Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் ஜன்னல் நிலவு 2

Advertisement

PAVIMURUGAN

New member
Member
அத்தியாயம் 2

அம்மா ... ம்மா.. டிபன் ரெடியா ? என்று கத்தியபடி வந்தாள் மகள்.

“ எல்லாம் ரெடி” அண்ணா வந்துட்டா சாப்பிடலாம் என்றார்.

“ஏன், உன் மகன் வந்தாதான் சாப்பாடு தருவியா”?
என்றாள் இடக்காக......

மகளது இடக்கில் கடுப்பானவர் ,
ஆமா,”முதல்ல அண்ணா வரட்டும் சேர்ந்து சாப்பிடலாம் என்றார்” .
ம்... உன் மகன பாத்தா, “நானும் எங்க அப்பாவும் உனக்கு கண்ணுக்கு தெரிவோமா?” என்றாள் மகள் .

அவளது கலாட்டாவில் டிவி பார்த்துக்கொண்டு இருந்த தந்தை துரை சிரிக்க...

என்னங்க,
இந்த பிள்ளைய பாருங்க ... இவளுக்குத்தான் நாள் முழுக்க ஊழியம் பாடுறேன் ;
ஆனா, “என்னைக்காவது வர பையன் கூட போட்டி போடுறா ?” என்றார் புகாராக.

“விடும்மா தேவி” அவ உன்கிட்ட விளையாடுறா... என்றவர் கறி வாங்க செல்ல...
..ம்மா மணி பத்து ஆகிட்டு அண்ணா வரநேரமாகிட்டு ,
அவள் வாசல் தாண்டி தெருவில் பார்க்க..

பபிலனும் வீட்டின் பக்கத்தில் வந்துவிட்டான் .

" பபி "... என்று அவன் கைப்பிடித்து அழைத்தவள்

வீட்டினுள்,
அம்மா என்று கத்தியபடி நுழைய
உள்ளிருந்து வேகமாக வந்தவர் ...

ம்மா,.. பபி ... பாசத்தை பரிமாறிக்கொள்ள

அதை பார்த்தவளுக்கு காதில் புகை வராத குறை தான் .
கடுப்பில் “போதும் போதும் வாங்க சாப்பிடலாம்” என்றாள் மகள் .

தங்கையை முறைத்தான் . தமயன் தாயிடம் ,
..ம்மா .. நம்ம பாசத்தை பார்த்து இவளுக்கு பொறாமை .
யாருக்குடா பொறாமை ?

உனக்கு தாண்டி எரும . “நல்ல தின்னு தின்னு யானை மாதிரி இருக்க”

“இன்னும் சாப்பாடு சாப்பாடு னு கேட்கிற” இருவரும் சண்டைக்கு தயாராக

தேவி நடுவில் வந்தவர், வந்ததும் ஆரம்பிச்சாசா...

ஏய், “நீதான் சும்மா இரேன்டி; இப்போதான் வந்து இருக்கான் “. அதுக்குள்ள ஏண்டி அவங்கிட்ட சண்டைக்கு நிக்குற,

ம்மா.. அவள் வாய் திறக்க ,
வாசலில் தந்தையின் சத்தம் கேட்க... அவர்பெற்றமக்கள் சண்டையை மறந்து தந்தையிடம் சென்றனர்.

“அ..ப்பா ..” என்றான் மகன்,
“ என்னப்பா நல்லாருக்கியா?” என்று அவனது தலை கோதி நலம் விசாரிக்க.

அந்த சின்ன தலைகோதலில் தான் எத்தனை எத்தனை ஆயிரம் ஆசைகள்...
தந்தைகள் எப்போதும் அப்படிதானே .. வெளிக்காட்டிக்கொள்ளதா பாசம் நிறைந்தவர்கள்.
அதுவும் துரையை சொல்லவே வேண்டாம்...
நிதானமானவர் ,அதிகம் வார்த்தைகளை செலவழியாதவர்,எதார்த்தமானவர் ,பிள்ளைகள் விஷயத்தில் அதிக கவனம். மொத்ததில் நல்லவர் .

பிள்ளைகளை அவரது வருமானத்தில் கடனில்லாத, “கோடீஸ்வரர்களாகவே வளர்த்துள்ளார்” .

நடுத்தர குடும்பம் கஷ்டம் என்றில்லை; தேவைக்கு ஏற்ப செலவுகள் “ஆடம்பரம் அறவே இல்லை.”

பிள்ளைகளையும் அப்படியே வளர்க்க...

அவர்களும் குடும்ப சூழலுக்கு ஏற்ப வளர்ந்தனர்.

அப்பாவிடம், “ஒரு பொருள் கேட்டு அது கிடைக்காது என்றால்?, தாயிடம் சிபாரிசு வருவார்கள்”.
அவரோ பிள்ளைகள் பேசுவதை நிதானமாக கேட்பவர் , “இறுதியில் அப்பா சொன்னா சரியாதான் இருக்கும் என்பார்”.

அம்மா, “நீங்க எப்பவும் இப்படித்தான்”
என்று பிள்ளைகள் குறை படுவது உண்டு .

தேவி அப்படித்தான், கணவன் மேல் அளவற்ற நம்பிக்கை .

தேவி மிகவும் அன்பானவர் . பிள்ளைகள் விஷயத்தில் வெள்ளந்தி . பிள்ளைகள் மேல் அளவு கடந்த பாசம் .

கணவருக்கு எதிராக ஒரு சொல் சொல்லாதவர் ; கணவன் மனைவி இருவரும் மனமொத்த தம்பதி . பெரிய சிறிய எந்த முடிவும் வீட்டில் கலந்தாலோசித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.

மொத்ததில் மகன் மிகவும் நல்லவன், பாசக்காரன் ,கொஞ்சம் முன் கோவம் கொண்ட வாலிபன் .
மகளோ அப்பா பிள்ளை .

அன்பான அழகான குடும்பம் ...
 

Advertisement

Top