Chapter 16
ஒன்றை இழந்த பிறகு தான்
நம் வாழ்வில் அதன் இடத்தின் மதிப்பு
எவ்வளவு பெரியது என்று தெரியுமாம்,
நீயும் என்னை இழந்து விடாதே,
என்னிடத்தின் மதிப்பை தெரிந்துகொள்ள
பெரிய விலையை கொடுத்து விடாதே...
“ஆமாம்மா, அந்த மாதிரி ஏதாவது சட்டத்துக்கு புறம்பான தொடர்பு இருந்தா அதை ஆதாரத்தோட சப்மிட் பண்ணா, உடனே டிவோர்ஸ் கிடைக்கும். ஆனா அவனுக்கு அப்படி ஏதாவது இருக்கணுமேம்மா” என்றார் சுகுமார் சிந்தித்தபடியே.
“இருக்குப்பா”, என்றாள் மேகவி.
“என்னம்மா சொல்ற, அவன் அப்படிபட்ட ஆளா” என்றார் அதிர்ந்தபடி.
“நான் அப்படி சொல்ல வரலைப்பா, அவங்க அம்மாவோட அண்ணன் பொண்ணு ஒருத்தி இருக்கா, அவளை தான் இந்த வீரா கல்யாணம் செய்துக்க போறதா இருந்திருக்கு. திடீர்னு தான் என்னை கல்யாணம் பண்ணி இருக்காங்க. அது எதனாலன்னு எனக்கு சரியா தெரியலை. ஆனா அந்த பொண்ணு இவர் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டது தெரிஞ்சதும் சூசைட் அட்டெம்ப்ட் பண்ணிருக்கா”
“என்னம்மா சொல்ற, அந்த பொண்ணு உயிரோட இருக்கா, இல்லை”
“ம்ச், அப்பா அவ நல்லா இருக்கா, ஆனா அவளோட காதலுக்காக இப்போ வரைக்கும் ஏங்கிட்டு இருக்கா”
“அப்படியா”
“ஆமாப்பா, இங்கே கிளம்பி வறதுக்கு முன்னாடி நாள் நான் அவளை பார்த்து பேசினேன்” என்று அன்று நடந்ததை நினைவு கூர்ந்தாள்.
அகல்யா இவளது எண்ணை ராகவி கேட்டாள் என்று கூறிய போது அதை பெரிதாக கண்டு கொள்ளாதவள் போல இருந்தவள், கிளம்புவதற்கு முன் தினம் ராகவியை அவள் வீட்டிலேயே சந்தித்தாள். ராகவி இவள் எண்ணை கேட்டதிலேயே இவளுக்கு கொஞ்சம் அவளின் நிலை உறுதியாகி இருந்தது. அதனால் துணிந்து அவளிடம் பேச சென்றிருந்தாள். அகல்யா கல்லூரி சென்றிருந்த நேரம் பார்த்து அங்கே தனியே சென்றவளை ராகவியும் அவள் அன்னை கனகாவும் எதிர்பார்க்கவில்லை என்பது அவர்கள் அதிர்ந்த பார்வையிலேயே தெரிந்தது.
ஆனாலும் சுதாரித்து கொண்ட ராகவி, வாங்க என்று அழைத்து போனாள். ஏற்கனவே மேகவி கூறி இருந்ததை ராகவி அன்னையிடம் கூறி இருந்ததால், என்ன தான் சொல்கிறாள் பார்ப்போம் என்று இருந்தார் கனகா.
“நீ என்ன முடிவு பண்ணிருக்க ராகவி” நேரடியாகவே கேட்டாள்.
“முதல்ல நீங்க சொல்லுங்க, இதனால் உங்களுக்கு ஆக போறது என்ன”
“பிடிக்காத, ஏமாற்றி செய்யப்பட்ட திருமணத்திலே இருந்து விடுதலை”
“பிடிக்காத திருமணமா” விலுக்கென எழுந்தாள் ராகவி.
“நீ ஏன் இவ்வளவு ஷாக் ஆகற, உன்னோட அத்தை மகன் என்னை ஏமாற்றி கல்யாண பத்திரத்திலே கையெழுத்து வாங்கி தான் இங்கே மனைவியா கூட்டிட்டு வந்திருக்காரு”
“ஏமாத்தியா, எங்க வீரா மாமா அப்படிபட்டவர் இல்லை, எதையும் நேர்மையா தான் செய்வார்”
“அப்படியா அப்போ உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டு எதுக்காக என்னை கல்யாணம் செய்துக்கிட்டார் அது கூட நேர்மையின் வழியா” என அவளை மடக்கினாள்.
“அது அது தான் எனக்கு புரியலை” என தடுமாறினாள்.
“இங்கே பாரு ராகவி, எனக்கு இந்த கல்யாணத்திலே விருப்பம் இல்லை, என்னோட அப்பாவுக்காகத்தான் இங்கே வந்திருக்கேன். அதனால எப்படி இதுல இருந்து வெளியே போறதுன்னு தான் பார்த்து கிட்டு இருக்கேன். அது உனக்கு பிரயோஜனப்படுமா பாரு” என்றாள்.
“சின்ன வயசுல இருந்து என் மாமாவை தான் மனசுல நினைச்சுக்கிட்டு இருக்கேன், சரி சொல்லுங்க இதுல நான் என்ன செய்யணும்”
“ஒண்ணுமில்லை, டிவோர்ஸ் அப்ளை பண்ணணும்னா ஒரு வருஷம் நாங்க கணவன் மனைவியா வாழனும், ஆனா என்னால அதை எல்லாம் செய்ய முடியாது. எங்கப்பாவை தலை குனியா வச்சவங்களை நானும் தலை குனிய வைக்கணும். அதுக்கு அந்த வீராவோட உனக்கு தொடர்பு இருக்குன்னு சொல்லணும். அப்படி எல்லாருக்கும் தெரிஞ்சா எனக்கும் விவாகரத்து கிடைச்சுடும், உனக்கும் அவரோட கல்யாணம் நடக்கும்”
“தொடர்பா என்ன தப்பா பேசறீங்க,” என பதறினாள் ராகவி.
“நான் சொன்னது நீ நினைக்கிற மாதிரி தொடர்பு இல்லை, நீ அவருக்கு நெருக்கமா இருக்கிற மாதிரி காட்டினா போதும், எனக்கு அது தொடர்பான சில ஆதாரங்கள் வேணும் அவ்வளவு தான்”
“இதுவும் அது போலத்தான் இருக்கு” என்றாள் ராகவி
“இல்லை ராகவி நான் என்ன சொல்ல வர்றேன்னா”, அவள் சொல்லிக்கொண்டிருக்கும் போதே, ராகவி இங்கே கொஞ்சம் வா” என அழைத்தார் கனகா.
“என்னம்மா”, ராகவி சலித்து கொள்ள, “கொஞ்சம் வாடி” என்றார் அவர் அழுத்தமாக.
“இதோ வந்திடறேன்” என்று உள்ளே சென்றாள்.
“என்னம்மா அவ ஏதோ சொல்ல வந்தா அதுக்குள்ள இழுத்துகிட்டு வந்துட்ட, அப்படி என்ன பேசணும் உனக்கு, கொஞ்சம் நேரம் கழிச்சு தான் பேசினா என்ன” என அன்னையிடம் சிடுசிடுத்தாள்.
“ராகவி அவ சொல்றதை அப்படியே ஏத்துக்கோ” என்றார் கனகா எடுத்ததும்.
“என்னம்மா அவ என்ன சொல்றா, நீயும் கேட்டுகிட்டு தானே இருந்த”
“ஏண்டி அவ என்ன உன்னை உன் மாமன் கூட தனியா ரூம்ல இருக்கிற மாதிரியா கேட்கிறா, சும்மா ஏதோ, ம்ச் உனக்கு சொன்னா புரியாது அதனால அவ சொல்ற மாதிரி கேளு, அதுதான் உனக்கு நல்லது, உன் மாமன் உனக்கு வேணும்னா, நீ அதை செஞ்சு தான் ஆகணும்”
“ஆனா மாமாக்கு இதனால கோபம் வருமேம்மா, மாமா சும்மாவே பக்கத்துல நின்னு கூட பேசாது உனக்கு தெரியாதா”
“கோபம் வறது எல்லாம் அப்புறம் தானே, முதல்ல இவளுக்கு விவாகரத்து கிடைச்சிடுச்சின்னா, அப்புறம் உங்க அத்தையை வச்சு ஏதாவது செஞ்சுக்கலாம். அவ சொல்றதை கேளு” என்றார்.
“சரி வா”, என அம்மாவுடன் வெளியே வந்தவள், “நீங்க எப்படி செய்யணும்னு சொல்லுங்க நான் செய்யறேன்” என்றாள் மேகவியிடம்.
உள்ளே பெரிய தலையின் வேலை ஏதோ நடந்திருக்கிறது என்று புரிந்து கொண்டாள் மேகவி, “நான் எக்ஸாம்ஸ் எழுத எங்க அப்பா வீட்டுக்கு போறேன் திரும்பி வர ஒரு வாரம் ஆகும், நான் வறதுக்குள்ள, நீ அவரோட குளோஸ் ஆ இருக்கிற மாதிரி சில போட்டோஸ் எடுத்து வை. எதுக்காக இந்த நேரத்தை நான் தேர்ந்தெடுத்து இருக்கேன்னா, நான் இல்லாதப்ப இதெல்லாம் நடந்ததுன்னு சொல்றது இன்னும் வசதியா இருக்கும்” ராகவி புரியாமல் இவளை பார்க்க, அதெல்லாம் உனக்கு புரியாது வேணும்னா உங்க அம்மாவை கேட்டுக்கோ” என்றாள் அவரை குறிப்பாக பார்த்து.
ராகவி அன்னையை பார்த்தவள் சரி என்று தலையசைத்து கொண்டாள்.
தந்தையிடம் இதை சொல்லி முடித்தாள், “அவங்க எல்லாம் சரியா செய்வாங்களா மேகா”
“அப்பா எனக்கென்னவோ, அந்த பொண்ணை விட அவங்க அம்மா தான் வீராவுக்கும் ராகவிக்கும் கல்யாணம் நடக்கனும்றதுல தீவிரமா இருக்காங்க, அதனால எல்லாம் சரியா தான் நடக்கும் நினைக்கிறேன்” என்றாள் உறுதியாக.
“ரொம்ப வேண்டாம் மேகா, ஒரு ரெண்டு போட்டோ கிடைச்சா கூட போதும், அதை வச்சே, போலீஸ் கம்ப்ளைண்ட் கொடுத்து முதல்ல நீ அங்கே இருந்து வந்திடலாம் அதுக்கு அப்புறம் எல்லாத்தையும் அப்பா பார்த்துக்கிறேன்” என்றான் திடமாக.
மகளும் ஆமோதிப்பாக தலையசைத்து கொண்டவள், ராகவி இதை எப்படியாவது செய்து முடிக்கனும் என்று நினைத்து கொண்டாள்.
முதல் நாள் இவளை கொண்டு வந்து விட்டு விட்டு போனவன் தான் அதன் பிறகு வீரா இங்கு வரவே இல்லை, இவளுக்கும் படிப்பும் தேர்வு என்று இருந்ததாலும், அப்பா தம்பி என்று பேசுவதற்கு இருந்ததாலும் நேரம் சரியாக போனது. இடையில் சிலமுறை அகல்யா அழைத்து பேசி இருந்தாள்.
அம்மா தான் , பல நாட்கள் கழித்து வந்த மகள் என்று கூட இல்லாமல் அவர் உண்டு அவர் வேலை உண்டு என்று இருந்தார். இவளுக்கும் அவர் மீது இருந்த கோபத்தினால் பேச தோன்றவில்லை.
கடைசி தேர்வு முடிந்த அன்று, அவளது மொபைல் போனில் சில போட்டோக்கள் வந்து விழுந்தன, அதை பார்த்தவளுக்கு உள்ளே திக்கென்று ஆகியது. கை கால்கள் எல்லாம் படபடத்து போனது, நெற்றியில் வியர்வை அரும்பி விட, இருக்கையில் இருந்தே எழுந்து விட்டிருந்தாள்.
போனின் தொடு திரையை பெரிதாக செய்தவள், அதையே கைகள் நடுங்க பார்த்து வைத்தாள். அதில் வீரா, ஒரு பெண்ணின் இடுப்பை வளைத்து இருக்க, கட்டிலில் அவன் மீது அவள் படுத்திருப்பது போல இருந்தது அந்த படம்.
அதையே வெறித்து கொண்டிருந்தவள் போனின் மீது ஒரு துளி தண்ணீர் விழ திடுக்கிட்டு போனவள், சட்டென கன்னத்தை தொட்டு பார்த்தாள், கண்ணீர் வழிந்து கன்னம் நனைந்து இருந்தது. சட்டென புறங்கையால் துடைத்து கொண்டவள், மூச்சு விட முடியாதவளாக ஜன்னல் அருகே சென்று நின்றாள்.
இழுத்து நெடிய மூச்சுகளை வெளியிட்டவள், எதற்கு இந்த கண்ணீர் என்று தன்னிடமே கேட்டுக்கொண்டாள். அவள் தானே கேட்டாள் அவனை பிரிவதற்கான வழிமுறையை அவள் தானே தேர்ந்தெடுத்தாள் பிறகு ஏன் கலங்க வேண்டும். என்ன என்ன என்று தனக்கு தானே கேள்விகள் எழுந்தது.
போனை ஓரம் வைத்து விட்டு சென்று முகம் கழுவிகொண்டாள், அதன் மூலம் அந்த புகைப்படம் தந்த தாக்கத்தை கழுவ முயன்றாள் முடியுமா என்ன.
மீண்டும் மீண்டும் மனம் அந்த புகைப்படத்தையே கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தியது, அப்போது அவளது போன் ஒலிக்க, ஏதோ யோசனையுடன் யார் என்று கூட பார்க்காமல் போனை எடுத்து காதில் வைத்திருந்தாள்.
“என்ன மேடம் போட்டோஸ் நல்லா இருக்கா, இன்னும் வேணும்னா சொல்லுங்க போட்டோ ஷூட் பண்ணி கொடுத்திடலாம்” படு எள்ளலாக வந்த குரலில், திடுகிட்டவள் போனை காதில் இருந்து எடுத்து பார்த்தாள், வீரா, உதடுகள் தானாய் அவன் பெயரை உச்சரித்தது சத்தமில்லாமல்.
“இந்த அளவுக்கு இன்டிமசி போதுமா, இல்லை இன்னும் லைவ் அ ஏதாவது ஷூட் பண்ணி அனுப்பவா” காதுகளில் விழுந்த வார்த்தைகளை செரிக்க முடியாமல், கண்ணை இறுக மூடி கொண்டாள்.
“என்னடி அனுப்பவா, ஆனா ஒரு விஷயம்டி, புருஷனை இன்னொரு பொண்ணு கூட சேர்த்து வைச்சு பார்க்க ஆசைப்பட்ட முதல் பொண்டாட்டி நீயா தான் இருப்ப” என்றான் கடினமாகி விட்ட குரலில்.
அவளால் அந்த போட்டோவையே ஏற்று கொள்ள முடியாமல் இருந்த நிலையில், அவன் கேட்ட இந்த கேள்விகளில் தொண்டை உலர்ந்து காய்ந்து போனது.
பதில் ஏதும் சொல்ல முடியாமல் அவள் நிற்க, “சரி நீ தான ஆசைப்படற, நாளைக்கு கிளம்பி இரு, இங்கே நம்மளோட, ம்ஹூம் என்னோட பெட்ரூம்ல உன்னோட இடத்திலே இன்னொருத்தி என் கூட எவ்வளவு நெருக்கமா இருக்க போறாங்கறதை நீயே வீடியோவா எடுத்துக்கோ, அப்போ நீ நினைச்சதும் நடந்த மாதிரி ஆகும் உன்னோட ஆசையும் நிறைவேறின மாதிரி ஆகும், கிளம்பி இருடி, வரேன்” என்றவன் போனை வைத்து விட்டான்.
அவன் சொல்லிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் அமிலம் தோய்த்த கங்குகளாய் அவள் காதுகளில் நுழைந்து நெஞ்சில் பழுக்க சூடு இழுத்து கொண்டிருந்தது.
இதை அவள் எதிர்பார்க்கவில்லை, அவள் தான் அவனை பிரிய நினைத்தாள், அதற்கான வழியும் அவள் தான் யோசித்தாள். ஆனால் இது போன்ற ஒன்றை அவள் எதிர்பார்த்தகிருக்கவில்லை. அதுவும் அதை வீராவே செய்திருப்பான் என்பதை அவளால் இம்மி அளவும் கூட நம்ப முடியவில்லை.
அவள் திட்டம் அவனுக்கு தெரிந்து போனது எல்லாம் அவள் கவனத்தில் பதியவில்லை, ஆனால் அவனே இதை செய்திருக்கிறான் என்பதில் தான் அவள் மொத்த கவனமும் இருந்தது.
எப்படி எப்படி அவனால் இதை செய்ய முடிந்தது, அவன் எப்படி இது போல செய்யலாம். ஆனால் அவள் தானே இதை எதிர்பார்த்தாள், அவனிடம் இருந்து விடுதலை பெற அவளுக்கு இது போதுமான ஆதாரம் தானே, பின் என்ன என்று யோசிக்க முடியவில்லை, அப்படியே மெத்தையும் விழுந்தவளுக்கு அந்த போட்டோவே கண் முன்னே நடனமாடியது.
கண்களை இறுக மூடி கூட பார்த்தாள், அது நிழற்படத்தை விட கேவலமான காட்சிகளை கண் முன்னே காட்டி மிரட்டியது. அய்யோ திடுக் திடுக் என தடதடத்த இதயத்தை செய்து அடக்க போகிறேன் என்று வழி தெரியாமல் தவித்தாள்.
உள்ளே சூடாக பரவிய ஏதோ ஒன்று அவளை சுட்டு வதைத்து கொண்டிருந்தது, வேகமாக எழுந்து ஓடியவள் ஃபிரிஜ்ஜை திறந்து குளிர்ந்த நீரை எடுத்து வேகமாக குடித்தாள்.
உள்ளே சென்ற நீர் மனதின் வெம்மையை ஒரு சதவீதம் கூட குளிர்விக்கவில்லை, வேகமாக குடித்ததில் மூச்சு வாங்க அப்படியே அங்கேயே சரிந்து அமர்ந்தாள்.
அவனை பிரிய நினைத்தாள் ஆனால் அதை செயல்படுத்தும் போது இவ்வளவு வலியும் வேதனையும் கிடைக்கும் என்று கனவிலும் நினைத்திருக்கவில்லை, ஆனால் அது தான் இப்போது நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
நெஞ்சை கசக்கி பிழியும் வலி, அவனுடன் இன்னொருத்தியை இணைத்து பார்த்த நொடியில் இருந்து அவளுள் நிகழ்ந்து கொண்டிருக்கும் வேதனை அதை சொல்ல வார்த்தைகள் இல்லை.
ஓவென்று கத்தி அழ வேண்டும் போல நெஞ்சில் பொங்கிய பேராழியின் வேகத்தை தாங்க முடியாமல், அழ துவங்கும் நேரம் அவள் தோளில் வந்து பதிந்தது ஒரு கரம், திகைத்து நிமிர்ந்து பார்த்தவள் அருகே அமர்ந்தார் அருணா.
அவரை பார்த்தவளுக்கு நெஞ்சை அடைத்து கொண்டு வந்தது, வா என அவர் கையை விரிக்க, பாய்ந்து வந்து அம்மாவின் மடியில் சரிந்து விட்டாள்.
குமுறி குமுறி அழுத மகளின் தலையை ஆறுதலாக தடவி கொண்டிருந்தன அருணாவின் விரல்கள்.
மகளின் கண்ணீர் தாயின் நெஞ்சை நனைக்க, அவர் கண்ணிலும் கண்ணீர்தான், ஆனாலும் அவர் அதை காட்டிக்கொள்ளவில்லை அமைதியாக அவள் தலையையும் முதுகையும் வருடிகொண்டிருந்தார்.