Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என்றென்றும் நீயே நானாக வேண்டும் - 14

Advertisement

Chitradevi viswa

Well-known member
Member
Hi friends thanks for your lovely support and comments. என்றென்றும் நீயே நானாக வேண்டும் கதையின் அடுத்த அத்தியாயம் பதிந்து விட்டேன் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் தோழிகளே!

அத்தியாயம் - 14

சுபியும், கவினும் முதன் முதலில் அவர்களின் காதலை உணர்ந்த தருணமான‌‌… ஆறு மாதத்திற்கு முன்பு சென்ற குலதெய்வ பயணத்தின் நினைவுகளோடு மீண்டும் பயணித்தனர்.

வைகாசி மாதம் குலதெய்வ கோவிலில் திருவிழா நடைபெறும். வேலை விஷயமாக வெளியூருக்கு குடிபெயர்ந்த அனைவரும் தவறாமல் திருவிழாவில் கலந்து கொள்வார்கள்.

புதுக்கோட்டை அருகே உள்ள கிராமத்தில் தான் அந்த கோவில் உள்ளது.

பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவை களைகட்ட வைக்க இவர்கள் மூவரும் திட்டம் பெரிதாக போடுவார்கள்.

தீப்தியும் அவ்வப்போது வந்து இவர்களோடு கலந்துக் கொள்வாள். கவினோ சற்றுத் தள்ளியே இருப்பான்.


விடியற்காலையில் கோவிலுக்கு கிளம்ப வேண்டும். அன்று இரவோ, பத்மாவின் வீட்டில் ஊருக்கு கிளம்புவதற்கான வேலை ஜரூராக நடந்துக் கொண்டிருந்தது. ஆம் மூன்று வீட்டு பெரியவர்களும் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஆண்கள் மூவரும் கோவிலுக்கு எடுத்துச் செல்ல வேண்டிய பூ, பழம் தேங்காய் எல்லாவற்றையும் சரி பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.

மறுபுறம் வேலையாட்கள் ஒரு வாரத்திற்கான மளிகைச் சாமான்களை ஊருக்கு எடுத்துச் செல்வதற்கு வசதியாக அடுக்கிக் கொண்டு இருந்தனர்.

உள்ளே சமையலறையில் பத்மா சமைக்க… பார்வதி காய்கறி நறுக்க… சுகந்தியோ ஒருபுறம் அவித்த இட்லிகளை பெரிய டப்பாக்களில் எடுத்து வைத்துக் கொண்டு இருந்தார்.

ஆம் நாளை காலை மற்றும் மதியத்திற்கான உணவு தயாராகிக் கொண்டு இருந்தது. அங்கு கிராமத்தில் நாம் எதிர்பார்க்கும் சுவையான உணவுகள் கிடைக்காது… அதனால் இருவேளைக்கு செய்து எடுத்துச் செல்வார்கள்… பிறகு வேலையாட்களை வைத்து சமைப்பார்கள்.

அங்கு ஈஸ்வரனுக்கும், பத்மாவிற்கும் சொந்தமான வீடு இருக்கிறது. இவர்கள் எப்பொழுதாவது … வருடத்திற்கு இரண்டு, மூன்று முறை குடும்பத்தோடு சேர்ந்து போய் தங்குவார்கள். மற்ற நேரங்களில் அந்த வீட்டை பராமரிப்பதற்கு என்று ஆட்கள் உண்டு.

தினமும் வீட்டை பெருக்கி துடைத்து சுத்தம் செய்யவும்… தோட்டத்தை பராமரிக்கவும் தனித்தனி ஆட்கள் உண்டு.

இவர்கள் அங்கு செல்லும் போது… முழுநேரமும் உதவிக்கு வந்துவிடுவார்கள்.அதனால் அங்கு சமையல் செய்வதில் பிரச்சினை கிடையாது. போன உடனேயே சமைக்க முடியாது, என்பதால் இரு வேளைக்கு மட்டும் உணவு எடுத்துச் செல்வார்கள்.

***********

அண்ணி முடிஞ்சிருச்சுன்னா, அந்த புளிசாத கரைசலை தாங்க… நான் சாதத்தைப் போட்டு கிளறி வைக்கிறேன் என சுகந்திக் கூற…

இன்னமும் ஐந்து நிமிடம் ஆகும் சுகந்தி… அதுக்குள்ள ரெடியான மத்த ஐட்டங்களை எடுத்து வை என பத்மா கூற…

"அதெல்லாம் பார்வதி கா எடுத்து வைத்து விட்டார்கள் அண்ணி" என்றாள் சுகந்தி.

அப்போ நீ போய் ரெடியாகு… அப்படியே பிள்ளைகளையும் ரெடியாகச் சொல்லு… அப்பதான் மூன்று மணிக்குள் தயாராக முடியும், என்று சுகந்தியிடம் கூறியவள்…
பார்வதியிடம்" அண்ணி நீங்களும், குழந்தைகளை அழைச்சிட்டு போய் ரெடியாகிட்டு வாங்க" சாதம் மட்டும் தானே நான் பார்த்துக் கொள்கிறேன் என்றுக் கூறி இருவரையும் அனுப்பினார்.

பத்மா சமையலறையில் எல்லா வேலைகளையும் முடித்து விட்டு வந்து ஹாலைப் பார்க்க…

அங்கோ இன்னமும் கிளம்பாமல் அரட்டை கச்சேரி அடித்து கொண்டிருந்த தன் கணவர் மற்றும் அண்ணன்களை பார்த்ததும் கோபம் சுறுசுறுவென ஏற… ஒன்றும் கூறாமல் அவர்கள் முன் நிற்க…

ஏன் மா இன்னமும் கிளம்பவில்லையா? என தன் தங்கையைப் பார்த்து ஈஸ்வர் கேட்க… அதற்கு அவள் முறைத்துப் பார்க்க… எதுக்கு இப்படி பாசமா பார்க்குறா என எண்ணியவாறு… அருகில் அமர்ந்து இருந்த சுகுமாரனையும், சுந்தரத்தையும் பார்க்க அவர்கள் இருவரும் யெஸ்ஸாகி இருந்தனர்.

இவர்களோடு சேர்ந்து அரட்டை அடித்த தன்னையே நொந்துக் கொண்டு என்னமா என வினவ?

என்னணா நாம் சீக்கிரம் கிளம்பினா தானே பிள்ளைகளை கிளப்பி நேரத்தோடு கிளம்ப முடியும்? வீட்டிற்கு பெரியவங்களா இருந்துட்டு இப்படி பொறுப்பே இல்லாமல் இருந்தால் என்ன தான் செய்ய?

போங்கண்ணா… சீக்கிரம் கிளம்புங்க‌ என விரட்டி எல்லோரையும் கிளப்பி, இவளும் கிளம்பி காரிலேருவதற்குள் அப்பாடா என்று ஆகிவிட்டது.

இன்னும் இந்த திருவிழா முடிவதற்குள் என்ன பாடுபட போகிறோமோ! கடவுளே நீ தான் துணை என்று வேண்டிக் கொண்டு காரிலேறினார்.

நவீனும், சுபியும் திட்டம் போட்டு பெரியவர்கள் அனைவரையும் ஒரு காரில் ஏற்றி அனுப்பி விட்டு… சிறியவர்கள் அனைவரும் ஒரு காரில் ஏறினர்.

இவர்கள் தனியாக வருவதால், அவர்களின் காரின் பின்னேயே வர வேண்டும்… வேகமாக எல்லாம் ஓட்டக் கூடாது என டிரைவரிடம் ஆயிரத்தெட்டு கன்டிஷன்ஸ் போட்டு விட்டே பெரியவர்களின் கார் புறப்பட்டது‌.

பிறகு இவர்களது காரும் புறப்பட...
காரில் ஏறிய அடுத்த நிமிடமே நவீன், தனது வேலையை ஆரம்பித்துவிட்டான்.

டிரைவரண்ணா, பாட்டு போட்டு விடுங்க எனக் கூற... டிரைவர் போட்டோ பாட்டு கேட்டு எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

ஏனென்றால் நவீன், ஏற்கனவே சாமி பாட்டு எல்லாம் போடக்கூடாது என்று டிரைவரிடம் கூறி வைத்திருந்தான்.
அதற்காகத்தான் பெரியவர்களை எல்லோரையும் வேற காரில் தள்ளிவிட்டு,இவர்கள் அனைவரும் ஆட்டம் போட இந்த காரில் வந்தனர்.

'பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க
காத்திருந்த காட்சி இங்கு காண கிடைக்க
ஊன் உருக உயிர் உருக தேன் தரும் தடாகமே
வழி வருக வழி நெடுக ஒளி நிறைக வாழ்விலே
பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க அஹ் அஹ் ஆஅஹ்?'

என்ற குணா பட பாடல் காரில் ஓடிக் கொண்டிருக்க… மறுபடியும் எல்லோரும் கொல்லென்று சிரித்துக் கொண்டே அஹ் ஆஹ் ஆ அஹ் என கோர்ஸ் பாட… நவீனின் முகத்தை பார்க்க … அவனின் முகமோ கோபத்தில் சிவந்து இருந்தது.

டிரைவரைப் பார்த்து, " அண்ணா உங்க கிட்ட நான் என்ன சொன்னேன் " என…
" என்ன சொன்னீங்க தம்பி?" என திருப்பி வினவ?

எல்லோரும் மீண்டும் நகைக்க… டிரைவரோடு அருகில் அமர்ந்து இருந்த கவினோ, வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு கண் மூடி சாய்த்துக் கொண்டு இவர்கள் அடிக்கும் லூட்டிகளை மனதிற்குள் ரசித்துக் கொண்டு இருந்தான்.

நவீன் தன் அருகில் அமர்ந்து இருந்த தீப்தியை முறைத்தான். பின்புறம் அமர்ந்து இருந்த நீரஜாவோ முகத்தில் புன்முறுவல் பூக்க அமைதியாக வர… அவளருகில் அமர்ந்திருந்த சுபியோ சிரிப்பை அடக்க முடியாமல் நகைத்தாள்.

திரும்பி சுபியையும் முறைத்து விட்டு… டிரைவரைப் பார்த்து அண்ணா… சாமி பாட்டு எல்லாம் போடக்கூடாது என்று சொல்லித்தானே உங்களை அழைத்து வந்தேன்… அப்புறம் ஏன்ணா இப்படி பண்றீங்களே என பரிதாபமாக வினவ…

டிரைவரோ ," தம்பி, பெரிய ஐயா தான் சாமி பாட்ட போடச் சொல்லி ஒரு பென்ட்ரைவ் தந்தாக… நான் நீங்க சொன்னதை சொல்லி வேண்டாம் என்று சொன்னேன். அவங்க, உடனே இன்னொரு பென்ட்ரைவ்வ வீட்டிலேருந்து எடுத்து வந்துக் கொடுத்து, இது சினிமா பாட்டு தான் இதைப் போடு என்று குடுத்துட்டு போனாங்க தம்பி" என்றார்.

அப்பா… எனக்கு நீங்க தான் வில்லனே என புலம்பிக் கொண்டே… ஐயோ! எட்டு மணி நேரத்தை இந்த பாட்டக் கேட்டுக் கிட்ட எப்படி ஓட்டுவேன் என்று மீண்டும் புலம்ப…

டிரைவரோ நீங்க ஏன் தம்பி கவலைப்படுறீங்க? நான் தானே ஓட்டப் போறேன்… அதெல்லாம் நான் சமாளித்துக் கொள்வேன் எனக் கூற மீண்டும் ஒரு சிரிப்பலை எழுந்தது.

இன்னைக்கு என் பொழப்பு சிரிப்பா போச்சு என நவீன் கூற… பின்புறமிருந்து இந்தாங்க நவீன் என நீரஜா தன்னுடைய புது பாடல்கள் உள்ள பென்ட்ரைவை நீட்ட … பிறகென்ன ஆட்டம்… பாட்டம்… கொண்டாட்டம்… தான், இவர்களின் ஊருக்குள் கார் நுழைந்ததும் தான் அமைதியாயினர்.

**************

அடியே சுபி… என பார்வதி உலுக்க… ஹாங் என பழைய நினைவுகளில் இருந்து மீண்டவள்… என்னம்மா என பார்வதியைப் பார்த்து வினவ…

மாப்பிள்ளை எவ்வளவு நேரமா உன்னை கூப்பிட்டுக் கிட்டே இருக்காரு, நீ என்னமோ சிலை மாதிரி நின்னுக்கிட்டே இருக்கிற என பார்வதி சுபியை கடிந்துக் கொண்டாள்.

அதெல்லாம் ஒன்னும் இல்லை அத்தை… நான் வீட்டுக்கு கிளம்புறேன் அத்தை என்றவன்… தன் மாமாவிடமும் விடைபெற்றான்… சுபியிடமும் தலையசைக்க… அவள் அவனுடன் வாசல் வரைக்கும் வந்தாள்.

கவின் அவளிடம் தன் சேட்டையை ஆரம்பித்தான்.
" என்ன செல்லம், அத்தான் காதல் சொன்ன தருணத்தை நினைச்சுப் பார்த்தியா? என கண்ணடித்துக் கொண்டே கேட்க… சுபியோ அவனை முறைத்துப் பார்க்க முயல... அவனோ அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருந்தான். இவள் தான் பிறகு முகம் சிவக்க பார்வையை திருப்பினாள்"

சுபியின் அருகே வந்து அவள் காதில் சுபிமா, மறுபடியும் நான் உணர்ந்த காதலை உனக்கு உணர்த்தவா? என கிசுகிசுக்க…

ஐயோ! அத்தான் எங்க இருந்துட்டு என்ன பேசுறீங்க… அம்மா, அப்பா வேறே இங்க தான் இருக்காங்க என சினுங்க…

சரிடா நாம மறுபடியும் குலதெய்வ கோயிலுக்கு போகும்போது அதே இடத்தில் அத்தான் சொல்லுறேன். சரி இப்போ வரட்டுமா? என உல்லாச குரலில் கூறி விட்டு… உற்சாகமாக விசிலடித்துக் கொண்டே புறப்பட்டான்.

கவினோ, மனதிற்குள் நினைத்துக் கொண்டான்… குலதெய்வ கோவிலை நினைத்தாலே ஆற்றங்கரையோரம், அந்தி சாயும் நேரம் தான் நினைவுக்கு வருகிறது. நான் உடனே சுதாரித்துக் கொண்டேன் ‌செல்லம், நீ தான் அத்தைக்கிட்ட மாட்டிக் கிட்ட என நினைத்தவன்… புன்னகை முகத்துடனே வீட்டினுல் நுழைந்தான்.

************
உள்ளே நுழைந்த கவின், அங்கு நடந்ததைப் பார்த்து அப்படியே ஷாக்காகி நின்று விட்டான்.

அங்கே விஷால் டைனிங் ஹாலில் அமர்ந்து இருக்க… அவனைச் சுற்றி எல்லோரும் அமர்ந்து கொண்டு இன்னும் கொஞ்சம் சாப்பிடுங்கள் மாப்பிள்ளை இன்னும் கொஞ்சம் போட்டுக்கோங்க என உபசரித்துக் கொண்டிருந்தார்கள்.
அதிர்ச்சியிலிருந்து மீண்ட கவின்," டேய் இப்பதான சாப்பிட்டு வந்தோம். அதுக்குள்ள என்னடா, இன்னொரு ரவுண்டு" என கேட்க…

இல்லை மச்சான், அத்தை தான் நல்ல விஷயம் ரெண்டு பேரும் சொல்லிருக்கீங்க மாப்பிள்ளை… அதான் நானே கேசரி செய்து எடுத்து வந்தேன் சாப்பிடுங்க என்று சொன்னாங்க… அதான் மறுக்க முடியவில்லை என்று நின்றுக் கொண்டிருந்த கவினை குனிய செய்து அவன் காதில் மெதுவாக கூறினான்.

ஓ… என்றவன் இதுவாவது பரவாயில்லை என நினைத்துக் கொண்டான் … பின்னே அந்த பக்கம் கிச்சனை திரும்பி பார்த்தால்… தன் அண்ணி நீரஜாவிற்கு, சுகந்தி அத்தை தன் கைகளால் கேசரி ஊட்டிக் கொண்டிருந்தார். தன் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு டைனிங் ஹாலை சுற்றிப் பார்க்க… அங்கு ஓரமாக போட்டிருந்த நாற்காலியில் அமர்ந்துக் கொண்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த நவீனைப் பார்த்து, அவனிடம் சென்று, என்னடா நடக்குது என வினவ?

அது தான் எனக்கும் புரியல, நீயும் என் பக்கத்தில் உட்காரு என நவீன் கூற…

இந்த நாடகத்தைப் பார்க்க எனக்கும் பொறுமை இல்லை… இன்னும் சற்று நேரம் இருந்தா என் மனதில் கற்பனை ஊற்றெடுக்கும். என்னவென்று தெரியுமா? சுபிக்கு நம்ம அத்தை
ஊட்டி விட்டால் எப்படி இருக்கும் என்று நினைக்க தொடங்கி விடுவேன்…

பக்கென்று நவீன் சிரிக்க… கவின் டேய் மெதுவாக சிரி‍, எல்லோரும் நம்மள பார்க்குறாங்க என கூறவும், ஏதோ சின்சியராக இருவரும் டிஸ்கஸ் பண்ணுற மாதிரி நடிக்க நிமிர்ந்து பார்த்தவர்கள் மீண்டும் விஷாலை கவனிக்க ஆரம்பித்தனர்.

அப்பாடா என பெருமூச்சு விட்டுக்கொண்டு நவீன் என் மனைவிக்கு ஊட்டுவதே பெரிய விஷயம். இதுல சுபிக்கு ஊட்ட வேண்டும் என நினைப்பது உனக்கு பேராசை தான் கவின்.

நியாயப்படி பார்த்தால் நீரு மேல் தான் கோபம் வரணும். ஆனால் அத்தையோ‌, சுபி மேல் ஏன் கோபமாக இருக்கிறார்கள் என்று புரியவில்லை, என நவீன் கூற … கவினோ அன்று அத்தைக்கும் சுபிக்கும் நடந்த பிரச்சனையால் தான் சுபி வீட்டை விட்டு போனாள்… அதற்கு பிறகு நடந்த அனைத்து அனர்த்தங்களுக்கும் அதுவே காரணமாக இருந்தது.
சுபியுடன் பேசினாள், தான் தான் காரணம் எனக்கூறி விடுவார்களோ என முந்திக்கொண்டு, அத்தை கோபத்தோடு இருக்கிறார்கள் வேற ஒன்றும் இல்லை.

சரி விடு நான் போறேன் என்னுடைய ரூமுக்கு கிளம்ப முயல … நவீன் மீண்டும் தடுத்தான்.
என்ன அவசரம் நாளைக்கு மறுபடியும் எல்லோரும் நம்ம கடைக்கு வராங்க‌… கோயிலுக்கு போறதுக்கு புதுப்புடவை எடுக்கணும்னு என்று ஒரு காரணம்.
இதற்கு சுபியை வர சொல்ல வேண்டியது உன் பொறுப்பு.
இப்ப நீ போகலாம் தம்பி எனக் கூறி அனுப்பி விட்டான்.

கவின் கிடைத்தது வாய்ப்பு என சுபிக்கு ஃபோன் போட… அதெற்கெல்லாம் அசராமல் எந்த ப்ராஞ்ச்க்கு, எத்தனை மணிக்கு என்று மெசேஜ் பண்ணுங்க நான் நேராக அங்க வந்துடுறேன் என்றாள் சுபி.

எதுக்கு நீ தனியா வரனும்.எல்லாரும் சேர்ந்து ஒன்னாக போகலாம் என கவின் இறுக்கத்துடன் கூற…

ஐயோ! டென்ஷனாகிட்டாரோ, என மனதிற்குள் நினைத்துக் கொண்டு… இல்லை அத்தான், ஆல்ரெடி நிறைய நாள் லீவு போட்டாச்சு… இனி கோவிலுக்கு போக வேற லீவு எடுக்கணும்… கல்யாண நேரத்தில் லீவு எடுக்கணும், அதான் நாளைக்கு ஆஃபிஸ்க்கு போயிட்டு… நீங்கள் சொல்லும் நேரத்தில் பர்மிஷன் கேட்டுட்டு வருகிறேன் அத்தான்.ப்ளீஸ் அத்தான் என…

சரி சரி நாளைக்கு பார்ப்போம் என்றுக் கூறி ஃபோனை வைத்தான் கவின். இருவர் முகங்களிலும் புன்னகை மின்ன… அதே மனநிலையில் உறங்கச் சென்றனர்.

*************

மறுநாள் காலையிலே கவின், சுபிக்கு ஃபோன் பண்ணி விட்டான். அவளது ஆஃபிஸ்க்கு அருகில் உள்ள அவர்களது கடையைத் தேர்ந்தெடுத்தை கூறியவன், மாலை நான்கு மணிக்கு வரச் சொன்னான்.
அவளும் சரியென கூறி விட கவினும் ஃபோனை வைத்து விட்டு கடைக்கு கிளம்பினான்.

மாலை நான்கு மணி, அந்த நேரத்தில் கடையில் சற்று கூட்டம் குறைவாக இருக்கும். அதனால் தான் கவின் அந்த நேரத்தை தேர்ந்தெடுத்தான்.

எல்லோரும் சரியாக வந்துவிட பட்டுப்புடவை செக்ஷன் களை கட்டியது.

நீரஜா எல்லோருக்கும் ஒரே மாதிரி புடவை எடுக்கலாம் எனக் கூற…

ஒத்துக் கொள்ள மாட்டாள் என நினைத்த தீப்தி, எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை கா, என சம்மதம் சொல்லி விட்டாள்.

ஆனால் சுபியோ, இல்லை கா … ஒரே மாதிரி டிசைன் வேணாம் கா… யூனிபார்ம் மாதிரி இருக்கும். ஒரே கலர்ல வேற வேற டிசைனில் எடுக்கலாம் என்றுக் கூற…

அதுவும் சரி தான் என்று அனைவரும் ஒத்துக் கொண்டு… என்ன கலர் எடுப்போம் என்று டிஸ்கஸ் பண்ணும் போதே, கவின் தலையிட்டான். அந்த செக்ஷனில் இருந்த அனைவரும் ஆச்சரியமாக பார்த்தனர்.

அவனோ, அதை எல்லாம் கவனிக்கும் நிலையில் இல்லை. நீரஜாவை அழைத்து" அண்ணி, ப்ளூ கலர்ல சாரி எடுப்போம். அது தான் எல்லோருக்குமே பொருத்தமாக இருக்கும்" என்றான். பேசியது என்னவோ நீரஜாவிடம் தான் ஆனால் பார்வையோ சுபியையே சுற்றி வந்தது.

அதற்கு பிறகு ஊழியர்கள் எடுத்து போட்ட சாரிகளில் நீரஜாவும், தீப்தியும் சீக்கிரமாக தேர்ந்தெடுத்து விட… சுபி செலக்ட் செய்த சாரிகளில், ஏதாவது குறை கூறிக் கொண்டே, வேற எடுத்துட்டு வாங்க… அன்னைக்கு வந்த புது ஐட்டம் எங்கே? என… அவரது ஊழியர்களை பாடாய் படுத்தினான்.

அவர்களோ, தங்களுடைய முதலாளி நினைத்து ஆச்சரியம் தான் பட்டனர். எப்பொழுதும் கம்பீரமாக வளைய வருபவர்… இன்னைக்கு தன் வருங்கால மனைவிக்காக பண்ணும் அலம்பல்களை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர்.

இவன் செய்யும் அலம்பல்களை தாங்க முடியாமல் நவீன் கடையை கவனிக்க சென்று விட்டான்.

விஷாலோ, தீப்தியின் காதில் "தீபு ஆனாலும் உங்க அத்தான் செய்வது டூ மச்" எனக் கூற…

விஷால் கூறிய விதத்தில் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு… அவனை முறைத்துப் பார்த்து எல்லோரும் உங்களை மாதிரி தத்தியாவா இருப்பாங்க… ஹவ் ரோமான்டிக் எங்க அத்தான் என பெருமையாகக் கூற…

இது தான் ரொமான்டிக்கா? அப்ப எனக்கு வேண்டவே வேண்டாம். என்ன ஆள விடு… நான் நவீனோட போய் இருக்கிறேன்… என அந்த இடத்தை விட்டு கிளம்ப…

ஐயோ! விஷால் நான் சும்மா சொன்னேன். என்ன விட்டுட்டு போகாதீங்க நானும் வரேன் என்று கூறி அவளும் கிளம்பி விட்டாள்.

நீரஜவோ சுபிக்கு புடவை தேர்வு செய்வதை சற்று நேரம் பார்த்தவள்… இது வேலைக்கு ஆகாது என நினைத்தவள், தனது அத்தைக்கும், அம்மாவிற்கும் புடவை தேர்வு செய்ய போய் விட்டாள்.

சுகந்தியோ, நான் எங்க கடையிலே எடுத்துக்கிறேன். நீ அண்ணிகளுக்கு எடுக்கிற புடவையை ஃபோட்டோ மட்டும் எடுத்து அனுப்புமா, என நீரஜாவிடம் கூறியிருந்தார்.

அதை நினைத்துப் பார்த்துக் கொண்டே புடவையை தேர்வு செய்ய ஆரம்பித்தாள்.

ஒரு வழியாக கவின், ஒரு மணி நேர தீவிர தேடுதலுக்கு பிறகு, ஒரு அழகிய நீல நிறத்தில் பிங்க் கலர் பார்டர் உள்ள சாரியை தேர்ந்தெடுத்தான்.

சற்று நேரத்தில் திரும்பி வந்த தீப்தி, புடவையைப் பார்த்து செமையா இருக்கு அத்தான் என்று பாராட்டினாள்.

நீரஜாவோ புடவை நல்லா இருக்கு, ஆனால் எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே… என யோசிக்க…
அதுதான் கா‍, கடைக்கு வரும் போது பார்த்திருப்பே என பேச்சை மாற்றினாள் சுபி.

சுபி கூறியதை கேட்டு சரி என தலையாட்டினாள் நீரஜா. கவினோ, சுபியிடம் பார்வையாலே பேசினான்.
"உன்னை நான் அறிவேன் மை டியர் சுபி… அத்தான் எதற்காக இந்த புடவையை வாங்கினேன் என உனக்குத் தெரியும் தானே" என மனதிற்குள் நினைத்துக் கொண்டு … புருவத்தை ஏற்றி இறக்க… சுபியோ பார்வையை திருப்பிக் கொண்டாள்.

பிறகு அங்க இவர்களுக்கு புடவை எடுத்து காண்பித்தவரிடம், எல்லாவற்றிற்கும் பில் போடுங்க… என்னோட பர்சனல் அக்கவுண்ட்டில் எடுத்துக்க சொல்லுங்க என … சரிங்க சார் என்று கூறி விட்டு அவர் எல்லா புடவைகளையும் எடுத்துக் கொண்டு புறப்பட்டார்.

சரி. வாருங்கள் போகலாம் என்று அவர்கள் மூவரையும் அழைத்துக் கொண்டு கேஷ் கவுண்டருக்கு வந்தான் கவின்.

அங்கிருந்த நவீன்," ஏன் கவின் கடைக் கணக்கிலே எடுக்கலாம்ல… நீ வேற ஏன் தனியா பில் போட சொல்றே?" என வினவ…

கவினோ அது என சற்றுத் தடுமாறிக்கொண்டு இல்லடா, முதல் தடவையா சுபிக்கு புடவை எடுக்கிறேன். அதை நான் எடுத்துக் கொடுத்ததா இருக்கட்டும் என்றுக் கூற… நடத்துடா நடத்து அப்படியே கொசுறா குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கும் எடுத்தியா டா..
என நவீன் கிண்டல் செய்ய… அருகில் இருந்த விஷாலோ அப்படினா தீப்திக்கு நான்தான் எடுத்துத் தருவேன் என வம்பு பண்ண… அதனை முன்னாடியே நீயே யோசிச்சு செஞ்சிருக்கணும் நான் சொல்லவும் செய்யுறேன் என்று சொல்லுவியா என கவின் விஷாலை கேலி செய்தான். உனக்கு ஆசையாக இருந்தா, நீ தனியா வந்து புடவை எடுத்துக் கொடு என்றுக் கூறி முடித்து விட்டான் நவீன்.

பிறகு அங்கு நின்றுகொண்டிருந்த அவர்களைப் பார்த்து அந்த ஜூஸ் ஏதும் குடிக்கிறீர்களா வாங்கிட்டு வர சொல்லவா? இல்ல வெளியில போய் டின்னர் சாப்பிடலாமா என வினவினான் நவீன்.

ஜூஸ்ஸே வாங்கிட்டு வரச் சொல்லுங்க. அத்தை வெளியில் சாப்பிட வேண்டாம் என்றார்கள் ‌
ஏதோ புது வியாதி 'கொரோனா வைரஸ்' என்று சீனாவில் வந்திருக்காம். அதுக்கு இன்னும் மருந்துக் கூட கண்டுபிடிக்கவில்லை‌. ரொம்ப வேகமாக பரவுதாம்… அதனால வெளியில எல்லாம் கொஞ்ச நாள் சாப்பிட வேண்டாம் என்றார்கள்.
நவீனும், தீப்தியும் அது சீனால தான வந்திருக்கு…
இங்க வந்தா தான் பிரச்சனை அதனால் நாம் இன்னைக்கு போவோமே என்று இருவரும் ஒன்றாக கூற… கொஞ்ச நேரம் அவர்கள் பேச்சில் குறுக்கிடாமல் இருந்த சுபி பிறகு பொதுவாக பேசத் தொடங்கினாள்.

இந்த நாடு இதனால் தான் இன்னும் முன்னேறாமல் இருக்கு.
ஏன் வந்ததுக்கப்புறம் தான் எச்சரிக்கையா இருக்கணுமா! வருவதற்கு முன்பே நம்மள பார்த்துகிட்டா என்ன?.
யாரும் சொல்வதைக் கேட்பதே கிடையாது ஏதாவது அட்வைஸ் பண்ணா அவங்களை கிண்டல் பண்ண வேண்டியது . மாற்றத்தை நாம் ஏற்படுத்துவோமே! முடிந்த அளவு வெளியிடங்களில் சாப்பிடாமல் இருப்போம்… தவிர்க்க முடியாத பட்சத்தில் அடிக்கடி கைகளை நன்கு சுத்தம் செய்துக் கொள்வோம் என்று கூறினாள்.

தீப்தி "நீ சொல்வது புரியுது சுபி . அத்தை வீட்டுக்கு நீ வரமாட்டியே, எல்லோரும் சேர்ந்து சாப்பிடலாம் என்று தான் சொன்னேன்" என்று மெதுவான குரலில் கூற.‌..
அதானால் என்ன தீப்தி நீங்க எல்லோரும் போய் அங்க சாப்பிடுங்க. இன்னும் கொஞ்ச நாட்கள் தானே, அடுத்த முறை நீ அந்த வீட்டிற்கு வரும் போது நானே உன்னை வரவேற்பேன் என்றாள் சுபி.

அப்புறம் இப்போ நவீன் அத்தானுக்கு செலவு வைப்போம்.
எங்களுக்கு ஃப்ரஷ் ஜூஸ் வாங்கிட்டு வாங்க அத்தான் என நவீனிடம் கூறி அந்த இடத்தை கலகலப்பாக்கினாள்.
தொடரும்…..
 
Last edited:
Top