Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் பார்வையில் செம்புலம் சேர்ந்த நீர்துளி.

Advertisement

Selvipandiyan

Active member
Member
ஷோபா குமரனின் செம்புலம் சேர்ந்த நீர் துளி.
ஒரு கதையை ஒரே சமயத்தில் படிக்கலாம்ன்னும் வேண்டாம்ன்னும் தோணுமா?அப்படி தோணிய கதை.படிக்கவும் முடியாம விடவும் முடியாம திண்டாடி படிச்ச கதை!
கதை முழுக்க துளசியும் மூர்த்தி சாரும்!மூர்த்தி சார்!மூர்த்தி சார்!காதலாய்,கனிவாய்,பாசமாய்,அழுகையாய்,காதலாய்,பிரிவாய்!ஆரம்பத்திலேயே கோடிட்டு காட்டி விட்டாலும் மனசு தவியாய் தவிக்கிறது!பட்டாம்பூச்சியாய் பறக்கும் பரட்டை குட்டி கோமல்.தாத்தாவின் பாதுகாப்பில் இருந்த பட்டுப்ப்பூச்சி பறந்து போய் வல்லூறுகளிடம் சிக்கி சின்னாபின்னமாகி மூர்த்தியின் சட்டைப்பாக்கெட்டில் வந்து பாதுகாப்பாய் ஒளிந்து கொள்கிறது!யாரை குற்றம் சொல்வது?அப்பாவின் பின்னால் சென்ற்றவளை சித்தியின் திட்டுகளும் அறியாமையும் சேர்ந்து கொள்ள,ஒரு சதிகாரனை நம்பி போனவளை பிய்த்து தின்ற்ற மிருகங்கள்!அவள் பட்ட சித்திரவதைகள்....சத்யன் ,மூர்த்தி கண்களில் பட்டு தப்பித்தாலும் இன்னும் இன்னும் அங்கு சீரழியும் குழந்தைகள் பெண்களின் நிலைமையை நினைத்தார் மனசு பதறுது!
மூ ர்த்தியிடம் மயங்கினாலும் தான் அவனுக்கு ஏற்றவள் இல்லை என ஒதுங்குவதும்,மூர்த்தியின் அத்தனை முயற்சிகளும் மனதை நெகிழவைக்குது!
மீண்டும் முளைத்த சிறகுகளுடன் தைரியமான துளசி!மணியின் முன் பேசும் வார்த்தைகள் அட!நமக்குத்தான் பி பி ஏறி போச்சு!கடைசி மூன்று அத்தியாயங்கள் படிக்கிறதுக்குள் அப்பப்பா!சதை தின்று பிழைக்கும் கூட்டம்,விடாது துரத்துவதும்,மணியின் கண்முன் நடக்கும் அவலங்களும்,தன் வீட்டு பெண்கள் என்றால் மட்டுமே துடிக்கும் மணிக்கு மற்ற பெண்களின் கூக்குரல் அப்போதுதான் கேட்கிறது!கூடா நட்பு கேடாய் முடிகிறது!அதில் பாதிக்கப்படும் குடும்பம்.கதையில் நான் ரசித்த துளசியின் மூர்த்தி மீதான காதல் அழகு!படிக்கட்டில் அமர்ந்து குடிக்கும் காபி,காகத்துக்கு போடும் பிஸ்கட்,காரக்குழம்பு ,தோட்ட வீடு,மகிழம்பூ மரம்,இருவாட்சி பறவை!இனிமையான இளையராஜாவின் பாடல்கள்!ஆனால் மனசு முழுவதும் பயத்துடனே படிச்சதால் இந்த அழகுகள் ரசிக்க முடியல!அந்த பயத்தை முடிவு வரைக்கும் கொண்டு வந்துட்டாங்க!இன்னும் எனக்கு மனசு அமைதியடையபில்லை.கதையை மறக்கவும் முடியாது!அன்றைக்கு என்னதான் நடந்ததுன்னு இன்னும் துளசி சொல்லவே இல்லியே?அதை கேட்கும் தைரியமும் எனக்கு இல்லை!சமீபத்தில் படிச்ச மூன்று கதைகள் இப்படி புலம்ப வைத்து விட்டது என்னை!
 
Top