chapter 2
தொட்டு செல்லும் காற்றில்
உன் ஸ்பரிசத்தை விட்டு சென்றாய் போல
இன்னும் என்னுள்
உன்னை உரசிக்கொண்டே இருக்கிறது.
அவள் எழுந்த போது மதியம் தாண்டி மாலை கவிழ்ந்து இருந்தது. சாப்பிடாத வயிறு கபகபவென எரிந்து கொண்டிருந்தது. இதுவரை பசி உணர்வே அறிந்தது இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அப்படித்தான் அவள் தந்தை வளர்த்து வந்திருக்கிறார். வீட்டில் இருக்கும்போது லேசாக பசித்தால் கூட கொறிக்க ஏதாவது இருக்கும். காலேஜ்ல் பசிப்பது போல இருந்தாலோ தோழிகளுடன் கேண்டீன் சென்று சாப்பிட்டு விடுவாள். ஆனால் இன்று அவள் வீட்டிலேயே பசித்து கிடக்க வேண்டியது இருக்கிறது. வெளியே ஏதோ சத்தம் கேட்க ஜன்னல் வழியே எட்டி பார்த்தாள் சஞ்சய்யும் அந்த வீராவும் ஷட்டில் விளையாடிகொண்டிருந்தார்கள். தம்பியுடன் சிரித்தபடி விளையாடி கொண்டிருந்தவனை பார்க்க பார்க்க கோபம் சுர்ரென ஏறியது. முகம் முழுக்க விரிந்த சிரிப்புடன் நெற்றியில் படிந்த சிகையை அனாயசமாக கோதி கொண்டே அவன் விளையாடியது பார்க்க அத்தனை அழகாக இருந்தது. ச்ச இவனை போய் ரசிக்கற வந்த அன்னைக்கே உன்னை பட்டினி போட்டுட்டான் என மனசாட்சி திட்டினாலும் பார்வை அவன் பக்கம் செல்வதை அவளால் தடுக்க முடியவில்லை.
“எழுந்திட்டியா கவி, ரெண்டு மூணு தரம் வந்து பார்த்தேன் நீ நல்லா தூங்கிட்டு இருந்த அதான் எழுப்பலை. வந்து சாப்பிடு” என அழைத்தார் அருணா.
அவன் மேல இருக்கற கோபத்தை என்கிட்ட எதுக்கு காட்டற என வயிறு வேறு சத்தம் போட எழுந்து முகம் கழுவிகொண்டு உணவு மேசைக்கு வந்தாள். அருணா உணவை பரிமாற, ஒரு வாய் எடுத்து வைத்தவள் “யாரு அவன்” என கேட்டாள் தெரிந்து கொண்டே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில்.
அருணா பதில் சொல்வதற்கு முன் “அதை என்கிட்டயே கேட்கலாமே” என்று கூறியபடி அவளது எதிரில் வந்து அமர்ந்தான் அவன்.
வாய்க்குள் சென்ற உணவு தொண்டைக்குள் சிக்கிக்கொண்டது, எப்படியும் அவளை விட ஐந்து அல்லது ஆறு வயது பெரியவனாக இருப்பான். வெளியேதானே விளையாடிகொண்டிருக்கிறான் என்ற தைரியத்தில் அவன் என்று கேட்டு விட்டாள். இப்படி சட்டென இங்கே வந்து குதிப்பான் என அவள் என்ன கனவா கண்டாள். ஏற்கனவே இவள் என்னவோ பெற்ற அன்னையை கொடுமை படுத்துவது போல மதியம் பேசி இருந்தான். இப்போது மரியாதை தெரியாதவள் என்று வேறு நினைக்க போகிறான்.
அது சரி அவன் என்ன நினைத்தால் இவளுக்கு என்ன, அப்படி இருக்க முடியவில்லை அவளால், என்னவோ அவன் பார்வையில் தரம் தாழ்ந்து போவது அவளுக்கு அத்தனை உவப்பாக இல்லை.
அவள் எதிரே அமர்ந்தவன், அருணாவின் கையை எடுத்து உரிமையாக அவன் தலை மீது வைத்து கொண்டு, “நான் உங்கம்மாவோட அண்ணன் மகன்” என்று கூறினான்.
அண்ணனா என இவள் வியந்து பார்க்க, “ஆமாக்கா நம்ம அம்மாவுக்கு சொந்தகாரங்க எல்லாம் இருக்காங்கலாம். நமக்கு தெரியவே இல்லை பாரேன். லீவுக்கு அத்தான் அங்கே நம்மளை கூட்டிட்டு போறேன்னு சொல்லிருக்காரு” என கூறினான் முகத்தை துடைத்த படியே அங்கே வந்த சஞ்சய்.
“அப்படியா” என இவள் அருணாவை பார்க்க, அவள் முகமே கனிந்த நிலையில் வீராவின் தலையை கோதிக்கொண்டிருந்தாள்.
“ஏன் உனக்கு இவ்வளவு ஆச்சர்யம், என் அத்தை என்ன அனாதையா, அவங்களுக்கு சொந்தங்கள் இருக்க கூடாதா” என அவளை புருவம் உயர்த்தி கேட்டான்.
“அப்படி நாங்க நினைக்கலை, உங்க அத்தை தான் தனக்கு இப்படி எல்லாம் சொந்தம் இருக்குன்னு வெளியே சொன்னதே இல்லை, ஏன் நீங்க கூடத்தான் இத்தனை நாள்ல நாங்க இருக்கோம்னு தெரியப்படுத்திக்கிட்டதே இல்லை” என்றாள் அவனை குற்றம் சாட்ட கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு.
வீரா எந்த பதிலும் கூறாமல் அருணாவை பார்க்க, அவரோ ஏதோ கண்ணசைவில் அவனிடம் பேசினார். மதியம் அவளை அவன் குற்றம் சாட்டியதற்கு இப்போது பழி தீர்த்து கொண்டது போல ஆனது. எப்படியோ அவனை பேச முடியாமல் வாயடைக்க செய்து விட்டாள் இரவுக்கு நிம்மதியாக தூக்கம் வரும் என நினைத்து கொண்டிருக்க, அவனோ இளநகையுடன் அவளை பார்த்தவன், “அதை பத்தி தெரிஞ்சுக்கனும்னா நீ இன்னும் வளரணுமே” என்று அவளுக்கு ஒரு குட்டு வைத்தான்.
அவ்வளவு தான் உண்டு கொண்டிருந்தவள் பொங்கி எழுந்து விட்டாள், “என்ன மிஸ்டர் ஓவரா பேசிட்டே போறீங்க, நான் லா படிக்கிறேன் என்னை பார்த்தா சின்ன பொண்ணு மாதிரி தெரியுதா” என கோபத்தில் கத்த, அருணா கூட அவள் கத்தியதில் பயந்து விட்டார்.
இருக்கையில் நன்றாக சாய்ந்து அமர்ந்து கொண்டு அவளை விழிகள் குறுக்கி பார்த்தவன், தலை முதல் கால் வரை மேலிருந்து கீழே அளந்து விட்டு “பார்த்தா தெரியலை ஆனா நீ பேசினா கண்டுபிடிச்சுடலாம்” என்றான் சீரியசாக.
அவன் கண்கள் அவளை அளவிட துவங்கியதுமே பொறுக்கி என அவள் உதடுகள் முனுமுனுக்க அவன் பார்வையில் இருந்து அதுவும் தப்பவே இல்லை. அம்மாவும் தம்பியும் இருக்கும்போது எப்படி பொறுக்கி மாதிரி டபுள் மீனிங்ல பேசறான் பாரு என அவள் அவனை வறுத்து எடுத்து கொண்டிருக்க அவனோ இன்னுமே ரசனை மாறாமல் அவளைத்தான் பார்த்து கொண்டிருந்தான்.
கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் அவன் பார்வை அவளை மேய்வதை கண்டவளுக்கு உணவு உண்ணும் எண்ணமே மறித்து போக கையை உதறிக்கொண்டு எழுந்து சென்று விட்டாள்.
“அக்கா, அத்தான் சும்மா தான் பேசறாங்க, சாப்பிட்டு போ” என சஞ்சய் பின்னோடே ஓட, “என்னடா வீரா” என அண்ணன் மகனின் முகம் பார்த்தாள் அருணா.
“விடு அத்தை எங்க போய்ட போறா” என்றவன் தானும் எழுந்து கொண்டான். ஒரு நெடுமூச்சுடன் தானும் வேலையை பார்க்க சென்றார் அருணா.
அறைக்குள் வந்தவளுக்கு இன்னுமே கோபமாக வந்தது, என்ன இது யாரிவன், அம்மாவுக்கு அண்ணன் மகனாக இருந்தால், என்ன வேண்டுமானாலும் பேசிவிடலாமா, கொஞ்சம் கூட வரைமுறை இல்லாமல் இரட்டை அர்த்ததில் பேசிக்கொண்டு என இவள் பொறுமிக்கொண்டிருக்க அவள் அறைக்குள் நுழைந்து இருந்தான் வீரா.
உள்ளே வந்தவன் கதவை சாற்றிவிட்டு அவளருகே நெருங்க, “மிஸ்டர் என்ன வேணும் உங்களுக்கு வெளியே போங்க” என அவள் கத்த, சட்டென உள்ளங்கை கொண்டு அவள் இதழை மூடி இருந்தான் அவன்.
திகைத்து போனவள் விழி விரித்து அவனை பார்க்க, அவனோ அவளை பார்த்து கொண்டே, “எதுக்குடி இப்ப கத்தற, என்னமோ ரேப் பண்ண வந்த மாதிரி. அவ்வளவு சீன் எல்லாம் இல்லை” என்றான் சாதாரணமாக.
“எது ரேப்பா” என அவள் மேலும் திகைக்க, அவள் உதட்டின் மென்மையை அளந்தபடியே மெதுவாக கையை விலக்கி கொண்டான். என்ன மென்மை, அப்பா.. அப்படியே வெண்ணையில செஞ்சி வச்ச மாதிரி வழு வழுன்னு என தலையை உலுக்கிக்கொண்டான் வீரா.
அவன் கையை எடுத்ததும் மேல்மூச்சு வாங்க நின்றவளை இன்னும் பார்வை விலக்காமல் பார்த்து வைத்தான். இதென்ன எப்ப பாரு முழுங்கற மாதிரி ஒரு பார்வை என சலித்து கொண்டவள் மெத்தை மேல் இருந்த துப்பட்டாவை எடுத்து மார்பில் போட்டு கொண்டாள். ஓஹ் அப்படியா என இப்போது நக்கல் பார்வை பார்த்தவன் “எதுக்கு சாப்பிடாம வந்த” என கேட்டான்.
செய்யறதும் செஞ்சுட்டு ஏதோ அக்கறை இருக்கிற மாதிரி பேச வந்துட்டான் என பொறுமிக்கொண்டவள், “இது என்னோட வீடு நான் எப்போ வேணும்னாலும் சாப்பிடுவேன், நீங்க அதை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” என்றாள் அழுத்தமாக.
இப்போது லேசாக உதடு பிரியாமல் சிரித்தவன், “இப்போ கூட நீ சின்ன பொண்ணுதான்னு காட்டற” என்றான் அவன்.
“மிஸ்டர், நீங்க இந்த வீட்டுக்கு விருந்தாளியா வந்திருக்கீங்க, இருக்கிறவரைக்கும் அடுத்தவங்களை தொல்லை பண்ணாம இருந்தா நல்லா இருக்கும். இனி அனாவசியமா என்கிட்டே பேச முயற்சி செய்யாதீங்க, இப்போ வெளியே போங்க” என்றாள் வாசலை விரல் நீட்டி சுட்டி காட்டி
“நான் விருந்தாளின்னு நீ முடிவு செஞ்சா போதுமா”
“பின்னே நீங்க என்ன விருந்துக்கு வந்த வீட்டு மாப்பிள்ளையா” நக்கலாக கேட்க நினைத்து கேட்டு விட்டாள்.
அவனோ கண்கள் மின்ன, “அப்படி நீ ஆசைப்பட்டா ஆகிட வேண்டியது தான்” என்றான் குறும்பாக.
அட கடவுளே, இவனுக்கு என்ன தான் பிரெச்சனை, ஏன் என் உயிரை வாங்கிட்டு இருக்கான் அவள் சலித்து கொண்டிருக்கும்போதே “பசியோட இருக்காத, சாப்பிட்டு தூங்கு” என்று கூறிவிட்டு வெளியே சென்று இருந்தான் அவன்.
அவன் சென்ற பிறகு மெத்தையில் விழுந்தவள் இந்த அப்பா எங்கே தான் போனாரு. ஏன் இன்னும் வரலை, யாரோ ஒருத்தன் என்ன தான் சொந்தகாரனா இருந்தாலும் கூட இப்படியா அதிகப்படியா நடந்துக்குவான் என்று எரிச்சலாக வந்தது.
காலையில் கல்லூரி கல்சுரல்ஸ் என்று இனிமையாக துவங்கிய நாள், இப்படி கடுப்புடன் முடிவடைகிறதே என்ற தாங்கல் அதிகமாகவே இருந்தது. பாட்டு கேட்கும் கருவியை எடுத்து காதில் வைத்து கொண்டு அமர்ந்த நேரம் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தாள் அருணா.
அம்மாவை கண்டதும் மீண்டும் போனில் கவனம் செலுத்துவது போல இவள் திரும்பி கொள்ள, அருகில் வந்தவள், “கவி சாப்பிடும்மா” என்றார் அன்பாக. அவர் கையில் உணவு தட்டு இருந்தது.
எப்போதும் அம்மாவின் சமையல் நாவில் எச்சில் ஊற வைக்கும். மதியமும் சரியாக சாப்பிட முடியாத கோபம் இன்னும் மிச்சம் இருந்தது. முகத்தை திருப்பி கொண்ட மகளை கன்னம் பற்றி திருப்பினார் அருணா.
“வீரா ஏதோ விளையாட்டா பேசினா அதை போய் பெருசா எடுத்துக்குவியா” என்றார் சாதாரணமாக.
சட்டென காதில் இருந்த கருவியை கழட்டியவள், “விளையாட்டா, அவன் பேசினதை எல்லாம் கேட்டுகிட்டு தானேம்மா இருந்த. என்ன ஒரு நக்கல் நையாண்டி, நாங்க என்னவோ உன்னை இங்கே கொடுமை படுத்தற மாதிரி பேசிட்டு இருக்கான். நீயும் பார்த்துட்டு இருக்க. சரி அவன் யாரும்மா என்கூட விளையாட” என சீறினாள் மகள்.
உடனே அருணா முகம் மாறி போனது, “கவி அவன் இவன்னு எல்லாம் மரியாதை இல்லாம பேசாத, உன்னை விட எத்தனை வயசு பெரியவன் தெரியுமா” என்றார் கோபமாக.
“ம்மா, அவன் என்னை அசிங்கப்படுத்தி பேசினான் அது உனக்கு பெருசா தெரியலை, ஆனா அவனை அவன்னு சொன்னா மட்டும் கோபம் வருதா, இதென்னம்மா புதுசா உறவு கொண்டாடிட்டு இருக்க. அப்பா இல்லாத நேரத்திலே அதிகப்பிரசங்கி தனம் பண்ணிட்டு இருக்கான் அவன், அவனை கேட்காம” மேற்கொண்டு மேகவி பேசுமுன் “கவி” என அதட்டி இருந்தார் அருணா.
இதுவரையில் அன்னை குரல் உயர்த்தி பேசி அவள் கண்டது இல்லை, எப்போதுமே ஒற்றை வார்த்தையோடு அவள் சம்பாஷணைகள் முடிந்து விடும். அப்படியே சிறு பிள்ளைகள் ஏதாவது தவறு செய்து அதை அன்னை கண்டிக்க முனைந்தாலும் அப்பாவின் பார்வை அவரை கட்டி போட்டு விடும். அத்துடன் அவர் வேலையை பார்க்க சென்று விடுவார். ஆனால் இன்று எல்லாமே புதிதாக இருக்கிறது.
“ஒரு முறை சொன்னா புரியாதா உனக்கு, இது தான் உங்கப்பா சொல்லி கொடுத்து வளர்த்தாரா, வீட்டுக்கு வந்தவங்களை இப்படித்தான் பேசுவியா, இதை உன்கிட்டே நான் எதிர் பார்க்கலை கவி” என்றார்.
அன்னையின் கோபம் நெஞ்சை சுட்டாலும், அவர் சொன்ன சொற்கள் நியாயமாக இருந்தது. எல்லாருக்கும் மரியாதை கொடுத்து பழக வேண்டும், என்று சிறு வயதில் தந்தை சொல்லி கொடுத்த அறிவுரைகளை எப்போதும் அவள் மறந்திருக்கவில்லை. ஆனால் அந்த நெடியவன் பேசிய பேச்சில் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு விட்டாள். வீட்டிற்கு வந்த விருந்தாளி, ஒன்றோ இரண்டோ நாள் தங்கி விட்டு செல்ல போகிறான். அவனிடம் எதற்காக மல்லுக்கு நிற்க வேண்டும். விலகி நின்று கொண்டால் போதுமே மூளை எடுத்துரைக்க, “சரிம்மா நான் பேசினது தப்பு தான், இனி அது போல பேசலை, ஆனா அவரையும் என்கிட்டே இருந்து விலகி இருக்க சொல்லிடுங்க” என்றவள் மீண்டும் பாட்டு கேட்கும் கருவியை காதுக்கு கொடுத்து விட்டு அமர்ந்து விட்டாள்.
இதற்கு மேல் பேசினால் மகளிடம் எதுவும் செல்லுபடியாகாது என்று அறிந்திருந்த அருணா, சாப்பிடு என்று அவள் கையை பற்றி கூறிவிட்டு எழுந்து சென்று விட்டார்.
ஒரு நாள் ஒரே நாளில் எத்தனை மாற்றங்கள், இதுவரை அதிர்ந்து பேசாத அம்மா, தன்னை திட்டி கண்டிராத அம்மா எப்படி இப்படி கோபப்பட்டார். அப்படி என்ன என்னை விட அவன் உயர்த்தியாக போய் விட்டான். அவ்வளவு முக்கியமா அவன். இத்தனை நாட்கள் இல்லாமல் எங்கிருந்து முளைத்தான். சரியான கள்ளிசெடி திடீரென முளைத்ததும் இல்லாமல் என் அம்மா வாயாலேயே என்னை வசை பாட வைத்து விட்டானே.
அவன் இங்கே இருக்கும் நாட்களில் அவன் கண் முன்னே செல்லாமல் இருந்து கொள்ள வேண்டும். சொந்த வீட்டிலேயே ஒதுங்கி இருக்க வேண்டும் என்று நினைக்க வைத்து விட்டான் என்று அவனை திட்டி கொண்டே உறங்கி போனாள்.
அதன் பிறகு வந்த இரண்டு நாட்களில் அப்பா எப்போது வருவார் என்று அவள் மட்டும் தான் அவரை எதிர் பார்த்து கொண்டிருந்தாள். அம்மாவும் தம்பியும் அந்த வீராவுடன் நன்றாக நேரத்தை செலவிட்டனர். அது நன்றாகவே அவளுக்கு தெரிந்தது.
காலையில் அவள் எழுவதற்கு முன்பே சஞ்சய்யும் அவனும் எழுந்து ஷட்டில் விளையாடி கொண்டிருப்பார்கள். அவர்களின் சத்தம் ஜன்னல் வழியே வந்து இவளை தட்டி எழுப்பி விடும். இவள் எழுந்து குளித்து வெளியே வந்து பார்த்தால் சமையல் கட்டில் இருந்து பேச்சு குரல் கேட்கும். நைசாக எட்டி பார்த்தால் அருணாவுடன் காய்கறி நறுக்கிக்கொண்டே ஏதோ பேச்சு வளர்த்து கொண்டிருப்பான். இவனுக்கு பேச பிடிக்குமா இல்லை எங்க வீட்டுல இருக்கிறவங்களை பேசி பேசி கரெக்ட் பண்றானா.
சரியாக இவள் கிளம்பி கல்லூரி செல்லும் நேரம், அவனும் வெளியே கிளம்ப தயாராகி நிற்பான். முயன்று அவனை கண்டுகொள்ளாமல் சென்றாலும் அவளை தொடர்ந்தே அவனது காரில் வந்து கொண்டிருப்பான். ஆனால் எந்த தொல்லையோ சைகையோ செய்ய மாட்டான். அப்படி ஒருத்தி இருப்பதாகவே காட்டிக்கொள்ள மாட்டான். ஒற்றை கையால் ஸ்டேரிங்கை பிடித்து கொண்டே மறுகையால் தலையை கோதியபடி கெத்தாக வண்டி ஓட்டுவான்.
இவள் தான் அடிக்கடி தன்னை மறந்து அவனை ரசித்து விட்டு, அட மானங்கெட்ட மனமே என்று தானே தலையில் தட்டிக்கொள்வாள். நெடு நெடு உயரமும் அதற்கேற்ற உடல் வாகும், அவன் போலீஸ் வேலைக்கு சரியாக இருப்பான் என்ற எண்ணத்தை அவளுக்கு கொடுக்கும்.
அவனே ஒரு வில்லன், அவனை போய் போலீஸ் அது இதுன்னு நினைக்கிற, வில்லனுக்கு மனசுல ஹீரோன்னு நினைப்பு என்று அவனை திட்டிவைப்பாள்.
இப்படியே இரண்டு நாட்கள் கடந்திருந்த நிலையில் ஒரு நாள் காலையில் அவளை எழுப்பினான் சஞ்சய். உறக்க கலக்கத்தில் என்னடா என சிணுங்கி கொண்டே எழுந்தவள், கண்ணை சிமிட்டி கொண்டே பார்க்க, கையை கட்டி கொண்டு கதவோரம் சாய்ந்து நின்றிருந்தவனை கண்டதும் திக்கென ஆகி போக தம்பியை முறைத்தாள்.
“அடுத்தவங்க ரூம்குள்ளே வர முன்னே பர்மிஷன் கேட்டுட்டு வரணும்னு தெரியாதா” கேட்டுக்கொண்டே எழுந்து உடையை சரி செய்து கொண்டாள். அவள் கைகள் சென்ற இடமெல்லாம் அவன் பார்வையும் மேய, அய்யோக்கிய ராஸ்கல் என முனுமுனுத்து கொண்டாள்.
“அக்கா நாங்க ரொம்ப நேரமா குரல் கொடுத்தோம் நீ தான் எழுந்துக்கவே இல்லை, அதான் உள்ளே வந்தோம். பாரு நான் மட்டும் தான் உள்ளே இருக்கேன் அத்தான் வெளியே தான் இருக்காரு” என்றான் அந்த வீராவை காட்டி.
‘ஆமா உருவம் மட்டும் தாந வெளியே இருக்கு, கண்ணு முழுக்க இங்கே தானே இருக்கு’ என நினைத்தவள் “இப்போ என்னடா வேணும் உனக்கு” என தம்பியிடம் சீறினாள்.
“அக்கா வாயேன் நாம எல்லாரும் கோவிலுக்கு போய்ட்டு வரலாம்”
“நான் வரலை” பட்டென கூறியவளையே கூர்ந்தபடி நின்று இருந்தவனை அசட்டை செய்தபடி சொன்னவள் எழுந்து கொண்டு மெத்தையை சரி செய்தாள்.
“அக்கா அம்மா கூட வராங்க, எப்பவும் அம்மா எங்கேயும் வெளியே வரவே மாட்டாங்க தானே இப்போ வராங்க நீயும் வாக்கா”
“எனக்கு காலேஜ் இருக்கு சஞ்சய்” என்றாள் தமக்கை.
“அதனால என்ன அம்மாவுக்காக ஒரு நாள் லீவு போட முடியாதா, இல்லை ஒரு நாள் லீவு போட்டா பாடத்தை புரிஞ்சுக்க முடியாத அளவுக்கு அவ்வளவு முட்டாளா” ஏகத்தாளமாக இதழ் வலைத்தபடி அவன் கேட்டு வைக்க, காலையிலேயே கொதிநிலைக்கு சென்றாள் மேகவினி.
“மிஸ்டர் நான் அறிவாளியா இல்லை முட்டாளான்னு உங்ககிட்டே நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்க கூட வெளியே வர எனக்கு ஒரு பர்சென்டேஜ் கூட விருப்பம் இல்லை அவ்வளவு தான்” என்றாள் முகத்தில் அறைந்தது போல.
“சரி என் கூட வர விருப்பமில்லை ஆனா உங்கம்மா கூட போகவும் உனக்கு விருப்பம் இல்லைன்னா, உன்னை பெத்தவங்களோட விருப்பத்தை எந்த அளவுக்கு புரிஞ்சு நடந்துக்கிறன்னு தெரியுது. நீ வா சஞ்சய் நாம அத்தையை கூட்டிட்டு போவோம்” என்று அவன் சென்று விட்டான்.
சஞ்சய் தான் இவளை பார்த்தபடி “ம்ச் போக்கா” என உதட்டை பிதுக்கி விட்டு சென்று விட்டான்.
ஒரு நிமிடம் கண்ணை இறுக மூடி திறந்தவள் வேகமாக வெளியேறி அன்னையை தேடி சென்றாள். குளித்து விட்டு புது புடவை ஒன்றை கட்டிக்கொண்டு கண்ணாடி முன்னே நின்று இருந்தார் அருணா.
“அம்மா”
“சொல்லு கவி, நீ இன்னும் கிளம்பலையா” ஆர்வமாய் தன்னை பார்த்து கேட்ட அன்னையை பார்த்த நிமிடம் அவனிடம் இருந்த பிணக்குகள் மறந்து போக “ஹா இதோ குளிக்க போறேன், எத்தனை மணிக்கு கிளம்பனும்” என கேட்டு இருந்தாள்.
“ஒரு எட்டு மணிக்கு கிளம்பினா சரியா இருக்கும்னு வீரா சொன்னான்”
சரிம்மா என்றவள் அறைக்கு சென்று கிளம்ப தயாரானாள். அவள் அருணாவிடம் பேசி சென்றதை மாடி படியில் நின்றபடி கவனித்து கொண்டிருந்த வீரா உதடு பிரியாமல் சிரித்தபடி தானும் கிளம்ப சென்றான்.