Chapter 5
என் கனவுகளின் எண்ணிக்கைகள்
நீண்டு கொண்டே போகிறது,
உன்னுடன் வாழப்போகும் நாட்களை எண்ணி...
நாட்கள் தான் சென்றதே தவிர அம்மாவின் வாயில் இருந்து எந்த வார்த்தைகளையும் வர வைக்க முடியவில்லை, எதை கேட்டாலும் எந்த பதிலும் சொல்லாது அமைதி காக்கும் அம்மாவை பார்க்கும்பொது கோபம் கோபமாக வந்தது அவளுக்கு.
“அம்மா அவரை பத்தி ஏன் அப்பாக்கிட்டே சொல்லவே இல்லை”
“நேரம் வரும்போது சொல்லிக்கலாம்” இட்லி தட்டில் மாவை ஊற்றிக்கொண்டே சொன்னார் அருணா.
“நீங்க ஏதாவது மறைக்கறீங்களா” அம்மாவின் முகத்தை ஆழ்ந்து பார்த்தபடியே கேட்டாள்.
“உனக்கு அப்படி தோனுதா”
“ஆமா உங்களுக்கு ஒரு அண்ணன் இருக்கிறது, அவருக்கு ஒரு மகன் இருக்கிறது, அவர் இங்கே வந்து தங்கினது எல்லாத்தையும் அப்பாகிட்டே மறைச்சிட்டு தானே இருக்கீங்க. ஏன் மா” முதலில் கோபமாக கேட்டாலும் முடிவில் ஏதாவது விடை தெரிந்து விடாதா என்ற ஆதங்கம் இருந்தது அவள் குரலில்.
“மறைக்க நினைக்கல கவி, நேரம் வரும்போது சொல்லிக்கிறேன் அவ்வளவு தான்”. முடிவாக சொல்லிவிட்ட பிறகு என்ன கேட்க முடியும்.
இதென்ன பதில் என்று நினைத்தாலும் அதற்கு மேல் அம்மாவிடம் துருவி கேட்பதில் அவளுக்கு அவ்வளவு விருப்பம் இல்லை.
வழக்கம் போல நாட்கள் சென்றாலும் அதில் ஏதோ குறை இருப்பதாகவே அவளுக்கு பட்டது. நிறைவு பெறாத கவிதை போல, முடிவு பெறாத பாடல் போல, முற்று பெறாத வார்த்தைகள் போல அவள் வாழ்வில் சில நாட்களே வந்து சென்றவன் முடிவிலியாக நீண்டு கொண்டே இருந்தான்.
அவள் அவனை மறந்து விட்டாள் என்று கூற முடியாது ஆனால் அவன் நினைவை மறக்க முயன்று கொண்டிருக்கிறாள், முடியாமல் தவிக்கிறாள்.
ஒரு நாள் சுகுமார் வந்து, “மேகாம்மா அப்பா உனக்கு கல்யாணம் பேசி இருக்கேன்” என்று ஒரு குண்டை தூக்கி போட்டார்.
கல்யாணாமா, என்ன இது அவள் படித்து வக்கீல் ஆகி, ஒரு லா ஃபர்ம் வைக்க வேண்டும் என்பது தானே அவள் கனவு. தந்தையிடம் கூட அதை பற்றி கூறி இருக்க இதென்ன திடீர் கல்யாணம் அதை தந்தையிடமே கேட்டாள்.
“நீ சொன்னது அப்பாக்கு நியாபகம் இல்லாம இல்லம்மா, ஆனா இந்த மாப்பிள்ளை என்னோட ஃப்ரெண்ட் பையன், இப்போ ஊருக்கு போனேன்ல அது விஷயமா பேசத்தான் போய்ருந்தேன். உன்னோட விருப்பத்தை சொன்னேன் பையனுக்கு அதுல எந்த பிரெச்சனையும் இல்லையாம். அதனால் கல்யாணத்தை வச்சுக்கலாம் அப்புறம் கூட பிராக்டிஸ் பண்ணட்டும்னு அந்த பையன் சொல்லிட்டார் மா”
தனது கனவுக்கு எந்த பாதகமும் இருக்காது என்றது வரையில் சரிதான், ஆனால் இந்த திருமணம் இப்போது தேவை தானா மனம் கலங்கிய நீராக குழம்பி கிடக்க,
“எனக்கு கொஞ்சம் டைம் வேணும்பா” என்று கூறினாள்.
“எடுத்துக்கோம்மா, ஆனா அப்பா முடிவை நீ மீற மாட்டேன்னு சொல்லிட்டு வந்திருக்கேன். யோசிச்சு சொல்லும்மா” என்று தலையை தடவி கொடுத்து விட்டு சென்றார் சுகுமார்.
அவர் சென்றதும் அம்மாவை தேடி வந்தாள் மேகவி, “அம்மா அப்பா சொன்னது கேட்டுச்சா”
“ம்ம்”
“நீ ஏம்மா எதுவுமே சொல்ல மாட்டேங்கிற”
“இதுல நான் சொல்ல என்ன இருக்கு, உன் மனசில என்ன இருக்கோ அதை உங்கப்பாகிட்டே சொல்லு” விட்டேற்றியான அன்னையின் பதிலில் கோபமுற்றவள், “எனக்கு ஓகேதான்னு சொல்ல போறேன்” என்றாள்.
“சரி” அவளை திரும்பி கூட பார்க்காமல் அருணா சொல்ல, கோபமாக அங்கிருந்து அவளது அறைக்கு சென்றாள். கதவை ஓங்கி அறைந்து சாற்றியவள்
மெத்தையில் விழுந்தாள். மனம் ஆற்றாமையில் கதறியது, என்ன வேணும் உனக்கு, இத்தனை நாள் அப்பா பேச்சுக்கும் மறு பேச்சு சொல்லாம தானே இருந்த, இப்போ மட்டும் என்ன அப்பா சொன்னா அது உன்னோட நல்லதுக்காக தானே இருக்கும். அதை விட்டுட்டு இங்கே இல்லாதவனை நினைச்சு உனக்காகவே எல்லாம் செய்யிற உங்கப்பா மனசை நோகடிக்க போறியா. யார் அவன், அவனோட பேரை தவிர வேற ஏதாவது தெரியுமா உனக்கு, அவனுக்காக பெத்து வளர்த்த அப்பாவை ஏமாத்த போறியா. மனசாட்சி கேள்வி கேட்க
“ஏய் நிறுத்து நான் ஏன் என்னோட அப்பாவை ஏமாத்தனும், அவர் தான் எனக்கு எல்லாமே அவருக்காக என்ன வேணும்னா செய்வேன். அதுவும் இல்லாம அவனை என்ன நான் காதலிக்கிறேனா, இல்லை அவன் தான் என்னோட புருஷனா. அவன் யாரோ நான் யாரோ அப்படி இருக்கும்போது அவனுக்காக அது இதுன்னு என்னை குழப்பாதே” மானசாட்சியை திட்டி தீர்த்து விட்டு படுத்து கொண்டாள்.
மறுநாள் காலையில் அவள் பதிலுக்காக காத்திருந்த தந்தைக்கு ஏமாற்றம் அளிக்காமல் “நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் பா” என்று கூறி சந்தோஷத்தை கொடுத்தாள்.
“என் செல்லம், நீ அப்பா பேச்சை மீற மாட்டேன்னு எனக்கு தெரியும்மா” என அவள் கைகளை பற்றிக்கொண்டார் தந்தை.
தந்தைக்கு சந்தோஷத்தை கொடுத்து விட்டாள், ஆனால் இதில் அவளுக்கு முழு சந்தோஷமா என்று கேட்டால், இதயம் பெண்டுலம் போல அங்கும் இங்கும் ஆடி இல்லை என்று கூறியது.
கல்யாணம் என்று முழுதாக சந்தோஷப்பட முடியாமல் தொண்டைக்குள் மாட்டிக்கொண்ட மீன் முள்ளாய் அவன் நினைப்பு நெஞ்சுக்குள் சிக்கிக்கொண்டு தவிக்க வைத்தது.
வேண்டாம், கானல் நீர் போல காதலை காட்டி சென்ற அவனை மறந்து விடு என்று அடிக்கொரு முறை நினைவில் நிறுத்தி பார்த்தாள் ஆனால் கூறுகெட்ட மனம் கேட்க மறுத்து அவளை சிதைத்து கொண்டிருந்தது.
அவனை ஏன் குற்றம் சொல்கிறாய் அவனாக வந்து உன்னை காதலிக்கிறேன் என்று கூறவில்லையே, பிறகு எப்படி அவனை காரணம் சொல்வாய். ஆமாம் வாயால் சொல்லவில்லை தான், ஆனால் அவன் கண்கள்.. அது என்னிடம் ஆயிரம் கதைகள் சொன்னதே. அவன் உணர்வுகளை கண்கள் மூலம் எனக்குள் கடத்தி சென்றானே. அது எப்படி பொய்யாகும் என் உணர்வுகள் கூட பொய்த்து போகுமா என்ன, விம்மி வெடித்து வெளியே வர துடித்த அழுகையை உள்ளுக்குள் பூட்டி வைத்து அடக்கி கொண்டு வலம் வந்தாள்.
அவள் வாழ்க்கை முடிவு செய்யப்பட்டு விட்டது. இனி அதில் மாற்றம் இல்லை, மாற வேண்டியது அவள் தான். இன்னும் இரண்டு நாளில் அவளுக்கு நிச்சயதார்த்தம், அதில் கவனம் வைக்க வேண்டும். முடிவு செய்து கொண்டு விடியலை நோக்கி காத்திருக்க துவங்கினாள்.
இதில் தனது மகனுக்கு பெண் கொடுக்கவில்லை என்று சுகுமாரின் தங்கை கல்யாணி வேறு வீட்டு முற்றத்தில் வந்து ஒப்பாரி வைத்து அழுது கொண்டிருந்தாள்.
“எல்லாம் உன்னால தான், எங்கண்ணனை எனக்கு எதிரா திருப்பி விட்டு என் பையனுக்கு பொண்ணு தர விடாம செஞ்சிட்டே” ஓரத்தில் அமைதியாக நின்று கொண்டிருந்த அருணாவை வம்பிழுத்து கொண்டிருந்தாள் கல்யாணி.
“கல்யாணி, என் பொண்ணு வாழ்க்கையிலே முடிவெடுக்க அவ யாரு, இது நான் பார்த்த சம்மந்தம் சும்மா கத்திட்டு இருக்காம விசேஷத்துக்கு வர பாரு”.
“அதெப்படிண்ணா சிங்கம் மாதிரி நான் பிள்ளையை பெத்து வச்சிருக்கும்போது நீ அசல்ல பொண்ணு கொடுப்ப”
“என்னது சிங்கம் மாதிரியா, நாம என்ன காட்டிலேயா வாழ்ந்துட்டு இருக்கோம், ஆம்பளை சிங்கம் சும்மாவே படுத்து கிடக்கும் பொம்பளை சிங்கம் வேட்டையாடி கொண்டு வந்து குடும்பத்தை காப்பாத்தும்னு சொல்றதுக்கு. உன் மகனுக்கு என்ன தகுதி இருக்கு என் பொண்ணை கல்யாணம் பண்ண. சமூகத்துல நல்ல நிலையிலே இருக்கிற ஒருத்தருக்கு தான் என் பொண்ணை கட்டி கொடுப்பேன். என் தங்கச்சியா இந்த வீட்டு விசேஷத்திலே கலந்துக்கிறதுன்னா வா, இந்த முறை நுறை எல்லாம் சொல்லிட்டு பொண்ணு கேட்கறதுன்னா வரவே வேண்டாம் சொல்லிட்டேன்” என்றார் கறாராக.
சுகுமார் முடிவாக சொல்லிவிட, “அண்ணா என்ன இப்படி சொல்லிட்டே” என பதறி போன கல்யாணி, “நம்ம சொந்தம் விட்டு போய்ட கூடாதுன்னு நினைச்சேன். சம்மந்தம் பண்ணா தான் நாம சொந்தமா என்ன. எப்பவும் எனக்கு நீ அண்ணன் உனக்கு இருக்கிற ஒரே தங்கச்சி நான் தானே. இப்படி ஒரேயடியா வரவே வேண்டாம்னு சொன்னா என்னால தாங்கிக்க முடியுமா” அழுவது போல நடித்து நீலி கண்ணீர் வடித்தாள்.
அதற்கும் ஒரு படி மேலே சென்று அவள் மகன் மதன், “மாமா அம்மா ஏதோ உலறிட்டு இருக்கு, நீங்க ஃபங்சன் வேலை ஏதாவது இருந்தா சொல்லுங்க நான் செய்யறேன்” என்று முன் வந்து நின்றான்.
அவனுக்கு எப்போதும் செலவுக்கு காசு வேண்டும், படிக்காமல் வேலை வெட்டிக்கு போகாமல் சுற்றி கொண்டிருக்கும் அவனுக்கு காசு தர அவன் தந்தை மாணிக்கத்திற்கு வக்கில்லை. திருமணம் முடிந்ததில் இருந்து அண்ணனிடம் சுரண்டி சுரண்டி தான் குடும்பத்தையே ஓட்டிக்கொண்டிருக்கிறாள் கல்யாணி. இதில் அவர்களையே பகைத்து கொண்டால் சிகரெட்டும் தண்ணியுமாக கணக்கு பார்க்காமல் செய்யும் செலவுக்கு பணத்திற்கு எங்கே செல்வது.
அழகு மங்கையான மேகவினி மீது ஆசை உண்டு தான், திருமணம் செய்து வைத்தால் அவள் படிப்பிற்கு அவளே இவர்கள் எல்லாருக்கும் சோறு போட்டு விடுவாள், கூடவே சொத்தும் வரும் என்று நினைத்திருந்தான். ஆனால் இப்போது திருமணமும் நடக்காமல் மாமனையும் பகைத்து கொண்டு சில்லறை செலவுக்கு கூட தடுமாறிகொண்டிருக்க அவன் தயாராக இல்லை. அதனால் மேகவி மீது கொண்ட ஆசையை அப்படியே ஓரங்கட்டி விட்டு மாமாவுக்கு கூஜா தூக்க முடிவு செய்து விட்டான்.
கல்யாணியும் மதனும் மாறி பேசியதில் கொஞ்சம் அமைதியான சுகுமார், சரி சரி என்று சென்று விட்டார்.
அவர் சென்ற பிறகும் அங்கேயே நின்று மதன் கள்ளத்தனமாக அவளை பார்த்து கொண்டிருந்ததையும், அவன் பார்வை அவள் மீது ஏக்கமாக பதிந்து மீள்வதையும் ஒரு வித அசூயையுடன் உணர்ந்து கொண்டு தான் இருந்தாள் மேகவி.
அப்போது பக்கத்தில் வந்த சஞ்சய் “நீ வீரா அத்தானையே கல்யாணம் பண்ணிக்கலாம்” என்று கூறி விட்டு சென்றான்.
“என்ன” அவன் சொன்ன வார்த்தைகளை கேட்டு விக்கித்து நின்றாள் மேகவினி.
தம்பி கூறிவிட்டு சென்று விட இவன் ஏன் இப்படி சொன்னான், ஒருவேளை வீரா இவனிடம் ஏதாவது கூறி இருப்பானோ, வேகமாக தம்பியை தேடி சென்றாள்.
“டே சஞ்சய் ஏன் அப்படி சொன்ன”
“எப்படி என்ன சொன்னேன்”
“வீராவையே கல்யாணம் பண்ணிக்கலாம் சொன்னியே, எதுக்காக அப்படி சொன்ன”
“தோணுச்சு சொன்னேன்”
“விளையாடாத சஞ்சய், சும்மா எப்படி அப்படி தோணும். அவர் ஏதாவது இது போல உன்கிட்டே பேசினாரா”
“அவர் எதுவும் பேசலை, ஆனா அத்தான் எவ்வளவு ஜென்டில் தெரியுமாக்கா, இந்த மதன் மாதிரி திருட்டு பார்வை எல்லாம் பார்க்க மாட்டார். கண்ணை பார்த்து பேசுவார்” சின்னவன் சிலாகித்து சொன்னதில் அவள் தலை ஆமோதிப்பாய் அசைந்தது.
”அக்கா என்ன யோசிக்கிற” அவள் அப்படியே நிற்கவும் அவளை பிடித்து உலுக்கினான் தம்பி.
“ஹா ஒண்ணுமில்லை, ஆமா உனக்கு எப்படி இதெல்லாம் தெரிஞ்சது”
“ஏன்கா, அப்பா இல்லாத நேரம் நம்ம வீட்டுல ஒரு ஆம்பளை தங்கராறு அவர் யாரு என்ன எப்படிபட்டவர்னு தெறிஞ்சுக்காம விட்டுடுவேனா”
“நிஜமாவாடா, அவரை பத்தி உனக்கு தெரியுமா”
“ஆமா அவர் நல்லவர்னு தெரியும். யாரையும் கள்ள பார்வை பார்க்க மாட்டார்னு தெரியும். எதுவா இருந்தாலும் முகத்துக்கு நேரே பேசிடற ஸ்ட்ரைட் ஃபார்வார்டுனு தெரியும்” என்றான்.
“ஓஹ் இதெல்லாம் எப்படிடா உனக்கு தெரிஞ்சது, நான் கவனிக்கவே இல்லையே” சும்மாவே தம்பி வாயை கிளறினாள்.
“போக்கா நீ எப்பவும் அப்பா மாதிரி, யாரையும் சரியா புரிஞ்சுக்கவே மாட்ட. அவர் இங்கே இருந்தவரைக்கும் அவரோட சண்டை போடத்தானே உனக்கு சரியா இருந்தது. ஆனா அத்தான் எல்லாரையும் எவ்வளவு நல்லா புரிஞ்சு வச்சிருந்தார் தெரியுமா. அம்மாக்கு என்ன பிடிக்கும் உனக்கு என்ன பிடிக்கும் எனக்கு என்ன பிடிக்கும் எல்லாமே அவருக்கு தெரியுது. என்னோட எவ்வளவு ஜாலியா விளையாடினார் தெரியுமா. எந்த விஷயத்தை பத்தி பேசினாலும் அழகா விளக்கமா பேசுவார். அத்தான் கூட இருக்க எனக்கு அவ்வளவு பிடிச்சிருந்தது.”
“ஐ மிஸ் ஹிம் லாட் அக்கா”, கடைசியில் சோகமாக சொன்னவனை இவளும் அதே சோகத்துடன் பார்த்தாள்.
“ஏண்டா நாம மட்டும் பாசம் வச்சா போதுமா. அவருக்கு நம்ம மேலே கொஞ்சம் பாசம் இருந்திருந்தா கூட திடீர்னு இப்படி கிளம்பி போய் இருப்பாரா. இல்லை இவ்வளவு பாசமா இருக்கிற உன்கிட்டே போன் நம்பர் கூட தராம போவாரா” சலித்து கொண்டே கூறினாள்.
“அக்கா அத்தானை பத்தி அப்படி சொல்லாத, நான் நம்பர் கேட்டேன், அவர் தான் உனக்கு தேவைப்படறப்ப நிச்சயமா நான் இங்கே இருப்பேன்னு சொல்லிட்டு போனார்” என்றான் உறுதியாக.
“ஆமாடா அவர் அப்படியே ஆபத்பாண்டவன் பாரு, கஷ்டம்னு சொன்னதும் வந்து நிக்கிறதுக்கு, போய் வேலையை பாருடா” என அவன் தலையை செல்லமாய் கலைத்து விட்டு வந்தாள்.
தம்பியிடம் விளையாட்டாக சொன்னாலும் ஏனோ அவன் வருவானோ என்று தோன்றியது மேகவிக்கு.
சற்றே சலனம் குறைந்து இருந்த குளத்தில் தம்பியானவன் சிறிய கல்லை எரிந்து விட்டிருக்க, அது குழம்பிய அவள் மனதில் பெரிய அதிர்வலைகளை தோற்றுவித்து மீண்டும் தவிக்க வைத்தது.