Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என்றென்றும் நீயே நானாக வேண்டும்-அத்தியாயம்-3

Advertisement

Chitradevi viswa

Well-known member
Member
Hi friends thanks for your Lovely support & comments. அடுத்த அத்தியாயம் பதிந்து விட்டேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்


அத்தியாயம்-3



அந்தி சாயும் மாலைப்பொழுதில், இரு ஜோடிகளும் மெல்ல காலாற நடந்து அந்த இயற்கை அழகை ரசித்துக் கொண்டு இருந்தனர்.


நவீனும், நீரஜாவும் தங்களுக்குள் சலசலத்துக் கொண்டே சுற்றியுள்ள பிரபஞ்சத்தையே மறந்து விட்டனர். பின்னால் வரும் கவினையும், சுபியையுமா ஞாபகம் வைத்திருக்கப் போகிறார்கள்? இல்லை அவர்கள் தனி உலகில் சஞ்சரிக்க…


கவினோ, அவர்களைப் பார்த்து தனக்குள் புன்னகைத்துக் கொண்டே சுபியை பார்க்க

அவளும் இந்த உலகத்தில் இல்லை. என்னவோ இன்று தான் முதல் முறை மகாபலிபுரம் வந்த மாதிரி ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.


கவின் மனதிற்குள் சலித்துக் கொண்டான்.

இதற்கு நாம் அறையிலே நன்கு ஓய்வு எடுத்திருக்கலாம் ‌‌ என்று எண்ணினான்.


சரி வந்தாயிற்று, வந்ததற்கு சுபியையாவது வம்பிழுப்போம் என்று, சுபியை அழைத்தான்.


என்னமோ பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை பார்க்கிற மாதிரி பார்த்துட்டு இருக்க புதுசா பார்க்கிறவங்க கூட இப்படி "ஆ " என்று திறந்த வாய் மூடாமல் பார்க்க மாட்டார்கள்.


நானே பலமுறை உன்னை அழைச்சிட்டு வந்திருக்கேன் என்று கவின் கூற…


சுபி அவனை முறைத்துக் கொண்டே நான் ஒன்றும் திறந்த வாய் மூடாமல் பார்க்கவில்லை. ரசித்துப் பார்த்து கொண்டிருந்தேன் . அதற்கு எல்லாம் ரசனை இருக்கனும், உனக்கு தான் கிடையாதே என ஒருமையில் பேச ஆரம்பித்து விட்டாள்.


கோபம் வந்தால் ஒருமையில் பேச ஆரம்பித்து விடுவாள். கவினும் மற்றவர்களிடம் கெத்தாக இருப்பான், இவளிடம் மட்டுமே சிறு வயது முதல் வம்பிழுத்துக் கொண்டே இருப்பான்.


கவின் மீண்டும் அவளை சீண்ட "எத்தனை முறை வந்தாலும் அதே குடைவரைக் கோயில், சிற்பம்,சிலை வேறு எண்ண இருக்கிறது, எனக் கூற"....


சுபியோ அதோ உங்களை மாதிரி எண்ணும் சிலரால் தான் உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தும், கூட ஒழுங்கான பராமரிப்பு இல்லாமல் இருக்கிறது. குழந்தைகள் எல்லாம் மண்டபத்தின் மேல் ஏறி விளையாடிக் கொண்டிருக்கார்கள், யாரும் கண்டிக்கவே இல்லை. இதை பார்க்கும் போது எவ்வளவு வேதனையா இருக்கு தெரியுமா?


எனக்கு கோவிலாகவோ, சிலை, சிற்பமாகவோ மட்டும் தெரியவில்லை . பல்லவ மன்னரோட வீரம், பண்பாடு, ஆளுமையாக தான் எனக்கு தெரிகிறது. ஒவ்வொரு சிலையும் அவர்களின்

திறமையையும், வீரத்தையும் பறைச்சாற்றுவதாகவே தோன்றுகிறது என்றாள் சுபி.


மீண்டும் பெருமூச்சு விட்டு கொண்டே அந்த காலத்திலேயே வாழ்ந்திருக்கலாம் என்றாள் சுபி.


என்ன பெருமூச்செல்லாம் பலமா இருக்கு.

இந்த காலத்தில் என்ன குறைச்சல் என்றான் கவின்.


மன்னர் காலத்தில் ஆட்சித்திறமையும், நிர்வாக திறமையையும், செம்ம ... தெரியுமா உங்களுக்கு, அப்பெல்லாம் தவறு செய்யும் மக்களுக்கு தண்டனையை பொது மக்கள் முன்னிலையில் நாற்சந்தியில் வைத்து கடுமையாக வழங்குவாங்க, அப்பத்தான் தவறு செய்ய பயம் வரும்.


இப்போ பெண்களுக்கு எவ்வளவு அநீதி செய்தாலும், ஜெயில்ல கொஞ்சம் நாள் இருந்து விட்டு வெளியே வந்து ஜாலியாக இருக்கிறாங்க என கோபமாக சுபி பொறிய….


கவின் " இப்போ மாற்றம் இங்கேயும் வந்துவிட்டது தானே " என்றான்.


டெல்லி நிர்பயா விஷயத்தில், தூக்கு தண்டனை வழங்கவில்லையா ? பெங்களூரில் ஒரு பெண்ணிற்கு நடந்த அநீதிக்கு, அந்த இடத்திலே என்கவுண்டர்ல போடலையா என்றான். அதே போல கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் வரும். நீ டென்ஷன் ஆகாதே சுபி. இங்கே வா சற்று நேரம் உட்காரலாம் என மணலில் அமர்ந்தான் கவின்.


அவன் அருகில் அமர்ந்து சுபி, கவினைப் பார்த்து உங்களுக்கு ஸீரியஸ்னஸ் புரியலை. ஒரு நாளைக்கு பெண்களுக்கு எதிராக எத்தனை பாலியல் வன்முறை நடக்கிறது தெரியுமா? சொந்த வீட்டில் இருக்கிற குழந்தைகளுக்கு, கூட அக்கம் பக்கம் இருப்பவர்களால் துன்பங்கள் வருது. யாராலும் தடுக்க முடியவில்லை.


நடக்கிற குற்றங்களில், பாதி கூட காவல்நிலையத்தில் புகாராக பதிவு ஆகவில்லை.

அப்படி பதிவு ஆகுற குற்றங்களுக்கு தாமதமாக தருகிற தண்டனை வருத்தமா இருக்கு….


எனக்கு தெரிந்து சின்ன ஊர்களில் நடக்கும் பிரச்சினைகள் வெளியே தெரியவே மாட்டேங்குது.

பேப்பர்ல நான்காம் பக்கத்திலோ, இல்லை கடைசி பக்கத்திலோ சிறியதாக வருகிறது.



எனக்கு தெரிந்து கும்பகோணத்தில் நடந்த ஒரு இன்ஸ்டிடன்ட் எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை.

வேற ஸ்டேட்ல இருந்து வங்கி வேலைக்கு வந்த பெண், பேங்கிற்கு போவதற்காக இரயில்வே ஸ்டேஷன்ல இருந்து ஆட்டோ பேசி ஏறினாள். அந்த பொண்ணை பேங்க் அங்க இருக்கு இங்க இருக்கு எனக் கூறி அலைக்கழிச்சிட்டு, நாலு பேருக்கிட்ட விட்டுட்டு போய்ட்டான் அந்த ஆட்டோக்காரன்.



அந்த பெண்ணிற்கு அன்று மாதந்திர பிரச்சினை. அப்படி இருந்தும் அந்த கயவர்கள் அவளை விடவில்லை.



அரை உயிரா, பேங்க் மேனேஜர் உதவியால, வேலையும் ஒன்றும் வேண்டாம் என்று சொந்த ஊருக்கே போய்விட்டாள்.


அந்த நாலு பேருக்கு சாகும் வரை ஜெயில் தான் என்று தண்டனை கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த பொறுக்கி ஆட்டோக்காரனுக்கு பதினைந்து வருடங்கள் தானாம்‌.என்னைக் கேட்டால் அவனதான் நடுரோட்டில் நிற்க வைத்து கொல்லனும், என்று கூறி கண்கலங்க கவினின் தோளில் சாய்ந்தாள் சுபி.



இப்படியே போனால் முன்பு மாதிரி பெண்களை வீட்டிற்குள் பூட்டி தான் வைக்க போகுறாங்க, என தன் ஆதங்கத்தை கொட்ட….


" சாரிடா சுபி எதையெதையோ ஆரம்பித்து உன்ன மூட் அவுட் ஆக்கிவிட்டேன்" என்ற கவின், மாற்றம் கொஞ்சம் கொஞ்சமாக வரும் டா….


பிள்ளைகளை வளர்க்கும் போதே , பெண்களை மதிக்க கற்றுக் கொடுக்க வேண்டும். நாம நம்ம பிள்ளைகளை நல்ல பண்புகளை சொல்லிக் கொடுத்து வளர்ப்போம் சரியா ? என ….

ம் என்றாள் சுபி. அவள் எதையும் சிந்திக்காமல் தன் போக்கில் பதில் கூறுவதை கவனித்த கவின், வந்த புன்னகையை அடக்கிக் கொண்டு,

மேலும் அவளை சகஜமாக்கும் பொருட்டு மேலும் பேச்சை வளர்த்தான். இப்போ சரி என்று கூறி விட்டு, பிறகு பேச்சை மாத்தக்கூடாது , நான் குழந்தைகளை கண்டிக்கும் போது நீ தலையிடக்கூடாது சரியா?

என கவின் சுபியிடம் கூற….


டேய் என்னடா நடக்குது இங்க என கேட்ட படியே வந்தான் நவீன். உங்கள ஆளே காணும் என்று தேடி வந்தா புள்ளக்குட்டி

பத்தி பேசிட்டிருக்கிங்க…


உங்களுக்கு இன்னும் கல்யாணமே ஆகலைடா…


இன்னும் கல்யாணம் ஆன நாங்களே குழந்தையை பற்றி யோசிக்கவில்லை. ஹனிமூன் கூட போகவில்லை…. என்ன பேபிமா என நீரஜாவை பார்க்க…. அவளோ அவனை முறைத்துக் கொண்டே என்ன பேசுவது என்று விவஸ்தையே இல்லையா என தலையில் அடித்துக் கொண்டாள்.


அடியே நாம பேசுனா ஒன்னும் தப்பில்லைடி…

இதுக்கு ஏன் உன்னை அடிச்சுக்குற என நவீன் கூற…‌


ஆமா நான் ஏன் என்னை அடிச்சிக்கனும், உங்களை தான் அடிக்கனும் என நீரஜா கூற….


அதற்குள் தன்னை சுதாரித்துக் கொண்ட

சுபி, அக்கா என் சார்பாகவும் அத்தானுக்கு இரண்டு அடி சேர்த்துக் குடு… என்று விட்டு மீண்டும், நீங்கள் தத்தியா இருந்தா, நாங்களும் அப்படியே இருக்கனுமா? நாங்கள் எல்லாம் அட்வான்ஸ்டா இருப்போம் என தன் நவீனை கலாய்க்க….


இந்த அவமானம் தேவையா உனக்கு என தன்னைப் பார்த்து கேட்டுக் கொண்டான் நவீன்….


கலகலவென நகைத்தாள் சுபி, அதை புன்னகையுடன் ரசித்துக் கொண்டிருந்தான்

கவின்…


ஹலோ இங்க யாரோ கல்யாணம் வேண்டாம் என்று சொன்னாங்களே அவங்க யாரு என்று தெரியுமா என சுபியிடம் கேட்டான் நவீன்.


யாரும் இங்க கல்யாணம் வேண்டாம் என்று சொல்லவில்லை. பிடிக்காமல் பரிதாபப்பட்டு ஒன்னும் கல்யாணம் பண்ண வேண்டாம் என்று தான் சொன்னேன் என சுபி கூற...‌


மறுத்து ஏதோ கூற வந்த நவீனை , கண்களாலே தடுத்தான் கவின்.



அதுவா, சுபி தெரியாத பேய்க்கு, தெரிந்த பிசாசே மேல் என்று தான் ஒத்துக் கிட்டேன் என்று கவின் கூற….


அப்படி ஒன்றும் கஷ்டப்பட்டு கல்யாணம் பண்ணிக்கொள்ள வேண்டாம். ஏதாவது தேவதையா பார்த்து பண்ணிக்கோங்க என சுபி முறுக்கிக்கொள்ள…..


நீரஜா இடையில் நுழைந்தாள். என்ன, என் தங்கச்சியை , இரண்டு பேரும் சேர்ந்து கலாய்க்கிறிங்க, நான் இருக்கிறேன்

என்று வர….


சும்மா இரு அண்ணி, அவளே அவளை பார்த்துப்பா, அவளை சமாளிக்கத் தான் பத்து பேர் வேண்டும் என்று நீரஜாவிடம் கூறி விட்டு…


சுபியை பார்த்து கண்ணடித்துக் கொண்டே எல்லாரும் தேவதையையே எதிர்பார்த்த என்னாவது, அதுதான் நான் எனக்கு வருபவளை தேவதை மாதிரி பார்த்துக் கொள்ளலாம் என இருக்கிறேன் என்று அவளை கூர்ந்து நோக்கிக் கொண்டே கூறினான்.


சுபியோ அவனது பார்வையில் கட்டுண்டு மெய்மறந்து நின்றாள்.


பப்ளிக் பப்ளிக் என நவீன் கத்த,. சுபி முகச் சிவப்புடன் பார்வையை கவினிடம், இருந்து விலக்கினாள்.




நவீன் கவினைப் பார்க்க…. அவனோ சுபியைப் பார்த்துக் கொண்டே இருந்தான். வெகு நாட்களுக்குப் பிறகு அவன் முகத்தில் இறுக்கம் குறைந்து இலகுவான மென்னகையுடன் இருக்கிறான்.


சிறுவயதில் எல்லாம் எவ்வளவு மகிழ்ச்சியுடன் இருந்தனர். இவர்கள் மூவரும் கொட்டம் அடிக்க, கவின் சற்று தள்ளி நின்று ரசிப்பான்.


அந்த சந்தோஷமான நாட்கள் மீண்டும் திரும்பியது போல் நவீனுக்கு தோன்றியது. இந்த சந்தோஷம் என்றும் கவின், சுபி வாழ்க்கையில் இருக்க வேண்டும் என இறைவனிடம் அவசரக் கோரிக்கை வைத்து விட்டு திரும்ப….


நீரஜா அவனின் தோளை தட்டி அழைத்து அங்கே பாருங்கள் என்று தூரத்தில் நடந்து வரும் பெண்ணைக் காட்டினாள்.


யாருடா இந்த தேவதை என்று ஆர்வமுடன் ,பார்க்க வந்தவளோ ஒயிலாக இவர்களை நோக்கி வந்தாள்.


அவள் தான் கவின், நவீனின் அத்தை மகள் தீப்தி.


ஹாய் மச்சான்ஸ் என்று இவர்களின் அருகில் வந்து அமர்ந்துக் கொண்டாள்.

என்ன சர்ப்ரைஸ் உங்களை இங்கே எதிர்பார்க்கவே இல்லை என….


நவீனோ அவளை பார்த்து பேந்த, பேந்த விழித்துக்கொண்டு மனதிற்குள் " அடிப்பாவி காலையில் இதுக்காகத்தான் எனக்கு ஃபோன் போட்டியா… எல்லா தகவல்களையும் என் வாயால் சொல்ல வைத்து திடிர் என்று பார்த்ததாக நடிக்கிறியா…." ஐயோ இவங்க மூன்று பேருக்கும் நான் தான் சொன்னேன் என்று தெரிஞ்சது, அவ்வளவுதான் என்று மனதுக்குள் புலம்பிக் கொண்டே நிமிர….


தீப்தி இவனைப் பார்த்து கண்ணடித்துக் கொண்டே என்ன யாருமே பதில் சொல்லமாட்டிங்கிறிங்க என...


சுபியோ இவள் பேச்சை சட்டை செய்யவில்லை. அவள் வந்தவுடன் ஹாய் என்று கூறி விட்டு தன் மொபைலுடன் ஐக்கியம் ஆகிவிட்டாள்.


நீரஜாவோ, தன் தங்கையை நினைத்து கவலையில் ஆழ்ந்து விட்டாள்.


கவின் தான் தீப்திக்கு பதில் கூறினான்.

" திடிர் ப்ளான் தீப்ஸ் ஃபிரண்ட்ஸோடு ஒரு கெட் டூ கெதர்." இன்னும் ஒன் ஹவர்ல ஸ்டார்ட் ஆகிடும், நீயும் எங்களோட ஜாயின் ஆகிக்கோ தீப்ஸ்…


வித் ப்ளஷர் அத்தான் என்று கூறி விட்டு யாரும் அறியாமல் கவினுக்கு சமிக்ஞை காட்ட அவனோ கண்ணாலே சும்மா இரு என அடக்கினான்.


கவின் தீப்திக்கு விடுத்த அழைப்பில் அதிர்ந்து நின்ற மூவரும் இந்த மௌன நாடகத்தை அறியவில்லை…


தொடரும்….
 
Last edited:
Top