Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஒற்றை கால் மண்டபம் EPISODE 11

Advertisement

niranjana subramani

Well-known member
Member
11.



“ ஆதிலிங்க மூர்த்தியா!!!!, அவரே கொலை செய்ய முயற்சி பண்ணிட்டு அவரே எதுக்கு வனிதா உங்கள காப்பாத்த நினைக்கணும்????” என ஹர்ஷா சந்தேகமாக கேள்வி எழுப்ப

“ ஆமா வனி நீ எதோ தப்பா புரிஞ்சுகிட்டு பேசுறன்னு நினைக்கிறேன்” என விசித்ரா கூறினாள்

“ நான் தப்பா புரிஞ்சுகிட்டு
பேசுறேன்னா???... ஹ்ம்ம்…. இப்போதான் சரியா புரிஞ்சுருக்கேன். அதுவும் மகளோட காதல் ஜெயிக்க கூடாதுன்னு மகளையே கொல்ற அளவுக்கு Mr. ஆதிலிங்க மூர்த்தி போவாருன்னுறத நல்லா புரிஞ்சுகிட்டேன்” என வனிதா சிறு நக்கல் கலந்த குரலில் கூற

“ சும்மா உளறாத. உன்னோட தற்கொலை முயற்சினால உன் மேல போலீஸ் கேஸ் எதுவும் வராம இருக்க அப்பா எவ்வளவு கஷ்டப்பட்டாரு தெரியுமா????”
என விசித்ரா கோபத்துடன் கூற,

“ என் மேல கேஸ் வந்தா இவரோட கொலை முயற்சி வெளில தெரிஞ்சுடும். அதனாலதான் கேஸ் போடாம பார்த்துருப்பார்” என விட்டெறியாக வனிதா கூற

“ வனிதா” என விசித்ரா கோவமாக எதோ கூற வரையில்

இடையிட்டு “ ஏய் ஒரு நிமிஷம் நில்லு .ஆமா உனக்கு ஆதிலிங்க மூர்த்திதான் உன் அப்பான்றது எத்தனை வருசத்துக்கு முன்னாடி தெரியும்ன்னு சொன்ன???” என வனிதா யோசனையுடன் வினவ

“ ரெண்டு வருசத்துக்கு முன்னாடி”

“ ஹ்ம்ம்…. ரெண்டு வருசத்துக்கு முன்னாடி
தான் உனக்கு இவரை தெரியும். அப்படி இருக்கும் போது எப்படி இவரு மேல, எங்க மேல எல்லாம் உனக்கு இம்புட்டு பாசம்????.

ஏன் சொத்து நிறைய இருக்கு. பங்கு கிடைக்கும்ன்னு நினைக்கிறியா????” என எகத்தாளமாக வனிதா பேசிக்கொண்டே போக

“ ஏய் நிறுத்து!!!!!” என்ற விசித்ராவின் குரல் வனிதாவின் பேச்சினை தடை செய்தது.

“ டேய் மச்சி செமயா சண்டை போட்டுக்குறாங்க இல்ல” என கிஷோர் ஹர்ஷாவிடம் முணுமுணுக்க;

“ கிச்சா!!!!!!” என ஹர்ஷா பல்லை கடித்தான்.

“ இல்ல மச்சி பொண்ணுங்க சண்டை போட்டு நேரடியா பார்த்தது இல்ல அதான்…..” என கூறிக்கொண்டிருந்தவன் ,

ஹர்ஷாவின் பார்வையில் ‘ ஹ்ம்ம்…ஹும்.. இவன் வேற கண் ஆஸ்பத்திரியில டாக்டர்ட்ட கண்ணை காட்டுறமாதிரி முழுச்சு முழுச்சு கண்ணை காட்டுறான்” என
ஹர்ஷாவின் கோப பார்வையை பற்றி எண்ணிக்கொண்டு கிஷோர் அமைதியாக விசித்திராவின் பேசிச்சினை கவனிக்க ஆரம்பித்தான்.

“ நீ என்ன வாய்க்கு வந்தது எல்லாம் பேசிகிட்டு இருக்க. நான் ஏன் உங்க மேல எல்லாம் பாசமா இருக்கேன்னு கேட்குறியே!!!.

வாழ்க்கைல நமக்குன்னு யாராவது கவலை படுவாங்களா இல்ல நம்பள பத்தி யோசிப்பாங்களா???.

எனக்குன்னு தோள்குடுக்க ஒரு சொந்தமாவது கிடைக்காதான்னு நான் அநாதமாதிரி ஏங்கிட்டு இருக்குறப்போ. எனக்கே எனக்கான உறவுகளா,
அதுவும் ரெத்த உறவுகளா கிடைக்கும் போது;

பிறந்ததுல இருந்து இதுவரைக்கும் பார்க்காத உங்க மேல எல்லாம் எனக்கு பாசம் வராம என்ன செய்யும்” என கலங்கிய விழிகளுடன் விசித்ரா வினவ,

வனிதா ஹர்ஷா கிஷோர் மூவரும் புரியாமல் பார்த்தனர்.

“ என்ன புரியலையா????” என விரக்தி சிரிப்புடன் கேட்டுக்கொண்டே தன் கலங்கிய விழிகளை துடைத்த விசித்ரா,

“ வனி உனக்கு தெரியுமா நாம ரெண்டு பேரும் பிறந்தவுடன் நம்ம அம்மாவும் இறந்துட்டாங்களாம். அன்னைக்கே ஒரு குழந்தை இல்லாத தம்பதிக்கு என்னைய தத்துக்குடுத்துட்டாங்க. ஆனா ஏன்ன்னு காரணம் தெரியல.

என்னோட வளர்ப்பு அப்பாவும் அம்மாவும் என்னைய ரொம்ப நல்லா பார்த்துக்கிட்டாங்க. என்னைய எதுக்கும் கலங்க விட்டதில்ல. என் கண் பார்த்தே என் மனசுல ஆசைப்பட்டதை செஞ்சு குடுத்துடுவாங்க.

ஆனா இது எல்லாம் என்னோட எட்டவாது வயசுவரைதான். ஏன்னா அதுக்கு அப்புறம் அவுங்களுக்குன்னு ஒரு குழந்தை வந்துருச்சு. அப்புறம் எல்லாம் என்னைய ஒதுக்க ஆரம்பிச்சுட்டாங்க.அப்போ எனக்கு புரியல.

எனக்கு விளையாட ஒரு தம்பி பாப்பா கிடைச்சுடுச்சுன்னு ரொம்ப சந்தோசமா இருந்தேன்.
எனக்கு பத்து வயசா இருக்கும் போது என்னைய ஹாஸ்டல்ல சேர்த்துட்டாங்க.

அதுக்கு அவுங்க சொன்ன காரணம் என்ன தெரியுமா அவுங்களால என்னையையும் தம்பியையும் சேர்த்து பார்த்துக்கமுடியல. அதனால கொஞ்ச நாள் மட்டும் அங்க இருன்னு சொன்னாங்க.

அப்போ அந்த வயசுல நான் எவ்வளவு அழுதேன் தெரியுமா வனி???. அப்புறம் ஒரு விடுமுறை நாள் வீட்டுக்கு வந்தப்போ அவுங்க பேசுனதவச்சு தெரிஞ்சுகிட்டேன். நான் அவுங்க தத்து பிள்ளை அதனால ஒதுக்குறாங்கன்னு.

அப்புறம் வளர வளர நீங்க என்ன என்னைய ஒதுக்குறதுன்னு நானே அவுங்களைவிட்டு ஒதுங்கிடேன்.

உனக்கு ஒன்னு தெரியுமா ???. நமக்கு ஒன்னு கிடைக்கலைன்ற ஏக்கத்தைவிட கிடைச்சுட்டு பாதியோட நமக்கு இல்லைன்ற ஏக்கம் கலந்த தவிப்பு ரொம்ப கொடுமையானது.

அடுத்து கல்லூரி ரெண்டாம் வருடம் படிக்கும் போது அப்பா என்னைய தேடி வந்து நான்தான் உன் அப்பான்னு சொல்லி என்கிட்டே மன்னிப்பு எல்லாம் கேட்டாரு. அப்போ அவரோட சட்டையை பிடிச்சு எதுக்கு என்னய தத்து குடுத்தன்னு கேட்கணும்ன்னு வெறியே வந்துச்சு.

ஆனா அந்த வெறியை என் பாசத்திற்கான தவிப்பு அடக்கிடுச்சு. உன்னை பத்தி, நிலவரசன் அண்ணனை பத்தி எல்லாம் அப்பா சொன்னவுடன் எனக்கு எவ்வளவு சந்தோசம் தெரியுமா.

நான் அனாதை இல்லன்னு என் மனசுக்குள்ளையே பல தடவை சொல்லி சொல்லி சந்தோசப்பட்டுருக்கேன்.
நீ என்னடான்னா சொத்துக்காக வந்தியான்னு கேட்குற” என விசித்ரா தன் கதையை கூறி ஆதங்கத்துடன் முடித்தாள்.

சிறுது நேர அமைதியாக இருந்த வனிதா திடீரென “ நீ சொல்றது எல்லாம் சரிதான். இவ்வளவு சொல்ற ஆளு. ஏன் அப்பா உன்னைய பார்த்தவுடன் எங்களை பார்க்க வரல????” வனிதா சந்தேகத்துடன் வினவ,

“ அது….. அப்பாதான்……” என விசித்ரா இழுத்தாள்.

“ அப்பாவா???? அவரு என்ன உன்க்கிட்ட சொன்னாரு???”

“ அவருதான் அப்போ இங்க நிலைமை ஒன்னும் சரி இல்ல. அதனால கொஞ்ச நாள் இங்க இரு. அதோட படிப்பும் முடியட்டும்ன்னு சொன்னாங்க. நானும் அப்போ சரின்னு சொன்னேன்.”

“ சரி இப்போ இங்க நிலைமை எல்லாம் சரியாகிடுச்சா???” என சிறு எள்ளலுடன் வனிதா கேட்க

“ அது எல்லாம் எனக்கு எதுவும் தெரியாது வனி” என விசித்ரா சலிப்புடன் கூறி பெருமூச்சொன்றை விட்டு

“ திடீர்ன்னு பதினைந்து நாளுக்கு முன்னாடி அப்பா எனக்கு போன் பண்ணி உனக்கு கல்யாண ஏற்பட்டு பண்ணிருக்கேன்னு சொல்லி வர சொன்னாங்க. நான் அப்போ ஒரு கம்பெனில முக்கியமான ப்ராஜெக்ட்ல இருந்தேன்.

அதனால உடனடியா வரமுடியல. நேற்றுதான் வந்தேன். அப்போதான் இன்னும் ஒருவாரத்துல எனக்கு நிச்சயம்ன்னு தெரியும்”

“ என்னது நேத்துதான் தெரியுமா!!!!. நீ அப்பாகிட்ட சண்டை போடலையா????”

“ ப்ச்ச்…. நீ வேற எனக்கிட்ட சொன்னவுடன் நேத்து ராத்திரி எனக்கு அப்பாவுக்கும் வாக்குவாதம். அப்புறம் தான் நிலவரசன் அண்ணனோட நிலைமை, நீ தற்கொலை பண்ணிக்க முயற்சி செஞ்சதுன்னு எல்லாத்தையும் சொன்னாங்க.

அப்புறம்
மாப்பிளைகிட்ட பேசி பாரு. உனக்கு சரின்னா நான் கல்யாண வேலைய பார்க்குறேன்னு சொன்னவுடன் நானும் சரத்கிட்ட நேத்து ராத்திரி பேசினேன்.

எனக்கு ஓகே தான். இருந்தாலும் உன்னைய பார்த்து உன்கிட்ட பேசி சம்மதம் வாங்கணும்ன்னு தான் இப்போ இங்க நான் வந்ததே”

“ மாப்பிள்ளை பேரு என்ன சொன்ன சரத்தா?????” என வனிதா திடுக்கிடலுடன் வினவ

“ ஆமாம். அப்பாவோட நண்பனோட பையனாம். அவரும் அரங்கநாத புரம்தான்னு சொன்னாங்க. நான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டதுக்கு முக்கிய காரணமே அதுதான். இங்கயே உங்க கூட எல்லாம் இனிமே இருக்கலாம்ல” என விசித்ரா சந்தோசத்துடன் கூ
றி கொண்டிருக்கும்போது வனிதா எதோ சிந்தனையில் இருப்பதை பார்த்து

“ என்ன வனி என்ன யோசிக்கிற????” என விசித்ரா வினவ

அதற்கு விரக்தியான சிரிப்பொன்றை உதிர்த்து,

“ இல்ல இந்த சரத்தோட தங்கச்சியைத்தான் அப்பா அரசு அண்ணாவுக்கு கல்யாணம் பண்ணனும்ன்னு நினைச்சு அதுக்கு தடையா இருந்த என் தோழி மயிலரசிய கொன்னாரு.

இப்போ சரத்துக்கு என்னைய கல்யாணம் பண்ணிவைக்க நினைச்சு நான் ஒத்துக்க மாட்டேன்னு எனக்கு விஷம் வச்சு கொன்னுட்டு,
நீ தான் வனிதான்னு சொல்லி உன்னைய கல்யாணம் பண்ணி வைக்க நினைச்சுருக்கார்.

பாவம் அவரு நினைச்ச ரெண்டுமே நடக்கல. அண்ணா பைத்தியம் ஆகிட்டான். நான் பிழைச்சுட்டேன். ஹா…… ஹா……” என சத்தமாக வனிதா சிரிக்க,

ஹர்சா, கிஷோர் மற்றும் விசித்ரா குழப்பமான மனநிலையில் இருந்தனர்.

“ இல்லமா…. இல்ல.. நான் மயிலரசிய கொல்லல. அதே மாதிரி உனக்கு நான் விஷம் குடுத்து கொல்ல நினைக்கலமா….” என
தன் கலங்கிய குரலில் கூறிக்கொண்டே திடீரென அறையினுள் நுழைந்தார் ஆதிலிங்க மூர்த்தி.





ஆதிலிங்க மூர்த்தி கூறுவது உண்மையா ?????? ..............
 
Top