம் ஆகபோது எங்களுக்கு இன்னும் குழந்தை இல்ல. அதனால ஒரு குழந்தைய தத்து எடுத்துக்கலாம்ன்னு முடிவுபண்ணினோம்.
அதை பத்தி நேத்து சதாசிவத்துக்கிட்ட பேசும்போதுதான், ஜெகா அண்ணி ஆதியோட குழந்தைல ஒரு குழந்தையை தத்து எடுத்துக்கிட்டா என்னன்னு கேட்ட்டாங்க.

எனக்கும் அவுங்க சொல்றது சரியா பட்டுச்சு. யாரோட குழந்தையவோ தத்து எடுத்து வளர்க்குறதுக்கு என் நண்பனோட குழந்தைய வளர்க்கலாம்ன்னு முடிவு பண்ணிதான் உங்ககிட்ட பேசவந்தோம்” என வீரேந்திரன் கூறி முடித்தான்.

சிறுது நேரம் யோசிச்ச குலசேகரன்,

“ சரிப்பா நீ ரெண்டு குழந்தைகளில ஒருத்தரை தத்து எடுத்துக்கோ” என கூற

“ என்னங்க!!!!... என்ன பேசிகிட்டு இருக்கீங்க?????” என ஆதங்கமாக வடிவழகி குலசேகரனிடம் கேட்க

“ நீ ஒரு நிமிஷம் சும்மா இரு வடிவு” என வடிவழகியிடம் கூறிவிட்டு

“ நீங்க தத்து எடுக்குறதுக்கான எல்லா வேலையையும் பாருங்க. நான் இங்க என் மனைவிக்கிட்டையும் ஆதிகிட்டையும் பேசிக்கிறேன்” எனகூறி குலசேகரன் வீரேந்திரன் மற்றும் கலாவதியிடம் கூற

“ ரொம்ப நன்றிங்கய்யா” என மகிழ்ச்சியுடன் விடைபெற்றனர் வீரேந்திரன் தம்பதியினர்.

“ என்னங்க நீங்க??? யாரை கேட்டு தத்து குடுக்குறேன்னு சொன்னிங்க????” என வடிவழகி குலசேகரனிடம் கோவமாக வினவ

“ இங்க பாரு வடிவு நான் சொல்றத முழுசா கேட்டுட்டு அப்புறம் நீ கோவப்படு. நம்ம ரெண்டுபேருக்கும் வயசாகிடுச்சு ரெண்டு பிள்ளைகளையும் நம்மளால ஓரளவுக்குத்தான் வளர்க்க முடியும். நம்ம காலத்துக்கு பிறகு பிள்ளைங்க ரொம்ப கஷ்டப்பட்டுருவாங்க”.

“ ஏன் நம்ம காலத்துக்கு பிறகு ஆதி, அரசன் எல்லாரும் இருக்காங்கள்ல”

“ வடிவு ஆதி இப்போவே குழந்தைகளை வேணாம்ன்னு சொல்லிட்டு இருக்கான். அவன் எப்போ மனசு மாறி பிள்ளைகளை ஏத்துக்கிட்டு நல்லா படியா வளர்க்குறது.

நிலவரசன், அவனும் சின்ன பிள்ளைதான். அதோட ஆதி மனசு கொஞ்சம் மாறினாலும் நிச்சயம் இன்னொரு கல்யாணம் பண்ண மாட்டான். அப்படி இருக்குறப்போ ரெண்டு குழந்தைகளும் தாய் இல்லாம கஸ்டப்படுறதுக்கு, ஒரு பிள்ளையாவது நல்லா குடும்ப சூழல்ல வளரட்டும். அதோட இன்னொரு பிள்ளையை நம்மாலால முடிஞ்சா அளவுக்கு நல்லா வளர்போம் .

அது மட்டும் இல்ல பிள்ளையை நாம தத்து கொடுக்குறது ஆதியோட நண்பனுக்குத்தான். அதனால நாம எப்பொவேணும்னாலும் போய் பார்த்துக்கலாம்” என குலசேகரன் தன் எண்ணத்தை கூறி முடிக்க,

வடிவழகி எதுவும் பேசாது அமைதியாக எதோ சிந்தனையில் இருந்தார்.

“ என்ன வடிவு எதுவும் சொல்ல மாட்டேங்குற???.”

“ இல்லங்க நீங்க சொல்றது எல்லாம் சரிதான். ஆனால் மூணு தலைமுறைகளுக்கு அப்புறம் நம்ம வீட்டுல பெண் குழந்தை, அதுவும் ரெட்டையா வந்து பிறந்துருக்கு. நீங்க தத்துக்குடுன்னு சொல்றது மனசை என்னமோ பண்ணுதுங்க”

“ இங்க பாரு நீ சொல்றமாதிரி மூணு தலைமுறைக்கு அப்புறம் வந்த பொக்கிஷத்தை நாம நம்ம பாசம்ன்ற சுயநலத்தால கஷ்டப்படுத்தக்கூடாது. எங்க வளந்தாலும் நம்ம பிள்ளைங்கதான் இந்த குலசேகரனோட வம்சம்தான்” என குலசேகரன் பேசி பேசி சம்மதிக்க வைத்தார்.

ஆனால் ஆதியிடம் விஷயத்தை குலசசேகரன் கூற எந்த மறுப்பும் கூறாது ஒரே தலை அசைப்புடன் ஏற்றுக்கொண்டுவிட்டான்.

அதன்பின் நாட்கள் விரைந்து செல்ல சட்டப்படி வீரேந்திரன் கலாவதி தம்பதியினர் ஒரு குழந்தையை தத்தெடுத்து விசித்திரா என பெயர் சூட்டி, தான் தொழில் செய்து வசித்து வரும் பெங்களுருக்கு அழைத்து சென்றுவிட்டனர்.

இன்னொரு குழந்தைக்கு தங்கள் குலதெய்வமான வண்ணியடியாளின் நினைவாக வனிதா என பெயர் வைத்தனர். அதன் பின் நிலவரசன் ‘ எங்கே தன் இன்னொரு தங்கச்சி பாப்பா’ என கேட்க

‘ அவள் ஊருக்கு போயிருக்கா சீக்கிரம் வந்துடுவா, என கூறி சமாளிக்க நாளடைவில் அந்த இன்னொரு தங்கையை மறந்துவிட்டான்.

ஆதிலிங்க மூர்த்தி யோகாம்பிகை இறந்து விசித்ராவை தத்து கொடுத்த சில மாதங்களிலையே சற்று தெளிந்தார். ஆனால் குழந்தைகளை பற்றி தான் அன்று பேசியது அதிகப்படி என்ற குற்ற உணர்ச்சியில் வனிதாவிடம் இருந்து ஒதுங்கினார் விசித்திராவை ஒதுக்கினார்.

யோகாம்பிகையின் இறப்பு இவருக்கு எல்லோரிடமும் கொண்டிருந்த நெருக்கத்தை குறைத்து ஒரு இடைவெளியை கொண்டுவந்தது.
அளவோடு பேச்சுதான். நிலவரசனிடம் கூட சற்று விலகினார்.

அதற்கு காரணம் திடீரென ஏற்பட்ட யோகாம்பிகையின் இறப்பு அவரை ஒட்டுமொத்த வாழ்க்கையையும் சூனியமாக்க அதனால் விரக்தி, ஏமாற்றம், கோவம், அழுகை என தன் உணர்ச்சிகளால் தன்னை சார்ந்தவர்களை காயபடித்திவிடுவோமோ என்றுதான்.

இவ்வாறாக நாட்கள் வருடங்களாக கடக்க, ஐந்து வருடங்கள் சென்றது. காலங்கள் கடந்தாலும் ஆதிலிங்க மூர்த்தியின் வீட்டில் எந்தவ்வொரு நிலையும் கடக்கவில்லை. ஆதிலிங்க மூர்த்தியின் அதே ஓட்டுதல் இல்லா தன்மைதான்.

ஆனால் வனிதாவுக்கு நிலவரசன்தான் அம்மா அப்பா என எல்லாமும் ஆகிப்போனான். அதில் குலசேகரன் வடிவழகிக்கு சற்று நிம்மதி. தங்கள் காலத்துக்கு பிறகு வனிதாவை நிலவரசன் நன்றாக பார்த்துகொள்ளவான் என்று.

அன்று ஆதிலிங்க மூர்த்தி அரங்கநாதபுரத்தில் மருத்துவமனை கட்டுவது தொடர்பாக கலெக்டரிடம் நேரடியாக பேச சென்று இருக்க. நிலவரசனும் வனிதாவும் தோட்டத்தில் விளையாடி கொண்டு இருந்தனர். குலசேகரன் வயலுக்கு செல்ல தயாராகிக்கொண்டிருந்தார்.

“ என்னங்க வனிதாவை இங்க இருக்குற பள்ளிக்கூடத்துல சேர்க்க, அந்த தலைமை வாத்தியார் குமரேசன் கிட்ட சொல்லிட்டிங்களா” என கேட்டுக்கொண்டு சத்துமாவு கஞ்சியை குலசேகரிடம் நீட்ட

“ ஹ்ம்ம் சொல்லிட்டேன் வடிவு” என கூற அப்போது சரியாக வாசலில்

“ ஐயா” என பெண்ணின் குரல் கேட்டது.

உடனே வாசலை பார்த்த குலசேகரன் மற்றும் வடிவழகியும் அங்கு மாநிறத்துக்கு சற்று கூடுதலான நிறத்தில் சராசரி உயரத்தை விட குறைவாக தூக்கிப்போட்ட கொண்டையுடனும் நலுங்கிய சேலையுடனும் ஒரு இருபத்தி ஐந்து வயது மதிப்பிலான ஒரு பெண்ணும் .

அந்த பெண்ணுடன் கோலிக்குண்டு கண்ணும் சற்றே உப்பிய இருகன்னங்களும் நெற்றியில் கருப்பு பொட்டும் திருஷ்டிக்கு அந்த கன்னங்களில் கருப்பு பொட்டும், இரட்டை ஜடை போட்டு பாவாடை சட்டையில் அந்த பெரிய பெண்ணின் ஜாடையில் ஐந்து வயதுள்ள குட்டி பெண்ணும் நிற்க,

அவர்களை யாரென பார்த்துக்கொண்டிருக்கையில் உள்ளே வந்த மாடசாமி,

“ ஐயா இந்த பொண்ணு உங்கள பார்க்கணும்ன்னு சொல்லிவந்துச்சு”

“ அப்படியா சரி உள்ளாரா வரச்சொல்லு.” என கூறி அவனை அனுப்பிவிட்டு வடிவழகியிடம்,

“ வடிவு அவுங்களுக்கு குடிக்க எதாவது கொண்டா” எனகூறினார்.

பின் உள்ளே வந்த அந்த பெரியவள் ,

“ ஐயா வணக்கம்ங்க”

“ ஹ்ம்ம் இப்படி உட்காரும்மா. நீ யாரு எதுக்கு என்னைய தேடி வந்துருக்க”

“ ஐயா என்பேரு தில்லைநாயகி. இங்க உங்ககிட்ட வேலைக்கேட்டு வந்துருக்கேன்.”

“ வேலையா!!!!. நீ எந்த ஊரும்மா???. உனக்கு என்ன வேலை வேணும்????” என புரியாது குழப்பத்துடன் குலசேகரன் கேட்க

“ எனக்கு செல்லியனுர்ங்கையா. எங்க குடும்பம் பாரம்பரியமா சித்தமருத்துவம் பார்க்குறவங்க”

“ ஓ!!! அப்படியா. சரி உனக்கு இந்த மருத்துவம் பார்க்க தெரியுமா”

“ தெரியும்ங்கையா”

“ அப்போ சரிம்மா. இங்க ஊருக்கு செல்வின்னு ஒரே ஒரு மருத்துவச்சிதான். நீயும் இங்க இருந்து மருத்துவமே பாரு” என குலசேகரன் கூறிக்கொண்டிருக்கையில்,

பெரியவளுக்கும் அந்த சின்ன பெண்ணுக்கும் குடிக்க பால் கொண்டு வந்த வடிவழகியிடம்,

“ வடிவு இந்த பொண்ணு பெரு தில்லைநாயகி. மருத்துவம் தெரியுமாம். அதான் இங்கயே தங்கி செல்விக்கூட அவசரத்துக்கு மருத்துவம் பார்க்கட்டும்.

அப்படியே அந்த ஒத்த காலு மண்டபம் பக்கத்துல இருக்குற சந்து வீட்டு சாவிய குடுத்து அங்கையே தங்க சொல்லு.மீதத்தை நீயே பேசிக்கோ” என கண்களால் எதோ கூறிவிட்டு குலசேகரன் வெளியே சென்றுவிட்டார்.

பாலை குடித்துக்கொண்டிருந்த தில்லைநாயகியிடம் “ இந்த சின்ன பொண்ணு யாரும்மா???” என வடிவழகி தன் இரு கைகளாலும் பால் டம்ளரை பிடித்துக்கொண்டு தன் உடையில் பாலை சிந்தி சிந்தி குடித்து கொண்டிருந்த சின்ன பொண்ணை பார்த்துக்கொண்டே வினவ,

“ என்னோட பொண்ணும்மா. பெயர் மயிலரசி”
என தில்லைநாயகி மயிலரசியின் தலையை தடவிக்கொண்டே கூறினாள்.



இனி????????............................
 
Last edited:
Acho Mr.aathi what is this nonsense antha pinjugalukku ena pa therium
Aahaan nilavarasanoda mayilarasi vanthutaala
Intha epi layu villain name sollama escape ayiteenga writerஜி
 
Top