Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஒற்றை கால் மண்டபம் EPISODE 16

Advertisement

niranjana subramani

Well-known member
Member
16.





“ உங்க அப்பா அம்மாகிட்டயா????” என வடிவழகி அதிர்ந்து வினவ

“ ஆமா அம்மா. எங்க அப்பா எப்படியும் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டாங்க. நீங்களும் பெரிய ஐயாவும் கொஞ்சம் பேசுனா நல்லா இருக்கும்ன்னுதான், கல்யாணம் முடுஞ்சவுடனே இங்க வந்துட்டோம்” என சதாசிவம் கூறிக்கொண்டிருக்கையில்,

“ நீ எப்படி இந்த கல்யாணத்துக்கு ஒதுக்க்கிட்ட????” என குலசேகரன் வினவ

“ அது ஜெகாவோட கல்யாணம்….”

“ ஜெகாவா!!!! அது யாரு????”

“ ஜெகதீஸ்வரிங்கய்யா”

“ ஓ!!!” ‘கல்யாணம் ஆகி அரை நாள்குள்ள செல்ல பேரா’ என முணுமுணுத்துக்கொண்டே “ ஹ்ம்ம் சொல்லுப்பா”

“ ஜெகாவோட கல்யாணம் நின்றவுடன் ஆதி என்னைய கல்யாணம் பண்ண சொன்னான். எனக்கு பொண்ணை பிடிச்சுருந்துச்சு. மறுக்குறதுக்கு பெருசா காரணம் எதுவும் இல்ல.

அதனால இப்போதைக்கு சும்மா அவுங்க நிம்மதிக்கு நாம நிச்சயம் பண்ணிக்கலாம். அப்புறம் எங்க அப்பா அம்மா சம்மதத்தோட கல்யாணம் பண்ணலாம்ன்னு சொன்னேன்.

ஆதிதான், இல்ல காலம் தாழ்த்தி செய்ற ஒரு விஷயம் நிச்சயம் பின் விளைவுகளை கொடுக்கும்.

இப்போ இந்த கல்யாணம் நடக்கலைனா இந்த சமுதாயம் இந்த பொண்ணை தவறான முடிவுக்கு போகவச்சுடும்ன்னு சொல்லி உடனே கல்யாணத்தையும் நடத்தி வச்சுட்டான் ஐயா”என சதாசிவம் கூறி முடித்தான்.

இதுவரை சதாசிவம் கூறிய விஷயங்களை கேட்டுக்கொண்டிருந்த வடிவழகிக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை.

‘ ஆனால் கண்டிப்பாக ஆதி இந்த பெண்ணை திருமணம் செய்துவந்திருந்தால் என் மனம் ஏற்றுக்கொண்டிருக்காது’ என எண்ணிக்கொண்டிருக்கையில்,

வடிவழகியை பார்த்து அவரின் எண்ணப்போக்கை புரிந்து கொண்ட குலசேகரன் சதாசிவமிடம் “ சதா நீயும் உன் மனைவியும் கிளம்புங்க. நானே உங்க வீட்டுக்கு வந்து பேசுறேன்” என கூறி சதாசிவம் வீட்டுக்கு சென்று சதாசிவத்தின் பெற்றோர்களிடம் பேசி சமாதானம் செய்து வீட்டிற்கு திரும்பினார்.

அவர் வீட்டிற்குள் நுழையும்போதே ஆதியும் வடிவழகியும் எதோ வாக்குவாதத்தில் ஈடுபட்டுருந்தனர்.

“ முடியாது ம்மா. நான் வரல”

“ ஏண்டா வரல. ஏற்கனவே பூ வைக்கவும் நீ வரல. இப்போ இதுக்கும் வரலைன்னா எப்படிடா?????” என ஆதங்கமாக வடிவழகி கேட்டுக்கொண்டிருக்கும் போது

“ ஆதியை எங்க வரசொல்ற வடிவு” என கேட்டுக்கொண்டே வீட்டினுள் நுழைந்தார் குலசேகரன்

குலேசகரனை கண்ட வடிவு “ வாங்ககங்க நீங்களே சொல்லுங்க இவனுக்கு. இன்னும் பதினைந்து நாட்களில் கல்யாணம் வச்சுருக்கோம். நாளைக்கு பொண்ணுக்கும் இவனுக்கும் மூகூர்த்தத்துக்கு புடவை வேஷ்டி சட்டை எல்லாம் வாங்கணும் .

அதனால காலையில் வேறெங்கும் போகாம தயாரா இருப்பானா முடியாதுன்னு சொல்றாங்க” என வடிவழகி பொரிந்தார்.

குலசேகரன் வேறு எதுவும் கூறாது ஆதிலிங்கமூர்த்தியை காண,

“ பொண்ணு பார்த்து பூ வைக்க எல்லாம் நான் தேவையில்லை. பொண்ணு பிடிச்சிருக்கானு ஒரு வார்த்தை என்னய கேட்காம நீங்களா எல்லாத்தையும் முடிவு பண்ணிருப்பிங்க

ஆனா புடவை வாங்க மட்டும் நான் வரணுமா??? அதையும் நீங்களே உங்க இஷ்டத்துக்கு வாங்கிகோங்க” என கோபமாக கத்திவிட்டு ஆதிலிங்கமூர்த்தி தன் அறைக்கு சென்றுவிட்டான்.

“ பார்த்திங்களா???? எப்படி சொல்லிட்டு போறான்னு. நாம என்ன இவனுக்கு கெடுதலா பண்ண போறோம் இல்ல……” என வடிவழகி கூற வருகையில்

“ வடிவு ஒரு நிமிஷம். உனக்கு என்ன செய்யணும்ன்னு தோணுதோ அதை உன் இஷ்டத்துக்கு செய்யு. ஆனா ஆதியை எதுக்கும் நீ தொந்தரவு செய்யாத.

ஏன்னா அவன எதுக்காவது கோவப்படுத்துனா அதனோட வெளிப்பாடு நிச்சியம் யோகம் மேல தான் திரும்பும்.

நல்லபடியா கல்யாணம் முடியறது மட்டும் முக்கியம் இல்ல. கல்யாணம் முடிஞ்சு நம்ம மகனும் மருமகளும் சந்தோஷமா வாழறதுதான் முக்கியம். அதை நீ மனசுல வச்சுக்கோ.

அப்புறம் ஆதி நினச்சா இந்த கல்யாணம் வேண்டாம் தடுத்து நிறுத்தலாம். ஆனால் ஏதோ ஒரு வகையில் ஆதிக்கு யோகத்தை பிடிச்சிருக்குமோனு தோணுது அதான் கொஞ்சம் அமைதியா போறான்.

ஆனால் இனிமே நீ அவன் கிட்ட கோபத்தை கிளறுற மாதிரி பேசாத” என குலசேகரன் கூறி முடித்தார்.

குலசேகரன் கூறியதை கேட்ட வடிவழகிக்கு அவரின் கூற்றில் இருக்கும் உண்மை புரிய இனி அமைதியாக செயல்பட எண்ணினார்.

அவரை பொறுத்தவரை யோகாம்பிகைதான் இந்த வீட்டின் மருமகளாக வரவேண்டும்.

“ சரிங்க நீங்க சொன்ன மாதிரியே செய்றேன். ஆமா கேட்கணும்ன்னு நினைச்சேன் நீங்க போன காரியம் என்ன ஆச்சுங்க. சதாசிவம் வீட்டுல என்ன சொன்னாங்க???. ஒன்னும் பிரச்சனையை இல்லையே????”.

“ முதல்ல கொஞ்சம் சத்தம் போட்டாரு ஆவுடையப்பன். அதான் சதாசிவம் அப்பா. அப்புறம் எந்த மாதிரி சூழ்நிலையில சதாசிவம் அந்த பெண்ணை கல்யாணம் பண்ணினான்னு புரிஞ்சுக்கிட்டு ஒத்துக்கிட்டாரு.

ஆனா சதாசிவம் அம்மா தான் கொஞ்சம் மூஞ்சிய தூக்கிவச்சுருக்காங்க. ஆனா அதுவும் போக போக சரியாகிடுவாங்க. ஏன்னா அந்த பொண்ணை பார்க்கவும் நல்ல பொண்ணாதான் தெரியுது” என குலசேகரன் கூற

“ எதுக்குங்க அந்த அம்மா மூஞ்சிய தூக்கி வச்சுருக்காம். பையன் நல்ல காரியம் தானே பண்ணிருக்கான். நீங்க சொன்ன மாதிரி அந்த பொண்ணு அழகாவும் நல்ல மாதிரியாவும் தான் தெரியுது.

இதுக்கு மேல என்னவாம். சரி விடுங்க நமக்கே நிறைய வேலை கிடக்கு. இதுல இதப்பத்தி எதுக்கு பேசிகிட்டு நீங்க போய் முகம் கழுவிட்டு வாங்க. நான் போய் டீ போட்டு எடுத்துட்டு வரேன்” என கூறி அடுக்களைக்குள் நுழைந்தார் வடிவழகி.

‘ பார்றா!!! ஊருக்கு ஒரு நியாயம். இவளுக்கு ஒரு நியாயம்” என முணுமுணுத்துக்கொண்டே தன்னறைக்கு சென்றார் குலசேகரன்.

அடுத்து நாட்கள் மின்னலென கடந்து, திருமண நாளும் அழகாக விடிந்து, ஆதிலிங்க மூர்த்தியின் அனல் பார்வையுடனும் யோகாம்பிகையின் ஏக்க பார்வையுடனும் திருமணமும் இனிதாக முடிந்தது.


திருமணம் முடிந்த அன்றே மறுவீடு சென்றுவிட்டு மாலை அரங்கநாதபுரத்துக்கு வந்தனர் புதுமணத்தம்பதிகள்.

“ ஆதி இங்க வா”.

“ என்னம்மா????”

“ நீயும் யோகமும் ஆறுமணி போல அரங்கநாதர் கோவிலுக்கு போயிட்டு வந்துடுங்கப்பா”.

“ அம்மா இன்னைக்கேவா????. ரொம்ப சோர்வா இருக்கும்மா நாளைக்கு போகட்டுமா???”

“ இல்லடா இன்னைக்கே போய்ட்டுவாங்க. நாளைக்கு குலதெய்வ கோவிலுக்கு போகணும்”.

“ ம்ப்ச்….. சரிம்மா உங்க மருமகள தயாராக சொல்லுங்க” என ஆதிலிங்க மூர்த்தி வடிவழகியிடம் கூறிக்கொண்டிருக்கையில்

“ மாமாவோட போறதுன்னா நான் எப்பவும் தயார்தான் அத்தை” என சொல்லிக்கொண்டு எப்போதும் இருக்கும் அழகுடன் புதுபெண்ணிற்கே உரித்தான பொலிவுடன் பட்டுப்புடவை சரசரக்க நடந்து வந்த தன் மருமகள் யோகாம்பிகையை பார்த்து,

“ என் கண்ணே பட்டுடும்டா பார்த்து பத்திரமா போயிட்டு வாங்க” என வடிவழகி தன் கைகளால் யோகாம்பிகைக்கு நெட்டிமுறித்து கணவன் மனைவி இருவரையும் வழி அனுப்பி வைத்தார்.

ஆதிலிங்க மூர்த்தியும் யோகாம்பிகையும் அரங்கனை தரிசித்துவிட்டு ஒற்றை கால் மண்டபத்திற்கு சென்று அமர்ந்தனர்.

‘ காலையில இருந்து மாமா ஒரு வார்த்தைகூட பேசல. ரொம்ப கோவமா இருக்காங்களோ???. பேசாம நாமளே பேசுவோம்” என மனதில் எண்ணிக்கொண்டு,

“ மா…. மாமா…..” என மெதுவாக தயக்கத்தோடு அழைத்தாள் யோகாம்பிகை.

‘ என்ன’ என்ற கேள்வி கேட்கும் பாவனையுடன் திரும்பி பார்த்த ஆதிலிங்கத்திடம்

“ என் மேல கோவமாதான் இருக்கீங்களா மாமா”

“ கோவமா????
எனக்கா அப்படி எல்லாம் இல்லையே”

“ இல்ல மாமா. நான் அன்னைக்கு அப்படி கேட்டது தப்புதான். ஆனா….” என யோகாம்பிகை பேசவரையில்

“ தப்பா அப்படி எல்லாம் இல்ல. நீ என்னைய கல்யாணம் பண்ணிக்க ஒரு காரணம் சொன்ன. அதுப்படி கல்யாணமும் பண்ணிகிட்ட” என ஆதிலிங்க மூர்த்தி கூற

“ இல்ல மாமா நான் உங்கள விரும்பித்தான் கட்டிகிட்டேன்”.

“ அப்படியா????” என ஆதிலிங்க மூர்த்தி எள்ளலாக வினவ

“ நிஜமா மாமா” என கலங்கிய குரலில் யோகாம்பிகை கூற

“ போதும் நிறுத்து யோகா. மூணு வருஷத்துக்கு முன்னாடி உங்க அக்கா கல்யாணத்துல உன்னைய பார்த்தவுடன் எனக்கு பிடிச்சுருஞ்சு.

ஆனா உனக்கு அப்போ பதினெட்டு வயசுதான்னு தெரிஞ்சவுடன் என்னைய விட ரொம்ப சின்ன பொண்ணுன்னு நான் என் மனச மாத்திக்கிட்
டேன். ஆனா நீ வந்து என்கிட்ட என்ன சொன்ன?????” என ஆதிலிங்க மூர்த்தி சற்று ஆதங்கத்துடன் தன் கேள்வியை நிறுத்த

“ இல்ல மாமா. அது வந்து அக்காவுக்கு அடுத்து பத்து வருசத்துக்கு அப்புறம் பிறந்தேன். நான் பிறந்ததுலிருந்து என்னைய முழுக்க முழுக்க பார்த்துக்கிட்டது என் அக்காதான்.

எனக்காக அக்கா அவுங்க கல்யாணத்தைக்கூட தள்ளி போட்டுட்டே இருந்தாங்க. அப்புறம் அம்மா, அப்பா, அத்தை, மாமா எல்லாரும் சொல்லித்தான் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாங்க.

அவ்வளவு பாசம் எங்க அக்காவுக்கு. எனக்கும்தான் மாமா. அக்கா இல்லாம எனக்கு அந்த நாளே போகாது. எனக்கு எல்லா விஷயத்துக்கும் அக்கா வேணும்.

அப்படி இருந்த எனக்கு அக்கா கல்யாணம் பண்ணி அரங்கநாதபுரத்துக்கு போக போறாங்கன்னு சொன்னதும் ரொம்ப அழுகையா வந்துச்சு.

அப்போதான் என் தோழிங்க சொன்னாங்க நானும் அரங்கநாதபுரத்துல இருக்க மாப்பிள்ளையை கல்யாணம் செஞ்சா அக்காவோடையே வந்துடலாம். ஒரே ஊருல இருக்கலாம்ன்னு. எனக்கும் அது நல்ல யோசனையாத்தான் தோணுச்சு.

ஆனா எனக்கு அரங்கநாதபுரத்துல யாரையும் தெரியாதே. என்ன செய்யலாம்ன்னு யோசிச்சப்பத்தான், உங்கள அக்கா கல்யாணத்துல பார்த்தேன். அதோட அப்பா எப்பவும் உங்கள பத்தி ரொம்ப பெருமையா சொல்லுவாங்க. பத்தாததுக்கு சொந்த அத்தை மகன் வேற.

அதான் உங்க கிட்ட கல்யாணம் பண்ணிக்குறிங்களான்னு கேட்டேன். ஆனா நீங்க சின்ன வயசுல என்ன பேச்சு பேசுறேன்னு சொல்லி அடிக்காத குறையா திட்டி அனுப்பினீங்களே. இப்போவும் அதே கோவத்தோடதான் இருக்கீங்களா மாமா”

“ கோவம் இருக்கட்டும் இப்பவும் அதே காரணத்துக்குத்தான் என்னைய கல்யாணம் செஞ்சியா????”

“ இல்ல மாமா நீங்க திட்டினப்போ உங்க கண்ணுல கோவத்தவிட ஒரு ஏமாத்தம் தெரிஞ்சுச்சு.

அது அப்போ புரியல போக போக உங்க மேல எனக்கு விருப்பம் வந்தப்புறம் என்னால புரிஞ்சுக்க முடிஞ்சு. அதோட எங்க உங்களுக்கு வேற யாரையாவது கல்யாணம் பண்ணிவச்சுருவாங்களோன்னு அப்பாட்ட சொல்லி நம்ம கல்யாணத்த ஏற்பட்டு செய்ய சொன்னேன்.”

“ ஓ!!!!” என ஆதிலிங்க மூர்த்தி வேற எதோ கேட்க நினைக்கையில்

“ மாமா உங்களுக்கு தெரியுமா எந்த அக்காவுக்காக உங்கள கல்யாணம் செஞ்சுக்க கேட்டேனோ. அந்த அக்காவுக்கே இந்த கல்யாணத்துல விருப்பம் இல்ல.

உங்கள கல்யாணம் செஞ்சா அக்கா என்னோட பேசமாட்டேன்னு சொல்லிட்டாளாம். ஆனா எனக்கு அதை பத்தியெல்லாம் கவலை இல்ல.

உங்களுக்கு ஒருத்தர் வேணாம்ன்னா எனக்கும் வேணாம்” என உறுதியாக யோகாம்பிகை கூற,

ஆதிலிங்க மூர்த்திக்கு என்ன கூறுவதென்றே தெரியவில்லை. யோகாம்பிகையை பிடித்திருந்தாலும், அவள் மேல் கொண்ட விருப்பமே இத்தனை வருடங்களாக திருமணத்தை தள்ளிப்போட வைத்திருந்தாலும்,

‘ என்னைய எனக்காக கல்யாணம் செய்யாம அக்காவுக்காக செஞ்சுக்கிறேன்னு’ சொன்னது வருத்தத்தையும் கோவத்தையும் குடுத்தது.

ஆனா இப்போ யோகாம்பிகை கூறியதை கேட்டவுடன் கோவம் வருத்தம் எல்லாம் மறைய காதலுடன் தன் கைகளால் யோகாம்பிகையின் கைகளை பற்ற, இருவரும் மகிழ்வுடன் தங்களின் இனிமையான
வாழ்க்கையை காதலுடன் வாழ்வதற்கு வீடு திரும்பினர்.

இவர்களின் சந்தோசத்தை ஒற்றை கால் மண்டபத்தின் வாயிலில் இருந்து கண்களில் குரோதத்துடன் வெறித்துக்கொண்டிருந்தான் ஏழுமலை.









இனி??????????????......................
 
ஹப்பா யோகாம்பிகை ஆதிலிங்கமூர்த்தி இரண்டு பேரும் நினைத்த மாதிரியே வாழ்வு கிடைத்து விட்டது
இரண்டு பேரும் மனசு விட்டு பேசியாச்சு
ஐயோ இந்த ஏழுமலை என்ன பண்ணப் போறானோ?
இந்த ஜோடிக்கு என்ன கெடுதல் பண்ணுவானோ?
கூமுட்டை அலமேலு செஞ்ச வேலை அவள் மகளின் வாழ்க்கையை எப்படி பாதிக்கப் போகுதோ?
சீக்கிரமா வந்து சொல்லுங்க, நிரஞ்சனா டியர்
 
Last edited:
Top