Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஒற்றை கால் மண்டபம் EPISODE 02

niranjana subramani

Well-known member
Member
2.

சிந்தனையில் இருந்த ஹர்ஷாவின் கைப்பேசி சிணுங்கி அழைப்பு வந்தது,
அதை பார்த்த ஹர்ஷா அழைப்பை ஏற்று ,”ஹலோ ராகுல்`” எனக்கூற,

எதிர் முனையிலிருந்த ராகுல் , “ஹலோ, ஹர்ஷா… எப்படிடா இருக்க?”.

“ நான் நல்லா இருக்கேன்டா. நீ எப்படி இருக்க? வீட்டுல எல்லாரும் எப்படி இருக்காங்க?.”

“ எல்லாரும் நலம்டா. அங்க?”

“ எல்லாரும் நலம்டா. இன்னும் ஒரு மாசத்துல விஜய் அண்ணாவுக்கு கல்யாணம்டா, பத்திரிகை அனுப்புறேன்டா.”

“ ஓ…. ரொம்ப….. சந்தோசம் ஹர்ஷா”

“ சரி ராகுல் எதுவும் முக்கியமான விஷயமா?, ஏன்னா....,இது உன்னுடைய ஆபீஸ் டைம் ஆச்சே! இப்போ கால் பண்ணிருக்க அதான் கேட்குறேன்.”

“ஆமா, ஹர்ஷா எனக்கு ஒரு உதவி வேணும் அதான் போன் பண்ணேன்” என்றான் தயக்கத்துடன்.

“டேய், என்னடா தயக்கம் சொல்லு”

“இல்லடா நேரில பார்த்து பேசணும், முடியுமா?”

“இன்னைக்கேவாடா?”

“ஆமா,கொஞ்சம் சீக்கிரம் பேசணும்”

“சரிடா, இன்னைக்கு மாலை நான்கு மணிக்கு ரெஸ்டாரண்ட்ல சந்திக்கலாம்”

“சரி, ஹர்ஷா மாலை பார்க்கலாம் பை”

“பைடா”

அலைபேசியை அணைத்துவிட்டு ‘என்ன? உதவியா இருக்கும்’ என ஹர்ஷா யோசிக்கலானான்.

அந்த யோசனையை தடை செய்யும் விதமாக வீட்டு வேலைக்காரரான செந்தில் பெரிய அய்யா அழைப்பதாக கூறிவிட்டு சென்றான்.

‘அப்பா இந்த நேரத்திற்கு பாக்டரில இருக்கணுமே இங்க என்ன செய்றாங்க’ என எண்ணி கொண்டு கிருஷ்ணசுவாமியை காண சென்றான்.

ஹாலில் அமர்ந்து இருந்தவரிடம், “அப்பா கூப்டிகளா?”
என கேட்க.

“ஆமா ஹர்ஷா. சரி வேலை எல்லாம் எப்படி போகுது?”, கேட்டுக்கொண்டிருக்கும்போது,

உடனே ஹர்ஷா வீட்டை சுழன்று யாரையோ தேடினான்.அவன் எண்ணத்தை அறிந்த கிருஷ்ணஸ்வாமி, “ஹா…ஹா….அம்மா வீட்டுல இல்லடா ஷாப்பிங் போயிருக்கா” என சிரிப்புடன் கூறினார்.

“ஊஃப் , நல்லா போகுதுப்பா. ஆனா, வேலைல சேர்ந்து ஆறு மாசம் தானே ஆகுது, அதனால கிரைம் சம்பந்தமா எனக்கு இன்னும் வரலப்பா”.

“ஓ, நான் வேணும்னா உங்க ஹெட் மூர்த்திகிட்ட பேசவா?”..

“இல்லப்பா நானே பார்த்துக்கிறேன்”.

“சரி ஹர்ஷா நீ எத்தனை நாளைக்கு இப்படி டிடெக்ட்டிவ் வேலைய செய்யப்போற?”
என கிருஷ்ணஸ்வாமி கேட்டுக்கொண்டிருக்கும்போது,

அப்பா” என ஹர்ஷா இடையிட,

“ இரு ஹர்ஷா நான் பேசி முடிச்சுறேன். ஒரு வேளை உனக்கு வாழ்க்கை முழுதும் இதை தொடர எண்ணம்னா நீ ஏன் தனியா சொந்தமா டிடெக்ட்டிவ் ஆரம்பிக்க கூடாது ?”

“அப்பா நிஜமாவா!!!.......”
என சந்தோசமாக ஹர்ஷா கேட்டான்.

“ ஆமா ஹர்ஷா உனக்கு தேவையான எல்லா உதவியும் நான் பண்றேன்”
என கிருஷ்ணஸ்வாமி கூறும்போது,

“ ஆனா அம்மா”
என ஹர்ஷா இழுக்க

“ ஹர்ஷா ஒரு விஷயத்தை புரிஞ்சுக்கோ. உன் வாழ்க்கை உன் முடிவுதான். அந்த முடிவால் உனக்கு சாதகம் வந்தாலும் பாதகம் வந்தாலும் அது உன் பொறுப்பு.

அதை யோசிச்சு முடிவு பண்ணு.
அதே நேரம், நீ கஷ்டப்படும் போது நிச்சயமா நான் ஒரு நண்பனா உனக்கு தோள் கொடுப்பேன்.

உன் மேல நம்பிக்கை இருந்தா என்கிட்ட சொல்லு ஹர்ஷா. அப்புறம் இன்னொன்னு பெத்தவங்க கொடுக்குற அன்புக்கு நீங்க அன்பும் ,மதிப்பும் கொடுத்தா போதும். பயந்துகிட்டு இருக்க வேண்டியது இல்ல.

நீ செய்ற விஷயம் சரியா இருந்தா போதும். நிச்சயமா உன் மேல அன்பு இருக்குறவங்களுக்கு ஒரு நாள் புரியும்.

இப்போ சொல்லு உன்னோட முடிவு என்ன” என கிருஷ்ணஸ்வாமி கேட்க,

அப்பா நீங்க எனக்கு கிடைச்ச வரம்பா. எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலைப்பா” என கலங்கிய குரலில் கூறி ஹர்ஷா கிருஷ்ணஸ்வாமி யை அணைத்துக்கொண்டான்.

சிறுது நேர அமைதிக்கு பின் “அப்பா இன்னைக்கு இரவு சொல்றேன்ப்பா. இப்படியே வேலை செய்யவா இல்ல சொந்தமா டிடெக்ட்டிவ் ஆரம்பிக்கிறதான்னு.”

“சரி ஹர்ஷா.
நல்ல யோசுச்சு சொல்லு. நான் பேக்ட்ரிக்கு கிளம்புறேன் நேரம் ஆச்சு” என கூறி கிளம்பிவிட்டார்.

ஹர்ஷாவும் மதிய உணவை உண்டுவிட்டு, சிறிது நேரம் தூங்கி ஓய்வெடுத்துவிட்டு ராகுலை காண மாலை 3.30 மணிக்கு கிளம்பிச்சென்றான்.

ரெஸ்டாரெண்ட் சென்ற ஹர்ஷா அங்கு அமர்ந்து இருந்த ராகுலை கண்டு கை அசைத்துக்கொண்டே அவன் எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்தான்.

“ஹாய் டா….. வந்து ரொம்ப நேரமாச்சா?”.

“இல்லடா இப்போதான்”.

“ஓ! சரி சொல்லு என்ன விஷயமா பேசணும்ன?”.

“அது என்னோட வேலைப்பார்க்குற நண்பன் ஒருத்தருக்கு பிரச்சனை அதான் அதை பத்தி பேசணும்னு கூப்ட்டேன்டா”.

அப்பொழுது இருபத்தியேழு வயது மதிப்புள்ள இன்னொரு நபர் ராகுல் அருகில் அமர்ந்தார். அந்த புதிய நபரை யாரென ஹர்ஷா நோக்கும்போதே, ராகுல் “ஹர்ஷா இவன்தான் நான் சொன்ன நண்பன் பேர் கதிரவன்”.

“ஓ! ஹாய் கதிர்”

“ஹாய் சார்”

“சரி சொல்லுங்க என்ன பிரச்சனை”

“சார் நான் விரும்புற பொண்ண காணோம்,என்ன பண்றதுன்னு தெரியமாதான் உங்ககிட்ட யோசனை கேட்கலாம்னு வந்தோம்”.

“பொண்ண காணோம்னா!, போலீஸ்ல புகார் குடுத்தீங்களா?”

“இல்ல சார்”

“ ஏன் குடுக்கல கதிர்? ஒருத்தங்க காணாம போனா அங்க இருக்குற போலீஸ்ட்ட நீங்க புகார் குடுத்துருக்கணும். சரி பொண்ணு காணாம போய் எவ்வளவு நாள் ஆச்சு கதிர்?”.

“ஒருவாரம் ஆச்சு சார்” என்றான் தயக்கத்துடன்.

“ஒருவாரமா!....இவ்வளவுநாள் என்ன பண்ணிங்க?... ஏன் புகார் குடுக்கல?”

“அதுல சின்ன பிரச்சனை இருக்கு ஹர்ஷா” என்றான் ராகுல்.

“ என்னது?”

“ அந்த பொண்ணு இறந்துருக்கலாமோ” என ஒரு சந்தேகம்”

“ எதை வச்சு அப்படி சொல்லுறீங்க?....” என ஹர்ஷா வினவ கதிர் யோசனையுடன் இருந்தான்.

“ கதிர் நீங்க முழுசா சொன்னாதான் என்னால உதவ முடியும்”

“ எங்க ஊரு பண்ணையாரோட பொண்ணு வனிதாவும் நானும் நாலு வருஷமா விரும்புனோம்
. இந்த வருஷம் என்னோட வேலைல எனக்கு பதவி உயர்வும், சம்பளமும் அதிகமாச்சு. அதனால பண்ணையார்ட்ட தைரியமா எங்க காதலை சொல்லி கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணுனோம்.

ஆனா அதுக்குள்ள வனிதாவுக்கு தெரியமலையே சொந்தத்துல ஒரு பையன பார்த்து பேசி முடிச்சு, நிச்சய தேதி வரை முடிவு பண்ணிட்டாங்கனு அப்புறம்தான் தெரிஞ்சது.

அதுக்கு அப்புறம் என்ன பன்றதுன்னு தெரியாம நாங்க ஊர விட்டு ஓடிடலாம்னு முடிவு பண்ணினோம் . அதனால, இந்த மாசம் 6 ம் தேதி திங்கள் கிழமை அன்னிக்கு அதிகாலை 4 மணிக்கு நாங்க எப்பவும் சந்திக்கிற இடத்துக்கு வரசொன்னேன்.


அன்னிக்கு பார்த்து நல்ல மழை என்னோட வண்டியும் ஸ்டார்ட் ஆகல. அதனால மழைல ஓட்டமும் நடையுமா நான் அந்த இடத்துக்கு போனேன்.

ஆனா வனிதா அங்க இல்ல. நானும் ரொம்ப நேரம் காத்திருந்தேன்.ஆனா ,அவ கடைசிவரை வரவே இல்ல. சரின்னு நான் அவளுக்கு கால் பண்ணிட்டே இருந்தேன் ரிங் போயிட்டே இருந்ததே தவிர அவ எடுக்கல.


அதுக்குள்ள மழையும் நின்னு வெளிச்சமும் பரவ ஆரம்பிச்சுருச்சு.எனக்குள்ள ஒருவிதமான பதட்டமும், பயமும் வந்துச்சு. எங்க அவ அவுங்க அப்பாட்ட மாட்டிகிட்டாளோன்னு.

உடனே வனிதாவோட வீட்டுக்கு ஓடுனேன். ஆனா, அங்க அவ வீடு பூட்டி இருந்துச்சு. எனக்கு அடுத்து என்ன செய்றது எப்படி வனிதாவை தொடர்புகொள்றதுன்னும் தெரியல.

என்னால அந்த ஏமாற்றத்தை தாங்கிகவே முடியல சார். ஒருவிதமான கோவம், இயலாமைன்னு ஒரு தெளிவில்லாத மனநிலையில நான் வீட்டுக்கு வந்துட்டேன் சார் ”
என கலங்கிய குரலில் கதிர் சொல்லி முடித்தான்.

சிறிது நேர அமைதிக்கு பின் “சரி அப்போ எதை வைத்து நீங்க வனிதா இறந்துருக்கலாம்னு சொல்றீங்க?”
என ஹர்ஷா வினவ

“அது வந்து சார்” என கதிர் இழுக்க

“ கதிர் நீங்க வனிதா தற்கொலை பண்ணிருக்கலாம்னு நினைக்கிறீங்களா?”.

“ இல்ல சார். கொலையா இருக்குமோன்னு”

“ அதான் எப்படி, எதவச்சு சொல்றீங்க?”

“ சார் நான் என் வீட்டுக்கு போனவுடன் லைட்க்கூட போட தோணாம்மா அடுத்து என்ன செய்றதுன்னு திரும்ப திரும்ப யோசிச்சுகிட்டே இருந்தேன்.

அப்போதான் ஒரு விசயத்தை கவனிச்சே ரொம்ப நேரமா என் கை ஒருமாதிரி பிசுபிசுன்னு இருக்கேன்னு.
உடனே லைட்டை போட்டு பார்த்தா என் ரெண்டு கைளையும் ரத்தக்கறை.

அப்புறம் என் சட்டை எல்லாம் ஒரே ரத்தக்கறைய இருந்துச்சு சார்”.

“சரி நீங்க எதவச்சு இந்த ரதக்கறை வனிதாவோடதா இருக்கலாம்னு சந்தேகப்படுறீங்க” என ஹர்ஷா வினவினான்.

“சார் நான் ரொம்ப நேரம் இருந்தது நாங்க சந்திக்கிறதா சொன்ன இடத்துலதான். அத தவிர நான் வனிதாவோட வீட்டுக்கு போயிட்டு திரும்ப என் வீட்டுக்கு வந்துட்டேன். வேற எங்கயும் போகல.

அதோட ஏன் வனிதா அந்த இடத்துக்கு எனக்கு முன்னாடி வந்துருக்க கூடாது. அப்படி வந்துருந்தா அவளுக்கு எதாவது ஆபத்து வந்துருக்குமோ? அப்படின்னு யோசிக்கிறேன் சார்” என கதிர் கூறினான்.

“ சரி, அப்போ திரும்ப அந்த இடத்துக்கு போய் பார்த்திங்களா? அங்க ரத்தக்கறை இருந்துச்ச்சா?” என ஹர்ஷா கேட்க

“ போனேன் சார் காலையில ஒரு 8 மணி போல போய் பார்த்தேன் ஆனா அங்க ரத்தம் இருந்ததுக்கு அடையாளமா எந்த ஒரு தடயமும் இல்ல”.

“ஓ! சரி…… அதுக்கு அப்புறம் வனிதாவை தேடி போனிங்களா?”

“ ஆமா, சார் முதல் ரெண்டு நாள் வனிதா வீடு பூட்டி இருந்துச்சு வேலைகாரர்கள் யாருமே வரல சார்`”.

“ அப்போ எப்போ எல்லாரும் வந்தாங்க?”.

“ மூணாவது நாள் பண்ணையார் வீடு திறந்து இருந்துச்சு அதே மாதிரி வேலைக்காரர்களும் வந்துருந்தாங்க. ஆனா வனிதாவை மட்டும் அன்னிக்கு பார்க்கவே இல்ல சார்”.

“ இது எல்லாம் எப்பிடி உங்களுக்கு தெரியும்”.

“ நான் அவுங்க வீட்டுக்கு கொஞ்சம் தள்ளி இருக்குற டீ கடையில இருந்து கவனிச்சுக்கிட்டு இருந்தேன் சார்”.

“ சரி சொல்லுங்க கதிர் உங்க ஊரு எங்க இருக்கு?”.

“ இங்க இருந்து
இருநூறு கிலோமீட்டர் தொலைவுல அரங்கநாதபுரம் என்ற கிராமம் இருக்கு சார். அதான் என்னோட ஊரு.”

“ ரத்தக்கறை இருந்ததா நீங்க சொன்ன இடம் எங்க இருக்கு?”

“ அரங்கநாதபுரத்துல இருக்குற ஒற்றை கால் மண்டபத்துல சார்


“ஓ……. சரி, இதுல நான் என்ன உதவணும்னு எதிர்பார்க்குறீங்க?” என யோசனையுடன் ஹர்ஷா வினவ

“ என்னோட வனிதா பத்தி நீங்க தான் கண்டுபிடிச்சு சொல்லணும் ப்ளீஸ் சார்” என கதிர் கெஞ்சலுடன் கூறினான்..”

சிறிது யோசனைக்கு பின்னர் “சரி நான் கண்டுபிடிக்கிறேன்” என ஹர்ஷா கூறினான்.

“ ரொம்ப நன்றி சார்” என கதிரும், “ரொம்ப தேங்க்ஸ்டா” என ராகுலும் ஒரு சேரக் கூறினார்கள்.

“சரி கதிர், அந்த சட்டை இப்போ எங்க இருக்கு?. அதுல இன்னும் ரத்தக்கறை அப்பிடியே இருக்கா?”.

“ரத்தக்கறை இருக்கு. அந்த சட்டை இப்போ என் அறைல இருக்கு சார்”

“ ஓகே கதிர் அந்த சட்டை
யை நான் கேட்கும்போது கொடுங்க”,

“ கண்டிப்பா சார்”

” சரி கதிர் கூடிய விரைவில் கண்டுபிடிக்க முயற்சி செய்றேன் பை ப்ரெண்ட்ஸ்”.
என ஹர்ஷா கிளம்ப ஆயத்தமானான்

“ பை”
என இருவரும் கூறினார்கள்.

திடீரென ஹர்ஷா “கதிர் அது என்ன மண்டபம்ன்னு சொன்னீங்க?” என கேட்க

“ ஒற்றை கால் மண்டபம் சார்”

“ ஒற்றை கால் மண்டபமா??????” என யோசனையுடன் ஹர்ஷா முணுமுணுத்தப்படி சென்றான்.


இனி ஒற்றை கால் மண்டபத்திற்கான பயண

ஆயத்த பணி ………………


 
Top