Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'என் கண்களில் காண்பது உன் முகமே' அத்தியாயம் 9

Advertisement

என் கண்களில் காண்பது உன் முகமே அத்தியாயம் 9

அத்தியாயம்: 9 பெற்றெடுத்த வயிறு பதற, தன்மகனைத் தேடி அலைந்த தாய்

தாமரையிடம் தன் தாயை சந்திப்பதை தவறவிட்ட கதையை கௌதம் கூறத் தொடங்கினான்.

சென்னை ஏர்போர்ட்டிற்கு வந்த எனக்குக் கனெக்டிங்க் ஃப்ளைட்டிற்காக, அதாவது சென்னையையும் கோவையையும் இணைக்கும் விமான சேவைக்காக ஆறு மணி நேரம் காத்திருக்கப் பொறுமை இல்லை. என் தாயை சந்தித்து, அவர்களின் பாதங்ககளைப் பிடித்துக் கதறி அழவேண்டும் என்ற உந்துதலில் அவர்களை சூப்பர்சானிக் வேகத்தில் சந்திக்க நினைத்தேன்.

“காரணம்!?” குறுக்க பேசாத தாமரை, நீ ஏதாவது கேள்வி கேட்டா என் நினைவுச் சங்கிலிகள் அறுந்துவிடலாம்! இன்னும் சில ஞாபகங்கள் எனக்கு முற்றிலுமாகக் கிடைக்கவில்லை!

எனக்கு ஒன்று மட்டும் உறுதியாத் தெரியும்! மனிதனின் அனைத்து ஆசைகளும் முற்றிலுமாக நிறைவேறுவதில்லை! அவற்றில் பாதி அழிக்கப்படுகிறது! மீதி குறைப்பிரசவமாகிறது! மிகச் சில ஆசைகளே நிறைவேறுகிறதென்று!

கோவை எனக்குப் பழகிய ஊர்தானே என்று விமான நிலையத்திலிருந்து சென்னை மத்திய ரயில்நிலையத்திற்கு கால்டாக்சியில் ஓடி, ஓப்பன் டிக்கெட் எடுத்து, டிடிஆரிடம் கெஞ்சிக் கூத்தாடி இரண்டாவது இரண்டடுக்குக் குளிர்சாதன பெட்டிக்கு அந்த ரயில் டிக்கெட்டை மாற்றிக் கொண்டு, மதியம் 2.30 மணிக்கு சென்னையிலிருந்து கிளம்பி இரவோடிரவாக 10.15மணிக்கெல்லாம் கோவை சென்றடைந்து விடும் இன்டர்-சிட்டி விரைவுவண்டியில் நான் பயணித்தது என் தாய்க்குத் தெரியாது!

எல்லாவற்றிலும் பெரிய கொடுமை நான் அந்த ரயிலில் பயணித்ததைப் பற்றிய செய்தி எங்குமே இல்லை. ரெயில்வே ரிசர்வேஷன் அட்டவணையிலோ, ரயிலில் ஒட்டப்பட்ட சார்ட்டிலோ, எங்குமே என் பெயர் பதியப்பட்டிருக்கவில்லை என்பதுதான் அது. அன்று இரவே அம்மாவைப் பார்த்து விடலாம் என்று ஒரு சிறுகுழந்தையின் குதூகலத்துடன், பல மாதங்கள் பிரிந்திருந்த தாயை சந்திக்க விதி என்னைக் கையைப்பிடித்து அழைத்து வந்தது! ம்,,,கூம்,,, தாயையும் மகனையும் ஒரு வருடம் பிரித்த விதி இனிதான் எங்களை ஒன்று சேர்க்கவேண்டும்!” என்று பாதிக் கதையைக் கூறிவிட்டு களைப்போடு கண்களை மூடிக் கொண்டான் கௌதம்.

கோவையில் ஈசிச் சேரில் சாய்ந்து கிடந்த கற்பகத்தின் எண்ணங்கள் தொடர்ந்தன!

கற்பகம் சில மாதங்கள் கழித்துக் கொடுத்த புகாரின் அடிப்படையில் நடந்த காவல் துறையினரின் தேடல் கௌதம் டில்லியிலிருந்து சென்னை வரை விமானத்தில் பயணம் செய்தது வரைதான் இருந்தது!

அவன் வேலைபார்த்த இடத்திலிருந்து கிடைத்த தகவலின்படி வெளி நாட்டிலிருந்து இந்தியாவில் வந்து குடியேறிய கௌதம் அலுவலகத்தில் ஜாயின் பண்ணிய பின் சென்னை ஆஃபிசுக்கு ட்ரான்ஸ்ஃபர் வாங்கி உள்ளார் என்ற குறிப்போடு நின்று போயிருந்தது!!! அவர் மனைவி சிந்து கணவரின் ஆதரவு விசாவில் ஒரு குழந்தையோடு டில்லி திரும்பி இருந்தார், அதன் பிறகு அவரைப் பற்றிய எந்தக் குறிப்புகளும் டில்லி ஆபிசில் கிடைக்கவில்லை. சிந்து பற்றிய குறிப்புகளும் அவர்களுக்கு எங்குமே கிடைக்கவில்லை!

அவர்கள் தங்கியிருந்த அடுக்கு மாடி கட்டிடத்தில் இருந்த வாடகை வீடும் ஒரே வருடத்தில் பலர் கை மாறியிருந்ததால் அவர்களைப் பற்றிய தேடல் அப்படியே ஸ்டக் ஆகி அங்கேயே நின்று போனது!!! போலிஸ் டிபார்ட்மென்ட் அதற்கு மேல் கௌதமின் குடும்பத்தைப் பற்றி கவலைப்படாமல் அந்த ஃபைலை மூடிவிட்டு வேறு வேலைகளில் மூழ்கிப் போனது! அதிலும் ஒரு தமிழ்நாட்டுக்காரனைப் பற்றி அவர்களுக்கு என்ன கவலை!?

அவன் சென்னை அலுவலகத்திலும் ஜாயின் பண்ணவில்லை! டில்லி அலுவலகத்திற்கும் வரவில்லை. மொத்தத்தில் அரசு ரெக்கார்ட் படியும், அலுவலக ரெக்கார்ட் படியும் எந்தவிதமான தடயங்களும் இல்லாமல் முழுக் குடும்பமும் இந்தப் பிரபஞ்சத்திலிருந்து தொலைந்து போயிருந்தது! டில்லி அலுவலகம், அவன் அலுவலகத்தில் சேர ஒரு வருட லீன் பீரியட் கொடுத்து அவன் ஃபைலை தற்காலிகமாக மூடி வைத்திருந்தார்கள்.

‘தூக்கனாங்குருவிக்கூடு போல் மரம் முழுவதும் தொங்கும் இலவம்பஞ்சுக் காய் என்றாவது ஒருநாள் பழமாகப் பழுதுவிடும்; அன்று உண்டு மகிழலாம்’ என்று, ‘இலவு காத்த கிளியைப்’ போல அம்மா ஒரு புறமும், தாரா மறு புறமும் காத்திருக்க, அந்தக் காய் ஒரு நாள் முற்றி பஞ்சுகளாக வெடித்துச் சிதறியது,

தன் மகன் தான் தொலைத்த தன் ஞாபகங்களைத் தேடியலைந்து கொண்டிருக்கிறான் என்று கற்பகத்திற்குத் தெரியவில்லை!

தாராவோ வெடித்துச் சிதறிய இலவம் பஞ்சு எங்காவது பறந்து சென்றுவிடும் என்று தெரியாமல் தன் வேலையில் மூழ்கி இருந்தாள்.

“எந்திரிமா கற்பகம், இப்படியே உட்கார்ந்துக்கிட்டிருந்தா எப்படி? நான் உன் பெரியம்மா சொல்றேன், பெரியவுங்க வாக்கு என்னைக்குமே பொய்க்காது, உன் செல்லப் புள்ளை உன்னைச் சீக்கிரமே தேடி வருவான் பாரு!” என்று சொல்லி வாய் மூடும் முன் அவர்கள் வீட்டுக் கதவை அவளுடைய கணவர் விசுவுடைய ஆத்ம நண்பர் போஸ் விதியின் ரூபத்தில் வீதியில் நின்று தட்டினார்!

“வாங்க போஸ் என்ன இந்த நேரத்தில வந்திருக்கீங்க!” என்ற கற்பகத்தின் கேள்விக்குப் பதில் கூறாமல், மகிழ்சியில் ஒளிர்விடும் தரைச் சக்கரங்களாய் அவர் கண்கள் சுழல்வதைப் பார்த்தவள்,

“என்னோட விசு என்னைவிட்டுப் போன இத்தனை நாளில் இன்னைக்குத்தான், உங்களோட கண்ணில் இவ்வளவு சந்தோஷத்தைப் பார்க்கிறேன்! உங்களுக்கு என்னாச்சு போஸ் அண்ணா, கண்ணுக்குள்ள மத்தாப்புக்களின் வாண வேடிக்கையைப் பார்க்க முடியுது!?”

“உன்னோட கவலை எல்லாம் தீரப்போகுது தங்கச்சி! நான் உன்னோட புள்ளையை சென்னையில் பார்த்தேன்! அவர் கையில் ஒரு பெண் குழந்தை! அந்தக் குழந்தையோட சாயல், கௌதம் பக்கத்தில் அவன் கையைப் பிடுச்சுக்கிட்டிருந்த பொண்ணு மாதிரியே இருந்தது. அவங்கதான் உங்க மருமகளா இருக்கணும். உங்க பேத்தி கொள்ளை அழகா இருந்துச்சுமா!

நான் அவங்களைப் பார்த்தது ஒரு அம்மன் கோவிலில் வச்சுத்தான்! அது அவங்க வீட்டுக்குப் பக்கத்தில இருக்க அம்மன் கோயிலா இருக்கணும்.

நானும் அதே கோவிலிலிருந்து சாமி கும்பிட்டுட்டு வெளிய வரும் போதுதான் பார்த்தேன், ரெண்டு பேரும் சிரிச்சுச் சிரிச்சுப் பேசிக்கிட்டே, ரோடை க்ராஸ் பண்ணி அந்தப் பக்கமிருந்த ஒரு பெரிய பங்ளாக்குள்ள நுழைஞ்சு மறைஞ்சு போயிட்டாங்க!

கௌதம் ரோடை க்ராஸ் பண்றதுக்கு முன்னால என்னை ஒரு முறை தலை நிமிர்ந்து பார்த்தான். நானும் சிருச்சுக்கிட்டே, ‘கௌதம்னு’ கூப்பிட்டுக்கிட்டே பக்கத்துல போகப் பார்த்தேன் கற்பகம்! ஆனால் அவன் என்னைக் கண்டுக்கிட்டதாவே தெரியலை! அதைக் கேட்ட கற்பகத்தின் பெற்ற வயிறு துடிக்கத் தொடங்கியது!

“சின்னப் பையனா இருந்தப்ப எல்லாம் போஸ் அங்கிள், போஸ் அங்கிள்னு என்னையவே சுத்தி சுத்தி வருவான்! என்கிட்ட எவ்வளவு பாசமா இருப்பான்!” போஸ் புலம்ப,

“உனக்குத்தான் முடியெல்லாம் கொட்டி, முன் மண்டையில ஒரு பெரிய விளையாட்டு மைதானம் அளவுக்கு வழுக்கை விழுந்திருச்சே! கிழடு தட்டி, சொட்டையும், தொப்பையுமா இருக்க உன்னை எப்படிங்கோ அவனுக்கு அடையாளம் தெரியும்?!” பல்லுப் போன பெரியம்மா போசைப் பார்த்து நக்கலடிக்க,

“நீங்க சும்மா இருங்க ஆத்தா!” என்று பெரியம்மாவை அதட்டிய கற்பகம், அவ்வளவு நேரமும் உயிரற்ற ஜடமாய் ஈசிச் சேரில் சாய்ந்துகிடந்தவள், ஒரு லாலிபாப் திண்ணும் வாலிபப் பெண்போல் ஈசிச் சேரிலிருந்து துள்ளி எழுந்து,

“நீங்க உண்மையாவா சொல்றீங்க அண்ணா? அவன் யார்கூட வேணாலும் குடும்பம் நடத்தட்டும் அண்ணா! அந்த விஷயத்துல நாங்க அவனை எப்பவோ தண்ணி தெளிச்சு விட்டாச்சு! என்னை அவன் அம்மானு வாய் நிறையக் கூப்பிட்டு அதை நான் காது குளிரக் கேட்கணும், அம்புட்டுத்தான்! என் பேத்தியை வாரி வழிச்சு ஒரு முத்தம் குடுத்தாப் போதும், சுடுக்காட்டுல அப்படியே விசுவுக்குப் பக்கத்துல போய் நான் படுத்துருவேன்!

சென்னை வரை வந்தவன் என்னை ஒரு எட்டு வந்து பார்த்துட்டுப் போயிருக்கலாமே, இந்தா இருக்க சென்னையிலிருந்து கோவை வர, என்ன ராக்கெட்டா ஏறப் பொறான்?! ஆனால் எம்புள்ளை அப்படி எல்லாம் செய்ய மாட்டானே! என் முந்தானையவே புடிச்சுக்கிட்டுச் சுத்தி வந்த பிள்ளையாச்சே!” கற்பகம் கண்ணிலிருந்து கரகரவென்று கண்ணீர் கொட்டத் தொடங்கியது.

“இல்லை கற்பகம் நம்ம கௌதம் அப்படி எல்லாம் செய்ய மாட்டான், ஏதாவது சிக்கலில் இருப்பானா இருக்கும்!?”

“நீங்க வேற என் வயித்தைக் கலக்கிவிடாதீங்க அண்ணா, எம்புள்ளை ஏதோ காரணத்துக்காகத்தான் என்னை வந்து பார்க்காம இருக்கான், சென்னை வரை வந்தவனுக்கு கோவைக்கு வரவும் வழி தெரியும்! ஆனால் எனக்கு எம் புள்ளைய உடனே பார்க்கணும்! உமக்கு சென்னையில அவன் போன வீட்டுக்கு என்னைக் கரெக்டா கூட்டிக்கிட்டுப் போகமுடியுமா போஸ்!

“என்னோட நண்பன் விசுவுக்காக நான் இதுகூட செய்ய மாட்டேனா கற்பகம்? எப்பப் போகணும்னு சொல்லு, ஆஃபிசில் சொல்லிவிட்டு ட்யூட்டியை மாத்திவிட்டுட்டு உடனே வர்றேன். எனக்கு கிளம்ப கொஞ்ச நேரம் டைம் போதும்

“இன்னைக்கு நைட்டே கிளம்பலாமா அண்ணா? பெரிமா நீயும் எங்ககூட வர்றியா?” என்று கற்பகம் கேட்க,

“நீ போயிட்டு வாடாமா! உன் வீட்டை யாரும் தூக்கிட்டுப் போயிராம நான் பார்த்துக்கிறேன்!” கற்பகத்தின் மனம் வெகு நாட்கள் கழித்து ஆனந்தத்தில் சதிராடத் தொடங்கியது!

“போஸ் ரொம்ப நாள் கழிச்சு இன்னைக்குத்தான் என் மனம் நிம்மதி அடைஞ்சிருக்கு! அவன் கிட்டயிருந்து எந்தத் தொடர்புமே இல்லாம, எங்களோட தொப்புள் கொடி உறவே அறுந்து போச்சோனு நான் தவிச்ச தவிப்பு எனக்குத்தான் தெரியும், இன்னைக்கு ஐஸ் மழையில நனைஞ்சமாதிரி மனசு குளிர்ந்து போயிருச்சுப்பா!!!”

“சரி இன்னைக்கு ராத்திரி வண்டில சென்னை போக ரெடியா இரு கற்பகம், ரிசர்வேஷன் கிடைக்காது, நான் எப்படியாவது அவசர ஒதுக்கீட்டில (Emergency Quota) ரிசர்வேஷன் வாங்கிருவேன்” என்று போஸ் விடை பெற்றுச் செல்ல,

“ஆத்தா மஹராசி இன்னைக்கவது நீ தூங்கு, நான் வேணா நீ உன் புருஷனையும், மகனையும் நினைச்சுத் தினம், தினம் ஏங்கி ஏங்கிப் பாடுவியே அந்தப் பாட்டை எடுத்துவிடவா?” என்று பெரியம்மா கேட்க,

“ஐய! சும்மாவே நீ பாடுனா, கே.பி. சுந்தராம்பாள் வாய்சில் மிம்மிக்கிரி பண்ற மாதிரி இருக்கும், வேணாம் அந்த அழகான பாட்டை நீ பாடி அதை கொலை பண்ணாத, நானே பாடிக்கிறேன்!” என்று அழகான குரலில் மெல்லிசையில் பாடத் தொடங்கினாள் கற்பகம்.

நெஞ்சம் மறப்பதில்லை! அது தன் நினைவை இழக்கவில்லை!
நான் காத்திருந்தேன், உன்னைப் பார்த்திருந்தேன்!
கண்களும் மூடவில்லை; என் கண்களும் மூடவில்லை!
காலங்கள் தோறும் உன் மடி தேடி கலங்கும் என் மனமே!
வரும் காற்றினிலும், பெரும் கனவினிலும்,
நான் காண்பது உன் முகமே!


காற்றில் கலந்து வந்த அதே பாடலைத்தான் கௌதமும் தாமரையின் முன்னால் பாடிக் கொண்டிருந்தான்.

“இது என் அம்மாவின் ஸ்பெஷல் பாட்டு! அவங்க எங்கயோ இருந்து எனக்காக இந்தப் பாட்டைப் பாடிக்கிட்டிருக்காங்க! இங்க பாரு என் உடம்பில் ஏற்படும் அதிர்வுகளை!”

இல்ல சார் இந்த விஞ்ஞான யுகத்தில், வேறு யாராவது நீங்க சொல்றதைக் கேட்டா உங்களைப் பைத்தியம்னு சொல்வாங்க!

இல்ல தாமரை இதுதான் உண்மை! நம் எல்லாரோட உணர்வுகளும் காந்த சக்திகளா, ரேடியோ அலைகளா இந்த ப்ரபஞ்சம் முழுவதும் நிறைஞ்சிருக்கு! அந்த அலைவரிசைக்கு உன் மூளையை ட்யூன் பண்ணனும்!” அவள் சிரிப்பைக் கண்டு கொள்ளாமல் தன் பேச்சைத் தொடர்ந்தான் கௌதம்.

நம்மளோட மூளை நிறைய புதிர்களை தனக்குள்ள ஒளிச்சு வச்சிருக்கும்! நான் அனைத்தையும் மறந்த காலத்தில் கூட இந்தப் பாடல் வரிகள் எனக்கு மறக்கலை. இது என்னோட அம்மாவுக்கு ரொம்ப ரொம்பப் புடிச்ச பாட்டு! அடிக்கடி காரணமே இல்லாம இந்தப் பாட்டைப் பாடுவாங்க தாமரை! இந்தப் பாடல் வரிகளும் அதன் இசையும் என் அடி மனசுல அப்படியே தங்கிப் போயிருக்கணும்!

தாரா இந்தப் பாட்டைக் கேட்டால் காரணமே இல்லாம கண்கலங்கிருவா, அதுவும்

‘என் கனவில் காண்பது உன் முகமேனு’ நான் பாடினா,

‘என் கண்களில் காண்பது உன் முகமேனு’

அந்த வரிகளை அவ மாத்திப் பாடுவா! என் பவிக்குட்டிகூட இந்தப் பாட்டைக் கேட்டா கைதட்டிக் குதூகலிக்கும். இப்பவும் அந்தக் குழந்தையின் முகத்தில் ஒரு துள்ளல் இருந்தது.

“தாராம்மா! தாராம்மா, என்ற குழந்தை, “ரயிலை நிப்பாட்டுப்பா, வீட்டுக்கு போலாம்பா, தாராம்மாட்டப் போலாம்பா என்று குதிக்கத் தொடங்கியது!

“பவிமா நீ அப்பா மடில உட்கார்ந்துக்கிட்டா உனக்கு டாடி, தாத்தா, பாட்டி கதை எல்லாம் சொல்வேன்!”

“யாரு, அம்மாப் பார்க்கவருமே, கிரான்ட்பா கிரான்ட்மாவா!? அங்கிள் கூட வருவாரே!? என்று குழந்தை குழப்பத்தோடு கேள்வி கேட்க,

“இல்லடா, இது அப்பாவோட மம்மி, டாடி!” என்று கௌதம் கூற,

“சொல்லு சொல்லு என்று மடியிலிருந்து கொண்டே குதித்த குழந்தை, “கதை முடிஞ்சவுடன், தாராம்மா வந்திருவாங்களா?” என்று முகம் முழுவதும் கேள்வியோடு அவனை வினவ,

“இந்த ஆஸ்பெக்டையே நான் யோசிக்கலை தாமரை! குழந்தை இவ்வளவு தூரம் தாராவைத் தேடும்னு எனக்குத் தெரியாமப் போச்சே!” என்று அவன் கூற,

“உங்க கண்ணுலையும் குழந்தையின் அதே தேடல் இருக்கு சார், என்ன குழந்தைகளுக்கு நடிக்கத் தெரியாது! பெரியவுங்க நாமதான் உலகப் புகழ்பெற்ற கலைஞரான சார்ளிசாப்ளின் ரேஞ்சுக்கு நடிப்போம்!”

“நீ ரொம்ப ஷார்ப் தாமரை! நான் என்னை எவ்வளவு ஏமாத்திக்க நினைச்சாலும், நான் எவ்வளவு கோபமா விரட்டினாலும் நம்ம காலையே சுத்தி வரும் நாயைப் போல என் தாராவின் நினைவுகளிலிருந்து என்னால வெளிய வரமுடியலை! எவ்வளவு விரட்டினாலும் நம் காதைச் சுத்தி ரீங்காரமிடும் கொசு மாதிரி, இடைவிடாம அவளோட குரல் என் காதுக்குள்ள ரீங்காரமிட்டுக்கிட்டே இருக்கு! அதுமட்டுமில்லை,

என்னோட அம்மா கற்பகமோ, தாராவோ இந்த ஸ்பெஷல் பாடலை உணர்ச்சிப் பெருக்கோடு எங்க இருந்தோ இப்பப் பாடிக்கிட்டிருக்காங்க, அதை என் உடம்போட அதிர்வுகளினால் என்னால உணர முடியுது, பாரு எப்படி உடம்பெல்லாம் புல்லருச்சுப் போயிருக்குதுனு!?” மூடப்படாத அவன் கரங்களிலிருந்த மயிர்க்கால்கள் எழுந்து நிற்பதை அவளால் பார்க்க முடிந்தது!

“கௌதம் நீங்க முதலில் கத்துக்க வேண்டியது மன அமைதியை! இதுமாதிரி தன் சுமையை இறக்கி வைக்காத ஒரு சூல்கொண்ட தாய் போல் உங்க உணர்வுகளைத் தூக்கிக் கொண்டே அலைவது ரொம்பத் தப்பு! அந்தத் தாய் கூட நேரம் வந்தவுடன், தன் சுமையை இறக்கி வச்சுருவாங்க! நீங்க சொன்ன மாதிரி உங்க அப்பா, அம்மா கதையை சொல்லுங்க, உங்களோட இரத்த அழுத்தம் குறைஞ்சு உங்களுக்கு ஒரு மன அமைதி கிடைக்கிதானு பார்ப்போம். ஏன்னா, எப்பவுமே பெற்றோர் பற்றிய நினைவுகள் மன அமைதியைத்தான் கொடுக்கும்!”

“நீ சொல்றது ரொம்பச் சரிடா, பிறந்த குழந்தை அன்னைக்கே குப்புற கவிழ்ந்து, தவழ்ந்து, அமர்ந்து, நடந்து, ஓடி, விளையாடி, அன்னைக்கே ஒரு முழுமையான வாலிபனா வளரத் துடிக்கிற மாதிரி, என் மனம் கரையைக் கடக்கத் துடிக்கும் சுனாமி பேரலை போல ஆங்காரமா நிதானமே இல்லாம நடனம் ஆடிக்கிட்டிருக்கு!! இந்த இடைவிடாதத் தேடலில் என் மூளை வெடித்துச் சிதறிருமோனு எனக்கு ரொம்பப் பயமா இருக்கு!”

தாமரை அவன் கரங்களைத் தன் கரத்தில் எடுத்து, அதை அன்பாய்த் தட்டிக் கொடுத்தவள், “என்னை உங்களோட ரயில் ஸ்நேகிதினு நான் பிரகடனப்படுத்தி இருக்கேன், நாம் சேர வேண்டிய இலக்கை அடையும் வரை உங்களைப் பத்திரமா பாதுகாப்பது இந்தத் தோழியின் பொறுப்பு! உங்க அலைபாயும் மூளையையும் அதன் அனைத்து வழித்தடங்களையும், ட்ராஃப்ஃபிக் ஜாமாகாம, ஒருமுகப் படுத்துங்க, உங்களோட நெர்வஸ் டென்ஷனை உங்களோட நடுங்கும் விரல்களின் மூலமா என்னால புரிஞ்சுக்க முடியுது. உங்களோட நரம்புகள், அமைதியாக ஏதாவது மாத்திரை இருக்கா?”

“இருக்கு, ஆனால் அதை நான் இப்ப உபயோகிக்கப் போறதில்லை! ஏன்னா இந்த மாதிரி மூளை ஓவர் எஃஸைட்டட் ஸ்டேட்டஸ்ல இருக்கும் பொழுது மனதை எப்படிக் கட்டுப்படுத்தணும்னு தாரா சொல்லிக் கொடுத்திருக்காங்க, அவங்களைப் பொறுத்தவரை மருந்து மாத்திரைகளே நம்மை அடிமைப்படுத்தக் கூடிய போதைப் பொருட்கள் என்பது அவங்களோட சித்தாந்தம், ஆனா ஒரு அலோபதி மருத்துவரான அவங்களால முழுசா அதை பிராக்டிஸ் பண்ண முடியலை!” என்றவன்,

கண்மூடி மனதை ஒரு நிலைப்படுத்தி ஓர் ஆழ்நிலை தியானத்திற்குச் சென்றான். அவன் மனம் தெளிந்த நீரோடை போல் அமைதி அடைய, அவனுடைய தந்தை விசுவும், தாய் கற்பகமும் அவன் எண்ணங்களில் நிறைந்தார்கள்.

அவனுக்குத் தொந்தரவு கொடுக்காத வண்ணம் தடதடக்கும் ரயிலில் பவியைக் கூட்டிக் கொண்டு அந்த குளிர் சாதனப் பெட்டிகள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த நடைபாதையில் நடந்து, ஓடி, சிரித்து, அவளோடு விளையாடிய தாமரை, கண்ணாடி ஜன்னல்கள் வழியாக ஓடிய, மரங்களையும், செடிகளையும், இயற்கை காட்சிகளையும் குழந்தைக்குக் காட்டி வெளியே ரயிலோடு ஓடும் காட்சிகளோடு அவர்களும் ஓடி மகிழ்ந்தவர்கள்,

மறுபடியும் தன் பெட்டிக்கு திரும்பி வந்த பொழுது, கௌதம் அலைகள் இல்லாதத் தாமரைத் தடாகம் போல் இவர்களைப் பார்த்து மென்புருவல் பூக்க, அவனுக்கெதிரில் குழந்தையோடு அமர்ந்து கொண்டவள், “இப்பச் சொல்லுங்க கௌதம், எந்தக் கதை வேணா ஷேர் பண்ணுங்க, நான் கேட்க ரெடியா இருக்கேன்” என்றாள்.

“என் நினைவில் இருப்பது, தாராவோடு நான் வாழ்ந்த ஒரு வருட வாழ்க்கையும், என் தாய் தந்தையரோடு நான் வாழ்ந்த சிங்கார வாழ்க்கையும்தான், என் நினைவில் வர மறுப்பது, சிந்துவோடு நான் வாழ்ந்த வாழ்க்கை!”

“நினைவுக்கு வராத கதையை இப்ப மறந்திருவோம், இப்ப உங்க நினைவுகளில் நடனமாடும் மீதிக் கதைகளைப் பற்றி பேசுவோம். தொடரும்.Comp story ukkum IMG-001.jpg


 
This episode gave many new news,
romba rasitha varikal ilampanji
Namathu ennangal electromagnetic waves pola intha pirapanjamla suthittu irukum enpathu unmai
Nam unaivukalluku oru thani patta sakthi irukirathu athu ariviyalukku appar pattathu
unmaithan mathiraikal nammai atharku adimai akkum athu niranthara thervum illai
 
Top