Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என்றென்றும் நீயே நானாக வேண்டும் - 30

Advertisement

Chitradevi viswa

Well-known member
Member
Hi friends thanks for your lovely support and comments.

1161
1162

அத்தியாயம் - 30

அத்தான்… எப்போ வருவீங்க?… ப்ளீஸ் அத்தான் சீக்கிரம் வாங்க…


அத்தை வேற, அன்னைக்கு லேட்டா, கீழப் போனதை வைத்து கிண்டல் பண்ணாங்க…

இன்னைக்கும் அன்றைய மாதிரி தாமதம் ஆக்கிடாதே, என்று வேறு சொல்லி அனுப்பினாங்க…

ப்ளீஸ் அத்தான் என...


டிரஸ்ஸிங் ரூமில் இருந்து, கவின் குரல் கொடுத்தான். ஃபைவ் மினிட்ஸ்ல வந்துடுவேன் சுபி, வெயிட் பண்ணு ...


சொன்ன படியே, ஐந்து நிமிடத்தில் வெளியே வந்தவன், நிதானமாக அவளைப் பார்த்து சீக்கிரம் போகணும் என்றால்,சீக்கிரமாக வந்து கிளம்பு வேண்டியது தானே… நான் தான் கடைக்குப் போயிட்டு வந்தேன். நீ, இவ்வளவு நேரம் என்ன பண்ணிக் கொண்டு இருந்த? எனக் கடிந்து கொள்ள…


அது அத்தான், நாளைக்கு கேரளாவிற்கு போவதற்கான லக்கேஜ்களை எடுத்து வச்சிட்டு இருந்தேன், டைம் ஆனதை கவனிக்கவில்லை அத்தான், என மெல்லிய குரலில் கூற…


ஓ,காட் நாளைக்கு நாம கிளம்புற டூருக்கு இப்ப தான் பேக் பண்ணுறீயா…


இன்னைக்கு நமக்கு ரிசப்ஷன்டி… எப்படி இன்னைக்கு பேக் பண்ணுவதற்கு டைம் ஒதுக்குன… எனக்கெல்லாம் அவசரத்துல எதுவும் செய்யக் கூடாது. நான் நேற்றே எல்லாம் எடுத்து வைக்கவில்லையா? நீ இரண்டு நாளா என்ன தான் செய்தீயோ? என சுபியைப் பார்க்க…


அவளோ, ஒன்றும் கூறாமல், கைகளை பிசைந்துக் கொண்டு அமைதியாக, இருந்தாள். அதைப் பார்த்தவன், வேற எதுவும் கூறாமல் போ, என தலையசைத்தான்.


விட்டால், போதும் என்று ஓடி வந்த சுபி டிரஸ்ஸிங்க் ரூமின் கதவை சாத்திக் கொண்டு அதன்மேல் சாய்ந்து பெருமூச்சு விட்டுக் கொண்டாள்.


'இதுக்கு நான் முன்னாடியே எடுத்து வச்சிருக்கலாம்… இந்த லெக்சரெல்லாம்,என்னால கேட்க முடியலைடா சாமி.' என மனதிற்குள் நினைத்துக் கொண்டாள். பட் என்னோட வேகம் பற்றி அத்தானுக்கு சரியாக தெரியவில்லை, என்று நினைத்தவளின் முகத்தில் புன்னகை மலர்ந்தது.


"சுபி… கம் பாஸ்ட்…" என கவின் வெளியிருந்து கூப்பிட…


இதோ அத்தான்… ஃபைவ் மினிட்ஸ்ல ரெடி ஆகிடுவேன்.


கவின் முகத்திலோ, நக்கல் புன்னகை வழிந்தது. இன்னும் எத்தனை ஐந்து, ஐந்து நிமிடங்கள் ஆகப்போகிறதோ என எண்ணினான்.


அவன் இன்னும் அறியவில்லை, சுபியின் வேகத்தை… இனி மேல் அறிந்துக்கொள்வான்.


சுபியோ, காலையிலே குளித்து நைட்டியில் இருந்தவள், இப்போது முகம் மட்டும் கழுவிக் கொண்டு, எடுத்து வந்திருந்த இலகுவான சல்வாரை மாட்டிக்கொண்டு, முடியை ஃப்ரீ ஹேராக விட்டவள், கண்ணாடியைப் பார்த்துக் கொண்டாள். தான் அழகாக இருப்பதாகவே தோன்றியது. அந்த சந்தோஷத்துடனே வெளியே வந்தாள்.


முகத்திற்கு மேக்கப் போடவில்லை. ஈவினிங் ரிசப்ஷன் போது போட்டுக்கொண்டால் போதும். அதுக்கெல்லாம் பியூட்டிஷன் அரேஞ்ச் செய்தாகிவிட்டது.


விஷால் லஞ்சிக்கே இன்வைட் பண்ணி இருப்பதால், பதினொரு மணிக்கே கிளம்ப வேண்டும், என்று கவின் ஆர்டர் போட்டிருந்தான்.


காலை உணவு முடிந்து மாடிக்கு வந்தவள், டைம் இருக்கே என்று தான் ஊருக்கு எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.


இல்லையென்றால் இரவு வந்து தான் எடுத்து வைத்திருப்பாள். நல்ல வேளை கடவுள் காப்பாற்றினார். இல்லையென்றால் அதுக்கு வேற கவின் என்னச் சொல்லிருப்பானோ, என மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.


டிரஸ்ஸிங் ரூமிலிருந்து வெளியே வந்த சுபியைப் பார்த்து, ஆச்சரியப்பட்டுப் போன கவின், " நாட் பேட் , சொன்னபடியே கரெக்ட் டைமுக்கு வந்துட்ட"என.


ஹலோ…" நாங்கலாம், சொன்னால் சொன்னபடி செய்வோம்." என்றுக் கூறிக் கொண்டே, தான் போட்டிருந்த காலர் நெக் வைத்த சல்வாரின்,காலரைத் தூக்கி விட்டவள், ரூமை விட்டு வெளியேறினாள்.


அவள் செய்தவற்றை ரசித்துக்கொண்டே, அடியே உனக்காகத்தான் நான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன். நீ மட்டும் போற, எனக் கூறிக்கொண்டே கவின் பின்னாடியே வர…


அவளோ, அதற்குள் படியில் துள்ளிக் குதித்து இறங்கி கொண்டிருந்தாள்.


அவள் துள்ளிக் குதித்தப் போது, தோகையென விரிந்தக் கூந்தல், அவளது,மலர் முகத்திற்கு மேலும் அழகு சேர்த்தது. அதை ரசித்துக் கொண்டே, தன் நிதான நடையுடன் கீழே இறங்கினான் கவின்.


கீழே ஹாலில் அமர்ந்து இருந்த, நீரஜாவோ, நகத்தைக் கடித்து துப்பிக் கொண்டிருந்தாள்.


சுபியைப் பார்க்கவும் அப்பாடா வந்துட்டியா, நீ வேற சொன்னால், சொன்ன நேரத்துக்கு வரமாட்டியே என்று பயந்துட்டு இருந்தேன். பரவாயில்லை வந்துட்டா டா…


சுபி, அவளை முறைப்பதைக் கூட கவனிக்காமல், அவள்பாட்டுக்கும் பேசிக்கொண்டிருந்தாள்.

சுபிமா… அத்தையும், மாமாவும், "அம்மா, அப்பாவோட "கிளம்பி போய்ட்டாங்க... நவீன் ரெடியாயிட்டார்… அவங்க எல்லா கதவையும் லாக் பண்ணிட்டு இருக்காங்க… நம்ம கிளம்ப வேண்டியது தான் எனக் கூற…


பின்னாடியே வந்து கொண்டிருந்த கவின் நக்கலாக சுபியை பார்த்துச் சிரித்தான்.


ஐயோ! அக்கா, நீயே போதும் என்னோட இமேஜை டேமேஜ் பண்ண…


நான் எப்படி டைம் கீப்அப் பண்ணுவேன் என்று உனக்கு தெரியும் தானே… இப்ப என்னவென்றால் நீயும் கிண்டல் பண்ணுற, எனக் கூறி சுபி முகத்தை தூக்கி வைத்துக்கொள்ள…


"ஐயோ, செல்லம் இதுக்காகவெல்லாம் கோவிச்சுக்குவாங்களா… அப்ப கல்யாணத்துக்கு முன்னாடி கரெக்டா இருப்ப, இப்போ கல்யாணம் ஆன பிறகு தான் நீ மாறிட்டியே, " என நீரஜா, தங்கையை கொஞ்ச…


அது என கெத்தாக கவினைப் பார்த்து வைத்தாள்.


கவினோ, சுபியைப் பார்த்து கண்ணடிக்க, சுபியோ, ஹாங் என முழித்தாள்.


அதற்கு பிறகு, அங்கு பேசிய பேச்சு எதுவும் அவள் காதில் விழவில்லை.


கீ கொடுத்த பொம்மை போல் அமைதியாக வந்தாள். காரில் ஏறிய உடன் தான் அத்தை, மாமா எங்க கா, என அருகில் அமர்ந்து இருந்த நீரஜாவிடம் கேட்க…


அடியே இவ்ளோ நேரமா, நான் சொன்ன எதையும் கவனிக்கலையா? அத்தையும், மாமாவும் அம்மா, அப்பாவோட போறேன்னு கிளம்பிடாங்க என்று சொன்னேனே…


ஐயோ! என நாக்கை கடித்து கொண்டவள், சாரி கா… நான் வேற ஏதோ சிந்தனையில் மறந்துட்டேன். நான் மாடியிலிருந்து கீழே இறங்கி வந்த போது சொன்ன, நான் மறந்துட்டேன் கா…


அடியே சுபி, இப்பவே என்ன நடக்குது என்பதை மறந்ததுடுற, இன்னும் நீ ஹனிமூன் டூர் போயிட்டு வந்தால், நான் உன் அக்கா என்பதையே மறந்து விடுவ போல, என கிண்டலடிக்க…


நவீனும், கவினும் சேர்ந்து சிரித்து அவளை ஓட்டிக்கொண்டே வர… விஷாலின் ஹோட்டலும் வந்து விட்டது.


அங்கு நின்றிருந்த பெரியவர்களைப் பார்த்ததும் அவர்களிடம் ஓடிச்சென்று அமைதியாக நின்று கொண்டாள் சுபி.


அவள் முகத்தில் இருந்த சந்தோஷத்தையும், வெட்கச்சிவப்பையும் பார்த்து,வாஞ்சையுடன் எல்லோரும் ரசித்துக் கொண்டிருந்தனர்.


சுகந்திக் கூட அந்த இடத்தில் அமைதியாக இருந்தாள். தன்னுடைய மாப்பிள்ளையின் உயரத்தையும், அந்தஸ்தையும் பார்த்து மிரண்டு தான் போனாள்.


பார்க்க எளிமையாக இருப்பவருக்குள், இப்படி ஒரு தொழில் வித்தகர் ஓளிந்து இருப்பதை அவள் அறியவில்லை.


இன்றைக்கு தான் தன்னுடைய மாப்பிள்ளையின் ஃப்வை ஸ்டார் ஹோட்டலுக்கு வந்திருக்கிறாள்.


இது வரைக்கும் கேள்விப்பட்டிருந்தால்,ஒழிய பார்த்தது இல்லை. அதனால் அமைதியாக எல்லாவற்றையும் பார்த்து அதிர்ந்து நின்றாள்.


அதற்கு பிறகு விஷாலும், தீப்தியும் எல்லோரையும் வரவேற்று உணவருந்த அழைத்துச் சென்றனர்.


ரம்மியமான சூழலில் மதிய உணவை பேசிக்கொண்டு உணவருந்தினர்‌‌. தீப்தி எல்லோரிடமும் உற்சாகமாகப் பேச, விஷாலோ, அமைதியாக அவளை ரசித்துக் கொண்டிருந்தான்.


ஒருவழியாக உணவை முடித்துக்கொள்ள, விஷால் எல்லாருக்கும் தனித்தனியா அறை ஏற்பாடு செய்திருந்தான். அங்கு ஓய்வெடுக்கச் சென்றனர்.


சுபி, கவினிடம், "அத்தான்… நான் அம்மாவுடன் கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கவா,"என்று வினவ...


அதெல்லாம் வீட்டில் போய் பேசிக்கலாம்... இப்ப கொஞ்ச நேரம் போய் ஓய்வெடு. அவங்களும் மதியம் தூங்கும் நேரம் இது. இப்போது தொந்தரவு செய்யாதே என அதட்ட…


அவனிடம் ஏதும் பேசாமல், தூங்க ஆரம்பித்து விட்டாள். அது மூன்று பெட்ரூம் உள்ள சூட். மாஸ்டர் பெட்ரூமில் அவள்,படுத்திருக்க… வம்பு செய்வது போல அவனும் அங்கேயே படுத்தான்.


அவன் படுத்தது தெரிந்தவுடன் வேறு பக்கம் திரும்பிக் கொண்டு படுத்துகொண்டாள். எப்பொழுதும் இது மாதிரி இடங்களுக்கு வந்தால், உள்அலங்காரத்தை ரசிப்பாள்.


இன்றோ, கவின் மேல் உள்ள கோபத்தில் எதையும் பார்க்காமல் அப்படியே உறங்கி விட்டாள்.


தூக்கத்தில் அப்படியே திரும்பியவள், இவன் மேல் காலை போட்டு நன்கு உறங்க… கவினோ, அவள் தலையை கோதி எப்படா என்னைப் புரிந்துக் கொள்ள போகிறாயோ, என மனதிற்குள் நினைத்தவன், அவனும் நெற்றியில் கையை வைத்துக் கொண்டு உறங்க முயற்ச்சித்தான்.


இன்டர்காம் சத்தத்தில் விழித்த கவின் தனது அருகில் பதுமையென உறங்கிக் கொண்டிருக்கும் மனையாளை ரசித்துக்கொண்டே போனை எடுத்து காதில் வைத்தான். அங்கோ, சார் பியூட்டிசன் வந்திருக்காங்க… உள்ளே அனுப்பவா என வினவ…


டைமைப் பார்த்துக் கொண்டே வர சொல்லுங்க, என்றவன் தன் மேல் சாய்ந்து படுத்திருந்தவளை, மெல்ல தலையணையில் படுக்கவைத்து விட்டு கதவைத் திறக்கச் சென்றான்.


அங்கு பியூட்டிஷன்ஸ் வந்திருக்க, அவர்களை அழைத்து வந்தவன் முன் அறையில் அமரச் சொல்லி விட்டு, மேடம், இன்னும் டென் மினிட்ஸ்ல வந்துடுவாங்க… வெயிட் பண்ணுங்க என…


ஓகே சார் என்றவர்கள்,அவர்களது திங்ஸ்ஸை பிரித்து வைத்துக்கொண்டிருந்தனர்.


உள்ளே வந்த கவினோ, அவன் அவளை எழுப்ப படாதபாடு பட்டுக் கொண்டிருந்தான்.


தூங்குவதற்கு அவளுக்கு எவ்வளவு தாமதமாகுமோ, அவ்வளவுக்கு அவள் எழுவதற்கும் தாமதம் ஆகும்.


ஒருவழியாக தட்டியெழுப்பி குளியலறை அனுப்பிவிட்டு, அக்கடா என உட்கார்ந்தான் கவின்.


குளித்து விட்டு வந்த சுபி, அத்தான் பியூட்டிஷன் எங்க இருக்கிறாங்க என…


ரைட் சைடு ரூம்ல இருக்காங்க என்றவன் அவன் ரெடியாகுவதற்குச் சென்றான்.


அவன் கிளம்பி முடித்துவிட்டு, சுபிக்கு கால் பண்ணி‍, " ரெடியா சுபி?" என.


என்னத்தான், இப்ப தான் ஹேர்ஸ்டைல் முடிந்தது. இன்னும் ஃபேஸ் மேக்கப் முடியவில்லை. கொஞ்சம் நேரம் வெயிட் பண்ணுங்க என…


சுபி மா, நான் உனக்காக எவ்வளவு நேரம் வேண்டும் என்றாலும் வெயிட் பண்ணுவேன், பட் பங்ஷனுக்கு வருபவர்களை எவ்வளவு நேரம் காத்திருக்க வைப்பது சீக்கிரம் வாடா என மென்மையாகக் கூற…


பங்ஷன் ஆறுமணிக்கு தானே அத்தான். நான் இன்னும் அரைமணி நேரத்தில் ரெடியாயிடுவேன்.


ஷார்ப்பா ஃபைவ்வோ க்ளாக் நாம பார்ட்டி ஹாலுக்கு போயிடலாம். நீங்க சும்மா, சும்மா போன் பண்ணி டிஸ்டர்ப் பண்ணாதீங்க அத்தான் என்று கூறியவள், மீண்டும் தன்னை ப்யூட்டிஷன்களிடம் ஒப்படைத்தாள்.


ஒருவழியாக சுபி கிளம்பி, கவினை அழைக்க, உள்ளிருந்து வெளியே வந்த கவின், அவளை பார்வையாலே விழுங்கிக் கொண்டு, தன் கையை நீட்ட, அவளும் பற்றிக்கொண்டாள்.


கவின் இப்ப பிடித்தப் பிடியை பங்ஷன் முடியும் வரை விடவேயில்லை‌‌.


பார்ட்டி ஹாலிற்கு வந்த இருவரையும் பார்த்த அனைவரும் வாயடைத்து போய் நின்றனர்.


அவ்வளவு ஜோடிப்பொருத்தம் இருவருக்கும் அழகாக இருந்தது. கவின் தங்க நிற ஷெர்வானியில் கம்பீரமாக இருக்க... அதே நேரத்தில் சுபியோ, தங்க நிற லெஹாங்காவில், தகதகவென ஜொலித்தாள்.


இவர்கள் சென்று, சிறிது நேரத்திற்குப் பிறகு தான் தீப்தியும், விஷாலும் வந்தனர்.


இவர்களின் நிறத்திற்கு, கான்ட்ராஸ்ட்டாக இளஞ்சிவப்பு கலரில் இருவரும் ஜொலித்தனர்.


இரண்டு ஜோடிகளும் அருகருகே நிற்கும் போது அவ்வளவு அழகாக இருந்தது.


விருந்தினர்கள் ஒவ்வொருவராக வர, மேடையில் இருந்த, இரு ஜோடிகளுக்கும், வாழ்த்து தெரிவித்து செல்ல, கவினும், விஷாலும் வந்திருந்த விருந்தினர்களை அவரவர் ஜோடிக்கு அறிமுகம் செய்துக் கொண்டிருந்தனர்.


கீழே நின்றிருந்த நீரஜாவும், நவீனும் வந்திருந்த விருந்தினர்களை உணவருந்த அழைத்துச் சென்றனர். பெரியவர்களோ, வந்திருந்த விருந்தினர்களிடம் பேசிக் கொண்டிருந்தனர்.


இன்னிசை மெலிதாக இசைக்க, அந்த இடமே தேவலோகம் போல தான் காட்சியளித்தது.


சிலருடைய ஏளன பார்வையை சந்திக்க இயலாமல் சுபி, தயங்கும் போதெல்லாம் கவின் கை அழுத்தம் கொடுத்து ஆறுதல் அளித்துக்கொண்டே இருந்தான்.


அங்கங்கே நின்று இவர்களைப் பற்றி பேசிக் கொண்டிருப்பதை கவின் பெரிதாக நினைக்கவில்லை. சுபியின் முகம் தான் வாடிப் போனது. இவள் முகம் சற்று சுணக்கமாக இருந்தாலும், கவின் ஏதாவது கேலி பேசி அவளை முகம் சிவக்க வைத்துக் கொண்டிருந்தான்.


தீப்தியின் காலேஜ் தோழிகள் மற்றும் ஹாஸ்டல் தோழிகள் வந்து மேடையே ஒரு வழியாக்கி விட்டுச் சென்றனர்.


சற்று நேரத்தில் அகல்யா, ஆதவன்‌‌, ஆர்த்திகா எல்லோரும் வர சுபியின் முகம் விகசித்தது. ஆவலாக வரவேற்ற சுபி, ஆர்த்திகாவிடம் கொஞ்சி பேசினாள். அவர்கள் அனைவரையும் சாப்பிட்டுத் தான் செல்ல வேண்டும் என்று அன்புக் கட்டளையிட்டு அனுப்பினாள்.


ஒரு வழியாக ரிசப்ஷனும் முடிந்து வீட்டிற்கு வருவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. வீட்டிற்கு வந்தவள் அலங்காரத்தைக் களைந்து விட்டு அக்கடா என்று படுத்து விட்டாள்.


எங்க அவள் படுத்தாள். அவள் உறங்க முயன்றால், நெடுநேரமாக நின்றதால் கால் வலிக்க… அவளால் சரியாக உறங்க முடியவில்லை. அறைகுறைத் தூக்கத்தில் திரும்பத், திரும்ப பிறண்டுக் கொண்டே இருக்க…


அவள் அருகில் படுத்திருந்த கவின், எழுந்து அவள் கால்களை மெல்ல பிடித்து விட்டான்.


கொஞ்ச நேரத்திலேயே, அவள் உறங்கி விட… கவின் விழித்திருத்தான்.


காலையில் சுபியை எழுப்ப…


அத்தான் இப்ப தான் தூங்கினேன், அதுக்குள்ள எழுப்புறீங்க. இன்னும் டூ மினிட்ஸ் ப்ளீஸ் என்று விட்டு மீண்டும் தன் தூக்கத்தை தொடர…


சுபி, என அழுத்தமாக அழைத்தவன், மணி ஆறு. நாம குளித்து ரெடியாகி ப்ரேக்பாஸ்ட் சாப்பிட்டு விட்டு, அத்தை, மாமாவைப் பார்த்து சொல்லிட்டு, ஏர்போர்ட் போறதுக்கு தான் நேரம் சரியா இருக்கும்.


பத்து மணிக்கு ஃப்ளைட். சீக்கிரம் பாஸ்ட், என்று அவசரப்படுத்தி, அவனும் கிளம்பி, அவளையும் கிளப்பி தயாரானான்.


கவின் ஏற்கனவே ஏர்போர்டுக்கு யாரும் வர வேண்டாம், எதுக்கு தேவையில்லாத அலைச்சல், என்றுக் கூறியதால் யாரும் வரவில்லை.இவர்கள் இருவருமே, இரு வீட்டுப் பெரியவரிடம் சென்று ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டு தேன்நிலவுக்கு ஒரு வழியாக தயாராகி விட்டனர்.


*****************

கொச்சி விமான நிலையத்திலிருந்து, வெளியே வந்த கவின் ஒரு கையால் சுபியை அணைத்துக் கொண்டே, மறு கையால் ட்ரேலியைத் தள்ளிக் கொண்டு வந்தவன்,தங்களுக்கான வாகனத்தை கண்களால் தேடினான்.


அவன், ஹனிமூனுக்கு திடீர் என்று தான் ப்ளான் செய்திருந்தான். பட் முடிவெடுத்தவுடன், அதற்கான திட்டங்களை அழகாக வகுத்து விட்டான்.


சுபிக்கு இயற்கை காட்சிகள் என்றால் கொள்ளைப் பிரியம், என்பதை அறிந்த கவின், அவளை கடவுளின் தேசமான கேரளாவிற்கு அழைத்து வர முடிவு செய்தான்.


பெஸ்ட் போட் ஹவுஸான, மை ட்ரிப் போட்ஹவுஸை மூன்று நாட்களுக்கு புக் பண்ணி இருந்தான்.


அவர்களே ஏர்போட்டிலிருந்து பிக்கப் பண்ணுவதற்கு, கார் ஏற்பாடு பண்ணியிருந்தனர். எனவே அவர்களை கவின் தேட…


அவர்கள் ஏற்பாடு செய்திருந்த டாக்ஸி டிரைவர், இவர்களது பெயர் எழுதிய அட்டையை வைத்துக் கொண்டிருக்க…


அவரைப் பார்த்து விட்ட கவின், கைகளை ஆட்ட, டிரைவர் வந்து லக்கேஜ்களை கலெக்ட் செய்துக்கொண்டு சென்றார்.


இவர்கள் வரவும் கார் கதவைத் திறந்து வைத்து, அவர்கள் ஏறவும் காரை ஓட்டினார்.


கவின், ட்ரைவரிடம், குட், கரெக்ட் டைம்க்கு வந்திட்டீங்க, என பாராட்ட…


டிரைவர் புன்னகைத்துக் கொண்டே, எங்க கம்பெனியோட முதல் ரூல்ஸே டைம்கீப்பிங் தான் சார்.சர்வீஸ்லாம் பக்கவா இருக்கும். உங்களுக்கு இந்த ட்ரீப் மறக்க முடியாததாக இருக்கும் சார் என…


சுபி, கவின் இருவர் முகத்திலும் புன்னகை மலர்ந்தது.


சரியான நேரத்திற்கு வந்து செக் இன் செய்து, மதியம் பன்னிரெண்டு மணிக்கு போட் ஹவுஸில் ஏறியிருந்தனர்.


தங்களது லக்கேஜ்களை பெட்ரூமில் வைத்து விட்டு வந்தான் கவின். சுபியோ, லாபியில் அமர்ந்துக் கொண்டு இயற்கை அழகில் லயித்திருந்தாள்‌.


அந்த இடம் ஓப்பனாக இருக்கும், இயற்கை காற்றும் சூப்பராக வரும்.


இருபுறமும் உள்ள இயற்கைக் காட்சிகளை ரசித்துக் கொண்டு சின்ன குழந்தை என, கவினை அவ்வப்போது அழைத்து," அத்தான், அங்கப் பாருங்க… எவ்வளவு போட்ஹவுஸ், ஆனால் வரிசையாக வருது." எனக் கூற…


ஆமாம்,சுபி மா… நாம, எப்படி ரோட்டில் வண்டி ஓட்ட ரூல்ஸ் இருக்கோ, அதைப் போல இங்க போட்ஸ் போறதுக்கு ரூல்ஸ் இருக்கு. அதை அவங்க ஃபாலோ பண்ணுறாங்க…


ஓ, என்ற சுபி மீண்டும் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.


ஐயோ! அத்தான் அங்கப் பாருங்களேன், சின்ன பசங்க எல்லாம் யுனிஃபார்ம் போட்டுட்டு போறாங்க…


ஆமாம் சுபி, இங்குள்ள மக்கள் போட்டில் தான், ஸ்கூலுக்கு போவது, ஹாஸ்பிடலுக்கு போவது, பேங்க் போவது எல்லாம் என்றான்…


ஏற்கனவே கேரளாவிற்கு வந்த கவின், தனக்கு தெரிந்தவற்றை கூறினான்.


சுபியோ, இந்தியா முழுவதும் சுற்றுலா, சென்றிருக்கிறாள். ஏன் வெர்ல்டு டூர் கூட போயிருக்கிறாள். ஆனால் இந்த கேரளாவை எப்படி மிஸ் செய்தோம் என்று வியந்துக் கொண்டே பயணித்தாள்.


இடையே கவின் சொன்ன பேங்க் வரவும், அத்தான் இதோ நீங்க சொன்ன பேங்க் என ஆர்ப்பாட்டம் செய்தாள்.


அது மட்டுமா, சிறு போட்டில் ஐஸ் விற்றுக்கொண்டு போக… ப்ளீஸ் அத்தான் எனக்கு வாங்கி தாங்க என பிடிவாதம் பிடித்து வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.


கவினோ, அமைதியாக அவளது ஆர்ப்பாட்டத்தை ரசித்துக் கொண்டும், அவளை போட்டோ எடுத்துக் கொண்டும் வந்து கொண்டிருந்தான்.


மதியம் உணவு தயாரானதும் உணவருந்த அழைத்தனர். இந்த போட் ஹவுஸில், இவர்களைத் தவிர இருவர் மட்டுமே இருந்தனர். ஒருவர் சமைப்பதற்கும், மற்றொருவர் போட் ஓட்டுவதற்கும் மட்டுமே... மற்றபடி அவர்களது தனிமையில் யாரும் குறுக்கிடவில்லை.


மதிய உணவு, சுடச்சுட தயார் செய்து வைத்தனர். அதை சாப்பிட்டவுடன், கவின் சற்று ஓய்வெடுக்கலாம் சுபி என…


சுபியோ, அத்தான் இன்னும் கொஞ்சம் நேரம் ப்ளீஸ் அத்தான் எனக் கெஞ்ச…


சரியென தலையாட்டிய கவின், மீண்டும் தனது வேலையை தொடர்ந்தான்.அது தான் சுபியை விதவிதமாக போட்டா எடுப்பது…


சுபி, போட் ஓட்டுவதையும் பார்க்கலாம் வரீயா,என்று அழைத்துச் சென்றான்.


போட் ஒட்டிக்கொண்டிருந்தவரோ, அவர்களிடம் பேச்சுக் கொடுத்துக் கொணாடிருந்தாரா. எப்படி சார்,இருக்கு உங்களது பயணம் என்றுக் கேட்க…


சுபியோ, சூப்பர் சார். சான்சே இல்லை, தண்ணீரில் போய்க்கொண்டே, அதுமட்டும் இல்லாமல் இருபுறமும் உள்ள பசுமை, அமேசிங் என்று ரசித்து சொல்ல…


அவளது ஆர்வத்தைப் பார்த்து, மேடம் நீங்கள் விருப்பப்பட்டால், நாங்க ஸ்பீடுபோட் அரேஞ்ச் பண்ணித் தருவோம். அதுல நீங்க ரைட் போகலாம். அவர்கள் ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு அழைச்சிட்டு போவாங்க… அங்க நீங்கள் போட்டோ ஷூட் கூட எடுக்கலாம் எனக் கூற…


அவள் ஒன்றும் கூறாமல், கவினைப் பார்க்க… அப்புறம் என்ன, ஸ்பீட் போட்டில் ஆட்டம் போட்டுக் கொண்டு அந்த இடத்தை அடைய… உண்மையிலே அந்த லொகேஷன் அருமையாக இருந்தது. இருவரும் விதவிதமாக போட்டோ எடுத்துக் கொண்டனர்.


அவ்விடத்தில் கேரளா ஸ்பெஷலான குலுக்கி சர்பத், ஆடிப்பாடி கொண்டே அவர்கள் போட, அதையும் ருசிப் பார்த்து விட்டு, ஒரு வழியாக, அவர்களுடைய போட் ஹவுஸிற்கு வந்தனர்…


மணியும் ஆறாகிவிடவே, அதற்கு மேல் போட்டை எங்கும் ஓட்ட மாட்டார்கள். அதற்கென உள்ள இடத்தில் பார்க் செய்துவிட்டார்கள். இனி நாளை காலை ஒன்பது மணிக்கு தான் புறப்படும்.


அதற்குப் பிறகுதான் சுபி ஒரு வழியாக அறைக்கே வந்தாள். அங்கு வந்தவள் அந்த அறையின் அலங்காரத்தில் வாயடைத்துப் போனாள்.


லக்சரி சூட் அதனால் ஹோட்டல் போல் சகல வசதிகளுடன் இருந்தது. அந்த இடம் அவளுக்கு ரொம்ப பிடித்திருந்தது.


கவினிடம்‍, திரும்பியவள் எப்படித்தான், என்னோட ரசனைக்கு ஏத்த மாதிரி ப்ளேஸ் செலக்ட் செய்தீங்க என‌…


அவனோ," சின்ன வயதில் இருந்து நான், தான் உன்னை பார்த்துக் கொள்ளுவேன். உன்னோட விருப்பு-வெறுப்பு எல்லாமே எனக்கு அத்துப்படி... இடையில் வந்த பழக்கவழக்கங்கள் மட்டும் தான் எனக்கு தெரியாமல் இருக்கும்‌. மத்த எல்லாமே எனக்கு நன்கு தெரியும்." எனக் கூற…


அப்புறம் ஏன் அத்தான்? என்கிட்ட கோபமாக பேசிட்டு இருந்தீங்க?


அது சுபி, உன்ன எனக்கு ரொம்ப பிடிக்கும். எனக்கு அந்த வயசுல உன்கிட்ட சொல்ல தயக்கம்… அது மட்டும் இல்லாமல் உன்னோட கேரியர் முக்கியம் .நானும் தொழிலில் நிறைய கற்றுக் கொள்ள வேண்டிருந்தது.


உன்னிடம் பேசினால் எங்கே என் காதலை சொல்லிவிடுவேனோ, என்று பயமாயிருந்தது.அதனால் உன்னிடமிருந்து சற்று விலகினேன். ஆனால் அது எவ்வளவு பெரிய பிசகு என்று அதற்குப் பிறகுதான் உணர்ந்தேன். சாரி சுபி என்க.


சற்று நேரம் அமைதியாக இருந்த சுபி, கவினிடம் என்ன இருந்தாலும் நீங்க செஞ்சது தப்புதான் அத்தான். நான் எவ்ளோ பீல் பண்ணேன் தெரியுமா? உங்களை ரொம்ப மிஸ் பண்ணினேன். எதுக்கு என் மேல நீங்க கோவப்படுறீங்க என்று தெரியாமல் எத்தனை நாள் அழுதுருக்கேன் தெரியுமா?


" சரி விடுடி." என…


அதெல்லாம் விட முடியாது‍, என வம்பு வளர்க்க…


நான் உன் நல்லதுக்காக தான் செய்தேன் ‌ தயவு செய்து என்னை புரிஞ்சுக்கோ டா…


நீங்க முதல்ல என்ன புரிந்துக் கொண்டால், இப்படி செய்து இருக்க மாட்டீங்க என வாதாட…


ஏய் முதல்ல வாயைக் கொஞ்சம் மூடுடி …


நான் ஏன் மூடணும், வேண்டும் என்றால் நீங்க வாயை மூடுங்க என…


ஓஹோ… அப்படியா என்ற கவின், அடுத்த நொடி சுபியை இறுக்க அணைத்து அவளது இதழில் தனது இதழை வைத்து மூடினான்.


இதழோடு இதழ் தொடுத்த யுத்தம், அத்தோடு முடியவில்லை,இரவு முழுவதும் தீண்டலும் சீண்டலுமாய் தொடர்ந்தது.


இந்த யுத்தம் இன்றோடு முடிவதில்லை. அதேப் போல்,இவர்களது வாழ்க்கை பயணமும் சண்டையும்,சமாதனமுமாக இனிதே சென்றது.



அடுத்த பதிவு எபிலாக்….
 
Top