Chapter 13
உதட்டு சாயத்தால் கூட
உன் அளவுக்கு அதிகம்
சிவக்க வைக்க முடிவதில்லை,
உன் ஜீவனை மொத்தமும் கொட்டி
என் உதடுகளில் சிவப்பு மையால்
கவிதை எழுதி வைக்கிறாய்...
காலையில் உணவை வாயில் வைத்த மேகவி ஸ்ஸ் என்று முனகி வைக்க, அங்கிருந்த அனைவரும் அவளை வித்யாசமாக பார்த்தனர்.
“என்னம்மா காரமா இருக்கா” என்று பரிந்து வந்தார் விசு.
ஆமாம் என்றும் இல்லை என்றும் கூற முடியாமல், தண்ணீரை எடுத்து குடித்தவள் ப்ப்பூ என உதட்டை குவித்து ஊதி கொண்டாள்.
“என்னாச்சு அண்ணி அவ்வளவு ஒண்ணும் காரம் இல்லையே, நெய் போடட்டுமா, இல்லைன்னா நல்லெண்ணை போட்டுக்கறீங்களா” என்று அகல்யா கேட்க வேண்டாம் என்பது போல மறுத்து தலையசைத்தாள்.
மேகவி உதட்டை நாவினால் வருடிகொண்டிருக்க, “அவங்க தான் நம்மளை எதுக்கும் மதிக்காம இருக்காங்களே அப்புறம் என்ன, தேவையானதை அவங்களே கேட்டு வாங்கிப்பாங்க, உன் தட்டை பார்த்து சாப்பிடு அகல்யா” என்று மகளை அதட்டினாள் மீனாட்சி.
“மீனாட்சி என்ன இது” என்று விசு கடிந்து கொள்ள, “நான் என்ன சொல்லிட்டேன் இத்தனை பேர் இத்தனை கேட்கறீங்க ஆனா பதிலே சொல்லாம இருந்தா என்ன அர்த்தம். நம்மளை மதிக்கலைன்னு தானே அர்த்தம்” என்று அவள் முகத்தை திருப்பி கொள்ள, கண்ணை இறுக மூடி திறந்த மேகவி, பாதி சப்பாட்டோடு எழுந்து கொள்ள முனைய, அண்ணி சாப்பிடுங்க” என்று அவள் கை பற்றினாள் அகல்யா.
“நீ ஏன்மா என் மேலே அக்கறைபடற, உங்கம்மா கோவிச்சுக்க போறாங்க, உன் தட்டை பார்த்து சாப்பிடு” என்று அவள் கையை தன் மீது இருந்து எடுத்துவிட்டு சென்று விட்டாள்.
அவள் மாடி ஏறி செல்ல, "என்ன மீனாட்சி இது" என்று விசு மனைவியை கண்டிக்க, அப்போது தான் படிகளில் இறங்கி வந்து கொண்டிருந்த வீரா, மேகவி வேகமாக தன்னை கடந்து செல்லவும், அவளை பார்த்து கொண்டே கீழே இறங்கி வந்தான்.
அவள் தட்டில் உணவு அப்படியே இருக்க, “என்னாச்சு சாப்பிடாமலே போய்ட்டாளா” என்று கேட்டான் குடும்பத்தினரை பார்த்து.
“அது காரமா இருந்திருக்கும் போல அதான் புள்ளை சாப்பிடலை” என்று கூறினார் விசு.
“காரமா, நம்ம வீட்டை விட அத்தை நல்லாவே காரம் சேர்த்து செய்வாங்களே” என்று கூறியவனுக்கு அப்போது தான் காலையில் நடந்தது நினைவுக்கு வந்தது. அவனும் ஒன்றும் அவளுக்கு சலைத்தவன் அல்லவே, புதிதாய் கிடைத்த இனிப்பு பண்டத்தை வேக வேகமாக சுவைத்து பார்க்கும் குழந்தையின் மனநிலையுடன் தானே அவள் இதழ்களை மென்று வைத்திருந்தான்.
“அது என்னவோ அவளுக்கு தான் நாம எது செய்தாலும் குத்தமா இருக்கே” என்று மீனா சலித்து கொள்ள, தந்தையும் மகனும் ஒரு சேர அவளை பார்த்தனர்.
“அம்மா, மீனா, என்ன இது” என்று இருவரும் ஒருசேர கேட்க, “என்னை ஏன் கேட்கறீங்க நானே என் அண்ணன் பொண்ணு அங்கே சோறு தண்ணி இல்லாம கிடக்கிறாளேன்னு இருக்கேன். இங்கே இவளுக்கு காரம் அதிகம்னு நீங்க எல்லாம் வக்காலத்து வாங்கிட்டு வரீங்க” என்று எழுந்து சென்று விட்டார்.
அப்போது தான் அங்கே தாத்தா இல்லாததை கவனித்த வீரா, “தாத்தா எங்கேப்பா” என்று கேட்டான்.
“தாத்தாவுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லைப்பா படுத்திருக்கார், கொஞ்சம் நேரம் கழிச்சி சாப்பிடறேன்னு சொன்னார்” என்று கூறினார் விசு.
அதை கேட்டவன் தாத்தா அறைக்கு செல்ல போக, “தம்பி நீ சாப்பிடலையா” என்று கேட்டார் தந்தை.
“தாத்தாவை பார்த்துட்டு வந்து சாப்பிடறேன் பா”, என்று அவர் அறைக்கு சென்றான். அங்கே மாமனார் அருகே அமர்ந்து அவருக்கு கஞ்சியை ஆற்றி கொடுத்து கொண்டிருந்தார் மீனா.
அவனுக்கு தெரியும் அம்மா இப்படித்தான், கோபத்தில் கொஞ்சம் படபடவென பேசுவாரே தவிர மற்றவருக்கு என்னவானால் நமக்கு என்ன என்று நினைக்கும் ரகம் இல்லை. இதோ அங்கே வெடுக்காக பேசிவிட்டு வந்து இங்கே மாமனாருக்கு கஞ்சி கரைத்து கொடுத்து கொண்டிருக்கிறாரே. அம்மாவின் அருகே வந்து நின்றவன், “உடம்புக்கு என்ன தாத்தா செய்யுது” என்று கேட்டான்.
“எனக்கு ஒண்ணுமில்லை கண்ணா, வயசு போறது தான் காரணம்” என்று கூறினார் தாத்தா.
“அப்படி எல்லாம் நீங்களே சொல்லிட கூடாது தாத்தா, மன்த்லி செக்அப் நாள் நெருங்க போகுது, நான் அப்பாய்ண்ட்மென்ட் வாங்கிட்டு கூட்டிட்டு போறேன், ஒரு செக்அப் செய்திடலாம்” என்றான்.
“அதெல்லாம் வேண்டாம் கண்ணா, என் மருமக செய்து தர பூண்டு கஞ்சி ரெண்டு நாளைக்கு சாப்பிட்டா எல்லாம் சரியாகிடும்” என்று கூறினார்.
“அது என்னவோ சரிதான், அம்மா சமையலே மருந்துக்கு ஈடு தான், அதுக்காக அப்படியே இருக்க கூடாது. நான் அஜய் கிட்டே சொல்லி அப்பாய்ன்ட்மெண்ட் வாங்கிடறேன், ஈவினிங் நானே கூட்டிட்டு போறேன்” என்று கூறியவன், “அம்மா எனக்கும் தாத்தாவுக்கு செய்த கஞ்சி இருந்தா கொடுங்களேன்” என்று கேட்டான்.
பதில் ஏதும் பேசாத மீனா தன் போக்கில் எல்லாவற்றையும் எடுத்து கொண்டு சென்று விட்டார்.
தாத்தாவும் பேரனும் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ள, “என்ன கண்ணா இது” என்றார் சுப்பையா தயங்கி.
“அதெல்லாம் ஒண்ணுமில்லை தாத்தா” என்று கூறியவன் அவரை படுக்க வைத்து விட்டு வெளியே வந்தான்.
அவன் சாப்பிடும் இடத்தில் அவனுக்கான கஞ்சி கிண்ணத்தில் இருந்தது, அதை பார்த்து சிரித்து கொண்டவன், அதை எடுத்து கொண்டு மேலே மாடிக்கு சென்றான்.
அங்கே ஊஞ்சலில் அமர்ந்தபடி ஆடிகொண்டிருந்த மனைவி அருகே சென்றவன், “இதை சாப்பிடு மேகவி காரம் தெரியாது” என்றான்.
அவன் கையில் இருந்ததை வெறுப்பாக பார்த்தவள், “இதை கொண்டு போய் உங்க வீட்டுக்கு மாட்டுக்கு கொடுங்க” என்றாள் முகத்தை சிடுசிடுப்பாக வைத்து கொண்டு.
அதை கேட்டு பக்கென சிரித்தவன், “ஹே காலையிலே தான் உன் தம்பிக்கிட்டே சொன்னேன், காட்டுல வச்சு வளர்க்க வேண்டிய விலங்கை எல்லாம் வீட்டுல வச்சு வளர்த்திருக்கீங்கன்னு, நீ மாடுன்னு கன்பர்ம் பண்ணி நீயே உன்னை ஒரு” அடுத்து அவன் சொல்ல வருவதற்குள் எதை எடுத்து அடிக்கலாம் என்று அவள் தேட, அந்த இடைவெளியில் ஒரு கையால் அவளை வளைத்து பிடித்தவன் மற்றொரு கையால் தான் கொண்டு வந்த கஞ்சியை அவளுக்கு ஊட்டினான். முதலில் முரண்டு பிடித்து குடிக்க மறுத்தவள், பிறகு பூண்டு, தேங்காய் பால் சேர்த்து செய்திருந்த அந்த கஞ்சியின் சுவையில் பிடித்தம் கொண்டு மெதுவே உதடு பிரித்து வாங்கி கொள்ள மெதுவாக அவள் கையை விடுவித்தான் வீரா.
அவள் குடித்து முடித்திருக்க,
“எதுக்குடி உனக்கு இவ்வளவு கோபம்” என்று கேட்டபடியே மீசையாக அவள் உதடுகளில் ஒட்டி இருந்த கஞ்சியை விரல் கொண்டு வழித்தான். அப்போதும் கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல அவனை முறைத்து இருந்தவளை பார்த்து சிரிப்பு தான் வந்தது.
பாத்திரத்தை எடுத்து கொண்டு வெளியே செல்ல போனவன், “எனக்கும் தான் உதடு எரியுது நமக்கெல்லாம் யார் ஊட்டி விடுவாங்க” என்று முனகி கொண்டே செல்ல, அவன் பின்னே பறந்து வந்து விழுந்தது ஒரு பத்திரிக்கை. இது தான் நடக்கும் என்று அறிந்திருந்தவன் சிரித்து கொண்டே வெளியே சென்று விட்டான்.
அகல்யாவை எப்படியோ கெஞ்சி கொஞ்சி கேட்டு ராகவியை பார்க்க அழைத்து கொண்டு வந்திருந்தாள் மேகவி. வீட்டிற்கு வந்திருந்த ராகவி இவளை அங்கே எதிர்பாராமல் முதலில் அதிர்ந்து பிறகு முகத்தை திருப்பி கொண்டு அமர்ந்து விட்டாள்.
நல்ல வேளை, மேகவியும் அகல்யாவும் அங்கே சென்ற போது கனகா அங்கே இல்லை. பக்கத்தில் ஏதோ வேலையாக சென்று இருந்தார்.
“இவங்களை இங்கே எதுக்கு கூட்டிட்டு வந்த அகல்யா”
“ராகவி, அண்ணி உன்னை பார்க்கணும்னு சொன்னாங்க”
“ஏன் இன்னும் உயிரோட இருக்கேனா இல்லை செத்து போய்ட்டேனான்னு பார்க்கவா” என்று சினிமா வசனம் பேசியவளை பார்க்க சிரிப்பாக வந்தது மேகவிக்கு.
விரும்பியவன் ஏமாற்றி விட்டால் ஒன்று அவன் சட்டையை பிடித்து கேட்க வேண்டும். இல்லையேல் சரி தான் போடா என்று அவனை தூக்கி எரிந்து விட வேண்டும். இது இரண்டும் இல்லாமல் தன் உயிரை போக்கிக்கொள்வதை எப்போது தான் இவர்கள் எல்லாம் நிறுத்த போகிறார்களோ என்று தோன்றியது. இவளிடம் எப்படி பேச்சை துவங்குவது என்று யோசித்தவள், அகல்யா வேறு அருகேயே அமர்ந்து இருக்க, “என்ன அகல்யா, உங்க அத்தை வீட்டுக்கு வந்திருக்கேன் ஒரு காப்பி கூட கிடையாதா” என்று கேட்டாள் மேகவி.
ஏற்கனவே இந்த அண்ணி கொஞ்சம் காரசாரமான பேர்வழி, இந்த ராகவி வேற இப்படி பேசி வைக்கிறாளே, ஏதும் பிரெச்சனை ஆகிடுமோ என்று பயந்திருந்த அகல்யா, அவள் இலகுவாக காப்பி கேட்கவும் "இதோ எடுத்துட்டு வரேன் அண்ணி" என்று ஓடினாள்.
அவள் சென்றதும் முகத்தை திருப்பி வைத்து இருந்த ராகவியை பார்த்தவள், “உனக்கும் அவருக்கும் அவ்வளவு நெருக்கமா” என்று நேரடியாக கேட்டாள்.
அவளது இந்த கேள்வியை எதிர்பார்த்திறாத ராகவி, “அதெல்லாம் உன்கிட்டே சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” என்றாள்.
“இது எனக்கு அவசியமான கேள்வி மட்டும் இல்லை உனக்கும் அவசியமான கேள்வி, நீ எனக்கு ஹெல்ப் பண்ணா நான் உனக்கு ஹெல்ப் பண்ணுவேன். நீ ஆசைப்பட்டதை உனக்கே கொடுத்துட்டு போய்டுவேன்” என்றாள்.
ராகவிக்கு ஒன்றும் புரியவில்லை, “என்ன ஏதோ பொருளை தூக்கி கொடுக்கிற மாதிரி பேசற, நான் ஆசைப்பட்டது என்னன்னு உனக்கு தெரியுமா” என்றாள் ஏளனமாக.
“ஏன் தெரியாது நல்லாவே தெரியுமே, என்னோட இந்நாள் புருஷன், உன்னோட முன்னாள் காதலன் வீரபத்ரன் தானே” என்றாள் இவள்.
ராகவி திகைத்து விழிக்க, “இங்கே பாரு நீ சீக்கிரம் சரியாகிட்டு வந்து என்னை தனியா பாரு, உனக்கு நான் ஹெல்ப் பண்றேன்”
“உனக்கென்ன பைத்தியமா என்ன நினைச்சு பேசிக்கிட்டு இருக்க”
இடவலமாக தலையசைத்தவள், “அதெல்லாம் ஒண்ணுமில்லை, என்னால இதை பத்தி இங்கே உன்கிட்டே இதுக்கு மேலே பேச முடியாது. அதனால சொல்றேன், உனக்கு லாபம் வரக்கூடிய விஷயம் தான் . விருப்பம் இருந்தா வா, பேசலாம்” என கூறி கொண்டிருக்கையிலேயே அங்கே வந்த கனகா, “அடிப்பாவி இங்கே எதுக்குடி வந்த என் பொண்ணை கழுத்தை நெறிச்சு கொல்லவா வந்த” என்று கத்தினார்.
அவர் சத்தத்தில் ஓடி வந்த அகல்யா, “அத்தை, அண்ணி ராகவியை பார்க்க தான் வந்தாங்க, நான் தான் கூட்டிட்டு வந்தேன். ஏன் இப்படி எல்லாம் பேசறீங்க” என்று கேட்டாள்.
“ஆமாம்மா உனக்கு உன் குடும்பத்துக்கும் இனி நாங்க எல்லாம் கண்ணுக்கு தெரிவோமா, அண்ணியாம் அண்ணி எங்கே இருந்து வந்தா புதுசா இந்த அண்ணி. இத்தனை நாளும் என் பொண்ணு தானே உனக்கு அண்ணியா இருந்தா. புதுசா ஆளுங்களை பார்க்கவும் பழசு எல்லாம் கண்ணுக்கு தெரிய மாட்டேங்குது போல. முதல்ல உன் அண்ணியை கூட்டிகிட்டு இங்கே இருந்து கிளம்பு” என்றார் கோபமாக.
“அம்மா நீ கொஞ்சம் சும்மா இரும்மா, அகல்யா இவங்களை கூட்டிக்கிட்டு போ” என்று கூறினாள் ராகவி.
மேகவி ராகவியை ஒரு அர்த்தம் நிறைந்த பார்வை பார்த்து விட்டு வர, அவளை பின் தொடர்ந்தாள் அகல்யா.
“இதுக்கு தான் அண்ணி இங்கே வர வேண்டாம்னு சொன்னேன், அத்தை கொஞ்சம் அப்படித்தான் படபடன்னு பேசுவாங்க, ஆனா நல்லவங்க தான் ” என்று தயங்கியபடியே கூறினாள்.
பக்கவாட்டில் வந்தவளை திரும்பி பார்த்த மேகவி, “உன்னால மட்டும் எப்படி எல்லாரையும் நல்லவங்கன்னு சொல்ல முடியுது அகல்யா” என்று அவளை ஆச்சரியமாக கேட்டாள் மேகவி.
“ஏன் அண்ணி நாம எல்லாம் மனுஷங்க தானே, தப்பு செய்யறது இயல்பு தானே. அதுவும் அவங்க அவங்க பார்வையிலே பார்க்கும் போது நியாயம் அவங்க பக்கம் இருக்கிறதா நினைக்கிறதில தப்பு இல்லையே. ஆனா நாம நியாயவாதியா நடந்துக்கனும்னா, எல்லாருடைய நிலைமையிலேயும் நம்மளை நிறுத்தி வச்சி பார்க்கணும்னு எங்க அண்ணன் சொல்வாரு. அப்படி பார்த்தா, இத்தனை நாள் ராகவிக்கு அண்ணன் தான்னு நினைச்சுட்டு இருந்த அத்தை இப்போ அது இல்லைன்னு சொல்லவும் வருத்தப்பட்டு கோபப்பட்டு பேசறதுல நியாயம் இருக்க தானே செய்யுது. ஆனா இதுல உங்களை குற்றம் சொல்ல அவங்களுக்கு உரிமை இல்லை. ஏன்னா நீங்க வெளியே இருந்து வந்திருக்கீங்க. உங்களுக்கு இங்கே நடந்த எதுவும் தெரியாது. அந்த விஷயத்திலே நான் உங்க பக்கம் தான் நிப்பேன்” என்றாள்.
“அப்போ உங்க அண்ணா செய்தது சரின்னு சொல்ல வரியா”
“அண்ணி உங்களுக்கும் அண்ணனுக்கும் என்ன பிரெச்சனை தெரியாது, ஆனா எனக்கே இவ்வளவு சொல்லி வளர்த்த எங்க அண்ணன் எப்பவவும் தப்பு செய்ய மாட்டார். அண்ணன் இப்படி நடந்துகிட்டதுக்கு ஏதாவது ஒரு காரணம் இருக்கும்” என்றாள் உறுதியாக.
“ராகவி விஷயத்துக்கு கூடவா”
அதான் சொன்னேனே அண்ணி, அண்ணன் ஒரு முறை ராகவிகிட்டே அந்த மாதிரி எல்லாம் பழகினது இல்லை. இது ராகவிக்கு கூட தெரியும்” என்றாள்.
“நீ பாவம் அகல்யா, வெளுத்தது எல்லாம் பால்னு நினைக்கிற, மனுஷங்க எல்லார்கிட்டேயும் ஒரே முகமா இருக்கிறது இல்லை. எல்லாருக்கும் வேற வேற முகமூடி தேவைப்படுது. இதுல எது நிஜம் எது பொய்ன்னு கண்டுபிடிக்கவே நமக்கு காலம் பத்தாது”
ஆனா அண்ணி” அகல்யா அடுத்து பேச வருவதற்குள், அகல்யா எனக்கு இங்கே வந்த பிறகு கிடைச்ச ஒரே ஆறுதல் நீ மட்டும் தான். எது எப்படி இருந்தாலும் நமக்குள்ள உறவு சுமூகமாவே இருக்கணும்னு நினைக்கிறேன். அதனால இனி உங்க அண்ணனாவே இருந்தாலும், யாருக்கும் சப்போர்ட் பண்ணிக்கிட்டு வராத. சரியா” என்றாள்.
அவள் இங்கே தனியே இருக்கிறாள், வீட்டில் யாருடனும் பேசுவது இல்லை, அப்படி இருக்கும்போது தன்னுடன் மட்டுமே பேசிக்கொண்டிருப்பவளிடம் வாதிட்டு அவளை தனிமைக்கு உட்படுத்த அகல்யா விரும்பவில்லை. அதற்காக அவள் அண்ணன் தவறானவன் என்று அவள் கூறுவதையும் கேட்டுக்கொண்டு இருக்க முடியவில்லை. எப்படியும் அவள் அண்ணன் தன்னை தானே நிரூபித்து கொள்வான் என்று அவளுக்கு நம்பிக்கை இருக்கிறது. அதனால் இந்த பேச்சை அப்படியே நிறுத்தி கொண்டாள்.
இருவரும் பொதுவான விஷயங்களை பேசியபடியே வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். வாசலிலேயே மீனா அவர்களை பிடித்து கொண்டார்.
"ஏண்டி உனக்கு அறிவிருக்கா, இவளை எதுக்கு அங்கே கூட்டிக்கிட்டு போன, ராகவியோட உசிர் கொஞ்சம் நஞ்சம் ஒட்டிக்கிட்டு இருக்கிறதையும் ஒரேயடியா போக்கிடவா” என்று கத்தினார்.
“அம்மா நாங்க சும்மா தான் அவளை பார்த்துட்டு வரலாம்னு போனோம்”
“ஆமா இவ போய் பார்த்துட்டு வந்ததும், அவபட்ட வேதனை எல்லாம் அப்படியே பறந்து போய்டும் பாரு. அண்ணி போனை போட்டு கத்தறாங்க. நீ இருக்க வேண்டிய இடத்திலே நான் இருக்கேன் பாருன்னு சொல்லிட்டு போக உன் மருமகளை அனுப்பி வச்சியா. நானும் என் பொண்ணும் வேணும்னா எங்கேயாவது கண்காணாத இடத்துக்கு போய்டறோம், இப்படி எங்களை சித்ரவதை செய்யாதீங்கன்னு சொல்லி அழறாங்க”
“அம்மா அதான் சொல்றேன்ல”, என்று அகல்யா பேச அவளை கைபற்றி தடுத்த மேகவி, “இங்கே பாருங்க அகல்யாவை நான் தான் வற்புறுத்தி கூட்டிக்கிட்டு போனேன். என்னால ஒரு பிரெச்சனை வந்திருக்கு, அதான் அந்த பொண்ணை பார்க்கணும்னு தோணுச்சி. மத்தபடி வேற எந்த நோக்கமும் இல்லை. இதை நீங்க புரிஞ்சிக்கிட்டாலும் சரி புரிஞ்சுக்கலைன்னாலும் சரி” என்று விட்டு உள்ளே சென்று விட்டாள்.
மாலையில் ஒரு பெரிய பார்சலுடன் வீடு வந்த வீரா, விஷயம் கேள்விபட்டு அவள் முன்னே வந்து அந்த பார்சலை வைத்தான்.
அவள் நிமிர்ந்து பார்க்க, “இதுல உன்னோட புக்ஸ் எல்லாம் இருக்கு, எக்ஸாம்ஸ் வருது, ஒழுங்கா படி. கண்டதையும் நினைச்சு தேவையில்லாத வேலை எல்லாம் செய்யாத” என்று மிரட்டலாகவே கூறினான்.