Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஒற்றை கால் மண்டபம் EPISODE 14

Advertisement

niranjana subramani

Well-known member
Member
14.





“ அத்த!!!... அத்த!!!!!....” என வாசலில் இருந்து கோவமாக கத்தினான் ஏழுமலை.


ஏழுமலையின் குரல் கேட்டு திண்ணையில் அமர்ந்திருந்த நடராஜன் “ வாப்பா ஏழுமலை எப்படி இருக்க?????? . எப்போ ஈரோட்டுல இருந்து வந்தப்பா?????. சரி ஏன் வெளியில இருந்து உன் அத்தைய கூப்டுகிட்டு இருக்க!!!. வீட்டுக்குள்ள வாப்பா” என வீட்டு மனிதராய் உபசரிக்க,

நடராஜனை சிறிதும் கவனிக்காது “ அத்த!!!!... அத்த!!!....” என மறுபடியும் உரக்க அழைத்தான் ஏழுமலை.

ஏழுமலையின் சத்தத்தில் சிறு பதற்றத்தோடு வாசலுக்கு வந்த அலமேலு, அங்கு தன் அண்ணன் மகன் மிகுந்த கோவத்தோடு இருப்பதை பார்த்து சிறு அச்சத்தோடு,

“ வா…….!!! வாப்பா….. ஏழுமலை” என மெல்லிய குரலில் அழைக்க,

“ நான் வருவது அப்புறம் இருக்கட்டும். முதல்ல இன்னைக்கு இங்க என்ன நடக்குது?????. நீங்க என்ன செஞ்சுகிட்டு இருக்கீங்க?????” என இறுகிய முகத்தோடு அலமேலுவிடம் நேர்பார்வைக்கொண்டு ஏழுமலை கேட்க,

ஏழுமலையின் நேர்பார்வையை சந்திக்க முடியாது, தரையை பார்த்துக்கொண்டே

“ ஒண்ணும்……….. ஒண்ணும்…….. நடக்கலையேப்பா” என திணற

“ பொய் சொல்லாதீங்க!!!!!!......” என ஏழுமலை கத்தினான்.

அவனின் கத்தலில் அதுவரை வாசலில் இருந்து இவர்களை பார்த்துக்கொண்டிருந்த யோகாம்பிகை சிறு கோவத்துடன்,

“ அத்தான் இப்போ எதுக்கு கத்திட்டு இருக்கீங்க. உங்களுக்கு என்ன தெரியணுமோ அதை வீட்டுக்குள்ள வந்து கேளுங்க.
அப்புறம் உங்ககிட்ட பொய் சொல்ல வேண்டிய எந்த அவசியமும் இங்க யாருக்கும் இல்ல” என கூற

“ ஓ!!!!!!. அப்போ நீ சொல்லு. இன்னைக்கு உன்னைய நிச்சயம் பண்ண உங்க அத்தை வீட்டுல இருந்து வராங்களா????”

“ ஆமா. எனக்கும் ஆதி மாமாவுக்கும் கல்யாணம் பண்ண பேசி முடிக்க போறாங்க”

“ ஓ!!!! அப்போ நான் என்ன செய்றது???”

“ புரியல?”

“ புரியலையா????? என்ன புரியல??? உங்க அம்மா வந்து ஆறு மாசத்துக்கு முன்னாடி எனக்கும் உனக்கும் கல்யாணம் பண்ணனும் சொன்னாங்களே அது உனக்கு தெரியுமா???.

அதனால இந்த ஆறு மாசமா உன் மேல அசைய வளர்த்து இருக்கேனே, அதுக்கு என்ன செய்றது????” என ஏழுமலை கோவமாக கேட்க,

“ என்னது உங்களுக்கும் எனக்கும் கல்யாணமா!!!!....” என சற்று அதிர்ச்சி அடைந்தவள் அலமேலுவை முறைத்துக்கொண்ட்டே ஏழுமலையிடம்,

“ அத்தான் நான் ரெண்டு வருசத்துக்கு முன்னாடியே ஆதி மாமாவைத்தான் கட்டிக்குவேன்னு சொல்லிட்டேன். அப்படி இருந்தும் அம்மா எதுக்காக அப்படி சொன்னாங்கன்னு தெரியாது.

அதே நேரத்துல ஆறுமாசத்துக்கு முன்னாடியே உங்களுக்கு தெரியும்ன்னா என்கிட்ட ஒரு வார்த்தை சம்மதமான்னு கேட்டுருக்கலாம். ஏன்னா நான் ஒன்னும் உங்களுக்கு தெரியாத புது ஆளு கிடையாது தயக்கம் வருவதற்கு.

நாம எல்லாம் சின்ன வயசுல இருந்து ஒன்னாதான் வளர்ந்தோம். ஒருவேளை அப்படி நீங்க கேட்டுருந்தால் நிச்சயம் நான் என்னோட முடிவை அப்பவே சொல்லிருப்பேன். நான் என் ஆதி மாமாவைத்தான் கட்டிக்குவேன்னு” என கூற

“ ஓ!!!! ஒருவேளை உன்னைய ஆதி வேண்டாம்ன்னு சொல்லிட்டால். இல்ல இந்த கல்யாணம் எதோ ஒரு வகையில் நின்றுடுச்சின்னா???” என ஏழுமலை நக்கல் குரலில் வினவ

“ டேய்!!!....” என நடராஜன் கோவமாக எதோ கூற வரையில்

“ அப்பா!!!!...” என அழைத்து யோகாம்பிகை நடராஜனை தன் ஒற்றை பார்வையில் அடக்கி

“ ஒரு வேளை எனக்கும் ஆதி மாமாவுக்கும் இந்த கல்யாணம் நடக்கலைன்னா நான் உயிரோடவே இருக்க மாட்டேன். ஏன்னா ஆதி மாமா இல்லாம நான் வேற ஒருத்தர கல்யாணம் செஞ்சுக்குறதோ. இல்ல அவரோட நினைப்புல மீதி வாழ்க்கையை வாழ்றதோ. என் காதல் தோத்துப்போச்சுன்னு அர்த்தம்..

அப்படி ஒரு விஷயம் நான் ஆசைப்பட்டு நடக்காம தோத்துப்போனா இந்த யோகாம்பிகை வாழ மாட்டா” என தீர்க்கமான பார்வையோடு உறுதியான குரலில் கூறிவிட்டு வீட்டினுள் சென்று விட்டாள்.

யோகாம்பிகை பேசியதை கேட்ட நடராஜனும் அலமேலுவும் அதிர்ச்சியில் இருக்க ஏழுமலை தன் வீட்டை நோக்கி புறப்பட்டான்.

ஏழுமலையின் மனதில் பெரிய புயலே வீசிக்கொண்டிருந்தது

‘ ஒருவேளை யோகாம்பிகை தன்னை பிடிக்கவில்லை என்று கூறியிருந்தால் தன் மனம் சமாதானம் ஆகியிருக்கும்.

ஆனால் அவள் ஆதிலிங்க மூர்த்தி தான் திருமணம் செய்து கொள்வேன். அது நடக்காவிடில் வேறு யாரையும் திருமண செய்து கொள்வதற்கு பதில் இறந்து விடுவேன் என கூறி;

தன்னை திருமணம் செய்து கொண்டால் இறந்து விடுவேன்' என மறைமுகமாக உணர்த்தியது, ஏழுமலையின் தன்மானத்தை சீண்டியது மட்டும் இல்லாமல் ஆதிலிங்க மூர்த்தியின் மேல் வன்மத்தை உண்டாக்கியது.

யோகாம்பிகை பேசி சென்ற பின் அதிர்ச்சியில் இருந்த நடராஜனும் அலமேலுவும் வாயிலில் வந்து நின்ற காரின் சத்தத்தில் நடப்புக்கு வந்தனர்.

“ என்னங்க அது… வந்து….” என அலமேலு நடராஜனிடம் மெல்லிய குரலில் எதோ கூற வரையில்

“ இப்ப எதுவும் சொல்லவேண்டாம். விசேஷம் முதல்ல முடியட்டும். அப்புறம் இதை பத்தி பேசலாம்” என அலமேலுவிடம் கூறிவிட்டு வாயிலை நோக்கி வேகமா சென்றார்.அவர் பின் அலமேலுவும் சென்றார்.

வாயிலில் காரில் இருந்து இறங்கிய குலசேகரன் மற்றும் வடிவழகியை பார்த்து

“ வாங்க மாமா. வாங்க அக்கா” என நடராஜன் அழைக்க அதனை தொடர்ந்து

“ வாங்க அண்ணா. வாங்க அண்ணி” என அலமேலுவும் அழைத்தார்

பின் பரஸ்பர நல விசாரிப்புக்கு பிறகு

“ என்ன டா எங்க யோகம்???” என வடிவழகி நடராஜனிடம் கேட்க

“ அவ உள்ள தயாராகிட்டு இருக்கா அண்ணி. இதோ இப்போ கூட்டிட்டு வரேன். முதல்ல நீங்க ரெண்டு பேரும் தண்ணிய குடிங்க” என கூறி தண்ணீர் செம்பை குலசேகரிடம் குடுத்துவிட்டு தன மகளை அழைத்துவர சென்றுவிட்டார் அலமேலு.

“ என்னடா உங்க ரெண்டு பேரோட முகமும் சரி இல்ல. எதுவும் பிரச்சனையா இல்ல இந்த கல்யாணம் பிடிக்கலையா?????” என வடிவழகி நேரடியாக கேட்க

“ அச்சச்சோ அப்படி எல்லாம் இல்லக்கா. அது… வந்து….” என சற்று திணறலுடன் யோசித்து

“ இல்ல நம்ம சொர்ணாவை பத்தி தான் அக்கா. அவளுக்கு இந்த சம்பந்தம் பண்றதுல இஷ்டம் இல்ல.

ஆனா யோகம் கட்டுனா ஆதியதான் கட்டுவேன்னு சொல்றா. எனக்கும் சம்மதம்தான். அதான் சொர்ணாவை எப்படி சமாளிக்குறதுன்னு ஒரே யோசனையா இருக்கு” என நடராஜன் ஏழுமலை பிரச்சனையை மறைத்து வேற ஒரு கவலையை கூறினார்.

“ சொர்ணாவ பத்தி சொல்றியா. அவளுக்கு விருப்பம் இருக்கான்றது முக்கியம் இல்லை. யோகம் என்ன சொல்றா அவளுக்கு இந்த கல்யாணத்துல சம்மதமா ????”என வடிவழகி வினவ

“ அவளுக்கு இந்த கல்யாணம் பிடிச்சிருக்கு. ஆதிக்கு இந்த கல்யாணத்துல சம்மதம் தானே.”

“ நான் சம்மதிச்சா அவன் சம்மதிச்ச மாதிரி தான். ஆனா என்ன உங்க மாமா தான் சின்ன நெருடலோட இருக்காரு”

“ ஏன்!!! ஏன்??? மாமா உங்களுக்கு இந்த சம்பந்தம் பிடிக்கலையா???. உங்க அளவுக்கு வசதி இல்லைன்னு யோசிக்கிறீங்களா???” என சற்று பதட்டத்துடன் குலசேகரிடம் நடராஜன் கேட்க

“ அச்சச்சோ வசதி பத்தி எல்லாம் இல்ல. வயசு பத்தி தான் யோசனை.”

“ வயசா?????”

“ ஆமா நடராஜா. ஆதிக்கு இப்போவே இருபத்தி ஒன்பது யோகம்க்கு இருபதுதான். அதான்…….” என குலசேகரன் பேசிக்கொண்டிருக்கையில்

“ மாமா எனக்கு இருபதுன்னு யாரு சொன்னா????”. என வீட்டின் நடு கூடத்தில் இருந்து பெரியவர்கள் பேசிக்கொண்டிருந்ததை உள் அறையில் இருந்து கேட்டுக்கொண்டிருந்த யோகாம்பிகை குலசேகரிடம் வினவ,

“ இருபது இல்லையா????”

“ ஹம்ம்ஹும் இருபத்திஒண்ணு . எல்லாம் கல்யாணம் பண்ற வயசுதான். அதனால பெருசா கல்யாணத்துல எதுவும் குழப்பம் பண்ணமா போய் கல்யாண வேலைய சீக்கிரம் பாருங்க.”என யோகாம்பிகை கூறிக்கொண்டிருக்கையில்

“ ஏய் பெரியவங்கட்ட என்ன பேசுற???”
என அலமேலு தன் மகளை அதட்ட

“ விடுமா என் மருமக என்கிட்ட உரிமையா பேசாம யார்கிட்ட பேசும்.” என குலசேகரன் சிரிப்புடன் அலமேலுவிடம் கூறிவிட்டு

“ மருமகளே நீ சொன்ன மாதிரியே சீக்கிரம் கல்யாண வேலைய பார்த்துடலாம் சரிதானே” என புன்னகையுடன் கேட்டு விட்டு “ நடராஜா ஒரு பஞ்சாங்கம் எடுத்துட்டு வா” என கூற

“ இதோ எடுத்துட்டு வரேன் மாமா” என கூறி பஞ்சாங்கத்தை எடுத்து வந்து குலசேகரிடம் கொடுத்தார்.

அதனை பார்த்துவிட்டு இன்னும் பதினைந்து நாட்களில் திருமணம் என்று பேசி பெண்ணிற்கு பூ வைத்து உறுதி செய்துவிட்டு அரங்கநாதபுரத்துக்கு கிளம்பினர் குலசசேகரன் வடிவழகி தம்பதினர்.



இனி ???????????????????................



{ thanks for the comments and likes friends }
 
ரொம்ப நல்ல ஸ்டோரி...ரெகுலர் ud இல்லமா flow ரொம்ப விட்டு போகுது... pls கொஞ்சம் regular ud கொடுங்க பா
 
Top