Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஒற்றை கால் மண்டபம் EPISODE 13

Advertisement

niranjana subramani

Well-known member
Member
13.

“ ஆதி நான் முக்கியமான விஷயம் உன்கிட்ட பேசணும்ப்பா”.

“ என் கல்யாண விஷயத்தை தவிர எதுனாலும் சொல்லுங்க அம்மா. அதையும் சீக்கிரம் சொல்லுங்க” என ஆதிலிங்க மூர்த்தி தன் தாய் வடிவழகி எதை பத்தி பேச போகிறார்கள் என தெரிந்து முன் எச்சரிக்கையுடன் பேச,

“ ஏன்டா நான் எதை பத்தி பேசுவேன்னு தெரிஞ்சும் இப்படி பிடி குடுக்காம பேசுனா எப்படிடா. அதுவும் சீக்கிரமா பேசணும்னு உத்தரவு வேற.

ஏன் அப்படி சீக்கிரம் நீங்க எந்த ரயிலை பிடிக்க போறீங்க??” என வடிவழகி கோபமாக பேச,

“ திருச்செந்தூர் ரயிலை ம்மா”.

“ திருச்செந்தூரா?????”

“ ஆமா ம்மா என் நண்பன் வீரேந்திரனுக்கு அங்கதான் கல்யாணம்.
அதுக்குதான் இப்போ கிளம்பிட்டு இருக்கேன்.”

“ ஏன்டா ஒரு வார்த்தை என்கிட்ட சொன்னியாடா. நீவாட்டுக்கு சொல்லாம கிளம்புற.”

“ அம்மா நான் அப்பாட்ட சொல்லிட்டேன்.”

“ ஓ!!! அப்போ நான் இந்த வீட்டுல யாரு?????. சும்மா பொழுது போக்குக்கு இருக்கேனா. என்கிட்ட ஒருவார்த்தை சொன்னியாடா.”

“ இல்ல ம்மா நான் நேத்தே சொல்லிருந்தா நேத்துலிருந்து இப்போ வரைக்கும் உன் வயசு பசங்களுக்கு எல்லாம் கல்யாணம் நடக்குது. உனக்கு இன்னும் நடக்கலையேன்னு புலம்பிருப்பீங்க. அதான் கிளம்புறப்ப சொல்லலாம்ன்னு இருந்தேன்”.

“ தெரியுதுல புலம்புறேன்னு அப்போ கல்யாணத்துக்கு ஒத்துக்க”.

“ ம்ப்ச்…..” என ஆதிலிங்க மூர்த்தி சலிக்க,

“ ஏன்டா எனக்கு மட்டும் ஆசை இருக்காதா. நானும் என் பிள்ளைக்கு கல்யாணம் பண்ணி பேர பிள்ளைகளை பார்க்கணும். என் மருமகளை தாங்கணும்ன்னு”.

“ அப்போ உங்க இன்னொரு மருமகளையும் தாங்க வேண்டியதுதானே”.

“ யாருடா இன்னொரு மருமக???. எனக்கு இருக்குறது ஒரே பிள்ளை நீ மட்டும்தான்” என கோவமாக வடிவழகி பேச,

“ அம்மா சிவா……” என ஆதிலிங்க மூர்த்தி எதோ பேச வரையில் ,

“ அவனை பத்தி என்கிட்ட பேசாத ஆதி. உன்னைவிட ரெண்டு வருசத்துக்கு இளமை அவன்.
உனக்கு இருபத்தொன்பது வயசாகுது.

இன்னும் அண்ணனுக்கு கல்யாணம் ஆகலையேன்னு கொஞ்சம்கூட யோசிக்காம, ஆறுமாசத்துக்கு முன்னாடி யாரோ ஒரு அதுவும் வேற மதத்து பிள்ளையை கூட்டிட்டு வந்து, இதுதான் உன் மருமகன்னு சொன்னா நான் உடனே வாம்மான்னு சொல்லி ஆரத்தி எடுக்கணும்மோ???”
என வடிவழகி தன ரெண்டாவது மகன் சிவலிங்க மூர்த்தியை திட்ட ஆரம்பிக்க,

“ அவன் மனசுக்கு பிடிச்ச…………….” என ஆதிலிங்க மூர்த்தி பேசையில் இடைபுகுந்த வடிவழகி,

“ ஏன்டா நாலுவருசத்துக்கு முன்னாடி உன் நண்பன் சதாசிவத்தோடா நானும் பட்டாளத்துக்கு போறேன்ன்னு சொல்லி பிடிவாதம் பிடிச்சான்.

அப்பவும் அவன் மனசுக்கு
பிடிச்ச வேலைய செய்யட்டும்ன்னு சொன்ன. இப்போ அவன் கல்யாணத்துக்கு அதையே சொல்ற. அப்போ நான் என் பிள்ளைகளுக்கு என் மனசுக்கு பிடிச்சதை செய்ய கூடாதா????” என வடிவழகி பொரிந்தார் .

“ அம்மா நான் அப்படி சொல்லலமா. சிவாவோட சந்தோசம் தானே முக்கியம்.”

“ நீ உன் தம்பிக்கு ஒத்து ஊதுறதையும்; நீ இன்னும் கல்யாணத்துக்கு ஒத்துக்காம இருக்குறத பார்த்தா, நீயும் யாரையோ மனசுல வச்சுக்கிட்டுதான் இப்படி பண்றியோ” என வடிவழகி சந்தேகத்துடன் வினவ,

“ அம்மா அப்படி எல்லாம் யாரையும் நான் விரும்பல. இப்போ என்ன நான் கல்யாணத்துக்கு ஒத்துக்கணும் அவ்வளவுதானே. அதுக்கு தானே இப்போ இப்படி படுத்துறீங்க. சரி நான் கல்யாணம் பண்ண சம்மதிக்குகிறேன்.”

“ அப்போ பொண்ணு……” என வடிவழகி சந்தோசமாக எதோ கேட்கவரையில்,

“ அம்மா நான் முதல்ல திருச்செந்தூர் போய்ட்டு வந்துடுறேன்.அப்புறம் இதை பத்தி பேசலாம். இப்போவே நேரமாச்சு. நான் போய்ட்டுவரேன்”
என ஆதிலிங்க மூர்த்தி கூறி விட்டு திருச்செந்தூர் கிளம்பினான்.

காலையில் பண்ணைக்கு சென்றுவிட்டு இரவு வீடு திரும்பிய ஆதிலிங்க மூர்த்தி அப்பா குலசேகரன்,
“ வடிவு….. வடிவு…..” என அழைத்துக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்தார்.

“ என்னங்க இவ்வளவு நேரமாச்சு ????.”

“ முதல்ல குடிக்க செம்பு நிறைய தண்ணி கொண்டா” என கூறி தன் தோளில் இருந்த துண்டால் முகத்தை துடைத்து கொண்டே அங்கிருந்த சாய்வு நாற்காலியில் அயர்வாக அமர்ந்தார் குலசேகரன்.

தண்ணீரை கொண்டுவந்து குடுத்த வடிவழகியிடம், அதை வாங்கி குடித்துவிட்டு,

“ பண்ணைக்கு போனேன்ல. அங்க நம்ம தரகர் பாண்டி வந்துருந்தாப்ல.
ஆதி கல்யாணத்துக்கு பொண்ணு பார்க்கவான்னு ஒரே அனத்தல். அந்தா இந்தான்னு சொல்லி அவரை சமளிக்குறதுக்குள்ள.”

“ ஏங்க சமாளிக்கணும்????….”

“ ஏன் சமாளிகனுமா??? உன் மகன் ஆதிதான் இப்போ கல்யாணம் வேணாம் வேணாம்ன்னு சொல்றான். காரணம் கேட்டா அதையும் சொல்ல மாட்டேங்குறான்.
இந்த பாண்டி வேற மூணு மாசத்துக்கு ஒரு தடவை வந்து பொண்ணு பார்க்கவா அண்ணாச்சி அப்படின்னுபடுத்துறான்.”

“ இனிமே அவரு வந்தா பொண்ணு எல்லாம் பார்க்கவேணாம் என் பையனுக்கு பொண்ணு தயாராதான் இருக்குன்னு சொல்லுங்க.”

“ ஏண்டி எனக்கு தெரியாம எந்த பொண்ணை பார்த்துருக்க ஆதிக்கு. அப்படியே நீ சொன்னாலும் அவன் கல்யாணத்துக்கு ஒத்துக்கணுமே????.”

“ அதெல்லாம் ஆதி கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டான். என் தம்பி மக யோகாம்பிகைதான் பொண்ணு”.

“ யோகாம்பிகையா!!!!!! அந்த பொண்ணுக்கு இருப்பது வயசுதான் ஆகுது. நம்ம ஆதிக்கு இருபத்தி ஒன்பது முடியப்போகுது. அதுசரி யோகாம்பிகைதான் பொண்ணுன்னு ஆதிக்கு தெரியுமா வடிவு?????.”

“ பொண்ணு யாருன்னு சொல்றதுக்குள்ளதான் அவன் ரெயிலுக்கு நேரமாச்சுன்னு வந்து பேசிக்கலாம்ன்னு சொல்லிட்டு போய்ட்டான்.

இருந்தாலும் யோகாம்பிகைதான் என் மருமகள். இதுதான் என் முடிவு. அதனால நாளைக்கே அடம்பூர் போயி பொண்ணுக்கு பூ வச்சுட்டு வரோம் ”
என வடிவழகி முடிவாக குலசேகரிடம் கூற,

“ நீ அவசரபடுறமாதிரி இருக்கு. எதுக்கு ஆதி வந்தப்புறம் இதை பத்தி பேசலாம் வடிவு.”

“ எதுக்கு அவன் வந்து மறுபடியும் கல்யாணம் இப்போ வேணாம்ம்மா கொஞ்ச நாள் போகட்டும்ன்னு அதே பல்லவியை பாடவா???” என வடிவழகி முறைப்புடன் கூற,

“ இங்க பாருங்க என் தம்பி பொண்ணு நாம பார்த்து வளர்ந்த பொண்ணு. நமக்கு நல்லா தெரிஞ்ச பொண்ணு வேற.

அதோட என் பரம்பரையில் பொண்ணுங்க
எல்லாரும் புருசனுக்கு அடங்கி, புருஷன்க்கிட்ட வாக்குவாதம் பண்ணாம அவர் சொல்றத கேட்டு சரிங்கன்னு போவாங்க.
கிட்ட தட்ட என்னமாதிரி.
அதனால இதோட இந்த பேச்சை விடுங்க நாளைக்கு காலையில நாம போறோம்” என வடிவழகி உறுதியாக கூறினார்.

“ அதுசரி என்னைக்கு நான் சொல்றத நீ கேட்டுருக்க” என முணுமுணுத்துவிட்டு,

“ சரி வடிவு நான் போய் குளிச்சுட்டு வரேன். நீ சாப்பாடு எடுத்துவை” என குலசேகரன் கூறிவிட்டு செல்ல எத்தனிக்கையில்,

“ சரிங்க ஆனா அதுக்கு முன்னாடி நீங்க ஒன்னு சொல்லுங்க உங்க மகன் திருச்செந்தூர் போற விஷயத்தை ஏன் என்கிட்ட சொல்லல” என வடிவழகி கேட்க

அது ஒண்ணுமில்ல வடிவு……” என குலசேகரன் திணறினார்.

“ உண்மைய மட்டும் சொல்லுங்க. எதுனாலும் ஆதி என்கிட்டே சொல்லிட்டுதான் பண்ணுவான். இன்னைக்கு இப்படி கிளம்புற நேரத்துல சொல்லிட்டு போறான்.
அப்படின்னா கண்டிப்பா எனக்கு பிடிக்காத விஷயம் ஏதோ இருக்கணும்.என்ன அது????” என சிறு கண்டிப்பு குரலில் வடிவழகி கேட்க

“ அது வந்து அந்த வீரேந்திரனுக்கு காதல் கல்யாணம்” என மெல்லிய குரலில் குலசேகரன் கூற ,

“ காதல் கல்யாணமா!!!!” என சற்று முகத்தை சுளித்த வடிவழகியிடம்

“ இல்ல வடிவு அந்த வீரேந்திரன் சொந்த அத்தை பொண்ணை விரும்பிருக்கான். ஆனா அந்த பொண்ணுக்கு ஒரு அக்கா இருக்கு போல. அது ஜாதகத்துல ஏதோ தோஷம்ன்னு கல்யாணம் தடைபட்டுட்டே இருந்துருக்கு.

அக்கா கல்யாணம் நடந்தாதான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு தங்கச்சி வீரேந்தரனை சுத்தல்ல விட்டு இருக்கு. இப்போதான் அக்காவுக்கு வரன் அமைஞ்சவுடன் ரெண்டு கல்யாணத்தையும் திருச்செந்துர் கோவில்ல வைக்குறாங்க."

“ ஓ!!!! அப்படி என்னங்க அந்த பெரிய பொண்ணுக்கு ஜாதகத்துல தோஷம்”

“ அது என்னன்னு தெளிவா தெரியல வடிவு. ஆனா ஆதி எதோ சொன்னான். அந்த பொண்ணு ராசிக்கு கல்யாணம் பண்ணி போற வீட்டுல மாமியாருக்கு எதாவது நடந்துருமா.”

“ என்ன சுத்த கூறுகெட்டத்தனமா இருக்கு. ஒரு வீட்டுல யாருக்காவது எதாவது நடந்தா அதுக்கு எப்படி இந்த பொண்ணு பொறுப்பாக முடியும்.

ஒருவேளை இந்த பொண்ணை தவிர வேற யாராவது ஒரு பொண்ணை கட்டுனா அந்த வீட்டுல இருக்குறவங்க நூறு வயசு வ்ரை இருந்துருவாங்களாகும்.

சரி சரி எப்படியோ அந்த பொண்ணுக்கு கல்யாணம் அமைஞ்சுருச்சே.
நீங்க போய் குளிச்சுட்டுவாங்க. சாப்பிட்டு சீக்கிரம் தூங்குனாதான் காலைல பூ வைக்க போக வசதிப்படும்.

நான் காலையிலையே நம்ம மாடசாமிகிட்ட
நாளைக்கு பூ வைக்க வரதா என் தம்பி வீட்டுக்கு தகவல் சொல்லி அனுப்பிட்டேன்” என கூறிவிட்டு வடிவழகி அடுக்களைக்குள் நுழைந்தார் .

யோகம்.. யோகம்…. சீக்கிரம் கிளம்பி தயாரா இரு ஆத்தா. அவுக வர நேரமாகிடுச்சுல” என தன் தாய் அலமேலு கூறுவதை கண்டுகொள்ளாமல் திண்ணையில் கோவமாக அமர்ந்த்திருந்தாள் நடராஜன் அலமேலு தம்பதியின் ரெண்டாவது மகள் யோகாம்பிகை.

“ யோகம் அம்மா சொல்றது உனக்கு காதுல விழுகலையா. என் அக்கா வடிவு பூ வைக்க வர போறாங்க. சீக்கிரம் போடா போய் தயாராகு” என வாஞ்சையாக நடராஜன் கூற,

“ஏன்ப்பா உங்க அக்கா வந்தா போதுமா?????. என் செல்ல அக்கா சொர்ணா அக்கா வரணும்ன்னு நான் நினைக்க மாட்டேனா. அக்காவையும் அரங்கநாதபுரத்துல தானே கட்டிக்குடுத்துருக்கோம்.

அத்தையோட அக்காவும் வந்தா என்னவாம்????”
என தன் அக்கா சொர்ணாம்பிகை வராததை மனத்தாங்கலுடன் கூற,

“ நான்தான் சொன்னேன்லடா அக்கா மாமியார் ரொம்ப முடியாம இருக்காங்க. அதனால இபோதைக்கு வரமுடியாது அப்படின்னு. இப்போ மூஞ்சிய காட்டிட்டு உட்கார்ந்துருக்க. போடா போய் தயாராகு”.

“ போங்க ப்பா ஆதி மாமாவும் வரல, அக்காவும் வரல ம்ப்ச்” என சலித்துக்கொண்டே யோகாம்பிகை வீட்டிற்குள் நுழையும் வேளையில் ,

“ அத்த!!!... அத்த!!!!!....” என வாசலில் இருந்து கோவமாக கத்தினான் ஏழுமலை.



யார் இந்த ஏழுமலை ?????.....................

இவனால் ஏதும் பிரச்சனை உருவாகுமா ????? ....................
 
ungalai tedittu vanthen aana sariya ud iruku.... ippo athilinga moorthyoda flashback pogutho....niraya characters varanga.... aathi kalyanatthuku pona idathil kalyanam pannittu varuvaro
 
அந்த ஜாதக தோஷம் உள்ள பெண்ணின் கல்யாணம் நின்று வீரேந்திரனின் மச்சினிச்சியை ஆதிலிங்க மூர்த்தி திருமணம் செய்து வருவாரோ?
தம்பி மகளை ஆதிக்கு பேசி வந்த வடிவழகி இந்த கல்யாணத்தை ஒத்துக் கொண்டாரா?
ஏழுமலை யோகாம்பிகையின் மாமா மகனா?
ஏழுமலை யோகத்தை விரும்புகிறானா?
 
Last edited:
Top