Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என்றென்றும் நீயே நானாக வேண்டும் - 19

Advertisement

Chitradevi viswa

Well-known member
Member
Hi friends thanks for your lovely support and comments ❤️

837

அத்தியாயம் 19


நீரஜாவையும், நவீனையும் திருமண கோலத்தில் பார்த்த உடன் வந்த கோபத்தில், தனது அறைக்கு சென்று விட்டாள் சுபி.


ஒரு இடத்திலும் நிற்காமல் நடந்துக் கொண்டே இருந்த சுபி‌‌… பயங்கர டென்ஷனில் இருந்தாள், அதற்குப் பலியானது என்னவோ விரல் நகங்கள்.


ச்சே என தன்னையே நூறாவது முறையாக நொந்துக் கொண்டிருந்தாள். பேசாமல் அங்கு நாமும் போயிருக்கலாம். சுகந்தி சித்தி வேறு வந்துவிட்டார்களா என்று தெரியவில்லை. அவர்கள் பேச்சையெல்லாம் அம்மாவால் தாங்க முடியுமா?...


'தப்பு பண்ணிட்டியே சுபி, அம்மா கூப்பிடும் போதே போயிருக்கலாம், அப்புறமா வரேன் என்று சொல்லிட்டியேடி… இப்போ எப்படி அங்கு போவது என தனக்குள்ளே புலம்பிக் கொண்டிருந்தாள் சுபி…'


அங்கோ… சுபி நினைத்தது போலவே நிலைமை கட்டுக்குள் அடங்காமல், பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது.


வழக்கம் போல சுகந்தி, தன் மகளுடைய திருமணம் பற்றி பேசுவதற்காக தன் குடும்பத்துடன் வந்திருந்தாள். எப்பொழுது தாய் வீட்டுக்கு வந்தாலும் தீப்தியையும் சேர்த்து தான் அழைத்து வருவார்.


இன்றைக்கு திருமணம் பற்றி பேசப் போகிறோம் தீப்தி இங்கேயே இருக்கட்டும் நாம் மட்டும் போகலாம் என்று சுந்தரம் கூறியதை அவர் பொருட்படுத்தவில்லை.


அது என் தாய் வீடு அங்க போறதுக்கு என்ன ஃபார்மாலிட்டி… தீப்தியும் நம்மோட வரட்டும் என முடித்து விட்டார். தீப்தி அங்கு வராமல் இருந்திருந்தால் பிரச்சினை மேலும் மேலும் சிக்கலாகி இருக்காது.


**************************


முதலில் பார்வதியும் ஈஸ்வரனும் பத்மாவின் வீட்டிற்குள் நுழைய…


பத்மா முகம் மலர… வாங்க அண்ணா… வாங்க அண்ணி… நல்ல நேரத்தில் தான் வந்திருக்கீங்க.‌.. இப்ப தான் நவீன், தீபுமா திருமணம் பற்றி பேசுவதற்காக சுகந்தி வந்திருக்கா… கவினுக்கும் சேர்த்து பண்ணுவோம் என்று பார்த்தால், அவன் இப்போ வேண்டாம் என்று சொல்லிட்டான்.


இந்த மாச கடைசில ஒரு நல்ல முகூர்த்தம் இருக்காம் அண்ணா… அதை தான் பார்த்திருக்காங்க… ஏன் அண்ணா நின்னுக்கிட்டே இருக்கீங்க… எனக்கு தான் சந்தோஷ படபடப்புல ஒன்னுமே புரியல. நீங்க வந்து உட்காருங்க …

இந்த பசங்களையும் காணோம் என்று கூறிக் கொண்டே அண்ணனைப் பார்த்தவள், அவரின் முகத்தைப் பார்த்து திகைத்தாள் பத்மா.


ஏன் அண்ணா முகம் இப்படி வாடிப் போயிருக்கு…

ஐயோ! யாருக்கும் முடியவில்லையா?... ஏதாச்சும் சொல்லேண்ணா… அண்ணி நீங்களாவது சொல்லுங்க… என இவள் கத்த… இவள் சத்தத்தில் டைனிங் ஹாலில் அமர்ந்து இருந்த சுகுமாரன், சுகந்தி, சுந்தரம் எல்லோருமே வந்துவிட்டனர்‌.


இன்று கல்யாண விஷயம் பேச வருகிறார்கள் என்று ஸ்வீட் செய்து இருந்தார் பத்மா. அதை தான் அங்கு அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டே பேசிக் கொண்டிருந்தனர்.


பத்மா தான் யாரோ வரும் அரவம் கேட்டு இன்னும் உள்ளே வரவில்லையே என யோசனையுடன் வெளியே வந்தவள் தன் அண்ணனைப் பார்த்தவள், அவரின் முகத்தைப் பார்த்தே ஏதோ சரியில்லை என்று உணர்ந்து பதற்றத்துடன் என்னாச்சுணா என வினவ...


ஈஸ்வரன் தன்னை சமாளித்துக் கொண்டு பத்மாவிடம் வந்து, " அம்மாடி, யாருக்கும் ஒண்ணும் பிரச்சனை இல்லை டா… நீ கொஞ்சம் அமைதியாக இரு…"


" ஏன் அண்ணி… நல்ல விஷயம் பேசிட்டு இருக்கும் போது , இப்படி கத்துறீங்க… நானே பயந்துட்டேன்" என்று பத்மாவிடம் கூறிய சுகந்தி, பார்வதியையும், ஈஸ்வரனையும் பார்த்து எதுவாக இருந்தாலும் உள்ள வராமல் வாசலிலே நின்றுக் கொண்டிருந்தால் என்ன அர்த்தம் என அதட்ட…


சுகந்தியின் அதட்டலில், தன்னிச்சையாக பார்வதியும், ஈஸ்வரனும் உள்ள நுழைய… வெளியே நின்றிருந்த நவீன் முன்னேவர, அவனின் பின்னே பாதி மறைந்தவாறு பயத்துடன் நின்றிருந்தாள் நீரஜா.


நவீனை திருமண கோலத்தில் பார்த்த சுகந்தி அதிர்ச்சியில் வாயடைத்து நின்றது சில நொடிகளே பிறகு, ஐயோ! ஐயோ! பாருண்ணா இந்த அநியாத்தை,என கத்திய படி, தன் அண்ணனிடம் திரும்பினாள்.


எவளோ, ஒருத்தியை உன் மகன் இழுத்துட்டு வந்திருக்கான். என் பொண்ணோட கதி என்ன? நான் எப்படி தீப்தியை சமாளிப்பேன்? என் பொண்ணோட வாழ்க்கையில் மண்ணள்ளி போட்டாளே அவ நல்லா இருப்பாளா? என சாபமிட…


"சுகந்தி என்ன பேசுற என்று கொஞ்சம் யோசித்துப் பேசு…" என பத்மா கடிய…


என்ன அண்ணி மருமகள் வந்ததும் நான் வேண்டாதவளாக போய் விட்டேனோ எனக் கூறி அழுதாள். இன்னும் நவீன் யாரை திருமணம் செய்து வந்திருக்கிறான் என்று பார்க்காமல் கத்த…


இந்த சூழ்நிலையை எவ்வாறு கையாள்வது என தெரியாமல் பத்மா வாயை விட இன்னும் பிரச்சினை பெரிதாக வளர்ந்தது.


சுகந்தி… என்ன இருந்தாலும் "நீரஜா", நவீனை நம்பி வந்துட்டா… இனி மேல் அவ நம்ம வீட்டுப் பொண்ணு… நீ எதுவும் இப்போ பேசாதே என்ன விஷயம் என்று விசாரிப்போம் சற்று பொறுமையாக இரு.


ஓ உங்க அண்ணன் பொண்ணை தான் இழுத்துட்டு வந்தானா? சாரி… சாரி… கட்டிக்கிட்டு வந்தானா? என அகங்காரமாக கேட்க…


அங்கோ எள் விழுந்தால் கூட கேட்கும் போல‍, அவ்வளவு அமைதி.


அங்கு யாரும் வாய் திறக்காமல் இருப்பதைப் பார்த்து விட்டு மீண்டும் பேச்சை ஆரம்பித்தாள் சுகந்தி. சரி தான்… அப்ப இவங்க ரெண்டு பேரும் காதலிச்ச விஷயம் உங்க எல்லோருக்கும் ஏற்கனவே தெரியுமா?


அதனால் தான் நான் ஊருல கல்யாணத்துக்கு நாள் பார்க்க வரேன் என்று சொன்னப்ப, தடுத்தீங்களா? கவினுக்கு பண்ணாமல் இவனுக்கு மட்டும் எப்படி செய்யுறது, ஆறு மாதம் கழித்து செய்யலாம் என்று சொன்னீங்களா அண்ணா என தன் அண்ணனையே குறை கூறி... அவர் மேலயே சாய்ந்து ஆறுதல் தேட…


சுகந்தி இங்க பாரு மா… எங்களுக்கே எதுவும் தெரியாது. இந்த பையன் எதுவும் சொல்லவே இல்லை. அப்படியென்ன இவன் ஆசையை நிறைவேற்றாமல் இருப்போமா? அந்த நம்பிக்கை கூட இல்லாமல் இப்படி ஒரு காரியத்தை செய்துட்டு வந்திருக்கான்? என்று சுகுமாரன் கடிய…


மெல்ல அவரின் தோளில் இருந்து நிமிர்ந்து… ஓஹோ… அப்ப உங்க பையன் முன்னாடியே சொல்லலைனு தான் வருத்தமா? சொல்லியிருந்தா நீங்களே ஜாம் ஜாம் என்று கல்யாணம் பண்ணி வச்சிருப்பிங்களோ? இப்போ அப்படி பண்ண முடியவில்லையே என கவலைப்படுறீங்களோ… என்னையும்,என் மகளையும் பத்தி கவலைப் பட யாரு இருக்கா என புலம்பினாள் சுகந்தி.


அப்பா… சாரி பா… என்ற நவீன் நீரஜாவை அழைத்துக் கொண்டு உள்ளே வந்தான்.


நீரஜாவோ, பயத்தில் நடுங்கிக் கொண்டு நவீனின் கையைப் பிடித்தவள், பிடித்தப் பிடியை விடவே இல்லை.


இவன் சாரி பா என்றவுடன், இருவரையும் தீயென உறுத்து … நீ சாரிக் கேட்டா… என் பொண்ணோட வாழ்க்கை சரியாயிடுமா? எனக் கேட்டுக் கொண்டே விழியால் தேட… அவளோ தன் தந்தையின் தோளில் சாய்ந்துக் கொண்டு மௌனமாக கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தாள்.


அங்கப் பாரு எப்படி அழுதுக்கிட்டே இருக்கா?. அவ கண்ணுல கண்ணீரே வரக்கூடாது என்று பார்த்து பார்த்து வளர்த்தா, இன்னைக்கு இப்படி அழறா…

எல்லாம் என்னைய சொல்லணும்… அம்மா ஸ்தானத்துல வைத்து நம்பிக்கை வைத்தேன். அதுக்கு நல்லா கைமாறு செய்துட்டாங்க என்றுக் கூறி பத்மாவை வெறுப்புடன் பார்க்க…


அது வரை அமைதியாக நின்றிருந்த ஈஸ்வரன்… இங்க பாருமா சுகந்தி, பத்மாவுக்கு எதுவும் தெரியாது. அவளை அப்படி பேசுவது அபாண்டம். அவளைப் பத்தி ஏதாவது பேசினால் நான் சும்மா இருக்க மாட்டேன்‌.


ஓகோ… உங்க தங்கச்சிக்கு எதுவும் தெரியாது… அப்ப உங்களுக்கு எல்லாம் தெரியுமா? நீங்க தான் உங்க பொண்ணுக்கு சொல்லிக் கொடுத்தீங்களா? வெட்கமா இல்லை… பொண்ணை ஒழுங்கா வளர்க்க துப்பில்லை… இதுல தங்கச்சியைப் பத்தி பேசவும் ரோசம் பொத்துக் கொண்டு வருது‌…


சுகந்தி சும்மா இருக்கப் போகிறீயா இல்லையா? என்ற பத்மாவிடம், உங்க கிட்ட இனி என்ன எனக்கு பேச்சு வேண்டிக் கிடக்கு… நான் எங்க அண்ணனிடம் பேசிக்கிறேன். இனி மேல் என் விஷயத்துல தலையிடாதீங்க…


ஏதோ பத்மா கூற வர… சுகுமாரன் தடுத்து விட்டார்.


சும்மா இரு பத்மா… தப்பு பண்ணது நம்ம பையனும்,மருமகளும், அதுக்காக நாம பொறுமையாக தான் இருக்கனும் என்று மெதுவாகக் கூறி நீரஜாவை மருமகளாக ஏற்றுக் கொண்டதை அறிவித்துவிட… பத்மா அமைதியாகி விட்டார்.


நீரஜாவோ, தன்னால் தன்னுடைய பெற்றோருக்கு எவ்வளவு அவமானம் என்று அழுதுக் கொண்டே‌… நவீனின் கையிலிருந்து தன் கையை உருவிக் கொண்டு தோட்டத்திற்கு ஓடி விட்டாள்.


நவீனோ, "அத்தை" என்ன நம்பமாட்டியா? நீ வளர்த்த புள்ளை தான நான்…. இப்படி நான் செய்தால் ஏதாவது காரணம் இருக்கும் என்று புரிஞ்சுக்கோ அத்தை.


அப்படியென்ன பொல்லாத காரணம்? இருந்தா தான சொல்ல? உங்களை வளர்த்ததுக்கு தான் நல்லா முதுகுல குத்திட்டீங்கள்ல… இனி பழைய விஷயமெல்லாம் பேசாதீங்க… என் பொண்ணுக்கு என்ன வழி, அத மட்டும் பேசுங்க…


இவர்கள் இங்கு பேசிக்கொண்டிருக்க… வெளியே சென்ற நீரஜாவை மறந்து விட்டார்கள்.


அவள் அடக்க மாட்டாமல் அழுதுக் கொண்டிருக்க…


அங்க என்ன நடக்குதோ… போகலாமா, வேண்டாமா என தவித்துக் கொண்டிருந்த சுபி தோட்டத்தில் இருந்த சிறிய கதவிடம் வந்து நின்று யோசித்துக் கொண்டிருக்க… அவள் யோசனையை தடுப்பது போல் சுவருக்கு அப்பாலிருந்து நீரஜாவின் அடக்கப்பட்ட கேவல் சத்தம் கேட்டது.


அடுத்த நொடி… எதையும் யோசிக்காமல் அந்த சிறிய கதவை திறந்து கொண்டு ஓடினாள் சுபி.


அந்த கதவிற்கு அருகில் இருந்த கல் பெஞ்சில் அமர்ந்து கொண்டு இருந்த நீரஜா… கதவு திறந்த சத்தத்தில் அதிர்ந்து பார்த்தவள்… சுபியைப் பார்க்கவும் எழுந்தவள் தடுமாற…


சுபி ஓடி வந்து, நீரஜாவை பிடித்துக் கொள்ள… நீரஜாவோ தனது தங்கையின் மேல் சாய்ந்து கொண்டு கதறி அழுதாள்.


அக்கா… ப்ளீஸ் கா, முதலில் அழுகையை நிப்பாட்டுங்க… எதுவாக இருந்தாலும் சமாளித்து கொள்ளலாம் கா…


நீரஜாவோ, இன்னும் கரைந்து கரைந்து அழுக‌…


அக்கா‌‌… என்ன நடந்தது சொல்லுக்கா… ஆமாம் நவீன் அத்தான் எங்க?… கல்யாணமான முதல் நாளே உன்னை தவிக்க விட்டு விட்டு உள்ள அவர் மட்டும் அப்படி என்ன செய்யுறாராம்?. இவரைப் போய் நம்பி இப்படி வீட்டுக்குத் தெரியாமல் கல்யாணம் செய்துருக்கிற… அப்படி என்ன அவசியம் எனக் கடிய…


நீரஜா அழுகையை அடக்கிக் கொண்டு, அத்தானை எதுவும் சொல்லாத சுபி… நான் தான் வெளியே வந்துட்டேன். அவர் பாவம் என்னைக் கவனிக்கவில்லை.


அதைத் தான் கா நானும் சொல்லுறேன். அவர் உன்னை சரியாக கவனிக்கவில்லை. இல்லையென்றால் இவ்வளவு நேரம் நீ எங்கே என்று கவனிக்காமல் இருப்பாரா? நான் வந்தே அரைமணி நேரம் ஆகப்போகுது… அப்படி என்ன தான் நடந்தது. எதுக்கு இப்படி அவசரமா கல்யாணம் பண்ணனும்?.


நீ மட்டும் தான் அத்தானை விரும்புகிறாய் என்று நினைத்தேன் … அத்தானும் உன்னை விரும்புவது தெரிந்தால் வீட்டில நானே பேசி, சம்மதம் வாங்கி இருப்பேன். அவசரப்பட்டு விட்டீர்கள் என்றவள்,சரி அதெல்லாம் விடுக்கா... ஏன் இப்படி வெளியில வந்து அழுதுட்டு இருக்கே? உள்ள அத்தை, மாமா எதுவும் சொன்னாங்களா? இல்லை சுகந்தி சித்தி திட்டினாங்களா? எதுவாக இருந்தாலும் ஃபேஸ் பண்ணித்தான் ஆகனும். ம் சொல்லு கா


அது வந்து என தயங்கித் தயங்கி மென்று முழுங்கியவள்… தங்கையின் கோபப் பார்வையில், கடகடவென உள்ள நடந்த அனைத்தையும் கூறியவள்… மீண்டும் அழுதுக் கொண்டே சுகந்தி சித்தி ரொம்ப அப்பாவ பேசிட்டாங்கா… என்னால அப்பா, அம்மாக்கு எவ்வளவு அவமானம் என நீரஜாக் கூற...


சுபிக்கு சுறுசுறுவென கோபம் ஏறியது… அப்பாவை பேசுனா இப்படித்தான் வந்து அழுதுகிட்டே இருப்பாயா? எதிர்த்து பேச மாட்டாயா?


சரி வாக்கா… நாம உள்ள போவோம் என்ற சுபி, தடுமாறிக் கொண்டிருந்த நீரஜாவை அணைத்தவாறு அழைத்து வந்தாள்… நீரஜாவிற்கும் அந்த ஆறுதல் தேவைப்பட்டது.


சரியாக அதே நேரம் காரில் வந்த கவின், காரைப் பார்க் பண்ணிவிட்டு… வழக்கம் போல அந்த சிறிய கதவை பார்க்க… அவனை ஏமாற்றாமல், அவனது "தேவதை" தரிசனம் தந்தாள். ஆனால் சுபியோடு இருந்த நீரஜாவை எதிர்பார்க்கவில்லை. அவள் இந்த வீட்டிற்கு தனியாக வரமாட்டாள். அத்தை, இல்லை மாமாவோட தான் வருவாள்… என்ன அதிசயமாக இருக்கு என்று யோசித்தவன், அவர்களின் முகத்தைப் பார்த்து,ஓ காட் என்றுக் கூறி விட்டு… அவர்களை நோக்கி தன் வேக எட்டுகளை வைத்தான்.



அவர்களும் வீட்டை நோக்கித் தான் வந்துக் கொண்டிருந்தார்கள்.


அவர்கள் முன் நின்றவன், நீரஜாவை அளவிட்டவாறே சுபியிடம் என்னாச்சு என்றான்.


அவக் கிட்டயே கேட்டுக்கோங்க என்றுக் கூறி சுபி பார்வையை திருப்பிக் கொண்டாள்.


ஏன் நீரஜா? என்ன காரியம் பண்ணி இருக்கிற?

யார் அவன்? முதலில் சொல்லு என கர்ஜிக்க…


அவன் கூறியதைக் கேட்ட சுபியும், நீரஜாவும் அதிர்ந்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்…


ஐயோ! கவினத்தானுக்கும் எதுவும் தெரியாதா என நினைத்தவள் மானசீகமாக தலையிலடித்துக் கொண்டாள்.


நீரஜா ஏதாவது சொல்கிறாளா, என்றுப் பார்க்க அவள் ஒன்றும் கூறாமல் நடுங்கிக் கொண்டிருக்க…


சுபி, அத்தான் என்றவாறு ஏதோ சொல்ல வர…


ஒரு கையை பேண்ட் பாக்கெட்டில் விட்டிருக்க… மறுகையால் அலட்சியமாக நிறுத்து என சுபியைப் பார்த்துக் கையை காட்டியவன், நீரஜாவைப் பார்த்து எதுக்கு இப்ப பயப்படுற…


வீட்டுக்கு தெரியாமல் கல்யாணம் பண்ணும் போது இந்த பயமெல்லாம் எங்கே போச்சு? ஆமாம் உன் புருஷன் எங்கே?


உன் முகத்தைப் பாரு எப்படி இருக்கத் தெரியுமா? கல்யாணப் பொண்ணு மாதிரியா இருக்க… சாதரணமாக ஒரு காட்டன் சாரியில மஞ்சள் கயிறை கட்டிக்கிட்டு, மாலையுங் கழுத்துமா வந்து நின்னா என்ன அர்த்தம்… ம் சொல்லு இப்படி ஓய்ந்துப் போன தோற்றத்துல வந்தால் அத்தை, மாமா எப்படி தாங்குவாங்க… அவங்க கோடிக் கோடியா சம்பாதிக்கிறதே உங்களுக்காகத் தானே… இப்படி அனாதை மாதிரி யாருமில்லாமல் கல்யாணம் பண்ணிட்டு வந்திருக்க‌… இன்னும் அத்தை மாமாக்கிட்ட சொல்லவில்லையா? அவங்களுக்கு தெரியக் கூடாது என்று தான், இந்த மேடம் திருட்டுத்தனமாக உன்னை இங்க கூட்டிட்டு வந்தாங்களா என சுபியைப் பார்த்துக் கொண்டே நக்கலாக கேட்க…


சுபி சிலிர்த்துக் கொண்டு… முதலில் கேள்விக் கேட்டா,பதில் சொல்வதற்கு விடணும்… நீங்க பாட்டுக்கு நிறுத்தாமல், லூசு மாதிரி உளறுனா, நாங்க எப்படி பதில் சொல்லுவது?


ஏய் லூசு என்று சொன்னா வாயெல்லாம் பேத்துடுவேன் ஜாக்கிரதை என சுபியைப் பார்த்து உறும…

அவன் போட்ட சத்தத்தில் சுபியே சற்று பயந்து தான் போனாள். நீரஜாவுக்கோ தூக்கி வாரிப் போட சுபியிடம், இன்னும் ஒடுங்கினாள்.


நீரஜாவின் வெளிறிய முகத்தைப் பார்த்து தன் நெற்றியில் லேசாக அடித்தவன்… சாரி நீரு பயப்படாதே, முதலில் உள்ள வா… அப்புறம் எதுவாக இருந்தாலும் பேசிக்கலாம் என்றுக் கூறி அவள் கையைப் பற்ற… அவள் தயங்கி சுபியின் முகம் பார்க்க...


அத்தான் நான் அழைச்சிட்டு வரேன். நீங்க முதலில் உள்ளே போய்‍, எங்க அக்காவைப் பார்த்துக் கேட்ட கேள்வி எல்லாத்தையும், நவீன் அத்தான் கிட்ட கேளுங்க…


சுபிக் கூறியதைக் கேட்ட கவின் புருவத்தை சுருக்கி யோசனையுடன் உள்ளே செல்ல…


அத்தான் என்று மீண்டும் அழைத்தாள் சுபி.


அவள் குரலைக் கேட்டதும் திரும்பி என்னவென்றுப் பார்க்க…

சாரி அத்தான் மரியாதை இல்லாமல் பேசியதற்கு எனக் கத்த…


கவினோ சுற்றும்முற்றும் பார்த்தான்… தோட்டக்காரன் நின்றுக் கொண்டிருக்கிறாரோ என்று பார்த்தான். இல்லை என்றதும், ஊஃப் என பெருமூச்சு விட்டுக் கொண்டு,இவளைப் பார்த்து முறைத்து விட்டு சென்றான்.


ஒன்னும் சொல்லாமல் முறைத்து விட்டு செல்லும் அத்தானின் முதுகைத் தான் சுபியால் முறைக்க முடிந்தது.


நீரஜாவுக்கு தைரியம் சொல்லி உள்ளே அழைத்துச் சென்றாள்.


அங்கு உள்ளே நுழைந்த கவின், எதுவும் பேசாமல் அங்கு நடந்துக் கொண்டிருந்த களேபரத்தைப் பார்த்தான் … எல்லோரும் இங்கே இருப்பதை பார்த்தவுடனே புரிந்து விட்டது சுபியின் கிண்டலுக்கான விடை…


அவன் வந்ததை இன்னும் யாரும் கவனிக்கவில்லை. ஒரு நிமிடம் கண் மூடி யோசித்தான், பிறகு எப்படி இந்த கூச்சலை நிறுத்துவது என்பது புரிந்தது‌.


நேராக நவீனிடம் சென்றவன், ஓங்கி ஒரு அறை விட்டான். அது வரை கன்னாபின்னாவென்று கத்திக் கொண்டிருந்த சுகந்திக் கூட கப்சிப்பென்று வாயை மூடிக்கொண்டாள்.


அப்பொழுதுதான் சுபியுடன் உள்ளே நுழைந்த நீரஜா… கவின் அடித்ததைப் பார்த்து இரு கைகளாலும் வாயை மூடிக் கொண்டாள்.


அந்த இடமே அமைதியோ, அமைதியாக இருந்தது.


டேய்… நீ தான இந்த வீட்டிற்கு மூத்தவன், உன் கல்யாணத்தை எப்படியெல்லாம் நடத்தணும் என்று கனவு கண்டுகிட்டு இருந்தாங்க நம்ம அப்பா, அம்மா … இப்படி பண்ணிட்டியே டா,உன் கிட்ட இதெல்லாம் நான் எதிர்ப்பார்க்கவே இல்லை, என்றவாறு நவீனை நிமிர்ந்து பார்க்க… ' கவினோ, மனதிற்குள் டேய் உன்ன விட நான் ரெண்டு நிமிஷம் தானடா முன்னாடி பிறந்தேன்.நான் உனக்கு மூத்தவனா… இப்படி தான் மூத்தவனை அடிப்பாங்களோ! இல்லை என்னை அடிக்கும்போது தெரியவில்லையா நான் தான் மூத்தவன் என்று கவுண்டர் கொடுத்துக் கொண்டு' கவினைப் பார்த்து உறுத்து விழிக்க…


அவனோ தன் உடன்பிறந்தவனைப் பார்த்து யாரும் அறியாமல் கண்ணடித்து விட்டு, அவனை கட்டிப் பிடித்து சாரிடா உணர்ச்சிவசப்பட்டு அடிச்சிட்டேன். ஐயம் எக்ஸ்ட்ரீம்லி சாரி டா… எனக்கு தீப்ஸ நினைத்து கவலை வந்துடுச்சு என்றுக் கூறியவன் …


பிறகு சுகந்தியிடம் சென்று, " அத்தை அதுக்காக தீப்ஸ நினைச்சு நீங்க கவலைப் படாதீங்க… அவள் எங்கள் பொறுப்பு… அவளுக்கு நல்ல இடத்தில் வாழ்க்கை அமைத்து தருவது என் பொறுப்பு என்றுக் கூற…"


சுகந்தியின் முகத்தில் இருந்த கலக்கம் சற்று மறைய… கவினைப் பார்த்து மெல்ல புன்னகைத்தாள்.


அதற்குள் அங்கு தன் தந்தையின் தோளில் சாய்ந்து இருந்த தீப்தி… வெடுக்கென நிமிர்ந்து நான் வேற எங்கேயும் போக மாட்டேன். நான் எங்க மாமா வீட்டுக்கு தான் மருமகளாக வருவேன்.


சுகுமாரனிடம் சென்றவள் மாமா, ப்ளீஸ் மாமா… கவினத்தான என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லுங்க மாமா என கெஞ்ச…


இவள் பேசிக் கொண்டு இருக்கும் போதே, சுபி கவினின் அருகில் வந்திருக்க… இவள் கூறியதைக் கேட்டு கவினைப் பார்க்க அவனும் அதிர்ந்து சுபியைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.


*************************


ஹேய் சுபி… எனக் காதுக்கு அருகே போய் அழைக்க…


ஹாங் என தூக்கத்திலிருந்து விழித்தவள் போல கவினிடமிருந்து பார்வையை விலக்கினாள்.


ஏய் அம்மா உன்னை சாமியறையில் விளக்கேற்ற கூப்பிடறாங்க… நீ என்னவென்றால் அத்தானை வச்சக் கண் எடுக்காமல் பார்த்துட்டே இருக்க… இந்த பார்வையெல்லாம் இன்று இரவு வைத்துக் கொள் செல்லம்.


சுபியோ, அவன் சொன்னதை கேட்டதும், யாரும் கவனிக்கிறார்களோ என்று பார்த்தாள். எல்லோரும் அவரவர் வேலையை பார்த்துக் கொண்டு இவர்களை தொந்தரவு செய்யாமல் இருந்தனர்.


யாரும் கவனிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு, அவனைப் பார்த்து முறைக்க… அவனோ அவளைப் பார்த்து கண்ணடித்தான். அவன் பார்வையில் முகமெல்லாம் சிவக்க, அவள் வாழ வந்த வீட்டில் விளக்கேற்ற சென்றாள்.



தொடரும்…..
 
Top