என் ஆயுள் ரேகை நீயடி 11

Advertisement

Sagee Elumalai

Member
Member
Chapter 11
மேகமகன்
தன்னவளை கூடி காதல் செய்ய
மண்ணில் வந்து விழுந்தன

மழைக்குழந்தைகள்..

“ஆமா எல்லாரும் அப்படி எங்கே தான் போனீங்க” தானாகவே தேடி வந்து அகல்யாவிடம் பேச்சு கொடுத்தாள் மேகவினி.
இவர்களுக்குள் மட்டும் இருக்கும் ரகசியத்தை அறிந்து கொள்ள வேண்டிய ஆர்வமும் அதில் தனக்கு ஏதாவது ஆதாயமும் கிடைக்குமா என்ற எண்ணமும் சேர்ந்து கொள்ள தானே அகல்யாவின் அறைக்கு தேடி வந்திருந்தாள்.

முன் அவள் தன்னிடம் கோபமாக பேசியது பற்றி எல்லாம் எந்த நினைவும் இல்லாதவளாக வாங்க அண்ணி என்று வாய் நிறைய வவேற்று வைத்தாள் அகல்யா.

“சாரி அகல்யா, நீங்க எல்லாரும் என்கிட்டே சொல்லாம கிளம்பி போன கோவத்தை உன்கிட்டே காட்டிட்டேன்” என்றாள் இறங்கிய குரலில்.

“அதெல்லாம் விடுங்க அண்ணி, நாங்க திடீர்னு கிளம்பி போகவும் என்ன ஆச்சோன்னு உங்களுக்கு கவலையா இருந்திருக்கும். அதான் கோபப்பட்டு பேசிட்டீங்க. எனக்கு புரியுது” என்றாள் ஆதரவாக.

அவள் அப்படி சொல்லவும், மேகவி க்கு ஒரு மாதிரி ஆகி போனது, தன்னை விட சின்ன பெண் எவ்வளவு பெருந்தன்மையாக நடந்து கொள்கிறாள்.

வீரா தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு வந்ததற்கும், அவள் அம்மாவே அதற்கு துணை நின்றதற்கும் நான் ஏன் காரணமே இல்லாமல் இவள் மேல் கோபத்தை காட்டுகிறேன். அவள் சொன்னது போல திடீரென எல்லாரும் கிளம்பி போனதும் என்ன நடந்ததோ ஏதேனும் பிரெச்சனையா என்று நான் ஏன் யோசிக்காமல் போனேன். அந்த அளவுக்கா கோபம் என் கண்ணை மறைத்து விட்டது. இப்படியா சுயநலவாதியாகி போனேன். கோபம் இருக்கட்டும் அதற்காக இப்படியா கையில் கிடைத்தவர்களை எல்லாம் கடித்து குதறி வைப்பது. அதுவும் இவள் சின்னவள், தன் தம்பி சஞ்சய்யை விட ஒரே வயது தான் பெரியவள் அவளிடம் போய் கோபத்தை காட்டி இருக்கிறேனே என்று உள்ளுணர்வு உறுத்த, அவள் கையை ஆதூரமாக பற்றி கொண்டாள்.

மேகவி வந்த போது, அகல்யா ஆர்வமாக அவள் கையை பற்றி கொள்ள, அவள் அதை தவிர்த்து விட்டதும், இப்போது அவளே தனது கையை பற்றி கொண்டதும் நினைவு வந்தது அகல்யாவுக்கு.

அண்ணா சொன்னது போல இவங்க அவ்வளவு கெட்டவங்க எல்லாம் கிடையாது தான். ஏதோ கோபத்துலே தான் எடுத்தெறிஞ்சு பேசறாங்க, என்ன இருந்தாலும் நம்ம அருணா அத்தை குணம் கொஞ்சம் கூடவா இல்லாம போகும்.
மேகவியை அழைத்து வருவதற்கு முன்பே, வீரா தங்கையிடம் நடக்க இருக்கும் விஷயங்களை மேலோட்டமாக கூறி இருந்தான்.

தாத்தாவின் ஆசைக்காக மேகவினியை அவள் விருப்பமின்றி மணந்து கொண்டதாகவும், அதனால் அவள் தன் மீது இருக்கும் கோபத்தை எல்லோரிடமும் காட்ட கூடும், குறிப்பாக வீட்டில் சம வயதில் இருக்கும் பெண்கள் இருவருக்கும் எப்போதும் வேண்டுமானாலும் முட்டி கொள்ள வாய்ப்பு இருக்கும். அப்படி பட்ட நேரங்களில் ஒன்றே ஒன்று மட்டும் நினைவில் வைத்து கொள்ள வேண்டும், அவள் கெட்டவள் இல்லை, அவளுக்கான நியாயங்களை சற்றே உயர்த்தி பிடிப்பவள், அது தவறாக இருக்கும் பட்சத்தில் நிச்சயம் தன்னை திருத்தி கொள்ள தயங்க மாட்டாள். அதனால் அவளுக்கு நம்மை புரிந்து கொள்ளவும், பிடித்து போகவும் கொஞ்சம் அவகாசம் தர வேண்டும். அது வரையில் அவள் பேசுவதை தவறாக எடுத்து கொள்ள வேண்டாம் என்று மிகவுமே பொறுமையாகவும் கனிவாகவும் அண்ணன், தங்கைக்கு எடுத்து கூறி இருந்தான்.

அகல்யா, இயல்பிலேயே சற்று அமைதியான பெண், அதிகம் அதிர்ந்து பேசி அரட்டை அடித்து என்றெல்லாம் இருக்க மாட்டாள். வீடும் குடும்பமும், தான் அவளுக்கு எல்லாமே. நட்புகள் கூட பள்ளி கல்லூரி வாசலோடு முடிந்து போகும். மற்றபடி அறிவுரைக்கு அப்பா, அன்புக்கு அம்மா, ஆசிக்கு தாத்தா, ஆசானாய், சகோதரனாய், நண்பனாய், அண்ணன் அவ்வளவு தான் அவள் வட்டம்.

அத்தை மகள், ராகவி அவளுக்கு ஒரு நல்ல தோழியும் கூட, இப்போது அடுத்து அவளது வட்டத்திற்குள் வந்திருக்கும் உறவு மேகவி தான். அவளுடன் சகஜமாக பழகி இன்னொரு தோழியை ஏற்படுத்தி கொள்ள வேண்டும் என்று தான் அகல்யாவும் நினைத்திருந்தாள்.

ஆனால் அவளோ வந்ததும் விரல் நீட்டி மிரட்டாத குறையாக அவளை விலக்கி வைத்திருக்க, மனதிற்குள் கொஞ்சம் வருத்தம் தான். என்றாலும், அண்ணன் சொன்னது போல அவளுக்கும் கொஞ்சம் அவகாசம் கொடுத்து விலகி இருக்க வேண்டும்.

மேகாவும் கோபமாக பேசி விட, அண்ணன் சொன்னதும் நியாபகம் வரவும் தனது அறைக்கு வந்து விட்டாள். ஆனால் அண்ணன் சொன்னது போலவே இதோ அவளிடம் வந்து கண்ணை சுருக்கி சாரி என்று கூறி கொண்டிருக்கிறாள் அவள் அண்ணன் மனைவி. சிரிப்பு தான் வந்தது அகல்யாவுக்கு. அண்ணன் அதுக்குள்ள அவர் பொண்டாட்டியை நல்லா புரிஞ்சு வச்சிருக்காரே என்று நினைத்து.

அதை உதட்டுக்குள் மறைக்க முயன்றபடி அமர்ந்து இருந்தவளை, “என்ன தனியா சிரிக்கிற என்னை பார்த்தா பைத்தியம் போல இருக்கா” என மேகவி முறைக்கவும், “அச்சோ அண்ணி நீங்க ரொம்ப ஸ்வீட் தெரியுமா” என்று அவள் கன்னம் கிள்ளி கொஞ்சினாள் அகல்யா.

அவளிடம் இருந்து முகத்தை இழுத்து கொண்ட, மேகவி, நான் கோபமா பேசிக்கிட்டு இருக்கேன் இந்த பொண்ணு என்ன என்னை ஏதோ ஸ்வீட்டுங்குது என்று பார்த்தாள்.

“சரி நீங்க எங்கே தான் போனீங்க சொல்லவே இல்லை, இன்னும் கூட உங்க அம்மா அப்பா, தாத்தா யாருமே திரும்பி வரலையே. என்கிட்டே சொல்லலாம்னா சொல்லு, இல்லை என்கிட்டே எல்லாம் சொல்ல கூடாதுன்னு உங்க வீட்டுல இருக்கறவங்க சொல்லி இருந்தா வேண்டாம்” என்றாள்.

“அப்படி எதுவும் இல்லை அண்ணி, ஆனா விஷயம் தெரிஞ்சா நீங்க வருத்தப்படுவீங்கன்னு தான் யாரும் சொல்லலை”

“நான் ஏன் வருத்தப்பட போறேன், அப்படி என்ன நடந்தது” என தோள் குலுக்கினாள்.

“அது எங்க அம்மாவோட அண்ணன் பொண்ணு ராகவி, அவ எதையோ குடிச்சுட்டு சூசைட் அட்டெம்ப்ட் பண்ணி இருக்கா”

இதை கேட்டதும், உண்மையாகவே மேகவிக்கு அய்யோ என்று தான் பதறியது. “ஏன் என்னாச்சு அந்த பொண்ணுக்கு, எதுக்கு இப்படி தப்பான முடிவு எடுத்துச்சி” என்றாள்

அதே பதட்டத்துடன். அப்போது அவளுக்கு அவள் தான் தன் கணவனுக்கு பேசி இருந்த பெண் என்பது எல்லாம் நினைவில் இல்லை. யாரோ ஒரு பெண் முட்டாள் தனமாக தனது வாழ்க்கையை முடித்து கொள்ள நினைத்திருக்கிறாள் என்று மட்டும் தான் தோன்றியது.

“அண்ணி, அது.. நான் சொல்லுவேன் ஆனா நீங்க கோபப்பட கூடாது”

“நான் ஏன் கோபப்பட போறேன், விஷயத்தை சொல்லு” என்று அவசரப்படுத்தினாள்.

“உங்களுக்கும் அண்ணனுக்கும் திடீர்னு கல்யாணம் ஆகிடுச்சுல்ல, அதான் ராகவி வருத்தத்தில, இப்படி பண்ணிட்டா”

அப்போது தான் அவளுக்கு இவள் யாரை சொல்கிறாள் என்றே புரிந்தது, ஓஹ் நேற்று அம்மாவும் மகனும் பேசிக்கொண்டிருந்த அந்த மாமன் மகளா. என்று புரிந்து கொண்டவள், “எங்களுக்கு கல்யாணம் ஆனதுல அவங்களுக்கு என்ன பிரெச்சனை” தெரியாதது போல கேட்டாள்.

“அண்ணாவுக்கு ராகவியை தான் கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு இருந்தாங்க” என்றாள் தயக்கத்தோடு.

“ஓஹ், லவ் ஃபெய்லியர் ஆ”

“அப்படி எதுவும் இல்லை அண்ணி” அவசரமாக மறுத்தாள் அகல்யா.

“வேற எப்படி, ஒண்ணு உங்க அண்ணன் அந்த பொண்ணை லவ் பண்ணி, என்னை கல்யாணம் பண்ணிக்கிறதுக்காக அவளை கழட்டி விட்டிருக்கனும். கட்டிக்க போறதா இருந்ததால அந்த பொண்ணு உங்கண்ணன்கிட்டே ஏமாந்து இருக்கனும் வேற என்ன இருக்க போகுது” என்று அவள் முடிக்கும் முன், அகல்யா தேம்பி தேம்பி அழு துவங்கி இருந்தாள்.

அவள் அழுவதை கண்டவள், “ஹே என்னம்மா நீ, நான் ஏதோ உன்னை கொடுமை படுத்தின மாதிரி இப்படி தேம்பி அழற. முதல்ல எதுக்கு அழற அதை சொல்லு. அப்புறம் வீட்டுக்கு வந்த முதல் நாளே நாத்தனாரை கொடுமை படுத்துறேன்னு யாராவது நினைச்சுக்க போறாங்க. சொல்லிட்டு அழுமா” என்றாள் புரியாமல்.

“அண்ணி, அண்ணி எங்க அண்ணன் அப்படி எல்லாம் கிடையாது. யாரையும் தப்பா ஒரு பார்வை கூட பார்க்க மாட்டாரு. என்கிட்டே எப்படி பேசுவாரோ அப்படித்தான் ராகவி கிட்டேயும் பேசுவாரு. ராகவி..ராகவிக்கு தான் அவரை ரொம்ப பிடிக்கும், சின்ன வயசுலயே அவங்க அப்பா, எங்க மாமா சாகும்போது அம்மாகிட்டே ராகவியை நம்ம வீட்டு மருமகளா ஆக்கிக்கணும்னு சத்தியம் வாங்கிட்டாராம். அதனால எங்க அத்தை அவக்கிட்டே நீ வீரா மாமாவை தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்னு சொல்லி சொல்லி வளர்த்துட்டாங்க. இப்போ அண்ணா.. அண்ணா உங்களை திடீர்னு கல்யாணம் பண்ணிக்கிட்டு வரவும் அவளுக்கு அது வருத்தமா போச்சு. அதான் இப்படி பண்ணிட்டா. அண்ணா.. அண்ணா மேலே எந்த தப்பும்இல்லை. ராகவியும் நல்ல பொண்ணு தான்” என்று தேம்பி கொண்டே அவள் சொல்லி முடிக்க, கன்னத்தில் கை வைத்து கொண்டு அவளையே பார்த்து இருந்தாள் மேகவி.

அவள் மேலும் சொல்ல முடியாமல் அழ தயாராகவும், எழுந்து மேசையில் இருந்த தண்ணீரை எடுத்து வந்தவள், “போதும் போதும், நீ அழுதது. உங்க அண்ணன் நல்லவரு ராமரோட அவதாரம், நான் ஒத்துக்கிறேன் போதுமா. இப்படி அழுது என்னை வில்லியா ஆக்கிடாத, இந்த தண்ணியை குடி” என்று அவள் எடுத்து வந்த தண்ணீரை கொடுத்தாள்.

கன்னம் மூக்கு காது எல்லாம் அழுததில் சிவந்து இருக்க, செர்ரி பழம் போல சிவந்த மூக்கை பிடித்து ஆட்டினாள் மேகவி. “உங்க அண்ணனை இப்போ என்ன சொல்லிட்டேன்னு இப்படி மூக்கு மேல கோபம் வருது உனக்கு. பாரு மூக்கு எப்படி சிவந்து போச்சு” என்றாள்.

சற்றே சமாதானம் ஆகி இருந்த அகல்யா, அவள் கூறியதை கேட்டதும் லேசாக சிரிக்க, “நல்ல வேளை இப்பவாவது சிரிச்சியே, சரி நான் அந்த ராகவியை பார்க்கலாமா” என்று கேட்டாள்.

“எதுக்கு அண்ணி” உடனே கலவரமானாள் அகல்யா.

“வேற எதுக்கு, நான் வேணும்ணா அவரை டிவோர்ஸ் பண்ணிடறேன், அப்புறம் நீயே கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்ல தான்”

“அண்ணி” சின்னவள் பதற, கன்னத்தில் கை ஊன்றி அவளை வியந்து பார்த்தவள், “இப்படி பச்சை மண்ணா இருக்கியே அகல்மா. இப்படி பட்ட சூழ்நிலையிலே ஒரு ஆறுதல் சொல்ல தான் கேட்டேன் வேற என்ன இருக்க முடியும்” என்றாள்.

சற்றே ஆறுதல் அடைந்த சின்னவள், “அண்ணி வீட்டுல எல்லாரும் என்ன சொல்வாங்க தெரியாது. நான் வேணுமா அண்ணனை கேட்டுகிட்டு உங்களை கூட்டிகிட்டு போகவா” என்றாள்.

“ஒண்ணும் அவசரம் இல்லை அகல்யா, மெதுவா பார்த்துக்கலாம். நானே உங்கண்ணன்கிட்டே கேட்டு சொல்றேன்” என்று அந்த பேச்சுக்கு முற்று வைத்தாள்.

“சரி நான் என்னோட ரூம்க்கு போறேன்”

“அண்ணி அண்ணி ஒரு நிமிஷம்” என்று அவளை நிறுத்தினாள்.

“என்ன”

“நான் திரும்ப இப்படி சொல்றேன்னு கோபப்படாதீங்க, அண்ணா நல்லவரு, அவருக்கு ஒரு விஷயம் பிடிக்காம செய்யவே மாட்டாரு. உங்களை அவருக்கு ரொம்ப பிடிச்சிருக்கும் அதனால தான் கல்யாணம் பண்ணிக்கிட்டாரு. நீங்க அவர் கூட சந்தோஷமா இருக்கனும்” என்றாள்.

அதை கேட்டவள் அது சரி என்பது போல தலையை ஆட்டிவிட்டு சென்று விட்டாள்.

அறைக்கு வந்தவளுக்கு ஒரே யோசனை, இந்த வீரா வீட்டில் நல்லவன் வேசம் போட்டு நடித்து கொண்டு வெளியே வேற முகம் காட்டிகிட்டு இருக்கான் போல, அதனால் தான் இந்த பொண்ணுக்கு அவனை பத்தி ஒண்ணும் தெரியலை. நாம அந்த ராகவியை பார்த்து பேசணும், அவன் மேலே ஏதாவது கம்ப்ளைண்ட் இருந்தா கூட போதும் அதை வச்சு இவன்கிட்டே இருந்து பிரிஞ்சு போய்டலாம். இவன் ஏதாவது ஆசை வார்த்தை பேசாமலா அவ சாகற அளவுக்கு போய்ருப்பா நிச்சயம் ரெண்டு பேருக்குள்ள ஏதாவது இருக்கும். ஆமா நம்ம வீட்டுக்கு வந்திருந்த கொஞ்சம் நாள்லயே நல்லவன் தான்னு என்னையே நம்ப வச்சவன் தானே இவன். இத்தனை வருஷம் கூடவே இருந்தவளை நம்ப வைக்கிறது என்ன அவ்வளவு கஷ்டமா, பெரிய சாகசக்காரன் தானே இவன்.

அவனை பார்த்த முதல் நாளே இவளை தலை முதல் கால், வரை அவன் கண்கள் மேய்ந்தது, அப்போதே அவன் தப்பானவனாக தான் இருக்கும் என்று யோசித்திருந்தாள். இடையில் இந்த அம்மா தான், அவன் வந்ததும் சந்தோஷமாக இருப்பது போல காட்டிக்கொண்டதில், அவனை பற்றிய மைனஸ் எண்ணங்கள் எல்லாம் ஒதுங்கி கொண்டது. அவன் நல்லவன் தான் நாம தான் அவனை தப்பா நினைக்கிறோம்னு அவளையே நம்ப வச்ச கேடி ஆச்சே அவன்.

வீரா மதியம் உணவருந்திவிட்டு, மற்றவர்களுக்கும் எடுத்து கொண்டு சென்றிருப்பான் போல, மாலை ஆகவும் மற்றவர்களுடன் அவனும் வீடு திரும்பி இருந்தான்.

தாத்தா சோர்வாக இருக்கையில் அமர்ந்து விட, “இப்போ உங்களுக்கு சந்தோஷமா மாமா”, என்று துவங்கினாள் மீனாட்சி.
அவர் அயர்வாக அவளை பார்க்க,

“என்ன மாமா, எதுவும் தெரியாத மாதிரி பார்க்கறீங்க, உங்களுக்கு உங்க பொண்ணு முக்கியம், இவருக்கு தங்கச்சி முக்கியம், இதோ இவனுக்கு தாத்தா அப்பாவோட ஆசை முக்கியம். ஆனா உங்க யாருக்குமே அந்த அப்பா இல்லாத பொண்ணை பத்தின எந்த அக்கறையும் இல்லை அப்படித்தானே. அவளுக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து வீராவை தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்னு நாங்க பேசும்போதெல்லாம் சும்மா தானே இருந்தீங்க. அப்போவே சொல்லிருக்கலாமே, உங்க அண்ணன் பொண்ணெல்லாம் இந்த வீட்டுக்கு வர தகுதி இல்லாதவ, என்னோட பேத்திக்கு மட்டும் தான் அந்த தகுதி இருக்குன்னு சொல்லிருந்தா அவளும் மனசுல ஆசையை வளர்த்துக்கிட்டு இப்போ உசுருக்கு போராடிக்கிட்டு இப்படி ஆஸ்பத்திரியிலே படுத்திருக்க மாட்டாளே. எங்கேயோ எவனையோ கல்யாணம் பண்ணிக்கிட்டு எப்படியே வாழ்க்கையை ஓட்டி இருப்பாளே. எல்லாருமா சேர்ந்து என்னோட அண்ணன் குடும்பத்தை இப்படி பழி வாங்கிட்டீங்களே” என்று மூச்சிறைக்க பேசினார்.

உண்மை தான், மீனாட்சி அண்ணன் இறக்கும் தருவாயில், எப்படியாவது தனது மகளை வீராவுக்கு திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என்று கேட்டுகொண்டார்.

அப்போதிருந்த சூழ்நிலையில் ஒரு மனிதனின் கடைசி ஆசையை எப்படி அன்றே முடியாது என்று சொல்ல முடியும். அதனால் மற்றவர்கள் வாய் திறக்கவில்லை. ஆனால் அதுவே மீனாட்சியும், கனகாவும் இந்த விஷயத்தை தொடர்ந்து பேசும்போது, முதலில் எல்லாம் விசு அதை கண்டித்து இருக்கிறார்.

“படிக்கிற பசங்ககிட்டே என்ன பேச்சு எல்லாம் பேசறீங்க” என்று அதட்டி வைப்பார். அதுவே கொஞ்சம் கொஞ்சமாக பிள்ளைகள் வளரவும் ரகசிய பேச்சாக வலம் வந்தது. ஏதாவது கேட்டால் நாங்க பொம்பளைங்க ஏதோ பேசறோம் விடுங்களேன் என்று நிறுத்தி கொள்வாள் மீனா.

வீராவை பொறுத்த வரையில் இந்த விஷயம் தெரிந்திருந்த போதும், “அம்மா அதெல்லாம் அப்புறமா பேசிக்கலாம், விடுங்க” என்று கடந்து விடுவான் அவ்வளவு தான். வேண்டாம் என்று மறுத்து கூறவில்லை ஆனால் அது தான் இப்போது மீனாட்சி பேச முக்கிய காரணமாக அமைந்தது.

வீரா அப்போது அந்த பேச்சை மறுத்தது இல்லை, அதற்கு காரணம், ராகவி தகப்பன் இல்லாத பெண், அவர்களுக்கு நம்மை விட்டால் யாருமில்லை. அண்ணியும் ராகவியும் நம்மளை நம்பி தான் இருக்காங்க என்று அடிக்கடி கூறிய மீனா தன்னை அறியாமலே அவள் மீது வீராவுக்கு ஒரு அனுதாபத்தை ஏற்படுத்தி இருந்தார்.

அந்த அனுதாபத்திற்காக மட்டும் வீரா அந்த பேச்சை அனுமதிக்கவில்லை. அப்போது அதை மறுக்க அவனுக்கு காரணமும் இல்லை. ஆனால் என்று தாத்தா தன் மகள் பற்றிய பேச்சை எடுத்தாரோ அப்போதே அவனுக்கு அந்த எண்ணம் துணி கொண்டு துடைத்ததை போல ஆனது.
ஆனால் இப்போது அதையே முன்னிறுத்தி பேசவும், அம்மா அருகில் வந்தவன், “அம்மா நான் அப்போ அதை கேட்டுகிட்டு அமைதியா இருந்தேன்னா அதுக்கு காரணம் ராகவியை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லிட்டேன்னு அர்த்தம் இல்லை. எத்தனையோ முறை இப்போ இந்த பேச்சு வேண்டாம்னு சொல்லிறுக்கேன். ஆனா நீங்களும் அத்தையும் தான் சும்மா சும்மா அவக்கிட்டே அதை பத்தியே பேசி அவளை இந்த நிலைமைக்கு கொண்டு வந்திருக்கீங்க. அதுக்காக எல்லா பழியையும் அடுத்தவங்க மேலே போட்டு நான் தப்பிக்க விரும்பலை. முன்னாடியே நான் இதை பத்தி ராகவிக்கிட்டே பேசி இருக்கனும். அது என்னோட தப்பு தான். நான் பார்த்துக்கிறேன். நீங்க யாரும் ஒருத்தரை ஒருத்தர் குற்றம் சொல்லிக்கிட்டு இருக்காதீங்க” என்றவன் மேலே சென்று விட்டான்.

அப்போதும் மனைவி அங்கேயே நிற்கவும், “அப்பா நீங்க போய் படுங்க, எதையும் மனசுல வச்சுக்காதீங்க” என்று மனைவியை கண்டன பார்வை பார்த்து கொண்டே தந்தையை அழைத்து கொண்டு சென்றார் விசு.

இங்கே அறைக்கு வந்தவனை, நக்கலான பார்வை பார்த்து கொண்டு நின்றாள் மேகவி.
அவளை பொருட்படுத்தாமல் நகர்ந்து சென்று மெத்தையில் விழ,
“அதெப்படி ஒரு ரெண்டு பொண்ணுங்களோட வாழ்க்கையிலே விளையாடிட்டு, சாதாரணமா இருக்க முடியுது, பெரிய நடிகன் தான்” என்றாள் போலி வியப்புடன்.
மெதுவாக தலையை உயர்த்தி ஒரு பக்கமாக ஒருக்களித்து படுத்தவன், அவளை பார்த்து கொண்டே,

“அப்படியா நாம தான் இன்னும் விளையாடவே ஆரம்பிக்கலையே” என்றான்.

“என்ன”

“நான் கட்டில் விளையாட்டை சொன்னேன் மா” என்றான் அவளை மேலிருந்து கீழாக அளந்தபடியே.
தான் என்ன பேசிக்கொண்டிருக்கிறோம் இவன் என்ன பேசிக்கொண்டிருக்கிறான் என்று அவள் வெறுப்புடன் பார்த்து நிற்க, சட்டென அவள் கை பற்றி இழுத்து மெத்தையில் விழ செய்திருந்தான் கணவன்.

அதிர்ந்து திமிறி விலகிகொள்ள பார்க்க, அவளை அழுத்தி பிடித்து அவள் நெஞ்சில் முகம் புதைத்தான்.

“ஏய் என்ன பண்றீங்க, நமக்குள்ள எந்த ஃபிசிகல் ரிலேஷன்ஷிப்பும் இருக்காதுன்னு சொன்னீங்க, இப்போ இப்படியெல்லாம் பண்ற விடுடா நீயெல்லாம் மனுஷனா” அவன் முகத்தை தன் நெஞ்சில் இருந்து பிரித்து எடுக்க முயன்றபடியே கத்தினாள்.

ஆனால் அவனோ பிடிவாதமாக அழுத்தி படுத்து கொண்டு, இங்க பாரு இப்பவும் சொல்றேன் எனக்கு அந்த மாதிரி ஐடியா எதுவும் இல்லை, ஆனா பொண்டாட்டி நெஞ்சில தலை வச்சு படுத்தா அப்படியே சுகமா இருக்கும்னு கேள்வி பட்டேன், ஆனா நீ காதுகிட்டே வந்து காட்டு கத்து கத்தற. சும்மா இருந்தா நானே எழுந்துக்குவேன், இல்லை கத்தறதுக்கு வாயே திறக்க விடாம செய்திடுவேன். சும்மா படுடி” என்று படுத்து கொண்டான்.

அவன் என்னவோ சொல்லி விட்டான், ஆனால் நெஞ்சின் மீது மீசையும் தாடியும் உரச பெரிய கல்லை போல அழுத்தி கொண்டு இருக்கும்போது எப்படி சும்மா இருக்க முடியும். வலு கொண்ட மட்டும் அவனை தள்ளிவிட்டு எழுந்து கொண்டாள்.

கையை தலைக்கு பின்னால் கோர்த்து கொண்டு அவளை பார்த்து அவன் சிரித்து வைக்க, கையில் கிடைத்த தலையணையை அவன் மீது வீசி எரிந்து விட்டு பால்கனி சென்று அமர்ந்து கொண்டாள்.

அவள் வீசிய தலையணையை ஈஸியாக கைபற்றியவன், “ஏய் பொண்டாட்டி கோவிச்சுக்கிட்டு வெளியே போய் படுக்கிறது எல்லாம் புருஷன் பண்ணனும், உள்ளே வந்து படு நான் எதுவும் செய்ய மாட்டேன்” என்றான் சிரிப்புடன்.

சட்டென மின்சாரம் தாக்கிய உணர்வில் அதிர்ந்து போன நெஞ்சை அழுத்தி பிடித்து கொண்டு, அவன் மீது உள்ள கோபத்தை சமாளிக்க முடியாமல் நிலை கொள்ளாமல் தவித்து நின்றாள் பெண்.
 

Advertisement

Advertisement

Back
Top