Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என்றென்றும் நீயே நானாக வேண்டும்- அத்தியாயம்-2

Advertisement

Chitradevi viswa

Well-known member
Member
தோழிகளே இரண்டாம் அத்தியாயம் பதிந்து விட்டேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்


அத்தியாயம்-2

கவினும், நவீனும் டிவின்ஸ் ஆக இருந்தாலும் (nonidentical twins) தோற்றத்திலும், குணத்திலும் வேறுபட்டு இருந்தனர்.

கவின் சற்று மாநிறத்தில், ஆறடி உயரத்தில் அதற்குரிய உடற்கட்டுடன் இருந்தான்.. அவ்வளவு ஈசியாக யாரும் அவனுடன் பழகிட முடியாது. சற்று அழுத்தக்காரன், அறிவானவன்.

நவீனோ நல்ல சிவந்த நிறம். எல்லோருடையும் சீக்கிரம் நட்பாகிவிடுவான்.அவன் இருக்குமிடம் எப்பொழுதும் சிரிப்பு சத்தத்துடன் ஆரவாரமாக இருக்கும். இலகுவானவன், புத்திசாலி.

சுபி திருமணத்திற்கு பிறகு தான் வீட்டுக்கு வருவேன் என்று கூறி விட, எல்லோரும் சங்கடத்துடன் தவிக்க…

அந்த சங்கடமான சூழ்நிலையை தன் கையில் எடுத்துக்கொண்டான் நவீன்.

அப்பாடா நல்ல வேலை "சுபி மா ரொம்ப தேங்க்ஸ் டா, நியுர் இயர் அதுவுமா நல்ல சாப்பாடு சாப்பிடனும் நான் நினைச்சேன் நீ இந்த அத்தானை காப்பாத்திட்ட என்று கூறி விட்டு திரும்பினான்".

அங்கோ அவனது தாயும், தாரமும் இருபுறமும் நின்று அவனை மொத்த, தினமும் அங்கதானே சாப்பிட வந்தாகனும் என்று கூறி விட்டு மீண்டும் நீரஜா அவனை அடிக்க வர, அவனோ பேச்சு பேச்சாக இருக்கனும் அடிக்கலாம் கூடாது பேபிமா என வடிவேலு மாதிரி கூறிக் கொண்டே ஓடினான். எல்லோர் முகத்திலும் புன்னகை பூத்தது.

மூச்சு வாங்கிக் கொண்டு ஓடி வந்து சோஃபாவில் அமர்ந்தான். நீரஜாவும் அவனருகில் வந்து அமர்ந்தாள்.

நவீன் எல்லோரையும் பார்த்து , மகாபலிபுரம் ரிவர்சைட் ரெஸ்டாரண்ட் என்னோட நண்பனோடது இருக்கு. அங்க நாளைக்கு நைட் டின்னர் ஏற்பாடு செய்கிறேன். நாம லன்ச் முடிச்சிட்டு கிளம்பினால், சற்று நேரம் சுற்றிப் பார்த்து விட்டு வரலாம் என்ன சொல்ற என கவினிடம் வினவ…

கவினுக்கும் இந்த ஐடியா ஏற்புடையதாக இருக்க சரி என்றான்.

கவின் "அப்போ நாளைக்கு மதியம் ரெடியா இரு நான் வந்து அழைச்சிட்டு போறேன் என சுபியிடம் கூறினான்". தன் மாமா மற்றும் அத்தையிடம் சென்று நாங்க புறப்படுறோம் எனக் கூறி விட்டு, தன் குடும்பத்தினரிடம் அப்போ நாம் கிளம்புவமா? என்றான். ஆல்ரெடி ஏற்கனவே ரொம்ப லேட்டாயிடுச்சு, கொஞ்சம் நேரமாவது தூங்கி ஓய்வெடுத்தால் தான் நாளைக்கு பார்ட்டியை என்ஜாய் பண்ணலாம் என எல்லோரையும் விரட்டி அருகில் இருந்த அவர்கள் வீட்டிற்கு அழைத்து வந்தான்.

அவர்கள் எல்லோரும் கிளம்பவும், வேலையாட்களை அவ்விடத்தை சுத்தம் செய்து விட்டு படுக்கச் செல்லுமாறு கூறிக்கொண்டிருந்தாள் பார்வதி.

அன்னம்மா காலையில் பொறுமையாக எழுந்திரிங்க, ஒன்றும் அவசரமில்லை, என்ற பார்வதி… மேலே படுப்பதற்கு சென்று கொண்டிருந்த சுப்ரஜாவைப் பார்த்து " என்னோட ரூம்ல வெயிட் பண்ணு நான் உன் கூட பேசனும் என"
மா தூக்கம் வருது காலையில் பேசலாம் என சுபி கூற..

ஐந்து நிமிடம் தான் வந்துவிடுவேன் நீ போ... என்றாள் பார்வதி.

அன்னம்மா கதவை லாக் பண்ணிடு… வாட்ச்மேன கேட்ட பூட்டிக்க சொல்லிடு …என கூறி விட்டு மாடி ஏறி வந்தாள் பார்வதி.

மாடியில் சுபியோ தன் தந்தையிடம் செல்லம் கொஞ்சிக் கொண்டிருந்தாள்.

பா எப்படிப் பா அம்மாவை சமாளிக்கிறிங்க..

என்னால முடியலை பா..

எப்பப் பாரு ரூல்ஸ் பேசிக்கிட்டு, எனக்கு தூக்கம் வருது காலையில் பேசலாம் என்றால் விடமாட்டேங்கறாங்க என சுபி கூறும் போதே அங்கு வந்த பார்வதி அவள் காதைப் பிடித்து திருகினாள்.

கொஞ்சமாவது பொறுமை இருக்கா? வாய் மட்டும் பேசு…

உன் நல்லதுக்கு தான்டா சொல்லுறேன் அம்மா…

உன்னோட மறுப்பைக் கூட மென்மையா சொல்லு, மாப்பிள்ளைங்க, அத்தை, மாமா, அக்கா எல்லோருடைய முகமூம் மாறி போய்ட்டுச்சு..‌

மன்னிப்பை கேட்கறத்துக்கும், மன்னிப்பைக் கொடுப்பதற்கும் கத்துக்கிட்டா வாழ்க்கை இனிமையாக இருக்கும் மா என பார்வதி கூற,

சரி மா நானும் மாத்திக்க முயற்சி செய்கிறேன்,

நாளைக்கு அத்தை, மாமா கிட்ட மன்னிப்பு கேட்கிறேன்… அவ்வளவு தான மா நான் தூங்க போகாட்டா என்றாள் சுபி.

சரிடா நீ போய் தூங்கு என ஈஸ்வரன் கூற, பார்வதியோ நீங்க கொடுக்கிற செல்லம் தான் கொஞ்சம் கூட மதிக்க மாட்டேங்கறா புலம்ப…

பார்வதியின் கன்னத்தில் முத்தமிட்டு குட்நைட் மா, குட்நைட் பா எனக் கூறி விட்டு சிட்டாக தனது அறைக்கு பறந்துச் சென்றாள்.

வெளியே சென்ற தன் மகளையே இருவரும் கனிவுடன் பார்த்தனர்.

பார்வதி கலங்கிய விழிகளுடன் இருக்க, ஈஸ்வரன் அவள் விழிகளை துடைத்து விட்டு என் பெண் பாரதி கண்ட புதுமைப் பெண். அவள் வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்வாள், நீ கவலைப்படாதே என்று கூறினார்.

நீ தூங்கு எனக் கூறி போர்வையை போர்த்தி விட்டு அவள் அருகில் படுத்துக் கொண்டார்.


*****************

களைப்பாக இருந்தாலும் தூக்கம் வருவேனா என்றிருந்தது, சுபிக்கு என்னதான் கண்களை மூடினாலும், மூடிய இமைக்குள் அடிபட்ட பார்வையுடன் கவினே வந்து இம்சித்துக் கொண்டே இருந்தான்.

ச்சே பழசை பற்றி பேசியிருக்க கூடாது, பாவம் கவின் அத்தான் முகமே மாறிவிட்டது, என தன்னையே நொந்துக் கொண்டாள் சுபி.

இது சரிப்பட்டு வராது வழக்கம் போல் செய்ய வேண்டியது தான் என எண்ணிக்கொண்டு எழுந்தாள்.

அவளுக்கு தூக்கம் வரவில்லை என்றாலும், மைன்ட் டிஸ்டர்ப்பா இருந்தாலும் ஃபோனில் பாட்டை போட்டுக்கொண்டு டான்ஸ் ஆடுவாள்.

பின்பு களைப்பில் நன்கு உறங்குவாள். அதையே இன்றும் அவள் கடைப்பிடிக்க, அவள் ஆட்டத்தை தடை செய்வது போல் அவளது கைப்பேசி அலறியது.

சுபி ஃபோனை எடுத்து யார் என பார்த்தாள். அழைத்ததோ கவின்.. எடுக்கவில்லை என்றால் நேரில் வந்தாலும் வந்துவிடுவான்.

அதனால் இரண்டே ரிங்கில் எடுத்து விட்டாள்.

ஹலோ என சுபி கூற " கவினோ ஹாய் செல்லம் அத்தான் ஃபோன் பண்ணுவேன் என்று தூங்காமல் வெயிட் பண்ணுனியா, உடனே எடுத்துட்ட என வினவ"

அதெல்லாம் ஒன்னும் இல்லை இப்பத்தான் படுக்க வந்தேன் ஃபோன் அழைப்பு வந்தது, எடுத்தேன். என்ன விஷயம் சீக்கிரம் சொல்லுங்க நான் தூங்கனும் என்றாள் சுபி.

ஏன் சுபி எனக்கு உன்னைப் பற்றி தெரியாதா? நீ தூக்கம் வராமல் மனதை வருத்திக் கிட்டு இருப்ப என்று தான் ஃபோன் பண்ணேன். எதையும் சிந்திக்காமல் தூங்கு என மென்மையாக கூறியவன், சரி ஃபோனை வைக்கவா எனக்கேட்டு விட்டு, வைக்கும் போது அவளை டென்ஷன் ஆக்கிவிட்டே வைத்தான் கவின்.

சுப்ரஜா நான் அத்தை கிட்ட ஒரு கிஃப்ட் பார்சல் குடுத்துருக்கேன். நாளைய பார்ட்டிக்கான ட்ரஸ் அதில் இருக்கு எப்படியும் உனக்கு செலக்ட் பண்ண தெரியாது. அதான் நான் செலக்ட் பண்ணேன். நாளைக்கு அத தான் நீ போட்டுக்கணும் எனக்கூறி விட்டு ஃபோனை வைத்து விட ….

சுபியோ டென்ஷனாகி ஆர்டரா போடுற நாளைக்கு அந்த டிரஸ்ஸை நான் போடவே மாட்டேன் பாருடா என அவனை திட்டிக்கொண்டே உறங்கினாள்.

கவினோ அங்கு புன் சிரிப்புடன் நித்திரையில் ஆழ்ந்தான்.

காலையில் தாமதமாக எழுந்த சுபி வழக்கம் போல பார்வதியை படுத்தி எடுத்துக் கொண்டு இருந்தாள்.

மா என்னோட பர்பில் கலர் குர்தி எங்கம்மா காணும் என சுபி கத்திக் கொண்டிருந்தாள்.

அந்த கபோர்டில் தான் இருக்கும் நல்லா பாரு…

இல்லை வெயிட் பண்ணு வரேன். நீயும் தேடாமல், என்னையும் வேலை பார்க்க விடாமல் கத்திக்கொண்டே இருக்கிற, இரு வரேன் என்றாள் பார்வதி.

கையில் அவளுக்கான பழச்சாற்றை எடுத்துக் கொண்டு மாடி ஏறினாள். நேரே சுபி முன்பு சென்று இந்தா இதை குடி என்று பழச்சாற்றை அவள் கையில் கொடுத்து விட்டு… குர்தியை தேடி எடுத்துக் கொடுத்தாள் பார்வதி.

எங்கேயாவது ஒழுங்கா பார்த்தியா? எல்லாத்துக்கும் நானே வரனும்னா முடியுதா?

எனக்கு என்ன வயசு நாளுக்கு நாள் குறையுதா..

மேலேயும், கீழேயும் அல்லாட முடியலை… ஒன்னு உன்னுடைய அறையை கீழே மாற்று, இல்லை சமையலறையை மேல மாத்தனும், என்னால முடியலை என பார்வதி புலம்ப…

சரி விடுமா இன்னும் கொஞ்ச நாள் தான், அப்பறம் மாடி ஏறும் வேலை கிடையாது, பக்கத்து வீட்டுக்கு வர வேலை தான் என்று சுபி கூற…

அப்பவும் நீ திருந்த மாட்ட என அவள் காதைப் பிடித்து திருகினாள் பார்வதி.

சரி அத்தை, மாமா கிட்ட மன்னிப்பு கேட்கிறேன் என்று சொன்னியே, ஃபோன் பண்ணியா? என பார்வதி வினவ…

எழுந்தவுடன் பேசிட்டேன் மா, இப்ப நான் பார்ட்டிக்கு போட்டுக்கிற ட்ரஸ செலக்ட் பண்ணுங்க மா. சரியான நேரத்திற்கு எல்லோரும் வந்திடுவாங்க, நான் டிபன் வேற சாப்பிடலை, பசிக்குது என சுபி கூறினாள்.

அது தான் மாப்பிள்ளை உனக்காக ட்ரஸ் எடுத்திருக்கிறார். உன் கிட்ட தர சொல்லிக் கொடுத்தார்.

அதோ அந்த டேபிளில் இருக்கு எடுத்து போட்டுப் பார்.

அழகிய பிங்க் நிறத்தில் லெஹங்கா சுமியின் கையில் வீற்றிருந்தது. சூப்பர் செலக்சன் தான். ஆனாலும் அதை போடக்கூடாது, திமிர் பிடித்தவன், சும்மாவே அவனை கையில் பிடிக்க முடியாது. இதைப் போட்டுக் கொண்டால் கிண்டல் செய்தே ஓட்டுவான். ஏதாவது சொல்லி அம்மாவை சமாளிப்போம் என மனதிற்குள் நினைத்துக் கொண்டு … மா லைட் கலரா இருக்கு அழுக்காகிடும், வேற ட்ரஸ் தாங்க என நச்சரிக்க…

சின்ன பிள்ளை மாதிரியே இருக்கிறாய். நீ

வேலைக்கு போகிறாய் என்று சொன்னா யாரும் நம்பக்கூட மாட்டாங்க என்றார் பார்வதி.

இது உங்க அக்கா குடுத்தது ஓகே வா என பாரு, என்று அழகிய நீல நிறத்தில் ஒரு புடவையை நீட்டினார். புடவை நான் கட்டமாட்டேன் எனக்கூற போகிறாள் என பார்வதி காத்திருக்க…

வாவ் சூப்பர் மா. இந்த சாரியே நான் கட்டிக்கிறேன் என சுபி கூற …

பார்வதியோ சுபியை ஆச்சரியமாக பார்த்தாள்.

அம்மாவோட ஆராய்ச்சி பார்வையை மாற்ற,சரி மா நீ போய் சமையலைப் பாரு நான் ரெடியாகி வரேன் என்று அம்மாவை துரத்தினாள் சுபி.


இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தால் பார்வதி எல்லாவற்றையும்,கண்டுபிடித்துவிடுவார், ஏனெனில் சுபியை புடவை கட்ட வைப்பது அவ்வளவு கஷ்டமான விஷயம்.


அப்பவும் ஏனோ நீ சரியில்லை என சுபியைப் பார்த்து கூறிக்கொண்டே வெளியேறினார் பார்வதி.

அப்பாடா என பெருமுச்சு விட்டுக் கொண்டே தயாரானாள் சுபி.

ஆனால் சுபி ஒன்றை யோசிக்க மறந்து விட்டாள்.

தன் அக்காவிற்கு தன்னுடைய விருப்பு வெறுப்பு பற்றி நன்கு தெரியும் என்பதையும், தனக்கு புடவை கட்ட பிடிக்காது என்பது அவளுக்கு தெரியும் என்பதையும் மறந்து விட்டாள்.


கீழே தயாராகி வந்த சுபி நேராக டைனிங் ஹாலிற்கு சென்று நன்கு சாப்பிட்டாள்.

சுபி பசி தாங்க மாட்டாள். காலையில் தாமதமாக எழுந்ததால் சாப்பிடவில்லை. அவள் சாப்பிட்டு கொண்டிருக்கும் போதே, கவின், நவின், நீரஜா மூவரும் தயாராகி வந்தனர்.

சுபி சீக்கிரம்... இன்னும் நீ ரெடியாகவில்லையா?
என கவின் வினவ…

இதோ ஐந்து நிமிடத்தில் தயாராகி விடுவேன் எனக் கூறி விட்டு எழுந்து சென்றாள்.

பிறகு அவர்கள் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு புறப்படனர்.

கவின் கார் ஓட்ட , சுபி முன்புறம் அமர்ந்தாள்.

பின்புறம் நவீனும், நீர‌ஜாவும் அமர்ந்து கொள்ள கார் புறப்பட்டது.

நவீனும், நீரஜாவும் கலகலவென பேசிக்கொண்டும், கவினையும், சுபியையும் பேசவைத்தும் , அந்த கார் பயணத்தை இனிமையாக்கினர்.

மகாபலிபுரம் பீச் ரிசார்ட்டை அவர்கள் கார் சென்றடைந்த போது மணி நான்கு ஆகிருந்தது.

நவீன் போய் அவன் நண்பனிடம் சென்று ரூம் கீ வாங்கி வந்தான்.

அது சிறு குடில் போன்ற அமைப்பில், சகல வசதிகளுடன் கூடிய மூன்று அறைகளை உள்ளடக்கியது.

சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டு சுற்றிப் பார்க்கலாம் என முடிவெடுக்கப்பட்டது. எல்லோரும் அவரவர் அறைகளில் ஓய்வெடுக்க, சுபியோ அந்த அறையின் உள் அலங்காரங்களை ரசித்துக் கொண்டிருந்தாள். ஆம் அவள் எதிலும் சற்று தனிப்பிறவி.

நீரஜாவும் கவின், நவீன் போல் எம்பிஏ படித்து விட்டு அவர்கள் பிஸ்னஸை பார்த்துக்கொள்ள….

இவளோ ஆர்க்கிடெக்ட் தான் படிப்பேன் என்று எடுத்து படித்து இப்போ வேலைக்கு செல்கிறாள்.

இவளின் எண்ணங்களும், சிந்தனைகளும் எப்பொழுதும் மாறுப்பட்டதாகவே இருக்கும், அது மற்றவர்களின் பார்வையில் பொறுமையில்லாதவளாகவும், திமிர் பிடித்தவளாகவே தெரியும்.

அன்று அவளின் அத்தை மாமா வீட்டில் இருந்து அவள் வெளியேற்றபட்டதற்கும் இதுவே காரணமாக இருந்தது.

அதனால் அவளுக்கு ஏற்பட்ட இன்னல்களையும் சிறு துரும்பென எண்ணி சிங்கப்பெண்ணாக ஜொலித்தாள் சுப்ரஜா.

தொடரும்...
.
 
Last edited:
Top