Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஒற்றை கால் மண்டபம் EPISODE 15

Advertisement

niranjana subramani

Well-known member
Member
15.





குலசேகரன், வடிவழகி சென்ற பின் நடராஜன் அலமேலுவிடம்,

“ அலமு நீ இப்படி செய்வன்னு நான் எதிர்பார்கல”.

“ இல்லங்க. அது….. வந்து……”

“ ஒரு நிமிஷம் நான் பேசி முடுச்சுடுறேன். நீ உங்க அண்ணன் பையன் ஏழுமலைய யோகத்துக்கு பேசுனத நான் தப்புன்னு பேச வரல. ஏன்னா நீ ஒரு விஷயம் செஞ்சா நிச்சயம் உன் பிள்ளைகளோடு நல்லதுக்குதான்னு தெரியும்.

ஆனா ஆறு மாசத்துக்கு முன்னாடி ஒரு முடிவு எடுத்திருக்க. அதைப்பத்தி கட்டுன புருசனாவோ இல்ல என் மகளுக்கு பெத்த அப்பான்ற முறையிலோ என்கிட்ட ஒருவார்த்தை சொன்னியா”.

“ இல்லங்க அது வந்து சொர்ணா தான் இப்போதைக்கு சொல்ல வேண்டாம்ன்னு சொன்னா”

“ சொர்ணவா!!!!” என நடராஜன் திகைக்க

“ ஆமாங்க அவ தான் ஏழுமலைய யோகாம்பிகைக்கு கல்யாணம் பண்ணி வைக்க சொன்னா. நீங்க சத்தம் போடுவீங்கன்னு இப்போதைக்கு இதை பத்தி உங்ககிட்ட சொல்ல வேண்டாம்ன்னு சொல்லிட்டா” என அலமேலு கூறிக்கொண்டிருக்கையில்,

அதுவரை இவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்த யோகாம்பிகை,

“ அம்மா அக்காவா!!!! ஆனா அவுங்களுக்கு நான் ஆதி மாமாவை விரும்புறது தெரியுமே அப்பா” என குழப்பத்துடன் கேட்க

“ ஓ!!!! தெரிஞ்சதுனாலதான்மா உங்க அக்கா சீக்கிரம் ஏழுமலைக்கு உன்னைய கட்டிக்குடுக்க உங்க அம்மா மூலமா ஏற்பாடு செஞ்சுருக்கா” என நடராஜன் கூறினார்.

அதனை கேட்டு யோகாம்பிகை குழப்பத்துடன் பார்க்க.

“ என்ன யோகம் புரியலையா???. உங்க அக்கா சொர்ணாவை அரங்கநாதபுரத்துல இருக்குற எங்க அக்கா வீட்டு பங்காளிக்கு, அதாவது ஆதியோட ஒன்னுவிட்ட பெரியப்பா மகனுக்குத்தான் குடுத்துருக்கோம் தெரியும்தானே.”

“ ஆமா ப்பா”.

“ கல்யாணம் செஞ்சு குடுத்து ஒரு மூணு மாசத்துலையே ஆதியோட நண்பன் சதாசிவம் குடும்பத்துக்கும் உங்க அக்கா குடும்பத்துக்கும் ஒரு நில தகராறு.

அதுல ஆதி சதாசிவம் பக்கம் நின்னு பேசுனான். ஏன்னா நியாயப்படி அந்த நிலம் சதாசிவம் குடும்பத்துக்கு பாத்தியப்பட்டது. ஆனா உங்க அக்கா குடும்பமும் சரி உங்க அக்காவும் சரி அதை புருஞ்சுக்காம ஆதி மேல கோவப்பட்டு எங்க அக்கா குடும்பத்தோட சண்டை போட்டாங்க.

“ அதுக்கும் என் கல்யாணத்துக்கும் என்னப்பா சம்பந்தம்????”.

“ என்னமா நீ.
உனக்கு பத்து வருசத்துக்கு முன்னாடி பிறந்தவ அவள். நீயே சொல்லிருக்க சொர்ணா உனக்கு இன்னொரு அம்மா மாதிரின்னு.

அப்படி இருக்குறப்போ உன்னோட பிடிவாதம் பத்தி நல்லா தெரியும் அவளுக்கு . அதான் எப்படியாவது உனக்கும் ஏழுமலைக்கும் கல்யாணம் பண்ணி வைக்க ஏற்பாடு செஞ்சுருக்கா.”

ஓ!!! அப்போ இந்த மாமியாருக்கு முடியல. அதனால பூ வைக்க வரலன்னு சொன்னது எல்லாம் சும்மா அப்படித்தானே ப்பா ?????”

“ ஆமாம்மா அவுங்களுக்கு ஆகாதவங்களோட நாம சம்பந்தம் பண்றதுனால வரலையாம். கல்யாணத்துக்கும் வர மாட்டேன்னு சொல்லிட்டா”.

“ அப்பா நான் ஆதி மாமாவை கல்யாணம் கட்டிக்குறதுல ஒன்னும் உங்க ரெண்டு பேருக்கும் பிரச்சனை இல்லையே???” என நடராஜன் மற்றும் அலமேலுவை பார்த்து கேட்க

‘ பிரச்சன்னைன்னு சொன்னா மட்டும் இந்த கல்யாணம் வேணாம்ன்னு சொல்ல போறியாக்கும். அதான் ஆதிய கல்யாணம் பண்ணிக்கலன்னா செத்துருவேன்னு சொல்லிட்டு இப்போ கேள்வி வேற கேட்குற’ என இருவரும் மனதில் எண்ணிக்கொண்டு

‘ இல்லை’ எனும்விதமாக மறுப்பாக தலை அசைத்தனர்.

“ அப்போ ஒன்னும் பிரச்சனை இல்லப்பா. ஆதி மாமாவுக்கு யாரையாவது பிடிக்கலைன்னா எனக்கும் அவுங்கள பிடிக்காது. அதனால அக்கா என் கல்யாணத்துக்கு வரலைன்னாலும் பரவா இல்ல” என கூறிவிட்டு தன அறைக்கு சென்றுவிட்டாள் யோகாம்பிகை.

“ என்னங்க இது. இதுவரைக்கும் அக்கா எனக்கு இன்னொரு அம்மா மாதிரி. அக்கா இன்னும் பூ வைக்க வரலைன்னு அவ்வளவு கவலைபட்டுட்டு. இப்போ ஆதிக்கு பிடிக்கலைன்னா எனக்கும் அவுங்கள பிடிக்காதுன்னு சொல்லிட்டு போறா”.

“ நானும் அதைத்தான் யோசிச்சுகிட்டு இருக்கேன்
அலமு”.

“ என்னத்த யோசிக்குறீங்க. இவ ஆதி மேல பைத்யக்காரத்தனமா அன்பு வச்சுருக்கா. எப்படியாவது இவுங்க கல்யாணம் எந்த பிரச்சனையும் இல்லாம நடந்துடனும்ங்க” என அலமேலு கவலையான குரலில் கூற.

“ அதெல்லாம் நல்லபடியா நடக்கும். நம்மள மீறி என்ன நடந்துட போகுது. நீ தேவை இல்லாம பயப்புடாத.
சரி நான் போய் கல்யாண வேலையை கவனிக்குறேன்” என நடராஜன் கூறிவிட்டு வெளியே சென்றுவிட்டார்.

தன் அறைக்குள் வந்த யோகாம்பிகை கண்ணாடி முன் நின்றுகொண்டு,

“ ஐயோ யோகம் அநியாயமா அன்னைக்கு மாமாகிட்ட அப்படி பேசிவச்சுட்டியே. மாமா உன் மேல கோவப்பட்டதுல தப்பே இல்லடி.

ஹ்ம்ம் சொர்ணா அக்கா இப்படி சொதப்புன்னு எனக்கு எப்படி தெரியும். சரி விடு கல்யாணம் மட்டும் முடியட்டும் ஆதி
மாமாகிட்ட முதல்ல நான் அன்னைக்கு பேசுனதற்கான காரணத்தை சொல்லி அப்படி பேசுனதுக்கு மன்னிப்பு கேட்கணும்ன்னு” தனக்குள் பேசிக்கொண்டே கண்ணயர்ந்தாள்.

அரங்கநாதபுரத்தில் தங்கள் வீட்டில் நடு கூடத்தில் நாற்காலியில் அமர்ந்து இருந்த குலசேகரன்,

“ வடிவு இந்த கல்யாணத்துக்கு ஆதி சம்மதிப்பான்ல????”

“ ஏங்க திடீர்ன்னு சந்தேகம்????”

“ இல்ல பொண்ணு யாரு என்னன்னு ஆதிக்கு சொல்லாம நாமவாட்டு போய் கல்யாணத்தை உறுதி செஞ்சுட்டு வந்துட்டோம்.
அதான் ஒரே யோசனையா இருக்கு”.

“ அது எல்லாம் ஒத்துக்குவான் உங்க பையன். நீங்க எதை பத்தியும் கவலை படாம போய் கல்யாண வேலையை ஆரம்பிங்க” என வடிவழகி கூறிக்கொண்டிருக்கையில்

“ அம்மா!!!! அம்மா!!!!...” என வீட்டு வேலைக்காரன் மாடசாமி பதட்டமாக அழைக்க

“ என்ன மாடசாமி எதுக்கு இவ்வளவு பதட்டமா இருக்க???” என குலசேகரன் வினவ

“ ஐயா நம்ம சின்ன ஐயா வந்துட்டாங்க”

“ யாரு ஆதிதானே அதுக்கு எதுக்கு நீ இப்படி பதறுற????.”

“ இல்ல ஐயா ஒரு பொண்ணை………” என மெல்லிய குரலில் வார்த்தைகளை மென்று முழுங்க

“ என்னது பொண்ணா!!!!!” என திகைத்த இருவரும் வாசலுக்கு சென்றனர்.

வாசலில் அம்பாசிடர் காரின் பின் இருக்கையில் இருந்து மெல்லிய உடல்வாகுடன் மாநிறத்தில் நல்ல களையான முகமும் கொண்டு சற்று கலக்கமும்

பார்வையில் மிரட்சியும் கொண்டு, மணப்பெண் கோலத்தில் கழுத்தில் புது தாலிக்கயிறுடன் ஒரு இருபத்தி ஐந்து வயது மதிப்புள்ள ஒரு இளம்பெண் இறங்கிக்கொண்டிருகையில் குலசேகரனும் வடிவழகியும் வாசலுக்கு வந்துவிட்டனர்.

அந்த இளம்பெண்ணை பார்த்த வடிவழகி கோவமாக ஆதிலிங்க மூர்த்தியை தன் கண்களால் தேட அங்கு காரின் வலது புறத்தில் சற்று தள்ளி ஆதிலிங்க மூர்த்தியும் சதாசிவமும் ஒரு தீவிரமுகபாவனையுடன் எதோ ஒன்றை பத்தி பேசிக்கொண்டிருந்தனர்.

அதனை பார்த்த வடிவழகி கோவமாக ஆதிலிங்க மூர்த்தியின் அருகில் சென்று,

“ ஆதி” என சத்தமாக அழைத்தார்.

வடிவழகின் கோவ குரலில் தங்கள் வாக்குவதத்தை விட்டுவிட்டு திரும்பி பார்த்தனர் நண்பர்கள் இருவரும்.

“ ஆதி என்னடா??? என்ன இது???? யாரு இந்த பொண்ணு????” என சற்று கோபமாகவும் பதட்டமாகவும் வினவ

“ அம்மா அதுவந்து……. அது………. கல்யாணத்துக்கு போன இடத்துல ஒரு சின்ன பிரச்சனை.”

“ பிரச்சனையா????”

“ ஆமா அம்மா. இதோ இந்த பொண்ணு பேரு ஜெகதீஸ்வரி என் நண்பன் வீரேந்திரன் கல்யாணம் பண்ணிக்குறதா இருந்த பொண்ணோட அக்காம்மா இந்த பொண்ணு ஜாதகத்துல…..”

“ போதும் நிறுத்து அது எல்லாம் அப்பா சொல்லிட்டாங்க. இப்போ எதுக்கு இந்த பொண்ணை இங்க கூட்டிட்டு வந்துருக்க அதை மட்டும் சொல்லு.”

“ அது இந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்க வேண்டிய மாப்பிளை ஏற்கனவே இதய நோயாளி போல. தாலி கட்டவேண்டிய நேரத்துல மயங்கி விழுந்துட்டான்.

அந்த பையனோட அப்பா அம்மா என்னன்னா இந்த பொண்ணு ஜாதகம், ராசின்னு ஏதோதோ பேசி கல்யாணத்த நிறுத்திட்டாங்க. அதான் வேற வழி இல்லாம” என ஆதிலிங்க மூர்த்தி நடந்ததை கூறிக்கொண்டிருக்கையில்

“ தாலி கட்ட வேண்டியதா போச்சு இல்ல” என இடைபுகுந்து வடிவழகி வினவ

“ ஹ்ம்ம் ஆமா அம்மா. அது…….”

“ நிறுத்துடா என்ன கதை சொல்லிட்டு இருக்கியா????. உன்னைய நம்பி நான் என் தம்பி மக யோகாம்பிகைக்கும் உனக்கும் இன்னும் பதினைந்து நாட்களில்
கல்யாணம் வச்சுருக்கேன். நீ என்னடான்னா”

“ என்னது யோகாம்பிகையா!!!!!” என ஆதிலிங்க மூர்த்தி சற்று திகைத்து வினவ

“ ஆமாடா அவதான். அவ கட்டுனா உன்னைத்தான் கட்டுவேன்னு சொல்லிட்டு இருக்கா. நீ????” என வடிவழகி கோவமாக எதோ பேசவருகையில்

“ அம்மா யாரை கேட்டு அவளை எனக்கு கல்யாணத்துக்கு பேசுனீங்க. அவ சம்மதம் சொன்னா போதுமா நான் சொல்ல வேண்டாமா?????” என ஆதிலிங்க மூர்த்தி கோவமாக வினவ

வடிவழகி அதற்கு பதில் சொல்லாமல் ஆதியின் அருகில் குனிந்து நின்று கொண்டிருந்த சதாசிவத்திடம் சென்று,

“ நீ சொல்லு சதா. பெத்தவங்களுக்கு தெரியாதா பிள்ளைகளுக்கு யாரை கல்யாணம் பண்ணி வைக்கணும்ன்னு. நீயும் தானே கூட இருந்த அப்போ நீ ஒண்ணும் சொல்லலையா????.”

“ இல்ல….. இல்லம்மா நான் எவ்வளவோ சொன்னேன். ஆனா
ஆதிதான் பிடிவாதமா இந்த கல்யாணம் நடக்கணும்ன்னு சொல்லிட்டான். என்னால வேற எதுவும் செய்ய முடியலம்மா” என தவிப்புடன் சதாசிவம் கூற

“ அப்போ பெத்தவங்க தேவை இல்ல. அவுங்க விருப்பம் முக்கியம் இல்ல. உங்க இஷ்டத்துக்கு எதை வேணும்னாலும் செய்யலாம் அப்படித்தானே????”

“ அச்சச்சோ அப்படி எல்லாம் இல்லம்மா”

“ என்ன அப்படி எல்லாம் இல்ல. அப்போ இப்போ செஞ்சுருக்க காரியத்துக்கு பேரு என்னடா???”

“ அம்மா தப்புதான் ம்மா.
ஆனா நீங்கதான் எப்படியாவது எங்க அப்பா அம்மாகிட்ட பேசி. எந்த மாதிரி இக்கட்டுல இந்த கல்யாணம் நடந்துச்சுன்னு சொல்லி, சமாதானம் பண்ணனும்” என சதாசிவம் கெஞ்சலுடன் கேட்க

“ என்னது உங்க அப்பா அம்மா கிட்டவா?????”.



இனி
??????????????............
 
ஹா ஹா ஹா
அப்போ அந்த பெண்ணை ஆதிலிங்கமூர்த்தி கல்யாணம் பண்ணலையா?
வீரேந்திரனின் மச்சினியை சதாசிவம்தான் கல்யாணம் செஞ்சிருக்கானா?
அட ராமா
 
ஹா ஹா ஹா
அப்போ அந்த பெண்ணை ஆதிலிங்கமூர்த்தி கல்யாணம் பண்ணலையா?
வீரேந்திரனின் மச்சினியை சதாசிவம்தான் கல்யாணம் செஞ்சிருக்கானா?
அட ராமா
:love::love::love::love:
 
Top